Friday, February 1, 2013

கடல் - திரை விமர்சனம்

 அதாகப்பட்டது... :
நம்ம கார்த்திக்கு மவனும், ராதா மவளும் சோடி போட்டிருக்கிற படம், அதுவும் மணிரத்னம் டைரக்சன்லன்னா சும்மாவா..ஏலெ, கேட்டதுமே ஜில்லுன்னு இருக்குல்லா? போதாததுக்கு லிப்-கிஸ்ன்னு வேற கிளப்பிவிட்டுட்டாங்க..நம்ம ஜெயமோகன் டயலாக் வேற.(அட, பயப்பாடாதீக பயபுள்ளைகளா..அவரு சினிமாக்கு மட்டும் தமிழ்ல தான் எழுதுவாரு..நம்புங்க!)..கொஞ்சநாளாவே இங்க நல்ல படங்கள்லாம் வர்றதில்லை, இது என்னாகுதோன்னு பயந்துக்கிட்டே இருந்தோம்..’யாரும் பாக்காத’ படமுல்லா..அதான் சட்டுப்புட்டுன்னு ரிலீஸ் பண்ணிப்புட்டாக.


ஒரு ஊர்ல.....................:

நல்லாக் கேட்டுக்கோங்க..நம்ம அர்ஜீனும், சிவப்ப்பழகன் அர்விந்தசாமியும் ஃபாதர் ஆகறதுக்கு படிக்காக..அய்யய்யோ, பாலியல் கல்வின்னு நினைச்சுப்புடாதீக மக்கா..இது சர்ச்-ல ஃபாதர் ஆகறதுக்கான படிப்பாக்கும்..அர்விந்தசாமி நல்ல புள்ளை, அர்ஜூனு சோக்காளி..படிக்க வந்த இடத்துல படிக்கிற சோலியை மட்டும்தானே பார்க்கணும்? அர்ஜூனு வேறொரு சோலி பாத்துப்புடுதாரு.அதை அர்விந்தசாமி பெரிய்ய ஃபாதர்க கிட்ட போட்டுக்கொடுத்துடுதாரு..அதனால அர்ஜூனு ஃபாதர் ஆக முடியாமப் போகுது..அப்போ அர்ஜூனு தொடைதட்டி சபதம் எடுக்காரு.’ஏலே அர்விந்தசாமி..உன்னையும் டர்ர் ஆக்குவேம்ல’ன்னு.

அப்புறம் பாத்தீகன்னா, அர்ஜூனு டான் ஆகிடுதாரு..அர்விந்தசாமி ஃபாதர் ஆகி(சர்ச்ல தான்), அர்ஜூனு ஊருப்பக்கமே வந்திடுதாரு..அப்புறமென்னலே, அன்புக்கும் வெறுப்புக்கும்-நன்மைக்கும் தீமைக்கும்-அதுக்கும் இதுக்கும் நடக்கிற ஃபைட் தாம்லெ படம்.


உரிச்சா....:

ஏலெ, இது மாதிரி யதார்த்தமா, உக்கிரமா ஒரு படம் பார்த்து எத்தனை நாளாச்சு..அதுவும் முத பாதி பாத்தீகன்னா, சர்ச்ச்ல காளியாத்தா சாமீ வந்த வந்தமாதிரி அப்படி ஒரு ஆக்ரோசம்..இடைவேளை விடற வரைக்கும் ராதா மவளோட லிப்-கிஸ்ஸே ஞாபகம் வரலைன்னா பார்த்துக்கோங்களேன்!

அரவிந்தசாமி ஃபாதரா ஊருக்கு வரும்போது, சர்ச் கிடக்கிற கெதியும், அந்த சனங்க பேசுற பேச்சும் நம்மளை அப்படியே படத்துக்குள்ள இழுத்துறுதுய்யா..என்ன இருந்தாலும் நம்ம பயலுவல்லா..சாமீன்னா பயந்து நடுங்காம, தோள்ல கைபோட்டுல்லா பேசுறாங்க..(இயேசுவையும் சர்ச்சையும் பத்தி ஆரம்பத்துல அந்த சனங்க நக்கலா பேசுறதுக்கு யாரும் பஞ்சாயத்தைக் கூட்டாம இருக்கணும். ஆனா ஒட்டுமொத்தமா ’அன்னை வேளாங்கண்ணி’ படம் தராத பக்தியெல்ல சொல்லுது!)

