Sunday, May 18, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-2)


2. கரு உருவாவது எப்படி? (ஹி..ஹி)

ஒரு படத்திற்கு மிகவும் அடிப்படையான விஷயம் தீம் தான். அதில் இருந்து தான் எல்லாமே டெவலப் ஆகிறது. எனவே தான் அதை கதைக்கரு என்று தமிழில் சொல்கிறோம். காதல், பழிக்குப்பழி, பாசம், தர்மம் வெல்லும் போன்றவையே கரு என்பதற்கு உதாரணங்கள். இது எப்படி உருவாகிறது?

கதைக்கரு தோன்றுவது என்பது முழுக்க சிந்தனை சார்ந்த விஷயம் என்றாலும் கரு என்பது நான்கு விதங்களில் உங்களுக்கு தோன்றலாம்.
  1. ஏதோவொரு விஷயம் உங்களை பாதிக்கிறது. அதாவது உங்களை உலுக்கிய, யோசிக்க வைத்த ஒரு விஷயம். அது கொடுக்கும் தீம். இது ஒருவகை. அது பசியாக இருக்கலாம். சுப்ரமணியபுரம் போன்று துரோகமாக இருக்கலாம். நட்பாக, காதலாக, காமமாகக்கூட இருக்கலாம். இப்படி ‘இந்த விஷயத்தை இன்னும் தெளிவாக, நம் பாணியில் சொல்வோம் ’என்று உங்களுக்குத் தோன்றும் கான்செப்ட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அது தான் கரு.
  2. அடுத்து கேரக்டரில் ஆரம்பித்து கருவில் முடிவது. உங்களுக்குத் தெரிந்த ஒரு வயதான நபர், பெண்களிடம் வழிவதை நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லது சீன் படம் ஓடும் தியேட்டரில் பார்க்கிறீர்கள். இந்த வயசுலயும் இது தேவையா என்று தலையில் அடித்துக்கொள்கிறீர்கள். அதோடு விடாமல், இது என்ன வகையான மனநிலை? இது எப்படி அந்த மனிதருக்கோ அல்லது சுற்றி உள்ளவர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தால்…தீராக் காமம் எனும் கரு உங்களுக்கு கிடைக்கும். அதை டெவலப் செய்தால், சித்திரம் பேசுதடி போன்றோ, யுத்தம் செய் போன்றோ உருவெடுக்கும். நாயகன் படமும் வரதராஜ முதலியார் எனும் கேரக்டரில் ஆரம்பித்து டெவலப் ஆன படம் தான்.
  3. அடுத்த வகை, ஸ்ட்ரெய்ட்டாக ஒரு கதையே சிக்குவது. ’இங்கே, இப்படி ஒருத்தன் இருந்தான்; அவனுக்கு இப்படி நடந்தது’ என்று நேரடியாகவே ஒரு விஷயம் மனதில் தோன்றுவது. ஒரு கதை உருவாகும் விதம் என்பது உளவியல்ரீதியான விஷயம் என்பதால், எங்கே இருந்து வந்தது என்றே தெரியாதபடி ஒருவரி சிக்கும்.(டிவிடியில் இருந்தா என்று செக் பண்ணிக்கணும், பாஸ்.) அந்த ஒருவரியில் இருந்தும், நீங்கள் ரிவர்ஸில் போய், கதையின் தீம் என்ன என்று கண்டுபிடிக்கலாம்.
  4.  சிலநேரங்களில் இரண்டு மூன்று தீம்கள் ஒரே கதையில் பின்னிக்கிடக்கலாம். அல்லது தீமே இல்லாமலும் நாம் முழிக்க வேண்டிவரலாம். (இதை எப்படி சமாளிக்கலாம் என்று கரு கான்செப்ட்டைப் பற்றிப் பேசி முடிக்கும்போது பார்ப்போம்)
(இங்கே சிவப்பில் உள்ளதை தனிப்பதிவாக எழுதிவிட்டேன். இருந்தாலும் இங்கேயும் இருக்கட்டும்!) தற்போது உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது பல நன்மைகளைக் கொடுத்திருந்தாலும், படைப்பாளிகளுக்கு ஒரு பெரும் கெடுதலையும் கொடுத்திருக்கிறது. அது, நீங்கள் என்ன செய்தாலும் உலகத்தில் உள்ள அத்தனை மொழிகளில் வந்த படங்களோடும் கம்பேர் செய்து, அதே மாதிரி சிறு ஒற்றுமை இருந்தால்கூட ‘காப்பி..காப்பி’ என்று கத்தி படைப்பாளியை இழிவு செய்யும்போக்கு அதிகரித்திருக்கிறது.

