நெஞ்சைத் தொட்ட வரிகள்:
பூந்தோட்ட காவல்காரா
பூப்பறிக்க இத்தனை நாளா?
மாந்தோப்புக் காவல்காரா -ஆ ஆ ஆ ஆ
மாம்பழத்தை மறந்து விட்டாயா?
மறந்து விட்டாயா?
பதிவர் புலம்பல்:
ஃபேஸ்புக்ல இருக்கிற நல்ல + கெட்ட விஷயம் சாட் தான். எந்த நிமிசமும் நட்பு வட்டத்துல இருக்கிற யாரையும் ஈஸியா காண்டாக்ட் பண்ண முடியுது. ஆனா மேட்டரே இல்லாம பட்டறை போட சிலர் வர்றது தான் கஷ்டமா இருக்கு. புதுசா ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து அக்செப்ட் பண்ணதுமே ஒருத்தர் வந்து ‘அப்புறம், இன்னிக்கு பதிவு ஏதாவது எழுதி இருக்கீங்களா?’ன்னாரு. ’ஆமாம்’ன்னேன். ’சரி, அந்த லின்க்கை இங்க போடுங்க, பார்ப்போம்’ங்கிறாரு. அதோட விட்டா பரவாயில்லை.
‘இனிமே நீங்க என்ன பண்றீங்க, பதிவு போட்டா, சாட்ல எனக்கு லின்க் போட்டிருங்க. ஓகே?’ன்னு கேட்கவும் செம காண்டாகிட்டேன். ‘சாட்ல மட்டும் போட்டா போதுமா பாஸ்? நான் வேணா நீங்க ஆபீஸ் விட்டு போற ரோட்டோரம், ஏதாவது மரத்தடில நின்னுக்கிட்டு வா..வான்னு கூப்பிடட்டுமா?’ன்னு கேட்டேன். அந்தாளுக்கு புரியலை. ‘நீங்க இருக்கிறது குவைத்ல..நான் இருக்கிறது ***-ல. எப்படி பாஸ் வருவீங்க?’ன்னு கேட்கிறார். அடப்பாவிகளா, எங்க இருந்துய்யா இப்படிக் கிளம்பி வர்றீங்க? நீங்க டெய்லி படிக்க நான் என்ன மகாபாரதமா எழுதறேன்? இதைப் படிக்கலேன்னா உங்க குடியா முழுகிப்போயிடும்? என்னையைவே இந்த பாடு படுத்துனா, எழுத்தாளர்களை எல்லாம் என்ன பாடு படுத்துவீங்க? சாரு புலம்பறதுலயும் ஒரு நியாயம் இருக்கும் போல!
குஷ்..பூ:
குஷ்பூவின் ஆடி கார் பின்பக்கத்தை அரசு பஸ் மோதியதுன்னு செய்தி படிக்கவுமே பக்குன்னு ஆகிடுச்சு. பின்பக்கம் மட்டும் தான் சேதாரம், அதுவும் காரின் பின்பக்கம் தான்னு தெரிஞ்ச அப்புறம் தான் நிம்மதி ஆச்சு. 'ச்சே..அந்த டிரைவரு நம்மளை விட வெறித்தனமான ரசிகரா இருப்பாரு போலிருக்கே'ன்னு நினைச்சுக்கிட்டேன். கட்டுப்பாடோட நடந்துக்கோங்கன்னு நாம பலதடவை மன்றக்கண்மணிகள்கிட்ட சொல்லியாச்சு. கேட்க மாட்டேங்கிறாங்க. தலைவியை நேர்ல பார்த்துட்டாப் போதும், 'இது பஸ்..அது ஆடி கார்'ங்கிறதுகூட மறந்துட்டு, விட்டு ஏத்திடுறாங்க.
ஷீட்டிங் போனா ’பவுடர்’ வீடியோ எடுக்கிறது, மீட்டிங் போனா இடுப்பைக் கிள்றதுன்னு பண்ணாத அக்கப்போர் இல்லை. இப்போ வண்டியைவிட்டு ஏத்துறதையும் ஆரம்பிச்சுட்டாங்க. தலைவியே 'எங்க, நம்ம பெட் ரூமுக்குள்ள பூந்தும் அடிப்பாங்களோ'ன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது, பஸ்ஸை விட்டு ஏத்துனா பயந்துடாது? கொஞ்சமாவது மனசாட்சியோட நடந்துக்கோங்கப்பா!
