Thursday, December 23, 2010

மன்மதன் அம்பு - விமர்சனம்

கமலஹாசன் கே.எஸ்.ரவிக்குமார் வெற்றிக் கூட்டணியின் ஐந்தாவது படம். உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு என்பதாலும் கடைசி நேரத்தில் ஜெமினி சர்க்யூட்டிற்கு படத்தைக் கைமாற்றி விட்டதாலும் ஒரு கலவையான எதிர்பார்ப்பு கொண்ட படம்.



மதனகோபால்(மாதவன்)க்கு தன் காதலியான நடிகை நிஷா என்ற அம்பு (த்ரிஷா)வின் நடத்தை மேல் சந்தேகம். எனவே சொகுசுக் கப்பல்-டூரில் இருக்கும் அம்புவை வேவு பார்க்க மன்னார்(கமல்) என்ற டிடெக்டிவ்வை மாதவன் அனுப்புகிறார். கமலும் துப்பறிந்து திரிஷா தவறாக எதுவும் செய்யவில்லை என சொல்ல, ’அதான் எதுவும் நடக்கலையே..அப்புறம் ஏன் உனக்கு காசு கொடுக்கணும் என்கிறார் மாதவன். இதனால் கடுப்பாகும் கமல் த்ரிஷாவிற்கு ரகசியக்காதலன் இருப்பதாகப் புருடா விடுவதில் ஆரம்பிக்கும் குழப்பங்களே கதை. கடைசியில் திரிஷா தன்னைச் சந்தேகப்படும் மாதவனைக் கைப்பிடித்தாரா அல்லது வேவு பார்ர்க்க வந்த கமலைக் கைப்பிடித்தாரா என்பதை வெண்திரையில் காண்க.

முதல் பாதியில் ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதை மிகப்பெரும் பலவீனம். இரண்டாம் பாதியில் படம் ஓரளவு விறுவிறுப்பாகவே போகிறது. கடைசி 20 நிமிடங்கள் கமலின் ஃபேவரிட்டான (மிகவும் சுமாரான) ஆள் மாறாட்டக் காமெடியோடு படம் முடிகிறது. அவ என்ன NOன்றது?” “என்னது, அவ உன்னை நோண்டுனாளாஎன ஒரு சில இடங்களில் டைமிங் காமெடி சிரிக்க வைத்தாலும். கிரேஸி மோகன் அளவிற்கு கமலின் வசனங்கள் சிரிப்பு வரவழைக்கவில்லை.

தன் வயதிற்கேற்ற கேரக்டரை தேர்ந்தெடுப்பதற்கு கமலுக்கு பாராட்டுகள். எக்ஸ்-ஆர்மி மேனாக கனகச்சிதமாகப் பொருந்துகிறார். நண்பனின் சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்ய முடியாமல் தவிக்கும் காட்சிகளில் சூப்பர் ஆக்டர் என்பதை நிரூபிக்கிறார். த்ரிஷா அம்மையாருக்கும் கதையில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர். க்ளோஸ்-அப் பயமுறுத்தினாலும் நன்றாக நடித்திருக்கிறார்.

மாதவனும் த்ரிஷாவின் தோழியாக வரும் சங்கீதாவும் கிடைக்கிற சான்ஸில் ஸ்கோர் செய்கிறார்கள். மாதவனின் அம்மாவாக வரும் உஷா உதூப் பொருத்தமான தேர்வு. காமெடி என்ற பெயரில் மலையாள ஜோடிகள் செய்யும் ஓவர் ஆக்டிங் எரிச்சலை மூட்டுகிறது. பஞ்சதந்திரம் போல் இல்லாமல், உன்னைப் போல் ஒருவனைப் போன்றே இதிலும் மற்றவர்களை கமல் நடிக்க விட்டிருப்பது ஆறுதல்.

