Tuesday, June 2, 2015

திரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 43


ஜெனர் - த்ரில்லர்

'ஆக்சனைச் சார்ந்து' கதை சொல்வது மற்றும் 'கேரக்டரைச் சார்ந்து' கதை சொல்வது என இரண்டு வகையான கதை சொல்லும் முறைகள் இருக்கின்றன என்று நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். (இந்திய மசாலா விதிகளின்படி, ஆக்சன் படமாக இருந்தாலும் உணர்வுப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்பதையும் பார்த்தோம்.) இவை இரண்டுமே ஏ ஸ்டோரியாகவும், பி ஸ்டோரியாகவும் இருக்கும் என்றும் பார்த்திருக்கிறோம். இதில் முதல்வகையான ஆக்சன் மேலேங்கி இருந்தால், கோபம், பயம், ஆவலுடன் கூடிய தவிப்பு(சஸ்பென்ஸ்) போன்ற உணர்வுகளை அது ஆடியன்ஸுக்குக் கொடுக்கும். இரண்டாம்வகை மேலோங்கி இருந்தால், அது சந்தோசம், துக்கம், சிரிப்பு போன்ற உணர்வுகளைக் கொடுக்கும்.

சினிமாவானது இதில் இருந்தே இரு பெரிய ஜெனர் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. முதலாவது த்ரில்லர் வகை. இரண்டாவது (மெலோ)டிராமா வகை. த்ரில்லர் பிரிவினைப் பற்றி விளக்கமாகப் பார்த்துவிட்டு, பின்னர் டிராமா பற்றிப் பார்ப்போம்.

த்ரில்லர் என்பது புறக்காரணிகளை மையப்படுத்தி, ஆக்சன் சார்ந்து சொல்லப்படும் கதைகள் என்று சொல்லலாம். ஒரு த்ரில்லர் கதையின் பொதுவான கூறுகளாக கீழ்க்கண்டவற்றைச் சொல்லலாம்:

- ஹீரோ ஒரு சாமானிய மனிதனாக இருப்பான். அவனது இயல்பான சராசரி வாழ்க்கை, ஏதோவொரு இன்சிடென்ட்டால் கலைக்கப்படும். 'அசாதாரணமான சூழலில், ஒரு சாதாரண மனிதன்' என்பது தான் இதன் அடிப்படை ஒன்லைன். இது சராசரி மனிதர்களான ஆடியன்ஸை கேரக்டருன் ஒன்றவைக்கும்.

- வில்லன், ஹீரோவைவிட வலிமையானவனாக இருப்பத் உஅவசியம். ஒரு பெரும் தாதாவாகவோ, அதிகாரம் மிக்க ஆளாகவோ, தீவிரவாதியாகவோ இருப்பது வழக்கம்.

- நாம் முன்பே பார்த்த அடிப்படைத்தேவைகளில் ஒன்று தான் குறிக்கோளாக இருக்கும். குறிப்பாக 'தப்பிப்பிழைத்தல்' என்பது தான் அதிகமான த்ரில்லர் படங்களின் கதைக்கரு.

- மிகக்குறைவான கேரக்டர்களே இருப்பார்கள். (கே.எஸ்ரவிக்குமாரின் நாட்டாமை ஸ்டைல் படங்களையும், அவரின் த்ரில்லர் படமான புரியாத புதிரையும் ஒப்பிட்டுப் பாருங்கள்)

- நம்ப முடியாத காதில் பூச்சுற்றும் வேலைகள் குறைவாக இருக்கும். ஒரு நல்ல த்ரில்லர் என்பது முழுக்க நம்பக்கூடிய கேரக்டர், சூழ்நிலையுடன் இருக்கும்.

- கதையில் போக்கு என்பது ஒரு சேஸ் போன்று விறுவிறுப்பாக இருக்கு. ஹீரோ மேலும், மேலும் ஆபத்தில் சிக்குவது போன்றும், இறுதியில் வெளிவருவது போன்றும் இருக்கும்.

- இயல்பான வாழ்க்கையில் இருக்கும் ஹீரோ(ஆக்ட்-1), ஒரு ஆபத்தில் சிக்கி, ஆபத்துக்கு காரணம் என கண்டறிந்து(ஆக்ட்-2), அதில் இருந்து மீளுவதே  திரைக்கதையின் போக்காக இருக்கும்.

- நெகடிவ் அம்சங்களான தீவிரவாதம், கொலை, கடத்தல், மனப்பிறழ்வு போன்றவை படத்தில் நிறைந்திருக்கும்.

- நல்லதுக்கும் கெட்டதுக்குமான போராட்டமும், அதிகரித்துக்கொன்டே போகும் ஆபத்தும், கடைசியில் நல்லவன் ஜெயிப்பதும் (டிராஜடி/ஃபிலிம் நுஆர் தவிர்த்த) த்ரில்லரின் அம்சங்கள்.

- கதையானது ஹீரோவின் பாயின்ட் ஆஃப் வியூவிலேயே சொல்லப்ட்டும்.

- கதை, சிட்டி சப்ஜெக்ட்டாகவே இருக்கும். நகரத்தின் இருண்ட பக்கங்களை மையப்படுத்தியே கதை நகரும். கிராமத்து த்ரில்லர்கள் பொதுவாக எடுபடுவதில்லை.

- பெரும்பாலும் நேரம் என்பது த்ரில்லரில் முக்கியமான விஷயம். ஹீரோவுக்கு கெடு வைக்கப்பட்டு, அதைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கவேண்டிய கட்டாயம் இருக்கும்.
- ஒரு நல்ல த்ரில்லர் என்பது ஆடியன்ஸை சீட்டின் நுனியிலேயே வைத்திருப்பதாகும். சஸ்பென்ஸான சம்பவங்களை சீன்களில் அடுக்கி, ஆடியன்ஸின் பதற்றத்தை அதிகரித்துக்கொண்டே செல்வது நல்ல த்ரில்லருக்கு அழகு. ஹிட்ச்காக் சொன்ன்படி, ஒரு த்ரில்லர் என்பது ரோலர்கோஸ்ட் அனுபவம் போன்று இருக்க வேண்டும். மக்கள் த்ரில்லை சந்தோசத்துடன் அனுபவிக்க விரும்பியே, த்ரில்லருக்கு வருகிறார்கள்.

பிரிவுகள்:

த்ரில்லர் பிரிவுக்குள் பல ஜெனர்கள் வருகின்றன. உதாரணமாக:

ஆக்சன்
சாகசம்
ரவுடி/தாதா கதைகள்
பேய்ப்படங்கள்
ஃபிலிம் நுஆர்
ஃபேன்டஸி / சூப்பர்நேச்சுரல்/சயின்ஸ் ஃபிக்சன்
க்ரைம்/மிஸ்டரி
மற்றவை

இந்த த்ரில்லர் ஜெனர்கள், மற்ற ஜெனர்களுடன் கூடும்போது, ரொமான்டிக் த்ரில்லர், ஆக்சன் காமெடி என்று போன்று கலவையான ஜெனர் கிடைக்கும். அடிப்படைப் பிரிவுகள், ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகப் பார்த்துவிடுவோம். முதலில் ஆக்சன்...!

(தொடரும்)
 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

  1. சூப்பர் நானும் ரொம்ப நாளாக ஒரு நாட் யோசித்து வருகிறேன்.. உங்கட டிஸ்கஸ் பண்ணா கிடைச்சிரும் போல.. waiting to discuss

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.