அந்த ஊருல ஏறக்குறைய அனாதையா சுத்துற பய மேல ஃபாதர் கருணை காட்டுறதும், அன்பாலயே அந்த பயல மாத்தறதும் கவிதை.கவிதை. (ஏ, உங்களுக்கு தனியா வேறெ சொல்லணுமாக்கும், அந்தப் பயதாம்லெ கார்த்திக்கு மவன் கௌதமு!).

அப்புறம் வாராரு அர்ஜூனு..வந்து அவரு பண்ற ஒரு காரியம் இருக்கே..ஏ, அதை வெளில சொல்றது தப்புல்லா..நமக்கே பக்குன்னுல்லா ஆயிடுச்சு..படத்துல ஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்குய்யா.அதெல்லாம் சொல்றது நியாயமில்லைல்ல..அரவிந்தசாமி திருத்துன பயலை, அர்ஜூனு திரும்ப ரவுடியா ஆக்க பாக்குதாரு..இன்னொரு பக்கம் ராதா மவளோட வெள்ளந்தியான அன்பு அந்த பையனுக்கு கிடைக்கு..அப்புறமென்ன, ஃபாதர்-மொதலாளி-ஹீரோயின்னு மூணுபேர்ல யாரு அதிக தாக்கத்தை ஹீரோ மேல உண்டாக்குதாங்கன்னு கதை பிச்சுக்கிட்டுப் போகுது.

ஆன ஒன்னுய்யா, இந்த மணிரத்னம் ரொம்ப நாளைக்கு அப்புறம் மனுசன் பாக்கும்படியா ஒரு படம் எடுத்துருக்காரு..வழக்கமா அவரு, இந்திக்கும் தமிழுக்கும் பொருந்தற மாதிரி ஒரு ‘ஜந்து’வைல்லா ரெடி பண்ணுவாரு..இது அப்படி இல்லை, படம்யா..படம்...கலக்கிப்புட்டாரு!


அரவிந்தசாமி :
இவரு சினிமாவே வேணாம்னு போனவருல்ல..ஏந்திடீர்னு வந்திருக்காருன்னு எனக்கு அப்பவே டவுட்ல..படத்தைப் பாக்கவுமில்ல தெரியுது..ஃபாதர்னா ஃபாதர்..அப்படி ஒரு தங்கமான ஃபாதர். ஆத்தீ, இப்படியாப்பட்ட நல்ல மனுசனையா நானா யோசிச்சேன் ல அப்படி எழுதுனோம்..சாமி..சாமி-ன்னு கன்னத்துல போட்டுக்கிட்டேம்லெ..அப்படி ஒரு நடிப்பு. இப்படி ஒரு கேரக்டெரு கொடுத்தா, எவம்தான் நடிக்க மாட்டேன்னு சொல்லுவாம்?. ஏ, இப்பச் சொல்லுதேம்ல..படத்துக்கு ஹீரோவே இந்த ’ஃபாதர் சாம்’ தாம்லெ!

கருணையின் வடிவமா காட்டுறதுக்கு இவரை விடச் சரியான ஆளு வேறெ யாரு இருக்கா? மணிரத்னம் லேசுப்பட்ட ஆளு இல்லவே!..எப்பிடி பிடிச்சாந்திருக்கார்
 பாத்தீகளா?

அர்ஜூன் :

நல்ல நடிப்பு தாம்லெ..ஆனாலும் இந்தாளு இப்படி ஒரு வில்லத்தனமா கேரக்டருக்கு எப்படி ஒத்துக்கிட்டாருன்னு தெரியலை..அப்படி ஒன்னும் வயசாகிடலையே..ரசினிக்கு சின்னப்பையன் தானெலெ?..ஆனாலும் அந்தாளு தைரியத்தைப் பாராட்டணும்..மனுசன் கொன்னுட்டாரு!

