Monday, August 5, 2013

முதல் கன்னி அனுபவம் (தொடர் பதிவு)

நம்ம தமிழ்வாசி பிரகாஷ் முதல் கன்னி அனுபவம்னு ஒரு தொடர் பதிவு போட்டிருந்தாரு. நானும் வழக்கம்போல தலைப்பைப் பார்த்தேன், நேரா ஸ்க்ர்ரோல் பண்ணி கீழே பார்த்தேன். அஞ்சு பேரை தொடரக் கூப்பிட்டிருந்தாரு. ‘என்னடா இது..இவ்ளோ முக்கியமான விஷயத்தை எழுத நம்மளைக் கூப்பிடாம விட்டுட்டாரே’ன்னு கடுப்பாகி கமெண்ட்லயே ‘ஏன்யா என்னை அழைக்கலை?’ன்னு கேட்டேன்.

அவரும் பரிதாபப்பட்டு நம்மளையும் சேர்த்துட்டு, மெயில் அனுப்புனாரு.மெயில் சப்ஜெக்ட்டைப் பார்த்தா ‘முதல் கணிணி அனுபவம்’னு போட்டிருந்துச்சு. என்னடா இதுன்னு அவர் ப்ளாக்ல போய்ப் பார்த்தா, அட..நாந்தான் அவசரத்துல தப்பாப் படிச்சிருக்கேன். அது கன்னி அனுபவம் இல்லை, கணிணி அனுபவம். ஓகோ..அதனால தான் இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்னு நம்மளைக் கூப்பிடலைன்னு புரிஞ்சுச்சு. அதுக்காக நாம எடுத்த காரியத்தை பாதில விட முடியுமா? அதனால...........


இப்போல்லாம் மொபைல்லயே அவனவன் பிட்டுப்படம் ஃப்ரீயா பார்த்துட்டுத் திரியறான். ஆனா எங்க(!) காலத்துல அப்படி இல்லை. ஒரு ஸ்டில்லுக்கே நாயா அலையணும். அப்படியே ஒரு நஞ்சு போன புக் கிடைச்சு, பார்த்தாலும் அது ஆணா, பொண்ணான்னு டவுட் வர்ற ரேஞ்சுல மூஞ்சி இருக்கும். அப்போல்லாம்(யோவ், அப்போ..அப்போன்னா எப்பய்யான்னு கேட்கிறீங்களா? நான் ஸ்கூல்ல படிக்கும்போதுங்க. எத்தனாவது வகுப்பு படிக்கும்போதுன்னு சொன்னா இமேஜ் டேமேஜ் ஆகிரும். அதனால அது மட்டும் ரகசியம்!)..சரி, அப்போல்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள ஆறு வித்தியாசங்கள் என்னன்னு கண்டுபிடிக்கிற அறிவுத்தாகத்தோட அலைஞ்சோம். 

அப்போல்லாம் (மறுபடியுமா..?) வீடியோ கேசட் தான். சிடி வராத காலம். பசங்கள்லாம் ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு 100 ரூபாய்க்கு டிவியும் ஸ்பெஷல் கேசட்டும் வாங்கிட்டு வருவாங்க. ஏதாவது தோட்டத்து மோட்டார் ரூம் கதவை உடைச்சோ/சாவியை திருடியோ ஷோ நடக்கும். அங்க தான் என் செட் பசங்கள்லாம் முக்தி அடைஞ்சாங்க.

ஆனா என்னை மட்டும் சேர்த்துக்கவே இல்லை. ஏன்னா நான் நல்லா படிக்கிற பையனாம், கெட்டுப் போயிடுவேனாம். ;நல்லாப் படிக்கிறது ஒரு குத்தமாய்யான்னு நினைச்சுக்கிட்டு படிப்பை நிறுத்திட்ட சீனியர் அண்ணன்ககிட்ட சிபாரிசுக்குப் போனா, படிக்கும்போது இதெல்லாம் பார்க்கலாமான்னு கேட்பாங்க. ’இதுக்கெல்லாம் ஸ்கூல்ல போயி டிசி வாங்கிட்டு வர முடியுமா? ஒரே ஒரு தடவை பார்த்துக்கிடுதேம்யா’-ன்னு கெஞ்சினாலும் ..ம்ஹூம்..ஒன்னும் கதை ஆகலை.

