Sunday, August 25, 2013

மன்மோகன் சிங்கை குறை சொல்லும் அப்பாடக்கர்களே..

ஏதோ கொஞ்சம் ரூபா மதிப்பு குறைந்துவிட்டது. உடனே 2 X 2 என்றால் என்னவென்று கால்குலேட்டர் இல்லாமல் கணக்கப்போடத் தெரியாத சவலைகள், பொருளாதார மேதை திரு.மன்மோகன் சிங் அவர்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அவ்வளவு கேவலப்படுத்துகிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக திரு.மன்மோகன் சிங் அவர்கள் செய்த சாதனைகளையும், ஒரு இந்தியனாக அவர் பிறந்ததற்காக, நாம் பெருமைப்படுவதன் அவசியத்தையும் விளக்குவதே இந்தப் பதிவு.
 பத்தாண்டுகளுக்கு முன்பு உலகைப் பிடிக்க ஆரம்பித்த பொருளாதாரத் தேக்க பூதம், 2007ல் முழுவீச்சில் எல்லா நாடுகளையும் சிக்கலில் தள்ளியது. பெரியண்ணன் அமெரிக்காவே ஆடிப்போய் விட்டது. அங்கேயே வேலையில்லாத் திண்டாட்டம், புதிய தொழில்கள் தொடங்கமுடியா நிலை, நிறுவனங்கள் கையில் போதிய நிதி/ஆர்டர் இல்லாமை என அமெரிக்கா டவுசர் கழண்ட காலம் அது. அப்போது டாலரின் மதிப்பு 40 ரூபாய்களில் இருந்தது.

அமெரிக்காவை அமெரிக்கர்களே காப்பாற்ற முடியாத நேரத்தில், மன்மோகன் அவர்கள் அவதார்-ஆக உருவெடுத்தார்,

அப்போது அமெரிக்காவிடம் ஒரு போர்க்கப்பல் இருந்தது. அந்த கப்பல், 30 வருடங்கள் முழுமையாக உபயோகப்படுத்தப்பட்ட, அடுத்து உடைத்து வீசப்படவேண்டிய கப்பல். அப்போது நம் அவதார் கண் திறந்தார். அந்தக் கப்பலை இந்தியக் கப்பல்படைக்காக 400 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்வதாக அறிவித்தார். அதே 400 கோடி ரூபாய் நிதி திரட்டவே நெய்வேலி என்.எல்.சி.-யை தனியார் மயமாக்குவதாக, தற்போது அவதார் சொல்வதில் இருந்து, 400 கோடி என்பது லேசுப்பட்ட சமாச்சாரம் அல்ல என்று நாம் அறிந்து கொள்ளலாம்!

அமெரிக்கா என்பது மக்கள் அல்ல. அங்குள்ள நிறுவனங்கள் தான். அது ஒரு முழு முதலாளித்துவ தேசம். ஆனாலும் அதிசயமாக மக்கள் ஒரு விஷயத்திற்காக ஒன்றுகூடிப் போராடி, வெற்றிகண்டர்கள். அது, அங்கே இனிமேல் அணு உலை கட்டக்கூடாது என்பது தான். அணு உலை அமைக்கும் நிறுவனங்கள் எல்லாம் நொடித்துப்போயின.

நிறுவனங்கள் நொடித்தால், வேலை இழப்பு, வேலையில்லாத் திண்டாட்டம். என்ன செய்வது என்று அவர்கள் திகைத்தபோது, அவதார் மீண்டும் கருணை காட்டினார். இந்தியாவில் பலத்த எதிர்ப்பையும் மீறி அணுசக்தி ஒப்பந்தம் மூலம் 20 உலைகளுக்கு மேல் அமைக்கப் போவதாக அறிவித்தார். 'ஆஹா..ஆஹா..2000 வருடங்கள் கழித்து வருவதாகச் சொல்லிச் சென்ற இயேசுபிரான் இவர் தானோ?' என்று அமெரிக்கர்களே குழம்பும் வண்ணம், அடுத்தடுத்து தனது பொருளாத அறிவின் மூலம் பல திட்டங்களை செயல்படுத்தினார். அதுவும், இந்தியாவில் இருந்தபடியே. அடடா..அடடா!

