தலைவர்ங்கிறது நாமா தேடிப்போற விஷயம் இல்லை, நம்மைத் தேடி வர்ற விஷய்ம். மக்கள் உங்களைக் கூப்பிடறாங்க, வாங்க - தலைவா பட டயலாக்.
அது ஒரு கனாக்காலம். ஒரு நடிகர் விரும்பினால், தன்னை பெரிய தலைவா-வாக தன் படங்களின் மூலமாகவே கட்டமைத்துக்கொள்ள முடியும். கூடவே நிஜமான ஆளுமையும் இருந்தால், எம்.ஜி.ஆர் போல் மாபெரும் தலைவா-வாக ஆகவும் முடியும். இல்லையென்றால் சூப்பர் ஸ்டார் போல் கெத்துவிடாமல் பம்மிக்கொள்ளவும் முடியும், பெரிதாக இமேஜ் டேமேஜ் ஆகாமல் காத்துக்கொள்ளவும் முடியும்.
ஆனால் இப்போது அப்படியா? யாராவது தலைவன் என்று தன்னை மட்டுமல்ல தனக்குப் பிடித்த நபரைக் குறிப்பிட்டால்கூட, பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் நிலை. ‘அச்சங்கள் உன்னைக் கண்டு அச்சப்பட’ வைக்கும் வல்லமை இருக்கிறதா என்று நிழல் தலைவாக்கள் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உடனே இங்கே உருவாக்கப்படுகிறது. விஸ்வரூபம் பிரச்சினையில் கமலுக்கு எழுந்த தார்மீக ஆதரவு, விஜய்க்கு எழவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமே. ஆனால் அதற்குக் காரணம், விஜய்யின் வரலாறு அப்படி!
விஜய்க்கு அரசியல் ஆசை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் விஜய்யின் அப்பாவிற்கு அரசியல் வெறியே உண்டு என்பது அனைவரும் அறிந்தது தான். எனவே எம்.ஜி.ஆர் எப்படி தொடர்ச்சியாக தன் படங்களின் மூலமாக, தலைவா பிம்பத்தை உருவாக்கினாரோ, அதே போன்று இப்போதும் செய்து ஜெயிக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.
எனவே எப்போதெல்லாம் விஜய் ஹிட்ஸ் கொடுத்து, மக்கள் மத்தியில் ஒரு நல்ல பொழுதுபோக்கு நடிகராக செல்வாக்கு பெறுகிறாரோ, அப்போதெல்லாம் விஜய்யை தலைவராக கட்டமைக்கும் வேலைகளை எஸ்.ஏ.சி செய்வது வழக்கம். உதாரணமாக
பூவே உனக்காக - "மாண்புமிகு" மாணவன்
காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய் , துள்ளாத மனமும் துள்ளும் - நெஞ்சினிலே, மின்சாரக்கண்ணா
குஷி, பிரியமானவளே, ஃப்ரெண்ட்ஸ் - தமிழன், புதிய கீதை
திருப்பாச்சி, போக்கிரி - வில்லு, வேட்டைக்காரன், சுறா
சிவப்பு நிறத்தில் உள்ளவை ரத்த சரித்திரங்கள் என்பது நீங்கள் அறிந்ததே.
எம்.ஜி.ஆரை தலைவராகக் கட்டமைக்க உதவிய நாடோடி மன்னன், எங்க வீட்டுப்பிள்ளை போன்ற படங்களை இப்போதும் ரசித்துப்பார்க்க முடிகிறது. எங்க வீட்டுப் பிள்ளை படத்தை சிவாஜி ரசிகனாகிய நானே 10 தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறேன். ஆனால் விஜய்யை தலைவராக ஆக்க முயலும் ‘வில்லு-சுறா’ வகையறாக்களை விஜய் ரசிகர்களே கூட மீண்டும் பார்ப்பார்களா என்பது சந்தேகம் தான்.
