Monday, December 20, 2010

ப்ளாக்கை பிரபலமாக்க 7 சூப்பர் டிப்ஸ்

புதிய வலைப்பதிவரா நீங்கள் அல்லது ஏதோவொரு ஆர்வத்துல கடையைத் திறந்துட்டு ஈ ஓட்டிக்கிட்டு இருக்கிறவரா நீங்கள்?..அப்போ நீங்க நம்ம ஆளு..வாங்க..வாங்க!

எப்படி நம்ம வலைப்பூவை மணக்க வைப்பதுன்னு தீவிரமா முடி உதிர யோசிச்சு 7 மேட்டரை தேத்தியிருக்கேன்..அவை என்னன்னு ஒன்னொன்னாப் பார்ப்போமா!

1.தலைப்பு: 
ஒய்யாரக் கொண்டையாம், உள்ளார ஈறும் பேனுமாம்னு கேள்விப்பட்டிருப்பீங்களே. அந்த ஒய்யாரக் கொண்டைதான் பதிவோட தலைப்பு....உதாரணமாக’ ”வயசுக்கு வந்த பாட்டிஎனத் தலைப்பிடுங்கள். பதிவிற்குள்  கடந்த ஒரு வருடமாக 79 வயசிலேயே இருந்த என் பாட்டி இன்று 80வது வயசுக்கு வந்தார். அவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்என மொக்கை போடுங்கள்.

2. பயணம் செய்யுங்கள்:

நீங்கள் சென்னைவாசி என்றால் கன்யாகுமரிக்கும், கன்யாகுமரிக்காரர் என்றால் சென்னைக்கும் ஒரு அப்பர் பர்த் டிக்கெட் வாங்கி ரயிலேறி, விடியும்வரை தூங்காமல், என்ன நடக்கிறதெனக் கவனியுங்கள். நிச்சயம் உங்களுக்கு பதிவில் எழுதக்கூடிய ஒரு மேட்டரோ அல்லது எழுதமுடியாத ஒரு மேட்டரோசிக்கும். இரண்டில் எது கிடைத்தாலும் சந்தோசமே!


அடுத்து பகலில் அதே ரயிலில் பயணம் செய்யுங்கள். நம்ம நேரத்துக்கு எப்படியும் அந்த கோச்சில் சப்பை ஃபிகர்கூட இல்லாமல் சக்கையாய் ஆன பாட்டிதான் வரும்..மனதைத் தளரவிடாமல் பேச்சுக்கொடுங்கள். உதாரணமாக..
உங்க வீட்டுக்காரர் என்ன செய்கிறார்?”

ம்ஹூம்..அந்த மனுசன் இருந்தா நான் ஏன் இப்படி சீரழியிறேன்!

உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது?”

பெருசா ஒன்னும் பிரச்சினையில்லை..ஏறும்போதும் இறங்கும்போதும்தான் ரொம்ப மூச்சு வாங்குதுஇதே ரீதியில் வளவளவென பேசிக்கொண்டேயிருங்கள். வீட்டிற்கு வந்ததும் அந்த பேச்சு முழுவதையும் டைப் பண்ணுங்கள். இதை அப்படியே பதிவேற்றினால், இப்போது இருப்பதை விடவும் கேவலமான நிலைமைக்கு நம் ப்ளாக் போய்விடும். எனவே பாட்டிஎன வரும் இடத்தையெல்லாம் விலைமாதுஎன மாற்றுங்கள்.விலைமாதுடன் ஒரு பயணம்எனத் தலைப்பிடுங்கள்..இப்போது படித்துப்பாருங்கள்..சூடான பதிவு தயார்.


