Wednesday, May 18, 2011

பிரசவ நேரத்தில் கணவன் தேவையா?


எனக்கு பிரசவம் என்றால் பயம்.

என்னைப் பிரசவித்த கொஞ்ச நேரத்தில், என்னைக் கொஞ்சாமலே என் தாய் இறந்தார். அதுகூடக் காரணமாய் இருக்கலாம்.

சினிமாவில் கூட என்னால் பிரசவக் காட்சியைக் காண முடியாது. சிறு வயதில் இருந்தே, பிரசவக் காட்சி வந்ததென்றால் கண்ணையும் காதையும் நான் மூடிக் கொள்வது வழக்கம். கிம்டுகிக்-ன் படங்களை விடவும் கொடூரக் காட்சிகளைக் கொண்ட படம் ‘தாலாட்ட்டுக் கேட்குதம்மா’ தான். கதாநாயகியின் பிரசவ பயத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் அது. தெரியாமல் படம் பார்க்கப் போய்விட்டு, பாதியிலேயே ஓடி வந்தேன்.

திருமண வாழ்வில் நான் பயந்த விஷயமும் பிரசவம் தான். இதைத் தவிர்க்கவே முடியாதா என்று பலவாறு யோசித்திருக்கிறேன். ’நார்மல் டெலிவரியில் தான் ஆபத்து அதிகம், சிசேரியன் அப்படியல்ல’ என்று நானாகவே நினைத்துக் கொண்டேன். சிசேரியனுக்குப் பின் படுகின்ற கஷ்டங்களைப் பற்றி அப்போது எனக்குத் தெரியவில்லை. 

என் மனைவி கர்ப்பம் தரித்ததை அறிந்தபோது, சந்தோசமும் பயமும் சரி பாதியாக நின்றன.

ஆனால் என் மனைவி தைரியமானவர். நார்மல் டெலிவரி தான் என்பதில் பிடிவாதமாக இருந்தார். தினமும் வீட்டை குத்துக்காலிட்டு துடைப்பது, நடைப்பயிற்சி என்று நார்மல் டெலிவரிக்காகச் செய்ய வேண்டியவற்றை விடாமல் செய்து வந்தார்.
கூடவே ஒரு பயங்கரமான கோரிக்கையையும் வைத்தார். ஆம், பிரசவ நேரத்தில் நான் அருகில் இருக்க வேண்டும் என்றார். என்னால் அதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இதிலிருந்து எப்படியாவது தப்பி விடவேண்டும் என்றே முடிவு செய்தேன். ’பிள்ளை பெத்துக்கப் போறது அவங்க..பிரசவம் பார்க்கப் போறது டாக்டர். இடையில் நாம எதுக்கு’ என்று மனதிற்குள் நினைத்தபடியே சரி சரியென்று தலையாட்டி வைத்தேன்.

’மே இரண்டாவது வாரத்தில் பிரசவம் ஆகலாம்’ என்று டாக்டர் சொன்னார். ’அப்போ அந்த தேதியில் எங்காவது ஓடி விட வேண்டியது தான்’ என்று முடிவு செய்து ஒரு முக்கிய வேலை என்று சொல்லி விட்டு, கோவை போய்விட்டேன். ஆனாலும் அவர்கள் விடவில்லை. மறுநாளே ஃபோன் செய்து ’உடனே கிள்ம்பி வாங்க’ என்று கண்டிப்பான அழைப்பு வந்தது. வேறுவழியே இல்லாமல் ஊர் போய்ச் சேர்ந்தேன். 

முதல் நாளே வலி வர ஆரம்பித்து விட்டது. ‘வாங்க, உடனே ஆஸ்பத்திரி போவோம், என்றேன். அதற்கு ‘இந்த வலி போதாது. இன்னும் நல்லா வலிக்கணும். பொறுங்க’ என்று இரக்கமேயில்லாமல் அனுபவஸ்தர்கள் சொன்னார்கள். 

மறுநாள் காலையிலேயே கடுமையான வேதனை தங்கமணி முகத்தில் தெரிந்தது. வலிக்கிறதா என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ‘இப்பவாவது போவோம்..வாங்க..வாங்க’ என்று எல்லோரையும் அவசரப்படுத்தினேன்.

ஒரு வழியாக டாக்ஸிக்கு கால் செய்தோம். வந்தது. டிரைவர் ‘வண்டியைத் திருப்பி நிறுத்தவா’ என்றார். ’சரி, நிறுத்துங்க’ என்றேன். காரைத் திருப்பினால், பின் கண்ணாடியில் ‘யாமிருக்க பயமேன்’ எனும் முருகர் படம்!

