Wednesday, May 21, 2014

ஹிட்ச்காக்கின் Vertigo (1958) - விமர்சனம்

ஹிட்ச்காக்கின் படங்களிலேயே அழகான படம் என்று போற்றப்படுவது Vertigo. வழக்கமான சஸ்பென்ஸ் படம் என்று ஒதுக்கிவிட முடியாத அளவிற்கு, உணர்ச்சிகளின் குவியலாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் ஹிட்ச்காக். உண்மைக்கும் மாயைக்கும் இடையே ஒரு மனிதனின் உணர்ச்சிகள் பந்தாடப்படுவதே படத்தின் அடிநாதம். 
படத்தின் முதல் காட்சியில் யாரோ ஒருவனை ஒரு போலீஸ்காரரும் இன்னொரு போலீஸான ஹீரோவும் விரட்டுகிறார்கள். சேஸிங்கின்போது ஒரு உயரமான கட்டடத்தில் தாவும்போது ஹீரோ வழுக்கி, அந்தரத்தில் தொங்குகிறார். அப்போது தான் ஹீரோவுக்கு உயரத்தைக் கண்டால் பயப்படும் அக்ரோஃபோபியா எனும் நோய் இருப்பது தெரிய வருகிறது. அவருக்கு உதவி செய்ய வரும் உடன்வந்த போலீஸ்காரர், அந்த பலமாடி உயரக் கட்டிடத்தில் இருந்து விழுந்து இறக்கிறார். ஹீரோ பிழைக்கிறார். ஒரு ’மாயமான’ ஆளை விரட்டிப் பிடிக்கும் முயற்சியில் உடன் இருக்கும் உண்மையான ஒரு ஆளை இழக்கிறார் ஹீரோ. அது தான் படத்தின் கருவும்!

மேலே சொன்ன சம்பவத்திற்குப் பின் குற்ற உணர்ச்சியால் ஹீரோ ஸ்காட்டி(James Stewart ) தனது போலீஸ் வேலையை ராஜினாமா செய்கிறார். அப்போது அவரது பழைய நண்பர் ஒரு டிடெக்டிவ் வேலையைக் கொடுக்கிறார். தன் மனைவி மேடலின் (Kim Novak- ஹீரோயின்) ஒரு ஆவியின் பிடியில் இருப்பதாகவும், அவளை ஃபாலோ செய்து எங்கெல்லாம் அவள் அல்லது அவள் உடம்பில் இருக்கும் பேய் போகிறது என்று கண்டுபிடிக்கும்படியும் நண்பர் சொல்கிறார். பேய்க்கதையை நம்ப மறுக்கும் ஹீரோ, நண்பருக்காக அந்த வேலையை எடுத்துக்கொள்கிறார். 

அதன்பின் நடக்கும் சம்பவங்கள் ஹீரோவுக்கு மட்டுமல்ல, நமக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுக்கின்றன. மேடலினை பின் தொடரும் ஸ்காட்டி, அவளை காதலிக்க ஆரம்பிக்கிறார். தொடர்ந்து நடக்கும் மர்மமான & ரொமாண்டிக் சம்பவங்களை அடுத்து, மேடலின் தற்கொலை செய்துகொள்கிறாள். அதனால் மனம் பேதலித்த நிலையில் இருக்கும் ஸ்காட்டி, மேடலின் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஜூடி எனும் அழகிய இளம்பெண்ணை சந்திக்கிறார். மீதியை லேப்டாப் திரையில் காண்க.
Boileau-Narcejac என்பவர் எழுதிய நாவலை ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது, இந்தப் படம். ஹிட்ச்காக்கின் The Wrong man படத்திற்கு திரைக்கதை எழுதிய Maxwell Anderson-ஐ வைத்து வெர்டிகோவின் திரைக்கதையை உருவாக்க ஆரம்பித்தார் ஹிட்ச்காக். அது சரிவராமல் போக, அவரை விரட்டிவிட்டு Alec Coppel எனும் நாவலாசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான இன்னொரு லெஜண்டை கொண்டுவந்தார். அவரும் ஹிட்ச்காக்கும் இணைந்து ஒரு திரைக்கதையை உருவாக்க, அதிலும் சம்திங் ராங் என்று ஹிட்ச்காக்கும் தயாரிப்பு நிறுவனமும் அவரை விரட்டிவிட்டன. அடுத்து வந்தார் Samuel A. Taylor. கோப்பெல் உருவாக்கியிருந்த திரைக்கதையை பட்டி பார்த்து, நெளிசல் எடுத்து ஒரு அட்டகாசமான திரைக்கதையை உருவாக்கினார். அதுவே நாம் படத்தில் பார்ப்பது.

