Sunday, May 8, 2011

அம்போ ஆன ராசாவும் அம்பலப்பட்டுப் போன கலைஞரும்

“ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆ.ராசாவே முழுப்பொறுப்பு” என்று வாதாடினார் ராம் ஜெத்மலானி

கனிமொழி கைது செய்யப்படவில்லை. விசாரணை முடிந்ததும், தன் கணவருடன் காரில் ஏறிப் பறந்தார் கனிமொழி!

- என்ற இரு கெட்ட செய்திகளும் இந்நேரம் ராசாவை எட்டி இருக்கும். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதும் அவருக்குப் புரிந்திருக்கும்.
வெறும் விசாரணைக்கு மட்டுமே அழைக்கிறார்கள் என்று நினைத்துப் போன ராசாவை கைது செய்து, இவ்வளவு நாட்கள் உள்ளே வைப்பார்கள் என்று ராசாவே எதிர்பார்த்திருக்க மாட்டார். எப்படியும் கட்சி கை கொடுக்கும் என்று நம்பி இருந்தார். தேர்தல்வரை பொறுத்திருக்கும்படியும், பின்னர் கட்சி ராசா விஷயத்தில் தீவிரமாக இறங்கும் என்றும் ராசாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களது தீவிரம் ‘ராசாவை நிரந்தரமாக உள்ளே வைப்பதற்கே’ என்பது நன்றாகத் தெரிந்து விட்டது இப்போது.

கலைஞரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. சமீபகால அரசியல் வரலாற்றில் இவ்வளவு மோசமான நிலைமை வெறெந்தத் தலைவருக்கும் ஏற்பட்டதில்லை.

அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு, கட்சியை தன் வசப்படுத்திய சாமர்த்தியம், வெற்றிகரமான கதை வசனகர்த்தாவாக, பகுத்தறிவுவாதியாக தன்னை தனது ஆரம்பக்காலங்களில் நிலைநிறுத்திக்கொண்டவர் கலைஞர். திமுக தொண்டர்களுக்கு அதிமுக தொண்டர்களை விட நாம் உயர்ந்தவர்கள், கலைஞர் என்ற சாமர்த்தியசாலியின் பின்னால் நிற்கும் அறிவுஜீவிகள் என்ற எண்ணம் எப்போதும் உண்டு. 

தமிழின் மீதும் தமிழினத்தின் மீதும் அக்கறை கொண்டவர் என்பதால் திமுக தொண்டர்களால் ‘தமிழினத் தலைவர்’ என்றும் அழைக்கப்பட்டார். அதனை பிறகட்சியினரும் பெரிய தவறென்று சொன்னதில்லை...ஈழப்படுகொலைக்கு முன்பு வரை!

தமிழ்ப்பற்று, ஈழ ஆதரவு நிலைப்பாடு, சாணக்கியத்தனம், ஆரிய-திராவிட வாதம், விஞ்சானப்பூர்வமாக ஊழல் செய்யும் திறமை ஆகியவற்றை அணிகலன்களாகக் கொண்ட கலைஞரின் வீழ்ச்சி, அவரது வாரிசுகளின் அரசியல் பிரவேசத்தால் ஆரம்பித்தது.அவரது மோசமான அரசியல் வாரிசாக கனிமொழி உருவெடுத்து வந்தார்.

ஆ.ராசா தான் அமைச்சராக வேண்டும் என்று அடம்பிடித்து தொலைத்தொடர்புத் துறையை வாங்கினார். தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் அரங்கேற்றப்பட்டது. அன்றிலிருந்து கலைஞரின் அணிகலன்கள் கழன்று விழ ஆரம்பித்தன.

கூட ரெண்டு ஓட்டு விழுமென்றால், குட்டிக்கரணம் போடவே தயங்காத கலைஞருக்கு ஈழப்படுகொலை நல்ல வாய்ப்பாக வந்தது. பழைய கலைஞர் என்றால் புகுந்து விளையாடி இருப்பார். ஆனால் ஸ்பெக்ட்ரம் என்ற பேய் பிடித்த பிறகு, காங்கிரஸை மீறி என்ன செய்துவிட முடியும்? 

