Monday, February 3, 2014

ஹிட்ச்காக் : சஸ்பென்ஸும் சர்ப்ரைஸும் ரம்மியும்

சமீபத்தில் ரம்மி படத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போதே இயக்குநர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கை நினைத்துக்கொண்டிருந்தேன். ஆங்கில த்ரில்லர் மூவி எடுப்பதில் மன்னனாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக (1922-1976) கோலோச்சியவர் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ரம்மி படம் ஒரு த்ரில்லராகவே ஆரம்பித்தது. 

யாராவது கதவைத் தட்டினால்கூட டெரர் எஃபக்ட் கொடுத்து ரணகளப்படுத்தியிருந்தார்கள். ஒளிப்பதிவு-இசை-எடிட்டிங் மூன்றும் இணைந்து நல்ல த்ரில்லைக் கொடுத்தன, தனித்தனி காட்சியாகப் 
பார்க்கையில். ஆனால் படத்தின் கதையும், லாஜிக் இல்லாமல் தேவையற்ற விஷயங்களையும் சஸ்பென்ஸாக வைத்து ஆடியன்சே குழம்பிப்போகிற அளவுக்கு திரைக்கதையில் சொதப்பி இருந்தார்கள். அதனால் தான் ஹிட்ச்காக் பற்றி நினைக்க வேண்டியதாயிற்று.
Francois Truffaut என்பவர் ஹிட்ச்காக்கை எடுத்த 12 மணி நேர பேட்டி Hitchcock என்ற பெயரில் புத்தகமாக வந்துள்ளது. அவரது படங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறார் ஹிட்ச்காக். சமீபகாலமாக ஹிட்ச்காக் படத்தை பார்ப்பதும், புத்தகத்தில் அந்த படத்தின் பகுதியைப் படிப்பதுமாக சுவாரஸ்யமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த புத்தகத்தில் சினிமா ஆர்வலர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் பற்றிப் பேசுகிறார் ஹிட்ச்காக். அதில் முக்கியமானது சஸ்பென்ஸ்க்கும் சர்ப்ரைஸ்க்கும் அவர் கொடுக்கும் விளக்கம். 

நாம் பொதுவாக இரண்டையும் ஒரே பொருளிலோ அல்லது மாற்றி மாற்றியோ தான் உபயோகிக்கிறோம். தமிழில் Suspense என்பதை ஆவலுடன் கூடிய தவிப்பு என்று மொழிபெயர்க்கலாம். Surprise என்பது ஆச்சரியம் அல்லது அதிர்ச்சியைக் குறிக்கும். பேட்டியின்போது இரண்டையும் வரையறை செய்யும்படி ஹிட்ச்காக்கை கேட்கிறார் ட்ரஃபாட். அதற்கு அவர் கொடுத்த விளக்கம், இன்றளவும் போற்றப்படுகிறது. ஹிட்ச்காக் சொல்கிறார்:

” இரண்டுக்கும் இடையே குறிப்பிடத்தகுந்த வேற்றுமை உண்டு. பெரும்பாலான திரைப்படங்கள் இன்னும் இரண்டையும் தொடர்ந்து குழப்பிக் கொள்கின்றன. இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். நமது டேபிளுக்குக் கீழே ஒரு பாம் வைக்கப்பட்டிருப்பதாகக் கொள்வோம். அது நமக்கோ ஆடியன்சுக்கோ தெரியாது. திடீரென பாம் வெடிக்கின்றது. ஆடியன்ஸ் சர்ப்ரைஸ் ஆகிவிடுவார்கள்.(நாம் பீஸ் பீஸாகிவிடுவோம்-என்பதை அவர் சொல்லவில்லை!). ஆனால் அந்த சர்ப்ரைஸ்க்கு முன்னால், இது ஒரு வழக்கமான சாதாரண சீன் தான். ஆடியன்ஸ் மனதில் எந்த எதிர்பார்ப்பையும் விளைவுகளையும் உண்டாக்காத சாதாரண சீன் அது. 
இப்போது இப்படி வைத்துக்கொள்வோம். ஆடியன்ஸுக்கு பாம் வைக்கப்பட்டிருப்பது ஏற்கனவே தெரியும். வில்லன் வந்து பாம் வைக்கும் சீனை இதற்கு முன் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால் நம் இருவருக்கும் அது தெரியாது. இன்னும் கால்மணி நேரத்தில் பாம் வெடிக்கும் என்பதையும் அவர்கள் அறிவார்கள். ஆனால் அதை அறியாமல் நாம் இருவரும் கேசுவலாக ‘அப்புறம், பொண்டாட்டி ஊருக்குப் போனதுல இருந்து ஒரே ஜாலியோஜிம்கானா தானா?’ என்று பேசிக்கொண்டிருக்கிறோம். இதைப் 
பார்க்கின்ற ஆடியன்ஸ் பதறுவார்கள். அட வெண்ணை வெட்டிகளா, கீழே பாம் இருக்குடா. எந்திரிங்கடா என்று பதறுவார்கள். அதே சீன் தான். அதே வழக்கமான உரையாடல்தான். ஆனால் ஆடியன்ஸும் இந்த சீனில் பங்குபெறுகிறார்கள். இது தான் சஸ்பென்ஸ்.