ஏதோ நம்மால முடிஞ்சது..!
 இப்போதுகூட வால்மார்ட் போன்ற ஏழை பொட்டிக்கடை முதலாளிகளுக்கு இந்தியாவின் வாசலைத் திறந்துவிட்டிருக்கிறார். அவர்கள் கடை வைத்தாலும் மக்கள் வாங்க வேண்டுமே? 'இவர்கள் ரேசனிலேயே வாழ்வதற்கு அரிசி, பருப்பும், சாவதற்கு மண்ணெண்ணெயும் வாங்கிக்கொண்டிருக்கிறார்களே' என்று சிந்தித்த நம் பொருளாதரச் சிற்பி, மெதுவாக ரேசன் கடைகளை அழிக்கும் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, இனிமேல் உங்கள் அக்கவுண்ன்டிலேயே காசு போட்டு விடுவோம். நீங்கள் அதை எடுத்துக்கொண்டு, இப்போதைக்கு அண்ணாச்சி கடையிலும், பின்னாளில் வால்மார்ட்டிலும் பொருள் வாங்கிக்கொள்ளலாம். இந்திய அரசின் நிர்வாகச் சுமையைக் குறைத்த மாதிரியும் ஆச்சு, அமெரிக்க பொட்டிக்கடை அண்ணாச்சிகளுக்கு கஸ்டமர் பிடித்துக்கொடுத்த மாதிரியும் ஆயிற்று.

எவ்வளவு தீர்க்க தரிசனம் உள்ள, பொருளாதார சிந்தனைச் சிற்பி அவர். இவ்வாறாக, பல்வேறு திட்டங்கள் தீட்டி, திவாலாகப் போன அமெரிக்காவையே காப்பாற்றிய மன்மோகனையா குறை சொல்கிறீர்கள்? ஒரு இந்தியனால் அமெரிக்கா மேலெழுகிறது என்பது உலக அரங்கில் நமக்கெல்லாம் பெருமை என்று புரியவில்லையா அறிவிலிகளே?

டாலரில் நாம் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தும் நேரம் இது என்று சொல்கிறார்கள்.  கூடவே வட்டியும் உண்டு. அதனாலேயே ரூபாய்,அளவுக்கதிகமாக மதிப்பு வீழ்த்தப்படுவதாக பொருளாத உலகில் ஒரு கிசுகிசு உலவுகிறது. அதாவது 40 ரூபாய் கடன் வாங்கிவிட்டு, தற்போதிய மதிப்பில் 65 ரூபாய் திருப்பிச் செலுத்தப் போகிறோம். அமெரிக்காவிற்கு எவ்வளவு பெரிய நன்மையை நாம் செய்கிறோம்! அப்பேர்ப்பட்ட வல்லரசையே தூக்கி நிறுத்தும் நிஜ வல்லரசு நம் பொருளாதார மேதை மன்மோகன் என்பதை நினைவில் வையுங்கள்.

எங்கள் மண்ணுமோகனிடம் நேர்மை இல்லாமல் இருக்கலாம், சூடுசுரணை இல்லாமல் இருக்கலாம்..ஏன், தேச பக்திகூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரிடம் பொருளாதர அறிவு இல்லை என்று சொல்லாதீர்கள். தான் நினைத்ததை முடித்த, அமெரிக்க ரட்சகர் அவர்.

வாழ்க மண்ணு! வளர்க அமெரிக்க சிட்டிசன் ஆகிவிட்ட அவர் பொண்ணு!மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

30 comments:

 1. வாழ்க மண்ணு! வளர்க அமெரிக்க சிட்டிசன் ஆகிவிட்ட அவர் பொண்ணு!//////////

  நீ மறுபடியும் அமெரிக்காவிற்கே போயிரு சிங்கு இல்ல ஊதீருவேன் உனக்கு சங்கு

  ReplyDelete
 2. வாழ்க மண்ணு! வளர்க அமெரிக்க சிட்டிசன் ஆகிவிட்ட அவர் பொண்ணு!

