அதாகப்பட்டது... :
சமர் படத்திற்குப் பிறகு இயக்குநர் திருவின் இயக்கத்திலும், பாண்டிய நாடு வெற்றிக்குப் பின் விஷாலின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம், நான் சிகப்பு மனிதன். தீராத விளையாட்டுப்பிள்ளையாக இருந்த விஷால் திருந்தி, பாண்டியநாட்டில் வெற்றிக்கொடி நாட்டியபின் வரும் படம் என்பதாலும், லிப் டூ லிப் கிஸ் இருக்கிறது என்பதாலும் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு. எப்படி இருந்தது கிஸ்..ச்சே..படம் என்று பார்ப்போம், வாருங்கள்.
ஒரு ஊர்ல..:
’நார்கொலாப்ஸி’ எனும் நோயினால் அவதிப்படும் மனிதர் விஷால். அப்படீன்னா என்னன்னா, ஏதாவது அதிர்ச்சியான செய்தியை/சத்தத்தை கேட்டாலோ, ஷகீலா படம் பார்த்தாலோ, உணர்ச்சிவசப்பட்டாலோ(ரெண்டும் ஒன்னுதாங்கிறீங்களா?..!) பொசுக்குன்னு தூங்கிடுவார் மனுசன். இதெல்லாம் ஒரு மேட்டரான்னு நினைக்காதீங்க. அந்த பிரச்சினையால மேட்டர்கூட கஷ்டம்ங்கிறது தான் சிக்கலே..இப்போப் புரியுதா, எம்மாம் பெரிய வியாதின்னு. சரி..அப்படிப்பட்ட மனுசனையும் புரிஞ்சுக்கிட்டு, லவ் பண்ணுதாரு லட்சுமி மேனன். ஆனால் ஒரு இக்கட்டான சூழ்நிலையில, இந்த வியாதியால லட்சுமியை விஷால் காப்பாத்த முடியாம போயிடுது. அதனால லட்சுமி கோமா ஸ்டேஜ்க்கு போயிடுறாங்க..அதுக்குக் காரணமானவங்களை கண்டுபிடிச்சு, இந்த நோயையும் மீறி எப்படி பழி வாங்குகிறார் என்பது தான் கதை.
உரிச்சா....:
விஷால் நண்பர்களுடன் அலைந்து திரிந்து ஒரு துப்பாக்கி விலைக்கு வாங்குவதில் ஆரம்பிக்கிறது படம். அடுத்து நார்கொலாப்ஸின்னா என்னன்னு விவரிச்சுட்டு, சட்டுபுட்டுன்னு கதைக்குள்ளே நுழையறாங்க. Bucket List மாதிரி விஷாலுக்கும் சில விஷயங்கள் வாழ்க்கையில் நடக்கணும்ன்னு ஆசை. ரோட்ல தனியாப் போகணும்..ஒருநாள் ஃபுல்லா முழிச்சிருக்கணும்..தேவதையைப் பார்க்கணும்..லவ் பண்ணனும்..கிஸ் பண்ணனும்..தப்பு செய்றவங்களை தட்டிக்கேட்கணும்ன்னு பத்து விஷயங்களை லிஸ்ட் போட்டு வச்சிருக்காரு..அடடா, விட்டுட்டனே..ஷகீலா படத்தை முதல்நாள் முதல் ஷோ பார்க்கணும் என்பதும் ஒரு ஆசை!
அந்த ஆசைகள் நிறைவேறுவதை தனியாச் சொல்லாம, அவரோட வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவம் அடுத்த சம்பவத்துக்கு(ஆசைக்கு) இட்டுச் செல்ற மாதிரி காட்டியிருப்பது நல்ல திரைக்கதை உத்தி. சமர் திரைக்கதை மாதிரியே இதிலும் முதல்பாதியில் பின்னியிருக்கார் திரு. லட்சுமியை ‘அந்த’ சூழ்நிலையில காப்பாத்த முடியாம, அதிர்ச்சியாகி விஷால் தூங்கறது பதற வைக்குது. அப்போ விடறாங்க இண்டர்வெல்.