கௌதம் :
இந்தப் பையன் சிம்பு மாதிரி கெக்கெபிக்கேன்னு இருக்காரே..தேறுவாரான்னு நமக்கு டவுட்டாத் தாம்லெ இருந்துச்சு..ஆனாலும் அந்த சின்ன கொள்ளிக்கண்ணை வச்சுக்கிட்டே, பல எக்ஸ்பிரசனல்ல கொடுக்காரு..கண்ணீரே வத்திப்போன ஒரு சீவனாவும், அந்த பிரசவ சீனுல புதுசாப் பிறந்து அழுற மனுசனாவும்..அட, அட! மீனவப் பையன் வேசத்துக்கு ஓகே தாம்லெ..இதே மாதிரி நல்ல படமா நடிச்சா பையன் பொழச்சுக்கிடுவாரு!..ஒரு நடிகனா கார்த்திக்கு பேரை காப்பாத்திட்டாரு!


துளசி :


கொஞ்சம் மூளை வளர்ச்சி நின்னுபோன அல்லது மூளை உறைஞ்சு போன அல்லது லப்பாதிக்காஜக்கோமக்கா-ன்னு என்னமோ ஒரு பிரச்சினை உள்ள பிள்ளையா நடிச்சிருக்கு. ஏ, அதுக்காக கவலைப்பட வேணாம்..நமக்கு கிளிவேஜ் சீன் இருக்கு, கேட்டியளா? ஆனா ஒன்னு, இந்தப் புள்ளை நல்லா நடிக்குது..அக்காக்கு மேலெ,,அம்மாக்கு கீழன்னு வச்சிக்கோங்களேன்..மொத்தத்துல மொத படத்துல ராதா எப்படி இருந்துச்சோ, அப்படியே இருக்கு. இன்னும் ரெண்டு, மூணு படம் பண்ணாத்தான் தெரியும், தேறுதான்னு.
ஏ, நாம என்ன பெருசா கேட்கிறோம்? ஒரு ராதா மாதிரி பாக்குறதுக்கு அழகாவும் இருக்கிற, நடிக்கவும் தெரிஞ்ச நடிகை வேணும்னு ஆசைப்படறது தப்பா? ஏசைய்யா கண்ணைத் திறக்க மாட்டேங்கிறாரே? வேற வழியில்லை, பேசாம ராதாவையே டயட் இருக்கச் சொல்ல வேண்டியதாம் போல!

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- இந்த கதைக்கு தேவையே இல்லாத சில காதல் காட்சிகள் + டூயட்கள்..ஆனாலும் சினிமால்ல..என்ன செய்ய!

- கதாநாயகிக்கு என்ன நோய்(?)ன்னு என்னை மாதிரி ஆளுங்களுக்கும் புரியறமாதிரி சொல்லாம விட்டது.(சொல்லுதாங்கலெ,புரியலைல்ல.)

- ஏ, முடிச்சுப் போடறது ஒரு சுகம்னா முடிச்ச அவுக்கிறது தனி சுகம்னு ஏதோ மலையாள பிட்டு படத்துல சொல்லுவாகல்ல..அது சரி தாம்லெ..படத்துல நிதானமா, வலுவா முடிச்சு போட்டளவுக்கு, நிதானமா புடிச்ச அவுக்கலை பாத்துக்கோ..படத்தை முடிக்கணுமேன்னு, சினிமாத்தனமா ஒரு கிளைமாக்ஸ் ஃபைட் வச்சு, டபக்குன்னு முடிச்சை அவுத்துட்டாக. ஒரு நல்ல நாவலை படக்குன்னு முடிச்ச ஃபீலிங்யா.

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- மணிரத்னத்தின் கச்சிதமான திரைக்கதை + இயக்கம்

- ராஜீவ் மேனனின் கேமரா..சும்மாவே மணி படத்துல கலக்குவாங்க..இதுல கடல் வேறெ..கேக்கணுமா? கொள்ளை அழகுல்லா..குறிப்பாக கிளைமேக்ஸ் சீன்..படத்துல ஹீரோயின்னா, அது கடல் தாம்லெ!

