Tuesday, August 13, 2013

சார்...வயிறு வலிக்கு சார்!

ன்னைக்கு காலையில பையனை எழுப்பி ஸ்கூலுக்கு கிளம்புன்னு சொன்னேன். அவன் எழுந்திரிச்சுட்டு, ஒரு நிமிசம் யோசிச்சான். பிறகு சொன்னான், "அப்பா, வயிறு வலிக்குப்பா..நான் ஸ்கூலுக்குப் போவலை".

அதைக் கேட்டவுடனே நமக்கு சந்தோசம் தாங்கலை. அடடா, நம்ம பையன் அப்படியே நம்மளை மாதிரி வர்றானேன்னு சந்தோசமாகி(இதுக்கு சந்தோசப்படணுமா, இல்லே வருத்தப்படணுமா...?), அப்படியே மலரும் நினைவுகள்ல மூழ்கிட்டேன்.

ஜூனியருடன் நான்...!
எனக்கு காலையில எழுந்திரிச்சு ஸ்கூலுக்குப் போறதில பெரிய பிரச்சினை இல்லை. ஆனா சாயந்திரம் வரைக்கும் ஒரே ரூம்ல, அதுவும் ஒன்லி பசங்களோட இருக்கிறது தான் கஷ்டமா இருக்கும்.

 அதனால வயித்து வலி ட்ராமாவை ஆரம்பிப்பேன். டீச்சரும் 'போய் ஹெச்.எம்மைப் பாரு'ன்னு அவர்கிட்ட அனுப்பிடுவாங்க. அதென்ன மாயமோ தெரியலை, நான் என்னிக்கு அவரைப் பார்க்கப் போனாலும் நம்மளை மாதிரியே ரெண்டு மூணுபேரு அவர் வாசல்ல 'வயித்து வலியோட' நிப்பாங்க.
ஒவ்வொருத்தரா உள்ள போயி "சார்...வயிறு வலிக்கு சார்'னு சொல்வோம். சிறந்த பெர்பாஃர்மன்ஸ் பண்ணவங்களுக்கு வீட்டுக்குப் போக பெர்மிசன் கிடைக்கும். இப்படியே எட்டாப்பு வரைக்கும் மாசம் ரெண்டு மூணு தடவை பெர்மிசன் வாங்கி வீட்டுக்கு ஓடி வந்திடுவேன்.

எட்டாப்பு படிக்கும்போது தான் எப்படியோ அந்த ஹெச்.எம். முழுச்சுக்கிட்டாரு. இந்தப் பய அடிக்கடி பெர்மிசன்ல போற மாதிரித் தெரியுதேன்னு மைல்டா ஒரு டவுட்டு அப்போ அவருக்கு வந்திருச்சு போல...

இது தெரியாம அன்னிக்கு ஒருநாள் அவர்கிட்டப் போயி நின்னுட்டு"சார்...வயிறு வலிக்க்கு சார்"ன்னேன். மனுசன் கம்பை எடுத்துக்கிட்டே "வ...யி..று?....வலிக்கா?"-ன்னு கேட்டுட்டு, என் பட்டக்ஸ்லயே ஒரு போடு! "இனிமே வந்தேன்னா பார்த்துக்கோ..போடா" அப்படீன்னு சொல்லி அனுப்பிட்டாரு.

பொய்யான வயித்து வலியோட போயி, நிஜமான *** வலியை வாங்கிட்டமேன்னு பீல் பண்ணிட்டே கிளாஸ்க்கு வந்தேன். டீச்சர் "என்ன சொனாரு?"ன்னு கேட்டாங்க. எனக்குள்ள இருந்த எடிட்டர் முழிச்சுக்கிட்டு, "போடா-ன்னு சொன்னாரு டீச்சர்"-ன்னேன். டீச்சரும் "சரி, அப்போ கிளம்பிக்கோ"-ன்னு அனுப்பி வச்சிட்டாங்க. ஆஹா..இதுகூட நல்லாயிருக்கேன்னு குஷி!

அப்புறம் ஒன்பதாம் வகுப்பு படிக்க கவ்ர்ன்மெண்ட் ஸ்கூல்ல சேர்ந்தேன். அப்போ முத்துராமலிங்கம் சார் தான் ஹெட் மாஸ்டர். அவரு ஒரு தமிழறிஞர். பட்டிமன்றம் எல்லாம் பேசுவாரு. நல்ல பேச்சுத்திறமை உள்ளவர். இதெல்லாம் அப்போ எனக்குத் தெரியாது. பழைய ஹெச்.எம்.ஞாபகத்திலேயே அவர்கிட்டப் போய் என் வேலையை ஆரம்பிச்சேன்.

அன்னைக்கு அவரு ஒரு கிளாஸ்க்கு மரத்தடில வச்சு பாடம் எடுத்துக்கிட்டிருந்தாரு. (எங்க கிளாஸும் மரத்தடி தான்!). அங்க போயி “சார்..வயிறு வலிக்கு சார்”-ன்னேன். வந்தது வினை.

