Wednesday, March 12, 2014

Dial M for Murder (1954) - திரை விமர்சனம்

ஹிட்ச்காக்கின் படங்களில் எனக்குப் பிடித்த படங்களைப் பற்றி ஒவ்வொன்றாக எழுதி, பதிவுலகை மெருகேற்றுவது(!) என்று முடிவு செய்திருக்கிறேன். அந்த வகையில் இன்று Dial M for Murder படம் பற்றிய ஒரு பார்வை. 
Frederick Knott என்பவர் எழுதிய ஒரு நாடகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. நம் ஊர் போன்று கதையை உருவுவது, கதையாசிரியரை கழட்டிவிடுவது என்றெல்லாம் செய்யாமல், Frederick Knott-ஐயே படத்தின் திரைக்கதையையும் வார்னர் ஸ்டுடியோ எழுத வைத்தார்கள். க்ரைம் பட மன்னன் ஹிட்ச்காக்கிற்கு கதை பிடித்துப்போக, ஜெகஜோதியாக உருவானது Dial M for Murder.

கதை மிகவும் சிம்பிள் தான். ஹீரோவின் மனைவி ஹீரோயின்(சரி..சரி.). அவருக்கு ஒரு க்ரைம் கதை எழுத்தாளருடன் கள்ளத்தொடர்பு. ஃபேஸ்புக்-சாட் இல்லாத காலத்திலேயே எழுத்தாளர்கள் இதில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்பதை அறிக. சரி, கதைக்குப் போவோம். அந்த எழுத்தாளரை நண்பர் என்று சொல்லி, வீட்டுக்கே கூட்டிவந்து கும்மி அடிக்கிறார் ஹீரோயின்.(இவள்லாம் ஹீரோயினா என்று டென்சன் ஆகக்கூடாது..அய்யோ, கதை சொல்ல விடுங்கய்யா). இவர்கள் தொடர்பை ஹீரோ கண்டிபிடிக்கிறார். கூடவே கள்ளக்காதலன் எழுதிய லவ் லெட்டரும் ஹீரோ கையில் சிக்குகிறது. இப்போ ஹீரோயினை போட்டுத்தள்ள ஹீரோ முடிவெடுக்கிறார். (சபாஷ், வெள்ளையத்தேவா!).
கொலை செய்ய, கல்லூரியில் தன்னுடன் படித்து(!) இப்போது க்ரிமினலாக இருக்கும் ஒருவனைப் பிடிக்கிறார் ஹீரோ. பக்காவாக ஒரு ப்ளான் போடுகிறார். அதாவது, கள்ளக்காதலனுடன் இரவு அவர் ஒரு பார்ட்டிக்குப் போய் விடுவார். ஹீரோயினிடம் இருக்கும் வீட்டுச்சாவியை வீட்டுக்கு வெளியே வைத்துவிட்டுச் செல்வார். கொலைகாரன், சாவியால் வீட்டைத் திறந்து(ரைட்டு..!) உள்ளே சென்று பதுங்கி இருக்க வேண்டும். சரியாக இரவு 11 மணிக்கு ஹீரோ ஃபோன் செய்வார். பத்தினி வந்து ஃபோனை எடுப்பார். அப்போது ஒரே சதக்! 

திட்டம் கேட்பதற்கு பக்காவாக இருந்தாலும், அக்காவை ஆஃப் செய்ய முடிந்ததா? என்பது தான் படமே. மேலே சொன்ன எல்லாமே முதல் பத்து நிமிடத்திற்குள் முடிந்துவிடும். அதன்பிறகு நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள், அக்மார்க் ஹிட்ச்காக் படம் என்பதை நிரூபிக்கின்றன. 

நாடகத்தின்படி அனைத்துக் காட்சிகளுமே ஒரே இடத்தில் ஹீரோ வீட்டு ஹாலில் நடப்பதாகவே இருந்ததாம். அதை படமாக எடுக்கும்போது, கொலையை உள்ளூரிலும் விசாரணையை ஃபாரினிலும்(!) வைக்கவே, படைப்பாளிகளுக்கு தோன்றும். ஆனால் ஹிட்ச்காக், அந்த இடம் கதைக்கு கொடுத்த க்ரிப்னஸ்ஸை விட விரும்பவில்லை. கூடுதலாக இரண்டு இடங்களில் சில நிமிட காட்சிகள் மட்டுமே வைத்துவிட்டு, முழுக்க முழுக்க ஹாலிலேயே படத்தையும் முடித்தார். அவரைப் பொறுத்தவரை, நாடகத்தின் அடிப்படைத் தகுதியே, அந்த வரையறுக்கப்பட்ட இடத்திற்குள்(மேடை-ஹால்) கதை நடப்பது தான். அதை டெவலப் செய்கிறேன் பேர்வழி என்று கெடுப்பது சரியல்ல என்று முடிவு செய்தார்.

