அதாகப்பட்டது... :
இயக்குநர் சமுத்திரக்கனி மேல் ஒரு மரியாதை எப்போதுமே எனக்கு உண்டு. கமர்சியல் வட்டத்துக்குள் நின்றுகொண்டே, சமூக அக்கறையுள்ள படத்தைக் கொடுக்கும் ஆர்வம் உள்ளவர். இது அந்நியன் டைப் அறச்சீற்றக்கதை என்பதால் இறங்கி அடித்திருப்பார் என்று நம்பிப் போனேன். என்ன ஆச்சுன்னு சொல்றேன், வாங்கோ!
ஒரு ஊர்ல..:
வெளியுலகம் தெரியாமல், நியாய தர்மம் பற்றி போதிக்கப்பட்டே வளர்ந்த ஒருவன், இந்த சமூகத்தில் வாழ முற்படும்போது சந்திக்கும் லஞ்சம் போன்ற பிரச்சினைகளை அவன் எதிர்கொண்டு சமாளித்து வெல்வதே கதை.
உரிச்சா....:
சிலையும் நீயே..சிற்பியும் நீயே. உன்னை சரி செய்துகொள். உலகம் சரியாகும் என தன்னைச் செதுக்கும் ஜெயம் ரவியுடன் படம் ஆரம்பிக்கிறது. பள்ளி முதல் கல்லூரிவரை குருகுலம்/மிஷனரி ஹாஸ்டலில் வளரும் அப்பாவியாக அறிமுகம் ஆகிறார் ஜெயம் ரவி. அவர் ஏன் நம்மை மாதிரி கெட்டுப்போகாம இருக்கிறார் என்பதற்கு லாஜிக்கான காரணத்தைச் சொல்லி நிமிர வைக்கிறார்கள்.
டிராஃபிக் போலீஸிடம் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல ஆரம்பிக்கிறது பிரச்சினை. அங்கிருந்து ஸ்டேசன் போய், கோர்ட்டுக்குப் போய் ’உலகம் என்றால் என்ன? அம்மையப்பன் என்றால் என்ன?’ என்று தெளிந்து வெளியே வருகிறார். ஆனாலும் நீதி-நேர்மைப்படியே வாழ்வேன் என்று பிடிவாதமாக தொடர்கிறார். லஞ்சத்தை ஒழிக்க தெளிவாகத் திட்டமிட்டு, ஒரு ஸ்டிங் ஆபரேசனில் பலரையும் சிக்க வைக்கிறார்.
’டிராஃபிக்’ என்று ஆரம்பித்து ‘வைக்கிறார்’ வரை மேலே சொன்ன பாராவில் நடக்கும் காட்சிகள் செம ஸ்பீடு. ஜெயம்ரவியை அப்பாவியாக வேறு காட்டுவதால், நம்மால் படத்துடன் ஒன்றி ரசிக்க முடிகிறது. அமலா பாலூ - சூரியின் நட்பும் புதிதாக இருந்தது. முதல் காட்சியில் ஆரம்பித்து இண்டர்வல்வரை ‘பின்னீட்டாங்கய்யா’ என்று ஆச்சரியப்படும் அளவிற்கு, படம் நிமிர்ந்து நிற்கிறது.
பிரச்சினை இரண்டாம் பாதியில் தான் ஆரம்பிக்கிறது. திடீரென ஆந்திரா மசாலாவைத் தூவி தமிழ்ப்படத்தை தமிங்குப் படமாக ஆக்குகிறார்கள். இன்னொரு ஜெயம் ரவி ஆந்திராவில் இருந்து எண்ட்ரியாகிறார்கள். கூடவே வில்லன்களான லஞ்சப்பார்ட்டிகளையும் காமெடியன்களாக ஆக்கிவிடுகிறார்கள். கூடவே தேவையற்ற பாடல்காட்சிகளும் சேர்ந்துகொள்ள, பின்னு பின்னெறு பின்னி எடுக்கிறார்கள் நம்மை!
அதிலும் கானா பாலாவின் பாடல் வரும்போது நொந்தே போகிறோம். முதல் பாதியில் தீயாக இருந்த வசனங்கள் எல்லாம், சவசவ இரண்டாம்பாதியால் பேசியே கொல்றாங்கப்பா என்று ஆகிவிடுகின்றன. மொத்ததில் ’நிமிர்ந்து நில்’ படம் நிமிர்ந்தது, ஆனால் நிற்கவில்லை. வாட் எ பிட்டி, வாட் எ பிட்டி!
