Tuesday, February 25, 2014

The Wolf of Wall Street - சினிமாப் பார்வை

சென்ற வருடம் அதிக பரபரப்புடன், அதிகளவு விளம்பரத்துடன் வெளியான படம். கமர்சியலாக படம் சூப்பர் ஹிட்டும்கூட. இப்போது விருதுகளை வாங்கிக் குவிக்கவும் ரெடியாகிக்கொண்டிருக்கிறது. படத்தைப் பற்றி நல்லபடியாகக் கேள்விப்பட்டதால், நல்ல பிரிண்ட் வந்தால்தான் பார்ப்பேன் என்று அடம்பிடித்து காத்திருந்து பார்த்தேன். இங்கே, குவைத்தில் ரிலீஸ் ஆனது என்றே நினைக்கிறேன். தமிழ்ப்படத்தையே சென்சாரில் குதறிவிடுவார்கள். வூல்ஃபை விடுவார்களா? எனவே காசு கொடுத்து, பாதிப்படம் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்து, இப்போது டொரண்டினேன்.
கதையைப் பற்றி ஏற்கனவே நீங்கள் அறிந்திருக்கலாம்.  ஷேர் மார்க்கெட்டில் வாரன் பஃபெட் முதலீட்டாளர்களில் சிங்கம் என்றால், ஜோர்டான் பெல்ஃபோர்ட் என்பவர் ஸ்டாக் புரோக்கர்களில் சிங்கமாக(ஓநாயாக?) வாழ்ந்தவர். பென்னி ஸ்டாக் எனப்படும் ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி மற்றும் அதற்கும் கீழான கம்பெனி ஸ்டாக்குகளை முதலீட்டாளர்கள் தலையில் கட்டுவதில் வல்லவர். ஷேர் மார்க்கெட் என்பதே அங்கீகரிக்கப்பட்ட சூதாட்டம் தான். 

அதில் இத்தகைய திறமையான ஏமாற்றுப்பேர்வழிகளும் இறங்கினால் என்ன ஆகும்? ஷேர் மார்க்கெட்டில் பணம் சம்பாதிக்க முடியும் என்று நம்புகிற, ஆனால் அதற்குரிய ஃபண்டமெண்டல் அனலைஸிஸ் எதுவும் பண்ணாத முதலீட்டாளர்கள் தான் இத்தகைய ஸ்டாக் புரோக்கர்களுக்கு இலக்கு. எனது நெருங்கிய நண்பர் ஸ்டாக் புரோக்கராக இருந்து, மனசாட்சியால் மனம் வெறுத்து, இப்போது வேறுவேலை செய்கிறார். அவரது பீரியடில் வந்த ஒரு ப்ளாக் ஃப்ரைடேயால் இரு முதலீட்டாளர்கள் தற்கொலை செய்துகொண்டதும் நடந்தது. 

இதுவரை எத்தனையோ ஸ்டாக் மார்க்கெட் பற்றிய படங்கள் வந்திருந்தாலும், இந்தப் படம் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஸ்டாக் புரோக்கர்களின் மெண்டாலிட்டியை, அவர்கள் எப்படி முதலீட்டாளர்களை ஸ்லோ பாய்சனாக காலி செய்கிறார்கள் என்பதை ஸ்டாக் புரோக்கரின் பார்வையில் தெளிவாகப் பேசுகிறது. இதுவரை வந்த ஃபினான்ஸியல் சம்பந்தப்பட்ட படங்களில் ஒரு டீசென்ஸி இருக்கும், அவர்கள் ஹை கிளாஸ் ஆட்கள் என்பதான தோற்றம் இருக்கும். இதில் படம் முழுக்க F*** பாமை போட்டபடியே இருக்கிறார்கள். பெண்கள், போதை மருந்து, தான் வாழ முதலீட்டாளரை காவு கொடுக்கும் ஈவிரக்கமற்ற தன்மை என எல்லாமே பட்டவர்த்தனமாக சொல்லபடுகிறது.
ஒவ்வொரு சீனிலும் வழியும் அழகியல் தான் நம்மை அசர வைக்கிறது. காட்சிகளில் பிரம்மாண்டம், கண்டெண்ட்டில் அதிர்ச்சி என ஒவ்வொரு சீனுமே ஷாட் பை ஷாட் நம்மைக் கவர்கிறது. செக்ஸைக் கொண்டாடிய மனிதன் என்பதை விலாவரியாக விளக்கியிருக்கிறார்கள். இவையெல்லாம் சரியாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இது நல்ல படம் என்று சொல்ல முடியுமா என்று சந்தேகம் வருகிறது. குறிப்பாக படத்தில் வரும் செக்ஸ் சீன்கள் தரும் அதிர்ச்சி/கிளுகிளுப்பை நீக்கிவிட்டுப் பார்த்தால், மிஞ்சுவது என்ன? ஒரு பெரிய இயக்குநரின் படம், பெரிய நடிகரின் படம், பிரம்மாண்டப்படைப்பு என்பதைத் தாண்டி இவ்வளவு வரவேற்பைப் பெறும் அளவிற்கு இந்த படம் ஒர்த் ஆனது தானா?

