Friday, August 9, 2013

தலைவா : திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
'வரும்..ஆனா வராது’ என்ற ரேஞ்சில் தமிழ்நாட்டில் வெளியாகாமல் இழுத்துக்கொண்டிருக்கும் படம், வெளிநாடுகளில் இன்று ரிலீஸ் ஆகிவிட்டது.
படம் எப்படி என்று பார்ப்போம், வாருங்கள்.
ஒரு ஊர்ல.....................:

பம்பாய் தாராவியைக் காத்து வந்த வேதா பாய்(வேலு நாயக்கர் வம்சம்?) மண்டையைப் போட, தமிழர்களைக் காக்கும் தலையாய கடமையை சத்தியராஜ் எடுத்துக்கொள்கிறார். அவர் மகன் விஜய் ஆஸ்திரேலியாவில் பத்திரமாக வளர்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் விஜய் இந்தியா வர, சத்தியராஜ் கொல்லப்படுகிறார். தமிழர்களைக் காக்கும் கடமையை விஜய் ஏற்றுக்கொண்டாரா? கடமையில் ஜெயித்தாரா? ’தலைவா’ ஆனாரா என்பதே கதை.

உரிச்சா....:

படத்தின் முதல் பாதி முழுக்க ஆஸ்திரேலியாவில் ஜாலியாக நகர்கிறது. விஜய் நண்பர்களுடன் ‘தமிழ் பசங்க’ எனும் டான்ஸ் க்ரூப் வைத்திருப்பதும், கூடவே சந்தானம் இருப்பதும், அமலா பாலூ-வை சந்தானமும் லவ் பண்ணுவதுமாக ஓரளவு ஸ்மூத்தாகவே படம் போகிறது. அதிலும் கௌரவ வேடத்தில் வரும் சாம் ஆண்டர்சனின் போர்சன் கலக்கல். இந்தியாவில் சத்யராஜை வில்லன்கள் கொல்ல, அமலா பாலூ பற்றிய அதிரடி ட்விஸ்ட்டுடன் இண்டர்வெல்!

பிரச்சினை இரண்டாம்பாதியில் தான். சத்யராஜைக் கொன்ன, மக்களையும் இம்சை பண்ணும் வில்லனை உடனே போட்டுவிட்டால், படத்தை எப்படி வளர்ப்பது? எனவே தேவர் மகன் ஸ்டைலில் தலைவா பொறுப்பை விஜய் ஏற்றுக்கொள்கிறார். அப்புறம்...

அப்புறமென்ன, முஸ்லிம்களின் பிரச்சினையை தீர்க்கிறார். கிறிஸ்துவர்களின் பிரச்சினையைத் தீர்க்கிறார். ரவுடிகளை ஒழிக்கிறார். சட்டத்தால் தண்டிக்கப்பட முடியாத குற்றவாளிகளை தீர்த்துக்கட்டுகிறார். குழந்தைகளை காக்கிறார். பாட்டிக்கு உதவுகிறார். மொத்தத்தில் வேலு நாயக்கராக ஆவதை விட, எம்.ஜி.ஆராக ஆகிவிடத் துடிக்கிறார். நமக்குத் தான் கிர்ரென்று ஆகி விடுகிறது.

ஒரு யோக்கியன் என்னென்ன நல்ல காரியம் எல்லாம் செய்ய முடியுமோ, அத்தனையும் செஞ்சு காட்டியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு கிளைமாக்ஸ் வரை சீன்களை அமைத்திருக்கிறார்கள். 

படம் முழுக்க தமிழ்நாட்டுக்கு வெளியே தான் நடக்கிறது. தமிழக அரசியல்/அரசியல்வாதிகள் பற்றி எவ்வித விமர்சனமும் படத்தில் இல்லை. அப்படி எதையும் எதிர்பார்த்து, ஏமாற வேண்டாம்!