கொஞ்சம் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. பிறகு ஆஸ்பத்திரிக்குச் சென்றோம்.     அஸ்பத்திரியை நெருங்க நெருங்க எனக்கு பயம் அதிகம் ஆகியது. ஆஸ்பத்திரியில் ஒரு ரூம் கொடுத்து ‘இன்னும் வலி வரணும். அதுவரைக்கும் இங்க வெயிட் பண்ணுங்க’ன்னு சொன்னாங்க. ‘இன்னுமா’ன்னு நடுங்கிப் போனேன்.

ஒரு வழியாக அடுத்த ஒரு மணி நேரத்தில் ‘பிரசவ அறைக்குள் அழைத்துப் போனார்கள். அதன் வாசலில் உள்ள பெஞ்சில் அமர்ந்திருந்தேன். இனி நம்மால் செய்ய முடிவதென்று ஏதுமில்லை என்பது புரிந்தது. திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என முருகரை வேண்டியபடியே அமர்ந்திருந்தேன்.

திடீரென உள்ளேயிருந்து ‘அம்மா’ என்ற அலறல் கேட்டது. எனக்கு கை கால் எல்லாம் நடுங்கி விட்டது. இனியும் நம்மால் தாங்க முடியாதென உணர்ந்தவனாக ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்து நின்று கொண்டேன். 

பிறகு மாமியார் ஓடி வந்தார். ‘மாப்ளே, குழந்தை பிறந்தாச்சு..சுகப்பிரசவம்’ என்று சொன்னார்.  அடுத்து அரைமணி நேரம் கழித்து குழந்தையை மட்டும் கொண்டு வந்தார்கள். ரோஸ் நிறத்தில் மிருதுவாக என் மகன். கையில் ஏந்திப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

திரும்ப குழந்தையை வாங்கிக் கொண்டு போனார்கள். ஒரு மணி நேரம் கழித்து என் மனைவியை அழைத்து வந்தார்கள். என்னைப் பார்த்ததும் தளர்ந்து போய்ச் சிரித்தார். எதுவும் சொல்ல முடியாமல் கை பிடித்து அழுத்தினேன். ‘இப்போ சந்தோசமா?’ என்றார். எனக்கு அழுகை வந்தது. எங்கள் வீட்டிலும் நல்ல படியாக ஒரு பிரசவம்!

சில நாட்கள் கழித்து ‘எதற்காக என்னை பிரசவத்தின் போது இருக்கச் சொல்லிக் கட்டாயப் படுத்தினாய்?’ என்று கேட்டேன்.

‘யார் இருந்தாலும் இல்லேன்னாலும், நீங்க இருந்தா மனசுக்குத் தெம்பா இருக்கும். நம்ம குழந்தை பிறந்த அந்த நிமிசச் சந்தோசத்தை கூட இருந்து பகிர்ந்துக்கணும்னும் நினைச்சேன். உள்ளே இருக்கும்போது கூட, வெளில இந்தப் புள்ளை காத்திருக்குதே.நல்லபடியாக் குழந்தையைப் பெத்துக்  காட்டணும்னு தோணுச்சு. வலியைத் தாங்க அதுவும் உதவியா இருந்துச்சு” என்றார்.

அலுவலக நண்பர் பயந்து கொண்டு, வேலையைக் காரணம் காட்டி, அவரது மனைவியின் பிரசவத்திற்குப் போகவில்லையாம். இன்று வரை அவருக்குத் திட்டு விழுகிறது. இப்போதெல்லாம் நண்பர்களுக்கு இந்த விஷயத்தில் நான் சொல்வது இது தான். ‘எப்படியும் பிரசவ அறைக்குள் கொஞ்ச நேரம் முன்பே அழைத்து விடுவார்கள். அவர்கள் உள்ளே நுழைந்த்தும், வெளியே ஓடிக் கொள்ளுங்கள். ஆனால் பயந்து கொண்டோ, அலட்சியத்தாலோ போகாமல் மட்டும் இருந்து விடாதீர்கள்.’

நமக்கு பெரிதாகத் தோன்றும் விஷயங்களெல்லாம் அவர்களுக்கு சாதாரணமாகத் தெரிகின்றது. நாம் கண்டுகொள்ளாமல் ஒதுக்கும் சிறு விஷயங்கள்கூட அவர்களுக்கு பெரிய சந்தோசத்தையும் மனத் திருப்தியையும் தருகின்றது.