இந்த இடத்தில் வரையறுக்கப்பட்ட, எல்லைக்கு உட்பட்ட கதை சொல்லல் என்பது பற்றியும் பார்த்துவிடுவோம். ஒரு கதை அல்லது திரைக்கதையானது எவ்வளவுக்கு எவ்வளவு குறைவான இடங்களில், குறைவான(தேவையான) கேரக்டர்களுடன் இருக்கிறதோ, அந்தளவுக்கு படமும் க்ரிப்பாக இருக்கும். ஆடியன்ஸும் எளிதாக படத்தை உள்வாங்கிக்கொள்ள முடியும். கிராமத்தில் ஆரம்பிக்கும் கதை, தேவையே இல்லாமல் சிட்டிக்குப் போய், இறுதிக்காட்சிவரை புதுப்புது கேரக்டர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தால், நாம் ‘இன்னும் என்னெல்லாம் வரப்போகுதோ?’ என்று டர்ர் ஆகிவிடுவோம். சமீபத்திய உதாரணம், பிரம்மன்.(அதைப் பற்றி இன்னும் விரிவாக ஒருநாள் பார்ப்போம்!).
எனவே தான் ஹிட்ச்காக், இதில் ஒரு ஹால் மற்றும் ஐந்து முக்கிய கேரக்டர்களை மட்டுமே வைத்து பக்காவான த்ரில்லரைக் கொடுக்கிறார். ஏற்கனவே சஸ்பென்ஸும் சர்ப்ரைஸும் பதிவில் பார்த்தது போல், இந்தப் படத்திலும் கொலையாளி யார் என்பதை அவர் மறைக்கவே இல்லை. கொலையாளியை போலீஸ் பிடிக்குமா, இல்லியா? ஹீரோ-ஹீரோயினுக்கு என்ன ஆகிறது எனும் சஸ்பென்ஸைத் தான் முக்கியமாக வைத்திருக்கிறார். அதனால்தான் இறுதிக்காட்சிவரை படம் பரபரப்பாகப் போகிறது. இறுதிவரை நாமும் போலீஸ் கண்டுபிடிக்குமா என்று சீட் நுனியில் உட்கார்ந்து படம் பார்க்கிறோம்.

தெளிவான கதையோட்டம் உள்ள, சிம்பிளான த்ரில்லர் மூவி, Dial M for Murder (1954).
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

 1. எப்படி உங்க எல்லாரும் நேரம் கிடைக்குது,, பொறமை பட்டிங் :-)ஹீரோயின் பின்னாடி நிற்கும் அந்த மனிதன் கொஞ்சம் நம்பியார் மாதிரியே இருக்காரே..நல்ல விமர்சனம்.. ஆவி மனது வைத்தால் பார்க்க வேண்டும்.. அதுயேன் ஆவி மனது வைத்தால்ன்னு கேக்கப்பிடாது :-)

  ReplyDelete
 2. சீனு said...

  //எப்படி உங்க எல்லாரும் நேரம் கிடைக்குது,, //

  வேற வேலை இல்லை சீனு!

  //ஹீரோயின் பின்னாடி நிற்கும் அந்த மனிதன் கொஞ்சம் நம்பியார் மாதிரியே இருக்காரே//

  அப்படிச் சொல்லக்கூடாது..”அய்யய்யோ..நம்பியார் காப்பி அடிச்சுட்டார்”ன்னு ஹைபிட்ச்ல கத்தணும்.ஒகே?

  ஆவி தான் உசிர கடையை மொத்தமா வாங்குனதா?

  ReplyDelete
 3. சினிமா சம்பத்தப்பட்ட பதிவுகளுக்கு இனிமே கமெண்ட் பண்ணமாட்டேன் .
  இது ஹன்சி மேல சத்தியம்.ச்சீ..தூ..
  சாமி மேல சத்தியம் .

  ReplyDelete
 4. @சீனு

  //பிரிஞ்சிடுச்சு தம்பி எனக்கு!

  ReplyDelete
 5. ஆவி டாக்கீஸில் இப்பதான் ஒரு ஹிட்ச்காக் படத்துக்கு விமர்சனம் போட்டேன் உங்க தியேட்டர்லயும் அதே படமா? இதுவும் என் லிஸ்டுல இருக்கு...ஹிஹி.

