அதாகப்பட்டது... :
மூன்று ஆண்டு வனவாசத்திற்குப் பிறகு, வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் தெனாலிராமன். ஏற்கனவே ட்ரெய்லரும், பாடல்களும் நம் மனதைக் கவர்ந்துவிட்டன. படமும் நம் எதிர்பார்ப்பை ஈடு செய்ததா என்று பார்ப்போமா!!
ஒரு ஊர்ல..:
மன்னராக ஒரு வடிவேலு. அவரது நவரத்தின அமைச்சர்களான ஒன்பது பேரும் வில்லன் ராதாரவியுடன் இணைந்துகொண்டு, நாட்டையே குட்டிச்சுவராக்குகிறார்கள். இது ஏதும் அறியாத மன்னன் அந்தப்புரத்தில் மனைவிகளோட லயித்து இருக்கும்போது, தெனாலிராமனான இன்னொரு வடிவேலு மந்திரியாக வருகிறார். பிறகு அவர் எப்படி மன்னனைத் திருத்தி மந்திரிகளிடம் இருந்து காத்து, இளவரசியை லபக்குகிறார் என்பதே கதை.
உரிச்சா....:
ஒன்பது மந்திரிகளும் சீன அரசிடம் நமது நாட்டை வியாபாரத்துக்கு திறந்துவிட ஒப்புக்கொள்வதுடன் படம் ஆரம்பிக்கிறது. மன்னர் ஒரு மக்கு என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அப்பாவியான மன்னர் நாடு நலமாக இருப்பதாக மந்திரிகள் சொல்வதை நம்பிக்கொண்டு அந்தப்புரத்தில் 36 மனைவிகளுடன் ஜாலியாக இருக்கிறார். சீனப்பயணத்தில் ஒரு நல்ல மந்திரி சீன வில்லனால் கொல்லப்பட, அந்த பதவிக்கு யாரைப் போடுவது என போட்டி நடக்கிறது. தெனாலிராமன் ஜெயித்து மந்திரியாக உள்ளே நுழைகிறார். அவரை ஜெயிக்க விடாமல் தடுக்க, மந்திரிகள் போராடுவதும் வடிவேலு அதையும் மீறி ஜெயிப்பதும் கலகலப்பான காட்சிகள்.
தொடர்ந்து தெனாலிராமனின் புத்திசாலித்தனத்தில் மன்னரும் இளவரசியும் மயங்குகிறார்கள். மன்னர் ஏதாவது டெஸ்ட் வைப்பதும் தெனாலிராமன் ஜெயிப்பதுமாக கலகலப்பூட்டும் காட்சிகளுக்கு இடையே, மன்னரைத் திருத்தும் வேலைகளும் நடக்கின்றன. ஆனாலும் மந்திரிகள் தெனாலிராமன் மேல் பழி சுமத்தி, அரண்மனையை விட்டே விரட்டுகிறார்கள். மீண்டும் மன்னரும் தெனாலிராமனும் இணைந்தார்களா, மன்னர் திருந்தினாரா என்பதை சுவையாக ஆனால் ஸ்லோவாகச் சொல்லி இருக்கிறார்கள்.
தெனாலிராமன் கதைகளை ஏற்கனவே படித்தவர்களுக்கு வடிவேலு எப்படி சமாளிப்பார் என்பதை எளிதாக யூகிக்க முடியும் என்பது தான் படத்தின் பலவீனம். ஆனாலும் வடிவேலு தனது மேனரிசத்தாலும் டயலாக் டெலிவரியாலும் சமாளிக்கிறார். புலிகேசி பாணியில் மக்களைக் கவனிக்காத மன்னர் + போராளி கான்செப்ட்டையே தெனாலிராமன் எனும் தேன் தடவி சொல்லியிருக்கிறார்கள். புலிகேசி அளவிற்கு சிரிக்க வைக்கும் காட்சிகள் அதிகம் இல்லை.(இருக்கின்றன, ஆனாலும் அந்த அளவிற்கு சிரிப்பு வரவில்லை). இந்திரலோகத்தில் அழகப்பன் அளவிற்கு மோசம் இல்லை, புலிகேசி அளவிற்கு டாப்பும் இல்லை.
கதை கொஞ்சம் சீரியஸ் ஆனாலே ஃப்ளாஷ்பேக் போட்டு, மன்னர்-தெனாலி விளையாட்டுக்குப் போய் நம்மை ரிலாக்ஸ் பண்ணிவிடுகிறார்கள். நல்ல உத்தி.
