சமீபத்தில் இந்த குறும்படத்தை பார்க்க நேர்ந்தது. இழிநிலை குறும்படம் இந்த வரிகளுடன் ஆரம்பிக்கிறது.
எமது மொழி எங்களின் அடையாளம் - அதை இழந்தோம்
வரலாற்றின் வாசல்களில் தூக்கி எறியப்படுவோம். - இயக்குநர்அகீபன்
படித்ததுமே பிடித்துப்போன வரிகள். குறும்படத்தின் கருப்பொருளும் இதுதான்.
படித்ததுமே பிடித்துப்போன வரிகள். குறும்படத்தின் கருப்பொருளும் இதுதான்.
குறும்படத்தினை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.
1. பட்டப்படிப்பின் இறுதிக்காலத்தில் உள்ள மாணவர்கள், ஏதேனும் ஒரு மொழியைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பிற தமிழ் மாணவர்கள் உட்பட, பலரும் ஃப்ரெஞ்ச், ஆங்கிலம் என மற்ற மொழிகளை ஆய்வுக்கு எடுக்க, ஹீரோ மட்டும் தமிழை தன் ஆய்வுக்கு எடுக்கிறார். ’இதையெல்லாம் மதிக்க மாட்டார்கள்’ என்று நண்பன் பயமுறுத்தும்போதும், ஹீரோ தமிழை ஆராய்ச்சி செய்யவே இங்கு வந்ததாகச் சொல்கிறார்.
2. சொல்லாமல் கொள்ளாமல் ஒரு ஃப்ளாஷ்பேக் விரிகிறது. நல்ல சூட்டிகையான குழந்தையாக இருக்கும் ஹீரோ, சரியாகப் படிப்பதில்லை என கம்ப்ளைண்ட் வருகிறது. எனவே ஒரு மனநல மருத்துவரைப் பார்க்கிறார்கள். அவர் பையனிடம் என்னென்ன மொழிகள் தெரியும் என்று கேட்க, அவன் ‘ஃப்ரெஞ்ச், ஆங்கிலம்’ என்கிறான். தமிழ் தெரியவில்லை. ’இனிமே தமிழ் எதுக்கு?’ என்று பெற்றோரும் கேட்கிறார்கள். டாக்டர், ஒரு மனிதன் தாய்மொழியில் தான் சிந்திக்க வேண்டும். அதுவே சிறந்தது. தாய்மொழியை பிள்ளைக்கு சொல்லிக்கொடுங்கள் என்று சொல்ல, பெற்றோர் திருந்துகிறார்கள். ஃப்ளாஷ்பேக் முடிகிறது.
3. வீட்டில் பெற்றோருடன் பேசிக்கொண்டிருக்கும் மகன், தமிழை எல்லோரும் புறக்கணிக்கிறார்களே..தமிழ் அழிந்துவிடுமா? என்று நீண்ட வசனங்களின் மூலம் புலம்புகிறான். பெற்றோர் அப்படியெல்லாம் ஆகாது மகனே என்று ஆறுதல் சொல்கிறார்கள்.
4. அப்புறம் அவ்வளவு தான். படக்கென்று குறும்படம் முடிந்துவிட்டது.
தாய்மொழியை குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டியதன் அவசியம், தனது ஆய்வுக்கு தமிழை எடுக்கத்துணியும் தற்கால அதிசய இளைஞன், பெற்றோரிடம் பேசும்போது வெளிப்படும் மொழியின்மீதான பாசம் என எல்லாமே பாரட்டப்பட வேண்டிய விஷயங்கள் தான். ஆனால் அவையெல்லாம் ஒரு கட்டுரையில் இருந்தால் ஓகே. குறும்படமாக வரும்போது, பிரச்சார நெடி தாங்கவில்லை.
