மகாநதில மகளை மீட்க கெஞ்சுற கமலை ஏத்துக்கிட்ட நாம், அதே கேரக்டர்ல ரஜினியை ஏத்துப்போமாங்கிறது சந்தேகம் தான். ரஜினி பஞ்ச் டயலாக் பேசறதை ரசிச்ச நம்மால், சுள்ளான்கள் பஞ்ச் விடறதை பொறுக்க முடிவதில்லை. சில விஷயங்களை, சிலர் பண்ணாத்தான் ஒத்துக்க முடிகிறது.
ஆங்கிலத்துல பெரிய ஹிட்டான 'சிக்ஸ்த் சென்ஸ்' படத்தை தமிழில் எடுத்தால், நாம் ரசிப்போமான்னு காலேஜ் டேஸ்ல நண்பர்கள் மத்தியில் விவாதித்திருக்கிறோம். முழுக்க வசனங்களால் நிரம்பிய அந்தப் படம், தமிழ்ல டப் பண்ணி வந்தாக்கூட ஓடி இருக்காது. ஆங்கிலப்படம் என்றால் விறுவிறுப்பாக இரண்டு ஆக்சன் சீகுவென்ஸும், நான்கு கிஸ் சீன்ஸும் இருக்க வேண்டியது கட்டாயம்.
அதே போன்றே லாஜிக் இல்லாமல் மேஜிக்கை மட்டுமே நம்பி வரும் 'டைனோசர், பாம்பு, பல்லி, பூரான்' போன்ற ஹீரோக்கள் நடித்த படத்தை, தமிழில் யாராவது எடுத்தால் 'என்னய்யா லாஜிக்கே இல்லாம எடுத்திருக்கான்?' என்று கும்மி விடுவோம்.
ஒவ்வொரு மொழிப் படத்தையும் எப்படிப் பார்ப்பது என்று நாம் நம்மை அறியாமலே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். (யப்பா..We are conditioned என்பதன் தமிழாக்கம்..அவ்வ்!). மலையாள கமர்சியல் படங்கள், தமிழ் கமர்சியல் படங்களைவிட 15 வருடங்கள் பின் தங்கியவை என்பதே என் அபிப்ராயம். குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்க வேன்டிய கட்டாயத்தாலும், அவர்கள் பெரிய அளவில் யோசிக்காமல் இருக்கலாம். (நேரம் போன்ற குறைந்த பட்ஜெட்டில் டெக்னிகலாக மிரட்டும் சில படங்கள் விதிவிலக்கு!)
எனவே மலையாள பிட்டுப்படங்கள் மற்றும் கலைப்படங்களைத் தவிர்த்து வேறு எதனைப் பார்த்தாலும், நமக்கு சலிப்பே மிஞ்சும். நான் கொச்சினில் இருந்த காலத்தில், சேட்டன்கள் பெருமையுடன் வழங்கிய கமர்சியல் பட சிடிகளை கதறியபடி திருப்பிக் கொடுத்திருக்கிறேன். புலிவால் பற்றிய விமர்சனங்களிலும் அத்தகைய கதறல் தெரிந்ததால், தரவிறக்கிப் பார்த்தேன்.
நிச்சயம் ரீமேக் செய்யப்படக்கூடிய கமர்சியல் கதை தான். அன்னாடங் காய்ச்சியாக, வேலை பார்க்கும் இடத்தில் சுப்பீரியரின் அவமரியாதையைக்கூட சகித்துக்கொண்டு, எவ்வித மரியாதையும் இன்றி வாழும் ஒரு ஹீரோ(விமல்), செல்வாக்கு, பெண்கள் என பணம் தரும் எல்லா விஷயங்களையும் அனுபவித்தபடி வாழும் இன்னொரு ஹீரோ(பிரசன்னா). இரண்டாவது ஆளின் குடுமி முதல் ஆளின் கையி ல் சிக்குவது என 'அட' போட வைக்கும் கான்ஃபிளிக்ட்டுடன் கூடிய கதை.
அந்த பணக்காரன் சார் என்று அழைத்ததும், முதன்முதலாக வாழ்க்கையில் அப்படி மரியாதையாக அழைக்கப்பட்ட சந்தோசமும், அது தரும் போதையும் தலைக்கேற, விமல் அடுத்து என்னவெல்லாம் செய்வார் என்று கற்பனையுடன் நாம் உட்கார்ந்தால், நமக்கு மிஞ்சுவதென்னவோ ஏமாற்றம் தான்.
டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வேலை செய்யும்போது, இன்சல்ட் பண்ணிய பெண்ணில் தலைமேல் சாணியைக் கரைத்து ஊற்றச் சொல்கிறார். தன்னைத் தொடர்ந்து அவமானப்படுத்தும் சூப்பர்வைசரின் கன்னத்தில் அடிக்கச் சொல்கிறார். பிரசன்னாவும் அதைச் செய்கிறார். 'இதான் உங்க டக்கா?' என்று பார்க்கும் நமக்குத் தான் கடுப்பாகிறது. தமிழ்நாட்டு ஸ்கூல் டிராமாக்களில்கூட, இத்தகைய சீன்களை இந்தக்காலத்தில் பார்க்க முடியாது.
பணத்திமிரில் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று அலையும் பிரசன்னா - பணம் இல்லாததால் சுயமரியாதையின்றி வாழும் விமல் எனும் எதிரெதிர் துருவங்கள் சந்திக்கையில், எவ்வளவு விளையாடலாம்? பிரசன்னாவின் பணத்திமிரை காலி செய்யலாம் அல்லது விமல் தன் தாழ்வு மனப்பான்மையை விட்டு வெளியேறலாம்.
அல்லது பணக்காரனின் பவரை யூஸ் பண்ணி, தன் எதிரிகளைப் பழி வாங்கலாம். அதை ரசிக்க, அந்த எதிரி ஸ்ட் ராங்கான ஆட்களாக இருக்க வேண்டும். சப்பையை அடிக்க பாட்ஷாவை அனுப்பி, நாம் கோபப்படும்படி காமெடி செய்யக்கூடாது. அதைத் தான் புலிவாலில் செய்திருக்கிறார்கள். கமர்சியல் மூவி விஷயத்தில், தெலுங்குப்படங்கள் பெட்டர் என்றே தோன்றுகிறது. மலையாளத்தில் நன்றாக ஓடிய படம், எனவே மெயின் கதையை கொஞ்சமும் மாற்றாமல் அப்படியேஎடுக்க வேண்டும் என்று எடுத்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் நல்ல ஒரு ஆக்சன் படமாக வந்திருக்க வேன்டிய படம், வீணாகி விட்டது மட்டும் நன்றாகவே தெரிகிறது.
இந்த படத்தில் நல்ல விஷயம் என்னவென்றால், எப்போதும் மலச்சிக்கல் வந்தவன்போல் முகத்தை வைத்திருக்கும் விமலுக்கு, இந்த கேரக்டர் கச்சிதமாகப் பொருந்திப்போனது தான்.
ஓவியாவை பிரசன்னா கல்யாணம் பண்ண, டேப்பை..ச்சே, வீடியோவை ரிலீஸ் செய்திருக்க வேண்டியதில்லை. இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம். விமலே அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, பிரசன்னாவை மிரட்டுவதாக வைத்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும். அப்புறம் அந்த வில்லன் கேரக்டர்..அக்மார்க் மக்கு மல்லுத்தனம். ஆம் ஆத்மி வில்லனாக வருவதை சேட்டன்கள் வேன்டுமானால் ரசிக்கலாம். ஒரு கமர்சியல் படத்தில் இப்படி சொத்தையான ஆளை வில்லத்தனத்திற்கு யூஸ் பண்ணுவது ரொம்ப தப்பு. தலைவர் ஹிட்ச்காக் பாணியில் சொல்வதென்றால் 'Bigger the Villain..Better the movie! (எவன்டா அந்த புக்கை இவன்கிட்டகொடுத்ததுன்னு டென்சன் ஆகாதீங்கப்பா!)
மொத்தத்தில் ராமராஜன் நடித்த ஆக்சன் படம் பார்த்தால், என்ன ஃபீலிங் கிடைக்குமோ, அது தான் புலிவால் பார்த்துக் கிடைத்தது. Better Luck, Next time! (அப்பாடி, நம்மளும் இங்கிலீஸ் வார்த்தையைச் சொல்லி பதிவை முடிச்சிட்டோம்!)
ரண்டு ஈரோ பத்தி இத்தன சொன்னியே, மூணு ஈரோயின பத்தி ஒத்த வார்த்த சொன்னியா ?