இண்டர்வெல் வரைக்குமே படம் பட்டையைக் கிளப்புது. லட்சுமியை கோமாக்கு அனுப்புன ரவுடிகளை எப்படி பழிவாங்கப்போறார்ன்னு ஆவலையும் தூண்டும்படியா, இண்டர்வெல் ப்ளாக். ரவுடிகளில் ஒருத்தன் பேர் மட்டும் விஷாலுக்கு தெரியுது. அதை வச்சு, அவங்களைத் தேடி அவர் அலையறாரு. அந்த ரவுடியைக் கண்டுபிடிக்கும்போது, அவங்களை அனுப்புன வில்லன் யாருன்னு நமக்குத் தெரியுது. அந்த வில்லன் ஏன் அப்படி விஷாலுக்குப் பண்ணான்னு ஒரு ஃப்ளாஷ்பேக் வைக்கிறாங்க பாருங்க, அங்கே தான் படம் டொக் ஆகிடுது.
ஒரு நீளமான, கேவலமான ஃப்ளாஷ்பேக். ஒருத்தன் விஷால் மாதிரி அப்பாவிக்கு இப்படி ஒரு காரியம் பண்ணி இருக்கான்னா, அதுக்கான காரணம் எப்படி இருக்கணும்? (அல்லது நான் மகான் அல்ல மாதிரி காரணமே இல்லாம தப்பு பண்ணும் ரவுடிகள்ன்னு விட்டிருக்கலாம்). ஆனால் இதில் சீன் படக்கதை மாதிரிப் போகுது அந்த ஃப்ளாஷ்பேக். படத்துக்கு யூ/ஏ சர்ட்ட்ஃபிகேட் கிஸ்க்காக கொடுத்திருக்க மாட்டாங்க. இந்த ஃப்ளாஷ்பேக்கிற்க்காத்தான் கொடுத்திருப்பாங்க. இனியா எனும் நல்ல நடிகையை சென்னையில் ஒருநாளுக்கு அப்புறம் அதே கேரக்டர்ல பார்க்க கொடுமையா இருக்கு. ஆனால் அவருக்கு நல்ல நடிப்பு.
வில்லன்.அவனுக்கு துரோகம் பண்ணும் மனைவி..பொண்டாட்டியை இன்னொருத்தன்கிட்ட அனுப்பி காசு வாங்கும் புருசன்னு அய்யய்யோ..சகிக்கலை. இந்த மாதிரிப் படத்தில் அந்த மாதிரியான கேரக்டர்களையோ, சீன்களையோ யாரும் எதிர்பார்க்கலை. முதல்பாதியில் கிஸ்+ஜலக்கிரீடை இருந்தாலும் ஆபாசமாத் தெரியலை. ஆனால் அந்த டீசண்ட்டா முன்பாதி செட் பண்ண மனநிலைக்கு நேரெதிரா சீன்கள் வரும்போது, ரசிக்க முடியலை. சர்ப்ரைஸ் கொடுக்கணும்ன்னு டைரக்டர் நினைச்சிருக்காரு, ஆனால் அது ‘அதிர்ச்சி’ ஆகிடுச்சு!
அந்த வில்லனோ, ஃப்ளாஷ்பேக்கோ இல்லாமலேயே (இப்போ கட் பண்ணாலும்) படம் நல்லாத்தான் இருந்திருக்கும். இந்த நோயோட அவர் எப்படி ஜெயிக்கிறார்ன்னு கதை சொல்ல வந்துட்டு, அவருக்கு ஏன் அப்படிப் பண்ணாங்கன்னு விளக்குறதுக்கு அதிக நேரம் எடுத்து, ஆபாசமா விளக்கிட்டதால இரண்டாம்பாதியில் பாதி அவுட் ஆகிடுது. அப்புறமா விஷால் பழி வாங்குறதைக் காட்டினாலும் ‘அட..போங்கப்பா’ எனும் மனநிலைக்கு நாம வந்திடறோம்.
சமர் பட திரைக்கதை டெம்ப்ளேட்டில் இதையும் சொல்லி இருக்கிறார்கள். சமர் படத்திலும் முதல் பாதியில் வலுவான முடிச்சை திரு போட்டிருப்பார். ஆனால் அந்த முடிச்சை அவிழ்ப்பதில் கோட்டை விட்டிருப்பார். இதிலும் அப்படியே!