அவர் கூலா திரும்பிப்பார்த்தாரு. “அப்படியா..சரி தம்பி..என் ஆபீஸ் பியூன்கிட்ட மாத்திரை இருக்கு. வாங்கி சாப்பிட்டுட்டு, டென்த்-சி காலியாத்தான் இருக்கு. அங்க போயி தூங்கு. நான் சாயந்திரம் ஆறு மணிக்கு எழுப்பிவிடுதேன்”ன்னாரு. நமக்கு பகீர்னு ஆகிடுச்சு. ஸ்கூலே நாலரைக்கு முடிஞ்சிடுமே..இந்த மனுசன் ஆறு மணிவரைக்கும் ஆப்பு வைக்கப் பார்க்கிறாரே-ன்னு டரியலாகி”சார்..வீட்டுக்குப் போகணும் சார்”-ன்னேன்.

அவர் ரொம்ப கூலா திரும்பி, “தம்பி..இப்போ எது பிரச்சினை? வயித்து வலியா? வீட்டுக்குப் போறதா?”ன்னாரு.

”சார்..வயிறு வலிக்கு சார். வீட்டுக்குப் போகணும் சார்”-ன்னேன்.
“தம்பி, வயிறு வலியோட அவ்ளோ தூரம் எப்படிப் போவே..நீ மாத்திரை சாப்பிட்டுத் தூங்கு. வயித்து வலி சரியானப்புறம் ஆறுமணிக்கு மேல போகலாம். சரியா?”-ன்னாரு.

எவ்வளவு நாசூக்கா ஆப்பு வக்கிறாரு..இப்படி வந்து எசகுபிசகா மாட்டிக்கிட்டமேன்னு யோசிச்சுக்கிட்டே நின்னேன். அவரு ஒன்னுமே நடக்காத மாதிரி கிளாஸ் நடத்த ஆரம்பிச்சுட்டாரு. இப்போ எப்படி ரிவர்ஸ் கியர் போடறதுன்னு முழிச்சுக்கிட்டே நின்னேன்.

அப்புறம்”சார்..”-ன்னேன். அடுத்து என்ன சொல்றதுன்னு தெரியலை.அந்த மௌனத்துக்கு அர்த்தம்’ஐயா..சாமீ.. என்னை மன்னிச்சு விட்றுங்க’-ன்னு அவரு புரிஞ்சுக்கிட்டாரு. “என்னப்பா..கிளாஸ்க்குப் போறயா?”ன்னாரு. என்ன இருந்தாலும் பெரிய மனுசன், பெரிய மனுசன் தான்னு நினைச்சுக்கிட்டு “சரி சார்”ன்னேன்.

சரி, பொழச்சுப் போன்னு விட்டுட்டாரு. பின்னங்கால் பொடதில அடிக்க, எங்க கிளாஸ்க்கு ஓடுனவன் தான். அப்புறம் இந்த வயித்து வலி நாடகத்தை அடியோட மறந்துட்டேன்.


இப்போ என் பையன் அதே பிட்டைப் போடவும் பழைய நினைப்பு பீறிக்கிட்டு வந்திடுச்சு. சபாஷ்டா மகனேன்னு பாராட்டிட்டு தங்கமணிகிட்ட “எம்மா, இவனுக்கு வயிறு வலிக்குதாம். இன்னைக்கு வேணா வீட்ல இருக்கட்டுமே?”-ன்னு சிபாரிசு பண்ணேன்.

கிச்சன்ல இருந்து பதில் வந்துச்சு. “மேலே விளக்கெண்ணெய் இருக்கு. எடுத்து ரெண்டு பேரு தொப்புள்ளயும் போட்டு ஊறவச்சு குளிங்க. எல்லா வயித்து வலியும் போயிடும்”

என்னடா மவனே இது..இதுக்கு என் ஹெட் மாஸ்டர்களே பரவாயில்லையே-ன்னு நினைச்சுக்கிட்டேன்.

அதுசரி, வயித்து வலி என் பையனுக்குத் தானே?...என் தொப்புள்ள ஏன் போடணும்?..அந்த விளக்கெண்ணெய் வாங்கி ஒரு வருசம் ஆகியும் காலியாகலை. அவன் தொப்புள்ள ஊத்துனா காலியாகாது..அதுக்கு நம்ம தொப்புள்தான் சரின்னு முடிவு பண்ணிட்டாங்களோ?


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

24 comments:

  1. அட..தலைவா விஜய் மாதிரியே இருக்கீங்கண்ணா...

    ReplyDelete
  2. ஜூனியர் -சீனியர் தலைவா(க்கள்) போட்டோ அருமை.. வயித்து வலி மேட்டரை படிச்சி சிரிச்சி என்க்கு வயித்து வலி வந்திடுச்சி,

    ReplyDelete
  3. ஹாஹா...வெளக்கெண்ண...

