Friday, February 21, 2014

பிரம்மன் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
வில்லேஜ் கெட்டப்பை விட்டுவிட்டு, முதன்முதலாக சிட்டி ஸ்டைல் பாண்டியாக சசிகுமார் நடித்து வெளிவந்திருக்கும் படம் பிரம்மன். முதன்முதலாக சந்தானம் சசியுடன் ஜோடி(!) சேர, கூடவே சூரியும் இருக்க நல்ல கமர்சியல் மூவியாக வரும் என்று எதிர்பார்ப்பை எகிற வைத்த படம். என்ன ஆச்சுன்னு பார்ப்போம், வாருங்கள்.

ஒரு ஊர்ல..:
ஒரு தியேட்டரை லீசுக்கு எடுத்து நஷ்டத்தில் நடத்திக்கொண்டிருக்கும் சசிக்குமாருக்கு ஹீரோயின் மேல் காதல்.(பின்னே, ஹீரோயின் பாட்டி மேலயா....?) . சசியின் பாலிய..ச்சே, பால்ய.., ..சிறுவயது நண்பன் சினிமாவில் பெரிய டைரக்டராக இருக்கிறார். தியேட்டரை தொடர்ந்து நடத்த சிக்கல் வர, காதலும் இரு வீட்டார் எதிர்ப்பால் சிக்கல் ஆக, நண்பனிடம் உதவி கேட்க சென்னை போகிறார். தியேட்டர்-காதல்-நட்பு மூன்றிலும் எப்படி ஜெயிக்கிறார் என்பதே கதை.

உரிச்சா....:
இன்றைய சூழ்நிலையில் ஒரு தியேட்டரை, அதிலும் பழைய படங்கள் மட்டுமே ஓடும் தியேட்டரை நடத்துவது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பதை நகைச்சுவையாக காட்டுவதுடன் முதல்பாதி ஆரம்பிக்கிறது. சிறுவயது முதலே அந்த தியேட்டர்மேல் இருக்கும் பிரியத்தால், லீசுக்கு எடுத்து நஷ்டத்துடன் நடத்துவதும், சசி காதலைவிட தியேட்டரை பெரிதாக மதிப்பதும் ஓரளவு டச்சிங்காகவே இருந்தது.

கூடவே ஆப்பரேட்டர்+நண்பனாக சந்தானம் இருப்பதால், முதல்பாதி ஜாலியாகவே நகர்கிறது. சசி காதலில் விழுவதும், ஹீரோயினின் அண்ணனுக்கே சசியின் தங்கை வாழ்க்கைப்பட, பணத்தைத் தவிர காதலுக்கு வேறு பிரச்சினை குறுக்கே இல்லை என்றும் ஆகிறது. தியேட்டர் செண்டுமெண்ட் + காதல் கலாட்டாக்கள்+சந்தானம் ஒன்லைனர்கள் என முதல்பாதி ஓகே என்று சொல்லும் நேரத்தில் தான் நட்பு சேப்டரை ஓப்பன் செய்கிறார்கள்.

இரண்டாம்பாதியில் சென்னைக்கே நண்பனைத் தேடி சசி போக, சூரியுடன் சென்னையில் அலப்பறை ஆரம்பிக்கிறது. நண்பனைத் தேடிப் போன இடத்தில் தற்செயலாக டைரக்டர் ஆகும் சான்ஸ் இவருக்கே கிடைப்பதும்(என்னது?-ன்னு ஜெர்க் ஆகக்கூடாது..அது அப்படித்தான்!), அப்புறம் அவசர அவசரமாக சினிமாவைக் கற்றுக்கொண்டு(!) இவர் படத்திற்கு பூஜை போடும் நேரத்தில் நண்பனுக்காக அந்த சான்ஸ்+கதையை விட்டுக்கொடுக்க, அடுத்து நண்பனுக்காக காதலை விட்டுக்கொடுக்க, அதனால் க்ரிப்பான திரைக்கதையையும் விட்டுக்கொடுத்து, படத்தை நாடகம் ஆக்கிவிடுகிறார்கள்.

தியேட்டர், காதல் பிரச்சினையே போதுமானதாக இருக்கும்போது, நட்பைக் கொண்டுவந்து, அதன் செண்டிமெண்ட்டை சாறு பிழிந்து, ‘நட்புன்னா....’ன்னு வழக்கமான சசி பட டயலாக்குகளைப் பேசி, எங்கெங்கோ அலை பாய்ந்திருக்கிறார்கள். நண்பனுக்கு திருமணம் நிச்சயம் ஆகிறது, பார்த்தால் அது ஹீரோயின் என்பதெல்லாம் சிவாஜி-பாலாஜி கால ட்விஸ்ட் மக்கா! இன்னுமா அதை வச்சு படம் ஓட்டலாம்ன்னு நினைக்கிறீங்க? அதுக்கு கிளைமாக்ஸ் என்னவா இருக்கும்ன்னு பேரரசு ஃபேன்ஸ்க்குக்கூடத் தெரியுமே!