நாவலைத் தானே படம் எடுக்கிறார்கள், அதற்கு ஏன் இத்தனை பாடு என்று நீங்கள் நினைக்கலாம். நாவல் இரண்டாம் உலகப்போரை பிண்ணனியாகக் கொண்டது. அது இந்தக் கதைக்கு தேவையில்லை. இங்கே ஹீரோவுக்கும் ஹீரோயினுக்குமான உணர்ச்சிப்போராட்டமே முக்கியம் எனும் முடிவுக்கு ஹிட்ச்காக் வந்திருந்தார். நாவலில் ஹீரோ மனதிற்குள் யோசிப்பதை எழுதிவிடலாம். படத்தில் வாய்ஸ் ஓவரில் சொன்னால் நன்றாக இருக்காதே? எனவே ஹீரோ மனம்விட்டுப் பேசும் ஒரு தோழி (ஒருதலைக் காதலி) கேரக்டரை உருவாக்கினார்கள். இதை சர்ப்ரைஸ் பாணியில் சொல்வதா, சஸ்பென்ஸ் பாணியில் சொல்வதா என்பது வேறு பெரும் பஞ்சாயத்தாக இருந்தது. முடிவில் சஸ்பென்ஸ் கேட்டகிரிக்கே வந்தார்கள்.

படத்தின் முதல்பாதி, மேடலினின் கற்பனை அல்லது ஆவி உலகத்தில் நாமும் சஞ்சரிப்பது போன்ற தோற்றம் வரும்படி எடுத்திருப்பார்கள். ஷார்ப்பான  வளைவுகளைக் கொண்ட மலைரோடுகள் இருக்கும் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரை தேர்ந்தெடுத்தார் ஹிட்ச்காக். ஹீரோ ஹீரோயினை ஃபாலோ செய்யும்போது, அதன் எஃபக்ட் நன்றாகவே தெரியும். ஹீரோயினின் ஆவி உலகத்தையும் வெர்டிகோ எஃபக்ட்டையும் சரிவிகிதத்தில் கலப்பது போல் அமைந்திருக்கும், காட்சிகள் கொடுக்கும் எஃபக்ட். ஹீரோ தான் ஹீரோயினை ஃபாலோ செய்வதாக நாம் நினைத்திருக்க, அப்படியில்லை ஹீரோயின் தான் ஹீரோவை அவள் விரும்பும் இடத்திற்கெல்லாம் வரவழைக்கிறாள் என்று பின்னால் தெரியும்போது, நமக்கும் வருகிறது வெர்டிகோ எஃபக்ட்!
வழக்கமான ஹிட்ச்காக் படங்களைப் போல் அல்லாமல், இந்தப் படம் துப்பறியும் கதையாக இல்லாமல் காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. மேடலின் இறந்தபின், அந்த கேஸை அதற்கு மேல் துப்பறிவதை விட, ஜூடிக்கும் ஸ்காட்டிக்கும் உருவாகும் உறவு நுணுக்கமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது பொதுவாக க்ரைமிற்கான காரணம் தான் MacGuffin-ஆக வரும். ஆனால் இந்தப் படத்தில் அந்த க்ரைமே MacGuffin தான்.

ஸ்காட்டி தன் குற்றவுணர்ச்சியில் இருந்து மீண்டுவர, ஜூடியை மேடலின் போல் மாற்ற முயற்சிக்கிறான். ஸ்காட்டியை காதலிக்கும் ஜூடி ‘என்னை அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாதா? ஏன் மேடலின் போல் என்னை மாற்றுகிறீர்கள்?’ என்று கெஞ்சுகிறாள். ஸ்காட்டியின் இதயம் அந்த மாயம் நிறைந்த பெண்ணான மேடலின் மீதே நிலைத்திருக்க, ஜூடியின் இதயம் ஸ்காட்டியின் அன்புக்காக ஏங்கும் காட்சிகளில் நமக்கு ஜூடியின் மேல் மட்டுமல்லாது ஸ்காட்டியின் மேலும் பரிதாபம் வருகிறது.