எனவே எம்.ஜி.ஆர். காலம் முடிந்துவிட்டது என்று இப்பொழுதாவது விஜய்யும் அவர் தந்தையும் உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியம். தலைவா படத்திற்குத் தடை என்றதும் கொடநாட்டிற்கே காவடி எடுத்து ஓடுவதும், அங்கே காத்துக்கிடப்பதும் தலைமைப்பண்புள்ள ஒருவர் செய்யும் வேலை தானா என்ற விஜய்யே யோசிக்கட்டும். விஸ்வரூபம் பிரச்சினையில் நீதிமன்றம்+மீடியா துணையுடன் கமல் எபபடி தலைமைப் பண்புடன் பிரச்சினையை 100கோடி வசூலா மாற்றினார் என்று விஜய் புரிந்து கொள்வது நல்லது.
பஞ்ச் டயலாக் பேசிக் கொல்லாத, அரசியல் ஆசைக்கு அடித்தளம் போடாத விஜய் படங்களை எல்லாருமே விரும்பிப் பார்க்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. எனவே முதல்வர் எனும் பேராசையை விட்டுவிட்டு, விஜய் இனிமேலாவது நல்ல கமர்சியல் படங்களைக் கொடுக்க முன்வரட்டும். இல்லை, நான் முதல்வர் ஆகியே தீருவேன் என்றால், இது நல்ல வாய்ப்பு. மக்கள் மன்றத்தில் வாய் திறந்து, இந்தப் பிரச்சினையை துணிச்சலாக எதிர்கொள்ளட்டும்.
நிஜத்தில் எந்தவொரு அரசியல் பிரச்சினை பற்றியும் உறுதியான நிலைப்பாடு இல்லாமல், அரசியல்வாதிகளை நேரடியாக எதிர்கொள்ளும் துணிச்சலும் இல்லாமல், நான் தான் வருங்கால முதல்வர் என்று யார் சொன்னாலும் அது கேலிக்குரிய விஷயமே. இது தகவல் தொழில்நுட்பக் காலம். எல்லோரின் முகமூடியும் முகநூலில் நொடியில் கிழித்துத் தொங்கவிடப்படும் காலம். இனிமேல் சினிமாக்களின் மூலம் மட்டுமே இமேஜ் பில்டப் பண்ணலாம் என்பது கனவே. எனவே விஜய், தன் அரசியல் ஆசைக்காக தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைப்பது வீண்வேலை. அதை அவர் நிறுத்துவது அவசியம்.
இது ஒரு ஜனநாயகநாடு. இதில் விஜய் மட்டுமல்ல யாருக்குமே முதல்வராவது எனும் பேராசை வருவது சட்டப்படி தவறொன்றும் இல்லை. ஊர்க்குருவி பருந்தாக நினைக்கும் உரிமையை நம் ஜனநாயகம் தரவே செய்கிறது. ஆனால் அதற்காக, ஒரு படத்தையே தடை செய்வது சரி தானா என்பதும் நாம் யோசிக்க வேண்டிய விஷயம்.
போலீஸே தியேட்டர்களுக்கு போன் செய்து எங்களால் பாதுகாப்பு தரமுடியாது என்று சொல்வது எவ்வளவு அசிங்கமான விஷயம்? இது ஆட்சியாளர்களுக்கு பெருமை தரும் விஷயம் தானா? தலைவா விஷயத்தில் நடப்பது சர்வாதிகாரம் தவிர வேறொன்றும் இல்லை. விஸ்வரூபத்திற்குக் குரல் கொடுத்த அனைவருக்குமே தலைவாவிற்குக் குரல் கொடுக்கும் ஜனநாயகக் கடமை இருக்கிறது. விஜய்யின் நோக்கம், நமக்கு உவப்பானதாக இல்லையென்றாலும், அப்படி ஆசைப்பட அவருக்கு உள்ள உரிமையை நாம் மறுக்கலாகாது.