விஜய் :

ஏனுங்கண்ணா..நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு. பில்டப் இல்லாம, பஞ்சர் டயலாக் இல்லாம நல்ல படங்களா பண்ணிக்கிட்டிருந்த மனுசன் மறுபடியும் ’அப்படி ’ ஆகிட்டாரே!!

முதல் பாதியில் டான்ஸில் கலக்குகிறார். அமலா பாலூவுடன் தனியே ஆடும் காட்சி அருமை. ஃபைட்டிலும் நல்ல சுறுசுறுப்பு. சத்யராஜ் இறக்கும் காட்சியில் கொடுத்த எக்ஸ்பிரசன்கூட நல்லாயிருந்தது. ஆனால்.............

வேணாங்கண்ணா...சூப்பர் ஸ்டாரே இப்போல்லாம் ‘வருவேன்..வந்துடுவேன்’ன்னு பூச்சாண்டி டயலாக் பேசறதில்லை. பாட்ஷா வந்து 18 வருசத்துக்கு மேல ஆகிடுச்சு. இன்னும் அதே டெம்ப்ளேட்ல, ரசிகர்களை உசுப்பேத்தி உசுப்பேத்தியே, பொதுமக்களான எங்க உடம்பை புண்ணாக்குறது சரியாங்கண்ணா?

மூணு படம் தொடர்ச்சியா ஓடிட்டாலே, முருங்கை மரம் ஏறிடுறீங்களே பாஸ்?..இந்த மாதிரி அரசியல்-பில்டப் ஆசைகளை எல்லாம் விட்டுட்டு, காவலன், நண்பன், துப்பாக்கி மாதிரி நல்ல கமர்சியல் படங்களைக் கொடுங்க பாஸு! முதல்ல உங்க அப்பாவை நீங்க டைவர்ஸ் பண்ணுங்க...அப்போத்தான் உருப்படுவீங்க!

அமலா பாலூ :
என்னடா இவன், அமலா பால்-ஐ அமலா பாலூன்னு எழுதறானேன்னு யோசிக்கிறீங்களா? என்னய்ய பண்றது? ‘விஜய் அமலா பாலை விரும்புகிறார்’னு எழுதுனா, குசும்பு பிடிச்சு ஆளுங்க  ஆபாசமா கமென்ட் போடுவாங்க. நமக்கு ஆபாசம்னாலே ஆகாது இல்லியா?

படத்தில் கதாநாயகியாக பெரிதாக வேலை இல்லை. ஆனாலும் கதையோட கூடிய ஒரு கேரக்டர் என்ற மட்டில் ஆறுதல். மற்றபடி ‘பெரிதாக சொல்லிக்கொள்ள ஏதுமில்லை’!

சந்தானம் :

வழக்கம்போல் நம்மை ரிலாக்ஸ் பண்ணுவது சந்தானத்தின் ஒன் லைனர்ஸ் தான்..’நான் சமைக்கிறேன்னாலே, எல்லார் நாக்குலயும் எச்சி ஊறும்’..........’எதுக்கு? காறித்துப்பவா?’ என சரளமாக அடித்து விளையாடுகிறார்.

ஹீரோயிண் இவரை லவ் பண்ணுவதாக நினைத்துக்கொண்டு, இவர் ஃபீல் பண்ணுவது வழக்கமான விஷயம் தான் என்றாலும், ரசிக்க முடிகிறது.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- படத்தின் நீளம்........மூணு மணி நேரம்!

- டைரக்டரின் பொறுப்பில்லாத்தனம். இரண்டாம்பாதி திரைக்கதையில் என்னென்னவோ நடக்கிறது. கிரைம் ப்ராஞ்ச் போலீஸுக்கு யூனிஃபார்ம் கிடையாது என்று தான் அறிந்திருக்கிறேன். இதில் விஜயடிஸ்கோ சாந்தி யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டு டமக்டுமுக் என்று நடக்கிறார். (அவர் யாரென்பது சஸ்பென்ஸ்!)

- மும்பையில் எல்லாருமே சரளமாக தமிழ் பேசுவது.