ReplyDeleteபோ சார் , நீ ஒரு ஆணாதிக்கவாதி.
"Bigger the Villain..Better the movie"
ReplyDeleteதொர இங்கலீஸ்ல்லாம் பேசுது.
தல ஓன் ரேஞ்சுக்கு சாக்கி சான் ஆக்ட் கொடுத்த போலீஸ் ஸ்டோரி பத்தி எழுது, இல்லாகாட்டி வெளியூர் நாயகன் மவ நடிச்ச டி-டே படத்த பத்தி எழுது.
ReplyDelete//வானரம் . said... [Reply]
ReplyDeleteரண்டு ஈரோ பத்தி இத்தன சொன்னியே, மூணு ஈரோயின பத்தி ஒத்த வார்த்த சொன்னியா ? //
இது விமர்சனம் இல்லைய்யா..புலம்பல்.
// வானரம் . said...
ReplyDeleteதல ஓன் ரேஞ்சுக்கு சாக்கி சான் ஆக்ட் கொடுத்த போலீஸ் ஸ்டோரி பத்தி எழுது, //
இங்க போன மாசமே ரிலீஸ் ஆகிடுச்சு. அதை எழுதி, ஒரு மாசமா டிராஃப்ட்லயே கிடக்குது..நம்மூர்ல ரிலீஸ் பண்ண மாட்டேங்கிறாங்களே!
என்ணண்ணே இது, இதுக்குப் போய் கலங்கலாமா? இந்த மாதிரி எத்தனை பார்திருப்போம்?
ReplyDeleteநான் புலிவால் ஆடியோ ரிலீஸ் எல்லாம் இணையத்தில் பார்த்து ராதிகா சரத்குமார் பேசுவதைக் கேட்டு, சரத்குமார் படதடதை பற்றி நெகட்டிவாக இணைத்தில் எழுதாதீர்கள்
ReplyDeleteஎனக் கேட்டுக்கொண்டதால் படத்தை இணையத்தில் இறக்கி பார்க்கலாம் என ஐந்து பாகங்களாக கொண்ட படத்தை முதல் மூன்று பாகங்களை பார்த்துவிட்டு அதற்கு மேல் பார்க்க இயலாமல் தரவிறக்கம் செய்வதையும் நிறுத்திவிட்டு பாத்ரூம் சென்று விட்டேன்.
படம் பார்த்த வரை ஒரே ஒரு திருப்தி
வயறு சுத்தமாகிவிட்டது.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
இந்த படத்தில் நல்ல விஷயம் என்னவென்றால், எப்போதும் மலச்சிக்கல் வந்தவன்போல் முகத்தை வைத்திருக்கும் விமலுக்கு, இந்த கேரக்டர் கச்சிதமாகப் பொருந்திப்போனது தான். //
ReplyDeleteஇதேபோல ரயின்போ காலனி"யில நடித்த அந்த ஹீரோவையும் ஜூனியர் விகடன் கிண்டல் செய்து இருந்தது ஹா ஹா ஹா ஹா...
களவாணிக்கு அப்புறம் விமலு இன்னும் புலிவாலைப் பிடிக்கலையா...
ReplyDeleteஆமா மூணு நாயகியில ஒண்ணு மட்டுந்தான் லைன்ல வந்திருக்கு ரெண்டைக் காணோமே செங்கோவி...
நம்ம எழுத வேண்டியது விமர்சனம்... அத விட்டுட்டு வெளிநாட்டு புத்தகங்களை படிச்சிட்டு மேற்க்கோல் காட்டி பேசுற வேலை எல்லாம் வெச்சிக்கக் கூடாது... :)
ReplyDeleteசும்மா சொன்னேன்....
படம் இன்னும் பார்க்கவில்லை... பத்திட வேண்டியய்து தான்...
பாஸ் மலையாளத்தில் இருந்த திரைக்கதை இதில் சுத்தமா சொதப்பல்.. அதான் இந்த படம் மொக்கையா போனதுக்கு காரணம்..
ReplyDelete//Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
ReplyDeleteஎன்ணண்ணே இது, இதுக்குப் போய் கலங்கலாமா? இந்த மாதிரி எத்தனை பார்திருப்போம்? //
ஆறுதலுக்கு நன்றி புட்டிப்பால்.