அப்படி நான் காய்ஞ்சு கருவாடா திரிஞ்ச நேரத்துல,  மெட்ராஸ்ல (அப்போல்லாம்..!) இருந்து ஒரு பொண்ணு காலேஜ் லீவுக்கு, எங்க ஊருல இருந்த சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்துச்சு.........அங்காடித்தெரு படத்துல வந்த அஸ்வினி-குஸ்வினி மாதிரியே இருக்கும்...ம்.......இப்பத்தான் இடைவேளை!


என் பதிவை ரெகுலராப் படிக்கிறவங்களுக்கு ஒரு விஷயம் தெரிஞ்சிருக்கும். புதுசா படிக்கிறவங்களுக்காக அந்த முக்கியமான விஷயத்தை சபையில மறுபடி பதிவு செய்யறேன். அதாகப்பட்டது, அப்போல்லாம்(!) சிக்கன் சாப்பிட்டா, அடுத்த நாளே வயித்தைக் கலக்கி டர்ர் ஆகிடும். கடுப்பாதீங்க யுவர் ஆனர், அஸ்வினி மேட்டர்க்கு வர்றேன்.

அப்படி ஒரு நன்னாள்ல வயித்தைக் கலக்கி, கம்மாய்க்கு ஓடுனேன்.ஆக்சுவலா நடந்தேன்.ஏன்னா, கம்மாய்க்குப் போற வழில ரெண்டு குடிதண்ணி பம்பு உண்டு. அங்க எப்பவும் ஏதாவது ஒரு அத்தை பொண்ணு நின்னுக்கிட்டிருக்கும். அப்போ வேகமா ஓடுனா கேவலமில்லையா..அதனால கலவரத்தை வெளில காட்டிக்காம கெத்தா நடப்பேன். ஆனா அதுலயும் ஒரு சொகம் உண்டுய்யா..அப்படி நடக்கும்போது வயித்துக்குள்ளே...அஸ்வினி..அஸ்வினி..ஓகே, மேட்டருக்கு வருவோம்.

அது குற்றால சீசன் நேரம். எப்பவும் மேகமூட்டமா, சிலுசிலுன்னு, சில நேரம் சாரலோட கிளைமேட் ஜில்லுன்னு இருக்கும். அந்த ஜில் காத்தை அனுபவிச்சுக்கிட்டே கம்மாய்க்குள்ள இறங்கினேன்....பதிவுக்குத் தேவைப்படறதால் எங்க கம்மாயைப் பத்தி கொஞ்சம் சுருக்கமா விவரிக்கிறேன். வாசக/அஸ்வினி அன்பர்கள் பொறுத்தருளவும்.

எங்க ஊரு கம்மா நல்லா பெருசா இருக்கும்(ம்க்கும்!). ஆனா பெரும்பாலும் அங்க தண்ணியே இருக்காது. கம்மாய்க்குள்ள இறங்கி, முக்கா கிலோமீட்டர் நடந்தா, முன்னாடி தோண்டி விடப்பட்ட, ஒரு கல் குவாரி வரும். அது ரெண்டு ஆள் உயர குளம் மாதிரி இருக்கும். அங்க எப்பவும் தண்ணி இருக்கும். அதனால அதைச் சுத்தி வேலி மரம். பொதுவா நாங்க அந்த வேலியைச் சுத்தித் தான் உட்காருவோம். (ச்சே..ஒரு அஸ்வினிக்காக என்ன கர்மத்தையெல்லாம் படிக்க வேண்டியிருக்கு!). அப்படி நானும் உட்கார்ந்த உடனே கலகலன்னு...ச்சே, அதில்லைய்யா..கலகலன்னு பொம்பளைங்க சிரிப்புச் சத்தம்.