கடுமையான வலியை எதிர்கொண்டு, ஏகப்பட்ட ரத்தத்தையும் இழந்து, ஏறக்குறைய உடலைச் சின்னாபின்னமாக்கி குழந்தையைப் பெற்றுக் கொடுப்பவர் பதிலுக்கு எதிர்பார்ப்பது நம் அருகாமையை மட்டும் தான். நம் வாழ்க்கைத் துணைக்காக அதைக் கூடச் செய்ய மாட்டோமா என்ன?

இன்று தான் அந்த நன்னாள். என் மகன் பால முருகனின் பிறந்த நாள்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

90 comments:

  1. //ஏறக்குறைய உடலைச் சின்னாபின்னமாக்கி குழந்தையைப் பெற்றுக் கொடுப்பவர் பதிலுக்கு எதிர்பார்ப்பது நம் அருகாமையை மட்டும் தான். நம் வாழ்க்கைத் துணைக்காக அதைக் கூடச் செய்ய மாட்டோமா என்ன?//
    நீங்க தைரியமான ஆளுதான்,என்னால் முடியாது.வாழ்த்துகள்.

    //இன்று தான் அந்த நன்னாள். என் மகன் பால முருகனின் பிறந்த நாள்!//
    பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. @வினையூக்கிசெல்வா மாமாவிற்கு பாலா சார்பில் நன்றி.

    ReplyDelete
  3. @சார்வாகன்நாந்தான் எப்படி எஸ்கேப் ஆகறதுன்னும் சொல்லி இருக்கேனே..

    ReplyDelete
  4. happy birthday to balamurugan. இங்கு (அமெரிக்காவில்) தொப்புள் கொடியை கட் செய்வது அப்பாவின் கடமையாக கருதப்படுவதால் அப்பா கண்டிப்பாக பிரசவ அறையில் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நான் என் மகன் பிறந்த போது பிரசவ அறையில் இருந்தேன்! அப்பப்பா.. பிரசவம் பெண்களுக்கு மறு பிறப்பு தான்!

    ReplyDelete
  5. @bandhu//அப்பா கண்டிப்பாக பிரசவ அறையில் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நான் என் மகன் பிறந்த போது பிரசவ அறையில் இருந்தேன்! // அய்யய்யோ...சொல்லாதீங்க சார்..போதும்..போதும்

    ReplyDelete
  6. காலம் மாறி போச்சு. இக்காலத்தில் கணவன் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  7. @தமிழ்வாசி - Prakashவழக்கம்போல தலைப்பை மட்டும் படிச்சீங்களாக்கும்?..கொஞ்சம் உள்ளயும் பாக்குறது..

    ReplyDelete
  8. இன்று தான் அந்த நன்னாள். என் மகன் பால முருகனின் பிறந்த நாள்!>>>>

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. @தமிழ்வாசி - Prakash//இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.// வாழ்த்துக்கும் கடைசி வரியையும் படிச்சதுக்கும் நன்றி பிரகாஷ்.

    ReplyDelete
  10. யார் இருந்தாலும் இல்லேன்னாலும், நீங்க இருந்தா மனசுக்குத் தெம்பா இருக்கும். நம்ம குழந்தை பிறந்த அந்த நிமிசச் சந்தோசத்தை கூட இருந்து பகிர்ந்துக்கணும்னும் நினைச்சேன். >>>>>>>

    நண்பா...இந்த வரிகளுக்கு தான் அந்த முதல் கமெண்டை பகிர்ந்தேன்.

    ReplyDelete
  11. @தமிழ்வாசி - Prakashஎனக்குத் தெரியாதா பிரகாஷ் பத்தி..சும்மா கிண்டல் பண்ணேன்.

    ReplyDelete
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாலமுருகனுக்கு :))

    ReplyDelete
  13. @கபீஷ்வாழ்த்துக்கு நன்றி கபீஷ்.