படத்தின் பல வசனங்கள் ஆழ்ந்த பொருள் உடையவை. முதல்முறை பார்க்கும்போது சாதாரணமாகவும், என்ன நடக்கிறது/நடந்தது என்று அறிந்தபின் பார்க்கும்போது பிரமிப்பூட்டுவதாகவும் இருக்கின்றன இந்தப் படத்தின் வசனங்கள். உதாரணமாக மேடலினின் கணவர் ‘Do you believe that someone out of the past, someone dead, can enter and take possession of a living being?’ என்று ஸ்காட்டியிடம் கேட்கிறார்.பின்னர் ஸ்காட்டியின் நிலையே அப்படி ஆகும்போது அந்த வசனத்தின் வீச்சு நமக்குப் புரிகிறது. அதே போன்றே மேடலின் ஸ்காட்டியிடம் கடைசியாகப் பேசும் வார்த்தைகள் ‘If you lose me, you’ll know I loved you and wanted to go on loving you.’ என்பது வெறும் உணர்ச்சிகரமான வார்த்தை மட்டுமல்ல, அவள் சொன்ன அர்த்தம் வேறு என்பதும் பின்னர் தான் புரிய வருகிறது. 
ஹீரோ James Stewart-ன் கரியரில் பெருமைக்குரிய படம் இது. ஹிட்ச்காக்கின் Rope,The Man Who Knew Too Much, Rear Window-ல் அவர் நடித்திருந்தாலும், வெர்டிகோ அளவிற்கு உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வழங்க அவற்றில் வாய்ப்பில்லை. வெர்டிகோ எஃபக்ட்டால் பாதிக்கப்படுபவராக, குற்ற உணர்ச்சியில் தவிப்பவராக, ரொமாண்டிக் ஹீரோவாக, இழந்த காதலியை ஜூடி வடிவில் மீட்கப் போராடுபவராக நவரச நடிப்பில் பின்னியிருப்பார். 

அதே போன்றே ஹீரோயினான நடித்த Kim Novak, மேடலின் கேரக்டரில் வரும்போது ஒரு மென்மையான பெண்ணாகவும், ஜூடியாக வரும்போது அதிரடியான பெண்ணாகவும் கலக்கியிருப்பார். Kim Novak-ன் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், அவருக்கு பிரா போடவே பிடிக்காதாம். ஹிட்ச்காக் எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும் ‘No..no..I'm very proud of it'-ன்னு சொல்லி பிரா அணியவே மறுத்துட்டராம். ஜூடி கேரக்டர்ல தான் அதோட எஃபக்ட் தெரியும்!
ஒரு சிக்கலான உறவாக ஆகிவிட்ட அந்த புதிய காதல் எப்படி முடியப்போகிறது என்று நாம் சஸ்பென்ஸுடன் காத்திருக்க, எதிர்பாராத கிளைமாக்ஸைத் தருகிறார் ஹிட்ச்காக். உண்மையில் அந்த கிளைமாக்ஸ் எனக்குப் பிடிக்கவில்லை. ஒருவேளை ஜூடியை நானும் லவ் பண்ணியதால் இருக்கலாம்! அப்புறம்...படம் பார்க்கும்போது உங்களுக்கு சுவாரஸ்யம் போயிடக்கூடாதுங்கிறதால, ரெண்டு ட்விஸ்ட்டையும் கிளைமாக்ஸையும் தவிர்த்திருக்கிறேன். ஒரு ஸ்டைலிஷான, சைக்காலஜிகலாக நம்மை இம்ப்ரஸ் செய்யும் படம், Vertigo.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

25 comments:

  1. எனக்கு ஹிட்ச்காக்கின் வரிசையில் மிகப் பிடித்த படம் இது. இந்தப் படத்தின் அடிநாதத்தை எடுத்துக் கொண்டு வாத்யார் நடித்த ‘கலங்கரை விளக்கம்’ கதையை ஃபார்ம் பண்ணியிருப்பாங்க. என்ன இருந்தாலும்.... ஹிட்ச்காக் ஹிட்ச்காக் தான்!