- ரசிகர்களின் ரசனை பலமடங்கு மாறிவிட்ட நிலையில், இன்னும் எம்.ஜி.ஆர் ஸ்டைலில் காட்சிகள் வைத்திருப்பது

- வழக்கமாக எந்த கேரக்டர் கொடுத்தாலும் பின்னி எடுக்கும் சத்தியராஜ், இதில் சவசவவென்று வந்து போகிறார். விஜய்யை சந்தித்து, ‘விளக்கும்’ காட்சியில் யார் வீட்டு இழவோ எனும் வசன உச்சரிப்பு.

- அறிஞர் அண்ணாவின் பெயரை மறைமுகமாக சத்திய ராஜூக்கு வைத்தது. மக்கள் அவரை அண்ணா..அதாவது அண்ணன் என்று அழைப்பதால், அவர் அண்ணாவாம். விஜய் அண்ணாவின் வாரிசாம். ஆப்பசைத்த குரங்கு கதை தெரியுமா?

-இரண்டாம் பாதியில் திடீரென ஒரு சேட்டு ஃபிகரை கொண்டுவந்து, படுத்தியது. (படுத்தது இல்லை பாஸ்..கரெக்டாப் படிங்க!)

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:


- நீரவ் ஷாவின் நீட்டான ஒளிப்பதிவு

- சந்தானம் & சாம் ஆண்டர்சன் காமெடிகள்.

- வாங்கண்ணா பாடல்

- விஜய்யின் கூல் பெர்பார்மன்ஸ்


- ’மம்மி’ படத்திற்குத் தரும் இலவச பில்டப்!

பார்க்கலாமா? :

தயாரிப்பாளர்......?

விஜய் ரசிகர்கள் மட்டும்...............பார்க்கலாம்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

41 comments:

  1. விமர்சனத்துக்கு நன்றி!பிள்ளைகள் ஒற்றைக்காலில்?!நிற்கிறார்கள்,தலை வாஆஆஆஆஆஆஆஆஆ படம் பார்த்தே ஆக வேண்டுமென்று,ஹி!ஹி!!ஹீ!!!///அமலா பாலூ வுக்கு விளக்கம் கொடுத்ததற்கும்,நன்றி!!!!

    ReplyDelete
  2. அவர்கள் விஜய் ரசிகர்கள் ஆயிற்றே..தாரளமாகப் பார்க்கட்டும். ஆனா, நீங்க தான்................!

    ReplyDelete
  3. படம் ஓட எவ்வளவோ பில்டப் கொடுக்கிறோம்,நீங்க என்னன்னா சப்புன்னு முடிச்சிட்டீங்களே?

    அது சரி சட்டியில இருந்தாதானே அகப்பையில வரும்..!

    ReplyDelete
  4. படம் ஓட எவ்வளவோ பில்டப் கொடுக்கிறோம்,நீங்க என்னன்னா சப்புன்னு முடிச்சிட்டீங்களே?

    அது சரி சட்டியில இருந்தாதானே அகப்பையில வரும்..!

    ReplyDelete
  5. அமலா பாலூ : ////‘பெரிதாக சொல்லிக்கொள்ள ஏதுமில்லை’!///

    ஏங்க இப்படி.... காலங்காத்தாலேயே ஆரம்பிச்சு வைக்கிறீங்க. இண்டைக்கு வௌங்கின மாதிரித்தான்.

    ReplyDelete
  6. அப்ப தலைவா...கொஞ்சம் ”வளைவா”ன்னு சொல்லுங்க்ணோவ்!

    ReplyDelete
  7. சூப்பர்ங்கண்ணா!!

    ReplyDelete
  8. only for vijay fans.......... barrrrrrrrrr

    ReplyDelete
  9. ஐயோ அம்மா... நான் பாக்க மாட்டேன்பா....

