Friday, May 6, 2011

எங்கேயும் காதல் - திரை விமர்சனம்

ஹ..ஹ..ஹன்சிகா நடிப்பில் வெளிவரும் இரண்டாம்(உண்மையில் முதல்) படம், பிரபுதேவா-ஜெயம்ரவி காம்பினேசனில் வரும் இரண்டாவது படம்(உண்மையில் இரண்டாவது!) என்று எனக்கு (மட்டுமாவது) எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த படம். பிப்ரவரியிலேயே காதலர் தினத்தன்று வெளிவந்திருக்க வேண்டிய படம், ஒருவழியாக இன்று ரிலீஸ்!
படத்தோட கதை என்னன்னா..........’பாரீஸிற்கு வெகேசனில் வந்திருக்கும் பிஸினஸ்மேன் & ஜாலி பேர்வழி கமலுக்கும்(ஜெயம் ரவி) பாரீஸிலேயே வாழும் தமிழ்ப்பெண் கயல்விழிக்கும்(ஹன்சிகா) காதல், இது தான் கதை..இதைத் தான் பார்க்கப்போறீங்க’-ன்னு முதல் சீனிலேயே பிரபுதேவா வந்து சொல்றாரு. அதனால அது தான் கதை!

இப்படிச் சொல்ல ’எஸ்.ஜே.சூர்யா’ மாதிரி தில் இருந்தாப் போதாது, கூடவே ’குஷி’ மாதிரி நல்ல திரைக்கதையும் வேணும். அது இல்லாமப் போனது தான் பிரச்சினையே! முத சீன்லயே ஹன்சிகா ஜெயம்ரவியைப் பார்த்ததும் காதல் கொல்ல்ல்கிறார்! ஜெயம் ரவியோ நிறைய கேர்ள் பிரண்ட்ஸ் உள்ள பேர்வழி. யாரும் தன்னைக் காதலிக்கிறாங்கன்னு தெரிஞ்சா ஓடிப் போயிடற ஆளு. 

அப்படிப்பட்ட ஆளை ஃப்ரெஷ் ஹன்சிகா எப்படிக் காதல்ல விழவைக்காருன்னு மொக்கைத்தனமாச் சொல்றாங்க. இடைவேளை வரைக்கும் ஜெயம்ரவிக்கு ஹன்சிகா காதல் உறைக்கவே இல்லை. கெக்கேபிக்கே-ன்னு பழகிட்டு கிளம்பி இந்தியா போயிடுறாரு. சரி, இண்டர்வெல்லுக்கு அப்புறம் கதை இந்தியாவில நடக்கும்னு எதிர்பார்த்தா..ம்ஹூம்..ஒரு வருடத்திற்குப் பிறகு --ன்னு போட்டுட்டு, அடுத்த வெகேசனுக்கு ரவி திரும்ப வர்றாரு. திரும்ப ஹன்சிகாவோட காதல் அட்டாக் தொடருது..உஸ்..முடியலை.
எங்கேயும் காதல்-னு தலைப்புலேயே காதல் பொங்கும்போது, படத்துல எப்படி இருக்கணும்..செத்தவன் கையில வெத்தலை பாக்கு கொடுத்தமாதிரி ஆகிடுச்சு. இந்த மாதிரிக் காதல் கதைகளில் கதாநாயகன் அல்லது கதாநாயகியோடு. ரசிகர்கள் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வைப்பது அவசியம். ஆனால் நேட்டிவிட்டியே இல்லாமல் பாரீஸ்-பிஸினஸ்மேன் என படம் நகர்கையில் யார் வீட்டு எழவோ-ன்னு படம் பார்க்க வந்தவங்கள்லாம் உட்கார்ந்திருக்காங்க.

ஜெயம்ரவி அழகா இருக்கார். பிரபுதேவா படத்து ஹீரோக்கள் மாதிரியே நல்லா டான்ஸும் குறும்பும் பன்றாரு. அவர் வேலையை கரெக்டாத் தான் பண்றாரு. ஆனாலும் ஜெயம்ரவியை வெறும்ரவியா ஆக்கிப்புட்டாங்க.