    ReplyDelete
  2. விமர்சனம் நன்று!நானும் இங்கு வந்த ஆரம்ப காலங்களில் சில ஹிட்ச்காக் படங்கள் பார்த்திருக்கிறேன்,சும்மா எண்டர்டெயின்மெண்ட்.///ஜூடியை நானும் லவ் பண்ணியதால்..................///!!!!!!

    ReplyDelete
  3. கடேசி ஸ்டில் லில இருக்கிற பொண்ணு தான் ஜூடி யா?அப்பிடீன்னா லவ் பண்ணலாம்!

    ReplyDelete
  4. //தன் மனைவி மேடலின் (Kim Novak- ஹீரோயின்) ஒரு ஆவியின் பிடியில் இருப்பதாகவும்,//

    ஆவியின் பிடியிலா? இதெல்லாம் வதந்தி.. நம்பாதீங்க..! ;-)

    ReplyDelete
  5. //ஜூடி கேரக்டர்ல தான் அதோட எஃபக்ட் தெரியும்!//

    நல்லா(வே) தெரியுது.. ஹிஹிஹி..

    ReplyDelete
  6. @கோவை ஆவி
    பச்சை கலரு ஜிங்குசான் மறைச்சிருக்கய்யா.ஒங்க கண்ணுக்கு மட்டும் எப்படி நல்லா தெரியுது?.ஒரு வேள படத்த பாத்தா எங்(ன்) கண்ணுக்கும் தெரியுமோ என்னமோ

    ReplyDelete
  7. //பால கணேஷ் said...
    எனக்கு ஹிட்ச்காக்கின் வரிசையில் மிகப் பிடித்த படம் இது. இந்தப் படத்தின் அடிநாதத்தை எடுத்துக் கொண்டு வாத்யார் நடித்த ‘கலங்கரை விளக்கம்’ கதையை ஃபார்ம் பண்ணியிருப்பாங்க. என்ன இருந்தாலும்.... ஹிட்ச்காக் ஹிட்ச்காக் தான்!//

    கலங்கரை விளக்கம் சின்ன வயதில் பார்த்தது. ஞாபகம் இல்லை, பார்க்கிறேன். நன்றி சார்.

    ReplyDelete
  8. //Subramaniam Yogarasa said...
    விமர்சனம் நன்று!நானும் இங்கு வந்த ஆரம்ப காலங்களில் சில ஹிட்ச்காக் படங்கள் பார்த்திருக்கிறேன்,சும்மா எண்டர்டெயின்மெண்ட்//

    இந்த படத்தை கண்டிப்பா பாருங்க ஐயா.

    ReplyDelete
  9. //கோவை ஆவி said...
    //தன் மனைவி மேடலின் (Kim Novak- ஹீரோயின்) ஒரு ஆவியின் பிடியில் இருப்பதாகவும்,//

    ஆவியின் பிடியிலா? இதெல்லாம் வதந்தி.. நம்பாதீங்க..! ;-)//

    ஆவி, நீங்க ஜூடியின் பிடியில் இருக்கீங்கன்னு உங்களோட அடுத்த கமெண்ட்ல தெரியுது.

    ReplyDelete
  10. //சேக்காளி said...
    @கோவை ஆவி
    பச்சை கலரு ஜிங்குசான் மறைச்சிருக்கய்யா.ஒங்க கண்ணுக்கு மட்டும் எப்படி நல்லா தெரியுது?.ஒரு வேள படத்த பாத்தா எங்(ன்) கண்ணுக்கும் தெரியுமோ என்னமோ//

    தெரியாது சேக்காளி..படம் டீசண்டாத் தான் இருக்கும். ஆனாலும் மனசு அங்கிட்டும் இங்கிட்டும் ‘அலை பாயும்’.

    ReplyDelete
  11. sir,unga blog ellam padichuten. nalla ezhuthureenga sila blog romba super. congrats. but hitchcock mathiri tamilayum sila director irunhtu irukanaga like sundaram balachander. avaroda film yum neenga review pannunga. avaroda " antha naal, nadu iravil , avana ivan, bommai ellam nice thriller. thanks..

