டிஸ்கி-1 : வேணும்..எனக்கு நல்லா வேணும்...பதிவர் ஆயிட்டமே..படம் பார்த்து நம்ம மக்களுக்கு படத்தைப் பத்தி நம்ம கருத்தைச் சொல்லுவோம்னு சசிகுமாரை நம்பி போனேன் பாருங்க..எனக்கு இதுவும் வேணும்..இன்னமும் வேணும்..இப்பதான்யா நம்ம அண்ணாச்சிகளான கேபிளார், உண்மைத்தமிழன், ஜாக்கி அருமையெல்லாம் தெரியுது..எவ்வளவு மொக்கை படத்தில இருந்து காப்பாத்தியிருக்காங்க..அவங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாதுங்க..அய்யா, ராசாக்களா..உங்களுக்கு கல்யாணம் ஆயிருந்தாலும் சரி..ஆகாட்டியும் சரி..நீங்க நிறைய குழந்தைகளைப் பெத்துகிட்டு, புள்ளை குட்டிகளோட சந்தோசமா இருக்கணும்யா..பதிவரா இருக்குறது இவ்வளவு டேஞ்சரான விசயமா?..யப்பா..முருகா!
ஒரு கோப்பையில இருக்கிற ஒயினை காட்டுறதோட டைட்டில் ஆரம்பிக்குது. உண்மையில் ரொம்ப நல்லா இருந்த்து. கலர்ஃபுல் டைட்டில்..இன்னொரு விசேஷம், படத்தோட பேரை கடைசிவரை போடலை.
வைபவ்வும் நண்பர்களும் பப்ல குடிச்சிட்டு பொண்ணுங்களோட ஆடுறாங்க..அப்புறம் வீட்டுக்கு போறாங்க..அப்புறம் பப்ல ஆடுறாங்க..இப்படியே ஒரு அரை மணி நேரம்..
வைபவ்வின் அப்பாவான மந்திரி ஏ.எல்.அழகப்பன் பிறரை மிரட்டி ஒன்னு, சொத்தை எழுதி வாங்குறார், இல்லே கமிசனை வாங்குறார். படியாத ஆட்களை விசுக்-னு போட்டுத் தள்ளறார்..நேர்மையான ஏ.சி.யான சமுத்திரக்கனி, நேர்மையா இருக்க ட்ரை பண்றார்..ஆனாலும் மேலே சொன்ன மந்திரியால இவர் நேர்மையா இருக்க முடியலை..இதை நமக்குச் சொல்ல ஒரு அரை மணி நேரம்..
வைபவ் பப்ல ஒரு ’மூக்கு ரொம்ப அடி வாங்குன’ பொண்ணைப் பார்க்குறார்..அவர் மேலே லவ் ஆகிறார்...அந்தப் பொண்ணு ஒத்துக்கலை..அப்புறம் சில கேவலமான சீனுக்கு அப்புறம் ஒத்துக்குது..அப்புறம்தான் தெரியுது..அந்தப் பொண்ணு அரசியல்வாதிகளையே உருவாக்குற/ஆட்டிப் படைக்குற பெரிய பிஸினஸ் மேனோட பொண்ணு..மந்திரிக்கு ஓ.கே..ஆனா, பிஸினெஸ் மேன் ஒத்துக்க மாட்டேன்னு சொல்ல, சில லாஜிக்கே இல்லாத சீன்+ மிரட்டலால அவர் ஒத்துக்கிடுதார்..இதுக்கு ஒரு அரை மணி நேரம்..1 ½ மணி நேரம் ஆச்சா?
இப்போ இதுவரைக்கும் பார்த்ததை/படித்ததை மறந்திடலாம்..ஏன்னா இது தான் படத்தோட கதையே இல்லையே...
திடீர்னு வைபவ்வின் பின்னந்தலையில் பெரிய இரும்பு கியர் ராடால் ஒரு அடி விழுது..மண்டை பொழந்து விழுற அவர் “ யார் நீ”ன்னு கேட்கிறார்..”ஈசன்’னு டைட்டிலப்போ போடாத பெயரை இப்போ போடுறாங்க..இடைவேளை!
