Tuesday, May 3, 2011

ரஜினியை பார்த்த கலைஞரும் ராமராஜனை கண்டுகொள்ளாத ஜெ.வும்

நமக்கு ஆரம்பித்திலிருந்தே ராணா படத்தின் மீது ஒரு நல்ல எண்ணமே வர மறுக்கிறது. படத்தின் போஸ்டரும் ஏனோ பாபாவை ஞாபகப் படுத்துகிறது. முதல் நாள் சூட்டிங் போன சூப்பர் ஸ்டார், வயிற்று வலி+மூச்சுத் திணறலால் திண்டாடி விட்டார்.  உடனே மருத்துவமனியில் அட்மிட் ஆகிற அளவிற்கு நிலைமை போய் விட்டது.
வயிற்று வலிக்குக் காரணம் காலை டிபன் தான் என்றும் மூச்சுத் திணறலுக்குக் காரணம் பக்கத்தில் நின்ற தீபிகா படுகோனே தான் என்றும் உளவுத்துறை தகவல்கள் கிடைத்த உடன் சீறிக் கிளம்பினார் நம்ம சி.எம்(?) கலைஞர். உடனே ரஜினியை நேரில் சந்தித்து விட்டு, வெளியில் வந்து ”அவர் நலமுடன் உள்ளார்” என்ற நல்ல செய்தியையும் உலகிற்கு அறிவித்தார்!

கடைசியாக வந்த ரஜினி-கலைஞர் சம்பந்தப்பட்ட செய்தி என்றால் ரஜினி மீடியாக்காரங்க+சொந்த பந்தம் சூழ இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டதும், மாலையே கலைஞருடன் உட்கார்ந்து ‘பொன்னர் சங்கர்’ பார்த்ததும் தான். கலைஞர் வைரமுத்துவிடம் பேசும்போது ரஜினியைக் காய்ச்சி எடுத்ததாகவும் தகவல் வெளியானது. 

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இப்போது தான் இந்தத் திடீர் பாசச் சந்திப்பு. இதற்கான காரணம், கடைசிச் செய்தியைப் பொய்யாக்க இருக்கலாம். ’ரஜினி மேல் கலைஞர் கொண்ட தனிப்பட்ட பாசம்’ என்று முரசொலி சொல்லக் கூடும். ஒருவேளை கலைஞர் ”நானும் ரஜினி ரசிகன் தான்” என்று பேட்டி கொடுக்கலாம். அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று அறிந்தவர்களுக்கு, இது ஒன்றும் பெரிய அதிர்ச்சியைத் தராது!

அல்லது, எங்கு போனாலும் ‘ஸ்பெக்ட்ரம்-சம்மன்-கைது’ என்று ஒரே கெட்ட வார்த்தையாகக் காதில் விழுவதால், ஒரு சேஞ்சுக்கு ‘நலம்’ என்ற செய்தியை அறிவித்து சந்தோசப்பட வந்திருக்கலாம். 

காரணங்கள் எதுவானாலும், அவரது செய்கை பாராட்டத் தக்கதே. திமுக பேச்சாளர் வெற்றி கொண்டான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி, தன் வாழ்வின் கடைசிநாட்களில் இருந்தபோது, டாக்டர்கள் அவரை இனிமேல் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்றனர். அவர் கேட்பதாக இல்லை. பிறகு கலைஞர் சென்று அவரைப் பார்த்து கண்டிப்புடன் அதைச் சொல்லி உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ளச் சொன்னார். 