முதல் உதாரணத்தில் ஆடியன்ஸுக்கு நாம் பாம் வெடிக்கும் 15 செகண்ட்ஸ் சர்ப்ரைஸ் மட்டும் கொடுக்கிறோம். இரண்டாவது உதாரணத்தில் 15 நிமிட சஸ்பென்ஸை ஆடியன்ஸுக்கு கொடுக்கிறோம். எனவே எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் ஆடியன்ஸுக்கு ‘மேட்டரை’ தெரியப்படுத்திவிடுவது நல்லது. அந்த மேட்டர், கதையின் முக்கிய நிகழ்வாகவோ, ட்விஸ்ட்டாகவோ, எதிர்பாராத முடிவாகவோ இருந்தால் மட்டுமே சர்ப்ரைஸாக வைக்க வேண்டும்”.


உதாரணமாக முதல்வனில் வரும் பாம் வெடிக்கும் சீனை எடுத்துக்கொள்ளலாம். அம்மா-அப்பா அன்பில் ஹீரோ நனையும்போது (இன்னும் எத்தனை காலத்துக்குய்யா நனைவாங்க?ன்னு பெருசுக யாரும் கேட்க மாட்டாங்கன்னு நம்புறேன்.), ஹீரோக்கு ஃபோன் வருகிறது. சிக்னல் கிடைக்கவில்லை என்று வெளியே வருகிறார். நாமும் வழக்கமான சீன் தான் என்று அசுவராஸ்யமாக உட்கார்திருக்கையில் ‘பூம்’!. அது தான் ஹீரோவையும் ‘அரசியல்வாதி’யாக ஆக்கும் நிகழ்வு. ஹீரோ அந்த அதிர்ச்சியை உணரும் அதே நேரத்தில் ஆடியன்ஸும் உணர வேண்டும் என்று ஷங்கர் முடிவு செய்துள்ளார். எனவே அது சர்ப்ரைஸாக வருகிறது. 

சமீபத்தில் வந்த ‘இவன் வேற மாதிரி’ யில் ஜவுளிக்கடை பொம்மை மாதிரி இருக்கும் ஹீரோயினை வில்லன், திருஷ்டி பொம்மை ஆக்கி 20 மாடி பில்டிங்கில் உயரத்தில் கட்டிவிடுகிறான். அங்கே வந்து ஹீரோ தேடும்போது, நமக்கு ஹீரோயின் இருக்கும் இடம் தெரிகிறது. ‘டேய்..அங்க தாண்டா இருக்கா..நல்லா பாருடா’ என்று மனதுக்குள் நாம் கதறுகிறோம் அல்லவா? அது தான் சஸ்பென்ஸ் காட்சியின் ஸ்பெஷாலிட்டி.

ஹிட்ச்காக் ஒரு சீனை மட்டுமே உதாரணமாகக் கொண்டு மேலே விளக்கினாலும், மொத்த திரைக்கதைக்குமே அப்ளை ஆகக்கூடிய கான்செப்ட் அது. ஹிட்ச்காக் படங்களில் கொலை நடந்தால், பெரும்பாலும் கொலையாளி யார் என்பதை ஆடியன்ஸுக்கு சொல்லி விடுவது அவர் வழக்கம். அப்போது தான் கொலையாளியை போலீஸோ, ஹீரோவோ நெருங்கும்போது அல்லது விலகும்போது நாமும் இன்வால்வ் ஆவோம். 