    ReplyDelete
  14. எனக்கு பிரசவம் என்றால் பயம்.//

    ஏன் உங்களுக்கா பிரவசம், உங்க அவாவுக்கு தானே;-))

    ReplyDelete
  15. என்னைப் பிரசவித்த கொஞ்ச நேரத்தில், என்னைக் கொஞ்சாமலே என் தாய் இறந்தார். அதுகூடக் காரணமாய் இருக்கலாம்.//

    சகோ, முதல் வரிகளைப் படித்து விட்டு காமெடி பண்ணுவோம் என்று நினைத்தால், அடுத்த வரிகளால் நெஞ்சை....உலுப்பி விட்டீர்களே

    ReplyDelete
  16. ’நார்மல் டெலிவரியில் தான் ஆபத்து அதிகம், சிசேரியன் அப்படியல்ல’ என்று நானாகவே நினைத்துக் கொண்டேன். சிசேரியனுக்குப் பின் படுகின்ற கஷ்டங்களைப் பற்றி அப்போது எனக்குத் தெரியவில்லை.//

    மருத்துவர்களின் தகவல்களின் படி, நார்மல் டிலிவரியின் மூலம், குழந்தை வெளியே வர முடியாமல் சிக்கி விட்டால் பெண் உறுப்பின் நரம்புகள் பாதிக்கப்பட்டு மரணமும் நேரலாம்.

    அதே போன்று சிசேரியனின் பின்னர், அழகாக இருக்கும் பெண்ணிற்கு தொப்பை விழும், சிசேரியனின் பின்னர் வயிற்றில் உள்ள தையல் அறுந்து விடும் எனும் மனப் பயத்தோடு நம்ம ஊர்ப் பெண்கள் இருப்பதால், வேலைகளைச் செய்யாது இருப்பதால்
    அவர்களின் உடல் எடை கூடித் தொப்பையும் அதிகமாகும்.

    ReplyDelete
  17. @நிரூபன்தையல் ஆறும்வரை குழந்தையைக் கூட தூக்க முடியாது சகோ
    அப்போது போடப்படும் ஊசியும் சிலருக்கு முதுகுத்தண்டில் பிரச்சினையை
    உண்டுபண்ணுகிறதுன்னு சொல்றாங்க.

    ReplyDelete
  18. @நிரூபன்//ஏன் உங்களுக்கா பிரவசம், உங்க அவாவுக்கு தானே;-))// அவங்க கூட தைரியமா இருந்தாங்கய்யா..

    ReplyDelete
  19. பிள்ளை பெத்துக்கப் போறது அவங்க..பிரசவம் பார்க்கப் போறது டாக்டர். இடையில் நாம எதுக்கு’ என்று மனதிற்குள் நினைத்தபடியே சரி சரியென்று தலையாட்டி வைத்தேன்.//

    உண்மையில் ஆண்களின் மேட்டர், ஒரு சில நிமிடங்களோடு முடிந்து விடும், அந்த நேர அலுப்பு, களைப்பு, தாபம், உணர்ச்சி இவற்றின் மூலமாக ஆண்கள் ஒரு குழந்தைக்குரிய ஊக்கத்தினைப் பெண்ணினுள் செலுத்தி விடுவார்கள். ஆனால் அதனைச் சுமக்கும் பெண்ணின் நிலமையோ பரிதாபம்.

    மணிக்கு இரண்டு மூன்று தடவைகள் நிறை மாசமாக இருக்கும் பெண்கள் சிறு நீர் கழிக்க வேண்டும், பின்னர் வாந்தி...இப்படிப் பல விடயங்கள்.

    குழந்தையின் தலை வெளியே வரக் கடினம் என்றால் _ _ _ _ வெட்டிப் பிள்ளை எடுத்த பெண்களின் நிலமை. சொற்களால் விபரிக்க முடியாது.

    ReplyDelete
  20. @நிரூபன்/ஆனால் அதனைச் சுமக்கும் பெண்ணின் நிலமையோ பரிதாபம்.// உண்மை தான் சகோ.

    ReplyDelete
  21. காரைத் திருப்பினால், பின் கண்ணாடியில் ‘யாமிருக்க பயமேன்’ எனும் முருகர் படம்!//

    அடப் பாவி, வேதனையான விசயம் எழுதும் போதும், நக்கலுக்கும் நையாண்டிக்கும் குறை வில்லை.

    ReplyDelete
  22. மாப்ளே, குழந்தை பிறந்தாச்சு..சுகப்பிரசவம்’ என்று சொன்னார்.//

    பொறுப்பான அப்பாவாக நீங்கள் எங்கள் பார்வைக்கு தெரியலையே சகோ,
    மன்மத லீலைகள் டயரிக் குறிப்பில் வரும் யூத் ஆகத் தெரியுறீங்க.

    ReplyDelete
  23. வெளில இந்தப் புள்ளை காத்திருக்குதே.நல்லபடியாக் குழந்தையைப் பெத்துக் காட்டணும்னு தோணுச்சு. வலியைத் தாங்க அதுவும் உதவியா இருந்துச்சு” என்றார்.//

    இவ் வரிகள் பாசப் பிணைப்பினைச் சான்றாக வைத்து ஆயிரம் அர்த்தங்களைச் சொல்கிறது.