விஷால்:
பஞ்ச் டயலாக், ஹீரோயிசம் இல்லாம விஷாலைப் பார்க்க நல்லா இருக்கு. இதே ரூட்டில் போறது அவருக்கும் நமக்கும் நல்லது. நார்கொலாப்ஸி நோயால் பாதிக்கப்பட்டவரா தத்ரூபமா நடிச்சிருக்கார். தூங்கறதுல என்னய்யா தத்ரூபம்ங்கிறீங்களா? அதைச் சொல்லலை..அந்த நோயால் வேலை கிடைக்காமல் ஃபீல் பண்றது, லட்சுமி மேனனை லவ் பண்ணும் சீன்ஸ், லட்சுமியுடன் வரும் அந்த பாத்ரூம் சீன்(நல்ல சீன் தான்.)..என பல காட்சிகளில் நடிப்பில் கலக்கி இருக்கிறார். ஒரு நடிகரா ஜெயிச்சிட்டார், விஷால்.
லட்சுமி மேனன்:
நடிக்கத் தெரிந்த சில நடிகைகளில் ஒருவர். இதில் சிட்டி பொண்ணா வர்றார். இண்டவ்ர்ல்ல கோமாக்கு போயிடறதால, இரண்டாம்பாதியில் நடிக்க ஸ்கோப் இல்லை. ஆனால் முதல் பாதியில் சின்ன சின்ன எக்ஸ்பிரசன்ஸில்கூட அசத்துகிறார். அந்த கண்களே, அவர் நினைப்பதைச் சொல்லிவிடுகின்றன. அட்டகாசம்! பெண்ணே..பெண்ணே பாடல் காட்சியில் அவர் ரொமாண்டிக்காக ஆடுவதைத் தான் பார்க்க முடியவில்லை. ‘கதைக்குத் தேவைப்பட்டதால முத்தம் கொடுத்தேன்’ன்னு சொன்னார். அது உண்மை தான்!
சுந்தர்:
யார் இவரு? இவருக்கெல்லாம் எப்படி சான்ஸ் தர்றாங்கன்னு தெரியலை. மூணு படத்தில் தனுஷ் நண்பனா வந்தவர். மயக்கம் என்ன, மூணு, கதிர்வேலன் காதலின்னு இவரோட அற்புதமான நடிப்பால் ஊத்தி மூடுன படங்கள் ஏற்கனவே பல உண்டு. அப்படி இருக்கும்போது, மெயின் வில்லன் கேரக்டருக்கு..அதிலும் நடிக்க நல்ல ஸ்கோப் உள்ள அந்த கேரக்டருக்கு இவரை எப்படிப் போட்டார்கள் என்று தெரியவில்லை..முடியலை. அவரோட ‘வெற்றி’ப்பட வரிசையில் இதையும் சேர்த்த பெருமை அவருக்கே!
டெக்னிக்கல் டீம்:
படம் முழுக்க நம்மை அசத்துவது ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவும், ரூபனின் எடிட்டிங்கும். த்ரில்லர் எஃபக்ட்டைக் கொடுப்பதில் இருவரும் போட்டி போட்டு உழைத்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையில் பெண்ணே பாடல் ஓகே..வசனங்களில் நல்ல ஷார்ப்னெஸ் தெரிகிறது.
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- அலைபாயும் இரண்டாம்பாதி
- வில்லனின் ஃப்ளாஷ்பேக்..(ஃபேமிலி ஆடியன்ஸைக் கவராது)
- சூப்பர் வில்லன் சுந்தர்
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- விறுவிறுப்பான முதல்பாதி திரைக்கதை
- வசனம்
- விஷால் & லட்சுமி மேனனின் மெச்சூரிடீயான நடிப்பு + கெமிஸ்ட்ரி.
- அவ்வப்போது ரிலாக்ஸ் செய்யும் ஜெகனின் காமெடி டயலாக்ஸ்
- இனியாவின் நடிப்பு
பார்க்கலாமா? :
முதல்பாதிக்காக..........................பார்க்கலாம்!
