Thursday, February 20, 2014

போண்டா சாரும் கஸ்டமர் கேரும்

டிஸ்கி: இன்னைக்கு ‘ஆஹா கல்யாணம்’ன்னு ஒரு படம் ரிலீஸ் ஆகியிருக்கு. ஏதோ ஒரு சூப்பர் ஹிட் இந்திப்படத்தின் ரீமேக்ன்னு சொன்னாங்க. ஆனாலும் போஸ்டர் மற்றும் படப்பெயரைப் பார்த்தாலே, பயமா இருந்ததால நான் போகலை. யாராவது பார்த்துட்டு சொல்லட்டும். நம்ம சொம்பு, நமக்கு முக்கியம்! (இப்போ பிரம்மன் ரிலீஸ் ஆகிடுச்சு..காலையில் விமர்சனம் வரும்!)

நான் பி.ஈ. ஃபைனல் இயர் படிக்கும்போது, புராஜக்ட் பண்ண வேண்டிய நேரம் வந்தது. அப்போ போண்டா சார்கிட்ட புராஜக்ட் பண்ணுவோம்ன்னு முடிவு பண்ணோம். போண்டாங்கிறது நாங்க வச்ச பட்டப்பேரு. ஆளு பார்க்க அழகா இருப்பாரு. கன்னம் எல்லாம் உப்பிப்போய், முகமே போண்டா மாதிரி இருந்ததால போண்டா சார் ஆனார். ரொம்ப நல்ல மனுசன் வேற. அதனால அவர் தான் நமக்கு சரிப்பட்டு வருவார்ன்னு அவரைப் பிடிச்சோம். 
பெட்ரோல் எஞ்சினை எல்.பி.ஜி. எஞ்சினா மாத்தி, பெர்ஃபாமன்ஸ் அனலைஸிஸ் பண்ணி, ஒரு தீஸிஸ் சப்மிட் பண்ணலாம்ன்னு சொன்னார். காலேஜ் லேப்ல இருந்த பெட்ரோல் எஞ்சினையே கன்வெர்ட் பண்ணலாம்ன்னு ப்ளான்.

அதைக் கேட்டதும் நமக்குத்தான் பக்குன்னு ஆகிடுச்சு. ஏன்னா, அப்போ எங்க கிராமத்துலேயே கேஸ் அடுப்பு கிடையாது. அதனால எல்.பி.ஜி. பத்தி நாம தினத்தந்தி மூலமா தெரிஞ்சிக்கிட்டதெல்லாம், அது வரதட்சணைக் கொடுமைக்கு யூஸ் ஆகிற ஒரு வெப்பன்னு தான். கலர் வேற சிவப்பா அடிச்சு, மண்டி ஓடு சிம்பல்லாம் போட்டிருப்பாங்களா, பார்த்தாலே வயத்தைக் கலக்கிடும். அதை வச்சு புராஜக்ட் பண்ணனும்ங்கிறதை என்னால நினைச்சுப்பார்க்கவே முடியலை. 

அதானால “சார்..ராமர் பிள்ளை பெட்ரோல் பத்தி வேணா அனலைஸிஸ் பண்ணுவோமே?’ன்னு கெஞ்சிக் கேட்டும் மனுசன் ஒத்துக்கலை. வேற வழியே இல்லாம களத்துல குதிச்சோம். எஞ்சின், எஞ்சின்னு டெக்னிக்கலா பேசினால் உங்களுக்குப் புரிகிறதோ, இல்லையோ! எனவே...கீழே உள்ள ஸ்டில்லில் நமீதாவின் உட்காரும் இடத்திற்கு கீழே மறைந்து இருப்பது தான் எஞ்சின் ஆகும்!