இடைவேளைக்கு அப்புறம் ஆஹா..படம் சூடு பிடிக்குதுன்னு நினைச்சு உட்கார்ந்தா, நமக்குத்தான் சூடு பிடிக்குது.
மந்திரி பையனைத் தேடுறார்..ஏ.சி.சமுத்திரக்கனியும் ரொம்ப மொக்கைத்தனமா தேடுறார்..இப்படியே ஒரு அரை மணி நேரம்..(நோ பேட் வேர்ட் ப்ளீஸ்)
ஒரு வழியா ஈசனைப் பிடிக்கிறார். அவன் ஒரு பள்ளி மாணவன்..அப்போ அவன் ஒரு ஃப்ளாஷ்பேக்கைச் சொல்றான். அழகான அபிநயாவோட நல்லாதான் ஆரம்பிக்குது..ஆனா ஃபினிஷிங்?..கற்பழிப்பு..ப்ளட் லாஸ்..வேதனை..தற்கொலை..ன்னு தியெட்டர்ல கண்கொண்டு பார்க்க முடியல்லை..பருத்திவீரனுக்குப் போட்டியா யோசிச்சாங்க போல!..இப்படியே கொடுமையா ஒரு அரை மணி நேரம்..
அந்தக் கொடுமை முடிஞ்சதும் அப்பாடின்னு கண்ணைத் திறந்தா, வன்முறைன்னா வன்முறை..அப்படியொரு வன்முறை..மேலே சொன்ன இரும்பு ராடால அந்தப் பையன் அக்கவைக் கற்பழிச்ச வைபவ் மண்டையைப் பொளக்குறான்..மந்திரி, பையன் மண்டையைப் பொளக்குறார். சும்மா நங்கு நங்குன்னு ரத்தம் தெறிக்க விழும்போது, என் பக்கதுல குழந்தையோட வந்திருந்த ஃபேமிலி எந்திரிச்சு வெளில போயிருச்சு..கடைசில சமுத்திரக்கனியும் ஈசனும் சிதைஞ்சு போய் தப்பிக்கிறாங்க..நம்மையும் சிதைச்சு வெளில அனுப்புறாங்க.
படத்துல நல்ல விஷயம்னா சமுத்திரக்கனி, அபிநயா, ஈசனா வர்ற பையன் ஆகியோரின் நடிப்பு நல்லா இருக்கு..’வந்தனம்ங்கிற பாட்டு சூப்பர்.
இன்னும் படத்தோட ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் பத்தியெல்லாம் பேசலாம் தான்..ஆனா, சேதாரம் ரொம்ப ஆயிட்டதால, பெட் ரெஸ்ட் எடுக்கப் போறேன்...வேணாம்..வலிக்குது..
டிஸ்கி-2: காலை 11 மணிக்கே தியேட்டரில் நல்ல கூட்டம்..நிறைய இளைஞர்கள்..சில ஃபேமிலிகள்..எல்லோர் கண்ணிலும் சசிக்குமார் படத்தைப் பார்க்கப் போறோம்கிற ஆர்வம் தெரிந்தது. சிலர் சசியின் கடைசிப்படம் எப்போ வந்ததுன்னு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டிருந்தாங்க..அத்தனை கூட்டமும் வந்தது ’சசிகுமார்’ என்ற ஒற்றை வார்த்தைக்காகவே..ஆனால் அதற்கு ஏற்ற பொறுப்புணர்ச்சி சசிக்கு இருந்ததா என்று பார்த்தால் ஏமாற்றமே..