காமெடிக்கு ராஜூ சுந்தரம்..எப்படி இருந்திருக்கும்னு நீங்களே யோசிச்சுக்கோங்க. உண்மையிலேயே நல்ல காமெடி பிட்ஸ்..ஆனால் ராஜூ கொடுக்கிற எக்ஸ்பிரசன்ஸ்ல எரிச்சல்தான் வருது. ஹன்சிகா அப்பாவா, டிடெக்டிவ்வா சுமன். ’ஒரு டிடெக்டிவ்வா ஜெயம்ரவியின் லீலைகளை கண்டுபிடிக்கிற அப்பா-அந்த ஜெயம்ரவியையே லவ் பண்ற மகள்’-இப்படித் தான் புரடியூசர்கிட்ட பிரபுதேவா கதை சொல்லி இருக்கணும்..நல்ல நாட் தான். அந்த சுமன் கேரக்டரை டெவலப் பண்ணியிருந்தாக்கூட படம் தேறி இருக்கும். அதையும் மொக்கை ஆக்கிட்டாங்க.
ஆனால் நிறைய சுவாரஸ்யமான ‘பிரபுதேவா டச்சிங்’ சீன்கள் படத்துல இருக்கு. அதை மட்டும் டிவி கிளிப்பிங்ஸ்ல பார்த்தா நிச்சயம் ரசிக்கிற மாதிரியே இருக்கும். பணத்தோட அருமையை ஹன்சிகா ரவிக்கு உணர்த்த முயற்சி பண்ற சீன் ஒரு உதாரணம். ஆனால் படமே நகராம ஆணி..இல்லை ஆப்பு அடிச்ச மாதிரி நிக்குது!

படத்துக்குப் பிளஸ் பாயிண்ட் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு. கண்ணில் ஒத்திக்கொள்ளலாம் போன்று பாரீஸ் அழகை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார். அப்புறம் நம்ம ஹாரீஸ் ஜெயராஜ்..பாவம், அவர் பாட்டை அவரே ரீமிக்ஸ் பண்ண மாதிரிப் பாடல்கள்..ஆனாலும் திகுதிகு போன்ற சில பாடல்கள் தேறுகின்றன. 

வள்ளியே..சக்கரவள்ளியே பாடல் கொரியோகிராபி அமர்க்களம். ஃபாரினர்ஸ் நம்ம ஹன்சியைப் பார்த்துப் பாடற மாதிரி எடுத்திருக்காங்க.(அப்போ, அவங்க கூடயும் நாம போட்டி போடணுமோ!) மைக்கேல் ஜாக்சனின் பீட்டையும் நல்லா யூஸ் பண்ணி இருக்கார் ஹாரிஸ் ஜெயராஜ். 
படம் மொக்கையானாலும் கொடுத்த காசு வீண் போகாம, நம்மைக் காப்பாத்துறது நமது தங்கத்தலைவி..ஹன்சிகா தான்!..அட, அட அட..அவங்க கண்ணை மூடிக்கிட்டு குழந்தை மாதிரி சிரிக்கிற சிரிப்பென்ன..ஜோதிகா மாதிரி கொடுக்கிற எக்ஸ்பிரசன்ஸ் என்ன..அவங்களோட காஸ்ட்யூம்ஸ் என்ன..சிரிச்சுக்கிட்டே டான்ஸ் ஆடுற அழகென்ன..பாட்டு சீன்ல காட்டுற தாராளம் என்ன..என்ன..என்ன..என்ன..என்ன..என்ன! படத்துலயே ஒரு சீன்ல தான்(வள்ளி பாட்டு) சேலை கட்டி வர்றாங்க. சும்மா தியேட்டரே அதிருது!

ஏற்கனவே மாப்பிள்ளையால் நொந்தோம். அப்பவும் ஹன்சி தான் காப்பாத்துச்சு.’படத்துக்கு கதை கண்ராவில்லாம் எதுக்கு..ஹன்சி போதும்’னு தான் நாம நினைக்கோம். ஆனா, எல்லாரும் நம்மளை மாதிரி நல்லவங்க இல்லையே!

