அதாகப்பட்டது... :
நேற்றே வெளியாகி இருக்க வேண்டிய படம் ’பொட்டி வரலை, நாளைக்கு வா’ என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள்.’ நாளைக்குன்னா அது பழைய படம்யா..காசைக் கொடுய்யா’ன்னு கேட்டும் அரபி ஒத்துக்கொள்ளாததால், விமர்சனம் இன்று, இங்கே....!
ஒரு ஊர்ல..:
ஒரு கிராமத்தில் வாழும் வெள்ளந்தியான மனசு கொண்ட பண்ணையாருக்கு ஒரு பத்மினி கார் கிடைக்கிறது. அந்த கார் எப்படி அந்த குடும்பத்தில் ஒரு பிள்ளையாக ஆகிறது, அந்த கார் வந்தபின் பண்ணையார்-அவரது மனைவி ஜோடியும், டிரைவர் விஜய் சேதுபதியும் என்ன மாற்றத்திற்கு ஆளாகிறார்கள் என்பதே கதை.
உரிச்சா....:
குறும்படக்கதையை முழுநீளப்படமாக ஆக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. டிரைவர் கேரக்டர்க்கு ஒரு காதலி கேரக்டரை உருவாக்கி இழுப்பார்கள் என்ற அளவில் தான் நம் எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் அந்த காரே முக்கிய கேரக்டராக ஆனதுடன், பண்ணையாருக்கும் அவரது மனைவிக்குமான உறவை மிகவும் யதார்த்தமாகக் காட்டியதில் தான் இந்த படம் வெற்றிப்படமாக மட்டுமல்ல, ஒரு தரமான சினிமாவாகவும் ஆகிவிடுகிறது.
குறும்படத்தை நீளப்படமாக ஆக்கியதுபோல் தெரியவில்லை. நீளப்படத்தைத் தான் ட்ரெய்லராக குறும்படமாக எடுத்திருப்பார் போல. பண்ணையார் ஜெயப்ரகாசின் நண்பர் ஊருக்குப்போகும்போது, பண்ணையாரிடம் பத்மினி காரை கொடுத்துவிட்டுச் செல்வதுடன் படம் ஆரம்பிக்கிறது. பத்மினி மேல் பண்ணையார் வைக்கும் பாசம் கூடிக்கொண்டே போகிறது. அவரது நிழல் போல் இணைந்து வாழும் அவரது மனைவி துளசியும் காரை கொஞ்சம் கொஞ்சமாக நேசிக்க ஆரம்பிக்க, அந்த வீட்டுப்பிள்ளையாகவே ஆகிறது. டிரைவராக விஜய் சேதுபதியும் கிளீனராக(!) பாலாவும் கூட்டணி சேர, படம் ஆரம்பத்தில் இருந்தே கலகலப்பாகச் செல்கிறது. ஒவ்வொரு சீனிலுமே புன்னகைக்க வைக்கும் விஷயங்களை புதைத்து வைத்திருக்கிறார்கள், காரை வைக்கோலுக்குள் ஒளித்து வைத்தது போல!
பத்மினி அந்த வீட்டில் செட் ஆனதுமே, அங்கிருந்து பத்மினியைப் பிரிக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பிக்கின்றன. திருமணநாளில் மனைவியை காரில் வைத்து அழைத்துச் செல்லவேண்டும் என்ற பண்ணையாரின் ஆசை நிறைவேறுமா என்று நாமும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அளவிற்கு, இரண்டாம்பாதி முழுக்க செண்டிமெண்ட்+காமெடியில் பட்டையைக் கிளப்புகிறார்கள்.
படத்தில் மிகவும் பாராட்டத்தக்க விஷயம், ஒரு யதார்த்தமான கிராமத்தையும், யதார்த்தமான கிராமத்து ஜோடிகளாக ஜெயப்ரகாஷ்-துளசியைக் காட்டியது தான். ஒரு கணவன் - மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் வருகிறார்கள். அவர்களுக்குள் நடக்கும் ஊடலும், காதலும் அருமை. எனக்காகப் பிறந்தாயே பேரழகா பாடலின் மாண்டேஜ் காட்சிகள் அட்டகாசம். காதல் என்பது இளைஞர்களுக்கானது மட்டுமல்ல என்று அடித்துச் சொல்லி இருக்கிறார்கள்.