மார்டின் ஸ்கார்ஸேஸியின் எல்லாப் படங்களும் என் கலெக்சனில் உண்டு. அவரது டாக்ஸி டிரைவர், ஷட்டர் ஐலேண்ட் ஆகிய படங்கள் என் திரைக்கதை கலெக்சனில் உண்டு. நிச்சயம் நம் மதிப்பிற்குரிய, திறமையான படைப்பாளி தான் அவர். ஆனால் இந்தப் படத்தின் திரைக்கதை உண்மையில் மிகவும் சலிப்பைத் தருகிறது.(மீண்டும் சொல்றேன், கிளுகிளுப்பை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால்..!) திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான காட்சிகள், வாழ்க்கையைக் கொண்டாடுகிறான் என்பதை உணர்த்தும் ஆரம்ப செக்ஸ் சீன்களை நாம் எஞ்சாய் பண்ணினாலும் தொடர்ந்து அவற்றிலேயே படம் உழலும்போது, இதை கொண்டாட வேண்டிய திரைக்கதையாக நம்மால் நினைக்க முடியவில்லை.

படத்தில் மற்றொரு குறை, பாதிக்கப்பட்ட முதலீட்டாளரின் தரப்பு ஒரு இடத்தில்கூட பதிவு செய்யப்படாத தன்மை. தன்னைப் பற்றி மட்டுமே யோசித்து வாழ்ந்த பெல்ஃபோர்ட் மாதிரியே, கொண்டாட்டத்தை மட்டுமே யோசித்து எடுக்கப்பட்ட படமாகவே தெரிகிறது. இதனால் விளைந்த தீமை என்னவென்றால், நாமும் இதுபோல் பெண்கள் மற்றும் போதை மருந்துகளுடன் வாழ்க்கையை எஞ்சாய் பண்ணலாம், பண்ணிவிட்டு நார்மல் லைஃபுக்கும் ஒரு கட்டத்தில் திரும்பலாம் என்ற தவறான நம்பிக்கையை கொடுக்கிறது. போதை மருந்துகள் மற்றும் பெண்களின் பின்னே போவது என்பது திரும்பி வரமுடியாத maze க்குள் சிக்கிக்கொள்வது போல் தான். பெல்ஃபோர்ட் திரும்பி வந்தார் என்பதாலேயே, அதை பெரிதுபடுத்திக் காட்டுவது சரியான விஷயம் என்று தோன்றவில்லை. இந்த படத்திற்கு வந்த ரெஸ்பான்ஸ் எல்லாமே ‘என்னமா கொண்டாடி இருக்கான்யா மனுசன்’ என்பதாகத் தான் இருக்கிறது. அது தான் இந்தப் படம் சராசரி ரசிகனுக்கு சொன்ன சேதி.
குட் ஃபெல்லாஸ் ஹீரோவுடன் சராசரி ரசிகன் தன்னை முழுமையாக ஐக்கியப்படுத்திக்கொள்வதில்லை. ஏனென்றால் ரசிகனுக்கு வன்முறை என்பது தள்ளி நின்று ரசிக்கும் விஷயம் தான். ஆனால் செக்ஸும் கோகெய்னும் அப்படி அல்ல. எளிதாக பெல்ஃபோர்ட்டுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ள  சராசரி ரசிகனால் முடியும். இது முழுக்க, முழுக்க உண்மைக்கதை என்றாலும், அதை இவ்வளவு பெரிய படமாக எடுத்து கொண்டாட வேண்டிய அவசியம் என்ன வந்தது? அப்படியென்றால், கள்ளக்காதல் கதைகளை எடுத்துவிட்டுக்கூட, உண்மையில் நடப்பது தானே என்று சொல்லிவிடலாமே? 