இன்னொரு பக்கம், ராமராஜன் என்றொரு அப்பாவி அதிமுக கூட்டத்தில் பேசிவிட்டுத் திரும்பும் வழியில் ஆக்ஸிடெண்டில் சிக்கினார். ஓ.பி. ஆஸ்பத்திரிக்குப் போய், அதிமுக எல்லாச் செலவையும் ஏற்கும் என்றார். அதுவே பெரிய விசயம் தான் என்பது போல் ஆகிவிட்டது இப்போது. அதன் பின் அவர் சென்னை திரும்பி விட்டதாகவும், நடக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் அவரை ஒரு முறை கூட ’அம்மா’ என்ற புனித வார்த்தையால் அழைக்கப் படும் ஜெயலலிதா பார்க்கவேயில்லை. 
விபத்து நடந்த உடனே மதுரை சென்று பார்த்திருக்கலாம். அம்மாவே கதி என்று கிடந்த ராமராஜனுக்காக அவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியவில்லை போலும். பரவாயில்லை, ஆனால் அவர் சென்னை திரும்பிய பிறகாவது சந்தித்து ஆறுதல் தெரிவித்து இருந்தால், அது அதிமுக தொண்டனுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும். தேர்தல் பிரச்சாரத்தின்போது நல்ல இமேஜையும் கொடுத்திருக்கும். ஆனால் தேர்தல் பிரச்சாரம் செய்த களைப்புத் தீர கொடநாடு பற்ந்து விட்டார் இப்போது.

கட்சிக்காக உழைக்கும் தொண்டனுக்கு இரு இயக்கங்களும் பெரிதாக எதுவும் செய்வதில்லை தான். ஆனாலும் ஒரு ஆறுதல் வார்த்தை சொன்னாலே போதும், தொண்டன் காலாகாலத்திற்கும் உங்கள் பின்னால் வருவான். எந்த ஊருக்குப் போனாலும், கட்சியினரைச் சரியாகப் பெயர் சொல்லி அழைத்து நலம் விசாரிப்பது கலைஞரின் வழக்கம். அதைப் பலநாட்களுக்குச் சொல்லி மகிழ்வதை நான் பார்த்திருக்கிறேன். அதுதான் ஆட்சியில் இல்லாமல் 14 வருடம் வனவாசம் போனபோதும், கட்சி காணாமல் போகாமல் காப்பாற்றியது. 


ஜெயலலிதாவிடம் அத்தகைய குணம் கொஞ்சம்கூட இல்லை என்பது வருந்தத் தக்கதே! அது தான் எம்.ஜி.ஆரின் இடத்தை ஜெ.பிடிக்க முடியாமல் போனதற்கான முக்கிய காரணம் ஆகும்!

டிஸ்கி: இதன்மூலமாக கலைஞர் ஒரு மனிதாபிமானி என்று நிறுவ நாம் முயலவில்லை. அது நம் வேலையும் அல்ல. நம்மிடையே இருக்கின்ற இரு தலைவர்கள், தனது தொண்டர்களுடன் கொண்டுள்ள உறவைப் பற்றிய ஒரு பார்வையே இந்தப் பதிவு.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

57 comments:

  1. //கட்சிக்காக உழைக்கும் தொண்டனுக்கு இரு இயக்கங்களும் பெரிதாக எதுவும் செய்வதில்லை தான். ஆனாலும் ஒரு ஆறுதல் வார்த்தை சொன்னாலே போதும், தொண்டன் காலாகாலத்திற்கும் உங்கள் பின்னால் வருவான். //

    சொல்லாமலும் போகிறார்கள் எதையும் எதிர்பார்க்காமல், ஆனால் தலைவர்கள் அதை உணரவில்லை. தொண்டன் உணரும் நாள் புதிய தலைவனுக்கு மாறுகிறான்.

    ReplyDelete
  2. மாப்ள தலைவன் என்றால் தன்னை பற்றி சிந்திப்பவனே......தொண்டர்களைப்பற்றி சிந்திப்பவன் எப்படி ஒரு நல்ல தலைவனாக முடியும்.........இது தெரியாம என்னய்யா நீ...... ஹிஹி!

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    நல்ல ஒப்பீடு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கருணாநிதி கருணாநிதி தான், நெஞ்சம் இனித்தது கண்கள் பனித்தன போன்ற டயலாக்கையெல்லம செல்வி ஜெயலலிதா சொல்லவில்லையே.