பல்பு:
அப்பப்போ பதிவு எழுதி நோட் பேட்ல போட்டு வச்சுக்கிறது வழக்கம். தமிழ்ஸ்.காம்க்கு ஒலக சினிமாவும், நமக்கு நானா யோசிச்சேனும் எழுதி வச்சிருந்தேன். ரெண்டையும் ஓப்பன் பண்ணி வச்சிருந்தவன், அவங்களுக்கு ஒலக சினிமா அனுப்புறதுக்குப் பதிலா மாத்தி காப்பி பண்ணி, நானா யோசிச்சேனை அனுப்பிட்டேன். ‘வாழ்க்கை என்பது மர்மக்குழி...’ங்கிற ரேஞ்சுல கட்டுரை எதிர்பார்த்தவங்களுக்கு, மாம்பழப் பதிவு வந்தா எப்படி இருக்கும்? அப்படியே ஷாக் ஆகிட்டாங்க போல! அய்யோ, பாவம். சரி, நம்மகூட சகவாசம் வச்சுக்கிட்டா, இதெல்லாம் பட்டுத்தானே ஆகணும்!
பாம்பூ:
மூணு வருசத்துக்கு முன்னால மாமனார் வீட்டுக்குப் போயிருந்தப்போ, நைட்ல வீட்டு முற்றத்துக்கு பாம்பு வந்திடுச்சு. பாம்புன்னா சும்மா என் ஒசரத்துக்கு, என் கை தண்டிக்கு! பார்த்த உடனே பதறிட்டாலும், மாமனார் வீடாச்சேன்னு நடுக்கத்தை வெளிய காட்டிக்காம நின்னேன். அது வீட்டு முற்றத்துல நின்னுக்கிட்டு, எங்கிட்டுப் போகன்னு முழிச்சுக்கிட்டு இருக்கு. எல்லாரும் கம்போட, பாம்பை அடிக்க கூடிட்டாங்க. அப்போத்தான் மாமனார் சொன்னாரு 'மாசமா இருக்கும்போது, பாம்பை அடிக்கக்கூடாது.அது பாவம். அதனால கலைச்சு விடுங்க. அது போயிடும்’ன்னு.
'இந்த கிராமத்து ஆட்களோட ஸ்பெஷாலிட்டியே இது தான். மத்தியானம் புழுக்கமாக இருக்கும்போதே, சாயந்திரம் மழை வரும்பாங்க. கரெக்ட்டா வந்திரும். இயற்கையோட அதிகமா டச்ல இருக்கிறதால மழைல ஆரம்பிச்சு, பாம்பு மாசமா இருக்கிறதை கன்டுபிடிக்கிறதுவரை அப்படி ஒரு நுண்ணறிவு. நாம படிக்கப் போறேன்னு போயி, மிஸ் பண்ணது அதைத்தான். ஆனாலும் நம்மளும் கண்டுபிடிப்போம்'ன்னு பாம்பை உத்துப் பார்த்தேன்.
அது மெதுவா, ரொம்ப மெதுவா வேலிக்காட்டை பார்த்து நகருது. 'ஓ..வேகமா போனா மாசமா இல்லை. மெதுவா போனா மாசமா இருக்குன்னு அர்த்தமோ? ஆனா அது நகருமுன்னாடியே மாமனார் கண்டுபிடிச்சிட்டாரே'ன்னு யோசனை. ஆனாலும் மாமனார்கிட்டப் போய் இதைக் கேட்க கூச்சமா இருந்துச்சு.அதனால கிராமத்து பல்கலைக்கழகமான தங்கமணிகிட்டெ கேட்போம்ன்னு முடிவு பண்ணேன்.
மெதுவா போற பாம்பை, பாவமா பார்த்துக்கிட்டிருந்த தங்கமணிகிட்டப் போய், ரகசியக் குரல்ல 'ஏம்மா..பாம்பு மாசமா இருக்குன்னு எப்படி கண்டுபிடிக்கிறது?'ன்னு கேட்டேன். அப்போ எட்டு மாச கர்ப்பிணியா இருந்த தங்கமணி, பல்லைக் கடிச்சிட்டே சொல்லுச்சு "மானத்தை வாங்காதீங்க. அவரு மாசமா இருக்கிறதாச் சொன்னது, என்னை!"