பலவருடங்களாகக் கட்டி எழுப்பி வந்த ‘தமிழினத் தலைவர்’ இமேஜை மூன்று மணி நேர சூப்பர் ஃபாஸ்ட் உண்ணாவிரத்த்தில் தொலைத்தார்.

ராசாவின் மீது குற்றச்சாட்டு சொல்லப்பட்டபோது, இது ஆரிய சதி என்றும், தலித் என்பதால் ராசா குறிவைக்கப்படுவதாகவும் கலைஞர் சொன்னார். இன்று கலைஞரால் நியமிக்கப்பட்ட வக்கீல் ‘திராவிடச் செம்மல்’ ராம் ஜெத்மலானி சொல்கிறார் ‘தலித் ராசாவே எல்லாவற்றுக்கும் காரணம்’ என்று! இபோது தலித் ராசாவைக் குறிவைப்பது யார்? கலைஞர் எப்போது ஆரியர் ஆனார்? இவ்வள்வு வெளிப்படையாக கலைஞர் கீழிறங்குவார் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.

ராசா கைதை எதிர்த்து திமுக நிறைவேற்றிய தீர்மானத்தில் “ராசா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அதற்குப் பிறகு கட்சி தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருக்கிறார். ஆனால் ஒருவர் கைது செய்யப்பட்டு விட்ட காரணத்தாலேயே அவர் குற்றவாளியாக ஆகி விட மாட்டார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.” என்று சொன்னார்கள். இப்போது தயவு தாட்சண்யம் காணாமல் போய் உள்ளதே.அப்படியென்றால்...

தனது வாழ்வின் கடைசிக்கட்டத்தில் உள்ள ஒரு தலைவர், தனது தைரியத்தையும் கொள்கைகளையும் இழந்துவிட்டு, அம்பலப்பட்டு நிற்பதைப் பார்க்கும்போது நமக்கு பரிதாபமே மேலிடுகிறது.

கட்சியா, கனிமொழியா என்பதே தற்போதைய கேள்வி. கனிமொழியே முக்கியம் என்று கலைஞர் முடிவெடுத்துவிட்டது துரதிர்ஷ்டமே. கனிமொழியைக் கைகழுவுவதே கட்சி இழந்த பெயரை மீட்டுத்தர உதவும். அதை கலைஞரின் காலத்திற்குப் பின் ஸ்டாலினும் அழகிரியும் செய்வர்.

இப்போது கனிமொழி மீதான வழக்கு எப்படிப் போகும் என்பது மே13ம் தேதி வரும் ரிசல்ட்டைப் பொறுத்தது. திமுக கூட்டணி வென்றால், காங்கிரசின் கூட்டணி ஆட்சி என்ற மிரட்டலுக்கு அடிபணிந்தால், அம்பானியைப் போல் கனிமொழியும் கைது செய்யப்படாமல் வெளியில் உலவலாம்.

இல்லையென்றால், கனிமொழி மீது சிபிஐயின் பிடி இறுகும். விசாரணைக்காக கொஞ்ச நாள் உள்ளே போக வேண்டி வரலாம். அதன்பிறகு என்ன ஆகும் என்பதைச் சொல்ல ஜோதிட ஞானம் எல்லாம் தேவையில்லை. நமது  பத்திரிக்கைகள் மென்று முழுங்கிச் சொல்லும் செய்தி ஒன்றே போதும்.

மே 11ம் தேதி சிபிஐ கோர்ட்டில் பிறந்த நாள் பரிசு வழக்கில்   புரட்சித்தலைவி ஆஜராகத் தேவையில்லை-ஐகோர்ட் உத்தரவு’. 1992ஆம் ஆண்டில் அடித்த கொள்ளைக்கே இன்னும் முக்கி முக்கி வழக்கு நடந்து வருகிறது. 

எனவே 2031ஆம் ஆண்டு இப்படிச் செய்தி வரலாம்: ‘மே14 சிபிஐ வழக்கில் கனிமொழி ஆஜரானார். விசாரணை முடிந்த பின் கணவர் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் காரில் ஏறிப் பறந்தார்.

