அதாகப்பட்டது... :
ஓகே..ஓகே-வின் வெற்றிக்கூட்டணியான உதயநிதி-சந்தானமும் சுந்தர பாண்டியன் என்ற சூப்பர் ஹிட்டான படத்தைக் கொடுத்த இயக்குநர் பிரபாகரனும் இணையும் படம் என்பதால், படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு. இங்கே தியேட்டர் ஹவுஸ்ஃபுல். அஜித்-விஜய்-சூர்யா படங்களுக்குத்தான் இப்படி ஆகிப் பார்த்திருக்கிறேன். (கார்த்தியும் விஜய் சேதுபதியும் இப்படி இருந்து, இரண்டே படங்களில் காலி ஆனார்கள்) ஜாலியான படம் என்ற இமேஜ், கூட்டத்தைக் கூட்டிவிட்டது. படம் அந்த எதிர்பார்ப்பை தக்க வைத்ததா என்று பார்ப்போம்.
ஒரு ஊர்ல..:
ஆஞ்சநேய பக்தராக மதுரையில் வாழ்பவர் உதயநிதி. ஏற்கனவே ஃப்ரெண்டாக பழகும் வில்லனை, நல்லவன் என ஏமாந்து லவ் பண்ணும் மூடுக்கு வந்துகொண்டிருக்கும் கோயம்புத்தூர்ப் பெண் நயந்தாரா. இருவருக்கும் காதல் எப்படி வருகிறது, அதில் எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதே கதை.
உரிச்சா....:
மிக சுவாரஸ்யமான கதை தான். படம் ஆரம்பித்த ஐந்து நிமிடத்திலேயே எதிரெதிர் கேரக்டர்களாக சிக்கல்களுடன் ஹீரோ-ஹீரோயினைக் காட்டும்போது, நன்றாகவே இருக்கிறது. கோயம்புத்தூரில் வாழும் ஹீரோ அக்கா, கோபித்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறார் எனும்போதே, ஹீரோ அங்கே போகப்பொகிறார் என்று தெரிந்துவிடுகிறது. அதன்பின் முதல் ஒரு மணி நேரத்திற்கு அடுத்து என்ன நடக்கும் என்று தெளிவாக சொல்ல முடிகிறது. பெரிய சுவாரஸ்யமான சீன்கள் இல்லாமல், முதல் ஒரு மணி நேரம், ஃபேமிலி செண்டிமெண்ட், அக்கா-மாமா கதை, லூஸ்டாக் வில்லன் கேரக்டர் என மொக்கையாக படம் நகர்கிறது.
ஹீரோ, ஹீரோயினின் எதிர்வீட்டுக்கே குடி போவது, பின்னால் சுத்துவது, ஹீரோயினின் பாய் ஃப்ரெண்ட் கெட்டவனாக இருப்பது என அரதப்பழசான ஐடியாக்களுடன் படம் போய்க்கொண்டிருக்கும்போது, அவ்வப்போது வரும் சந்தானம் தான் காப்பாற்றுகிறார். பின்னர் சந்தானம் காதலுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பிக்கும்ப்போது தான், படம் ஓகே..ஓகே ஆகாவிட்டாலும், ஓகே ஆகிறது.
ஹீரோயினுக்கு பாய் ஃப்ரெண்ட் கெட்டவன் என தெரிந்த பின், படம் இன்னும் கொஞ்சம் கலகலப்பாக நகர்கிறது. வில்லன் என்று இருந்தாலும், ஃபைட்டெல்லாம் வைத்து நம்மை இம்சை பண்ணாதது சந்தோசம் தான். படத்தை முடிந்தவரை ஜாலியாகக் கொண்டு செல்ல நினைத்திருக்கிறார்கள். அதனால் ஹீரோவின் காதல் மேலும் நமக்கு பெரிய அக்கறை வரவில்லை. எனவே சேருவார்களா,இல்லையா எனும் எதிர்பார்ப்பு நமக்கு எழவேயில்லை.