    ReplyDelete
  24. ஆஹா........அழகான பையனாகப் பால முருகன் இருக்கிறார்(சீ...தூ, கண்ணூறு படப் போகுது)

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி பாலமுருகா.

    ReplyDelete
  25. நமக்கு பெரிதாகத் தோன்றும் விஷயங்களெல்லாம் அவர்களுக்கு சாதாரணமாகத் தெரிகின்றது. நாம் கண்டுகொள்ளாமல் ஒதுக்கும் சிறு விஷயங்கள்கூட அவர்களுக்கு பெரிய சந்தோசத்தையும் மனத் திருப்தியையும் தருகின்றது.//

    ம்...பெண்ணின் மனம் ஆழம் என்று கவிஞர்கள் கூறும் அதே வேளை, பெண்ணைப் பூமிக்கு நிகராக ஒப்பிட்டும் கூறுகிறார்களே! அதற்கான அர்த்தம் இது தான் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  26. @நிரூபன்//பொறுப்பான அப்பாவாக நீங்கள் எங்கள் பார்வைக்கு தெரியலையே சகோ,
    மன்மத லீலைகள் டயரிக் குறிப்பில் வரும் யூத் ஆகத் தெரியுறீங்க.// தம்பி, இது வேற வாய்..அது நாற வாய்!

    ReplyDelete
  27. @நிரூபன்//பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி பாலமுருகா.// நன்றி!

    ReplyDelete
  28. சகோ, உங்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். பிரவசத்தின் போது ஆண் அருகே இருந்தால் தான் பெண்ணின் வலியினைப் புரிந்து கொள்ள முடியும், வாழ்க்கையினை உணர்ந்து கொள்ள முடியும் என்பதனை ஏற்றுக் கொள்கிறேன், ஏனைய நண்பர்கள் இது தொடர்பாக என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்.

    ReplyDelete
  29. பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் மகனுக்கு வாழ்க வளமுடன்

    ReplyDelete
  30. Miga periya visayathai elithaga koori viteergal .birthday wishes to ur son

    ReplyDelete
  31. மாப்ள சரியா சொன்னய்யா..........
    நானும் இப்படித்தான் இருந்தேன் அன்று.......என்ன செய்வது கடைசி நேரத்துல சீசேரியன் பண்ணியே ஆகணும்னு மருத்துவர் சொன்னதால் தான் அப்படியாயிற்று....என்மனைவி என்னிடம் முன்னமே சொல்லி இருந்தாள்.......
    முடிந்தவரை நான் சுகப்பிரசவம் தான் எனவே நீங்க சீசெரியன்னு சொன்னங்கன்னா "முடிஞ்சவரை சுகப்பிரசம் ஆகட்டும்னு வெயிட் பண்ண சொல்லி சொல்லுங்க" என்று கேட்டு கிட்டாங்க ஆனா அவங்க படுற அவஸ்தையா பொறுக்க முடியாம உடனே பண்ண சொல்லிட்டேன்...தாங்க முடியாம மனசு வலிச்சது அப்போ!....ஒவ்வொருத்தரும் தன் மனைவி குழந்தை பெறும்போது கூட இருந்து பாக்கணும்யா அப்பத்தான் தனியா இருக்கும் போது தப்பு செய்ய மனசு வராது.....இது என் தாழ்மையான கருத்து.......உம்ம குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்........நல்ல விழிப்புணர்வு பதிவு போட்டதுக்கு நன்றி!

    ReplyDelete
  32. @கந்தசாமி.வாழ்த்துக்கு நன்றி கந்தசாமி.

    ReplyDelete
  33. @விக்கி உலகம்//ஒவ்வொருத்தரும் தன் மனைவி குழந்தை பெறும்போது கூட இருந்து பாக்கணும்யா அப்பத்தான் தனியா இருக்கும் போது தப்பு செய்ய மனசு வராது// கரெக்ட்டாச் சொன்னீங்க விக்கி..அது மட்டுமில்லை, அவங்க அருமையை உணரவும் உதவும்.

    ReplyDelete
  34. >>கடுமையான வலியை எதிர்கொண்டு, ஏகப்பட்ட ரத்தத்தையும் இழந்து, ஏறக்குறைய உடலைச் சின்னாபின்னமாக்கி குழந்தையைப் பெற்றுக் கொடுப்பவர் பதிலுக்கு எதிர்பார்ப்பது நம் அருகாமையை மட்டும் தான். நம் வாழ்க்கைத் துணைக்காக அதைக் கூடச் செய்ய மாட்டோமா என்ன?