ஜெயம் ரவி:
தொடர்ந்து நல்ல இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் அதிர்ஷ்டசாலி. முதல்பாதியில் வரும் அப்பாவி கேரக்டர்க்கு அவரது முகமும் அவரது கீச்சுக்குரலும் கச்சிதமாகப் பொருந்துகின்றன. சமூகத்தைப் புரிந்துகொள்ளாமல் வெகுளியாக சிக்கலில் மாட்டுவதும், மற்றவர்களை மாட்டிவிடுவதுமாக அட்டகாசமான நடிப்பு. ஆனால் நரசிம்ம ரெட்டி கேரக்டரில் பார்க்கும்போது எரிச்சல் தான் வருகிறது. ஓவர் ஆக்ட்டிங் செய்தே ஆகவேண்டிய கேரக்டரைசேசன்.
அமலா பாலூ:
முதல்பாதியில் காமெடி மற்றும் காதல் ஏரியாவைப் பார்த்துக்கொள்கிறார். சீரியசாக போகும் கதையில், நம்மை கூல் செய்யும் அருமருந்து, இந்த பாலூ. இரண்டாம்பாதியில் இவருடைய இடத்தை நரசிம்ம ரெட்டி(!) பிடித்துவிட, டூயட் பாட்டுக்கு மட்டும் வந்துபோகும் அவலநிலைக்கு ஆளாகிறார். முந்தைய படங்களைவிட, இதில் அவருக்கு ஓரளவு நல்ல கேரக்டர் தான்.
சொந்த பந்தங்கள்:
பிரம்மனுக்கு அப்புறம் இதிலும் சூரி அடக்கி வாசித்திருக்கிறார். அளவான நடிப்பு + காமெடி என சரியான ரூட்டைப் பிடித்துவிட்டார் என்றே நினைக்கிறேன். கோபிநாத் இதில் கோபிநாத்தாகவே வருகிறார். நடிப்பு தான் வரமாட்டேன் என்கிறது. அதே நீயா-நானா ஓப்பனிங் சீன் ஸ்டைலில் படம் முழுக்க பேசுகிறார். ஆனாலும் அந்த வாய்ஸ், சான்சே இல்லை! சரத்குமார் இருக்கிறார். உருப்படியாக ஒன்றும் இல்லை. சித்தப்புவை இன்னும் கொஞ்சம் யூஸ் பண்ணி இருக்கலாம்.
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- இரண்டாம் பகுதி
- தேவையில்லாத இடத்தில் எல்லாம் வரும் பாடல்கள்
- தெலுங்கு மார்க்கெட்டிற்காக, முதல்பாதியில் இருந்த தரத்தை தாரை வார்த்தது
- எல்லா கேரக்டரும் ஓவரா பேசுவது போல் வரும் ஃபீலிங்.
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- கொஞ்சம்கூட போரடிக்காத முதல்பாதி.
- போலிக்கு மட்டும் தான் இன்னும் போலி வரலை என்பது போன்ற நச் வசனங்கள். விஜயகாந்த் படங்களில் கேட்டது. ரொம்ப நாளாச்சு, இத்தகைய சூடான வசனங்களைக் கேட்டு!
- ஆக்சன் ஹீரோவாக இல்லாமல் சாமானியனாக ஜெயம் ரவி கேரக்டரை அமைத்தது
- அமலாபாலூ+சூரி+ஜெயம் ரவி கூட்டணியில் வரும் கலகலப்பான காட்சிகள்
பார்க்கலாமா? :
முதல்பாதிக்காகவே நிச்சயம் பார்க்கலாம்.
Amala Paul ஐ அமலா பாலு என்று விழிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
ReplyDelete-காப்பி வித்த DD, யில் அந்தப் பொண்ணு புலம்பியதால் மனம் வெந்த ஒரு குடிமகன்.
விமர்சனம் நன்று!///நான் முதலிலேயே பார்த்தேன்."பார்த்தேன்" மட்டும் தான்!