3.சினிமா செய்திகள்: 
உங்கள் தெருவில் சாக்கடை அடைத்ததைப் பற்றி எழுதும் சமூக அக்கறை எதுவும் இருந்தால், அதை அந்த சாக்கடைக் குழியிலேயே புதைத்துவிடுங்கள்..தமிழனின் உயிர்மூச்சான சினிமாவைப் பற்றி எழுதவில்லையென்றால் நீங்கள் பதிவெழுத வந்ததே வேஸ்ட்சினிமாத்துறையில் நண்பர்கள் இல்லையே, நான் வெளிநாட்டில் வாழ்கிறேனே என்றெல்லாம் கவலைப்படாதீர்கள்..குமுதம்/விகடன்/தினத்தந்தி படியுங்கள்..அதில் வரும் செய்தியையே கிசுகிசுவாக எழுதுங்கள்.
உதாரணமாக வானம் சூட்டிங்கில் சிம்புவுக்கும் இயக்குனருக்கும் தகராறுஎன படித்தால் அதை விரல் நடிகர் தற்போது நடிக்கும் படத்தின் இயக்குனரை டார்ச்சர் செய்தாராம்..இயக்குனர் ஓடிவிட்டாராம்என எழுதுங்கள்..நம் மக்கள் அதையும் படிப்பார்கள்..சலிக்காமல் இதையும் படிப்பார்கள்..இந்த சிம்பு பற்றிய கிசுகிசுவில் இருக்கும் ஒரு வசதி என்னவென்றால் இதையே 3 மாத்திற்கு ஒருமுறை மீண்டும் மாற்றாமல் வெளியிடலாம்!

4. சினிமா விமர்சனம்: 
படம் வெளியாகி 3 நாட்கள் கழித்துப் பார்க்கும் சோம்பேறியா நீங்கள்..ரொம்ப கஷ்டம்ங்க..படம் வெளியான அன்றே பாருங்கள்..அல்லது ப்ரிவியூ ஷோ பார்க்க முடிந்தால் மிகவும் நல்லது..நீங்கள் ஒரு வெட்டி ஆபீசர் என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டை ஒரு மாதம் தொடர்ந்து வேடிக்கை பார்த்து கதையை மோப்பம் பிடித்து விமர்சனம் எழுதுங்கள். ஆர்வக்கோளாறில் ஷூட்டிங் ஆரம்பிக்காத படத்திற்கு விமர்சனம் எழுதுவதைத் தவிர்க்கவும். 
விமர்சனத்திற்கு இடையே ஹீரோவின் மூஞ்சியைப் போடாமல் ஹீரோயின் படத்தைப் போடுங்கள்.(கிளிவேஜ் முக்கியம் அமைச்சரே!)
எச்சரிக்கை: ஈசன் -விமர்சனம்

5.ஜாதி:
தமிழ்கூறும் நல்லுலகில் பல நூறு ஜாதிகள் இருந்தாலும் பதிவுலகில் அப்படியில்லை...........................எல்லோரும் டீசண்ட் பீப்பிள் என அவசரப்பட்டு நினைத்துவிடாதீர்கள்..இங்கு ஜாதி மேல்மட்டம், கீழ்மட்டம் என இரு மட்டங்களில் உள்ளது. மேல்மட்டத்தில் இருப்பது பிராமணர்-பிராமணர் அல்லாதோர் என இரண்டு ஜாதிகளே. 
நீங்கள் பிராமணர் என்றால் ஷங்கர்-மணிரத்னம்-கமல் படங்களை தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்தும் முயற்சிஎன எழுதுங்கள்.ஜெயலலிதாவின் துணிச்சலையும் நரேந்திரமோடியால் குஜராத் வளர்ச்சி அடைவதையும் சோவின் புத்திசாலித்தனத்தையும் பாராட்டுவது அதிக கூட்டத்தை உங்கள் பதிவின் பக்கம் கூட்டும்; உங்களைப் பாராட்டவோ/திட்டவோ. திடீரென்று ஏதாவது நல்ல பதிவு எழுதத் தோன்றினால் பகவத் கீதை, காயத்ரி மந்திரம் போன்றவைகளுக்கு தமிழில் விளக்கமும் சொல்லலாம்..


நீங்கள் பிராமணரல்லதோர் பிரிவென்றால் ஷங்கர்-மணிரத்னம் கமல் படங்களை ஆரியக் கொழுப்புஎன்றும் துருத்தித் தெரியும் உச்சிக்குடுமிஎன்றும் வசை பாடுங்கள். கருணாநிதி-வீரமணி போன்றோர் என்ன செய்தாலும் தயங்காமல் பாராட்டுங்கள்..உருப்படியாய் ஏதாவது செய்யத் தோன்றினால் இடையிடையே தந்தை பெரியாரின் பேச்சு/கட்டுரைகளை வெளியிடுவதும் நலமே.