வீரபாண்டியன் என்று விஜயகாந்த் படம் ஒன்று உண்டு. அதைப் பார்க்க என் மாமா என்னை டூரிங் டாக்கீஸ் அழைத்துப்போயிருந்தார். ஆவணப்படம் போன்ற ஒன்று ஓடத்துவங்கியது. புகைப்பதற்கு எதிராகவோ அல்லது குடிப்பதற்கு எதிராகவோ கருத்து மழை. எல்லாரும் பொறுமை இழந்து, ஆபரேட்டர் படத்தைப் போடு என்று கத்தினார்கள். நான் சொல்வது, ஏறக்குறைய 25 வருடத்திற்கு முன்பு. படங்களில் வெளிப்படையாக கருத்து சொல்வது என்பது அப்போதே புளித்துப்போன விஷயம். எனவே குறும்பட படைப்பாளிகள், வசனங்களில் கருத்து சொல்வதை விடுத்து, காட்சிகளின் மூலம் கருத்தை பார்ப்போர் உணர வைப்பது நல்லது. (இந்த படத்திற்கு மட்டும் இதைச் சொல்லவில்லை. சமீபத்தில் நான் பார்த்து டரியலான பல குறும்படங்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன்.)
சினிமா என்பதே காட்சி ஊடகம் என்று ஆனபின், வசனத்தை நீட்டி முழக்கி, சொல்ல வந்ததை வசனம் மூலமாகவே சொல்ல முயற்சிப்பதை தவிர்ப்பது நல்லது. அடுத்து இந்த குறும்படத்தில் உள்ள பிரச்சினை, கதை என்ற ஒன்றே இல்லாதது. மூன்று துண்டு துண்டாக சம்பவங்கள் மட்டுமே இருக்கிறதே ஒழிய, முழுமையான கதை என்று ஏதும் இல்லை. ஃப்ளாஷ்பேக் பகுதியை மட்டுமே கூட தனி குறும்படமாக எடுத்திருக்கலாம். ஒரு முழுமையாவது இருந்திருக்கும்.
ஹீரோ ஆய்வு செய்ய ஆரம்பிக்கிறான் - தாய்மொழி ஏன் படித்தான் என ஃப்ளாஷ்பேக் - தமிழ் பற்றி வசனம் ஆகிய இந்த மூன்று துண்டுகளும் ஒட்டாமல் நிற்கின்றன. ஃப்ளாஷ்பேக்கை முதலில் வைத்து நேர்கோட்டில் கதை சொல்வது, இடையில் வைப்பது, முடிவில் வைப்பது போன்ற ஆப்சன்கள் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியெல்லாம், பெரிதாக யோசிக்காமல் ‘நல்ல கருத்து...சொல்லிடுவோம்’ என்று ஆர்வத்தில் இறங்கி இருப்பது தெரிகிறது. மொழி ஆய்வும் பாதியில் தொங்க, கதையும் முன்னே, பின்னே அலைபாய, முடிவு என்பது இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது குறும்படம்.
நண்பர்கள் பேசிக்கொள்ளும் இடத்தில் லைட்டிங் கண்ணை எரித்தாலும், மற்ற இடங்களில் பாராட்டத்தக்க ஒளிப்பதிவு + நல்ல இசை(திலீப்), அலட்டல் இல்லாத நடிப்பு என எல்லாம் அமைந்தும், ஒழுங்கற்ற கதை+ திரைக்கதையால் திருப்தி இல்லாமல் போய்விட்டது. அகீபனின் இந்த டீம், அடுத்த படத்தை இன்னும் பெட்டராகக் கொடுக்கும் என்று நம்புவோம்.
டிஸ்கி: நான் ஒரு விமர்சகன் மட்டுமே. ‘குறை யார் வேணா சொல்லலாம்..நீ படத்தை நல்லா எடுத்துக்காட்டு பார்ப்போம்’ என்று சவால்விட நினைப்பவர்கள், ஷகீலா கால்ஷீட்டுடன் எந்நேரமும் என்னை அணுகலாம்.
This comment has been removed by the author.
ReplyDelete"நீ படத்தை நல்லா எடுத்துக்காட்டு பார்ப்போம்’ என்று சவால்விட நினைப்பவர்கள், ஷகீலா கால்ஷீட்டுடன் எந்நேரமும் என்னை அணுகலாம்."அண்ணே இது குறும்படம் இல்ல , குறும்பு படம்.
ReplyDelete//ரஹீம் கஸாலி said... [Reply]
ReplyDeleteசரி சகீலாவேதான் வேணுமா?//
ஏன் ,வேற ஐட்டம் கைல இருக்கா?