உலகத் திரைப்படம் என்றால் ரத்தக்களறியான கற்பழிப்பும், ரத்தம் தெறிக்கும் வன்முறையும் இருக்கணும்னு யார் கிட்டயோ சசிகுமார் தப்பாக் கத்துக்கிட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கார்னு நினைக்கிறேன்..ஆனால் உலத் திரைப்படம்னா என்னன்னு தெரிஞ்சுக்க சசி ஆசைப்பட்டா நான் அவருக்கு ஒரு படத்தை பரிந்துரைக்கிறேன்..அது ஒரு தமிழ்படம்தான்..அந்தப் படத்தை சசி 100 தடவையாவது பார்க்கணும்..அதுதான் நான் அவருக்கு கொடுக்க விரும்புகிற தண்டனை..அந்தப் படத்தோட பேரு : சுப்பிரமணிய புரம்.
ஏமாற்றம். :(
ReplyDelete@கடைக்குட்டி:
ReplyDeleteஆமாங்க..ரொம்ப நம்பிப் போனேங்க..சசிக்குமார் ஏமாத்திட்டார்!
இதுவும் ஊத்திக்கிச்சா? சசி மேல ரொம்ப நம்பிக்கையா இருந்தேனே.
ReplyDelete@இரவு வானம்: வாங்க இரவு வானம்..படம் நட்சத்திரம் & நிலா இல்லாத இரவு வானம் போல் இருக்கிறது..பீ கேர்ஃபுல்..
ReplyDeleteம்ம்ம்ம்... :-|
ReplyDelete@Yuva: வருகைக்கு நன்றி சார்..//ம்ம்ம்ம்..//-ன்னா இன்னா சார் அர்த்தம்..நீங்க சசிக்கு சொந்தக்காரர் இல்லையே?..ச்சும்மா..உல்லுல்லாயி...
ReplyDeleteரொம்ப எதிர்பார்த்தேன் இந்த படத்த.... போச்சா ? :(
ReplyDeleteகடைசி வரிகள் மிகவும் அருமை. சசிக்குமார் கண்டிப்பாக ஒரு திறமையான இயக்குனர் மற்றும் இயல்பான நடிகர். இது ஏமாற்றமே.. அடுத்து ஒரு இயல்பான படத்தைத் தருவார் என நம்பலாம்..
ReplyDeleteசசி சாருக்காக படத்த ரொம்ப எதிர்பார்த்தேனே..நீங்க சொல்றத பார்த்தா ஒரு வடை போச்சா...!
ReplyDelete@Raja: ஆமாம் ராஜா..பாதிப்படம் எடுத்துவிட்டு பிறகு கதையை மாற்றியதுபோல் தெரிகிறது.
ReplyDeleteகருத்துக்கு நன்றி வேழமுருகன்..
ReplyDeletehttp://sirippupolice.blogspot.com/2010/12/blog-post_17.html
ReplyDeleteHehe anne inga vanthu paarungka...
@guru: சசிக்காகத்தான் இன்னைக்கு தியேட்டரே ஹவுஸ்ஃபுல் ஆனது..ஆனால்...
ReplyDeleteஅண்ணே உங்களையுமா நாய் கடிச்சிடுச்சு...
ReplyDeleteமுன் சீட்டுல உக்காந்திருந்த ரெண்டு பேர் மேல ரத்தம் தெரிச்சிடுச்சாம்
ReplyDeleteஅமீருக்கு யோகி..எனக்கு ஈசன்!////
ReplyDeleteஅண்ணே ரொம்ப பயந்துட்டீங்க போல?
சசி சார் என்ன மன்னிச்சுடுங்க... வேறொன்றும் சொல்வதற்கில்லை...
ReplyDeleteபெரிய ஏமாற்றம்.. இது சசி படம்டான்னு நண்பர்களுகிட்ட பெருமையா சொன்னேன் இப்ப எப்படி அவங்க முகத்துல முழிப்பேன் சார்...
finishing touch super
ReplyDelete@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): //அண்ணே ரொம்ப பயந்துட்டீங்க போல?//
ReplyDeleteஆமாங்க..எங்க ஊரு சாமியாட்கிட்ட திருநீறு போடப்போறேன்..நீங்களும் தானே!