    ReplyDelete
  10. //படத்தில் கதாநாயகியாக பெரிதாக வேலை இல்லை. ஆனாலும் கதையோட கூடிய ஒரு கேரக்டர் என்ற மட்டில் ஆறுதல். மற்றபடி ‘பெரிதாக சொல்லிக்கொள்ள ஏதுமில்லை’!////

    கண்ணுல வெளக்கெண்ணெய் வுட்டுப் பாத்துட்டு சொல்லியிருக்கீரோ?

    #ஆமாம்யா, அமலாட்டா "பெருசா ஒண்ணுமில்லை"தான். :)

    ReplyDelete
  11. #ஆமாம்யா, அமலாட்டா "பெருசா ஒண்ணுமில்லை"தான். :)
    //////////////////////
    ஆமாய்யா கொஞ்ச எடுத்து டீ போட்டுட்டாங்க போல...

    ReplyDelete
  12. என்னய்ய பண்றது? ‘விஜய் அமலா பாலை விரும்புகிறார்’னு எழுதுனா, குசும்பு பிடிச்சு ஆளுங்க ‘அவ்ளோ டேஸ்ட்டா?’ன்னு ஆபாசமா கமென்ட் போடுவாங்க. நமக்கு ஆபாசம்னாலே ஆகாது இல்லியா?
    /////////////////////
    ஆமா....ஆமா......நாங்க நல்லவய்ங்க...!

    ReplyDelete
  13. முதல்ல உங்க அப்பாவை நீங்க டைவர்ஸ் பண்ணுங்க...அப்போத்தான் உருப்படுவீங்க! \\\\\

    சரியா சொன்ன தல

    ReplyDelete
  14. ரைட்டு. இந்தவாரம் படத்துக்கு போகாம வீட்டுலையே பாத்திரம் கழுவ வேண்டிதான்.

    ReplyDelete
  15. இதுக்கு போயி குண்டு வக்கிரேன்னு சொல்லி வெடிகுண்டை கேவல படுத்தீட்டாங்கலே ..

    ReplyDelete

  16. //Blogger காட்டான் said...

    படம் ஓட எவ்வளவோ பில்டப் கொடுக்கிறோம்,நீங்க என்னன்னா சப்புன்னு முடிச்சிட்டீங்களே?

    அது சரி சட்டியில இருந்தாதானே அகப்பையில வரும்..!//


    மாம்ஸ், ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாதுன்னு நம்மாளுகளுக்கு புரிய மாட்டேங்குதே!

    ReplyDelete
  17. செங்கோவிக்கு ஆபாசம் பிடிக்காதாமாம்... ஒத்துக்கிட்டோம்....

    அமலாபால்க்கிட்ட சொல்லிக்கிற மாதிரி எதுவுமில்லைன்னுதான் எல்லாருக்கும் தெரியுமே (நான் நடிப்பைத்தான் சொன்னேன்)

    ReplyDelete
  18. //Blogger Purujoththaman Thangamayl said...

    அமலா பாலூ : ////‘பெரிதாக சொல்லிக்கொள்ள ஏதுமில்லை’!///

    ஏங்க இப்படி.... காலங்காத்தாலேயே ஆரம்பிச்சு வைக்கிறீங்க. இண்டைக்கு வௌங்கின மாதிரித்தான்.//


    உண்மையைத் தானுங்க சொன்னேன்!..ஒரு பெரிய பட்ஜெட் படத்துல சின்ன........!

    ReplyDelete
  19. //Blogger விக்கியுலகம் said...

    அப்ப தலைவா...கொஞ்சம் ”வளைவா”ன்னு சொல்லுங்க்ணோவ்!//

    யோவ்,விஜய்யே படத்துல பஞ்ச் டயலாக் பேசலை. நீரு ஏம்யா கொல்லுதீரு?

    ReplyDelete
  20. //Blogger ஜீ... said...

    சூப்பர்ங்கண்ணா!!//


    தம்பிக்கு என்ன ஒரு சந்தோஷம்?...இதைத் தான் எதிர்பார்த்தீங்களோ?