வடிவேலு:
பொதுவாகவே நடிகர்கள் கொஞ்சம் கேப் விட்டு நடிக்க வந்தால், பழைய ஈர்ப்பு போய்விடும். ஆனால் இதில் வடிவேலு அப்படியே திரும்பி வந்திருக்கிறார். மன்னராகவும் தெனாலிராமனாகவும் நடிப்பு+நகைச்சுவையில் நன்றாகவே வித்தியாசம் காட்டி கலக்குகிறார். ஹீரோயினுக்கு அப்பாவாகவும் ஜோடியாகவும் நடிக்க அதிக துணிச்சல் வேண்டும்! தோற்றத்தில் பெரிய வித்தியாசம் இல்லாவிட்டாலும், மேனரிசங்களால் சமாளித்துவிடுகிறார். இரு கேரக்டர்களில், குழந்தைகளுடன் ஒளிந்து விளையாடுகின்ற, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மனைவியுடன் வரும் மன்னரே நம்மை அதிகம் கவர்கிறார்.
மீனாட்சி தீட்சித்:
வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க ஒத்துக்கொண்டதே பெரிய விஷயம். இதில் அவரை குறை சொல்வது பாவம்.....எப்போதும் கலகலப்பாக இருக்கும், மந்திரி மேல் மையல் கொள்ளும் இளவரசி வேடத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். இது குழந்தைகள் படம் என்ற தோற்றம் வந்துவிடக்கூடாது என்பதால் படம் முழுக்க தொப்புளுடன் கிளிவேஜ் தரிசனம். அத்தான் என்று கட்டிப்பிடித்தாலும் அப்பா என்று கட்டிப்பிடித்தாலும் கிளி தரிசனம் தவறாமல் கிட்டுகிறது!
சொந்தபந்தங்கள்:
மந்திரிகளில் மனோபாலா தான் டாப். வழக்கம்போல் அதிராமல் பேசி சிரிக்க வைக்கிறார். காமெடி வில்லன்களாகவே ஒன்பது பேரும் வருகிறார்கள். குறுநில மன்னராக வரும் ராதாரவி பொருத்தமான தேர்வு. இவரை விட்டால் நாசர் தான். தேவதர்ஷிணி நல்ல நகைச்சுவை நடிகையாக் ஃபார்ம் ஆகிவிட்டார். டயலாக் டெலிவரி அட்டகாசம். ஹீரோயினின் அம்மாவாக ஒரு காட்சியில் வரும் அந்த ஆண்ட்டி, செம எக்ஸ்பிரசன்.
டெக்னிக்கல் டீம்:
வடிவேலு புறாவை பறக்கவிட்டு நடந்துவரும் ஒரு ஷாட் இருக்கிறது பாருங்கள்..பின்னிவிட்டார்கள். ஒரு மாஸ் ஹீரோவுக்கு ஓப்பனிங் சீனாக வைக்கலாம். அவ்வளவு அழகு அந்த ஷாட். (படத்தில் இடையில் வருகிறது.) ராம்நாத் ஷெட்டியின் ஒளிப்பதிவு அருமையிலும் அருமை. தியேட்டரில் வசனங்கள் அற்ற அந்த ஒரு நிமிட ஷாட்டுக்கு கைதட்டல் கிடைத்தது. படத்தில் கலர்ஃபுல்லான ஆர்ட் டைரக்சன். புலிகேசி போல் இல்லாமல் இதில் அரண்மனையை வண்ணமயமாக உருவாக்கியிருக்கிறார்கள். பார்க்க நன்றாக இருக்கிறது.
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- ஸ்லோவான முதல்பாதி
- பழகிய தெனாலிராமன் ஜோக்ஸ், வேறு நகைச்சுவை பெரிதாக இல்லாதது
- ஆரம்பம் முதல் இறுதிவரை யூகிக்க வைக்கும் திரைக்கதை. பெரிய ட்விஸ்ட் எதுவும் இல்லாமல் இருப்பது ஒரு குறை.
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- வடிவேலு...வடிவேலு..வடிவேலு
- ஆரூர்தாஸின் அற்புதமான வசனங்கள்
- மன்னருக்கும் தெனாலிராமனுக்கும் உருவாகும் நட்பை அழகாக திரையில் கொண்டு வந்தது
- மன்னரின் குழந்தைத்தனத்தை ரசிக்கும்படி சொன்னது
- எதிர்பாராமல் வந்து விழும் ‘நார்மல்’ தமிழ் நகைச்சுவை வசனங்கள்.
- ஃபைட் சீன் இல்லாமல் படத்தை எடுத்தது
- இமானின் பாடல்கள். ‘ஆணழகு’ பாடலும் நெஞ்சே பாடலும் கேட்கவும் பார்க்கவும் நன்றாக இருக்கின்றன.
பார்க்கலாமா? :
குடும்பத்துடன் ஒருமுறை பார்க்கலாம். அதிகம் எதிர்பார்க்காமல் சென்றால், மூன்று வருடங்கள் கழித்து வந்திருக்கும் வடிவேலுவை ரசிக்கலாம்.