    ReplyDelete
  5. @பலே பிரபு//தொண்டன் உணரும் நாள் புதிய தலைவனுக்கு மாறுகிறான்.// அப்படி யாரும் உணர்கிற மாதிரித் தெரியவில்லையே பாஸ்!

    ReplyDelete
  6. @டக்கால்டிராமராஜன் நிலைமை மோசம் தான்!

    ReplyDelete
  7. @விக்கி உலகம்//தொண்டர்களைப்பற்றி சிந்திப்பவன் எப்படி ஒரு நல்ல தலைவனாக முடியும்.........// நாளைக்கு நீங்களும் அப்படித்தானா விக்கி...

    ReplyDelete
  8. @Rathnavelவாழ்த்துக்கு நன்றி பாஸ்!

    ReplyDelete
  9. @கோவி.கண்ணன்//நெஞ்சம் இனித்தது கண்கள் பனித்தன போன்ற டயலாக்கையெல்லம செல்வி ஜெயலலிதா சொல்லவில்லையே.// ஜெ. மறக்கவும் மாட்டார், மன்னிக்கவும் மாட்டார்.கலைஞரிடம் உள்ள நெளிவுசுளிவு ஜெ.விடம் இல்லை. காரியம் ஆகவேண்டும் என்றால் எல்லா லெவலுக்கும் இறங்கும் வல்லமை கலைஜரிடம் உண்டு..ரொம்ப மானம் ரோஷம் பார்த்தா கஷ்டம்னு அவருக்குத் தெரியும்..வருகைக்கு நன்றி சார்!

    ReplyDelete
  10. //நமக்கு ஆரம்பித்திலிருந்தே ராணா படத்தின் மீது ஒரு நல்ல எண்ணமே வர மறுக்கிறது//
    ஆமா பாஸ்! பெயரும் என்னவோ ஒட்டுதில்ல!

    ReplyDelete
  11. //அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று அறிந்தவர்களுக்கு, இது ஒன்றும் பெரிய அதிர்ச்சியைத் தராது!//
    :-)

    ReplyDelete
  12. திமுக அந்தாளும், அதிமுக வந்தாலும் ரஜனிக்கு ஒக்கே! யார் வந்தாலும் விஜயகாந்துக்கு ஆப்பு! :-)

    ReplyDelete
  13. ///கோவி.கண்ணன் said... [Reply]
    கருணாநிதி கருணாநிதி தான், நெஞ்சம் இனித்தது கண்கள் பனித்தன போன்ற டயலாக்கையெல்லம செல்வி ஜெயலலிதா சொல்லவில்லையே.//

    கருணாநிதி கருணாநிதி but

    "SELVI" Jayalalitha? hahahah

    ReplyDelete
  14. @கோவி.கண்ணன்

    கருணாநிதி கருணாநிதி but

    "SELVI" Jayalalitha? hahahah

    ReplyDelete
  15. நன்றாக உள்ளது !

    ReplyDelete
  16. தொண்டர்களை அணுகுவதில் ஜெயலலிதாவை விட கலைஞர் எவ்வளவோ மேல்...

    ReplyDelete
  17. நியாயமான பார்வைதான்!

    ReplyDelete
  18. சிறப்பான பகிர்வு

    ReplyDelete
  19. அய்யாவைப் பற்றியும் அம்மாவைப் பற்றியும் நீங்கள் சொன்னது மிக உண்மை.

    ReplyDelete
  20. தொண்டர் மற்றும் கூட்டணி கட்சியினரிடம் உறவை பேணுவதில் ஜெ‌ஜெ வை விட மு க ரொம்ப திறமையானவர் தான்....

    ReplyDelete
  21. அது சரி இந்த மேட்டருக்கு எதுக்குங்க சம்பந்தமே இல்லாம தலைவர இழுக்குறீங்க???

    ReplyDelete
  22. அடுத்து, தான் வசனம் எழுதும் படத்திற்கு ஹீரோவாக நடிக்க முடியுமா என்று கேட்ட அடுத்த நொடி ரஜினிக்கு வயிறு கலங்கி... இந்த நிலைக்கு ஆளாகிவிடாராமே?