ஓடிப்போன அக்கா, ஒன்னுமில்லாத விஷயத்திற்கு கோபித்துக்கொண்டு சொந்த வீட்டுக்கா வருவார்? இது போன்று லாஜிக் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாத காட்சிகள். அதைவிட அடுத்த சீனுக்கு லீடாக ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு, வேறொரு சீன் வருகிறது. சந்தானம் உதயந்தியிடம் ஃபோன் நம்பர் கொடுத்துவிட்டு ‘எதுவும்னா ஃபோன் பண்ணுடா?’ என்கிறார். அடுத்த சீனில் உதயநிதி ஃபோன் செய்வது, அக்காவிற்கு. அக்கா ஃபோன் பேசி முடிக்கும்போது காலிங் பெல் அடிக்கிறது. ‘மாமா வந்திருப்பார்..கதவைத் திற’ என்கிறார். கதவைத்திறந்து உதயநிதி போவது மொட்டை மாடிக்கு. அங்கே மாமா எக்ஸர்ஸைஸ் செய்துகொண்டிருக்கிறார். பிறகு தான் புரிகிறது, அது அடுத்த நாள் காலை சீன் என்று. இப்படி குழப்பம் தரும் சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
பின்னால் சுற்றுவது, சந்தானம் ஐடியா கொடுப்பது என ஓகே..ஓகே போன்றே பல காட்சிகள் வருகின்றன. ஆனாலும் சந்தானம், உதயநிதியின் அப்பாவை சமாதனப்படுத்த மதுரை வரும் காட்சியில் ஆரம்பித்து கிளைமாக்ஸ்வரை, படம் செம ஜாலி + விறுவிறுப்பு. அந்தக் கடைசி அரைமணி நேரம் தான், வெளியில் வரும் நம்மை திருப்தியாக அனுப்பி வைக்கிறது.
இறுதியில் அப்பா-மகன் - காதல் பற்றி வரும் வசனங்கள், அருமையிலும் அருமை. சுந்தர பாண்டியன் பட இயக்குநர் என்பது அதில் தான் தெரிகிறது. அதுபோலவே படம் முழுக்க அவ்வப்போது வரும் நல்ல வசனங்கள் நம் மனதைக் கவர்கின்றன. கூடவே, சந்தானத்தின் ஒன் லைன்களும்.
உதயநிதி:
உங்கிட்ட எக்ஸ்பிரசன் எதிர்பார்க்கிறது தப்பு என சந்தானம் கலாய்த்தாலும், கிளைமாக்ஸில் மனிதர் ஒருவழியாக நடித்துவிட்டார். முந்தைய படத்தில் இருந்த கேமிராக்கூச்சம் இதில் இல்லை. ஜாலியான, கவலைகள் அற்ற பையன் என்பதற்கு பொருந்திப்போய்விட்டார். சந்தானத்திற்கும் இவருக்கும் கெமிஸ்ட்ரி(!) நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது. நயந்தாராவை கலாய்ப்பது, காதலுடன் பார்ப்பது, கடைசிக்காட்சியில் அப்பாவுடன் பேசும் காட்சி ஆகியவற்றில் நல்ல நடிப்பு.
சந்தானம்:
படத்தைக் காப்பாற்றுவதே இவர் தான். ஓகே..ஓகே அளவிற்கு இல்லையென்றாலும், வருகின்ற காட்சிகளில் எல்லாம் சிரிக்க வைத்து விடுகிறார். கிளைமாக்ஸில் மதுரையில் நடப்பது தான் செம காமெடி. ஒரு நிமிடத்தில் கலக்கிவிட்டார்கள். சந்தானம் மட்டும் இல்லையென்றால் ரொம்பவே கஷ்டம்.
நயந்தாரா:
நயந்தாரா சின்ன சின்ன எக்ஸ்பிரசன்ஸ்+நடிப்பில் கலக்கினாலும், வயதாகிவிட்டது நன்றாகவே தெரிகிறது. நயந்தாராவை விட அவரது தோழியும், ஹீரோவின் தங்கையாக வருபவரும் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார்கள்.
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- முதல் ஒரு மணி நேர, திருப்பங்கள் அற்ற மொக்கை திரைக்கதை
- திடீரென ஃபாரினுக்கு டான்ஸ் ஆடக் கிளம்பும் பாடல் காட்சிகள். தியேட்டரில் திட்டுகிறார்கள்.
- பெரிதாக எதுவும் செய்யாத, டெரராக அறிமுகம் ஆகும் சொதப்பல் வில்லன்....வில்லன்னு கூட சொல்ல முடியாது..நெகடிவ் கேரக்டர் அவ்வளவு தான்.
- புதுப்பாட்டு தானா என்று சந்தேகம் கொள்ள வைக்கும் ஹாரிஸின் பழைய ட்யூன்கள்
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- காமெடி + சந்தானம்
- நல்ல வசனங்கள்
- கடைசி அரைமணி நேரம்
பார்க்கலாமா? :
சுந்தர பாண்டியன் / ஓகே..ஓகே வை மறந்துவிட்டு, காமெடி சீன்களுக்காக ஒருமுறை பார்க்கலாம்...ஆவரேஜ் மூவி!
ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்கு அப்புறமா இங்கிலீசுல கூட காமெடி படம்ன்னு சொன்னா ரொம்ப தூரமா ஓடிடறேன். உங்கள நம்பி இந்த படம் பார்க்க போறேன், தல காமெடி சூப்பரா இருந்தா ஓகே, நமக்கு அதவிட வேற என்ன வேணும்?