@மாணவன்://எப்படி அவங்க முகத்துல முழிப்பேன் சார்// வேறெப்படி..நாங்க சொல்லீட்டு இப்போ திருதிருனு முழிக்கிறமோ அது மாதிரி..இப்போ எல்லோருக்கும் கூப்பிட்டு சொல்லிக்கிட்டிருக்கேன்.இல்லேன்னா, அவங்களும்ல வந்து சிதைப்பாங்க..ஒரே நாள்ல எவ்வளவு தான் வாங்குறது..
ReplyDelete@தர்ஷன்: நன்றி தர்ஷன்..இப்பவும் சொல்றேங்க, தமிழ் சினிமாவில் சிறந்த 10 படங்கள்ல ஒன்னு சுப்பிரமணியபுரம்..
ReplyDeleteநன்றி தம்பி..
ReplyDeleteநான் உலகச் சினிமால பிஸியா இருக்கிறதால இந்த வாரம் தமிழ்ச் சினிமாவுக்கு லீவு..!
அடுத்த வாரம் சேர்த்து வைச்சு தீட்டிர்றோம்..!
@உண்மைத் தமிழன்(15270788164745573644): அண்ணே, முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...சீக்கிரம் பார்த்து ’முழுசா’ எழுதுங்க..
ReplyDeleteசட்டியில் இருப்பது அகப்பையில். அடி சோறு தீஞ்சிப் போயிட்டது. நம்பாம போனப்பெல்லாம் நல்ல படம் குடுக்கறதும். நம்ம்ம்பிப் பேறப்ப எல்லாம் நாற அடிக்கறதும் எல்லா டைரக்டர்களுக்கும் கை வந்த கலை. சேம் பிளட்.
ReplyDelete@Kuttymaanu: கரெக்டா சொன்னீங்க..அதுசரி, ஏன் இப்போல்லாம் பதிவு எழுதறதில்லை?..
ReplyDelete@வேழமுகன்://கடைசி வரிகள் மிகவும் அருமை// நன்றி சார்!
ReplyDeleteஅந்தப் படத்தை சசி 100 தடவையாவது பார்க்கணும்..அதுதான் நான் அவருக்கு கொடுக்க விரும்புகிற தண்டனை..அந்தப் படத்தோட பேரு : சுப்பிரமணிய புரம்.
ReplyDelete.... செம finishing!
@Chitra: அவர் இப்படி படம் எடுத்து நம்மளை இன்னைக்கு finish பண்ணாலும், பழசை மறக்கக் கூடாது இல்லையா!
ReplyDeleteநன் ஒத்துக்குறேன். இன்னிக்கி 11 மணி காட்சிக்கு போய் ஏமாந்தது தான் மிச்சம். அந்த நாலு நண்பர்களை city type, uber cool dude மாதிரி காமிக்க ரொம்ப முயற்சி செஞ்சுருகாங்க. செயற்கையா இருக்கு. வருத்தமாவும் இருக்கு.
ReplyDeleteசோனமுத்தா போச்சா? :(
ReplyDeleteஉண்மைய சொல்லுனும்னா 80 ல ச.எ.சந்திரசேகர் படம் மாதுரி இருந்தது,அவரோட எல்லா படத்தோட கதையும் கற்பழிப்பு அதற்க்கு பழிவாங்குதல் தானே.ஈசனோட இறுதி கட்சி ,சினிமா தனத்தின் உச்சம்..உலக தரம் மிக்க "சுப்ரமணியபுரம்" கொடுத்த சசிகுமார் எடுத்த படம் மாதுரி இல்ல..
ReplyDeleteஈசன்
ReplyDelete- நான் மக(கா)ன் அல்ல
@ram5sh: நிறையப் பேரு நம்மளை மாதிரி ஏமாந்து புலம்பிக்கிட்டு இருக்காங்க..வைபவ் காதலிக்கும் சீன் மிகவும் செயற்கை..ரொம்ப கொடுமைங்க..அடுத்த படமாவது நல்லா கொடுக்காறான்னு பார்ப்போம்..
ReplyDelete@லதாமகன்: நல்லா ஆப்பு வச்சுட்டாங்க பாஸ்..