// devadass snr said...
ReplyDeleteபடம் பார்த்த வரை ஒரே ஒரு திருப்தி வயறு சுத்தமாகிவிட்டது.//
ஹா..ஹா..செம காமெடி சார்.
//MANO நாஞ்சில் மனோsaid...
ReplyDeleteஇதேபோல ரயின்போ காலனி"யில நடித்த அந்த ஹீரோவையும் ஜூனியர் விகடன் கிண்டல் செய்து இருந்தது ஹா ஹா ஹா ஹா...//
அப்போ அவர் மாதிரியே இவரும் ஓஹோன்னு வருவார்ன்னு சொல்லுங்க.
//சே. குமார்said...
ReplyDeleteஆமா மூணு நாயகியில ஒண்ணு மட்டுந்தான் லைன்ல வந்திருக்கு ரெண்டைக் காணோமே செங்கோவி...//
ஓவியாவில் அந்த ரெண்டும் அடக்கம் குமார்!!!!!!!
//DR said...
ReplyDeleteநம்ம எழுத வேண்டியது விமர்சனம்... அத விட்டுட்டு வெளிநாட்டு புத்தகங்களை படிச்சிட்டு மேற்க்கோல் காட்டி பேசுற வேலை எல்லாம் வெச்சிக்கக் கூடாது... :)
//
அப்புறம் அதையெல்லாம் நான் படிச்சேன்னு எப்படி பீத்திக்கிறதாம்?
//கோவை ஆவிsaid...
ReplyDeleteபாஸ் மலையாளத்தில் இருந்த திரைக்கதை இதில் சுத்தமா சொதப்பல்.. அதான் இந்த படம் மொக்கையா போனதுக்கு காரணம்..//
பார்க்கிறேன், ஆவி.
http://www.newtamilcinema.com/2014/02/3713/
ReplyDelete* விரல் வித்தை நடிகர், என்னதான் கன்டிஷன் போட்டாலும், அவரது காதலி நடிகை அவற்றை பின்பற்றுவதில்லை. மாறாக, அவர் எந்தெந்த நடிகர்களுடன் பேசக் கூடாது என்கிறாரோ அவர்களுடனெல்லாம் கடலை போடுகிறார். இதனால், அவர்களுக்கிடையிலான காதல், கூடிய சீக்கிரமே வெடித்து விடும் என்று தெரிகிறது*
மலையாள ஒரிஜினலையும் பார்த்தாகிவிட்டது. தமிழைவிட மலையாளத்தில் ஒரு நீட்னெஸ் இருக்கிறது. ஆனாலும் நமது முக்கியக்குற்றச்சாட்டான ‘செல்வாக்கான மனிதனை ஆட்டிவைக்கும் சாமானியன்’ கான்செப்ட்டை டீல் செய்த விதத்தில் இரண்டுமே சொதப்பல் தான். இங்கே தலையில் ஊற்றுவதைக் காட்டுகிறார்கள், அங்கே காட்டவில்லை. ஆனால் இன்னும் அதிரடியாக யோசித்திருக்கலாம் என்பதே நம் நிலைப்பாடு.
ReplyDelete//வானரம் . said...
ReplyDeletehttp://www.newtamilcinema.com/2014/02/3713/
//
வானரம், டோண்ட் ஒர்ரி..ஹன்சி நமக்குத்தான்.
"வானரம், டோண்ட் ஒர்ரி..ஹன்சி நமக்குத்தான்"
ReplyDeleteநான் ஒன்னும் வருதப்படலையா. நீ தான் ரொம்ப ஆவலா இருக்க.
ஹன்சி கிடைக்கலன்னு மனசு தளர்ந்து போய் தப்பான முடிவ எடுத்துராத.
நல்ல அலசல் விமல் பாவம் தான் !
ReplyDeleteநல்ல விமர்சனம்.நன்று.நானும் பார்த்தேன்,ஓசி தானே என்று வாயே திறக்கல!///அப்புறம்,பிரசன்னாவோட முதல் நாயகி ஹி,ஹி,ஹீ..................பாவம்.பட்,விமலோட நாயகி படம் பூரா 'வராங்க'!
ReplyDeleteஹான்ட்போன் என்ற கொரிய மொழி படத்தின் உருவல் தான் சப்ப குரிசு.
ReplyDelete