எங்கடான்னு பதறிப்போய்ப் பார்த்தா, கல்குவாரிக்குள்ள இருந்து!(உய்..உய்..அஸ்வினி வந்தாச்சுடோய்!). உள்ளே பார்த்தா........ஆத்தீ!...அந்த மெட்ராஸ் பிள்ளை, அந்தப் பிள்ளையோட அம்மா..கூடவே போனஸா இன்னொரு பிள்ளை(அது யாருன்னு தெரியலை) குளிச்சுக்கிட்டு இருக்காங்க. சினிமால பார்த்திருப்பீங்களே,அத் மாதிரி நெஞ்சு(க்கு மேல) வரைக்கும் பாவாடையை ஏத்திக்கட்டி!..’அடடா..இப்படி வந்து தெரியாம வந்து உட்கார்ந்துட்டமே..இது தப்பாச்சே..எழுந்திருப்போம்’னு நினைச்சேன்..சரி,சரி,..நீங்க நம்ப மாட்டீங்க, உண்மையைச் சொல்லிடுதேன். எழுந்திருப்போம்னு நான் நினைச்சாக்கூட முடியாத அளவுக்கு, இங்க பிச்சுக்கிட்டுப் போய்க்கிட்டிருந்துச்சு.
அட சண்டாளிகளா..இது எப்பேர்ப்பட்ட குளம் தெரியுமா? இங்க டெய்லி எத்தனை பேரு காலைல வந்து உரம்/யூரியா சப்ளை பண்ற இடம் இது..இதுல போய்க் குளிக்குறீங்களே..ஒருவேளை சென்னை கூவத்துல குளிச்சு வளர்ந்தீங்களா?-ன்னு நான் மனசுக்குள்ள புலம்பிக்கிட்டே எழுந்திரிக்க முடியாம போய்க்கிட்டிருந்தப்போ, அந்த அஸ்வினி ஈரப் பாவாடையோட தண்ணியை விட்டு வெளில வந்துச்சு.

வெளில வந்த அஸ்ஸு, டக்குன்னு கட்டியிருந்த ஒத்தைப் பாவாடையைவும் அவுத்துடுச்சு. பப்பரப்பான்னு நிக்குது. குற்றால காத்துல உடம்பெல்லாம் புல்லரிக்குது.(எனக்கில்லைய்யா..அந்தப் புள்ளைக்கு!). ’அப்படியே’ ஸ்லோமோசன்ல நடந்து, ’அப்படியே’ துண்டௌ எடுத்து, ’அப்படியே’ துவட்டிட்டு, ’அப்படியே’ துண்டை கீழ போட்டுட்டு, ’அப்படியே’ காத்து வாங்கிட்டு நின்னுச்சு.

ஒரு ஃபோட்டோவுக்கே நாயாப் பேயா அலைஞ்ச எனக்கு, இப்படி ஒரு பொண்ணை, இப்படிப் பார்த்தா என்னாகியிருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. கரெக்ட், யூரின் டேங்க்ல இருந்து எல்லா டேங்கும் வெடிச்சுச் சிதறிடுச்சு.

அப்புறம் தான் எனக்கு உஷார் வந்து, என்னோட நிலைமை உறைச்சது. ‘அடடா..தண்ணி போச்சே!’. எப்படியாப்பட்ட குளத்தை இப்படி சோப்பெல்லம் போட்டு நாறடிச்சுட்டாங்களே..இப்போ நம்ம என்ன செய்ய? இப்படியே நடந்து வீட்டுக்குப் போறதா..அதுவும் வாத்து மாதிரி காலை அகட்டி அகட்டி...வழில அத்தை பொண்ணுங்க வேற இருந்துட்டா..ப்ச், தண்ணி போச்சே!

எங்க ஊருக்கு அடுத்த ஊருல இதே மாதிரி குளம் ஒன்னு உண்டு. மெதுவா நகர்ந்து நகர்ந்து, அங்க போயி...யோவ், அஸ்வினி என்னாச்சுய்யான்னு கேட்கறீங்களா? அது அப்பவே ட்ரெஸ் மாட்ட ஆரம்பிச்சிருச்சு.அதுக்கு அப்புறமும் ஒரு நல்ல பையன் அங்க நிப்பானா?

ஆனா இந்த விஷயத்தை நான் என் நண்பர்கள் யார்கிட்டயும் சொல்லலை. ஏன்னா, என்ன இருந்தாலும் இது பெண்ணோட மானப்பிரச்சினை..சரி,சரி, உண்மையைச் சொல்லிடுதேன்.