ஒரு கேரக்டர் அல்லது ஒரு தீம் தற்செயலாக ஒத்துப்போவதென்பது சாத்தியமான ஒன்றே உலகில் யாருமே யோசிக்காத ஒரு விஷயத்தைத் தான் நாம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவீனம்.

ஹீரோவிடம் டாக்டர்கள் ‘இன்னும் மூன்று மாதத்தில் இறந்துவிடுவாய்; என்று சொல்கிறார்கள். அதை சிலர் யூஸ் செய்து ஹீரோவை சாகசம் செய்ய வைக்கிறார்கள்- என்று ஒரு ஒன்லைன் யோசித்து வைத்திருந்தேன். அதே கான்செப்ட்டில் இயக்குநர் பேரரசு திருத்தணி படம் எடுத்தார். இனி நான் அந்த கான்செப்ட்டைத் தொட்டால், பேரரசுவை நான் காப்பி அடித்ததாகச் சொல்வீர்கள். முன்பே நான் எழுதியிருந்தால், பேரரசு என்னைக் காப்பி அடித்ததாக சொல்லி இருப்பீர்கள். இது தான் காப்பிக்கூச்சலில் உள்ள அபத்தம்!

உண்மையிலேயே காப்பி நடக்கிறது என்றாலும், தற்செயலாக ஒத்துப்போவதும் சாத்தியமே. குறிப்பாக ஒரே கரு பலருக்கும் தோன்றுவது சகஜமே. எனவே அடிப்படையிலேயே இந்த காப்பி கூச்சல்களைக் கண்டுகொள்ளாமல், உங்கள் மனசாட்சிக்கு நேர்மையுடன் தொடருங்கள். காப்பிக் கூச்சல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், உங்களால் அம்மா என்றுகூட எழுத முடியாது. 

சரி........தீம்/கரு என்பது மேலே சொன்ன நான்கு வழிகளில் வரலாம். அது என்ன என்பதில் தெளிவாகுங்கள். ஏனென்றால் அதைப் பொறுத்துதான் அடுத்து நீங்கள் உருவாக்கும் கேரக்டர்களும் காட்சிகளும் சரிவருமா என்று செக் பண்ண முடியும். அந்த தெளிவு இல்லையென்றால், படம் சொதப்பிவிடும்.
அதற்கு உதாரணம், ஹரிதாஸ்(2013) திரைப்படம். ஹரிதாஸ்(2013), ஆட்டிசக்குறைபாடு உள்ளவர்களை சரியாக நடத்தும் முற்போக்கு கொள்கையை முன்வைத்த படம். இந்திய சாதியமைப்பில் கெட்டிப்பட்டுப்போன நம் சமூகம், கொஞ்சம் கொஞ்சமாக அந்த மனநிலையில் இருந்து மீண்டுவரும் நேரம் இது. கல்வியும் பலருடன் கலந்து பழகுவதும் பல மாற்று சிந்தனைகளை நமக்குள் விதைத்துக்கொண்டு வருகின்றன:
  • -    மாற்றுத்திறனாளிகளை நாகரீகமான வார்த்தைகளால் அழைப்பது/அவர்களையும் சராசரி மனிதர்களாக வித்தியாசமின்றி நடத்துவது
  • -    தன்னைவிட வசதி, அந்தஸ்து குறைந்தோரையும் மரியாதையாக நடத்துவது
  • -    பெண்கள் மீதான வன்முறை/ஒடுக்குமுறையை எதிர்ப்பது
  • -    மனித உரிமைக்கான குரல் கொடுப்பது
  • -    மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று போராடுவது
ஹரிதாஸ் படமும் இதில் முதல் பாயிண்டைப் பற்றிப் பேசுகிறது. ’மாற்று சிந்தனை’ என்பது தான் படத்தின் தீம். ஒரு ஆட்டிசக் குறைபாடு உள்ள சிறுவனை சாதனையாளனாக உருவாக்க, ஒரு தந்தையும் ஆசிரியையும் எடுக்கும் முயற்சிகளே படம்.