நேற்று ரம்மி பார்க்கும்போது சஸ்பென்ஸாக வர வேண்டிய விஷயங்கள் சர்ப்ரைஸாக வந்திருப்பதைப் பார்த்து கவலையாக இருந்தது. சர்ப்ரைஸில் இன்னொரு முக்கியமான விஷயம், லாஜிக். ட்விஸ்ட் வைக்கிறேன் பேர்வழி என்று லாஜிக்கை விடக்கூடாது. லாஜிக் இல்லாமல் ட்விஸ்ட் வைத்தால், ஆடியன்ஸ் அப்செட் ஆகிவிடுவார்கள் என்பதை நேற்று தியேட்டரில் வந்த ‘உஸ்ஸ்’ சப்தங்களில் உணர முடிந்தது. 

ஹீரோவும் அல்லக்கை விஜய் சேதுபதியும்(கடுப்பைக் கிளப்பிட்டாங்க, யுவர் ஆனர்!) கிராமத்தின் நடுவே வாடகைக்கு ரூம் எடுத்து தங்கி இருக்கிறார்கள். ஊருக்குள் வலம் வருகிறார்கள். அந்த ஊர்ப்பெண்களை காதலித்தால் வெட்டி விடுவார்கள் என்றும் தெரிகிறது. அல்லக்கையை கிராமத்தில் விட்டுவிட்டு, ஹீரோ ஊருக்குப் போகிறார். திரும்பி வந்தால் ஒரு லெட்டர் மட்டும் அந்த வீட்டில் இருக்கிறது. படித்தால், அல்லக்கை காதலியுடன் ஓடிப்போயிருக்கிறார். இது சர்ப்ரைஸ். ஹீரோ ஊரிலிருந்து கிளம்பி, பஸ்ஸில் பயணித்து, வீடு வந்து சேரும்வரை ‘ஏண்டாப்பா இப்படி இழுக்கிறீங்க?’ என்று உட்கார்திருக்கிறோம். நோ இன்வால்வ்மெண்ட். அதற்குப் பிறகு தான் ஓடிப்போன விஷயமே தெரிய வருகிறது. இதே தான் மொத்த படக்கதையின் பிரச்சினையும். எது நமக்குத் தெரியணுமோ, அது தெரிவதில்லை.
ஒரு மேட்டரை எங்கே, எப்படி ஓப்பன் செய்ய வேண்டும் என்ற ஜட்ஜ்மெண்ட், மிகவும் முக்கியம். இல்லையென்றால் ஆப்பு ஆகிவிடும். அதைப் பற்றி அடுத்த பதிவில் ஒரு குறும்பட அலசலுடன் பார்ப்போம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

  1. ////‘டேய்..அங்க தாண்டா இருக்கா..நல்லா பாருடா’ என்று மனதுக்குள் நாம் கதறுகிறோம் அல்லவா?///

    இது வேறயா.... அப்போ இவர பிட்டுப்படம் பாக்க அனுப்புனா வில்லங்கத்தோட வந்து நிப்பாரு போல இருக்கே.......?

    ReplyDelete
  2. அப்போ படம் புட்டுகிச்சா ?

    ReplyDelete
  3. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////‘டேய்..அங்க தாண்டா இருக்கா..நல்லா பாருடா’ என்று மனதுக்குள் நாம் கதறுகிறோம் அல்லவா?///

    இது வேறயா.... அப்போ இவர பிட்டுப்படம் பாக்க அனுப்புனா வில்லங்கத்தோட வந்து நிப்பாரு போல இருக்கே.......?//

    வில்லங்கமா ? வில்"லிங்கமான்னு தெளிவா சொல்லும்ய்யா.

    ReplyDelete
  4. நல்ல ஒப்பீட்டுடன் கூடிய அலசல்!மேன்மக்கள்(இயக்குனர்'ஸ்)எப்ப தான் திருந்தப் போறாங்களோ?

    ReplyDelete
  5. சஸ்பென்ஸ் / சர்ப்ரைஸ் உதாரணமும் விளக்கங்களும் அற்புதம். நம்ம ஊர்ல பாம்-ஐ செயலிழக்கச்செய்கிறேன் என்று கடைசி செகெண்டுல பச்சை ஒயரு, சிவப்பு ஒயரை கட் பண்ணுவாங்களே அது என்னமாதிரி சஸ்பென்ஸ் பாஸ்....?

    ReplyDelete
  6. ////அம்மா-அப்பா அன்பில் ஹீரோ நனையும்போது (இன்னும் எத்தனை காலத்துக்குய்யா நனைவாங்க?ன்னு பெருசுக யாரும் கேட்க மாட்டாங்கன்னு நம்புறேன்.)///ஹி!ஹி!!ஹீ!!!கேக்கல!ஏன்னா இத விட்டா அவுங்களுக்கு வேற 'பெஸ்ட்டா' ஒன்னும் தெரியாதே?