இந்தப் புள்ளை இன்னைக்குக் குளிக்குன்னா நாளைக்கும் இங்க குளிக்கலாம். இந்த வருசம் லீவுக்கு வந்திருக்குன்னா, அடுத்த வருசமும் லீவுக்கு வரலாம். எதுக்கு வீணா நல்லா ஓடற படத்து ரீலை, நாமளே அக்கணும்? அதான் இப்போ வரைக்கும் ஒருத்தருக்கும் சொல்லலை.

ஆனா அடுத்த நாளும் அஸ்ஸு வரலை. அடுத்த வருசமும் அஸ்ஸு வரலை.ச்சொ..ச்சொ..ச்சொ!

முக்குளிச்சு நான் எடுத்த முத்து சிப்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ளே பத்திரமா வச்சேனே
வச்சது இப்ப காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்!

ஓகேய்யா...தொடர்பதிவுன்னா அடுத்து அஞ்சு பேரை கோர்த்து விடணுமாமே..யாருக்குய்யா இதைத் தொடர தில்லு இருக்கு? கமான் டெல் மீ!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

22 comments:

 1. //ஓகேய்யா...தொடர்பதிவுன்னா அடுத்து அஞ்சு பேரை கோர்த்து விடணுமாமே..யாருக்குய்யா இதைத் தொடர தில்லு இருக்கு? கமான் டெல் மீ!///

  யோவ்... இது நன்னா இருக்கே.... இரும், நான் கண்டினியூ பண்ணுதேன்

  ReplyDelete
 2. யோவ்.. மாம்ஸ்... இந்த நீங்க இங்க வந்தப்போ அந்த குளத்துல ரொம்ப நேரமா இருந்ததுக்கு காரணம் இதானா???

  ReplyDelete
 3. நானும் கணினி வரும்னு ஒவ்வொரு வரியா வாசிச்சுட்டு இருந்தேன்...

  அப்புறம் மைல்டா டவுட் வந்து தலைப்பை பார்த்தா, கன்னின்னு போட்டிருந்துச்சு...

  செங்கோவின்னா, செங்கோவி.....

  ReplyDelete
 4. வயிறு குலுங்க சிரித்து ரசித்தேன்! கன்னி அனுபவத்தை! நன்றி!

  ReplyDelete
 5. ச்சீ..............கம்மாய்க்குப் போறதையெ ல்லாமா பதிவுல எழுதுவாய்ங்க,சீச்சீ!!!!

  ReplyDelete
 6. அண்ணாமலை சினிமால சொல்ற மாதிரி ’முழுசாப் பாத்தாச்சா?!’
  :))))))

  ReplyDelete
 7. முதல் கன்னி அனுபவம் படிக்க படிக்க சிரிக்க வைத்தது,
  அருமை...

  ReplyDelete
 8. . நல்லாயிருக்கு ..[வாயை துடைச்சுகிட்டே சொல்றேன்......சொல்றேன். hi...hi.hi... பாவி மனுஷா........... அம்புட்டையும் பாத்திட்டு வந்து வயித்தெரிச்சலை கிளப்புறியேய்யா..........]

  ReplyDelete
 9. "ஸ்பாம்" இல் போய் உட்கார்ந்த என் கமெண்ட் வாழ்க!!!!

  ReplyDelete
 10. ஹீ குளத்தில் அனுபவமா!ஹீ நானும் வருகின்றேன் தொடர் எழுத ஹீ கொஞ்சம் உஜாலா போட விரைவில் ரெடி மாம்ஸ் பிரகாஸ் கேட்க மறந்தாலும் நீங்க சவால் விட்ட பின் இருக்கலாமா!ஹீ ஐயாம் பிக்கேம் சூன்ன்ன்ன்ன்/! ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

  ReplyDelete
 11. //வெளங்காதவன்™ said...
  //ஓகேய்யா...தொடர்பதிவுன்னா அடுத்து அஞ்சு பேரை கோர்த்து விடணுமாமே..யாருக்குய்யா இதைத் தொடர தில்லு இருக்கு? கமான் டெல் மீ!///

  யோவ்... இது நன்னா இருக்கே.... இரும், நான் கண்டினியூ பண்ணுதேன் //

  ஆஹா..ஒரு சிங்கம் களமிறங்கிடுச்சுடோய்!

  ReplyDelete
 12. //தமிழ்வாசி பிரகாஷ் said...
  நானும் கணினி வரும்னு ஒவ்வொரு வரியா வாசிச்சுட்டு இருந்தேன்...