படத்தில் பாராட்ட வேண்டிய விஷயம், இன்றைய தியேட்டர்களின் நிலைமையையும் தியேட்டருக்கும் சசிக்குமான பிணைப்பையும் அழகாகச் சொன்னது தான். ஆனால் வேறு தொழில் பார்த்துக்கொண்டேகூட, அந்த தியேட்டரை நடத்தலாம். வேறு வேலைக்கும் போகாமல், ‘பணத்தை பெருசா நினைக்கிறவன் இல்லை நானு’ என்று கூமுட்டைத்தனமாக பஞ்ச் பேசிக்கொண்டு, கிடைக்கிற பணத்தையெல்லாம் சசி விட்டுக்கொடுப்பது எல்லாம் ஓவரோ ஓவர்.

இன்றைய சினிமாவின் நிலையையும் ’அசிஸ்டெண்ட் டைரக்டர் ‘சூரி போர்சனில் ஜாலியாக சொல்லி இருக்கிறார்கள். இரண்டாம்பாதியில் நம்மை உட்கார வைப்பது அது தான். மொத்தத்தில் ஒரே படத்திலேயே தியேட்டர் பாசம்-காதல்-நட்பு-தியாகம் என எல்லாவற்றையும் தீவிரமாகச் சொல்ல முயற்சித்து, கோட்டை விட்டுவிட்டார்கள்.

சசிகுமார்:
வில்லேஜ் கெட்டப்பில் இருந்து டவுன் கெட்டப்பிற்கு மாறி இருக்கிறார். சசியிடம் பிடித்த விஷயமே, சுறுசுறுப்பு தான். இதிலும் துருதுருவென வருகிறார். வீட்டில் திட்டு வாங்கும் உருப்படாத பையனாக, காதலியை விரட்டி விரட்டி காதலிப்பவராக, சந்தானத்திற்கும் ஈடு கொடுப்பவராக சசி எப்போதும்போல், அவர் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார். ராஜூ சுந்தரம் புண்ணியத்தில், உறுத்தாத டான்ஸ் ஸ்டெப்களுடன், ஃபாரின் டூயட்டும் பாடி விட்டார், இந்தப் படத்தில்.
லாவண்யா:
புதுமுகமாக அறிமுகம் ஆகியிருக்கிறார். ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார். சிரிக்கும்போது கன்னத்தில் குழிவிழும்போது, பிரபு மாதிரி அழகாக இருக்கிறார்.(நான் சரியாத்தான் பேசறனா?) நடிப்பிலும் ஓகே தான்.  ஒரு ரவுண்ட் வருவார் என்று நினைக்கிறேன்.

சந்தானம்:
முதல்பகுதியின் கலகலப்புக்கு உத்தரவாதம் தருபவர். இரண்டாம்பாதியில் கதை சென்னைக்கு நகர்ந்துவிட, இவரும் தியேட்டரை பொறுப்புடன் நடத்தும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக ஆகிவிடுகிறார். வழக்கமான ஒன் லைனர்கள் தான். ஆனாலும் கலகலக்க வைத்துவிடுகிறார்.

சூரி:
சினிமாவில் வாய்ப்பு தேடும் மனிதராக வருகிறார். வந்த ஒரே நாளில் சசி டைரக்டர் ஆகிவிட, அவரை பின்னால் இருந்து இயக்குபவராக, கோ-டைரக்டராக ஆகிறார். சினிமாவில் உள்ள சில பந்தா பரமசிவன்களை நன்றாகவே ஓட்டி இருக்கிறார்கள். சந்தானத்துடன் சேர்ந்து ஒரு காட்சிகூட இல்லை.
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- மெதுவாகச் செல்லும் திருப்பங்களை யூகிக்க வைக்கும் திரைக்கதை
- நட்பு, நட்புக்கு தியாகம் என்று இழுவையான கடைசி முக்கால்மணி நேரம்
- லாஜிக் பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாதது
- யதார்த்ததைப் புரிந்துகொள்ளத, எரிச்சலைக்கிளப்பும் ஹீரோ கேரக்டர்
- தியேட்டருக்காக காதலை தூக்கி எறிவது, நட்புக்காக காதலை தியாகம் செய்வது என சட்டை ரேஞ்சுக்கு காதலை டீல் பண்ணியது. அது இறுதியில் இருவரும் சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்பே இல்லாமல் செய்துவிட்டது.