    ReplyDelete
  21. //Blogger ஆத்மா said...

    only for vijay fans.......... barrrrrrrrrr //

    அவங்களுக்காகத் தானே எடுத்திருக்காங்க..நாம தான் தெரியாம உள்ள போயிட்டோம்.

    ReplyDelete
  22. //Blogger ஸ்கூல் பையன் said...

    ஐயோ அம்மா... நான் பாக்க மாட்டேன்பா....//

    ச்சே...நம்ம நாட்டைக் காப்பாத்த ஒரு தலைவன் வந்தா, ஆதரவு கொடுக்கணும், அலறக்கூடாது!

    ReplyDelete
  23. //Blogger விமல் ராஜ் said...

    நல்ல விமர்சனம்...//

    நன்றி பாஸ்.

    ReplyDelete
  24. //Blogger வெளங்காதவன்™ said...
    கண்ணுல வெளக்கெண்ணெய் வுட்டுப் பாத்துட்டு சொல்லியிருக்கீரோ?

    தேடுனாலும் கிடைக்காது!!

    ReplyDelete
  25. //Blogger வீடு சுரேஸ்குமார் said...

    #ஆமாம்யா, அமலாட்டா "பெருசா ஒண்ணுமில்லை"தான். :)
    //////////////////////
    ஆமாய்யா கொஞ்ச எடுத்து டீ போட்டுட்டாங்க போல...//

    அடப்பாவிகளா..நம்மளை விட மோசமாப் பேசுறாங்களே..இதனால தாம்யா பாலை பாலூ ஆக்குனேன்!

    // ஆமா....ஆமா......நாங்க நல்லவய்ங்க...!//

    அதான் ஃபர்ஸ்ட் கமெண்ட்லயே ப்ரூஃப் பண்ணிட்டீங்களேய்யா!

    ReplyDelete
  26. //Blogger சக்கர கட்டி said...

    முதல்ல உங்க அப்பாவை நீங்க டைவர்ஸ் பண்ணுங்க...அப்போத்தான் உருப்படுவீங்க! \\\\\

    சரியா சொன்ன தல //


    அய்யய்யோ...தலன்னு சொல்லி விஜய் ரசிகர்கள்கிட்ட என்னைக் கோர்த்து விடுதய்யா!

    ReplyDelete
  27. //Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    ரைட்டு. இந்தவாரம் படத்துக்கு போகாம வீட்டுலையே பாத்திரம் கழுவ வேண்டிதான்.//


    இல்லைண்ணா, படத்துக்குப் போய்ட்டு வந்து பாத்திரம் கழுவுவீரா?

    ReplyDelete
  28. //அஞ்சா சிங்கம் said...

    இதுக்கு போயி குண்டு வக்கிரேன்னு சொல்லி வெடிகுண்டை கேவல படுத்தீட்டாங்கலே ..//

    படமே ஒரு வெடிகுண்டு தான்னு பயபுள்ளைகளுக்குப் புரியலையே!

    ReplyDelete
  29. // சே. குமார் said...

    செங்கோவிக்கு ஆபாசம் பிடிக்காதாமாம்... ஒத்துக்கிட்டோம்....

    அமலாபால்க்கிட்ட சொல்லிக்கிற மாதிரி எதுவுமில்லைன்னுதான் எல்லாருக்கும் தெரியுமே (நான் நடிப்பைத்தான் சொன்னேன்)//

    டைரக்டக்கருக்கு மட்டும் தெரியலை போல....!

    ReplyDelete
  30. செங்கோவி said... [Reply]அவர்கள் விஜய் ரசிகர்கள் ஆயிற்றே..தாரளமாகப் பார்க்கட்டும். ஆனா, நீங்க தான்................!////பாக்கக் கூடாதா?ஐயகோ!என்ன கொடுமை இது?////அந்தக் காலத்து "அமலா" வுக்கு நான் தீஈஈஈஈஈவிர ரசிகனாக்கும்,ஹி!ஹி!!ஹீ!!!

    ReplyDelete
  31. // Yoga.S. said...