- ஏ.ஆர்,ரஹ்மான் இசைன்னா சொல்லவா வேணும்? பாட்டுகளும் பெக்கிரவுண்டு மூசிக்கும் பட்டயக்கிளப்புது. (அந்த டைட்டில் மியூசிக் மட்டும், அந்த சீன்களோட ஒட்டலை!)

- ஜெயமோகனின் கதை-வசனம்-திரைக்கதை : ’கதை வறட்சி, அதனால தான் இங்கிலிபீசு படத்தை சுடுதோம்’ன்னு சொல்றவங்க, கண்டிப்பா இந்தப் படத்தைப் பார்க்கணும். இலக்கியவாதிகளை எப்படி யூஸ் பண்றதுன்னும் மணிரத்னம்கிட்ட கத்துக்கணும். படத்தின் பெரும்பலமே இயல்பான வசனங்கள் தான்..’ஏலெ, மக்கா, நாற முண்டை’ என அப்படியே தெக்குப்பக்கம் போய் வந்த உணர்வைத்தரும் வார்த்தைப் பிரயோகம்..’தப்பு செய்றது நடக்கர மாதிரி, மனுசன்னு தானா வந்திடும்.’ என்பது போன்ற நறுக்கு தெறிச்ச மாதிரி வசனங்கள்.

மணியோ ஒத்தைவரி ஆளு..இவரோ எழுதித் தள்ளுற ஆளு..ரெண்டும் சேர்ந்து என்ன செய்துகளோன்னு ஒரு பயம் இருந்துச்சு. நம்ம தெக்கத்தி ஆளுக ஒத்தை வார்த்தைல பேசுனா நலலவா இருக்கும்..பரவாயில்லைய்யா, மணி நல்லா சுதந்திரம் கொடுத்திருக்காரு. இவரும் அடிச்சு விளையாடி இருக்காரு. (ஆதியில கோவில்பட்டித் தமிழா இருந்த என் தமிழ், அப்புறம் மெட்ராஸ் பாஷை மிக்ஸ் ஆகி, கூடவே கோயம்புத்தூர் ஸ்லாங்கும் கலந்து, இப்போ ஏதோ ஒரு தமிழ் பேசிக்கிட்டு திரியறேன். எனக்கே இந்தப் படம் பார்க்கவும் ஏலெ, மக்கான்னு தான் வருது பார்த்துக்கோங்க!)

அப்புறம்...:

எத்தனை நாளாச்சு இப்படி ஒரு மணிரத்னம் படம் பார்த்து? அந்த மனுசனை எல்லாரும் தலையில வச்சு ஆடுறதுலயும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்யுது.

மணி படம்னா சர்ச்சை இல்லாமலா?..ஆரம்ப காட்சிகளை மட்டும் பார்க்கிற மீனவ அமைப்புகளோ,சர்ச்களோ பஞ்சாயத்து கூட்ட வாய்ப்பு இருக்கு.அப்புறம் நம்ம இணைய புர்ச்சியாளர்கள் படத்தை நுணுக்கமா ஆராய்ச்சி, இதுவும் பார்ப்பனீய படமேன்னு சொல்லத்தான் போறாங்க.சரி, நமக்கும் பொழுதுபோகணுமில்லை..


பார்க்கலாமா? :
-  ஒரு கிறிஸ்தவ கிராமத்திலேயே பிறந்து வளர்ந்த உணர்வைத் தருவதாலும், அன்பையே போதிக்கும் கிறிஸ்தவத்தை முன்னிறுத்துவதாலும், அதன் பிரதிநிதிகளான ஃபாதர்கள்/ஸிஸ்டர்களின் தியாகத்தை, அதற்காக அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக நமக்கு உணர்த்துவதாலும்,அன்பு-அஹிம்சை-அறம் பற்றிய அடிப்படைக் கேள்விகளை நமக்குள் எழுப்புவதாலும்........

                     கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

40 comments:

 1. இவ்ளோ சொல்லிபுட்டீங்கல்லெ... பார்த்துடுவோம்...