அப்போ ராசாவும் சரத்குமார் ரெட்டியும்? அம்போ தான்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

45 comments:

  1. //“ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆ.ராசாவே முழுப்பொறுப்பு” என்று வாதாடினார் ராம் ஜெத்மலானி//

    ராஜா தலித் என்ற விஷயம் மறந்திருக்கும்.
    ராம் ஜெட்மலானி ஆரியர் என்பதும் இப்போது மறந்துவிட்டிருக்கும்.

    ReplyDelete
  2. //ஸ்பெக்ட்ரம் என்ற பேய் பிடித்த பிறகு, காங்கிரஸை மீறி என்ன செய்துவிட முடியும்? ///'

    அதிமுக ஆட்சி வந்துவிட்டால் இன்னும் சிரமமாக போய்விடும் கலைஞருக்கு.
    அரசியல் சாணக்கியன் என்று பெயர் வாங்கியவர்க்கு இது மிக கடினமாக காலகட்டமாக மாறிவிட்டது உண்மைதான்.

    ReplyDelete
  3. @பாரத்... பாரதி...அவருக்கு இப்போது நினைவில் இருப்பது திகார் ஜெயில் மட்டும் தான்..கருத்துக்கு நன்றி பாரதி!

    ReplyDelete
  4. @MANO நாஞ்சில் மனோசீரியஸ் பதிவுங்கவும் அண்ணன் அடங்கிட்டாரே..நன்றிண்ணே!

    ReplyDelete
  5. @பாரத்... பாரதி...//அதிமுக ஆட்சி வந்துவிட்டால் இன்னும் சிரமமாக போய்விடும் கலைஞருக்கு.// அதனால்தானே விவரமாக மே14ம் தேதிக்கு முன் ஜாமீன் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்கள்!

    ReplyDelete
  6. ////தமிழின் மீதும் தமிழினத்தின் மீதும் அக்கறை கொண்டவர் என்பதால் திமுக தொண்டர்களால் ‘தமிழினத் தலைவர்’ என்றும் அழைக்கப்பட்டார்.//// அதெல்லாம் தமிழன்ர தலைய மொட்டையடிச்சு கட்சி வளர்க்க

    ReplyDelete
  7. @கந்தசாமி.//அதெல்லாம் தமிழன்ர தலைய மொட்டையடிச்சு கட்சி வளர்க்க// மொட்டையடித்தவரைக்கும் பெரிய பிரச்சினை இல்லை..தமிழனின் தலையை எடுக்கத் துணை போனது தான் பெரும் தவறு.

    ReplyDelete
  8. தானே கேள்வி கேட்டு பதில் நிரப்பிக்கொள்ளும் தலைவர் பின்னால் நிற்கும் தொண்டர்கள்....இந்த விஷயத்த விட்டுட்டீரே.......ஹிஹி!.........வயசானால் முன் ஜென்மம் நினைவுக்கு வருமாமே.......அதுனாலதான் ஆரிய திராவிட ஆதரவு நிலையா இருக்கும் யாருக்கு தெரியும்......முட்டாப்பசங்க மக்கள்ன்னு அந்த பழம் பெருச்சாளிக்கு மட்டுமே தெரியும் ஹிஹி!

    ReplyDelete
  9. ஆம்! நமது நீதி பரிபாலனம் தீர்ப்புச் சொல்லவும்,தண்டனை கொடுக்கவும் ஆன‌
    அமைப்பு இல்லை. குற்றவாளிகளுக்குச் சாதகமாகவும், இருக்கும் நிலையில் தேக்கி வைத்து, பாதிக்கப்பட்டவனை சலிப்படைந்து தானாக வெளியேற்றவும் செய்ய உள்ள ஒரு மூடத்தனமான, தந்திரமான எந்திரம். 'நாயைக்கொல்ல‌ வேண்டுமானாலும் அதன் மேல் குற்றம் நிருபிக்க வேண்டும்' என்றும், '100 குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது'என்றெல்லாம் வாய்ப்பந்தல் போட்ட வெள்ளையன் இன்றளவும் நீதிமன்ற‌ நடைமுறைகள் மூலம் நம்மை ஆண்டு கொண்டே இருக்கிறான்.நன்றாக எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
  10. கனிமொழி கைது செய்யப்படவில்லை. விசாரணை முடிந்ததும், தன் கணவருடன் காரில் ஏறிப் பறந்தார் கனிமொழி!//

    அப்போ, நாம நினைக்கிறதெல்லாம் நடக்காதா..
    ஹி..ஹி..