மேலே சொன்னதில் திருப்தி அடையாத மாவீரர் நீங்கள் என்றால் கேவலமாக அதற்கும் கீழே இறங்கலாம். கீழ்மட்டத்தில் உள்ள ஜாதிப் பிரிவுகள் நம் சமூகத்தைப் போலவே சிக்கலானவை..வேண்டுமென்றால் இரு பெரும் பிரிவுகளாகச் சொல்லலாம். முதல் பிரிவில் அய்யர்-அய்யங்கார்-வடகலை-தென்கலை-சைவம்-வைணவம் என பிரிந்து அடித்துகொள்ளலாம். இரண்டாவது பிரிவில் நாயக்கர்-வன்னியர்-தேவர்-முதலியார்-நாடார்-தேவேந்திரர்-செட்டியார் (கவனிக்க: இது தர வரிசையல்ல!)-மற்றும் உங்கள் அபிமான ஜாதிகள் எனப் பிரிந்து அடித்துக் கொள்ளலாம்.

எச்சரிக்கை: இதில் இறங்கினீர்கள் என்றால் மனநிலை பாதிக்கப்படவோ, பதிவுலகை விட்டு ஓடவோ நேரிடலாம். அது உங்கள் மனதிடத்தைப் பொறுத்தது.


6.வம்பு:
இது மிகவும் எளிய, ஜாலியான வழி. நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஜெயமோகன் அல்லது சாருநிவேதிதாவைத் திட்டி ஒரு பதிவிடுங்கள்..அதை அவர்களுக்கே மின்னஞ்சலில் அனுப்புவதும் சீக்கிரம் பிரபலமாவதற்கு உதவும். பெரும்பான்மையான ஜெயமோகன் வாசகர்கள் மந்திரித்து விட்டது போல் சிவனேயென்று திரியும் சித்தர்கள்..நீங்கள் எழுதும் எளிய நடை அவர்களுக்குப் புரிவதும் சிக்கலே..அதனால் பெரிய ரெஸ்பான்ஸை எதிர்பார்க்க முடியாது..
எனவே சாருவைக் கும்முவதே நல்லது. சாரு விசயத்தில் உள்ள வசதி என்னவென்றால் ரஜினி ரசிகர்கள்-கமல் ரசிகர்கள் போன்ற எதிரெதிர் துருவங்கள் கூட உங்களுக்கு ஆதரவை வாரி வழங்குவார்கள்..எப்படியும் 98% மக்களின் ஆதரவு கிடைக்கும்.

எச்சரிக்கை: திடீரென்று சாருவே அம்மி ரிடர்ன்ஸ்எழுதி, உங்களை நாறடிக்கலாம்.


7.மேலே சொன்ன எதையும் செய்ய மனத் தெம்பு இல்லையென்றால் நீங்களும்  ப்ளாக்கை பிரபலமாக்க 7 சூப்பர் டிப்ஸ்என மொக்கை போடுங்கள். நான் வெளியிலிருந்து முழுஆதரவு கொடுக்கிறேன்.

டிஸ்கி: இந்த பதிவை நீங்கள் சீரியஸாய் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

35 comments:

  1. @ஜீ...:ஜீ..போட்ட உடனே வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்குறீங்க..நன்றி.

    ReplyDelete
  2. சூப்பர் டெக்கினிக்கி........ஹி....ஹி....!

    ReplyDelete
  3. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா):போலீஸ்கார், எல்லாம் உங்க ஆசீர்வாதம்!

    ReplyDelete
  4. @பன்னிக்குட்டி ராம்சாமி:ஆஹா..பெரிய மனுஷங்கள்லாம் நம்ம கடைப்பக்கம் வர்றாங்களே..கொஞ்சம் உஷாராத்தான் இருக்கனும்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்.ரா.(என்னாங்க..இப்படி பேரு வச்சா எப்படி கூப்பிடறது)

    ReplyDelete
  5. ////செங்கோவி said...
    @பன்னிக்குட்டி ராம்சாமி:ஆஹா..பெரிய மனுஷங்கள்லாம் நம்ம கடைப்பக்கம் வர்றாங்களே..கொஞ்சம் உஷாராத்தான் இருக்கனும்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்.ரா.(என்னாங்க..இப்படி பேரு வச்சா எப்படி கூப்பிடறது)////

    பன்னிக்குட்டிய பன்னிகுட்டின்னுதான் கூப்புடனும், கன்னுக்குட்டின்னு கூப்புடமுடியுமா?

