சமீப காலமாக ஈழத்தில் இருந்து நம்பிக்கையூட்டும் படைப்புகள் வெளிவரத் துவங்கியுள்ளன. அந்தவகையில் சென்ற வாரம் வெளியாகி, பலரின் பாராட்டைப் பெற்றுள்ள குறும்படம், பதிவர் ம.தி.சுதாவின் மிச்சக்காசு.
ம.தி.சுதா இயக்கிய துலைக்கோ போறியள் மற்றும் அவர் நடித்த போலி ஆகிய குறும்படங்கள், நம் மனதைக் கவரவில்லை என்பதே உண்மை. தொழில்நுட்பரீதியில் அவை மிகவும் பின் தங்கி இருந்தன. எனவே மிச்சக்காசு குறும்படத்தையும் கொஞ்சம் அவநம்பிக்கையுடனே பார்த்தேன். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பதற்கிணங்க, அவர் இந்தப் படத்தில் தேறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
கதை என்பது நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு நிகழ்வு தான். கடைகளில் பொருள் வாங்கும்போது, மீதிக்காசு பெரும்பாலும் கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக சாக்லேட்டைக் கொடுப்பது நம் மக்களின் வழக்கம். சமீபத்தில் கேபிள் சங்கர், டோல் கேட்டிலேயே அப்படி கொடுப்பதாக எழுதி இருந்தார். கடைகளில் மிச்சக்காசுக்கு பதிலாக கிடைக்கும் சாக்லேட்டை சேர்த்து வைக்கும் ஒரு சிறுவன், அன்று மாலையே வாங்கிய பொருளுக்கு காசு தருவதற்குப் பதிலாக சேர்த்து வைத்த சாக்லேட்டை கொடுத்து, கடைக்காரரை அதிர்ச்சிக்கும் நம்மை இன்ப அதிர்ச்சிக்கும் ஆளாக்குவது தான் படம்.
குறும்படம் என்றாலே ராக்கெட் சைன்ஸ் ரேஞ்சுக்கு கான்செப்ட் யோசிப்பது, கருத்து சொல்வது என்று இல்லாமல், யதார்த்தமாக வாழ்க்கையின் ஒரு துளியை நச்சென்று காட்டி இருக்கிறார்கள்.
வீட்டில் அமர்ந்திருக்கும் பையனிடம் அம்மா கடைக்குப்போ என்று சொன்னதும், அவன் காட்டும் எக்ஸ்பிரசன் அருமை. சலிப்புடன் போகிறான் என்பதை அழகாக காட்டியுள்ளார்கள். அதே போன்றே கடைசியில் கடைக்காரராக வரும் மதி.சுதா, நாக்கைக் கடித்தபடி கொடுக்கும் எக்ஸ்பிரசனும். படத்தில் நாம் ரசித்த இன்னொரு விஷயம், அந்த அம்மா கேரக்டரை வாய்ஸிலேயே முடித்ததும், ஆட்டோவில் பயணிக்கும்(!) நாய் கேரக்டரும்.
குறும்படத்தில் குறை என்றால், மிச்சக்காசுக்கு பதிலாக சாக்லேட் கொடுக்கிறார்கள் என்பது தான் படத்தின் முக்கிய மேட்டர். அப்படி கொடுக்கிற விஷயத்தை வசனத்திலோ காட்சியிலோ முதலில் தெளிவாகச் சொல்லவில்லை. இந்த விஷயத்திற்கு பழக்கப்பட்ட நமக்கு, என்ன நடக்கிறதென்று எளிதில் புரியும். மற்றவர்களுக்கு குறும்படம் முடியும்போது தான் தெரிய வரும். ‘மிச்சக்காசு இல்லை, இந்தா சாக்லேட்’ என்ற வசனமோ அல்லது, அந்த சாக்லேட்டிற்கு ஒரு குளோஷப்-ஷாட்டோ வைத்திருக்கலாம். இறுதியில் சிறுவனின் பையில் இருந்து எடுக்கும்போது தான் மொத்த விஷயமும் மற்றவர்களுக்கு விளங்கும்.
நகைச்சுவைப் படத்திற்கே உரிய எளிய இசை, சுதாவின் முந்தைய படங்களை விட பெட்டரான ஒளிப்பதிவு, சிறுவன் சங்கரின் நடிப்பு என எல்லாமாகச் சேர்ந்து, ஒரு நல்ல சிம்பிளான குறும்படம் பார்த்த ஃபீலிங்கை கொடுத்துவிட்டன.
AAA Internation Award நிகழ்வில் சிறந்ததிரைக்கதைக்கான விருதினை மிச்சக்காசு குறும்படம் வாங்கியுள்ளதாக அறிகிறேன். குறும்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எமது வாழ்த்துகள்!
1.இன்னைக்கு நீங்களா ஒன்னும் யோசிக்கலையா?