  ReplyDelete
 2. விமர்சணம் நல்லாத்தாம்லே இருக்கு

  ReplyDelete
 3. ////நல்ல நடிப்பு தாம்லெ..ஆனாலும் இந்தாளு இப்படி ஒரு வில்லத்தனமா கேரக்டருக்கு எப்படி ஒத்துக்கிட்டாருன்னு தெரியலை..அப்படி ஒன்னும் வயசாகிடலையே..ரசினிக்கு சின்னப்பையன் தானெலெ?.//// ஹி.ஹி.ஹி.ஹி...............

  ReplyDelete
 4. தங்கள் எழுத்து நடை சூப்பர்...

  //பேசாம ராதாவையே டயட் இருக்கச் சொல்ல வேண்டியதாம் போல//

  நச்....

  ReplyDelete
 5. விமர்சனம் அழகான எழுத்து நடை...

  ReplyDelete
 6. எனக்கு புடிச்சிருக்கு!

  ReplyDelete
 7. ஒஹ்.. அப்ப அரவிந்தசாமி
  தான் ஹீரோவா? பாவம் கார்த்திக் மவன்!! இப்புடி ஏமாத்திபுட்டாகளே!!!

  அப்புறம், ******* படம் தடைகளை தாண்டி வெளிவர்ற வரைக்கும் வேற எந்த படத்தையும் தியேட்டர்ல பார்க்குறது இல்லன்னு தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லாம் முடிவு எடுத்து இருக்காங்க, அத மீறி படம் பார்த்து இருக்கீங்களே, இது நியாயமாண்ணே?

  *******- இன்னிக்காவது அந்த வார்த்தை உங்க கண்ணுல காதுல படாம இருக்கனும்ன்னுதான்...

  ReplyDelete
 8. வணக்கம்,செங்கோவி!அதுக்குள்ளவேவா?சரி,படம் பாத்த பீலிங்!ரொம்ப நன்றி!!!!///'அவரோட'வசனத்த வுட இது டாப்பு!

  ReplyDelete
 9. //திண்டுக்கல் தனபாலன் said...

  இவ்ளோ சொல்லிபுட்டீங்கல்லெ... பார்த்துடுவோம்...//

  மொதல்ல அதைச் செய்யுங்க மக்கா.

  ReplyDelete
 10. //Blogger K.s.s.Rajh said...

  ////நல்ல நடிப்பு தாம்லெ..ஆனாலும் இந்தாளு இப்படி ஒரு வில்லத்தனமா கேரக்டருக்கு எப்படி ஒத்துக்கிட்டாருன்னு தெரியலை..அப்படி ஒன்னும் வயசாகிடலையே..ரசினிக்கு சின்னப்பையன் தானெலெ?.//// ஹி.ஹி.ஹி.ஹி...............//

  ஏ, உண்மையைத் தாம்லெ சொல்லுதேம்..அதுக்கு ஏன் இப்படிச் சிரிப்பு?

  ReplyDelete
 11. //Blogger ஸ்கூல் பையன் said...

  //பேசாம ராதாவையே டயட் இருக்கச் சொல்ல வேண்டியதாம் போல//.....நச்....//


  அடம் எல்லாப் பயலுகலும் நம்மள மாதிரி தான் காய்ஞ்சு போயி அலையுதாங்க போல!

  ReplyDelete

 12. //Blogger Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

  Supper, sure for this weekend then!//

  விரைசாப் பாருலெ..தேட்டர்ல பார்க்க சரியான படம்லெ..அலை பாயுதே மாதிரி லவ் ஸ்டோரின்னு போனா, வேறெ கதைல்ல சொல்லியிருக்காக!

  ReplyDelete


 13. //Blogger தமிழ்வாசி பிரகாஷ் said...

  விமர்சனம் அழகான எழுத்து நடை...//

  ஏ பெரகாசு சொன்னா சரியாத்தாம்ல இருக்கும்..

  ReplyDelete

 14. //Blogger கோகுல் said...

  எனக்கு புடிச்சிருக்கு! //


  ஏ மக்கா, படம் பார்க்காமலே பிடிக்கலைன்னு சொல்றதும் பிடிச்சிருக்குன்னு சொல்றதும் தப்புலெ..ஒழுங்கா படத்தைப் பாத்துட்டுப் பேசு, ஆமா.