நான் கப்பல் கட்டும் தளத்தில் டிசைன் எஞ்சினியராகப் பணியாற்றியிருக்கிறேன். சில பகுதிகளை டிசைன் செய்துமிருக்கிறேன். எனவே சொகுசுக் கப்பலான  MSC Cruise-ஐ ஐ திரையில் காண மிகவும் ஆவலாய் இருந்தேன். மனுஷ் நந்தனின் கேமரா அவ்வளவு அழகாகக் காட்டுகிறது கப்பலை. இது கப்பலா..லாஸ் வேகாஸ் நகரமா என பிரமிக்க வைக்கும் அழகு. மெயின் டெக் (மேல் தளம்)-லேயே காட்சிகளை எடுத்து ஒப்பேற்றாமல் உள்ளுக்குள்ளும் புகுந்து விளையாடுகிறது நந்தனின் கேமரா. காஸ்ட்லியான இந்தக் கப்பலை பரிந்துரைத்த உதயநிதிக்கு சபாஷ்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் தெலுங்கு வாடை மிஸ்ஸிங்.அதனாலோ என்னவோ இரண்டு பாடல்களே தேறுகின்றன. எவ்வளவு பெரிய கூட்டத்தையும் கட்டிமேய்ப்பதில் வல்லவர் கே.எஸ்.ரவிக்குமார். இதிலும் அப்படியே.

கமலின் ஃப்ளாஷ்பேக்கை முழுக்க முழுக்க ரிவர்ஸில் எடுத்திருக்கிறார்கள். ஒரு பாடல் முழுக்க வாயசைப்பு ஃபார்வர்டில் இருக்க, காட்சிகள் ரிவர்ஸில் வருவது மிகவும் அழகு. கமலின் டச் இந்தக் காட்சிகளில் நன்றாகத் தெரிகிறது. மொத்த டீமும் இந்தப் பாடலுக்கு நன்றாக உழைத்திருக்கிறார்கள்.

காமெடிப்படம் என்ற எதிர்பார்ப்பில் வந்திருந்த சிலர் ஏமாற்றமடைந்து கத்திக்கொண்டிருந்தனர். இந்தப் படம் மெதுவாக நகரும் ஒரு ஃபீல்-குட் வகைப் படம். அவ்வை சண்முகி வரிசையில் வரும் காமெடிப் படமல்ல. அந்நிய நாடு, நடிகை, டிடெக்டிவ் என்பது போன்ற விஷயங்கள் முதல் பாதியில் ஒரு அந்நியத்தன்மையைக் கொடுப்பதும் படத்திற்கு மைனஸ் பாயிண்ட்.

மன்மதன் அம்பு இலக்கை மிக மெதுவாகத் தாக்குகிறது.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

30 comments:

  1. வாழ்த்துக்கள் உங்களுக்கு...

    ReplyDelete
  2. அட சூப்பர் பாஸ்ட் நீங்க

    ReplyDelete
  3. @பாரத்... பாரதி...: நன்றி பாரதி...ஆமா, எதுக்கு வாழ்த்து?

    ReplyDelete
  4. Naan comedy padamnudhaan ninaichen.very dissapointment

    ReplyDelete
  5. @ரஹீம் கஸாலி: எல்லாம் உங்களுக்காகத் தான்..

    ReplyDelete
  6. @Arun Prasath:’அட வெட்டி ஆபீசர் நீங்க’ன்னு சொல்லாதவரைக்கும் சந்தோசமே.

    ReplyDelete
  7. @ஐத்ருஸ்:தியேட்டரில் கமல் ரசிகர்களே டல் ஆகிவிட்டார்கள்..ஆவரேஜ் தான்.

    ReplyDelete
  8. Innoru oru mumbai express aagamal irunthal sari

    ReplyDelete
  9. சூப்பர் தல! நீங்க இவ்ளோ ஸ்பீடா!! அப்போ படம்???

    ReplyDelete
  10. @ஜீ...:நாந்தான் ஸ்பீடு, ப்டம் அல்ல.

    ReplyDelete
  11. பதிவுலகில் முதல் விமர்சனம் உங்களுடையது தான், எனவே வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அவசரமான விமர்சனம் என்றாலும் நேர்த்தியாக இருக்கிறது.நம்மவர் படம் முதல் காட்சி வழக்கம் போல ஆர்வத்துடன் போய் திருப்தியாக இல்லாவிட்டாலும் திரைக்கதை வசனத்தில் ஜெயித்திருக்கிறார் என்று சந்தோசமே.,

    ReplyDelete
  13. எங்க பாத்தீங்க. நாளைக்கு போறேன்..