அப்போ மதுரைல ரெண்டு பேர் தான் பெட்ரோல் எஞ்சினை கேஸ் எஞ்சினா மாத்திக்கிட்டு இருந்தாங்க. அதுல ஒருத்தர் 5000 ரூபாய் வாங்கி, எஞ்சினை கன்வெர்ட் பண்ணிக் கொடுத்தார். அப்புறம் எங்க ஆராய்ச்சியை ஆரம்பிச்சோம். நான்கு நாட்களா எஞ்சினை ஓட்டி, நாங்க எழுதுன ரிப்போர்ட் இப்படி இருந்தது:

அதாகப்பட்டது:
எஞ்சின் ஓடுது

ஒரு ஊருல:
எஞ்சின் ஓடுது

உரிச்சா:
எஞ்சின் ஓடுது

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
எஞ்சின் ஓடுது

 பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
எஞ்சின் ஓடுது

நாலு நாள் கழிச்சு வந்து பார்த்த போண்டா சார் ,காண்டாகிட்டார். ‘ஏன்பா, நாலு நாள் எஞ்சினை ஓட்டி, எஞ்சின் ஓடுதுன்னு தான் கண்டுபிடிச்சீங்களா?’ன்னு கொதிச்சுட்டார். அப்புறம் எப்படி புராஜக்ட்டை முடிச்சோம்ன்னு விளக்கிச் சொன்னா, தேடி வந்து என் டிகிரி சர்டிபிகேட்டை பிடிங்கிட்டுப் போயிடுவாங்க என்பதால், அதை விட்டுவிட்டு மெயின் மேட்டருக்கு வருவோம்.

எஞ்சின் மாத்த 5000 ரூபாய் கேட்ட ஆள் என்ன சொன்னாரென்றால் ‘நாளைக்கு காலைல வந்து 5000 ரூபா கொடுத்திடுங்கப்பா..அடுத்த வாரம் வந்து எஞ்சினை மாத்திக் கொடுத்துடறேன்’ என்று. நாங்களும் காலையில் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு வந்து, போண்டா சாரிடம் சொன்னோம். அப்போது அவர் சொன்னது தான் மெயின் மேட்டர். ‘தம்பி..இந்தியால காசை முழுசா கொடுத்திட்டு சர்வீஸ் வாங்கணும்ன்னு நினைச்சா ஆப்பு வச்சிடுவாங்க. அட்வான்ஸ் வேணா கொடுக்கலாம். முழு வேலையும் முடிச்சு, எஞ்சின் ஓடுன அப்புறம் தான் காசுன்னு சொல்லிடுங்க. இங்க மட்டும் இல்லை, எங்கேயுமே ஃபுல் பேமெண்ட் பண்ணிடாதே’ன்னு சொன்னார். அது எவ்வளவு கரெக்ட்டுன்னு படிச்சு முடிச்சு, வெளில வந்து சில இடத்துல அனுபவப்பட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.
அப்புறம் நண்பர்கள், சொந்தங்கள், மனைவிகள்..ச்சே, மனைவின்னு எல்லாருக்கும் அந்த போண்டா தியரியை சொல்றது நம்ம வழக்கம். அப்படி ஒரு தடவை சென்னைல இருந்த ரூம் மேட்கிட்டயும் சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்தது. வாராவராம் ட்ரெஸ் அயர்ன் பண்ணி வாங்கிக்கிட்டு இருந்தோம். அப்போ நண்பர் என்ன முடிவு பண்ணார்ன்னா, ஒன்னாம் தேதியே அட்வான்ஸா மொத்தமா ஒரு அமவுண்ட் கொடுத்திடுவோம்ன்னு நண்பர் முடிவு பண்ணார். நான் அவர்கிட்ட போண்டா தியரியை சொல்லவும் டென்சன் ஆகிட்டார். ‘அடே பூர்ஷ்வாப்பயலே, உழைக்கு மக்களை தவறாக நினைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள். அந்நிய நாட்டு கம்பெனியில் அடிமை உத்தியோகம் பார்க்கும் உனக்கு, அடித்தட்டு மக்களைப் பற்றிப் பேச என்னடா தகுதி இருக்கிறது?’ன்னு பொங்கித் தீர்த்துட்டார். அப்புறம் அவர் மட்டும் ஒன்னாம் தேதியே முழுக்காசும் கொடுத்தார். நான் வழக்கம்போல்!