    ReplyDelete
  12. உங்கள் விமர்சனம் பார்த்ததில் இருந்து கிம் நோவகின் இல்ல இல்ல ஹிட்ச்காக்கின் ரசிகனாகி விட்டேன் .

    ReplyDelete
  13. //Unknown said...
    sir,unga blog ellam padichuten. nalla ezhuthureenga sila blog romba super. congrats. but hitchcock mathiri tamilayum sila director irunhtu irukanaga like sundaram balachander. avaroda film yum neenga review pannunga. avaroda " antha naal, nadu iravil , avana ivan, bommai ellam nice thriller. thanks..//

    உங்க பாராட்டுக்கு நன்றி நண்பரே. எஸ்.பாலச்சந்தரின் அந்தநாள் பற்றி, தமிழ்ஸ்ஸ்.காமில் எழுதியிருக்கிறேன்...

    http://tamilss.com/2013/11/25/t-o-u-c-antha-naal/

    ReplyDelete
  14. // வானரம் . said...
    உங்கள் விமர்சனம் பார்த்ததில் இருந்து கிம் நோவகின் இல்ல இல்ல ஹிட்ச்காக்கின் ரசிகனாகி விட்டேன்//

    எங்கூடச் சேர்ந்தப்புறம், இதுகூட ஆகலேன்னா எப்படி!

    ReplyDelete
  15. ஆமா அவுங்க ப்ரா போட மாட்டேன்னு சொன்னத நீங்க எப்புடி தெரிஞ்சிகிட்டீங்க? எதாவது பேட்டியா? இல்ல வழக்கம்போல உத்து பார்த்து கண்டு பிடிச்சீங்களா?

    ReplyDelete
  16. @மொ.ராசு (Real Santhanam Fanz ) முதல்முறை படம் பார்க்கும்போதே வித்தியாசம்(!) தெரிஞ்சது. பின்னர் ஹிட்ச்காக் ஒரு பேட்டியில் புலம்பித் தள்ளியிருந்ததைப் படித்தேன்.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. @செங்கோவி
    (!) தெரிஞ்சது//
    கொழப்புறீங்களே
    தெரிஞ்சுச்சா தெரியலையா தெளிவா சொல்லுங்க பாஸ்

    ReplyDelete
  20. Dear Sengovi

    Can you please share the torrent link for this movie, if possible also please share the torrent for other movies.

    Jay

    ReplyDelete
  21. @jayaseelan gandeepan ஹிட்ச்காக்கின் எல்லாப் படங்களும் இந்த டொரண்ட் தளத்தில் கிடைக்கின்றன: http://kickass.to/

    ReplyDelete
  22. Vertigo :

    http://kickass.to/vertigo-1958-dvdrip-xvid-multisub-cin-t496284.html

    ReplyDelete
  23. ஒரு சிக்கலான உறவாக ஆகிவிட்ட அந்த புதிய காதல் எப்படி முடியப்போகிறது என்று // நாம் சஸ்பென்ஸுடன் காத்திருக்க, எதிர்பாராத கிளைமாக்ஸைத் தருகிறார் ஹிட்ச்காக். உண்மையில் அந்த கிளைமாக்ஸ் எனக்குப் பிடிக்கவில்லை. ஒருவேளை ஜூடியை நானும் லவ் பண்ணியதால் இருக்கலாம்! // நேற்று தான் இந்த படத்தினை பார்த்தேன்.. கிளைமாக்ஸ் அப்படி முடியவும் மிகவும் வெறுப்பாக இருந்தது.. படமே பிடிக்காமல் போய் விட்டதை போன்ற உணர்வு.. நீங்கள் சொல்லிருப்பதை போல் நானும் ஜூடியை லவ் பண்ணிவிட்டேன் போல..

    ReplyDelete
    Replies
    1. படம் கமர்சியலாக ஊத்திக்கொண்டதற்கு, அது தான் முக்கியக் காரணம்.

      Delete
  24. oru vazhiya pendingla irundha indha padaththa innikkidhan pathain bro... sema movie... this whole month only hitchcock movies.... I also didnt like the climax... padatha paarthuttu apdiye inga vandhu unga katturaiyai padichitain...

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.