நமீதா, ஹன்சிகா படம் போடாததை வன்மையாக கண்டிக்கிறேன்
ReplyDeleteமாசமா இருக்கும்போது, பாம்பை அடிக்கக்கூடாது.அது பாவம்.
ReplyDelete>>
எனக்கு இங்கயே வெளங்கிடுச்சு! உங்க மாமனார் யாரைச் சொல்றாருன்னு!!??
//தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteநமீதா, ஹன்சிகா படம் போடாததை வன்மையாக கண்டிக்கிறேன்//
பதிவுல ஏதோ ஒன்னு குறையுதேன்னு நினைச்சேன்..அது தானா?
//ராஜி said...
ReplyDeleteமாசமா இருக்கும்போது, பாம்பை அடிக்கக்கூடாது.அது பாவம்.
>>
எனக்கு இங்கயே வெளங்கிடுச்சு! உங்க மாமனார் யாரைச் சொல்றாருன்னு!!??//
உங்க அளவுக்கு அறிவு இருந்தா, நான் ஏன் இப்படி இருக்கேன்!
ஏன்யா நான் பேஸ்புக் சாட்ல கேட்ட லிங்க் இன்னும் எனக்கு அனுப்பல.... எப்போ கிடைக்கும்???
ReplyDelete//தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteஏன்யா நான் பேஸ்புக் சாட்ல கேட்ட லிங்க் இன்னும் எனக்கு அனுப்பல.... எப்போ கிடைக்கும்???//
போட்டாச்சு..போட்டாச்சு.
ஹா ஹா கடைசில வச்சிங்க பாருங்க ஒரு டிவிஸ்ட் .. உங்களோட அக்மார்க் நக்கல் ..☺
ReplyDelete//Manimaran said... [Reply]
ReplyDeleteஹா ஹா கடைசில வச்சிங்க பாருங்க ஒரு டிவிஸ்ட் .. உங்களோட அக்மார்க் நக்கல் ..☺//
அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம்.
//FOOD NELLAI said...
ReplyDeleteநல்லா சர்வீஸ் பண்றீங்க செங்கோவி.//
ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்துச்சோ?..ரைட்டு.
கேட்டவர்களுக்கு தேடித்தரும் வள்ளல் செங்கோவி ராக்ஸ்.....
ReplyDeleteசெங்கோவி கொஞ்ச நாளா பத்தி எழுதம இருந்திக அது எதுக்கு தானா
ReplyDeleteஅப்ப முழுகாம இருக்குன்னு 1 ஹ..ஹா..ஹா. இது தான் நோக்கு வர்மமோ ?!
ReplyDelete"மானத்தை வாங்காதீங்க. அவரு மாசமா இருக்கிறதாச் சொன்னது, என்னை!"
ReplyDeleteகுஷ்பூ பத்தின 'மேட்டர்ல' ஏன்யா 18 போடல.இனிமே பதிவு போட்டா சொந்தகாரங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்புங்க.அப்போ பத்மினியும் பண்ணையாரும் தான் அந்த ஒலக படமா?பாம்பூ: போங்க பாஸ் ஆம்பளைங்க மானத்தையே வாங்கிட்டிங்க.
ReplyDeleteநவரசம் ததும்பும் பதிவு. நல்லா இரசிச்சேன்.
ReplyDelete//Tirupurvalu said...
ReplyDeleteசெங்கோவி கொஞ்ச நாளா பத்தி எழுதம இருந்திக அது எதுக்கு தானா//
இது மாதிரி பலதடவை...!
//கலாகுமரன் said...
ReplyDeleteஅப்ப முழுகாம இருக்குன்னு 1 ஹ..ஹா..ஹா. இது தான் நோக்கு வர்மமோ ?!//
உங்க அளவுக்கு, அம்புட்டுத் திறமை இல்லீங்கோ!
வானரம் . said...
ReplyDelete//குஷ்பூ பத்தின 'மேட்டர்ல' ஏன்யா 18 போடல.//
இப்போ என்னாச்சு? உலகம் அழிஞ்சுடுச்சா? முன்னாடி போட்டது..எல்லாருக்கும் தெரியும்ன்னு விட்டாச்சு. இனிமே போடுவோம்.