எனக்கு மூன்றாவது நாளே எல்லாத்துணியும் வந்து சேர்ந்தது. அவருக்கு ரெண்டு செட் மட்டும் வந்தது, ‘சார்..கொஞ்சம் டைட் ஒர்க்கு சார்..ரெண்டு நாள்ல மீதி துணியை கொடுத்திடறேன்’ என்று அவர் சொல்லவுமே நான் போண்டா தியரியை பிராக்டிகலாகப் பார்க்கும் அனுபவத்திற்கு தயாரானேன். ரெண்டுநாளில் ஒன்றும் வரவில்லை. பின் இவரே தேடிப்போய் ‘போடறதுக்கு ட்ரெஸ் இல்லைய்யா’ என்று புலம்பிய பின், ‘அப்படியே ஒரு நிமிசம் நில்லுங்க சார்’ என்று சொல்லிவிட்டு ஒரு செட் மட்டும் ரெடி செய்து கொடுத்தார் அயர்ன்காரர். அப்புறம் அந்த மாதம் முழுக்கவே ஒவ்வொரு செட்டாக நின்று வாங்கித்தான் கொடுத்த காசை கழிக்க வேண்டி வந்தது. எப்படியோ, அந்த மாத முடிவில் அதுவரை புரட்சிக்காரனாக இருந்த நண்பர், மனுசனாக ஆகிவிட்டார். போண்டா தியரியின் மகத்துவத்தை அவரும் ஒரு வழியாக ஏற்றுக்கொண்டார்.
வருகின்ற வருமானத்தை சரியாக ப்ளான் செய்து செலவளிக்கும் வழக்கம், நம் மக்களுக்கு குறைவு. அடுத்த ஒரு மாதத்திற்கான காசு, ஒரே நாளில் கொடுத்தால் ஒரு வாரத்தில் அதை செலவளித்து முடித்துவிடுவதே நம் வழக்கம். எனவே அடுத்து யார் காசு கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு முன்னுரிமை தரவே மனது போகும். ஆகவே மக்களே, போண்டா தியரியை மைண்ட்ல வைத்துக்கொள்ளுங்கள். வாயில தோசை, அப்புறம் தான் கைல காசு!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

33 comments:

 1. கீழே உள்ள ஸ்டில்லில் நமீதாவின் உட்காரும் இடத்திற்கு கீழே மறைந்து இருப்பது தான் எஞ்சின் ஆகும்!///

  நல்லவேள வார்தைப்பிழை இல்லை..... அப்பிடியும், நமீதாவின் கீழே மறைந்து இருப்பதுதான் எஞ்சின் ஆகும்னு படிச்சிட்டேன்! கந்தனுக்கு புத்தி கவட்டைலைன்னு எங்க ஊர்ல சொல்றது சரியாத்தாம்லே இருக்கு... :-)

  ReplyDelete
 2. வேறு பல 'தொழில்'களில் இப்படி அட்வான்ஸ் வாங்கி அம்பேல் ஆவது தான் இன்றைக்கு பேஷன்...! ஆனால் தவறு அவர்கள் மீது இல்லை...

  ReplyDelete
 3. "ஆஹா கல்யாணம்’ படப்பெயரைப் பார்த்தாலே, பயமா இருந்ததால நான் போகலை"

  கல்யாணம் ஆன எல்லா ஆம்பளைக்கும் வர்ற பயம் தான்.

  ReplyDelete
 4. போண்டான்னு டைட்டில போட்டுட்டு, அண்ணன் இந்திய பொருளாதரத்த பத்தி புட்டு புட்டு வைக்கறாங்க.

  ReplyDelete
 5. செங்கோவி சமீபத்துல எங்கேயோ நல்லா வாங்கியிருகிங்க... அதான் போண்டா இஞ்சின் கதை ரிப்பீட் ஆகுது உங்களுக்குள்ள....

  ReplyDelete
 6. வர வர ஹன்சி படங்களை தவிர்க்கும் செங்கோவிக்கு மீண்டும் வன்மையான கண்டனங்கள்....