  ReplyDelete

 15. Blogger மொ.ராசு (Real Santhanam Fanz ) said...

  // ஒஹ்.. அப்ப அரவிந்தசாமி
  தான் ஹீரோவா? பாவம் கார்த்திக் மவன்!! இப்புடி ஏமாத்திபுட்டாகளே!!!//

  மொக்கை, ஆனாலும் கிஸ் அடிச்சது பயபுள்ள தானே?

  // *******- இன்னிக்காவது அந்த வார்த்தை உங்க கண்ணுல காதுல படாம இருக்கனும்ன்னுதான்...//


  இந்த படத்தை பாக்கவும், அந்த வி-போபியோல இருந்து மீண்டுட்டோம்ல!

  ReplyDelete

 16. //Blogger Yoga.S. said...

  வணக்கம்,செங்கோவி!அதுக்குள்ளவேவா?சரி,படம் பாத்த பீலிங்!ரொம்ப நன்றி!!!!///'அவரோட'வசனத்த வுட இது டாப்பு!//

  அய்யா, அதுக்க்குள்ளன்னா..எதுக்குள்ள? கொஞ்சம் தெளிவாச் சொல்றது!

  ReplyDelete
 17. சென்கோவி....டிவிட்டர் ல படத்தை கழுவி கழுவி ஊத்துறாங்க????

  செம பிலாப் அப்படின்னு.....உங்க பார்வை வேற மாதிரி இருக்கு.....

  கேபிள் கூட டிவிட்டர் ல மொக்கை அப்படின்னு சொல்லி இருக்காரு....

  பார்ப்போம்....

  ReplyDelete
 18. பிரபா பார்வையும் அப்படியே....

  ReplyDelete
 19. @நாய் நக்ஸ்

  ஆரம்பிச்சுட்டாங்களா..எனக்கு படம் பிடிச்சிருக்குய்யா..கதையே இல்லாத படங்களுக்கு மத்தியில, நல்ல கதையோட ஒரு படம்.

  ReplyDelete
 20. வித்தியாசமான பார்வை! வித்தியாசமான விமர்சனம்! நன்றி!

  ReplyDelete
 21. கண்டிப்பா பார்த்துடுவோம் ல...

  ReplyDelete
 22. ஏலே மக்கா சூப்பரா தாம்லே எழுதியிருக்கீரு.

  ReplyDelete
 23. ஏலே மக்கா சூப்பரா தாம்லே எழுதியிருக்கீரு.

  ReplyDelete
 24. படம் பார்க்க ஆசையா இருக்கு . உங்கள் விமர்சனம் சூப்பர் செங்கோவி

  ReplyDelete
 25. வார்த்தையே புளந்து கட்டுறீங்களே பேசாமல் ராதாவை நினைத்து மகள் படம் பார்க்கலாம் ஆனால் தடை நீக்கட்டும்:)))))

  ReplyDelete
 26. இப்பதான் வீடுதிரும்பல் விமர்சனம் படித்தேன் படம் மொக்கை என்று, நீங்களோ புகழ்ந்து தள்ளுகிறீர்கள் யார் தீர்ப்பு சரி என்று இரண்டு நாளில் தெரிந்து விடும்.தாங்கள் மணிஜி ஃபேன் போல! . . ..

  ReplyDelete
 27. செங்கோவி said... [Reply]அய்யா, அதுக்குள்ளன்னா..எதுக்குள்ள? கொஞ்சம் தெளிவாச் சொல்றது!///அடடா,நான் காலேல எந்திரிச்சு கணணியத் தொறந்து பாத்தா 'கடல்' விமர்சனம் மொத ஆளா எழுதியிருக்கீங்க.அதான்,அதுக்குள்ளேவா அப்புடீன்னு ...............................த்சொ,த்சொ!!!!!!!!(முடியல)

  ReplyDelete
 28. //Blogger Arif .A said...