    ReplyDelete
  11. மே 13 வ்ரை பொறுத்திருப்போம், இந்த தில்லு முல்லுகளைப் பார்ப்பதற்காக.

    ReplyDelete
  12. //முக தொண்டர்களுக்கு அதிமுக தொண்டர்களை விட நாம் உயர்ந்தவர்கள், கலைஞர் என்ற சாமர்த்தியசாலியின் பின்னால் நிற்கும் அறிவுஜீவிகள் என்ற எண்ணம் எப்போதும் உண்டு.
    //

    இது என்ன கூத்து ... தி மு க காரனுங்க மாடு மேய்க்க .. அதுவும் எரும மாடு மேய்க்க கூட வேலைக்காகாதவனுங்கன்ணுல மக்கள் நினைசிகிட்டு இருக்காங்க.

    ReplyDelete
  13. @விக்கி உலகம்//தானே கேள்வி கேட்டு பதில் நிரப்பிக்கொள்ளும் தலைவர் பின்னால் நிற்கும் தொண்டர்கள்// பின்னே, அடுத்தவன் கேட்குற கேள்விக்குப் பதில் சொல்ல முடியலைன்னா என்ன செய்யறதாம்..

    ReplyDelete
  14. @kmr.krishnanபதவியில் உள்ளவனுக்கும் பணம் படைத்தவனுக்கும் நம் நீதிமுறையில் தனிச் சட்டமே உள்ளது போலும். வருகைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  15. @நிரூபன்//அப்போ, நாம நினைக்கிறதெல்லாம் நடக்காதா..// சகோ, அப்படி எல்லாம் நினைக்கக் கூடாது.

    ReplyDelete
  16. @அஹோரி//தி மு க காரனுங்க மாடு மேய்க்க .. அதுவும் எரும மாடு மேய்க்க கூட வேலைக்காகாதவனுங்கன்ணுல மக்கள் நினைசிகிட்டு இருக்காங்க.// நான் சொன்னது பழைய கலைஞர் பின்னாடி நின்ன பழைய கூட்டத்தை..அதிமுககாரங்க நடிகர்/நடிகை பின்னால் நிக்குறவங்க-ன்னு ஒரு இளக்காரம் அவங்ககிட்ட இருக்குறதைப் பார்த்திருக்கேன்..இப்போ காங்கிரஸ்கிட்ட கலைஞர் மண்டி போட்டப்புறம், நிலைமை வேற தான்..

    ReplyDelete
  17. 2031 ஆம் ஆண்டே தீர்ப்பு வந்துரும்னு நம்பறீங்களா?

    ReplyDelete
  18. //MANO நாஞ்சில் மனோ said...
    ரைட்டு....//

    “நாஞ்சில் மனோவும் 3G திருவிளையாடலும்”.....விரைவில்.

    ReplyDelete
  19. இந்திய உச்சநீதிமன்றமே... ஒரு தகிடுதத்தம் தான்... அது என்ன மே14 ? காங்கிரஸூக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைத்தால், பேரம் பேசுவார்களோ உச்சநீதிமன்றத்தின் துணையுடன்.

    ReplyDelete
  20. //அப்போ ராசாவும் சரத்குமார் ரெட்டியும்? அம்போ தான்!//
    அதேதான்!
    (வார இறுதி நாட்களில்-சனி,ஞாயிறு-மின்னஞ்சல் தவிர இண்டர்நெட்டில் வேறெதுவும் செய்வதில்லை.எனவே பதிவுகள் இல்லை,பின்னூட்டங்களும் இல்லை !மன்னிக்கவும்,)

    ReplyDelete
  21. பலவருடங்களாகக் கட்டி எழுப்பி வந்த ‘தமிழினத் தலைவர்’ இமேஜை மூன்று மணி நேர சூப்பர் ஃபாஸ்ட் உண்ணாவிரத்த்தில் தொலைத்தார்.///

    ஹி ஹி ஹி உண்மை உண்மை!!