    ReplyDelete
  23. Might be irrelevant to this Post, sorry ..But important one ..

    Tamilnadu get's First rank in Overall Economic Growth & Freedom beating so called Highly Governed state of Gujarat..

    Hope this might open the eyes of many cats..

    http://www.business-standard.com/india/news/tamil-nadu-retains-top-slot-in-economic-freedom-ranking/428571/

    http://www.cato.org/economic-freedom-india/AppendixIV.pdf

    http://ibnlive.in.com/generalnewsfeed/news/maximum-economic-freedom-in-tamil-nadu-least-in-bihar-study/610349.html

    ReplyDelete
  24. @ஜீ...ராணா ஜக்குபாய் ஆகாமல் இருந்தால் சரி!

    ReplyDelete
  25. @Dharanகோவி சாரே எப்பவாவது தான் என் கடைப்பக்கம் வர்றாரு..இப்படி மடக்கிக் கேள்வி கேட்டு அதையும் கெடுக்காதீங்கய்யா!

    ReplyDelete
  26. @RK நண்பன்..அனுசரித்துப் போவதில் அவர் கெட்டி தான்!

    ReplyDelete
  27. @இரவு வானம்தலைவர் நியூஸ் பார்க்கவும் வெற்றிகொண்டான் ஞாபகம் வந்த்து..வெற்றி ஞாபகம் வரவும் ராமராஜன்,,அடுத்து மம்மி!....அதை அப்படியே எழுதிப்புட்டேன்..தப்பாண்ணே?

    ReplyDelete
  28. @! சிவகுமார் !அப்போ அப்படி எல்லாம் நடக்காதுன்னு ஆறுதல் சொல்லத்தான் போய்ப் பார்த்தாரா?

    ReplyDelete
  29. மூச்சுத் திணறலுக்குக் காரணம் பக்கத்தில் நின்ற தீபிகா படுகோனே தான் என்றும் # ok ok nadakkattum

    ReplyDelete
  30. \\நமக்கு ஆரம்பித்திலிருந்தே ராணா படத்தின் மீது ஒரு நல்ல எண்ணமே வர மறுக்கிறது. படத்தின் போஸ்டரும் ஏனோ பாபாவை ஞாபகப் படுத்துகிறது. முதல் நாள் சூட்டிங் போன சூப்பர் ஸ்டார், வயிற்று வலி+மூச்சுத் திணறலால் திண்டாடி விட்டார். உடனே மருத்துவமனியில் அட்மிட் ஆகிற அளவிற்கு நிலைமை போய் விட்டது.\\ஜக்குபாய் படத்தை ரிலீசுக்கு முன்னரே யாரோ திருட்டு சி.டி. பண்ணி சந்தையில விட்டுட்டாங்க. [கடைசியில அவன் போட்ட சி.டி. காசு கூட வித்தவனுக்கு கிடைக்காமல் தலை மேல் துண்டை போட்டுக் கொண்டு போய் விட்டான்.] இதைக் கண்டிச்சு ரஜினி பேசினார், கிட்டத் தட்ட அந்தப் பேச்சு மாதிரியே இதுவும் இருக்கு. ஹா..ஹா..ஹா...

    ReplyDelete
  31. ரஜினியைப் போய்ப் பார்த்தா கருணாநிதிக்கு லாபம், ராமராஜன் மார்க்கெட் போன ஆளு, பார்த்து எதுக்காவுது. இது மட்டுமில்ல அந்தம்மா உலகத்துல சசிகலாவைத் தவிர வேற யாரையுமே மதிக்கிறதில்ல. ஆட்சி வந்தா சரி, இல்லைன்னா இருக்கவே இருக்கு குளு குளு கொட நாடு, எவனோ அடிச்சிகிட்டு சாவுங்கடான்னு போயிடுது. கருணாதிக்கு மக்கள் மேல இருக்கும் பிரியமும், கசாப்புக் கடைக்காரனுக்கு அறுக்கப் போகும் ஆட்டின் மேல காட்டும் அக்கறையும் ஒண்ணுதான்.