    உண்மை தான் .. அண்ணன் செண்ட்டிமெண்ட் செம்மல் ஆகிடாரு. ஒண்ணும் கும்ம முடியாது

    ReplyDelete
  35. உங்க மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. உங்க மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. பாலமுருகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete
  38. @சி.பி.செந்தில்குமார்//அண்ணன் செண்ட்டிமெண்ட் செம்மல் ஆகிடாரு. ஒண்ணும் கும்ம முடியாது// அந்த பயம் இருக்கட்டும்...வாழ்த்துக்கு நன்றி சிபி மாமா!

    ReplyDelete
  39. @சி.பி.செந்தில்குமார்//அண்ணன் செண்ட்டிமெண்ட் செம்மல் ஆகிடாரு. ஒண்ணும் கும்ம முடியாது// அந்த பயம் இருக்கட்டும்...வாழ்த்துக்கு நன்றி சிபி மாமா!

    ReplyDelete
  40. @S Maharajan//உங்க மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்// வாழ்த்துக்கு நன்றி மக்கா!...தொடர்ந்து படிச்சிட்டுத் தான் இருக்கீங்களா..

    ReplyDelete
  41. @Carfire//பாலமுருகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா...// மகிழ்ச்சி & நன்றி சகோ..

    ReplyDelete
  42. பிரசவம் பெண்ணுக்கு இன்னொரு பிறப்பு என்பார்கள்..அது கணவனுக்கும் பொருந்தும்..உண்மையான

    ReplyDelete
  43. நல்ல மனதை டச் செய்த பதிவு

    ReplyDelete
  44. முதல் பாரா படிக்கும் போது கஷ்டமாக இருந்தது, ஆண்களுக்கு தேவையான விசயத்தை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள், ஜீனியர் செங்கோவிக்கு என்னுடைய மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், பாலமுருகனின் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியோடு இருக்க அந்த முருகன் அருள்புரியட்டும், வாழ்த்துக்கள் நண்பா உங்களுக்கும், பையன் செம கியூட்

    ReplyDelete
  45. கடுமையான வலியை எதிர்கொண்டு, ஏகப்பட்ட ரத்தத்தையும் இழந்து, ஏறக்குறைய உடலைச் சின்னாபின்னமாக்கி குழந்தையைப் பெற்றுக் கொடுப்பவர் பதிலுக்கு எதிர்பார்ப்பது நம் அருகாமையை மட்டும் தான். நம் வாழ்க்கைத் துணைக்காக அதைக் கூடச் செய்ய மாட்டோமா என்ன?


    ....brought tears in my eyes..... நெகிழ்ச்சி. உங்கள் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  46. மிகவும் உணர்ச்சிப் பூர்வமாக எழுதி இருக்கிறீர்கள், படித்து நெகிழ்ந்தேன். பாலமுருகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  47. ஜூனியருக்கு என் வாழ்த்துகள்!

    யு.எஸ்.ஸில் பிரசவத்தின் போது கணவன் கட்டாயம் உடன் இருக்க வேண்டுமாமே?

    ReplyDelete
  48. நண்பா,
    மிக நல்ல விழிப்புணர்வு கட்டுரை,
    தாயிழந்த துன்பம் போலே துன்பமது ஒன்றுமில்லை என்று இளையராஜா பாடுவார்,அது எத்தனை உண்மை.

    பதிவின் ஆரம்பத்தில் அதிர்ச்சியை எங்களுக்குள்ளே கடத்திவிட்டு, சட்டென நிதானமடைந்து உங்கள் மனைவியின் பிரசவத்துக்குள்ளே போய் விட்டீர்கள்,உங்கள் மூவருக்கும் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  49. நான் என் மனைவியின் பிரசவத்தின் போது உடனிருக்க முடியவில்லை,அந்த தவறை உணர எனக்கு வருடம் பிடித்தது.

    ReplyDelete
  50. http://senthilinpakkangal.blogspot.com/2010/03/blog-post.html

    இது மனைவியின் பிரசவத்தின் போது லேபர் ரூமுக்குள் கூடவே இருந்த நண்பரின் பதிவு

    ReplyDelete
  51. வாழ்த்துக்கள்... பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  52. @ஆர்.கே.சதீஷ்குமார்//பிரசவம் பெண்ணுக்கு இன்னொரு பிறப்பு என்பார்கள்.// உண்மை..உண்மை.