    ReplyDelete
  7. Manimaran said...
    சஸ்பென்ஸ் / சர்ப்ரைஸ் உதாரணமும் விளக்கங்களும் அற்புதம். நம்ம ஊர்ல பாம்-ஐ செயலிழக்கச்செய்கிறேன் என்று கடைசி செகெண்டுல பச்சை ஒயரு, சிவப்பு ஒயரை கட் பண்ணுவாங்களே அது என்னமாதிரி சஸ்பென்ஸ் பாஸ்....?///நீலம்,சிகப்பு,மஞ்சள் கலரு ஒயரு தானே?///"பச்சை" யில அப்புடி என்ன நாட்டம்?ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
  8. //பன்னிக்குட்டி ராம்சாமிsaid...

    இது வேறயா.... அப்போ இவர பிட்டுப்படம் பாக்க அனுப்புனா வில்லங்கத்தோட வந்து நிப்பாரு போல இருக்கே.......? //

    எந்த படம்ன்னாலும் அதோட ஐக்கியம் ஆகும் கலாரசிகன் நான்.

    ReplyDelete
  9. //MANO நாஞ்சில் மனோsaid...
    அப்போ படம் புட்டுகிச்சா ? //

    ம்..நட்டுக்கிச்சு!

    ReplyDelete
  10. //MANO நாஞ்சில் மனோsaid...

    வில்லங்கமா ? வில்"லிங்கமான்னு தெளிவா சொல்லும்ய்யா.//

    ஆமா, நீங்க வேற அவருக்கு எடுத்துக்கொடுங்க.

    ReplyDelete
  11. Subramaniam Yogarasa said...
    //நல்ல ஒப்பீட்டுடன் கூடிய அலசல்!மேன்மக்கள்(இயக்குனர்'ஸ்)எப்ப தான் திருந்தப் போறாங்களோ? //

    இந்த படம் மாதிரியே எல்லா டப்பாக்களும் ஒதுக்கப்படும்போது!


    //ஹி!ஹி!!ஹீ!!!கேக்கல!ஏன்னா இத விட்டா அவுங்களுக்கு வேற 'பெஸ்ட்டா' ஒன்னும் தெரியாதே? // பெரியவங்க சொன்னா சரி தான்.

    //நீலம்,சிகப்பு,மஞ்சள் கலரு ஒயரு தானே? // எவ்ளோ தெளிவா கவனிச்சிருக்காங்க!

    ReplyDelete
  12. //Manimaran said...
    சஸ்பென்ஸ் / சர்ப்ரைஸ் உதாரணமும் விளக்கங்களும் அற்புதம். நம்ம ஊர்ல பாம்-ஐ செயலிழக்கச்செய்கிறேன் என்று கடைசி செகெண்டுல பச்சை ஒயரு, சிவப்பு ஒயரை கட் பண்ணுவாங்களே அது என்னமாதிரி சஸ்பென்ஸ் பாஸ்....? //

    அது சஸ்பென்ஸ் தான். அடிக்கடி அதே மாதிரி வச்சு, கிளிஷே சஸ்பென்ஸ்ன்னு ஆகிடுச்சு.

    ReplyDelete
  13. ///
    சமீபகாலமாக ஹிட்ச்காக் படத்தை பார்ப்பதும், புத்தகத்தில் அந்த படத்தின் பகுதியைப் படிப்பதுமாக சுவாரஸ்யமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன்/////

    போற போக்க பார்த்தா, இவரும் கேபிள் சங்கர் போல கூடிய சீக்கிரமே படம் எடுத்து, ஹீரோயின் என் கட்டுபாட்டில் இல்லைன்னு பேட்டி கொடுப்பாரு போல இருக்கே...

    ReplyDelete
  14. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
    போற போக்க பார்த்தா, இவரும் கேபிள் சங்கர் போல கூடிய சீக்கிரமே படம் எடுத்து, ஹீரோயின் என் கட்டுபாட்டில் இல்லைன்னு பேட்டி கொடுப்பாரு போல இருக்கே...//

    நான் ஒரு மாடுதானய்யா வாங்கப்போறேன்னு சொன்னேன்..அதுக்கு என்னை போஸ்டர்/சிஎம் வரைக்கும் இழுத்துட்டு வந்திட்டீங்களேய்யா!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.