Saturday, November 10, 2012

அடிப்படைக் குழாயியல்_பாட அட்டவணை

பாட அட்டவணையும் சில அடிப்படைத் தகவல்களும் (குழாயியல்_2)

குழாயியலை யாரெல்லாம் படிக்கலாம்?

மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் ஐடிஐ/ டிப்ளமோ / டிகிரி படித்தவர்கள் இந்த பாடத்தினைப் படிக்கலாம். சில அடிப்படைப் பொறியியல் வார்த்தைகளுக்கான அர்த்தம் அவர்களுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால், இதைப் படிப்பது அவர்களுக்கு எளிதாக இருக்கும்.

அங்கு என்னென்ன வேலைகள் செய்வார்கள்?

குழாயியல் என்று பொதுவாகச் சொன்னாலும், இங்கும் டிபார்ட்மெண்ட் வாரியாக வேலை பிரிக்கப்பட்டு, ஒரு புராஜக்ட் செய்யப்படும்.முக்கியமானவைகளாக இவற்றைச் சொல்லலாம்:

1. வடிவமைப்பு (Design)

குழாயியலின் அடிப்படை கணக்கீடுகள், குழாயியல் வடிவமைப்பு இங்கே செய்யப்படும்.  AutoCAD, PDS, PDMS, CadWrox, Caeser II போன்ற மென்பொருட்களை பயன்படுத்தி, வரைபடங்கள் தயார்செய்யப்படுகின்றன. மற்ற எல்லா துறைகளுக்கும் அடிப்படையாக இருப்பது டிசைன் தான் என்பதால், இந்த துறையினை ‘பொறியியல் (Engineering)' என்றும் அழைப்பார்கள்.

2. கட்டுமானம் (Fabrication / Erection/ Construction)

வரைபடங்களில் உள்ளபடி, குழாய் மற்றும் ஃபிட்டிங்ஸ்களை இணைத்து, பைப்பிங் சிஸ்டத்தை இணைப்பது இந்த டிபார்ட்மெண்டின் வேலை. உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் உற்பத்தித் துறை போன்றதே இந்தக் கட்டுமானத்துறையும்..

3. தரக்கட்டுப்பாடு (டிசைன் + எரக்சனுக்கு):
வரைபடங்கள் அல்லது குழாயியல் கட்டுமானம் சரியான முறையில் சர்வதேச நியமங்களின் படி உருவாக்கப்பட்டுள்ளனவா என்பதில் ஆரம்பித்து கிளையண்ட்டின் தேவையை நிறைவேற்றுமா என்பது வரை அனைத்துக் காரணிகளையும் பரிசோதிக்கும் துறையே தரக்கட்டுப்பாடு ஆகும். பொதுவாக பொறியாளரே அதையும் கவனைத்துக்கொள்வார்.

4. மெயிண்டனன்ஸ் : கட்டுமானம் முடிந்த பின் தொடர்ந்து பழுதின்றி நிர்வகித்தலும், பழுதடைந்தால் மாற்றுவதும் இவர்களின் வேலை ஆகும்.

இந்த டிபார்ட்மெண்ட்கள் இயங்கும் விதம் பற்றி விரிவாக அறிய, முந்தைய மெக்கானிகல் எஞ்சினியர்களுக்கு தொடரைப் பார்க்கவும்.

இனி நாம் படிக்கப்போகும் பாடங்களின் அட்டவணையைப் பார்க்கலாம் :

1. குழாயியல் (Piping & Piping Systems)
2. குழாயியல்  பாகங்கள் (Piping Parts)
3. சட்டத்தொகுப்புகளும் நியமங்களும் திட்ட விவரங்களும் (Standards - Codes - Specification)
4. குழாய் - வரலாறு, வரையறை, உலோகங்கள் (Pipe -Definition, History, Materials)
5. குழாய் - அளவும் தடிமனும், (Pipe Size & Thickness), உற்பத்தி முறை (Pipe Manufacturing), இணைக்கும் முறை(Method of Joining)
6. இணைப்பான்கள் (Fittings) - BW
இணைப்பான்கள் (Fittings) - SW
இணைப்பான்கள் (Fittings) - Threaded

7. Flange
8. Gaskets
9. Nozzles
10. Valves - பயன் & வகைகள்
11. Valves - Gate Valve & Ball Valve
12. Globe Valve
13. Angle Valve
14. Check valve
15. Butterfly valve
16. Plug Valve
1. Pressure Relief Valve
17. Pressure safety Valve
18. Control Vale
13. Valve Operators
14. Equipments
15. Process Flow Diagrams and P&IDs
16. GA
17. Iso
18. Suppoorts


(பாட அட்டவணை மாற்றத்திற்கு உட்பட்டது. தொடரின் முடிவில் இறுதி செய்யப்படும்)

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

  1. நல்ல தகவல்கள்! உங்க தொடர்கதை என்ன ஆச்சு! கொஞ்ச நாளா நான் கரண்ட் இல்லாம பக்கம் வருவது இல்லை!

    ReplyDelete
  2. நல்ல தொடர் தல... இந்த தொடருக்கு வாசகர்கள் குறைவாக இருந்தாலும் தொடருங்கள்...

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.