    ReplyDelete
  32. உண்மையிலேயே தீப்ஸ் சூப்பர் பிகருப்பா, தலைவர் மூச்சு தினராம என்ன பண்ணுவாரு? ஹா..ஹா...ஹா...

    ReplyDelete
  33. @Jayadev Das//இதைக் கண்டிச்சு ரஜினி பேசினார்// அது செமக் காமெடில்ல..

    ReplyDelete
  34. அரசியல் சகோ, எந்தப் புற்றினுள், எந்தப் பாம்பு இருக்கும் என்று சொல்ல முடியாதே.

    ReplyDelete
  35. @Jayadev Das//உண்மையிலேயே தீப்ஸ் சூப்பர் பிகருப்பா// நீங்க தொடர்ந்து இதையே சொல்லுறீங்க..எனக்கு ஒன்னும் தெரியல சார்!

    ReplyDelete
  36. \\நீங்க தொடர்ந்து இதையே சொல்லுறீங்க..எனக்கு ஒன்னும் தெரியல சார்!\\என்னப்பா இப்படிச் சொல்லிட்டே, எவ்வளவு அழகான முகம், சிரிக்கும் போது ரெண்டு கன்னத்திலும் விழும் குழி, துரு துறுன்னு ஒரு பார்வை, கிறங்கடிக்கும் அந்தச் சிரிப்பு.... ஆஹா ஏன் மனசை கொள்ளையடிச்சிட்டாப்பா...... தீப்ஸ் மாதிரி இன்னொருத்தி கிடையாதுப்பா... தீப்ஸ் தீப்ஸ் தானப்பா.

    ReplyDelete
  37. கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் இது போன்ற விஷயங்களில் நிறைய விஷயம் இருக்கிறது. கருணாநிதி சற்று கவனத்தை ஈர்ப்பதற்காகவாவது சென்று பார்ப்பார். சம்பந்தப்பட்டவர்க்கும் சற்று ஆறுதலாய் இருக்கும்.

    ReplyDelete
  38. உங்களுடைய அரசியல் சார்பான பதிவுகள் மிக சிறப்பானவை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளீர்கள்..

    ReplyDelete
  39. @பாரத்... பாரதி...பாராட்டுக்கு நன்றி பாரதி!

    ReplyDelete
  40. மூச்சுத் திணறலுக்குக் காரணம் பக்கத்தில் நின்ற தீபிகா படுகோனே தான் என்றும் உளவுத்துறை தகவல்கள் கிடைத்த//?????

    ReplyDelete
  41. @இராஜராஜேஸ்வரி//உளவுத்துறை தகவல்கள் கிடைத்த//?????// ஆஹா..கேள்விக்குறி ஒன்னொன்னும் அருவா மாதிரி நிக்குதே...பதுங்கிருடா செங்கோவி!

    ReplyDelete
  42. சாரி ஃபார் லேட் கம்மிங்க்

    ReplyDelete
  43. hahaha ena kodumai saravanan ithu ADMK atchiku vanthalum DMK atchiku vanthalum manushanka than maruranka ana manasu mara matenkithu soo sad

    ReplyDelete
  44. @சி.பி.செந்தில்குமார்ஒரு நாளைக்கு 3 பதிவு போட்டா நீங்க இங்க வர டைம் கிடைக்குமா..

    ReplyDelete
  45. @frnds meetingதாங்கள் என்ன செய்தாலும் தொண்டர்கள் பின் தொடர்வார்கள் என்ற நம்பிக்கை தான்!

    ReplyDelete
  46. வெற்றிகொண்டான் மருத்துவ செலவை கலைஞர் ஏற்று கொண்டாரா நண்பரே???இல்ல தெரில அதான் கேக்குறன்.நலம் மட்டும் விசாரித்து விட்டு வந்தால் எதோ ஒட்டு அரசியல் மாதிரி இருக்கே. தெரியனுமா இல்லையா.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.