ஒரு தொலைக்காட்சி நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட சன் டிவி, ஒரு சினிமாத் தயாரிப்பு/விநியோக நிறுவனமாக இன்னும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை. அவர்கள் படங்களை தேர்ந்தெடுக்கும் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. இன்று ஸ்க்ரீனில் சன் பிக்சர்ஸ் என்று வரவுமே, பின்னால் அமர்ந்திருந்தவர்கள் ‘அய்யோ, இவங்க படமா’ என்று கத்தினார்கள். அது சரி தான் என்று இந்தப் படம் நிரூபித்து விட்டது. 

எங்கேயும் காதல் - ’சன் பிக்சர்ஸ் படம்’

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

49 comments:

  1. ஜெயம் ரவின்ர படம் என்டாலே கொஞ்சம் ஆர்வமா பார்ப்பான்.. அப்போ இது பார்த்தும் பிரியோசனம் இல்லை என்கிறீங்க..அவ்வ்வ்............)

    ReplyDelete
  2. ஐ வட எனக்கா ))))

    ReplyDelete
  3. Dakkalti maathiri thaan padamumaa? He He...

    ReplyDelete
  4. @கந்தசாமி.வடையைத் தட்டிச் சென்ற கந்தசாமிக்கு பாராட்டுகள்!

    ReplyDelete
  5. @டக்கால்டி//Kanthasami ate vadai...So sad...// உங்களுக்கு அல்வா!..அதுசரி, என்னமோ திருந்திட்ட மாதிரி விமர்சனம் பதிவுல கமெண்ட் போட்டீங்க?

    ReplyDelete
  6. அதுசரி, என்னமோ திருந்திட்ட மாதிரி விமர்சனம் பதிவுல கமெண்ட் போட்டீங்க?//

    I only said I ll try to reduce...not like i ll change completely...Its like Politicians statement...So Dont remember me so often

    ReplyDelete
  7. .அதுசரி, என்னமோ திருந்திட்ட மாதிரி விமர்சனம் பதிவுல கமெண்ட் போட்டீங்க?

    Athu sari naan enna thappu pannen thiruntharathukku...
    All my posts are not copied from anywhere...I am enjoying commenting in my friends blog...

    ReplyDelete
  8. //ஸ்க்ரீனில் சன் பிக்சர்ஸ் என்று வரவுமே, பின்னால் அமர்ந்திருந்தவர்கள் ‘அய்யோ, இவங்க படமா’ என்று கத்தினார்கள். அது சரி தான் என்று இந்தப் படம் நிரூபித்து விட்டது. ///

    ha ha ha

    ReplyDelete
  9. மாப்ள ஜொள்ளோட சேர்ந்த மொக்கையோ ஹிஹி!

    ReplyDelete
  10. இப்பிடி ஒரு படம் எடுத்தாங்கன்னே இன்னிக்குதான் பாஸ் தெரியும்! :-)

    //பாட்டு சீன்ல காட்டுற தாராளம் என்ன..என்ன..என்ன..என்ன..என்ன..என்ன!//
    ஏண்ணே ஏன் ஏன் ஏன்? வேணாம்ணே! :-)

    ReplyDelete
  11. நீங்க விட்ட ஜொள்ளுல பதிவே ஜதஜதன்னு இருக்கு போங்க!!

    ReplyDelete
  12. ஆனால் நேட்டிவிட்டியே இல்லாமல் பாரீஸ்-பிஸினஸ்மேன் என படம் நகர்கையில் யார் வீட்டு எழவோ-ன்னு படம் பார்க்க வந்தவங்கள்லாம் உட்கார்ந்திருக்காங்க.


    .....ஹா,ஹா,ஹா,ஹா.....கலகலப்பான விமர்சனம்ங்க....

    ReplyDelete
  13. அதற்குள் பார்த்தாச்சா??

    ReplyDelete
  14. சன் டி.வி. என்பது தினத்தந்தி மாதிரி. மக்கள் ஒரு லெவலுக்கு மேல யோசிச்சா அவங்களுக்கு பிடிக்காது. அவங்க படங்களும் அப்படித்தான். ஆனால் கமர்சியல் படம் எடுப்பதிலும் ஒரு ரசனை வேண்டும். மக்களை தவறாக கணித்து வைத்து இருக்கிறார்கள்.