விஜய்-தயாரிப்பாளர்-வேந்தர் மூவீஸ் என மூவருமே இந்த விஷயத்தில் உறுதியான நிலைப்படின்றி, பம்மிக்கிடந்தாலும், இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டைக் கண்டிப்பதோடு, தலைவா படம் ரிலீசாக நம் தார்மீக ஆதரவைக் கொடுப்போம்.
டிஸ்கி: படம் பற்றிய நம் வெளிப்படையான கருத்திற்கு : தலைவா - திரை விமர்சனம்
சரியா சொன்னீங்க
ReplyDeleteஇந்த அரசியல் சிக்கலில் ஒரு சின்னப் பய்யன் உசிர விட்டதுதான் மிச்சம். கேட்கவே ரொம்ப கவலையா இருக்கு. படம் ரிலீஸ் ஆகலைன்னு தற்கொலை செஞ்சுக்கறது எல்லாம் தமிழ் நாட்டுல மட்டும்தான் நடக்கும். ரசிகர்களை பகடை காய்கள் ஆக்குவதை நம் தலைவர்களும் தளபதிகளும் எப்போதுதான் விடப் போகிறார்களோ.
ReplyDeleteஅரசியல் சர்வாதிகாரம் சமீப காலமாக தமிழ் சினிமாவை வளைத்துப் போடத்தான் செய்கிறது. இனிமேல் ஆட்சியாளர்களுக்கு வால் பிடிக்காமல் மொக்க காமெடி படம் கூட தமிழ் நாட்டில் ரிலீஸ் பண்ணமுடியாது போல.
ReplyDeleteபடம் எப்படி இருந்தாலும், ரிலீஸ் ஆகாமல் இருப்பது வருத்தத்துக்குரிய விஷயமே! படம் ரிலீஸ் எமது தார்மீக ஆதரவை வழங்குவோம்!!
ReplyDelete/////இனிமேல் சினிமாக்களின் மூலம் மட்டுமே இமேஜ் பில்டப் பண்ணலாம் என்பது கனவே. எனவே விஜய், தன் அரசியல் ஆசைக்காக தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைப்பது வீண்வேலை. அதை அவர் நிறுத்துவது அவசியம்.///////
ReplyDeleteயோவ் அவரு 10000 பேருக்கு அன்னதானம் கொடுத்திருக்காரு, வேட்டி சேலை கொடுக்கிறாரு, கல்யாணம் செஞ்சு வெக்கிறாரு, பேரு வெக்கிறாரு....... இதுக்கு மேல என்னய்யா பண்ணனும்?
ரொம்பச் சரியான பதிவு..
ReplyDeleteஅப்புறம் மூணாவதா ஒரு படம் போட்டிருக்கிங்களே, அதுக்கு காப்பிரைட்ஸ் நான் தான்...
விவரங்களுக்கு க்ளிக்:
விஜயை தின்னும் ஆடுகள்! பிரியாணியை திங்க இருக்கும் ரசிகர்கள்!!
good...........
ReplyDeleteஅருமையான பகிர்வு...
ReplyDeleteதலைவா வெளிவரலைன்னு தலைவர் கொடநாட்டுக்குப் போனா தொண்டன் மேல போயிட்டானே... ஆத்தா... அப்பனெல்லாம் விட சினிமாக்காரனுக்கு உசிர வச்சிருக்கானுய்யா... படம் வெளிவர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்...
இந்தத் தடை மூலம் ஒரு செய்தி சொல்லப்பட்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன்.எம்.ஜி.ஆர்.க்குப் பின்,ஒரு சில நடிகர்கள் தமிழ் நாட்டு அரசியலில் காலூன்ற முயற்சித்து................ஹி!ஹி!!ஹீ!!!///சினிமாவில் சம்பாதித்ததை அரசியலில் முதலிட்டு..........ஹூம்!