  ReplyDelete
 7. "எஞ்சின்னு டெக்னிக்கலா பேசினால் உங்களுக்குப் புரிகிறதோ, இல்லையோ! எனவே...கீழே உள்ள ஸ்டில்லில் நமீதாவின் உட்காரும் இடத்திற்கு கீழே மறைந்து இருப்பது தான் எஞ்சின் ஆகும்"


  அந்த கார் வச்சிருந்த சொப்பன சுந்தரி இது தானா ? அப்ப இந்த சொப்பன சுந்தரிய...

  (வேண்டாம்,என்னை பார்த்து அந்த கேள்விய ஏன் கேட்டானு அண்ணன் டென்சன் ஆகிடுவாரு)

  ReplyDelete
 8. போண்டா தியரி செம,நானும் அனுபவப்பட்டிருக்கிறேன்..!

  ReplyDelete
 9. அந்த தீசிஸ எப்புடி பண்ணீங்கன்னு சொன்னா, நாளைய இளைய சமுதாயதுக்கு உதவியா இருக்குமேண்ணே.

  ReplyDelete
 10. நல்லாச்சொன்னீங்க நமீத்தாவின் இன்ஜின் ஹீ செம சூப்பர் பகிர்வு.

  ReplyDelete
 11. //ஆஹா கல்யாணம்’ படப்பெயரைப் பார்த்தாலே, பயமா இருந்ததால நான் போகலை//.

  எனக்கும் அதே எண்ணம்தான்.. அதனாலதான் பிரம்மன் போனேன்... உங்க மன்மதன் லீலைகளை பாதியில் விட்டுட்டு போனேன். அந்த அளவுக்கு வொர்த் இல்லை...

  ReplyDelete
 12. அந்த ஆரிஜினல் இந்திப் படம் அனுஷ்கா இருந்துமே நான் இன்னும் பார்க்ல... தமிழ்ல யாராச்சும் பார்த்த்துட்டு சொல்லும்வரைக்கும் மீ டூ வெய்ட்டிங்.

  ReplyDelete
 13. //அப்புறம் எப்படி புராஜக்ட்டை முடிச்சோம்ன்னு விளக்கிச் சொன்னா, தேடி வந்து என் டிகிரி சர்டிபிகேட்டை பிடிங்கிட்டுப் போயிடுவாங்க என்பதால்,//

  இதில்லென்ன இரகசியம்? எல்லாப் பயலும் பண்ணுறதுதானே...

  ReplyDelete
 14. செம தியரி... ஆமா அது ஏன் இப்போ ஞாபகத்துக்கு வந்தது?

  ReplyDelete
 15. போண்டா சார் தியரி அருமை...
  ஆமா அது இப்போ ஞாபகத்துக்கு வரக் காரணம்... எங்கயாவது போண்டா கொடுத்துட்டானுங்களா?

  ReplyDelete
 16. செங்கோவியின் சிறப்புப்பக்கங்கள்-நல்லாருக்கா தலை(ப்பு)?

  ReplyDelete
 17. //வைகை said...
  கந்தனுக்கு புத்தி கவட்டைலைன்னு எங்க ஊர்ல சொல்றது சரியாத்தாம்லே இருக்கு... :-)//

  பெருமை தான்.

  ReplyDelete
 18. //Blogger திண்டுக்கல் தனபாலன் said...
  வேறு பல 'தொழில்'களில் இப்படி அட்வான்ஸ் வாங்கி அம்பேல் ஆவது தான் இன்றைக்கு பேஷன்...! ஆனால் தவறு அவர்கள் மீது இல்லை...//

  அந்த தொழில்ல அம்பேல் ஆனா தப்பில்லை..போனவனுக்கு தேவை தான்.

  ReplyDelete
 19. //Blogger வானரம் . said...
  "ஆஹா கல்யாணம்’ படப்பெயரைப் பார்த்தாலே, பயமா இருந்ததால நான் போகலை"

  கல்யாணம் ஆன எல்லா ஆம்பளைக்கும் வர்ற பயம் தான்.//

  ஹி..ஹி..கககபோ!