ReplyDelete@shameer: எஸ்.ஏ.சி. யோட கற்பழிப்பு சீனைக் கூட பார்த்திறலாம்..அமீரும் சசியும் டீடெய்லா காட்டுறதுதான் குமட்டுது.
ReplyDelete@ஆகாயமனிதன்..: உண்மை தாங்க..ஈசன் மாக்கான் அல்ல..படம் பார்க்கப் போற நாம தான் மாக்கான்!
ReplyDeletefinishing touch super
ReplyDelete@ஆகாயமனிதன்..://சுப்பிரமணிய(புறம்)னுக்கு
ReplyDeleteஅப்பன்
ஈசன்// ஹா..ஹா..நல்ல கேப்ஷன்..
@பார்வையாளன்: பாராட்டுக்கு நன்றி பார்வையாளன்!
ReplyDeleteவிமர்சனம் நல்லா எழுதியிருக்கீங்க..
ReplyDeleteசசிக்குமாரிடம் நிறைய எதிர்பார்த்தோம்.
எப்படியாயினும் சமுத்திரகனிக்கு வாழ்த்துக்கள்.
விமர்சனத்தின் முடிவு பளீச்...
//பெரிய ஏமாற்றம்.. இது சசி படம்டான்னு நண்பர்களுகிட்ட பெருமையா சொன்னேன் இப்ப எப்படி அவங்க முகத்துல முழிப்பேன் சார்...//
ReplyDelete@பாரத்... பாரதி...: பளிச்னு பாராட்டியதற்கு நன்றி பாரத்..பாரதி!
ReplyDeleteஉங்கள் விமர்சனம் மிகவும் நன்றாக இருந்தது!
ReplyDeleteசேம் பிளட் (லாஸ்... கொஞ்சம் ஓவரா)
ReplyDeleteநானும் பார்த்தேன் செங்கோவி.. அமீருக்கு யோகி எனக்கு ஈசன்! இது ஒன்று போதாதா..சசி... சாரி.
ReplyDeleteஉங்கள் தளம் தமிழ் மணத்தில் 14-ஆவது இடம் பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்
ReplyDelete@Mohan: நன்றி மோகன்..தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்..
ReplyDelete@பிரியமுடன் ரமேஷ்: ஆமாம் ரமேஷ்..பொதுவாக நல்ல படங்களை மட்டுமே பார்ப்பது வழக்கம்..திடீரென்று இந்தப் படத்தைப் பார்த்தவுடன், தாங்க முடியலை..
ReplyDelete@சிவகுமார்:நீங்களுமா..வாங்க..மாத்தி மாத்தி ஆறுதல் சொல்லிப்போம்!
ReplyDelete@ரஹீம் கஸாலி: சந்தோசமான தகவலைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி ரஹீம்..நாம எங்கே வரப்போறோம்னு நான் அதைப் பார்ப்பதேயில்லை...மிக்க நன்றி!
ReplyDeletenalla velai.. thappichen..
ReplyDelete@மதுரை பாண்டி:வருகைக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteஎன்ன தான் சொன்னாலும் ,சசி இஸ் கரெக்ட் இன் ஹிஸ் கான்செப்ட்...தப்பு பண்ணா தண்டனை நிச்சயம்...ஆல் தி பெஸ்ட் டு சசி சார்...பட் ஒரு சின்ன வருத்தம்...ஒரே ஒரு சீன் ல கூட நீங்க வரலன்னு..?
ReplyDeleteசசிகுமார் படமா இல்லாம ஒரு தமிழ் சினிமாவா பாத்தா ஈசன் வித்தியாசமான கதை...! அந்த உலகை பற்றி அறிந்தவர்களுக்கு அது எவ்வளவு யதார்த்தம் என புரிந்திருக்கும் (ஐ மீன் பாஷன் டெக்னாலஜி... ஐடி... பப்ஸ..)
ReplyDeleteமத்தவங்களுக்கு வேலாயுதம் வருது போய் விசிலடிங்க...!