ReplyDeleteநயந்தாரா:
ReplyDeleteஎப்படியோ, உதயநிதியும் ஆண்ட்டி-ஹீரோவாக நடித்துவிட்டார். பின்னே, நயந்தாரா ஆண்ட்டிக்கு ஹீரோவா நடிச்சா ஆண்ட்டி-ஹீரோ தானே? //
நாகர்கோவில் டூ சென்னை ரோட்டை மறித்து பத்து பதினைந்து பஸ்சை கொளுத்துங்கலேய், ரோட்டாங்கரையில் இருக்கும் புளியமரத்து பேய்களுக்கெல்லாம் சூனியம் வைங்கலேய்...
அதானே ! இன்றைக்கு ஃபேமிலி செண்டிமெண்ட் என்றாலே மொக்கை தானே... அடுத்த படமும் இதே 'ஆண்ட்டி'யுடன் என்று கேள்விப்பட்டேன்... எப்படியோ படம் சலிக்காமல் இருக்கும் எனும் விமர்சனத்திற்கு நன்றி...
ReplyDeleteஉதயநிதியும் முன்னணி நடிகராக வந்துவிடுவார் போலிருக்கே ... :-))))
ReplyDelete/// ஒரு காட்சியில் குப்புற படுத்திருக்கிறார். பார்த்தால் சொம்பு..ச்சே, சிம்பு-பிரபுதேவா மேல் கோவம் கோவமாக வந்துவிட்டது. நல்லா இருக்க மாட்டீங்கய்யா, நல்லாவே இருக்க மாட்டீங்க! ///அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும் .. ம்ம்ம்ம் .. என்ன நான் சொல்றது ..?
ReplyDeleteஇந்த படத்தை தேஜாவூ எபெக்ட் இல்லாம பார்க்கனும்ன்னு இருக்கேன்! அதுனால இப்போதைக்கு உங்க முழு விமர்சனத்த வாசிக்கிறதா இல்ல!
ReplyDeleteநல்ல விமர்சனம்...
ReplyDeleteஅடுத்த படத்திலும் இந்த ஆண்டியுடன் தானாம்...
நீங்க வருத்தப்படுறீங்க... அவரு மறுபடியும் ஆண்டிக்கிட்டதானே போயிருக்கார்....
நல்ல விமர்சனம்!கூட்டணிக்காக(!?)பார்க்கலாம் என்று சொல்கிறீர்கள்.பார்ப்போம்.(அந்தக் 'கூட்டணி' இல்ல!)
ReplyDeleteசூரி இல்லியா?
ReplyDelete////சுந்தர பாண்டியன் / ஓகே..ஓகே வை மறந்துவிட்டு, காமெடி சீன்களுக்காக ஒருமுறை பார்க்கலாம்//// அப்ப ஆறுதலா ஆதித்தியா சனலில் பார்க்கலாமா அண்ணே :)
ReplyDelete"ஃப்ரெண்டாக பழகும் வில்லனை, நல்லவன் என ஏமாந்து லவ் பண்ணும் மூடுக்கு வந்துகொண்டிருக்கும் நயந்தாரா "நீங்க சிம்புவ சொல்றிங்களா ? இல்ல பிரபுதேவாவை சொல்றிங்களா?
ReplyDelete"ஒரு காட்சியில் குப்புற படுத்திருக்கிறார். பார்த்தால் சொம்பு..ச்சே, சிம்பு-பிரபுதேவா மேல் கோவம் கோவமாக வந்துவிட்டது. நல்லா இருக்க மாட்டீங்கய்யா, நல்லாவே இருக்க மாட்டீங்க"
ReplyDeleteஅப்போ ஆர்யா ?
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
ReplyDeleteஹி..ஹி.. நயன்தாரா.
//Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
ReplyDeleteதல காமெடி சூப்பரா இருந்தா ஓகே, நமக்கு அதவிட வேற என்ன வேணும்?//
அது மட்டும் போதும்ணா, பார்க்கலாம். மயில்சாமி வரும் பகுதிகளும், லொள்ளுசபா பார்ட்டி வரும் அனுமன் கோவில் சீனும் நல்ல காமெடி. பதிவில் விட்டுப் போச்சு!
// MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteநாகர்கோவில் டூ சென்னை ரோட்டை மறித்து பத்து பதினைந்து பஸ்சை கொளுத்துங்கலேய், ரோட்டாங்கரையில் இருக்கும் புளியமரத்து பேய்களுக்கெல்லாம் சூனியம் வைங்கலேய்...//
இவரு இவ்ளோ தீவிர நயன் ரசிகரா?
//திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஅதானே ! இன்றைக்கு ஃபேமிலி செண்டிமெண்ட் என்றாலே மொக்கை தானே... ..//
அப்படி இல்லைய்யா..பண்ணையாரை ரசிச்சோமே!
//Manimaran said...
ReplyDeleteஉதயநிதியும் முன்னணி நடிகராக வந்துவிடுவார் போலிருக்கே ... :-))))//
வருங்கால முதல்வர் வாழ்க!
//Rajesh kumar said...
ReplyDeleteஅதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும் .. ம்ம்ம்ம் .. என்ன நான் சொல்றது ..?//
ம்..பார்த்தால், செய்வினை மாதிரியும் தெரியுது!
// மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
ReplyDeleteஇந்த படத்தை தேஜாவூ எபெக்ட் இல்லாம பார்க்கனும்ன்னு இருக்கேன்! அதுனால இப்போதைக்கு உங்க முழு விமர்சனத்த வாசிக்கிறதா இல்ல!//
படிக்காம போனாலும் தேஜாவூ தான்..எத்தனை படத்துல இந்த சீன்ஸை பார்த்திருப்பீங்க!
//சே. குமார் said...
ReplyDeleteநீங்க வருத்தப்படுறீங்க... அவரு மறுபடியும் ஆண்டிக்கிட்டதானே போயிருக்கார்...//
அப்போ உண்மையிலேயே அவர் ஆண்ட்டி ஹீரோ தானோ!
//Subramaniam Yogarasa said...
ReplyDeleteநல்ல விமர்சனம்!கூட்டணிக்காக(!?)பார்க்கலாம் என்று சொல்கிறீர்கள்.பார்ப்போம்.(அந்தக் 'கூட்டணி' இல்ல!)//
நெட்ல பார்க்க, இம்புட்டு யோசனை தேவையா ஐயா?
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteசூரி இல்லியா?//
இல்லை போலீஸ்கார்..ஏன், நீங்க சூரி ரசிகரா? (அசிங்கப்பட்டார் சிப்பு!)
//mathi sutha said...
ReplyDelete////சுந்தர பாண்டியன் / ஓகே..ஓகே வை மறந்துவிட்டு, காமெடி சீன்களுக்காக ஒருமுறை பார்க்கலாம்//// அப்ப ஆறுதலா ஆதித்தியா சனலில் பார்க்கலாமா அண்ணே :)//
ஃபேஸ்புக்!
வானரம் . said...
ReplyDelete//"நீங்க சிம்புவ சொல்றிங்களா ? இல்ல பிரபுதேவாவை சொல்றிங்களா?//
எத்தனை பேர்....
// அப்போ ஆர்யா ? //
ஆர்யாக்கு கிட்டியதே ஆண்ட்டி ஆன அப்புறம் தானே?
//பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
ஹி..ஹி.. நயன்தாரா.//
அது ஐயா நயன்நாரா...இது ஐயய்யோ நயந்தாரா!
இது கதிவேலன் காதல் - திரை விமர்சனம் தலைப்பில் "ர்" விட்டுடீங்க . ஏதாவது குறியீடா ?
ReplyDelete/// ஒரு காட்சியில் குப்புற படுத்திருக்கிறார். பார்த்தால் சொம்பு..ச்சே, சிம்பு-பிரபுதேவா மேல் கோவம் கோவமாக வந்துவிட்டது. நல்லா இருக்க மாட்டீங்கய்யா, நல்லாவே இருக்க மாட்டீங்க! ///
ReplyDeleteஅது குப்புற படுக்கிறதுல உமக்கு என்னய்யா பிரச்சனை?
/////MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteநயந்தாரா:
எப்படியோ, உதயநிதியும் ஆண்ட்டி-ஹீரோவாக நடித்துவிட்டார். பின்னே, நயந்தாரா ஆண்ட்டிக்கு ஹீரோவா நடிச்சா ஆண்ட்டி-ஹீரோ தானே? //
நாகர்கோவில் டூ சென்னை ரோட்டை மறித்து பத்து பதினைந்து பஸ்சை கொளுத்துங்கலேய், ரோட்டாங்கரையில் இருக்கும் புளியமரத்து பேய்களுக்கெல்லாம் சூனியம் வைங்கலேய்...//////
ஆண்ட்டின்னு சொன்ன உடனே இவருக்கு சந்தோசத்த பாருமய்யா...
செங்கோவி said... [Reply]நெட்ல பார்க்க, இம்புட்டு யோசனை தேவையா ஐயா?///...ஷேம்.......ஷேம் ..............இப்புடியா பப்ளிக்குல கால வாருறது? (உண்மையைத் தானே சொன்னீங்க?)
ReplyDeleteஆறுதலாக. பார்ப்போம் ஐயா!
ReplyDelete