ஆனால் அதே படத்தின் இன்னொரு பகுதி, என்கவுண்டரை நியாயப்படுத்தியது. போலீஸ் அதிகாரி ஹரிதாஸ், தன் டிரைவர் சூரியை எப்படி இழிவாக நடத்துகிறார் என்பதையும் நகைச்சுவை என்ற பெயரில் காட்டியது. இந்த இரு விஷயங்களுமே படம் முன்வைக்கும் மாற்று சிந்தனைக்கு எதிரான விஷயங்கள்.
ஆட்டிசம் பிரச்சினையில் மாற்று சிந்தனையை முன் வைக்கும்போது, மற்ற சமூகப் பிரச்சினைகளையும் இந்த திரைக்கதையில் அப்படியே அணுக வேண்டும். என்கவுண்டர் என்பது சினிமாவிற்கு சுவாரஸ்யமான ஒரு விஷயம் தான். ஆனால் அதை அந்த படத்தில் வைத்தது தான் தவறு. சுருக்கமாகச் சொல்வதென்றால், ‘பெண்ணியம்’ என்பதைக் கருவாக வைத்துக்கொண்டு, குத்துப்பாட்டில் இறங்கிவிடக்கூடாது. அதற்குத் தான் கரு பற்றிய தெளிவு அவசியம்.

காதல் தான் உங்கள் கதையின் கரு என்றால் காதலித்து ஓடிப்போகும் பெண்ணின் பெற்றோர் படும் வேதனையை எங்கேயும் கொண்டுவந்துவிடக்கூடாது. (அதனாலேயே பெரும்பாலும் பெற்றோரை வில்லனாக்கிவிடுவார்கள். ) உணர்ச்சிகரமான காதல் காட்சிகளுடன், இறுதிக்காட்சியில் ஹீரோவும் ஹீரோயினும் சிலுவை/பூணூலை அறுத்துவிட்டு ‘காதல் வாழ்க’ என்று கூவுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

காதலினால் காதலர்களும் குடும்பங்களும் படும் கஷ்டத்தைச் சொல்வது தான் உங்கள் கரு என்றால், தவமாய்த் தவமிருந்து-காதல் படங்கள் போன்று உண்மையைச் சொல்லலாம். அங்கே ‘காதல்ங்கிறது.......’ என்று ஆரம்பிக்கும் ஃபீலிங் வசனங்களுக்கும் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கூடாது. 
மொத்தத்தில் எடுத்துக்கொண்ட விஷயத்தை இடைஞ்சல் செய்யும் விஷயங்களைத் தவிர்த்தே ஆக வேண்டும். நாம் இங்கே கதை சொல்லத்தான் வந்திருக்கிறோம். அதை எப்படி வெற்றிகரமாக, ஆடியன்ஸின் கவனம் கலையாமல் சொல்கிறோம் என்பதில்தான் நம் திறமை இருக்கிறது.

எடுத்துக்கொண்ட கருவிற்கு ஏற்ப எப்படி திரைக்கதை அமைப்பது என்பதற்கு இன்னொரு நல்ல உதாரணத்தை அடுத்த வாரம் பார்ப்போம். அது, இயக்குநர் ஷங்கரின் ஜெண்டில்மேன். 

இப்போது கீழ்க்கண்ட படங்களின் தீம் என்ன என்றும், அது எப்படி மெயிண்டெய்ன் செய்யப்பட்டது என்று யோசிக்கவும்:

  • தங்கப்பதக்கம்
  • முள்ளும் மலரும்
  • நாட்டாமை
  • நான் சிகப்பு மனிதன்
  • அன்பே வா
டிஸ்கி: ஹரிதாஸ் பற்றி.............ஒரு விஷயம் எந்தப் படத்தில் சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்று விளக்குவதே நம் நோக்கம். மற்றபடி அந்தப் படத்தில் பணியாற்றிய படைப்பாளிகளை குறைவாக மதிப்பிடுகிறோம் என்று அர்த்தம் அல்ல. இது இந்த தொடர் முழுக்க வரும் உதாரணங்களுக்குப் பொருந்தும்.

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

19 comments:

  1. கருக்கள் ஒத்து போனாலும் சில படங்களில் திரைக்கதையுமே ஒத்து போகுதே???

    அதுவும் ஒவ்வொருத்தர் மனசில் தோணுமா????

    ReplyDelete
  2. இவன் ஃபோட்டோவைக்கூட சகிச்சுக்கலாம்..இவன் ஃபோட்டோஷாப் ஒர்க்கைத் தான்........////

    சகிச்சுக்க முடியல.... என்கிற வார்த்தைகள் விட்டுப் போயிருச்சு!!

    ReplyDelete
  3. //தமிழ்வாசி பிரகாஷ் said... [Reply]
    கருக்கள் ஒத்து போனாலும் சில படங்களில் திரைக்கதையுமே ஒத்து போகுதே???அதுவும் ஒவ்வொருத்தர் மனசில் தோணுமா????//

    50% விஷயங்கள் ஒத்துப்போக சான்ஸ் இருக்கு. அதுக்கு மேல போனால் டவுட் தான்.