    ReplyDelete
  53. @இரவு வானம்//பாலமுருகனின் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியோடு இருக்க அந்த முருகன் அருள்புரியட்டும், வாழ்த்துக்கள் நண்பா உங்களுக்கும், பையன் செம கியூட்// நன்றி நைட்டு..பையன் அப்பா மாதிரி..அதான் க்யூட்டு..ஹி..ஹி!

    ReplyDelete
  54. @Chitra //...brought tears in my eyes..... நெகிழ்ச்சி. உங்கள் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!// நன்றிக்கா!

    ReplyDelete
  55. @பன்னிக்குட்டி ராம்சாமிபாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராம்சாமி.

    ReplyDelete
  56. @சென்னை பித்தன்உங்களை மாதிரிப் பெரியவங்க வாழ்த்தியதில் சந்தோசம் ஐயா.

    ReplyDelete
  57. @|கீதப்ப்ரியன்|Geethappriyan| //பதிவின் ஆரம்பத்தில் அதிர்ச்சியை எங்களுக்குள்ளே கடத்திவிட்டு, சட்டென நிதானமடைந்து // ’என்னாலயே முடிந்தது, உங்களாலும் முடியும் ‘ என்று படிப்போருக்கு உணர்த்தவே அந்த ஆரம்பம் கார்த்தி.

    //உங்கள் மனைவியின் பிரசவத்துக்குள்ளே போய் விட்டீர்கள்,உங்கள் மூவருக்கும் வாழ்த்துக்கள்.// மிக்க நன்றி.

    ReplyDelete
  58. @|கீதப்ப்ரியன்|Geethappriyan|
    //இது மனைவியின் பிரசவத்தின் போது லேபர் ரூமுக்குள் கூடவே இருந்த நண்பரின் பதிவு// நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  59. பாலமுருகனுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செங்கோவி..


    நலமுடன் வாழ்க பல்லாண்டு...

    ReplyDelete
  60. This comment has been removed by the author.

    ReplyDelete
  61. பிரசவ நேரத்து நிகல்வுகளை எப்போ நினைத்தாலும் பசுமையாக, வேதனையாக, சந்தோஷமாக இருக்கு...

    அத பத்தி பேசுன பக்கம் பக்கமா பேசிட்டே இருக்கலாம்..

    ReplyDelete
  62. This comment has been removed by the author.

    ReplyDelete
  63. This comment has been removed by the author.

    ReplyDelete
  64. குட்டி பையனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  65. பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டீஸ்க்கு! :-)

    பெரிய விஷயத்த சிம்பிளா சொல்லிட்டீங்க!

    ReplyDelete
  66. ஆனா கொடுமைய பாருங்க! பதிவின் தலைப்பைப் பார்த்துட்டு உங்கள திட்டலாம்னு ஓடோடி வந்தவங்கள ஏமாத்திப்புட்டீகளே!

    ReplyDelete
  67. பிரசவ நேரத்தில்மனைவி இன் அம்மா என்ற வலி இன் சத்தம் கேட்கும் பொழுது வலிப்பது என்னவோ மனைவிக்குத்தான் உயிர் போவது என்னவோ கணவனுக்கு

    ReplyDelete
  68. @RK நண்பன்.. வாழ்த்துக்கு நன்றி ஆர்கே. தொப்புள் கொடியைச் சேமித்து வைக்கும்படி, இப்போது மருத்துவமனையிலேயே சொல்கிறார்கள். //அன்று இரவே என் லப்டோப்பை மருத்துவ மனை கொண்டு சென்று அவன் மனைவியுடன் வீடியோ சாட்டிங் செய்ய வைத்தது.. // அருமையான நண்பர் நீங்கள்!

    ReplyDelete
  69. @அமுதா கிருஷ்ணா அக்காவின் வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  70. @ஜீ...//பெரிய விஷயத்த சிம்பிளா சொல்லிட்டீங்க!// அப்படித் தானே சொல்லணும்..பாவம், படிக்கிறவங்களுக்கும் புரியணும்ல!

    ReplyDelete
  71. @ஜீ...//பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டீஸ்க்கு! :-)// நன்றி தம்பி..அது என்ன குட்டீஸ்..குட்டி தானே? ஒருவேளை எனக்கும் சேர்த்தா?