//வானரம் . said...
ReplyDelete"அண்ணே இது குறும்படம் இல்ல , குறும்பு படம்.//
ஏம்யா, நீரு ஒரு பிரபல பதிவர்..ஃபேக் ஐடில அலையுறீருன்னு ஒருத்தர் சொன்னாரு. உண்மையா?
குறும்பட விமர்சனம் நன்று...
ReplyDeleteஎப்படி ஷகிலா கால்ஷீட் வாங்கிட்டு வீட்டுல கூப்பிட்டு சொல்லி சொல்லச் சொல்லணுமா?
//சே. குமார் said...
ReplyDeleteகுறும்பட விமர்சனம் நன்று...
எப்படி ஷகிலா கால்ஷீட் வாங்கிட்டு வீட்டுல கூப்பிட்டு சொல்லி சொல்லச் சொல்லணுமா?//
நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு..அவ்வ்!
மொத கமெண்டு என்னோடது இல்லையா ? ரஹீம் கஸாலி அண்ணே
ReplyDeleteதிருச்சியில நடக்க போற திமுக மாநாட்ட பத்தி எழுதாம இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?
ரஹீம் கஸாலி-சரி சகீலாவேதான் வேணுமா? ஆமா, அண்ணனுக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டே தான்
வேணுமாம்.
ReplyDelete"செங்கோவி -ஏம்யா, நீரு ஒரு பிரபல பதிவர்..ஃபேக் ஐடில அலையுறீருன்னு ஒருத்தர் சொன்னாரு. உண்மையா?"
ஃபேக் ஐடில அலையிறது உண்மைதான்
ஆனா நான் அந்த
பிரபல பதிவர் கிடையாது.
இன்றைக்கு எதுவுமே அதிக வச(ஜ)னம் இருந்தால் திரைப்படமே 'ஓடி' விடும்... நீங்கள் சொல்வது போல் குறும்படம் காட்சிகளால் புரிய வைத்தால் "வெற்றி"...
ReplyDeleteதாய் மொழியில் சிந்திப்பதன் அவசியத்தியை மிகத் தெளிவாக உணர்ந்துகொண்டு இருக்கிறேன், இங்கு வந்து. இன, மொழி அடையாளம் என்பது மிகவும் முக்கியம். ஆயினும் இன்றைய உலகில் அது இருக்கும் நிலை ரொம்பவும் கவலைக்கிடமாகவே உள்ளது. ஒன்று அடையாளம் என்பதே மானக்கேடு என நினைக்கிறார்கள், அல்லது தன் அடையாளத்தை உயர்த்த பிற அடையாளங்களை நிந்திக்கிறார்கள். என்று மாறும் இந்தப் போக்கு?
ReplyDeleteநல்ல பகிர்வு!குறும் படம் என்றால் நீங்கள் சொவது போல்,காட்சிகளிலேயே சொல்ல வந்த கருத்தை சொல்லி விட வேண்டும் என்பது தான் என் கருத்தும்.இல்லா விட்டால் சீரியல் ரேஞ்சுக்குப் போய் விடும்.டாக்டர்(புட்.பால்) சொன்னதும் நியாயம் தான்!
ReplyDeleteநல்ல பகிர்வு!குறும் படம் என்றால் நீங்கள் சொவது போல்,காட்சிகளிலேயே சொல்ல வந்த கருத்தை சொல்லி விட வேண்டும் என்பது தான் என் கருத்தும்.இல்லா விட்டால் சீரியல் ரேஞ்சுக்குப் போய் விடும்.டாக்டர்(புட்.பால்) சொன்னதும் நியாயம் தான்!
ReplyDeleteகுறும் படம்....................பேரே 'இழிநிலை' தானே ன்னு நினைச்சாங்களோ,என்னமோ?ஹி!ஹி!!ஹீ!!!
ReplyDelete@Dr. Butti Paul (Real Santhanam Fanz)
ReplyDeleteசொல்லா விட்டாலும் கூட நாம் இனத்தை சொல்லியே அடையாளப் படுத்தப் படுவோம்.அதற்கு சொல்லி விடலாம்.
ஆலொசனைகள் அருமை! பிரச்சார நெடி அடித்தால் யாரும் பார்க்க மாட்டார்கள்! உண்மை!