    ReplyDelete
  15. படத்தின் ட்ரைலர் பாக்கும்போது புண்ணியவதி ஹன்சிகா டப்பிங்குக்கு வாய் அசைச்ச அழகுக்கே நான் படம் போகாம இருந்துட்டேன்.!!

    ReplyDelete
  16. //இன்று ஸ்க்ரீனில் சன் பிக்சர்ஸ் என்று வரவுமே, பின்னால் அமர்ந்திருந்தவர்கள் ‘அய்யோ, இவங்க படமா’ என்று கத்தினார்கள். அது சரி தான் என்று இந்தப் படம் நிரூபித்து விட்டது. //
    அப்படிப் போடு!

    ReplyDelete
  17. படிச்சிதான் பார்ப்போமே என்று உங்களுடைய இந்த விமர்சனத்தை(சினிமா) படிக்க வந்தேன். விமர்சனம் அருமையாகவும், கலகலப்பாகவும் இருந்தது. வாழ்த்துக்கள்.

    அருமை.....அருமை.....அருமை.............

    ReplyDelete
  18. @பாரத்... பாரதி...ஹா..ஹாவுக்கு நன்றி பாரதி!

    ReplyDelete
  19. @விக்கி உலகம்மொக்கையோட சேர்ந்த ஜொள்ளு!

    ReplyDelete
  20. @ஜீ...//ஏண்ணே ஏன் ஏன் ஏன்? வேணாம்ணே! :-)// தம்பி, எச்சரிக்கைக்கு நன்றி!

    ReplyDelete
  21. @பலே பிரபு//நீங்க விட்ட ஜொள்ளுல பதிவே ஜதஜதன்னு இருக்கு போங்க!!// ஹி..ஹி..பாராட்டுக்கு நன்றி பிரபு!

    ReplyDelete
  22. @Chitra//கலகலப்பான விமர்சனம்ங்க...// நன்றிக்கா.

    ReplyDelete
  23. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)//eppayaa padam paarththa?// இங்க நேத்து நைட்டே படம் ரிலீஸ் ஆயிடுச்சு மக்கா!

    ReplyDelete
  24. @அமுதா கிருஷ்ணா//அதற்குள் பார்த்தாச்சா??// பின்னே, பதிவர்னா சும்மாவாக்கா?

    ReplyDelete
  25. @! சிவகுமார் !//சன் டி.வி. என்பது தினத்தந்தி மாதிரி. மக்கள் ஒரு லெவலுக்கு மேல யோசிச்சா அவங்களுக்கு பிடிக்காது. அவங்க படங்களும் அப்படித்தான். ஆனால் கமர்சியல் படம் எடுப்பதிலும் ஒரு ரசனை வேண்டும். மக்களை தவறாக கணித்து வைத்து இருக்கிறார்கள்.// அருமையான பின்னூட்டம் சிவா!

    ReplyDelete
  26. @! சிவகுமார் !//புண்ணியவதி ஹன்சிகா டப்பிங்குக்கு வாய் அசைச்ச அழகுக்கே நான் படம் போகாம இருந்துட்டேன்.!!// மகா மோசமான பின்னூட்டம்..தலைவியைவே தப்பாச் சொல்றீங்களா...உங்க கூட டூ நானு!

    ReplyDelete
  27. @THOPPITHOPPIரொம்ப பிஸியா தொப்பி? ஆளையே காணோம்...உங்களுக்கே சினிமா விமர்சனம் புடிச்சிருக்குன்னா..நல்லாத் தான் எழுதுறேன் போலிருக்கே!

    ReplyDelete
  28. @டக்கால்டி//Athu sari naan enna thappu pannen thiruntharathukku...// இதை அப்பவே கேட்டிருக்கலாம்..நான்கூட சங்கத்துல இருந்து விலகிட்டீங்களோன்னு பயந்துட்டேன்!

    ReplyDelete
  29. சன் பிக்சர்ஸ் படம்னு தெரிஞ்சும் மொத நாள் போய் பார்த்து விமர்சனம் எழுதும் உங்கள் தியாக உள்ளத்தை நான் மெச்சுகிறேன்.

    என் இனமடா நீ...