விஜய் சேதுபதியின் காதல் போர்சன் பெரிய அளவில் மனதைக் கவரவில்லை. கொஞ்சநேரம் தான் வருகிறது என்றாலும், ஜெயப்ரகாஷ் ஜோடிக்கு முன், இளம்ஜோடி ஒன்றுமே இல்லையென்றாகிறது. எதுவும் பேசாமல், எவ்வித உணர்ச்சிகளையும் காட்டாமல் நம் மனதைக் கொள்ளை கொள்கிறது அந்த கார். கொஞ்சம் கொஞ்சமாக நாமும் அதை விரும்ப ஆரம்பிப்பதில்தான், இயக்குநரின் திறமை வெற்றிபெறுகிறது.
ஜெயப்ரகாஷ்:
அற்புதமான குணச்சித்திர நடிகர். ஏறக்குறைய ஹீரோ வேடம். ஒரு அப்பாவி மனுசனாக, யாருக்கும் உதவும் மனம் படைத்தவராக, ரொமாண்டிக் கணவனாக, நெகிழ்ச்சியான தந்தையாக மனிதர் பல பரிமாணங்களில் கலக்குகிறார். இந்த ஆண்டில் சிறந்த ஹீரோ விருதை இவருக்குக் கொடுக்கலாம். கார் போய்விடுமோ என்று பதறுவதும், மனைவியின் ஆசையை நிறைவேற்றப் போராடுவதுமாக நம் மனதில் நிறைகிறார் ஜெயப்ரகாஷ்.
விஜய் சேதுபதி:
ரம்மியைப் போன்றே இதிலும் இரண்டாவது ஹீரோ தான். ஆனால் அதைப்போல் டம்மி வேடம் அல்ல. வழக்கம்போல் மனிதர் கேஷுவல் நடிப்பில் பிய்த்து உதறுகிறார். படத்தை ஜாலியாகக் கொண்டுசெல்வதில் இவரது பங்கு முக்கியமானது. பண்ணையார் கார் ஓட்டக்கற்றுக்கொண்டதும் நமை கழட்டி விட்டுவிடுவாரோ என்று மனதிற்குள்ளேயே புழுங்கும் காட்சிகளில் செம நடிப்பு. சென்ற படத்தில் விட்ட பெயரை, இதில் பிடித்திருக்கிறார். மீண்டும் ஒருமுறை தான் கதையின் நாயகன் மட்டுமே என்று நிரூபித்திருக்கிறார்.
பாலா:
பாலாவிற்கு பெயர் சொல்லும்படி ஒரு படம். காமெடியில் கலக்குகிறார்கள். நமது ‘துப்பாக்கித் தாத்தா’ போன்ற கேரக்டர். ஒன் லைனரிலேயே சிரிக்க வைத்துவிடுகிறார். சீக்கிரமே பெரிய காமெடியனாக ஆகிவிடுவார் என்று நினைக்கிறேன்.
துளசி -ஐஸ்வர்யா:
பண்ணையாரின் மனைவியாக வரும் துளசியின் நடிப்பில் அவ்வளவு யதார்த்தம். கணவனை கண்டிப்பதில் ஆரம்பித்து கிண்டல் செய்வது வரை எதையும் நடிப்பென்று சொல்ல முடியவில்லை. சொந்தக்கார பெரியம்மா போன்ற இமேஜை கொஞ்ச நேரத்திலேயே உண்டாக்கிவிடுகிறார். ஆரம்பக்காட்சிகளில் ஹைபிட்ச்சில் கத்துவதை மட்டும் குறைத்திருக்கலாம்.
ரம்மியிலேயே நம் ‘பாராட்டை’ப் பெற்ற ஐஸ்வர்யா, இதிலும் விஜய் சேதுபதியின் ஜோடியாக வருகிறார். அழகான கண்கள் என்பதைத் தாண்டி சொல்ல ஏதுமில்லை. கதைப்படியே தேவையில்லாத கேரக்டர் என்பதால், விடு ஜூட்!
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- விஜய் சேதுபதியின் காதல் போர்சன்
- உனக்காகப் பிறந்தேனே பேரழகா பாடலை ஜெயப்ரகாஷுக்கு பயன்படுத்தியதோடு விட்டிருக்கலாம். மீண்டும் விஜய் சேதுபதிக்கு அதை யூஸ் பண்ணி, அதன் இம்பாக்ட்டைக் கெடுத்திருக்க வேண்டாம்
- ஆரம்ப கிராமக் காட்சிகளில் திரையில் புள்ளி அடிக்கிறது, சுமாரான கேமிராவில் எடுத்தது போல். ஒளிப்பதிவுக் கோளாறா, தியேட்டர் கோளாறா என்பது தெரியவில்லை.