    ReplyDelete
  22. //கூட ரெண்டு ஓட்டு விழுமென்றால், குட்டிக்கரணம் போடவே தயங்காத கலைஞருக்கு ஈழப்படுகொலை நல்ல வாய்ப்பாக வந்தது. பழைய கலைஞர் என்றால் புகுந்து விளையாடி இருப்பார். ஆனால் ஸ்பெக்ட்ரம் என்ற பேய் பிடித்த பிறகு, காங்கிரஸை மீறி என்ன செய்துவிட முடியும்? //

    இங்கே நீங்கள் மட்டுமல்ல,கலைஞரே தவறான கணிப்பு செய்தார் என்பேன்.பழைய கலைஞராகவே இருந்து செயல்பட்டிருந்திருந்தால் ஸ்பெக்டரம் பேய் பயந்து ஓடியிருக்கும்.தி.மு.கவின் எழுச்சிக்கு ஒரு ஆயுதமாக இந்திப்போராட்டமென்றால் தி.மு.கவின் வீழ்ச்சிக்கு ஈழப்போராட்டம் ஒரு காரணமென்பேன்.

    மக்கள் அங்கே கொத்துக்கொத்தாக சாகும் போது இவர்கள் ஸ்பெக்ட்ரம் பிடில் வாசித்துக் கொண்டிருந்திருந்தார்கள் என்பதை அறியும் போது வேதனையே மிஞ்சுகிறது.


    தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்களின் கோபமே ஸ்பெக்ட்ரம் நல்லா வேணும் இவங்களுக்கு என்கிற மனநிலையை உருவாக்கியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

    ReplyDelete
  23. //பலவருடங்களாகக் கட்டி எழுப்பி வந்த ‘தமிழினத் தலைவர்’ இமேஜை மூன்று மணி நேர சூப்பர் ஃபாஸ்ட் உண்ணாவிரத்த்தில் தொலைத்தார்//
    உண்மையாகவே தமிழினத் தலைவராக மாறுவதற்குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் அது! காமெடி பண்ணிக் கெடுத்துக் கொண்டார்!

    ReplyDelete
  24. Ramjedmilani didn't say that Raja commit a crime. He explained that what ever the decision he makes (whether it is a crime or not) he is responsible not Kani.

    I don't know why our bloggers are so ignorant about the law and blame DMK for this.

    In court of law you can't argue like movie.

    ReplyDelete
  25. @! சிவகுமார் ! //2031 ஆம் ஆண்டே தீர்ப்பு வந்துரும்னு நம்பறீங்களா? //2031ல் விசாரணைக்கு வருவாங்கன்னு தானே சொல்லி இருக்கேன்..

    ReplyDelete
  26. @raja//அது என்ன மே14 ? காங்கிரஸூக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைத்தால், பேரம் பேசுவார்களோ // சிபிஐயின் வேகமும் அதற்கேற்றாற் போல் குறையும்..

    ReplyDelete
  27. @சென்னை பித்தன்அதனால என்ன சார்..பரவாயில்லை.

    ReplyDelete
  28. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிநம்ம கடைப்பக்கமும் வந்த்துக்கு நன்றி ஓட்டை வடை!

    ReplyDelete
  29. @Prakash//He explained that what ever the decision he makes (whether it is a crime or not) he is responsible not Kani.// அண்ணே, இங்கிலிபீஸ்ல சொன்னாப்புல அர்த்தம் மாறிடுமா..ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா மட்டும்தான் எல்லா முடிவும் எடுத்தாரா? கனிமொழி ஒன்னுமே பண்ணலியா? நீரா ராடியாகிட்ட ராசா தான் மந்திரி ஆகணும்னு அடப்புடிச்சது யாரு? தமில்மையத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுத்த கம்பெனிங்ககிட்ட கோடிக்கணக்குல நிதி வாங்குனது யாரு? கலைஞர் டிவிக்கு திடீர்னு 214கோடி, ஏன் ஏலம் எடுத்த கம்பெனி கொடுத்துச்சு? கனிமொழி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுல ஒன்னுமே பண்ணாமலா இவ்வளவு ஆதாயம்? நீங்க உங்க கட்சியை சப்போர்ட் ப்ண்ண வேண்டியது தான்..ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்,,கூடவே இருந்து எல்லாம் பண்ணீட்டு, இப்போ எல்லா முடிவுக்கும் ராசா மட்டும் தான் பொறுப்புன்னு சொல்றது எந்த வித்ததுல சரின்னு நீங்க தான் சொல்லணும்..