நேரம் மிச்சம் நீங்கள் பார்த்ததே நான் பார்த்தது போல பார்க்கட காலியாக்கும் எண்ணம் இல்லை!ஹீ
ReplyDelete//(நல்ல சீன் தான்.)// அப்போ "அந்த" சீன் கெட்ட சீனா? ;-)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநல்ல நடு நிலையான விமர்சனம்.உங்க விமர்சனம் பாத்துத் தான் படமே(நெட்ல)பாக்கிறேன்,ஹ!ஹ!!ஹா!!!
ReplyDeleteநீங்க பாத்து விமர்சனம் எழுதற எல்லா படமும் முதல் பாதி நல்லா இருக்கு இரண்டாம் பாதி சொதப்பல். என்ன காரணம்? உங்களுக்கும் கொஞ்சம் Narcolepsy இருக்கோ..கோ....கோ???
ReplyDeleteபாண்டியநாடு ரொம்ப பிடித்தது. சிடியில் பார்த்து கொள்ளலாம் போலயே..
ReplyDelete//தனிமரம் said...
ReplyDeleteநேரம் மிச்சம் நீங்கள் பார்த்ததே நான் பார்த்தது போல பார்க்கட காலியாக்கும் எண்ணம் இல்லை!ஹீ//
ரைட்டு.
//கோவை ஆவி said...
ReplyDelete//(நல்ல சீன் தான்.)// அப்போ "அந்த" சீன் கெட்ட சீனா? ;-)// ஆமாம்!
// Subramaniam Yogarasa said...
ReplyDeleteநல்ல நடு நிலையான விமர்சனம்.உங்க விமர்சனம் பாத்துத் தான் படமே(நெட்ல)பாக்கிறேன்,ஹ!ஹ!!ஹா!!!//
வாழ்க வளமுடன்.
//Thanndavarayan said...
ReplyDeleteநீங்க பாத்து விமர்சனம் எழுதற எல்லா படமும் முதல் பாதி நல்லா இருக்கு இரண்டாம் பாதி சொதப்பல். என்ன காரணம்? உங்களுக்கும் கொஞ்சம் Narcolepsy இருக்கோ..கோ....கோ???//\\
ஹா..ஹா..உங்களுக்கு ஒரு வேண்டுகோள்..இந்தப் படத்தைப் பார்த்துட்டு முதல்பாதி-இரண்டாம்பாதி எப்படி இருந்துச்சுன்னு அப்டேட் பண்ணுங்களேன்!!!
//அமுதா கிருஷ்ணா said...
ReplyDeleteபாண்டியநாடு ரொம்ப பிடித்தது. சிடியில் பார்த்து கொள்ளலாம் போலயே..//
அது பாவம்ம்ம்ம்ம்!
இந்திய தொல்லைகாட்சிகளில் முதல் முறையா வரும்போது பார்த்துக்கிறேன்! விமர்சனத்திற்கு நன்றி!
ReplyDeleteஇனியாவ பாக்குற சக்தி எனக்கு இல்ல... ;) விமர்சனத்துக்கு நன்றி
ReplyDeleteபடம் பார்க்கும் எண்ணமே எனக்கு இல்லை...!
ReplyDeleteஎன் பாகிஸ்தானி நண்பன் ஒருவன், அழகான பெண்களை பார்த்தால் உடனே தூங்க போயிருவான், என்னய்யா"ன்னு கேட்டும் பார்த்தேன் என்னான்னுதெரியாது மனோஜ், அழகான பெண்களை பார்த்ததும் எனக்கு உடனே தூக்கம் வந்துரும்ன்னு கேஷுவலா சொல்வான்...!
இப்பதான் புரியுது அது ஒரு நோய் என்று..!
நல்ல படம்.சீரான கதை ஓட்டம்.பாத்திரமுணர்ந்து அனைவரும் செய்திருக்கிறார்கள்.இயக்குனருக்குப் பாராட்டுகள்!
ReplyDeleteanother review - http://kanavuthirutan.blogspot.com/2014/04/blog-post_11.html
ReplyDelete