ஓஒ இப்ப வடிவேல் ரசிக்கும் நிலையில் இல்லை குஸ்பூ பிரச்சார பீரங்கி குடிகார்ன் பேச்சில் இழந்தது அதிகம் ஆக்கும்!ஹீ
ReplyDeleteமீண்டு[ம்] வடிவேலு வந்தது சந்தோஷம், இந்த படம் அவரை இன்னொரு ரவுண்டு வர வைக்கும் என்பதே இந்த விமர்சனத்தின் அழகு !
ReplyDeleteஏற்கனவே கேட்டுப் பழகிய தெனாலிராமன் ஜோக்குகளா...? அப்படியானால் கான்செப்டே தப்பாச்சே... கிருஷ்ண தேவராயரின் ஒன்பது மந்திரிகளும் புத்திசாலிகள். தவிர கிருஷ்ணதேவ ராயரும் நல்ல வீரர். அறிவாளின்னுல்ல படிச்ச நினைவு. என்னமோ போடா கணேஷா...
ReplyDeleteஎதையும் எதிர்பாக்காம போயிட்டு வாரேன்...
ReplyDeleteவடிவேலுவின் பாடி லாங்க்வேஜ் காமெடி சான்ஸே இல்ல, பார்ப்போம்....
ReplyDeleteஇப்ப வரைக்கும் ஐடியா இல்ல... பார்க்கலாம் ( பார்க்கலாம்ன்னு சொன்னது பார்க்கலாமா என்பதை பார்க்கலாம் ன்னு தான்) ஹா ஹா ஹா
ReplyDeleteவணக்கம்,நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.www.Nikandu.comநிகண்டு.காம்
ReplyDeleteவிமர்சனம் நன்று!பார்ப்போம்.
ReplyDelete//பால கணேஷ் said... [Reply]
ReplyDeleteஏற்கனவே கேட்டுப் பழகிய தெனாலிராமன் ஜோக்குகளா...? அப்படியானால் கான்செப்டே தப்பாச்சே... கிருஷ்ண தேவராயரின் ஒன்பது மந்திரிகளும் புத்திசாலிகள். தவிர கிருஷ்ணதேவ ராயரும் நல்ல வீரர். அறிவாளின்னுல்ல படிச்ச நினைவு. //
சார், இது கிருஷ்ணதேவராயர் கிடையாது. தெனாலிராமன் கேரக்டரை மட்டும் வைத்துக்கொண்டு புதிதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
This comment has been removed by the author.
ReplyDelete/கிளி தரிசனம் தவறாமல் கிட்டுகிறது!//
ReplyDelete"செங்கோவி" பெயருக்கு ஒரு சீட்டெடுத்து போட கிளி கூண்டை விட்டு வெளியே வந்துச்சா?
இப்போது தான் பார்த்தேன்,நன்று!இடைவேளைக்குப் பின் கொஞ்சம் தொய்வு இருந்து.விமர்சனம் நூற்றுக்கு நூறு விகிதம் சரியாக இருந்தது!
ReplyDelete@சேக்காளி ம்..கிளி அல்ல, கிளிகள்.
ReplyDelete//Subramaniam Yogarasa said... [Reply]
ReplyDeleteஇப்போது தான் பார்த்தேன்,நன்று!இடைவேளைக்குப் பின் கொஞ்சம் தொய்வு இருந்து.விமர்சனம் நூற்றுக்கு நூறு விகிதம் சரியாக இருந்தது!//
பார்த்தாச்சா? அடுத்து சமூகப்படங்களில் கலக்குவார் என்று நம்புவோம்.
விமர்சனம் அருமை...
ReplyDeleteவாயால் கெட்ட வடிவேலு மீண்டு வந்திருக்கிறார்... அரசியல் வசனங்களைத் தவிர்த்து தன் பாணியில் பயணித்தால் மீண்டும் ஒரு முறை அவரை அசைத்துக் கொள்ள முடியாது...
செங்கோவி said...அடுத்து சமூகப்படங்களில் கலக்குவார் என்று நம்புவோம்.///யெஸ்!இனி காமெடி ட்ராக்க கைவிட்டிட்டு,நீங்க சொன்ன மாதிரி லைன் ல போனா பிரகாசமா இருக்கும்,எதிர்காலம்!
ReplyDeleteசெங்கோவி said...அடுத்து சமூகப்படங்களில் கலக்குவார் என்று நம்புவோம்.///யெஸ்!இனி காமெடி ட்ராக்க கைவிட்டிட்டு,நீங்க சொன்ன மாதிரி லைன் ல போனா பிரகாசமா இருக்கும்,எதிர்காலம்!
ReplyDelete