    ReplyDelete
  30. நல்ல அலசல் செங்கோவி, ஆனால் இத்தனையும் தெரிந்தும் அவருக்கு வோட்டு போடுறவுங்கல என்னானு சொல்றது???>..

    எங்க சொந்த காரங்க ஆசிரியரா இருக்குறவுங்களே இவர் கொடுத்த சலுகைகளுக்காக இவருக்கு இஷ்டத்துக்கு சோம்பு அடிக்கிறாங்க... சரி சோம்பு வேணும்னா அடிச்சிட்டு போங்க ஆனால் இவளோ தப்பு பண்ணினதையும் கண்டுக்காம பேசுறதா பார்த்தால் கஷ்டமா இருக்கும்....

    இப்போ தமிழ் நாட்டில் அரசியல்வாதி கொள்ள அடிக்கிறான்னு சொன்ன கண்டுக்க மாட்டான், அவனுக்கு பழகி போச்சி, வோட்டுக்கு பணம் கொடுத்தாலும் கண்டுக்க மாட்டான், இப்போ இங்க எல்லா தப்புக்களுமே சரி நார்மல் தான் அப்டின்னு இந்த பாலா போன அரசியல்வாதிகள் மக்கள் மனதில் விதைத்து விட்டார்கள்..

    முன்னாடி எல்லாம் லஞ்ச கேஸ் ல பிடிபட்ட கேவலம் ஆனா இன்னைக்கு லஞ்சம் நல்ல கிடைக்கும்நே சில வேலைக்கு போணும்னு படிக்கிற ஆளுங்க வார ஆரம்பிச்சிட்டாங்க, லஞ்சம் வாங்குறதே ஒரு சாதாரண விஷயம் அதை தவிர்க்க முடியாது அப்டின்னு எல்லாம் நினைக்க ஆரம்பிசிட்டோம்...

    இந்த மொத்த எண்ணமும் மாற வேணும், சில நூறு அடித்தாலும் தண்டனை கடினமானதாக இருக்க வேண்டும், வெள்ளியணை வெளியேற்றியது போல இந்த கொல்லயர்களையும் வெளியேத்த வேணும்...

    காலம் மாறும் காட்சிகளும் மாறும்...

    இன்னும் நம்பிக்கையோட இருக்கும் சிலரில் ஒருவன்...

    ReplyDelete
  31. @RK நண்பன்..ஓட்டுக்குக் காசு கொடுத்து மக்களையும் ஊழலில் பார்ட்னர் ஆக்கிட்டாங்களே..அப்புறம் எப்படி மக்கள் இவங்களை ஒதுக்குவாங்க?

    ReplyDelete
  32. மிக தெளிவான விளக்கங்கள் செங்கோவி. கட்டுரை சிறப்பாக உள்ளது. கருணாநிதியை பற்றி சொல்லும்போதெல்லாம் ஏதோ ஒரு அருவெறுப்பு படர்வதை தடுக்க இயலவில்லை. இவர்கள் நம்புவது நமது நீதித்துறையின் காலத்தைத்தான். கால வெள்ளத்தில் இவையெல்லாம் அடித்துச்செல்லப்படும் என குருட்டு நம்பிக்கை.

    //கனிமொழியைக் கைகழுவுவதே கட்சி இழந்த பெயரை மீட்டுத்தர உதவும். அதை கலைஞரின் காலத்திற்குப் பின் ஸ்டாலினும் அழகிரியும் செய்வர்.//

    இது ஒன்றே வழி.