ReplyDelete//திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஇன்றைக்கு எதுவுமே அதிக வச(ஜ)னம் இருந்தால் திரைப்படமே 'ஓடி' விடும்... நீங்கள் சொல்வது போல் குறும்படம் காட்சிகளால் புரிய வைத்தால் "வெற்றி"...//
தனபாலன் படிக்காம கமெண்ட் போடுவார்ன்னு அவதூறு பரப்பியவர்களுக்கு, சரியான பதிலடி இந்த கமெண்ட்!
//Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
ReplyDeleteதாய் மொழியில் சிந்திப்பதன் அவசியத்தியை மிகத் தெளிவாக உணர்ந்துகொண்டு இருக்கிறேன், இங்கு வந்து. இன, மொழி அடையாளம் என்பது மிகவும் முக்கியம். ஆயினும் இன்றைய உலகில் அது இருக்கும் நிலை ரொம்பவும் கவலைக்கிடமாகவே உள்ளது. ஒன்று அடையாளம் என்பதே மானக்கேடு என நினைக்கிறார்கள், அல்லது தன் அடையாளத்தை உயர்த்த பிற அடையாளங்களை நிந்திக்கிறார்கள். என்று மாறும் இந்தப் போக்கு?//
மிக நியாயமான கேள்வி புட்டிப்பால்..இதுவரை கிராமங்களில் மட்டுமே வாழ்ந்த தமிழ், இப்போது இணையத்திலும் வாழ ஆரம்பித்துள்ளது. இடையில் இருக்கும் சில அரைகுறைகள் தான் பந்தாவுக்காக தமிழை ஒதுக்குகிறார்கள். ஆனாலும் தமிழ் வாழும்.
// Subramaniam Yogarasa said...
ReplyDeleteநல்ல பகிர்வு!குறும் படம் என்றால் நீங்கள் சொவது போல்,காட்சிகளிலேயே சொல்ல வந்த கருத்தை சொல்லி விட வேண்டும் என்பது தான் என் கருத்தும்.இல்லா விட்டால் சீரியல் ரேஞ்சுக்குப் போய் விடும்.டாக்டர்(புட்.பால்) சொன்னதும் நியாயம் தான்!//
உண்மை தான் ஐயா.
// சேக்காளி said...
ReplyDelete@Dr. Butti Paul (Real Santhanam Fanz)
சொல்லா விட்டாலும் கூட நாம் இனத்தை சொல்லியே அடையாளப் படுத்தப் படுவோம்.அதற்கு சொல்லி விடலாம்.//
கரெக்ட்..என்ன தான் படம் காட்டுனாலும், பலருக்கும் நாம் பாண்டி தான்!
// s suresh said...
ReplyDeleteஆலொசனைகள் அருமை! பிரச்சார நெடி அடித்தால் யாரும் பார்க்க மாட்டார்கள்! உண்மை!//
நன்று சுரேஸ்.
இத்தனைதூரம் அலசி ஆராய்ந்ததுக்கு நன்றிகள்.:)))
ReplyDeleteஒ ஷகீலா கால்சீட்டேதான் வேணுமா ? அந்த ரேஷ்மா, பரியா ச்சே மரியா எல்லாம் வேணாமா ?
ReplyDelete//தனிமரம்said...
ReplyDeleteஇத்தனைதூரம் அலசி ஆராய்ந்ததுக்கு நன்றிகள்.:)))
//
ரொம்ப தூரம் இல்லை நேசரே.
//MANO நாஞ்சில் மனோsaid...
ReplyDeleteஒ ஷகீலா கால்சீட்டேதான் வேணுமா ? அந்த ரேஷ்மா, பரியா ச்சே மரியா எல்லாம் வேணாமா ?
//
பெரிதினும் பெரிது கேள்!
////‘குறை யார் வேணா சொல்லலாம்..நீ படத்தை நல்லா எடுத்துக்காட்டு பார்ப்போம்’////
ReplyDeleteஅண்ணா ஒரு படைப்பாளி ரசிகனுக்காகவே படைப்பை செய்கிறான் ஆகவே அவன் எது சொன்னாலும் செவிமடுக்கத் தான் வேண்டும் :)