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- ஜெயப்ரகாஷ் துளசி ஜோடியின் அந்நியோன்மான உறவை நம் மனதில் பதியும்படிச் சொன்னது
- விஜய் சேதுபதி
- ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் வந்திருக்கும் அருமையான பாடல்கள்
- அந்த மகள் கேரக்டர்.
பார்க்கலாமா? :
கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய தரமான படம்.
Nice review, surely i wil watch,
ReplyDelete@சீனு இன்னுமா பார்க்கலை? என்னய்யா பதிவர் நீங்க?
ReplyDeleteநம்பி பார்க்கிறேன்
ReplyDeleteவிரைவில் பார்க்கின்றேன் ஐயா!
ReplyDeleteபண்ணையாரும் பத்மினியும் என்றவுடன்..பத்மினி என்பது கதாநாயகியின் பெயர் என்றே நினைக்கத் தோன்றியது..மகிழ்வுந்து என்பதைக் கேட்டதுமே..விறுவிறுப்பு கூடிவிடுகிறது..
ReplyDeleteமனதிற்கு இதமான விமர்சனம்...
ReplyDeleteஅருமை..
ச்சே நமக்குதான் நல்ல நல்ல படங்களை பார்க்க முடியவில்லை, அப்படியே பார்த்தாலும் அது, ஜில்லா...தலைவா, குருவியா இருக்கு...ம்ம்ம் பார்க்கலாம்.
ReplyDeleteகண்டிப்பா பாத்துடலாம் பாஸ் ...
ReplyDeleteநீங்க சொல்றத பார்த்தா.. "தமிழில் ஒரு உலகசினிமா" ரேஞ்ஜ்ல இருக்கும் போல இந்த படம்...
ReplyDeleteஜெயப்ரகாஷ் அவர்கள் எந்த வேடமென்றாலும்... பல படத்திலும் நடிப்பது போல் தெரிவதில்லை...
ReplyDeleteகண்டிப்பாக பார்ப்போம்... நன்றி...
// ilyas said...
ReplyDeleteநம்பி பார்க்கிறேன்// எப்படியும் ஓசில தான் பார்க்கப்போறீங்க, அப்புறம் என்ன?
// தனிமரம் said...
ReplyDeleteவிரைவில் பார்க்கின்றேன் ஐயா!//
பாருங்கள் நேசரே.
//மகேந்திரன் said...
ReplyDeleteபண்ணையாரும் பத்மினியும் என்றவுடன்..பத்மினி என்பது கதாநாயகியின் பெயர் என்றே நினைக்கத் தோன்றியது..மகிழ்வுந்து என்பதைக் கேட்டதுமே..விறுவிறுப்பு கூடிவிடுகிறது..//
ஹி..ஹி..நானும் ஆரம்பத்துல நம்ம தலைவி பத்மினின்னு தான் நினைச்சேன்!
//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteச்சே நமக்குதான் நல்ல நல்ல படங்களை பார்க்க முடியவில்லை, அப்படியே பார்த்தாலும் அது, ஜில்லா...தலைவா, குருவியா இருக்கு...ம்ம்ம் பார்க்கலாம்.//
இங்கேயும் எப்பவும் நல்ல படம் வராது. என்னமோ அதிசயமா ரிலீஸ் பண்ணிட்டாங்க.
//Manimaran said...
ReplyDeleteகண்டிப்பா பாத்துடலாம் பாஸ் ...//
இன்னுமா பார்க்கலை!
//மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
ReplyDeleteநீங்க சொல்றத பார்த்தா.. "தமிழில் ஒரு உலகசினிமா" ரேஞ்ஜ்ல இருக்கும் போல இந்த படம்..//
ஓரளவு அப்படித்தான் மொக்கை. ஆனால் ரொம்ப எதிர்பார்ப்போட போகலைன்னா, ரசிக்கலாம்.
//திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஜெயப்ரகாஷ் அவர்கள் எந்த வேடமென்றாலும்... பல படத்திலும் நடிப்பது போல் தெரிவதில்லை...//
உண்மை தான் பாஸ்..நல்ல நடிகர்.
விமர்சனத்துக்கு நன்றி! 'வரட்டும்'..... பார்ப்போம்!!////"நானும்"ஆரம்பத்துல 'நம்ம தலைவி' பத்மினின்னு...............///செல்லாது,செல்லாது!!!
ReplyDeleteடைட்டில பார்த்ததும் வில்லங்கமான படமா இருக்கும்னு நெனச்சேன், இப்படி வில்லேஜ் படமா இருக்கே ச்சே.