  அப்புறம் மைல்டா டவுட் வந்து தலைப்பை பார்த்தா, கன்னின்னு போட்டிருந்துச்சு...

  செங்கோவின்னா, செங்கோவி.....//

  யோவ், நம்ம எல்லாருமே ஏழு கழுதை வயசானப்புறம் கணிணியைப் பார்த்தவங்க தான்..அதுல என்ன கிக் இருக்கு?

  ReplyDelete
 13. // s suresh said...
  வயிறு குலுங்க சிரித்து ரசித்தேன்! கன்னி அனுபவத்தை!//

  நன்றி சுரேஷ்.

  ReplyDelete
 14. //Yoga.S. said...
  ச்சீ..............கம்மாய்க்குப் போறதையெ ல்லாமா பதிவுல எழுதுவாய்ங்க,சீச்சீ!!!! //

  எவ்ஐயா, இந்தப் பதிவுல கம்மாயை மட்டுமா கவனிச்சீங்க...யூ நாட்டி!

  ReplyDelete
 15. //சென்னை பித்தன் said...
  அண்ணாமலை சினிமால சொல்ற மாதிரி ’முழுசாப் பாத்தாச்சா?!’ //

  கடவுளே...கடவுளே!

  ReplyDelete
 16. //சே. குமார் said...
  முதல் கன்னி அனுபவம் படிக்க படிக்க சிரிக்க வைத்தது,
  //

  நன்றி குமார்

  ReplyDelete
 17. //Jayadev Das said...
  . நல்லாயிருக்கு ..[வாயை துடைச்சுகிட்டே சொல்றேன்......சொல்றேன். hi...hi.hi... பாவி மனுஷா........... அம்புட்டையும் பாத்திட்டு வந்து வயித்தெரிச்சலை கிளப்புறியேய்யா..........]//

  தலிவரே...இதுல என் தப்பு என்ன இருக்கு?......எல்லாம் அவன் செயல்!

  ReplyDelete
 18. //தனிமரம் said...
  ஹீ குளத்தில் அனுபவமா!ஹீ நானும் வருகின்றேன் தொடர் எழுத ஹீ கொஞ்சம் உஜாலா போட விரைவில் ரெடி மாம்ஸ் பிரகாஸ் கேட்க மறந்தாலும் நீங்க சவால் விட்ட பின் இருக்கலாமா!ஹீ ஐயாம் பிக்கேம் சூன்ன்ன்ன்ன்/! ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!//

  ஓ..நேசர் உணர்ச்சி வசப்பட்டா, இங்லீஸ்ல தான் பேசுவாரு போல!

  ReplyDelete
 19. செங்கோவிAugust 6, 2013 at 3:14 AM
  //தனிமரம் said...
  ஹீ குளத்தில் அனுபவமா!ஹீ நானும் வருகின்றேன் தொடர் எழுத ஹீ கொஞ்சம் உஜாலா போட விரைவில் ரெடி மாம்ஸ் பிரகாஸ் கேட்க மறந்தாலும் நீங்க சவால் விட்ட பின் இருக்கலாமா!ஹீ ஐயாம் பிக்கேம் சூன்ன்ன்ன்ன்/! ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!//

  ஓ..நேசர் உணர்ச்சி வசப்பட்டா, இங்லீஸ்ல தான் பேசுவாரு போல!

  Reply// ஹீ சும்மா ஒரு பில்டப்புத்தான்:))) நமக்கு எல்லாம் இங்கிலீஸ் சுட்டுப்போட்டாலும் வராது ஐயா!

  ReplyDelete
 20. செங்கோவி said... [Reply]//Yoga.S. said... ச்சீ..............கம்மாய்க்குப் போறதையெ ல்லாமா பதிவுல எழுதுவாய்ங்க,சீச்சீ!!!! //எவ்ஐயா, இந்தப் பதிவுல கம்மாயை மட்டுமா கவனிச்சீங்க...யூ நாட்டி!////ஒரு பொண்ணு தண்ணியில?!மிதக்குது,அப்புறம் ரெண்டு போட்டோல சேத்துல புரளுதுங்க,ஹ!ஹ!!ஹா!!!

  ReplyDelete
 21. உங்களுக்கு குற்றாலம் பக்கத்துல எந்த ஊரு தல?

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.