  ReplyDelete
 6. பார்த்தாச்சி... பார்த்தாச்சி...

  குட்டிச் செல்லத்தின் நண்பர்களுக்கு என்ன பொருட்கள் வாங்குனீர்கள்...?

  ReplyDelete
 7. அதே கதையோட மைகேல் டுக்லஸ் நடிச்ச படமும் ஒன்னு இருக்கு ...படத்த் ரசிச்சு எழுதிருக்கீங்க தல

  ReplyDelete
 8. அதே கதையோட மைகேல் டுக்லஸ் நடிச்ச படமும் ஒன்னு இருக்கு ...படத்த் ரசிச்சு எழுதிருக்கீங்க தல

  ReplyDelete
 9. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி

  வலைச்சர தள இணைப்பு : கடிக்கீறியே வாத்து !!

  ReplyDelete
 10. வர வர இவரு ஹிட்ச்சாக்கின் வெறி பிடிச்ச ரசிகர ஆயிட்டு வர்ராரே... இதெல்லாம் எங்க தேடுரது, எங்க பார்க்கறது... ஹம்ம்...

  ReplyDelete
 11. //வானரம் .said...
  சினிமா சம்பத்தப்பட்ட பதிவுகளுக்கு இனிமே கமெண்ட் பண்ணமாட்டேன் .//

  அடடா..அப்போ என்னோட 80% பதிவுகளுக்கு நீங்க கமென்ட் போட முடியாதே!..ஓகே!

  ReplyDelete
 12. //கோவை ஆவிsaid...
  ஆவி டாக்கீஸில் இப்பதான் ஒரு ஹிட்ச்காக் படத்துக்கு விமர்சனம் போட்டேன் உங்க தியேட்டர்லயும் அதே படமா? இதுவும் என் லிஸ்டுல இருக்கு...ஹிஹி.
  //

  நீங்க உங்க ஸ்டைல்ல கலக்குங்க ஆவி.

  ReplyDelete
 13. //திண்டுக்கல் தனபாலன்said...
  குட்டிச் செல்லத்தின் நண்பர்களுக்கு என்ன பொருட்கள் வாங்குனீர்கள்...? //

  அது போய்க்கிட்டே இருக்குய்யா.

  ReplyDelete
 14. //selvasankar said...
  அதே கதையோட மைகேல் டுக்லஸ் நடிச்ச படமும் ஒன்னு இருக்கு ...படத்த் ரசிச்சு எழுதிருக்கீங்க தல.//

  ஹிட்ச்காக் படங்களை பெர்மிசன் வாங்கியும், வாங்காமலும் பலபேர் ரீமேக்கி இருக்கிறார்கள். அந்த படத்தின் பெயர் சொல்ல முடியுமா, பாஸ்?

  ReplyDelete
 15. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
  இதெல்லாம் எங்க தேடுரது, எங்க பார்க்கறது... //

  டொரன்ட் கிடைக்குது மொக்கை..தேடுங்க.

  ReplyDelete
 16. Ithey kathaiyoda tamil la savi nu oru padam irukku , enna kodumaina athi hindhi padathoda remake.

  ReplyDelete
 17. @Madhav அட, ஆமாங்கோ..ஆமா..கூச்சப்படாம இப்படி காப்பி அடிச்சு வச்சிருக்காங்களே:

  http://www.dailymotion.com/video/xsj66g_dvd-rip-saavi_shortfilms

  ReplyDelete
 18. IT WAS ALREADY REMADE IN TAMIL AS SATYRAJ,SARITHA STARRER MOVIE AS CHAAVI IN 1985

  ReplyDelete
 19. இதை தழுவி, தாக்கத்தில், சாயலில், ஒத்துப்போய் ( காப்பி அடித்து என்று சொல்லாதீர்கள்)சத்தியராஜ், சரிதா, ஜெய்சங்கர் நடிப்பில் சாவி என்றொரு தமிழ் படம் உண்டு. எப்போதோ பார்த்தது.

  ReplyDelete
 20. தமிழில் இதை தழுவி, சாயலில், தாக்கத்தில், கான்செப்டில் ( காப்பி அடித்து என்று சொல்லாதீர்கள்) சாவி என்றோரு படம் உண்டு. சத்தியராஜ், சரிதா, ஜெய்சங்கர் நடித்தது. சின்ன வயசில் பார்த்தது.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.