//அப்போ பத்மினியும் பண்ணையாரும் தான் அந்த ஒலக படமா?//
இல்லை பாஸ்..தமிழில் ஒரு உலக சினிமா தொடர்.
http://tamilss.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
//அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
ReplyDeleteநவரசம் ததும்பும் பதிவு. நல்லா இரசிச்சேன்.//
நானா யோசிச்சேன்..நீங்க நல்லா ரசிச்சேள்!
செங்கோவி said...
ReplyDelete//குஷ்பூ பத்தின 'மேட்டர்ல' ஏன்யா 18 போடல.//
இப்போ என்னாச்சு? உலகம் அழிஞ்சுடுச்சா? முன்னாடி போட்டது..எல்லாருக்கும் தெரியும்ன்னு விட்டாச்சு. இனிமே போடுவோம்.
உங்கள் கமெண்ட் மிகவும் ஆபாசமாக இருக்கிறது.
ஓ நீங்க சொன்னது 18+ யா, அப்பாடி நான் கூட கொஞ்ச நேரத்துல பதறிட்டேன் .
இனிமே தெளிவா சொல்லுயா.
இருந்தாலும் அந்த. பத்மினி போட்டோ சூப்பர் :)))
ReplyDeleteஎன்பது போல இருக்கு குஸ்பூ படம்:)))
ReplyDeleteபதிவு அருமை
ReplyDeleteஇன்று என் தளத்தில்
ஒண்ணுமே போடலியே......
இந்தமாதிரி ஒரு கமெண்டு படிச்சு ரொம்ப நாளாச்சிண்ணே, கண்டுக்காதீங்க...
ReplyDeleteஅண்ணே இந்த பல்பு, புலம்பல் எல்லாம் உங்களுக்கு என்ன புதுசா? எதயும் தாங்கும் உள்ளம் உங்களுக்கு. நீங்க ரொம்ப நல்லவர்ண்னே....
ReplyDeleteஅப்புறம் சில நாளாவே, ஓவியா சுருதின்னு போட்டோ மாறுது, உங்க ரசனை வர வர சுருங்கிப் போச்சோன்னு எனக்கு சந்தேகமாவே இருக்கு.
ReplyDeleteஎன்னதான் இருந்தாலும் உங்களுக்குள்ள ஒரு சயின்டிஸ்ட் இருக்காண்ணே, மாமா ஏதோ சொல்றாரு, பெரிய மனுஷன்னு விட்டுறாமா ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க பாருங்க, சீக்கிரமே ஒரு நியூட்டன், டார்வின் மாதிரி வருவீங்கண்ணே
ReplyDeleteஆ....மாம்பழமா எங்கே எங்கே ?
ReplyDeleteகுஷ்பு மேலே ஏ ஏ ஏத்திட்டாங்களா...சொல்லவேயில்ல ?
பாம்பு பல்பு செம....
ஒவ்வொன்றும் ரசிக்க வைத்தது..அதில் முதல் மூன்று - பதிவர் புலம்பல், பல்பு, பாம்பு..
ReplyDeleteநானும் உங்கள மாதிரி தான்.. பாம்பு மாசமா இருப்பதை கண்டுபிடிக்க என்ன ஐடியா சொல்றாருன்னு பாத்தா.....நீங்க வாங்கின அதே பல்பு, நானும் வாங்கிட்டேன்..!!!!
ReplyDeleteபாத்தவுடனே,பாம்பு "பாசமா" இருப்பது எப்புடி?ன்னு படிச்சுத் தொலைச்சுட்டேன்!நல்லா யோசிச்சிருக்கீங்க!////அஃவ்டி(Audi) காரா?
ReplyDeleteபாம்பு கதை என் வாழ்விலும் நடந்துச்சுங்க
ReplyDeleteநாம பாம்பை அடிச்சா பால் ஊர்த்தி சொஞ்சம் சில்லரையும் சேர்த்து புதைச்சிடுவேம், எல்லா பாவ தோஷமும் போயிடும்.!! :)
ReplyDelete//தனிமரம் said...
ReplyDeleteஇருந்தாலும் அந்த. பத்மினி போட்டோ சூப்பர் :)))//
பத்மினியா?...ரைட்டு.
//Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
ReplyDeleteஅப்புறம் சில நாளாவே, ஓவியா சுருதின்னு போட்டோ மாறுது, உங்க ரசனை வர வர சுருங்கிப் போச்சோன்னு எனக்கு சந்தேகமாவே இருக்கு.//
அதை ஏன்யா கேட்கறீங்க? நம்ம தலைவிகளோட எல்லா ஸ்டில்லையும் போட்டு முடிச்சாச்சு..வேற வழியில்லாம வேதனையோட...
//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஆ....மாம்பழமா எங்கே எங்கே ?
குஷ்பு மேலே ஏ ஏ ஏத்திட்டாங்களா...சொல்லவேயில்ல ?
//
என்னண்ணே நீங்க..இது தெரியாமலா இருக்கிறது?
//தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...
ReplyDeleteஒவ்வொன்றும் ரசிக்க வைத்தது..அதில் முதல் மூன்று - பதிவர் புலம்பல், பல்பு, பாம்பு..//
நன்றி பாஸ்.
//விமல் ராஜ் said...
ReplyDeleteநானும் உங்கள மாதிரி தான்.. பாம்பு மாசமா இருப்பதை கண்டுபிடிக்க என்ன ஐடியா சொல்றாருன்னு பாத்தா.....நீங்க வாங்கின அதே பல்பு, நானும் வாங்கிட்டேன்..!!!!//
ஸ்ருதி மார்க், ஷ்பெஷல் பல்பு.
//Subramaniam Yogarasa said...
ReplyDeleteபாத்தவுடனே,பாம்பு "பாசமா" இருப்பது எப்புடி?ன்னு படிச்சுத் தொலைச்சுட்டேன்!நல்லா யோசிச்சிருக்கீங்க!////அஃவ்டி(Audi) காரா?//
அதே தான்..இந்தியால ஆடின்னு தான் சொன்னாங்க!
//முத்தரசு said...
ReplyDeleteபாம்பு கதை என் வாழ்விலும் நடந்துச்சுங்க//
அப்பாடி..துணைக்கு ஆள் வந்தாச்சுய்யா.
// காட்டான் said...
ReplyDeleteநாம பாம்பை அடிச்சா பால் ஊர்த்தி சொஞ்சம் சில்லரையும் சேர்த்து புதைச்சிடுவேம், எல்லா பாவ தோஷமும் போயிடும்.!! :)//
மாம்ஸ், இது என் மாம்ஸ்க்கு தெரியாது போலிருக்கே!
அது ரொம்ப சுலபம்ங்க... பாம்பு பின்னாடியே போய் மாங்காவோ சாம்பலோ திங்கும் போது அதுவும் இல்லனா மசக்கை வாந்தி எடுக்கும் போது பார்த்து கண்டுபுடிச்சிடலாம்.
ReplyDeleteபாஸ்..
ReplyDeleteஉங்களுக்கு ரொம்ம்பக் குசும்பு பாஸ்.
சிரிப்ப அடக்க முடியல.ரொம்ப நாளாச்சு இப்படி சிரிச்சு.
Thank you. nice post.
உங்கள் பதிவை trainல் செல்லும்போது வாசித்து தப்பா போச்சு. குபீர் என்று சிரித்துவிட்டேன். எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள்.
ReplyDelete//drogba said...
ReplyDeleteஎல்லோரும் என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள்.//
பதிவில் போட்ட ஸ்டில்லைக் காட்டுங்க, இன்னும் அமோகமா இருக்கும்!
//வெட்டிப்பேச்சுsaid...
ReplyDeleteபாஸ்..
உங்களுக்கு ரொம்ம்பக் குசும்பு பாஸ்.
சிரிப்ப அடக்க முடியல.ரொம்ப நாளாச்சு இப்படி சிரிச்சு.//
என் கடன், சிரிக்க வைப்பதே!
//jeeva1106 said...
ReplyDeleteஅது ரொம்ப சுலபம்ங்க... பாம்பு பின்னாடியே போய் மாங்காவோ சாம்பலோ திங்கும் போது அதுவும் இல்லனா மசக்கை வாந்தி எடுக்கும் போது பார்த்து கண்டுபுடிச்சிடலாம்.//
நீங்க நாசால தானே வேலை செய்றீங்க?