  நம்ம வாழ்வுல மண்ணு...
  நாளை நம்ம சாப்பாடு பண்ணு...

  ReplyDelete
 3. இந்தப் ப்ளாக்கரு,பேச்சு புக்கு,டுவீட்டரு ன்னு வந்தாலும் வந்திச்சு,ஒரு 'மண்ணு' ம் புடுங்க முடியல!ச்சே.....................பேரிக்காக்காரன்...................ச்சீ.............அமெரிக்காக்காரன் கிட்ட சொல்லி எல்லாத்தையும்(ப்ளாக்கரு&பேச்சு புக்கு&டுவிட்டரு) காசு கட்டுற மாதிரி மாத்திடணும்!(ங்கொய்யால யாரு கிட்ட,ஹூம்!)

  ReplyDelete
 4. அவரு பேசாம அமெரிக்க அதிபர் ஆகிடலாம்...

  ReplyDelete
 5. நமகெல்லாம் சமாதி கட்டாம இவன் சாக மாட்டான் போலிருக்குய்யா.............

  ReplyDelete
 6. அவரு பேசாமல் அமெரிக்காவில் ஏதாவது வங்கியில் இருந்து இருக்கலாம் சாமி இப்படி சோனியா காலில் இருப்பதில்விட!ம்ம்

  ReplyDelete
 7. மன்மோகன் சிங்கை குறை சொல்லும் அப்பாடக்கர்களே..//

  இந்த தலைப்புக்கு பதிலா எங்க மூஞ்சில நாலு அப்பு அப்பி இருக்கலாம் ஹி ஹி....

  ReplyDelete
 8. சாவதற்கு மண்ணெண்ணெயும் //

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

  ReplyDelete
 9. அண்ணே!மன்னிச்சுடுங்க.,தலைப்பைப்பார்த்து உங்கள ஒரு நிமிஷம் தப்பா நினைச்சுட்டேன்.

  ReplyDelete
 10. தங்களின் தலைப்பே என்னை சுண்டி இழுத்தது. வாழ்க தலைப்புத் திலகமே!

  ReplyDelete
 11. இதில் அவரு நம்மாளுரென்று வேறு ஒரு தகவல்....!

  ReplyDelete
 12. நம்ம மன்மோகன், அமெரிக்க ஜனாதிபதி ஆகி சாதனை படைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  ReplyDelete
 13. //சக்கர கட்டி said...
  நீ மறுபடியும் அமெரிக்காவிற்கே போயிரு சிங்கு இல்ல ஊதீருவேன் உனக்கு சங்கு //

  ஏ..டண்டணக்கா..டணக்குணக்கா!

  ReplyDelete
 14. // சே. குமார் said...
  வாழ்க மண்ணு! வளர்க அமெரிக்க சிட்டிசன் ஆகிவிட்ட அவர் பொண்ணு!

  நம்ம வாழ்வுல மண்ணு...
  நாளை நம்ம சாப்பாடு பண்ணு...//

  கவிதை..கவிதை.

  ReplyDelete
 15. // Subramaniam Yogarasa said...
  இந்தப் ப்ளாக்கரு,பேச்சு புக்கு,டுவீட்டரு ன்னு வந்தாலும் வந்திச்சு,ஒரு 'மண்ணு' ம் புடுங்க முடியல!ச்சே.....................பேரிக்காக்காரன்...................ச்சீ.............அமெரிக்காக்காரன் கிட்ட சொல்லி எல்லாத்தையும்(ப்ளாக்கரு&பேச்சு புக்கு&டுவிட்டரு) காசு கட்டுற மாதிரி மாத்திடணும்!(ங்கொய்யால யாரு கிட்ட,ஹூம்!) //

  ஐயா,அதையும் சீக்கிரமே செய்வாரு நம்மாளு!

  ReplyDelete

 16. // கோவை நேரம் said...
  அவரு பேசாம அமெரிக்க அதிபர் ஆகிடலாம்...//

  அவருக்கு அடுத்த நாட்டுக்காக வேலை செஞ்சே பழக்கம். அங்க போனா, ஒருவேளை இந்தியாவை முன்னேத்திடலாம்!!