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- - சசிக்குமார்
-  சந்தானம் மற்றும் சூரியின் காமெடி 
- தியேட்டர் போர்சன் (வெயிலை ஞாபகப்படுத்தினாலும்)
- அவ்வப்போது வரும் நல்ல வசனங்கள்
- டிஎஸ்பியின் இசையில் பாடல்கள். (முதல்பாட்டு ஆறு படத்தில் வந்த அதே பீட்!)
- அந்த இயல்பான தங்கச்சி கேரக்டர்
- ஒரு பாடலுக்கு ஆடும் பத்மப்ரியா
- சசி படத்திற்கு ஒரு புதிய லுக்கை கொடுத்தது (நண்பன் போர்சன் தான் அக்மார்க் நாடோடித்தனம்!)
பார்க்கலாமா? :

முதல்பாதி+ காமெடிக்காக........ஒருமுறை!



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

  1. //சசி படம் என்பதால், அதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை.//

    கருப்பன் குசும்பன்!

    ReplyDelete
  2. //வழக்கமான ஒன் லைனர்கள் தான். ஆனாலும் கலகலக்க வைத்துவிடுகிறார்.//

    தலைவர் ஸ்பெஷலே அதுதானே, அழகுராஜா ஸ்டைல்ல ட்ரை பண்றதுக்கு இது ரொம்ப ஸேஃப். அவருக்கும் நமக்கும்.

    ReplyDelete
  3. //சந்தானத்துடன் சேர்ந்து ஒரு காட்சிகூட இல்லை//

    அதுவாண்ணே முக்கியம், ரெண்டு பேருமே ஒரே படத்த்துல இருக்காங்க அது போதாதா?

    ReplyDelete
  4. அப்புறம் யாரு சார் அந்த பொண்ணு?

    ReplyDelete
  5. பார்த்துட்டு சொல்றேன்

    ReplyDelete
  6. //Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
    //வழக்கமான ஒன் லைனர்கள் தான். ஆனாலும் கலகலக்க வைத்துவிடுகிறார்.//

    தலைவர் ஸ்பெஷலே அதுதானே, அழகுராஜா ஸ்டைல்ல ட்ரை பண்றதுக்கு இது ரொம்ப ஸேஃப். அவருக்கும் நமக்கும்.//

    அதை ஏன்யா ஞாபகப்படுத்துறீங்க?

    ReplyDelete
  7. //Blogger Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
    அப்புறம் யாரு சார் அந்த பொண்ணு?//

    ம்..எனக்கு பக்கத்து வீடு தான்..என்னய்யா கேள்வி இது? பேரு ஸ்டில்லு போட்டாசு..படத்து ஹீரோயின்னும் சொல்லியாச்சு. அப்புறமும் யாருன்னா என்னய்யா அர்த்தம்?

    ReplyDelete
  8. //கோவை ஆவி said...
    பார்த்துட்டு சொல்றேன்//

    ஓகே, பாஸ்.

    ReplyDelete
  9. செங்கோவி said...

    //அதை ஏன்யா ஞாபகப்படுத்துறீங்க?//

    அந்த எஃபெக்ட்ல இருந்து இன்னும் வெளியேறவே இல்லண்ணே, அதுதான்.

    ReplyDelete

  10. //செங்கோவி said...
    ம்..எனக்கு பக்கத்து வீடு தான்..என்னய்யா கேள்வி இது? பேரு ஸ்டில்லு போட்டாசு..படத்து ஹீரோயின்னும் சொல்லியாச்சு. அப்புறமும் யாருன்னா என்னய்யா அர்த்தம்?//

    ரெண்டு ஸ்டில்லும் ஒரே பொண்ணா? ஓ காட்.

    ReplyDelete
  11. சசி படத்தைப் பார்க்கலாம்ன்னு சொல்லுறீங்க... பார்த்துடுவோம்...

    ReplyDelete
  12. "புது கெட்டப்" சசிகுமார் அவர்களுக்காக பார்க்க வேண்டும்...

    ReplyDelete
  13. சசிக்குமார் படமா ?? பிரம்மனா ? சரி.. சரி.. :)

    //சந்தானம் மற்றும் சூரியின் காமெடி//
    இதுக்காண்டியாச்சும் பாப்போம்..!!

    ReplyDelete
  14. சசிக்குமார் படம்னாலே நட்பு செண்டிமெண்ட் இருக்கணும்னு டைரக்டர் நினைச்சிட்டாரோ என்னவோ?! சிறப்பான விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
  15. டைரக்டர் ஆகும் சான்ஸ் இவருக்கே கிடைப்பதும்(என்னது?-ன்னு ஜெர்க் ஆகக்கூடாது..அது அப்படித்தான்!), //

    ஆஹா இப்பிடியும் ஆரம்பிச்சிட்டாங்களா ?