    ReplyDelete
  14. இன்னைக்கு கேபிளோட முதல் ஷோ பாக்குற வாய்ப்பை தவறவிட்டேன், நல்ல விசயம்தான் போலும்...

    ReplyDelete
  15. @Shajahan.S.:அவசரமாக எழுதவில்லை நண்பரே...3 மணி நேரம் கழித்தே பதிவிட்டுள்ளேன்..பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  16. @கே.ஆர்.பி.செந்தில்: கமல் ரசிகர் என்றால் ஒரு முறை பார்க்கலாம் சார்...

    ReplyDelete
  17. நல்ல விமர்சனம்.. அந்தப் பாடல் அருமை... மிகவும் ரசித்தேன்...

    http://rameshspot.blogspot.com/2010/12/blog-post_23.html

    ReplyDelete
  18. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): படம் பார்த்துட்டு சொல்லுங்க போலீஸ்கார்.

    ReplyDelete
  19. என்னை பொருத்தவரை படம் பாடு மொக்கை... கண்டிப்பாக இது மிக பெரிய தோல்விப் படமாக அமையும்... காரணம் இரண்டு..

    1. கமலின் அளவிற்கு சிந்திக்கும் நபர்கள் தமிழகத்தில் வெகு சிலரே...
    2. இது ஏ க்லாஸ் ரசிகனுக்கான படம். பாமரனால் இதை ஊட்கொள்ளவோ ரசிக்கவோ முடியாது.

    கேரளாவிலும், ஆந்திரவிலும் படம் படு தோல்வி என்று செய்திகள் கூறுகின்றன. சென்னையில் சுமாராக ஓடுவதாக நண்பர்கள் கூறி உள்ளனர். இங்கு மலேசியாவில் படம் படு தோல்வி. தேன் தமிழகத்தில் படம் கண்டிப்பாக ஓடாது.

    கமல் மீண்டும் மீண்டும் உலகப் படங்களை தழுவி திரைப்படம் எடுப்பது சிறிது வருத்தமே. அவருக்கு இருக்கும் அறிவிற்கு அவர் சொந்தமாக யோசித்து எடுக்க வேண்டும்...

    பாவம் கமல்... மேலும் ஒரு தோல்விப்படம்... இந்த நிலையில் அவரது 'ஓர்க்குட்' இணைய ரசிகர்கள் இந்த படம் எந்திரத்தை பிளக்கும் என்று சொல்லுகின்றார்கள்... என்ன கொடுமையோ...

    அஜித், விஜய் இவர்களுக்கு கூட, கமல் விட நல்ல ஒப்பனீங் இருக்கும் போல...

    ReplyDelete
  20. ஒரிஜினல் பதிவரா ஆகிட்டீங்க வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  21. @VJ: தங்களது தெளிவான கருத்துக்கு நன்றி விஜய். அதனை ஏற்றுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  22. @இரவு வானம்: லீவ்-ல இருக்கேன் பாஸ்..அதான் இப்படி...

    ReplyDelete
  23. படம் சுமார்தான் என்றாலும் நகைச்சுவைக்காகப் பார்க்கலாம்
    என்று சொல்கிறீர்கள்.  அப்ப பார்த்துடுவோம்.
    கமல் பாடிய பாடல்:
    ராசாத்தி உன்னப் பார்க்க ஆச வச்சேன்டி!!

    ReplyDelete
  24. அருமையான விமர்சனம்..

    அது மேலும் பலரை சென்றடைய வேண்டும் என்பதால், அதை என் பதிவில் பயன்படுத்தி இருக்கிறேன் ( உங்கள் பெயரிலேயே )

    ReplyDelete
  25. @கலையன்பன்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..நான் இது நகைச்சுவைப் படமல்ல என்றுதான் சொல்லியிருக்கென் பாஸ்.

    ReplyDelete
  26. @பார்வையாளன்: மிக்க நன்றி நண்பரே. கும்மாங்குத்து குத்தியிருக்கீங்க போல..

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.