    ReplyDelete
  72. @ஜீ...//பதிவின் தலைப்பைப் பார்த்துட்டு உங்கள திட்டலாம்னு ஓடோடி வந்தவங்கள ஏமாத்திப்புட்டீகளே!// அப்படில்லாம் வர மாட்டாங்களே..நான் நல்ல புள்ளையாச்சே..தலைப்புல ஒன்னும் தப்பா இல்லையே ஜீ.

    ReplyDelete
  73. @சிட்டி பாபு//பிரசவ நேரத்தில்மனைவி இன் அம்மா என்ற வலி இன் சத்தம் கேட்கும் பொழுது வலிப்பது என்னவோ மனைவிக்குத்தான் உயிர் போவது என்னவோ கணவனுக்கு// அருமையாச் சொன்னீங்க நண்பரே. இதையே ஒன்னுக்குக் கீழ ஒன்னுன்னு வார்த்தையை அடுக்கி இருந்தா கவிதை ஆயிருக்கும்..

    ReplyDelete
  74. முதலில் பிறந்த நாள் கொண்டாடும் குழந்தை பாலமுருகனுக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்.

    தலைப்புச் சமாச்சாரம் எங்கூர்லே வேற மாதிரி. அதை அப்புறம் ஒரு நாள் பேசலாம்:-)))))

    ReplyDelete
  75. மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  76. @துளசி கோபால்//முதலில் பிறந்த நாள் கொண்டாடும் குழந்தை பாலமுருகனுக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்.// மிக்க நன்றி டீச்சர்.


    //தலைப்புச் சமாச்சாரம் எங்கூர்லே வேற மாதிரி. அதை அப்புறம் ஒரு நாள் பேசலாம்// அவ்வ்..பெரிய பஞ்சாயத்து இருக்கும் போலிருக்கே..ஒன்னும் அவசரம் இல்லை டீச்சர், மெதுவாப் பேசலாம்.

    ReplyDelete
  77. Boss...I am late... Convey my birthday wishes to Junior Sengovi...

    ReplyDelete
  78. தங்கமணி ரொம்ப புத்திசாலி, சிசேரியன் அப்போதைக்கு சுலபம், வாழ்நாள் முழுவதும் துன்பம், சுகப் பிரசவம் அப்படியே நேர் எதிர். தற்போது, நமது பெண்கள் உடல் உழைப்பு அதிகம் இல்லாததால் சிசேரியன் செய்ய வேண்டியதாகப் போகிறது, ஆனால் அது வருங்கால சந்ததிக்கு நல்லதல்ல. சில சமயம், மருத்துவமனைகளே ஆதாயத்திற்காக சுகப் பிரசவத்தையே சிசெரியனாக மாற்றிவிடுகின்றனர் என்பது த்ரதிர்ஷ்டம்.

    நாமே கூட, கஷ்டம் வரும் நேரத்தில் நமக்கு பிரியமானவர்கள் உடன் இருந்தால் மனதுக்கு ஒரு விதமான, தைரியம், ஆறுதலாக [moral support] இருக்கும். அதைத்தான் தங்கமணி எதிர்பார்த்திருக்கிறார். [வெளியே ஓடி வந்து விட்டது தப்பு செங்கோவி.]

    ReplyDelete
  79. @Jayadev Das//நாமே கூட, கஷ்டம் வரும் நேரத்தில் நமக்கு பிரியமானவர்கள் உடன் இருந்தால் மனதுக்கு ஒரு விதமான, தைரியம், ஆறுதலாக [moral support] இருக்கும். அதைத்தான் தங்கமணி எதிர்பார்த்திருக்கிறார்.// உண்மை தான் சார்.


    //வெளியே ஓடி வந்து விட்டது தப்பு செங்கோவி.// ஹி..ஹி..அது அவங்களுக்கு அப்போ தெரியாதே சார்..நான் வாசல்ல நிக்குறதாத் தான் நினைச்சுக்கிட்டு இருந்தாங்க..!

    ReplyDelete
  80. ”பிறந்த நாள் வாழ்த்துகள் ”
    யதார்த்தம்
    உண்மை
    வரிகள் அனைத்தும்
    அனுபவத்தால் மட்டும் புரியும் விபரத்தை தெளிவாக உரைத்து உள்ளீர்கள். நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  81. உண்மையிலையே மிக உருக்கமான பதிவு... எனக்கும் படிச்சிட்டு ஒரு மாதிரி ஆகிடுச்சு...

    உங்கள் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  82. @Din Babபாராட்டுக்கும் வாழ்த்துக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  83. @chinna kannan வாழ்த்துக்கு நன்றி நண்பரே..(சாரி, இன்று தான் பார்த்தேன்)

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.