    ReplyDelete
  6. @பன்னிக்குட்டி ராம்சாமி://பன்னிக்குட்டிய பன்னிகுட்டின்னுதான் கூப்புடனும், கன்னுக்குட்டின்னு கூப்புடமுடியுமா?//..ஹா..ஹா..அய்யாசாமி..என்னை விட்ருங்கோ!

    ReplyDelete
  7. @ஐத்ருஸ்: செம கோவக்காரன் -ன்னு அர்த்தம் இல்லீங்க...ஆனாலும் ஒரு பயங்கரமான அர்த்தம் இருக்கு..அது என்னான்னு மறந்துபோச்சு..யோசிச்சு சொல்றேன்..

    ReplyDelete
  8. அட்டகாசமான பதிவு!
    அருமை!
    சூப்பர்!
    பின்னிட்டீங்க!
    செம!
    கலக்கல்!
    வாவ்!
    நல்ல பதிவு!
    பகிர்வுக்கு நன்றி!

    கமெண்ட் போடுவது எப்படி: கொஞ்சம் மேலே பார்க்க!

    ReplyDelete
  9. //நிறை குறைகளைச் சொல்லி மெருகேற்றுங்கள்...நன்றி!//

    நீங்க ஒரு நகை ஆசாரிதானே!

    ReplyDelete
  10. வடை..

    படிச்சிட்டு அப்புறம் வரேன்..

    ReplyDelete
  11. @எஸ்.கே://நீங்க ஒரு நகை ஆசாரிதானே!//..எஸ்.கே..பதிவுல சொன்ன 5வது பாயிண்டை ட்ரை பண்றீங்களா..வெறி குட்..வெறி குட்.

    ReplyDelete
  12. @Madhavan Srinivasagopalan:ஆறிப் போன அம்பதாவது வடையை வச்சி என்ன செய்யப்போறீங்க..வருகைக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  13. நீங்கல்லாம் எதைப்பத்தி இவ்வளவு சீரியசா டிஸ்கஸ் செய்யுரீங்க?!!!!!!
    ஓ. ஓ.. தப்பான இடத்துக்குவந்துட்டனோ?சரி,சாரி.

    ReplyDelete
  14. @Lakshmi: வருகைக்கு நன்றி சகோதரி.

    ReplyDelete
  15. @ம.தி.சுதா: என்னது நல்ல ஐடியாவா..கிளம்பிட்டாய்ங்கய்யா..கிளம்பிட்டாய்ங்கய்யா!..

    ReplyDelete
  16. ஹா,ஹா,ஹா,.......... சூப்பர் ஐடியாஸ் ....... அப்புறம் பதிவ கொஞ்சம் அலைன் பண்ணிப் போடுங்க

    ReplyDelete
  17. @மங்குனி அமைச்சர்: சுட்டிக் காட்டியதற்கு நன்றி அமைச்சரே! திருத்திவிட்டேன்.

    ReplyDelete
  18. பதிவர்களின் மனநிலையை நன்றாகவே கணித்திருக்கிறீர்கள். அப்படியே உங்கள் பதிவும் பிரபலமாகிவிட்டதே !.

    ReplyDelete
  19. @இனியவன்: பாராட்டுக்கு நன்றி சார்..பதிவுலகின் பல நாள் வாசகன்..அந்த அனுபவத்தில் எழுதியதுதான்.