    ReplyDelete
  16. ஒட்டு மொத்ததுல நல்ல டிவிடி காப்பிக்காக வெயிட் பண்ணி, காமெடி காட்சிகள மட்டும் பார்வர்ட் பண்ணிகிட்டே பார்க்க சொல்றீங்க.. ஓகே ஓகே..

    ReplyDelete
  17. உங்கள் விமர்சனம்,நன்று!சசி படம் சறுக்கி விட்டது என்கிறீர்கள்,யா/ஆ னைக்கே அடி சறுக்கும் போது............ஹி!ஹி!!ஹீ!!!

    ReplyDelete
  18. ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார். சிரிக்கும்போது கன்னத்தில் குழிவிழும்போது, பிரபு மாதிரி அழகாக இருக்கிறார்.(நான் சரியாத்தான் பேசறனா?) // கன்னத்தில் குழி என்றால் குஸ்பூதான் இன்னும் ஞாபகம் :)))

    ReplyDelete
  19. //Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

    //செங்கோவி said...
    ம்..எனக்கு பக்கத்து வீடு தான்..என்னய்யா கேள்வி இது? பேரு ஸ்டில்லு போட்டாசு..படத்து ஹீரோயின்னும் சொல்லியாச்சு. அப்புறமும் யாருன்னா என்னய்யா அர்த்தம்?//

    ரெண்டு ஸ்டில்லும் ஒரே பொண்ணா? ஓ காட்.//

    முதல் ரெண்டும் ஹீரோயின்..மூணாவது பத்மப்ரியா.

    ReplyDelete
  20. //சே. குமார் said...
    சசி படத்தைப் பார்க்கலாம்ன்னு சொல்லுறீங்க... பார்த்துடுவோம்...//

    ரைட்டு..!

    ReplyDelete
  21. // திண்டுக்கல் தனபாலன் said...
    "புது கெட்டப்" சசிகுமார் அவர்களுக்காக பார்க்க வேண்டும்...//

    அதை ஸ்டில்லுல பார்த்தாலே போதுமே!

    ReplyDelete
  22. //Andichamy G said...
    சசிக்குமார் படமா ?? பிரம்மனா ? சரி.. சரி.. :)

    //சந்தானம் மற்றும் சூரியின் காமெடி//
    இதுக்காண்டியாச்சும் பாப்போம்..!!//

    படத்தை முழுசா உட்கார்ந்து பார்க்க வைக்கிறது இவங்க தான்.

    ReplyDelete

  23. //Blogger s suresh said...
    சசிக்குமார் படம்னாலே நட்பு செண்டிமெண்ட் இருக்கணும்னு டைரக்டர் நினைச்சிட்டாரோ என்னவோ?! சிறப்பான விமர்சனம்! நன்றி!//

    சசிகிட்ட கால்ஷீட் வாங்க, அது போதும்ன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  24. //Blogger MANO நாஞ்சில் மனோ said...
    டைரக்டர் ஆகும் சான்ஸ் இவருக்கே கிடைப்பதும்(என்னது?-ன்னு ஜெர்க் ஆகக்கூடாது..அது அப்படித்தான்!), //

    ஆஹா இப்பிடியும் ஆரம்பிச்சிட்டாங்களா ? //

    ஆமாம்ணே..ஒரு கூடை பூவை காதுல வச்சுட்டாங்க.

    ReplyDelete
  25. //Blogger மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
    ஒட்டு மொத்ததுல நல்ல டிவிடி காப்பிக்காக வெயிட் பண்ணி, காமெடி காட்சிகள மட்டும் பார்வர்ட் பண்ணிகிட்டே பார்க்க சொல்றீங்க.. ஓகே ஓகே..//

    பாவம்யா புரடியூசர்.பப்ளிக்கா இப்படி பேசாதீங்க.

    ReplyDelete
  26. //Blogger Subramaniam Yogarasa said...
    உங்கள் விமர்சனம்,நன்று!சசி படம் சறுக்கி விட்டது என்கிறீர்கள்,யா/ஆ னைக்கே அடி சறுக்கும் போது............ஹி!ஹி!!ஹீ!!!//

    கரெக்ட்டாச் சொன்னீங்க ஐயா,

    ReplyDelete
  27. //Blogger தனிமரம் said...
    ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார். சிரிக்கும்போது கன்னத்தில் குழிவிழும்போது, பிரபு மாதிரி அழகாக இருக்கிறார்.(நான் சரியாத்தான் பேசறனா?) // கன்னத்தில் குழி என்றால் குஸ்பூதான் இன்னும் ஞாபகம் :)))//

    பிரபு வேறு..குஷ்பூ வேறா!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.