  ReplyDelete
 17. // Jayadev Das said...
  நமகெல்லாம் சமாதி கட்டாம இவன் சாக மாட்டான் போலிருக்குய்யா.............//

  ஓ..110 கோடி சமாதி வேற கட்டணுமா? ஓகே, ஒரு அமெரிக்க கம்பெனிக்கு கான்றாக்ட் விட்டுர வெண்டியது தான்!!

  ReplyDelete
 18. // தனிமரம் said...
  அவரு பேசாமல் அமெரிக்காவில் ஏதாவது வங்கியில் இருந்து இருக்கலாம் சாமி இப்படி சோனியா காலில் இருப்பதில்விட!ம்ம்//

  காலில் விழுந்தாலும் பீ.எம்முல்ல!

  ReplyDelete

 19. // MANO நாஞ்சில் மனோ said...
  மன்மோகன் சிங்கை குறை சொல்லும் அப்பாடக்கர்களே..//

  இந்த தலைப்புக்கு பதிலா எங்க மூஞ்சில நாலு அப்பு அப்பி இருக்கலாம் ஹி ஹி....//

  பதிவைப் படிங்கண்ணே, யாரு மூஞ்சில அப்பியிருக்கேன்னு புரியும்.

  ReplyDelete

 20. // கோகுல் said...
  அண்ணே!மன்னிச்சுடுங்க.,தலைப்பைப்பார்த்து உங்கள ஒரு நிமிஷம் தப்பா நினைச்சுட்டேன்.//

  தம்பி, 45 ரூபாய் மதிப்பில் இருந்த டாலரை, 65 ரூபாய்க்கு உயர்த்திய உத்தமரைக் குறை சொல்லலாமா?

  ReplyDelete
 21. // k.murugaboopathy sivagiri erode said...
  வாழ்க தலைப்புத் திலகமே! //

  ஏனுங், புடவைத் தலைப்புங்களா?

  ReplyDelete
 22. // திண்டுக்கல் தனபாலன் said...
  நம்மாளுரென்று....!//

  என்னய்யா இது?..அவசரம்னாலும் இவ்வளவு அவசரக் கமெண்ட் ஆகாதுய்யா!!

  ReplyDelete
 23. // உலக சினிமா ரசிகன் said...
  நம்ம மன்மோகன், அமெரிக்க ஜனாதிபதி ஆகி சாதனை படைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.//

  அதுக்கு சோனியா மாதிரி அங்கேயும் ஒரு தியாகி கிடைக்கணுமே சார்!

  ReplyDelete
 24. அதனால் நாம எல்லாரும சேர்ந்து அவருக்கு அடுத்து ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் .உங்கள் சேவை நாட்டுக்கு தேவை !...வாழ்க பாரதம் !

  ReplyDelete
 25. இப்படி ஒரு அழுத்தமான பதிவை நான் எதிர்பார்கவில்லை.பார்த்தால் பசு பாய்ந்தால் புலி என்பது இது தானோ? எப்பா.... நீங்க சரியான ஆள் தான்
  //வாழ்க மண்ணு! வளர்க அமெரிக்க சிட்டிசன் ஆகிவிட்ட அவர் பொண்ணு!//.முத்தாய்பாக சொன்னது அபாரம். ....வெளுத்துக்கட்டுங்க ராஜா. :))

  ReplyDelete
 26. @Manickam sattanathan

  ஹி..ஹி..அண்ணே, நாங்கள்லாம் பேச்சுல எலி..எழுத்துல புலி!

  ReplyDelete
 27. நல்ல பதிவு! நல்ல வஞ்சப் புகழ்ச்சி அணி பாடுறீங்க:)

  ReplyDelete
 28. அடேய் சச்சு குட்டி இந்த உலகமே உன் திறமையை பார்த்து வியக்கும் அளவிற்கு இந்த நாட்டின் அரசை பார் கொள்ள செய்தாய்யடா ! மற்ற நாடுகள் உன்னிடம் யானை பால் குடிக்க வேண்டுமடா என் தங்கமே.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.