ReplyDeleteஇந்த பன்னிகுட்டி எங்கயா போனாரு. டாகுடர் படம் வரதுக்கு முன்னாடியே விமர்சனம் போடுவாரு. இப்ப என்னடானா படத்தையும் காணும், பன்னிகுட்டியும் காணும். ஒரு வேள டாகுடர பத்தி எழுதமாட்டேனு சங்கவி கிட்ட சத்தியம் பண்ணி இருப்பாரோ?
ReplyDeleteNice Review. Thanks for Sharing...
ReplyDeleteகதைக்களமே வித்தியாசமா இருக்கே?
ReplyDelete/////VAANARAM said...
ReplyDeleteஇந்த பன்னிகுட்டி எங்கயா போனாரு. டாகுடர் படம் வரதுக்கு முன்னாடியே விமர்சனம் போடுவாரு. இப்ப என்னடானா படத்தையும் காணும், பன்னிகுட்டியும் காணும். ஒரு வேள டாகுடர பத்தி எழுதமாட்டேனு சங்கவி கிட்ட சத்தியம் பண்ணி இருப்பாரோ?////
ண்ணா இங்கதானுங்ணா சுத்திக்கிட்டு இருக்கேன்.... கொஞ்சநாளா ஃபேஸ்புக்ல கடைய போட்டு ஓட்டிக்கிட்டு இருக்கேனுங்ணா...
எனக்கு அந்த ஷார்ட் ஃப்லிம் ரொம்ப பிடிக்கும்.. படமும் நல்லாருக்குனு சொல்லிருக்கீங்கோ.. அப்போ கண்டிப்பா பாத்துருவோம்..!!துப்பாக்கித் தாத்தா கதை சூப்பருண்ணே..!! :)
ReplyDeleteஹாய்..........ப.ரா.சார்!நலமா?///பேச்சு புக்கு கூட நான் டூ................!
ReplyDelete//Subramaniam Yogarasa said...
ReplyDeleteவிமர்சனத்துக்கு நன்றி! 'வரட்டும்'..... பார்ப்போம்!!////"நானும்"ஆரம்பத்துல 'நம்ம தலைவி' பத்மினின்னு...............///செல்லாது,செல்லாது!!!//
சரி, நாங்களும்...!
//VAANARAM said...
ReplyDeleteடைட்டில பார்த்ததும் வில்லங்கமான படமா இருக்கும்னு நெனச்சேன், இப்படி வில்லேஜ் படமா இருக்கே ச்சே.//
நல்ல படம் பாஸ்.
//VAANARAM said...
ReplyDeleteஇந்த பன்னிகுட்டி எங்கயா போனாரு. டாகுடர் படம் வரதுக்கு முன்னாடியே விமர்சனம் போடுவாரு. இப்ப என்னடானா படத்தையும் காணும், பன்னிகுட்டியும் காணும். //
அவர் ஃபேஸ்புக்கில் தீவிரமாக களப்பணி ஆத்துகிறார்.
// N.H.பிரசாத் said...
ReplyDeleteNice Review. Thanks for Sharing.../
நன்றி.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteகதைக்களமே வித்தியாசமா இருக்கே?//
ஆமாம்ணே..பாருங்க.
//Andichamy G said...
ReplyDeleteஎனக்கு அந்த ஷார்ட் ஃப்லிம் ரொம்ப பிடிக்கும்.. படமும் நல்லாருக்குனு சொல்லிருக்கீங்கோ.. அப்போ கண்டிப்பா பாத்துருவோம்..!!துப்பாக்கித் தாத்தா கதை சூப்பருண்ணே..!! :)//
நன்றி ஜூனியர்.
//Subramaniam Yogarasa said...
ReplyDeleteஹாய்..........ப.ரா.சார்!நலமா?///பேச்சு புக்கு கூட நான் டூ................!//
நல்ல முடிவு. ஃபேமிலி வந்தவுடன் நானும் டூ தான்!
//Edward Cullen said...//
ReplyDeleteஉங்கள் கோபம் புரிகிறது. ஆனாலும் எனது தளத்தில் இத்தகைய கமெண்ட்ஸ்களை அனுமதிப்பதில்லை. மன்னிக்கவும்.
நல்ல கதை.நல்ல படம்.கொஞ்சம் சொதப்பல்.
ReplyDeleteநம்மாளு பேரை காப்பத்தினதுக்கு நன்றீண்ணே(விஜய் சேதுபதி)
ReplyDeleteபண்ணையாரும் பத்மினியும் -இது விமர்சனம் அல்ல.http://sornamithran.blogspot.in/2014/02/blog-post.html
ReplyDelete