  இப்பதான் வீடுதிரும்பல் விமர்சனம் படித்தேன் படம் மொக்கை என்று, நீங்களோ புகழ்ந்து தள்ளுகிறீர்கள் யார் தீர்ப்பு சரி என்று இரண்டு நாளில் தெரிந்து விடும்.தாங்கள் மணிஜி ஃபேன் போல! . . ..//

  பலரும் இது ஒரு காதல் கதையாக இருக்கும் என்ற எண்ணத்தில் சென்று, கடுப்பாகி திட்டுகிறார்கள். எனக்கு அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லை..மேலும், தமிழ்சினிமாவில் இந்தப் படம் எடுத்துக்கொண்டிருக்கும் கருப்பொருள் முக்கியமானது. சுயநலமற்ற அன்பு தோற்காது எனும் நல்ல செய்தியை இப்படம் சொல்கிறது. படத்தின் கமர்சியல் வெற்றி பற்றி நான் கவலைப்படவில்லை.

  ReplyDelete
 29. //Yoga.S. said...

  செங்கோவி said... [Reply]அய்யா, அதுக்குள்ளன்னா..எதுக்குள்ள? கொஞ்சம் தெளிவாச் சொல்றது!///அடடா,நான் காலேல எந்திரிச்சு கணணியத் தொறந்து பாத்தா 'கடல்' விமர்சனம் மொத ஆளா எழுதியிருக்கீங்க.அதான்,அதுக்குள்ளேவா அப்புடீன்னு ...............................த்சொ,த்சொ!!!!!!!!(முடியல)//

  ஹி..ஹி!

  ReplyDelete
 30. ???? ???? ?????....

  ReplyDelete
 31. படம் படு கேவலமா இருக்குன்னு சொல்றாங்களே...........

  திருநெல்வேலி பேச்சு.......... ரொம்ப கஷ்டப் பட்டு படிச்சேன். [இந்தப் படம் உங்களுக்கு பிடிக்க இதுவும் ஒரு காரணமோ!!]

  ReplyDelete
 32. @Jayadev Das நீங்க சொல்றது சரிதான்..பட வசனங்கள் நிறையப்பேருக்கு புரியலைன்னு சொல்றாங்க. அப்புறம், இந்தப் படத்துக்கு ஹீரோயினே தேவையில்லை. அது தான் மணி பண்ண தப்பு!

  ReplyDelete
 33. கொங்குத் தமிழை கோயமுத்தூர் ஸ்லாங் என்று சொல்லிக் கொள்ளாதீர்கள். கதையைப் பார்க்கத் தூண்டுகிறீர்கள்..

  ReplyDelete
 34. கடல் பார்த்தேன். எனக்கு பிடித்திருக்கிறது. நம்ம ரெண்டு பேருக்கு மட்டும்தான் பிடிச்சிருக்கு.
  ஒரு சமயம் நான் சாத்தான் ; நீங்க தேவன் போல.

  ReplyDelete
 35. @??? - ??????? ????????? சாரி பாஸ்..அது கொங்கு தமிழ் தான்.

  ReplyDelete
 36. //MnB said... [Reply]
  கடல் பார்த்தேன். எனக்கு பிடித்திருக்கிறது. //

  அய்யய்யோ, வெளில சொல்லாதீங்க பாஸ். பிடிச்சுட்டுப் போய் சிலுவைல ஏத்திடுவாங்க...நானே வெளில பயந்து பயந்து தான் நடமாடுறேன்!!!

  சாருநிவேதிதாவும் பிடிச்சிருக்குன்னு சொல்லியிருக்கார்..அது நம்ம நிலைமையை இன்னும் மோசமாக்குதுய்யா.

  ReplyDelete
 37. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ராதா சிடி இருக்காண்ணே? //


  ராஜாதி ராஜா சிடி தான் இருக்கு.

  ReplyDelete
 38. ////// செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ராதா சிடி இருக்காண்ணே? //


  ராஜாதி ராஜா சிடி தான் இருக்கு.///////

  யோவ் யோவ், அம்பிகா சிடியே வெச்சிருந்தீங்களே, அதான் ஒரு நப்பாசைல கேட்டேன்..... ராஜாதிராஜாவ வெச்சி நான் என்ன பண்றது?

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.