    ReplyDelete
  33. திடீரென ராசாவுக்காக இத்தனை பேர் மாய்ந்து மாய்ந்து பதிவெழுதுவதைப் பார்க்கும் போதுதான் ஒன்று மட்டும் புரிகிறது. கலைஞருக்கு வந்த திடீர் தலித் பாசம், இப்போது பதிவர்களுக்கும் தொற்றிக் கொண்டிருக்கிறது....ஏதோ உங்கள் புண்ணியத்திலாவது ஆண்டிமுத்து ராசா வெளியே வந்தால் சரிதான்...!!

    ReplyDelete
  34. @ரஹீம் கஸாலிஅது வழக்கமா நடக்குறது தானே..

    ReplyDelete
  35. @மு.சரவணக்குமார்//ஏதோ உங்கள் புண்ணியத்திலாவது ஆண்டிமுத்து ராசா வெளியே வந்தால் சரிதான்...!!// ராசா வெளில வரணும்னு யாரும் சொல்லலை பாஸ்..கூட்டாளியும் உள்ள போறது தானே நியாயம்னு சொல்றோம்..அவ்வளவு தான்.

    ReplyDelete
  36. @மு.சரவணக்குமார்ராசாவை தலித்னு சொல்றது, நேர்மையாக உழைக்கும் மக்களான தலித்களை அவமானப்படுத்தும் செயல்..ராசாவுக்கு ‘தலித் பாசம்’ இருந்துச்சா..தலித் முன்னேற்றத்துக்கு என்ன பண்ணார்னும் சொல்லி, எங்களைத் திருத்துங்களேன்.

    ReplyDelete
  37. @மு.சரவணக்குமார்//தன் தாயாரின் பேராசையின் விளைவை கனிமொழி அனுபவிக்கிறார். அவமானப் படுகிறார்.// இது நீங்க எழுதுன ட்வீட்டா சார்?..ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  38. @மு.சரவணக்குமார்சார், இப்போ தான் உங்க புரஃபைல் பார்த்தேன்..பங்குவணிகம் சரவணக்குமாரா நீங்க?..உங்க பதிவுகள் எனக்கு ரொம்ப உபயோகமா இருந்திருக்கு..அதுக்கு தனியா நன்றியைச் சொல்லிக்கிறேன்.

    ReplyDelete
  39. \\விசாரணை முடிந்ததும், தன் கணவருடன் காரில் ஏறிப் பறந்தார் கனிமொழி!\\ ஐயையோ அப்போ ராசா??????

    ReplyDelete
  40. \\கனிமொழியைக் கைகழுவுவதே கட்சி இழந்த பெயரை மீட்டுத்தர உதவும். அதை கலைஞரின் காலத்திற்குப் பின் ஸ்டாலினும் அழகிரியும் செய்வர்.\\ என்னது இழந்த பெயரா..???? உங்க தமாசுக்கு அளவே இல்லியா? இந்த மூஞ்சிக்கு எங்க நல்ல பேரு இருக்குன்னு சொல்லுங்க பாப்போம்? இந்தியாவுலேயே இவ்வளவு கேவலம்மான ஆட்சி யாராச்சும் பண்ணியிருப்பாங்கலான்னு தான் இவருக்கு பேரு இருக்கு. இவங்க மத்திய அமைச்சரவையில் வாங்கிய துறை அத்தனையிலும் பணத்தைத் தின்று கொழுத்தார்கள்ன்னு பேர் இருக்கு. மின் வெட்டுக்கு பேர் இருக்கு, மணல் கொல்லைக்கு பேர் இருக்கு. ச்பெற்றத்தில் ஒன்னேமுக்கால் லட்சம் கோடி வருமான இழப்பு பண்ணிய புண்ணியவான்கள் என்ற பேர் இருக்கு. தமிழ் நாட்டுக் கடனை ஒரு லட்சம் கொடியாக கொண்டு சென்றார்கள் என்று பேர் இருக்கு. இந்த பெயரை காப்பாத்த தகுதியான ஒரே ஆள், இவரோட வாரிசா? ம்ம்ம்... விளங்கிடும்.

    ReplyDelete
  41. @Jayadev Das//ஐயையோ அப்போ ராசா?// அம்போ தான்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.