எனவே டெக்னிக்கலாக படம் என்னதான் சிறந்து இருந்தாலும், அவை சினிமா ஆர்வலர்களுக்கு வேண்டுமானால் உதவுமே ஒழிய, சராசரி ரசிகனுக்கு அவை கதை சொல்ல உதவும் உப காரணிகள் மட்டும் தான். கதையும், அதன்மூலம் அவன் புரிந்து கொள்வது என்ன என்பதும் தான் இங்கே முக்கியம். டிகாப்ரியோவின் நடிப்பு, மார்ட்டின் ஸ்கார்ஸேஸி மீதான மரியாதை மற்றும் கிளர்ச்சியைத் தூண்டும் செக்ஸ் சீன்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், நமக்கு எஞ்சுவது பெரும் ஏமாற்றமே! டெக்னிகல் காரணங்களுக்காக, ஸ்கார்ஸேஸியின் படங்களுடன் இதுவும் என் கலெக்சனில் இருக்கும். ஆனால் பார்க்க வேண்டிய படம் என்று இதை பரிந்துரைக்க முடியுமா என்பது சந்தேகமே! 


டிஸ்கி: நிச்சயம், என் அருமைத் தோழர்களான சீன் பட ரசிகர்களுக்கு இதை பரிந்துரைப்பேன். அதிலும் Margot Robbie வரும் காட்சிகள், ஓ......மை........காட்.....ஓமைகாட்.....ஓமைகாட்.....ஓமைகாட்!!!!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 comments:

 1. இதோ ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் நானும் இந்த படத்த டொரண்டி பார்த்தேன்.. இன்னிக்கு காலைல கூட புட்டிபால் கூட சாட் பண்ணும்போது "மச்சி, இன்வெஸ்ட்மென்ட் ஜாப்ஸ் அப்ளை பண்ணுற ஐடியாவையே டிராப் பண்ணிட்டேன்னு" சொல்ல வச்சிருச்சு இந்த படம்!

  இந்த படத்தை, ஏதோ ஒரு போர்ன் படம் பார்குற மனநிலைலையே நம்மள மாதிரி சராசரி ரசிகன் பார்ப்பான்!

  ReplyDelete
 2. உங்க எண்ண ஒட்டம்ந்தான் எனக்கும் இருந்தது. ஜாலியா பார்கறதுக்கு ஒரு படம். டி காப்ரியோ நடித்ததால் தப்பித்தது என நினைக்கிறேன். மனுஷன் பின்னியிருந்தாரு. மத்தும்படி ஒரு நியாயமான மனிதனது மனநிலை சூழ்நிலை காரணிகளால் எந்தளவுக்கு மாறுது என்பதையும், தவறுகள் செய்ய ஆரம்பிச்சதுக்கு அப்புறம் எப்படி கவர்ச்சிகரமானதாக தெரியுது என்பதையும் நல்லா படம் பிடிச்சிருக்காங்க. இது ரெண்டையும் தவிர்த்தா ஒண்ணுமே இல்ல படத்துலன்னுதான் நினைக்கிறேன். அமேரிக்கன் ஹஸில் பார்த்தீங்களா? விமர்சனம் வருமா?

  ReplyDelete
 3. @மொ.ராசு (Real Santhanam Fanz ) ரொம்பவே பாதிச்சிருச்சு போல..ஆனாலும் அந்த எக்ஸ்ட்ரீம் முடிவுக்கு போக வேண்டாம்..ஏன்னா, நீங்க டிகாப்ரியோ இல்லை!!