    ReplyDelete
  30. @பாலாஎன்ன செய்ய பாலா..பதிவர்னா இப்படிப் பல தியாகங்களைப் பண்ணத்தானே வேண்டியிருக்கு!

    ReplyDelete
  31. எங்கேயும் (செங்கோவி) காதல் விமர்சனம் ஓகே.
    சன் டிவியிலேயே ரிலீஸ் பண்ணி இருக்கலாம்
    vacation வேற காலேஜ் ஜோடிங்க கூட வராது போலிருக்கே !

    ReplyDelete
  32. @ஆகாயமனிதன்..//எங்கேயும் (செங்கோவி) காதல் விமர்சனம் ஓகே// செங்கோவியை ஏங்க உள்ள நுழைச்சிருக்கீங்க?..குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்காதீங்க பாஸ்!

    ReplyDelete
  33. >>படம் மொக்கையானாலும் கொடுத்த காசு வீண் போகாம, நம்மைக் காப்பாத்துறது நமது தங்கத்தலைவி..ஃப்ரெஷ் பீஸ் ஹன்சிகா தான்!

    ஹூம்.. எதுக்கெல்லாமோ மைனஸ் ஓட்டு போடறாங்க.. ஆனா அண்ணன் என்ன எழுதுனாலும் யாரும் கண்டுக்க மாட்டேங்கறாங்க..

    ReplyDelete
  34. சிறப்பான, நகைச்சுவையான விமர்சனம் அண்ணே. சன் பிக்ச்சர்சுக்கு ரெட் ஜயன்ட், கிளௌட் நைன் போன்று சினிமா அறிவு இல்லை. மாறன் சகோதரர்களுக்குப் பணம் குவிப்பது, செலவழித்துக் குப்பை படங்கள் எடுப்பது தவிர வேறு எதுவும் தெரியாது போலிருக்கிறது.

    ReplyDelete
  35. @சி.பி.செந்தில்குமார்//ஆனா அண்ணன் என்ன எழுதுனாலும் யாரும் கண்டுக்க மாட்டேங்கறாங்க..// நான் அதுக்குச் சரிப்பட்டு வர மாட்டேன்னு அவங்களுக்குத் தெரியும்.

    ReplyDelete
  36. @Jagannathஉண்மை தான் ஜெகன்..சன்னின் படங்களை விட ரெட்/கிளவுட் படங்கள் நல்லா இருக்கு!

    ReplyDelete
  37. படம் ஊத்திக்குமோ....

    ReplyDelete
  38. அந்த ரெண்டாவது, மூணாவது படங்கள் ஹி ஹி ஹி ஹி....

    ReplyDelete
  39. @MANO நாஞ்சில் மனோஅண்ணே, நீங்க பெரியவங்க..எனக்கு ஈகுவலா ஜொள்ளு விடலாமாண்ணே?

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. " பிரபுதேவா-ஜெயம்ரவி காம்பினேசனில் வரும் இரண்டாவது படம்"

    Do you mean the first one was "something something unakkum enakkum" ? But that was "Xeroxed" by Raja isnt it? :P

    ReplyDelete
  42. @வினையூக்கிஆமா பாஸ், சம்திங் பிரபுதேவாவின் படத்தின் ஜெராக்ஸ் காப்பி தான்..இப்போ அதே பிரபுதேவா ஜெயம்ரவியுடன் சேர்வதால், நிறைய எதிர்பார்த்தேன்..அதனால்தான் ’இரண்டாவது’ என்றேன்!

    ReplyDelete
  43. எங்கேயும் காதல் போல சரியான மொக்கை படம் கடந்த ஐந்து வருடங்களில் வந்தது இல்லை என்றுதான் சொல்லணும். அந்த புள்ள ஹன்சிகா மட்டும் இல்லன்னா அங்கேயே வெட்டு குத்து நடந்துருக்கும். வயிறு எரியுது... யாரோ காசுல, என்னமோ படம் எடுத்திருக்காங்க...

    ReplyDelete
  44. @maranஒய் ப்ளட்..சேம் ப்ளட்!......ஏண்ணே, சேதாரம் ஜாஸ்தி ஆயிடுச்சோ?

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.