ReplyDeleteDr. Butti Paul (Real Santhanam Fanz) said...Amala Paul ...ஐ அமலா பாலு என்று விழிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். -காப்பி வித்த DD, யில் அந்தப் பொண்ணு புலம்பியதால் மனம் வெந்த ஒரு குடிமகன்.///ஒரு வேள பந்தம்..........ஐ மீன் சம்பந்தம் இருக்குமோ?
ReplyDelete//Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
ReplyDeleteAmala Paul ஐ அமலா பாலு என்று விழிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
-காப்பி வித்த DD, யில் அந்தப் பொண்ணு புலம்பியதால் மனம் வெந்த ஒரு குடிமகன்.//
என்ன புலம்புச்சு?
//Subramaniam Yogarasa said...
ReplyDeleteவிமர்சனம் நன்று!///நான் முதலிலேயே பார்த்தேன்."பார்த்தேன்" மட்டும் தான்!//
விமர்சனம் போட்டேளே!
விமர்சனம் அருமை....
ReplyDeleteஅப்ப படம் பாதி பாக்கலாம்...
அமலா பால்... பாலூ ஆயாச்சா?
//சே. குமார் said...
ReplyDeleteஅமலா பால்... பாலூ ஆயாச்சா?//
நான் நாகர்ஜூனா ரசிகன்..அப்படில்லாம் சொல்ல மாட்டேன்.
Neengalum naanum adhe ajial theatre la thursday evening show pakkurom boss...
ReplyDeleteநானும் படத்தை பாக்கணும்ன்னு போனேன்ய்யா, அதுக்குள்ளே தூக்கிட்டாங்க ஆக...நான் தப்பிச்சேன் !
ReplyDeleteசரி நான் போய் பாதிபடம் பார்த்துட்டு வந்துடறேன்.. எங்க ஊர்ல இன்னைக்கு ஆயிரத்தில் ஒருவன் ரிலீஸ் ஆகுதே!!
ReplyDeleteபாதிப்படம் பார்த்தா போதுமா?
ReplyDeleteஅமலா பாலுக்காகவா????
நானும் பார்த்தேன். கடைசியில் நரசிம்ம ரெட்டி சின்ன வயதில் காணாமல் போன அண்ணன் என்று சொல்லி அசல் தமிழ் படமாகிவிடுமோனு நினைச்சேன். காமெடி நடிகர்கள் நல்ல குணசித்திர நடிகர்களாகிறார்கள்-- சூரி.
ReplyDelete// vino said...
ReplyDeleteNeengalum naanum adhe ajial theatre la thursday evening show pakkurom boss...//
நான் அஜயால்ல மட்டும் பார்ப்பதில்லீங்கோ!
//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteநானும் படத்தை பாக்கணும்ன்னு போனேன்ய்யா, அதுக்குள்ளே தூக்கிட்டாங்க ஆக...நான் தப்பிச்சேன் !//
இருக்கவே இருக்கு நெட்.
// கோவை ஆவி said...
ReplyDeleteசரி நான் போய் பாதிபடம் பார்த்துட்டு வந்துடறேன்.. எங்க ஊர்ல இன்னைக்கு ஆயிரத்தில் ஒருவன் ரிலீஸ் ஆகுதே!!//
ஆயிரத்தில் ஒருவன் எவர்க்ரீன் சூப்பர் படம்.
//தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteபாதிப்படம் பார்த்தா போதுமா?
அமலா பாலுக்காகவா????//
படம் பார்த்தால் புரியும்!
//சகாதேவன் said...
ReplyDeleteநானும் பார்த்தேன். கடைசியில் நரசிம்ம ரெட்டி சின்ன வயதில் காணாமல் போன அண்ணன் என்று சொல்லி அசல் தமிழ் படமாகிவிடுமோனு நினைச்சேன்.//
அது ஒன்னு தான் பண்ணலை!
சிறப்பான விமர்சனம்! நன்றி!
ReplyDeleteஇனி பார்க்கும் எண்ணம் ஜோசிக்க வேண்டும்!விமர்சனப்பகிர்வுக்கு பார்த்த் பின்! நன்றி!நேர்ச்சிக்கனத்துக்கு!ஹீ
ReplyDeleteஇனி பார்க்கும் எண்ணம் ஜோசிக்க வேண்டும்!விமர்சனப்பகிர்வுக்கு பார்த்த் பின்! நன்றி!நேர்ச்சிக்கனத்துக்கு!ஹீ
ReplyDelete