  ReplyDelete
 20. //Blogger தமிழ்வாசி பிரகாஷ் said...
  செங்கோவி சமீபத்துல எங்கேயோ நல்லா வாங்கியிருகிங்க... அதான் போண்டா இஞ்சின் கதை ரிப்பீட் ஆகுது உங்களுக்குள்ள....//

  உண்மை தான்..போன தடவை ஊருக்கு வந்தப்போ!..அதையும் எழுதுனா பதிவு நீளமாகுதேன்னு விட்டுட்டேன். டிராஃப்ட்ல இருந்த பதிவு..படம் வரலையேன்னு பப்ளிஷ் பண்ணா, பிரம்மன் ரிலீஸ் ஆகிடுச்சு. ஒரு பேக் அப் போயிடுச்சு.

  ReplyDelete
 21. //Blogger காட்டான் said...
  போண்டா தியரி செம,நானும் அனுபவப்பட்டிருக்கிறேன்..!//

  அது நம்ம மொகராசி மாம்ஸ்.

  ReplyDelete
 22. //Blogger மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
  அந்த தீசிஸ எப்புடி பண்ணீங்கன்னு சொன்னா, நாளைய இளைய சமுதாயதுக்கு உதவியா இருக்குமேண்ணே.//

  ஐ,அஸ்க்கு புஸ்க்கு.

  ReplyDelete
 23. //Blogger தனிமரம் said...
  நல்லாச்சொன்னீங்க நமீத்தாவின் இன்ஜின் ஹீ செம சூப்பர் பகிர்வு.//

  நன்றி பாஸ்.

  ReplyDelete
 24. //Blogger Balamurugan Sankaran said...
  எனக்கும் அதே எண்ணம்தான்.. அதனாலதான் பிரம்மன் போனேன்... உங்க மன்மதன் லீலைகளை பாதியில் விட்டுட்டு போனேன். அந்த அளவுக்கு வொர்த் இல்லை...//

  பாதியில் விட்டதுக்கு தண்டனை பாஸ்!

  ReplyDelete
 25. //Blogger Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
  அந்த ஆரிஜினல் இந்திப் படம் அனுஷ்கா இருந்துமே நான் இன்னும் பார்க்ல... தமிழ்ல யாராச்சும் பார்த்த்துட்டு சொல்லும்வரைக்கும் மீ டூ வெய்ட்டிங்.//

  அந்த பலியாடு யாருன்னு இன்னும் தெரியலியே!

  ReplyDelete
 26. //Blogger ஸ்கூல் பையன் said...
  செம தியரி... ஆமா அது ஏன் இப்போ ஞாபகத்துக்கு வந்தது? //
  //Blogger சே. குமார் said...
  போண்டா சார் தியரி அருமை...
  ஆமா அது இப்போ ஞாபகத்துக்கு வரக் காரணம்... எங்கயாவது போண்டா கொடுத்துட்டானுங்களா?//

  டிராஃப்ட்ல இருந்த பேக்-அப் பதிவு ஸ்பை..

  ReplyDelete
 27. //Blogger FOOD NELLAI said...
  செங்கோவியின் சிறப்புப்பக்கங்கள்-நல்லாருக்கா தலை(ப்பு)?//

  என்னா சிறப்போ!

  ReplyDelete
 28. ஹாஹாஹா! செம கலக்கல்!

  ReplyDelete
 29. நன்று!///கீழே உள்ள ஸ்டில்லில் நமீதாவின் உட்காரும் இடத்திற்கு கீழே மறைந்து இருப்பது தான் எஞ்சின் ஆகும்!////என்ஜின் ஓடல?

  ReplyDelete
 30. //Subramaniam Yogarasa said...
  என்ஜின் ஓடல?//

  ம்ஹூம்..ஓவர் ஹீட்ல ஜாம் ஆகிடுச்சு.

  ReplyDelete
 31. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்

  வலைச்சர தள இணைப்பு : சனிக்கிழமையின் சகாப்தங்கள்

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.