    ReplyDelete
  20. நல்ல ஐடியாக்கள். இடைஇடையேவ் வரும் உங்க கமெண்ட்ஸ் அருமை.
    பிரபல பதிவராக மாறிட்டீங்க..
    பிரபல பதிவராக அவதாரம் எடுத்தற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. ..//தமிழனின் உயிர்மூச்சான சினிமாவைப் பற்றி எழுதவில்லையென்றால் நீங்கள் பதிவெழுத வந்ததே வேஸ்ட்…//
    //விமர்சனத்திற்கு இடையே ஹீரோவின் மூஞ்சியைப் போடாமல் ஹீரோயின் படத்தைப் போடுங்கள்//
    //சாருவே ’அம்மி ரிடர்ன்ஸ்’ எழுதி, உங்களை நாறடிக்கலாம். //
    ahga..

    ReplyDelete
  22. @பாரத்... பாரதி...://பிரபல பதிவராக மாறிட்டீங்க..// ஸ்மைலி போட மறந்துட்டீங்க போல.

    ReplyDelete
  23. என்ன நக்கலா? நாங்களே நொந்து போயிருக்கோம். இருந்தாலும் நல்லா பொழுது போனது நன்றி

    ReplyDelete
  24. @கிணற்றுத் தவளை: விடுங்க சார்..புண்பட்ட மனசை பதிவு போட்டு சிரிச்சு ஆத்துவோம்!

    ReplyDelete
  25. ஓஹோ... இப்படித்தான் பதிவுகள் போடணுமா? போற்றுவோம்.
    (மக்கள் வந்து கும்மு கும்முன்னு கும்மிடுவாங்களே)
    மௌனமே மௌனமே என்னுடன் பாடவா!

    ReplyDelete
  26. @கலையன்பன்: பதிவர்னு ஆனப்புறம் கும்முவாங்கன்னு கவலைப்படலாம பாஸ்.

    ReplyDelete
  27. ஆறிப்போன அறுபதாவது வட என்னத்தச் சொல்லுறது
    கடையில சன வரவு குறஞ்சுபோச்சு உங்களக் கூட்டிக்கிட்டு
    போகலாமுண்ணு வந்தேனுங்க. நன்றி அம்மணி பகிர்வுக்கு .
    ஆச்சிக்கு இப்பவே கண்ணக்கட்டுது போயிற்றுவாறன் அம்மணி .

    ReplyDelete
  28. @அம்பாளடியாள் ஆத்தா..இது ரொம்ப பழைய சரக்காச்சே..இங்க உட்கார்ந்துக்கிட்டு என்ன பண்ணிதீக..தனியா இப்படில்லாம் ராத்திரில வரக்கூடாது..பேய் பிசாசு நடமாடுற இடம்..

    நன்றி.

    ReplyDelete
  29. "நான் என் பிளாக்கை பிரபலமாக்கியது எப்படி" ன்னு தலைப்பு வச்சிருக்கலாமே செங்கோவி..!! [சும்மா சொன்னேன், பதிவு நல்லாயிருக்கு!! கிழவிக்கு பதிலா விலைமாதுன்னு போடும் ஐடியா... ஆஹா நீ எங்கேயோ போயிட்ட செங்கோவி. சிமுபுவின் செய்திகள் ஒவ்வொரு மூணு மாதத்துக்கும் திரும்பப் போடலாம்... நிஜம்!!]

    ReplyDelete
  30. //Jayadev Das said...
    "நான் என் பிளாக்கை பிரபலமாக்கியது எப்படி" ன்னு தலைப்பு வச்சிருக்கலாமே செங்கோவி..!! [சும்மா சொன்னேன், பதிவு நல்லாயிருக்கு!! கிழவிக்கு பதிலா விலைமாதுன்னு போடும் ஐடியா... ஆஹா நீ எங்கேயோ போயிட்ட செங்கோவி. சிமுபுவின் செய்திகள் ஒவ்வொரு மூணு மாதத்துக்கும் திரும்பப் போடலாம்... நிஜம்!!]//


    இத்தனை நாளா படிக்கலியா நீங்க..

    //ஆஹா நீ எங்கேயோ போயிட்ட செங்கோவி.//

    ஆமா பாஸ்..அதை எழுதுன அப்புறம் குவைத் வந்துட்டேன்!

    ReplyDelete
  31. \\உம்மா பிளாக் இருப்பதே அப்போ எனக்குத் தெரியாதே!!\\உம்ம பிளாக் இருப்பதே அப்போ எனக்குத் தெரியாதே!!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.