    ReplyDelete
  4. அதென்ன தொப்புளா?எண்ணெய் கொப்பறையா?

    ReplyDelete
  5. அப்பனுக்குப் புள்ள தப்பாமப் பொறந்திருக்கு,அடிச்சு ஆடுங்க பேரனாரே!////நம்ம தொப்புள்தான் சரின்னு முடிவு பண்ணிட்டாங்களோ?///பெரீஈஈய,ந.................. தொப்புள்!ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
  6. வயிற்று வலி வர மூஞ்சிகளை பாரு...

    பின் குறிப்பு: பையன் நல்லாயிருக்கான்.

    ReplyDelete
  7. //Manimaran said... [Reply]
    அட..தலைவா விஜய் மாதிரியே இருக்கீங்கண்ணா...//

    எவ்வளவு நாசூக்கா கேவலப்படுத்துறாங்க!!

    ReplyDelete
  8. // விக்கியுலகம் said... [Reply]
    ஹாஹா...வெளக்கெண்ண... //

    இதான் சாக்குன்னு திட்றயாய்யா?

    ReplyDelete
  9. // கோகுல் said... [Reply]
    அதென்ன தொப்புளா?எண்ணெய் கொப்பறையா?//

    ஹா..ஹா..அதே சந்தேகம் தான் எனக்கும் கோகுல்.

    ReplyDelete
  10. // Subramaniam Yogarasa said... [Reply]
    பெரீஈஈய,ந.................. தொப்புள்!ஹ!ஹ!!ஹா!!! //

    ஐயா, ந = நமீதான்னு ஓப்பனாச் சொல்லிடுங்க. படிக்கிறவங்க, வேறெதாவது கற்பனை பண்ணிக்கப்போறாங்க.

    ReplyDelete

  11. //தமிழ்வாசி பிரகாஷ் said... [Reply]
    நமீயை மிஞ்சிருமா.... //

    ஏன், வந்து பம்பரம் விடப்போறீரா?

    ReplyDelete
  12. //
    அமுதா கிருஷ்ணா said... [Reply]
    வயிற்று வலி வர மூஞ்சிகளை பாரு...//

    வயிற்று வலி வர்றதுக்குன்னே ஸ்பெஷல் மூஞ்சிகள் இருக்காக்கா?

    ReplyDelete
  13. விஜய் மூஞ்சியில மச்சத்தை வச்சு வேற கெட்டப்புன்னு சொன்ன மாதிரி கூலிங் கிளாஸ் போட்டு கெட்டப்பை மாத்தி முகத்தை மறைசிட்டீங்களே பாஸ்..............!!

    ReplyDelete
  14. @Jayadev Das உங்களுக்கு அடையாளம் தெரியாதுங்கிறதால தான், போட்டோக்குக் கீழே 'ஜூனியருடன் நான்...!'-ன்னு போட்டேன், தலைவரே!

    ReplyDelete
  15. வயித்துவலி ஞாபகம் எல்லாருக்கும் இருக்கு...
    வெளக்கெண்ணை தேய்த்து குளிச்சீங்களா?

    ReplyDelete
  16. செங்கோவி said... [Reply]// Subramaniam Yogarasa said... [Reply] பெரீஈஈய,ந.................. தொப்புள்!ஹ!ஹ!!ஹா!!! //ஐயா, ந = நமீதான்னு ஓப்பனாச் சொல்லிடுங்க. படிக்கிறவங்க, வேறெதாவது கற்பனை பண்ணிக்கப்போறாங்க.////ஓ.கே.நமீதா,நமீதா,நமீதா.............(மச்சான்'ஸ்.....ஹ!ஹ!!ஹா!!!)

    ReplyDelete
  17. என்னமா லுக்கு விடுறாரு ஜூனியரு ,ரெண்டாவது ஸ்டில்லில!

    ReplyDelete
  18. ஹெல்மெட் எங்க,சார்?

    ReplyDelete
  19. //சே. குமார் said... [Reply]
    வயித்துவலி ஞாபகம் எல்லாருக்கும் இருக்கு...
    வெளக்கெண்ணை தேய்த்து குளிச்சீங்களா? //

    குடிக்கத்தான் செய்யணும் குமார்.

    ReplyDelete
  20. // Subramaniam Yogarasa said... [Reply]
    ஹெல்மெட் எங்க,சார்? //

    அதென்னமோ தெரியலைய்யா..நான் ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுனா, என்னை ஓவர் டேக் பண்ற சைக்கிள்காரனுக முறைச்சுப் பார்க்கிறாங்க. அதனால ஹெல்மெட் போடறதை விட்டுட்டேன்!!!

    ReplyDelete
  21. 'கட்ட வண்டி,கட்ட வண்டி கடையாணி கழண்ட வண்டி' யோ?வெரி-குட்!!!

    ReplyDelete
  22. இனிய சுதந்திர தின நல வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.