ReplyDeleteஇனிமேல் அரசியல் ஆசையில் வந்தாள் இதுதான் கெதி என்பதுதான் இதன் மூலம் சொல்லும் செய்தி.நல்ல தீர்ப்பு நல்லாச்சொன்னீங்க!
ReplyDeleteசீன்மா சிலுக்கான்களைக்கண்டு நெஜ சிலிக்கான்கள் சுயம் இழக்கும் காலம்...இதல்லாம் ஒரு மேட்டருன்னு இதை தடை பண்ணியது அதை விட கொடும...
ReplyDelete//சக்கர கட்டி said...
ReplyDeleteசரியா சொன்னீங்க //
ரைட்டு.
ReplyDelete// Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
இந்த அரசியல் சிக்கலில் ஒரு சின்னப் பய்யன் உசிர விட்டதுதான் மிச்சம். கேட்கவே ரொம்ப கவலையா இருக்கு. //
ரொம்ப முட்டாள்தனமான காரியம் அது.
ReplyDelete// பிரபல எழுத்தாளர் மணி மணி said...
படம் எப்படி இருந்தாலும், ரிலீஸ் ஆகாமல் இருப்பது வருத்தத்துக்குரிய விஷயமே! படம் ரிலீஸ் எமது தார்மீக ஆதரவை வழங்குவோம்!! //
பிரபல எழுத்தாளரே சொன்னப்புறம், நோ அப்பீல்!
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteயோவ் அவரு 10000 பேருக்கு அன்னதானம் கொடுத்திருக்காரு, வேட்டி சேலை கொடுக்கிறாரு, கல்யாணம் செஞ்சு வெக்கிறாரு, பேரு வெக்கிறாரு....... இதுக்கு மேல என்னய்யா பண்ணனும்?//
அண்ணே, அந்த தையல் மெசினை விட்டுட்டீங்களே!!!
// தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteஅப்புறம் மூணாவதா ஒரு படம் போட்டிருக்கிங்களே, அதுக்கு காப்பிரைட்ஸ் நான் தான்... //
ஓ...அப்படியா? நன்றிய்யா..கூகுள்ல எடுத்ததால கவனிக்கலை!
//சே. குமார் said...
ReplyDeleteஅருமையான பகிர்வு...
தலைவா வெளிவரலைன்னு தலைவர் கொடநாட்டுக்குப் போனா தொண்டன் மேல போயிட்டானே... //
இந்த மாதிரி லூசுங்க இருக்கிறவரைக்கும்......
//Yoga.S. said...
ReplyDeleteஇந்தத் தடை மூலம் ஒரு செய்தி சொல்லப்பட்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன்.எம்.ஜி.ஆர்.க்குப் பின்,ஒரு சில நடிகர்கள் தமிழ் நாட்டு அரசியலில் காலூன்ற முயற்சித்து................ஹி!ஹி!!ஹீ!//
உண்மை தான் ஐயா. ஆரம்பத்திலேயே இவர்களை நசுக்குவது என்று இரு கழகங்களும் முடிவு செய்திருக்கின்றன.
// தனிமரம் said...
ReplyDeleteஇனிமேல் அரசியல் ஆசையில் வந்தாள் இதுதான் கெதி என்பதுதான் இதன் மூலம் சொல்லும் செய்தி.நல்ல தீர்ப்பு நல்லாச்சொன்னீங்க!//
நான் எப்பய்யா தீர்ப்பு சொன்னேன்? ஏதோ கொஞ்சம் புலம்பியிருக்கேன்.
// விக்கியுலகம் said...
ReplyDeleteசீன்மா சிலுக்கான்களைக்கண்டு நெஜ சிலிக்கான்கள் சுயம் இழக்கும் காலம்...இதல்லாம் ஒரு மேட்டருன்னு இதை தடை பண்ணியது அதை விட கொடும...//
கரெக்ட்டுபா!
This comment has been removed by the author.
ReplyDeleteவிஜய் அவருடைய அப்பாவ விவாகரத்து பண்ணனும்
ReplyDelete