  ReplyDelete
 4. //Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
  அமேரிக்கன் ஹஸில் பார்த்தீங்களா? விமர்சனம் வருமா?//

  நல்லா இல்லேன்னு கேள்விப்பட்டேனே..பார்க்கலாமா?

  ReplyDelete
 5. கடைசியா நான் பார்த்த ஹிந்தி படம் ஷோலே ங்க.
  ( நன்றி- அமரர் சுஜாதா )

  ReplyDelete
 6. இதை சத்யத்தில் பார்த்தேன்.. எனக்கு பிடிச்சிருந்தது.. நீங்க சொன்ன அந்த கிளர்ச்சி காட்சிகள் வெட்டப் பட்டிருந்த போதும் டி-காப்ரியோ என்ற நடிகனை ஏவியேட்டர் படத்துக்கு பின்னர் கதாப்பத்திரத்தொடு பிரிதது பார்க்க முடியாதபடி செய்துவிட்டார். இதுதான் பெல்போர்டின் வாழ்க்கைன்னு சொல்லி எடுத்த படத்துல வேற விஷயங்கள் எதிர்பார்க்க கூடாதுங்கிறது என் கருத்து..

  ReplyDelete
 7. இங்க டோரண்டில் வந்திருக்கா தெரியலை...

  பார்க்கணும்...

  ReplyDelete
 8. ஓ......மை........காட்.....ஓமைகாட்.....ஓமைகாட்.....ஓமைகாட்!!!!///இந்த படத்த டொரண்டி பார்த்தேன்!ஓ.சி?(நமக்கு இல்ல,நமக்கு இல்ல!கெடையாது.சொக்கா,ஓடிடு!)

  ReplyDelete
 9. // வானரம் . said...
  கடைசியா நான் பார்த்த ஹிந்தி படம் ஷோலே ங்க.
  ( நன்றி- அமரர் சுஜாதா )//

  அவரு இங்கிலீஷ் படம்ன்னு சொன்ன ஞாபகம்!

  ReplyDelete
 10. //கோவை ஆவி said...
  இதுதான் பெல்போர்டின் வாழ்க்கைன்னு சொல்லி எடுத்த படத்துல வேற விஷயங்கள் எதிர்பார்க்க கூடாதுங்கிறது என் கருத்து..//

  பெல்போர்ட்டின் வாழ்க்கையை எடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்பது தான் நம் கேள்வி, ஆவி.

  ReplyDelete
 11. // சே. குமார் said...
  இங்க டோரண்டில் வந்திருக்கா தெரியலை...

  பார்க்கணும்...//

  இருக்கு குமார்.

  ReplyDelete
 12. // Subramaniam Yogarasa said...
  (நமக்கு இல்ல,நமக்கு இல்ல!கெடையாது.சொக்கா,ஓடிடு!)//

  அதே ஃபீலிங் தான்!

  ReplyDelete
 13. // வானரம் . said...
  கடைசியா நான் பார்த்த ஹிந்தி படம் ஷோலே ங்க.
  ( நன்றி- அமரர் சுஜாதா )//

  செங்கோவி-அவரு இங்கிலீஷ் படம்ன்னு சொன்ன ஞாபகம்.


  அதில்லையா, பாய்ஸ் படத்துல பரத் ஜெனீலியாவ கரெக்ட் பண்ண (என்னைய மாதிரி) ஒரு அப்பாவி கிட்ட செமயா (உன்னைய மாதிரி)பீட்டர் விடுவாரு .அதுக்கு அந்த ஆளு சொல்லுவான் 'கடைசியா நான் பார்த்த ஹிந்தி படம் ஷோலே' னு.

  வசனம்- சுஜாதா.
  http://www.youtube.com/watch?v=qA51DyhsM3M

  ReplyDelete
 14. எனக்கு படம் பார்க்கும்போது ஸ்கார்செசி பற்றிய பிரமிப்பாகவே இருந்தது. சுயசரிதையை வைத்துப் படமாக எடுத்ததால், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் பற்றிப் படம் பேசவில்லை என நினைக்கிறேன். 'வாழ்க்கையைக் கொண்டாடிய ஒரு மனிதனின் கதை!' :-))

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.