    செங்கோவி said... [Reply]அவர்கள் விஜய் ரசிகர்கள் ஆயிற்றே..தாரளமாகப் பார்க்கட்டும். ஆனா, நீங்க தான்................!////பாக்கக் கூடாதா?ஐயகோ!என்ன கொடுமை இது?////அந்தக் காலத்து "அமலா" வுக்கு நான் தீஈஈஈஈஈவிர ரசிகனாக்கும்,ஹி!ஹி!!ஹீ!!!//

    பத்மினில ஆரம்பிச்சு, அமலாவை ஆராய்ஞ்சு, அமலா பாலூ வரைக்கும் உங்க சேவை தொடருது போல...பெரிய சாதனை தான் ஐயா.

    டி.ஆர்.ராஜகுமாரி....???

    ReplyDelete
  32. அண்ணே அப்ப கதை கேட்காமல படம் பண்ணினாரு...

    ஓடும் அல்லது ஓட்டப்படும்

    ReplyDelete
  33. // ♔ம.தி.சுதா♔ said...

    அண்ணே அப்ப கதை கேட்காமல படம் பண்ணினாரு...//

    ”படம் முடிஞ்சதும் ‘ஐயா, நீங்க தான் அரசியலுக்கு வந்து எங்களை வாழ வைக்கணும்’னு ஜனங்க கெஞ்சுவாங்க”-----இதை மட்டும் தான் விஜய்கிட்ட டைரக்டர் விஜய் சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  34. செங்கோவி said... [Reply]அவர்கள் விஜய் ரசிகர்கள் ஆயிற்றே..தாரளமாகப் பார்க்கட்டும். ஆனா, நீங்க தான்................!////பாக்கக் கூடாதா?ஐயகோ!என்ன கொடுமை இது?////அந்தக் காலத்து "அமலா" வுக்கு நான் தீஈஈஈஈஈவிர ரசிகனாக்கும்,ஹி!ஹி!!ஹீ!!!//

    பத்மினில ஆரம்பிச்சு, அமலாவை ஆராய்ஞ்சு, அமலா பாலூ வரைக்கும் உங்க சேவை தொடருது போல...பெரிய சாதனை தான் ஐயா.
    ///லீலா,பி.எஸ்.ராதா,அஞ்சலிதேவி,கண்ணாம்பா..........................!!!ஹி!ஹி!!ஹீ!!!

    ReplyDelete
  35. எப்படியோ 30 ஈரோவை மிச்சம்பிடிச்சாச்சு உங்க விமர்சனம் பார்த்து!ஹீ

    ReplyDelete
  36. சரியான யோசனை:காவலன், நண்பன், துப்பாக்கி மாதிரி நல்ல கமர்சியல் படங்களைக் கொடுங்க பாஸு! முதல்ல உங்க அப்பாவை நீங்க டைவர்ஸ் பண்ணுங்க...அப்போத்தான் உருப்படுவீங்க!

    ReplyDelete
  37. தனிமரம் said... [Reply]எப்படியோ 30 ஈரோவை மிச்சம்பிடிச்சாச்சு உங்க விமர்சனம் பார்த்து!ஹீ!!!////அடப்பாவிகளா!!!!!லண்டனில் வெறும் எட்டுப் பவுண்ஸ் (ஒன்பது-ஐம்பது-யூரோ))க்கு ஓட்டுகிறார்களே?

    ReplyDelete
  38. விஜய் அரசியலுக்கு வருவதைப் பற்றி நான் என்ன சினைத்துக்கொண்டு இருந்தேனோ அதையே தாங்களும் பதிந்திருப்பது பெரும்பாலானோருடைய கருத்து அதுவாக இருக்கும் போல.
    அமலா பாலுக்கு தாங்கள் கொடுத்திருக்கும் கமெண்ட் எங்கப்பன் குதுருக்குள் இல்லை என்பது போல.
    படம் நல்லா இருக்கோ இல்லையோ தங்களது பதிவு படிக்க சுகமாக இருக்கிறது.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.