ReplyDelete2.அந்த டி-டே படம் என்னாச்சு?
3வெயில்+பிரியமானதோழி = பிரம்மன்.
4.இறைவா, சிம்புவிடம் இருந்து ஹன்சிகாவை காப்பாற்று.ஆர்யாவை நாங்கள் பாத்து கொள்கிறோம்.
5.கடக்காரன் மிச்ச காசு கொடுத்தாலும் சாக்லேட் வாங்கிட்டு இத தான் கொடுத்தான்னு பொய் சொல்லணும்.
அது தான் நல்ல பையனுக்கு அழகு.
நாமளும் ஒரு வாழ்த்தை இப்பவே சொல்லி வச்சிருவோம் வாழ்த்துக்கள்...!
ReplyDeleteஅருமையா வந்துருக்கு !
ReplyDeleteஹ!ஹ!!ஹா!!!விமர்சித்த பாங்கு(குட்டு)நன்று!///சாக்லேட்டை சேர்த்து வைக்கும் ஒரு சிறுவன், அன்று மாலையே வாங்கிய பொருளுக்கு காசு தருவதற்குப் பதிலாக சேர்த்து வைத்த [காசை] ('சாக்லேட்டை' ன்னு வரணும்)கொடுத்து,///தப்புப் பண்ணிட்டீங்களே தம்பி?
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...அருமையா வந்துருக்கு !////என்ன?என்ன??என்ன???
ReplyDeleteபார்த்துவிட்டால் போச்சு .அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநேரம் கிடைப்பின் அப்படியே இங்கேயும் பார்க்கலாம்...
ReplyDeletehttp://hainalama.wordpress.com/2014/02/22/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/
வானரம் .said...
ReplyDelete1.இன்னைக்கு நீங்களா ஒன்னும் யோசிக்கலையா?
ம்ஹூம்..அடிக்கடி யோசிச்சா, மூளை தேய்ஞ்சிரும்!
2.அந்த டி-டே படம் என்னாச்சு?
ஹிந்திப் படம் டவுன்லோடித் தான் பார்க்கணும். தியேட்டருக்கு போனா இங்க உள்ள சென்சார், பாதி படத்தை கட் பண்ணிடுவாங்க. நல்ல பிரின்ட் வரட்டும்.
3வெயில்+பிரியமானதோழி = பிரம்மன்.
பிரமாதம்..பிரமாதம்.
4.இறைவா, சிம்புவிடம் இருந்து ஹன்சிகாவை காப்பாற்று.ஆர்யாவை நாங்கள் பாத்து கொள்கிறோம்.
கரெக்ட்..ஆர்யால்லாம் அமுல்பேபி..நமக்கு ஜூஜூபி!
5.கடக்காரன் மிச்ச காசு கொடுத்தாலும் சாக்லேட் வாங்கிட்டு இத தான் கொடுத்தான்னு பொய் சொல்லணும்.
அது தான் நல்ல பையனுக்கு அழகு.
அப்போ நானும் அழகான நல்ல பையன் தான்!
//MANO நாஞ்சில் மனோsaid...
ReplyDeleteநாமளும் ஒரு வாழ்த்தை இப்பவே சொல்லி வச்சிருவோம் வாழ்த்துக்கள்...!/
ஏன். ஹீரோ சான்ஸ் கேட்கப் போறீங்களா?
//Subramaniam Yogarasa said...
ReplyDeleteஹ!ஹ!!ஹா!!!விமர்சித்த பாங்கு(குட்டு)நன்று!///சாக்லேட்டை சேர்த்து வைக்கும் ஒரு சிறுவன், அன்று மாலையே வாங்கிய பொருளுக்கு காசு தருவதற்குப் பதிலாக சேர்த்து வைத்த [காசை] ('சாக்லேட்டை' ன்னு வரணும்)கொடுத்து,///தப்புப் பண்ணிட்டீங்களே தம்பி?//
உங்க குட்டும் நன்று. திருத்திட்டேன் ஐயா.
//தனிமரம்said...
ReplyDeleteபார்த்துவிட்டால் போச்சு .அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//
பாருங்கள் நேசரே!
//திண்டுக்கல் தனபாலன்said...
ReplyDeleteநேரம் கிடைப்பின் அப்படியே இங்கேயும் பார்க்கலாம்...//
பார்க்கிறேன், தனபாலன்!
அண்ணா ஒரு பெரிய சினி ரசனையாளனிடம் இருந்து இப்படி ஒரு விமர்சனம் கிடைத்ததே பெரிய மகுடம் தான்...
ReplyDeleteநல்லதோ கெட்டதோ முக்த்துக்கு நேரே சொல்பவர்களுடன் பழக வேண்டும் என்பார்கள் அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவனே நன்றி அண்ணா
ஹ!ஹ!!ஹா!!!பொடியள் தேறிட்டாங்கள்.
ReplyDelete