    ReplyDelete
  4. தம்பி செங்கோவி... அர்த்தத்தை யோசிக்கவும்... சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை ...!

    ReplyDelete
  5. அண்ணே எனக்கு ஒரு டவுட்டு !

    டி- சர்ட் போட்டுகிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்குறாரே அவரு தான் ஹிட்ச்காக்கா?

    சொல்லுங்க செங்கோவி சொல்லுங்க .

    ReplyDelete
  6. அடுத்த ஹீரோ போட்டோ முதல்க்காட்சியில் தயார் சங்கர்சாரே!ஹீ

    ReplyDelete
  7. நல்ல கருவை எப்படி டெவலப்பண்ணுவது என்ற ஆலோசனை அருமை தொடரட்டும் விளக்கம்.

    ReplyDelete
  8. //திண்டுக்கல் தனபாலன் said... [Reply]
    தம்பி செங்கோவி... அர்த்தத்தை யோசிக்கவும்... சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை ...!//

    அப்படியாண்ணே..ரொம்ப நன்றி.

    ReplyDelete
  9. // வானரம் . said...
    அண்ணே எனக்கு ஒரு டவுட்டு !

    டி- சர்ட் போட்டுகிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்குறாரே அவரு தான் ஹிட்ச்காக்கா?

    சொல்லுங்க செங்கோவி சொல்லுங்க .//

    ஆமா..போன வாரம் ஸ்வெட்டர் போட்டு நின்னது, மகாத்மா காந்தி.

    ReplyDelete
  10. //தனிமரம் said...
    நல்ல கருவை எப்படி டெவலப்பண்ணுவது என்ற ஆலோசனை அருமை தொடரட்டும் விளக்கம்.//
    நன்றி நேசரே.

    ReplyDelete
  11. நன்றாக விளக்கியிருக்கிறீர்கள்.///சினேஹா டீச்சர் அழகாக இருக்கிறார்,ஹி!ஹி!!ஹீ!!!

    ReplyDelete
  12. சிறப்பான விளக்கம்! கரு எப்படி உருவாகிறது? விற்கு சிறப்பான உதாரணங்கள்! நன்றி!

    ReplyDelete
  13. ////காதல் தான் உங்கள் கதையின் கரு என்றால் காதலித்து ஓடிப்போகும் பெண்ணின் பெற்றோர் படும் வேதனையை எங்கேயும் கொண்டுவந்துவிடக்கூடாது.///

    பாசிலின் காதலுக்கு மரியாதையை ஒரு கவுன்டர் எக்சாம்பிள்!??

    ReplyDelete
  14. @மொ.ராசு (Real Santhanam Fanz ) ஆமாம்..படத்தின் வெற்றிக்குக் காரணமே இருதரப்பையும் அது பேலன்ஸ் பண்ணியது தான். அதன்பிறகு அதே கான்செப்ட்டை முயன்ற ஜோடி-பூவெல்லாம் கேட்டுப்பார் போன்றவை எடுபடவில்லை. நம்மை மாதிரி ஆரம்ப நிலையில் இருப்போர்க்கு, அந்த ரிஸ்க்கான வேலை வேண்டாம்ன்னு நினைக்கிறேன்.

    மேலும், எல்லா ரூல்ஸ்க்குமே விதிவிலக்குகள் உண்டு. அதிலும் தமிழ் சினிமாவில் அது அதிகம். காரணம், உங்களுக்கே தெரியும்!

    ReplyDelete
  15. காப்பி..காப்பி: http://ramskmd.blogspot.in/2014/05/inception.html

    ReplyDelete
  16. சார் ! நம்ம தலைவர் ராஜேஸ் ..... fade in fade out 5-ம் பாகம் வரை போய் விட்டார் ...... நீங்க ரெண்டாம் பாகத்திலே இருக்கீங்க ! ஓசியிலே தான் படிக்கிறோம் ............ இருந்தாலும் எங்க rights-ஐ விட்டு கொடுக்க முடியாது ............

    ReplyDelete
  17. @Mathialagan Muniandy ஹாஹா..எனக்கு வேலைப்பளு அதிகம் நண்பரே. வாரம் ஒன்று தான் இப்போதைக்கு. சீக்கிரமே கூட்ட முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  18. ரிப்பீட்டு...............வை?(Why?)No Time?

    ReplyDelete
  19. //Subramaniam Yogarasa said...
    ரிப்பீட்டு...............வை?(Why?)No Time?//

    மாத்தி அமுக்கிட்டேன்..ஹிஹி!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.