Taken மற்றும்
taken-2 ஆகிய கடைசி இரு ஆக்சன்
படங்களுக்குப் பிறகு Liam Neeson நடிப்பில் வெளியாகி இருக்கும் அடுத்த ஆக்சன் – த்ரில்லர் படம் Non-Stop. தாத்தா இதிலும் இறங்கி அடித்தாரா என்று பார்ப்போம், வாருங்கள்!
யு.எஸ்.ஏ. ஏர்
மார்ஷலான ஹீரோ, ஒரு நான் – ஸ்டாப் ப்ளைட்டில் பயணிக்கிறார். அப்போது அவருக்கு ஒரு மெசேஜ்
வருகிறது. ஒரு அக்கவுண்ட்டில் 150 மில்லியன் போடும்படியும், இல்லையென்றால் ஃப்ளைட்டில்
இருப்போர், ஒவ்வொரு இருபது நிமிடத்திற்கும் ஒருவராக கொல்லப்படுவர் என்று. ஹீரோ எப்படி
அனைவரையும் காப்பாற்றுகிறார் என்பதே கதை.
கதையைக் கேட்கும்போது
‘Die Hard on the Flight’ என்றே தோன்றியது. ஆனால் இரு படத்திற்கும் ஒரு பெரிய வித்தியாசத்தை
வைத்திருக்கிறார்கள். அது, ஹீரோ தான் ஃப்ளைட்டைக் கடத்தி வைத்திருப்பதாக எல்லோரும்
நினைக்கும்படி சம்பவங்கள் நடப்பது.
படம் ஆரம்பிதததுமே
ஹீரோ ஒரு குடிகாரர், கேன்சரால் குழந்தையை இழந்தவர், டைவர்ஸ் ஆனவர் என்று சட சடவென பழைய
கதையைச் சொல்லிவிட்டு, ஏர்போர்ட்டிற்கு வந்துவிடுகிறார்கள்.
ஏர் மார்ஷல் எனும்
பதவி, ஃப்ளைட் பயணத்திற்கு பாதுகாப்பு கொடுக்கின்ற, ஃப்ளைட் கடத்தல் போன்றவற்றை சமாளித்துக்
காப்பாற்றும் ஒரு ரகசிய ஏஜெண்ட் போன்ற பதவி. ஹீரோவுக்கென்று தனி நெட்வொர்க்கில் வேலை
செய்யும் ஃபோனும் உண்டு. அந்த சீக்ரெட் நெட்நொர்க் ஃபோனிற்கு மெசேஜ் வருவதில் இருந்தே,
படம் வேகம் எடுக்கிறது. ’நான் சொல்லும் அக்கவுண்ட்டிற்கு 150 மில்லியன் டாலர் அனுப்பவில்லையென்றால்,
அடுத்த 20 நிமிடத்தில் ஒரு கொலை விழும்’ என்று மெசேஜ் வர, ஹீரோ அது யாரென்று கண்டிபிடிக்க
முயல்கிறார். சரியாக, 20வது நிமிடத்தில் ஒரு கொலை விழுகிறது. அதைச் செய்வது ஹீரோ தான்.
கூடவே, அந்த அக்கவுண்ட் ஹீரோ பேரில் இருப்பதாகவும் தகவல் வர, அங்கே ஆரம்பிக்கும் ஸ்பீடு
கடைசிவரை குறையவே இல்லை.
படம் முழுக்கவே
ஃப்ளைட்டில் தான் என்றாலும் போரடிக்கவே இல்லை. அதிலும் கடைசி இருபது நிமிடங்கள், சான்ஸே
இல்லை. செம ஃபாஸ்ட்! படத்தின் பெயரைப் போலவே, படமும் நான் ஸ்டாப்பாக பறக்கிறது.
பயணியாக
Julianne Moore (பாட்டி) மற்றும் ஏர் ஹோஸ்டஸாக Scooty McNairyம் நடித்திருக்கிறார்கள்.
கதைப்படி ஹீரோயினோ கிஸ் சீனோ கிடையாது என்றாலும், கண்ணுக்கு ஆறுதல் இந்த இருவர் தான்.
குறிப்பாக ஸ்கூட்டி!
Dude with
Problem பாணி திரைக்கதை தான். தெளிவான திரைக்கதையுடன் சொல்லி அடித்திருக்கிறார்கள்.
ஹாலிவுட் பாக்ஸ் ஆபீசில் நம்பர் ஒன்னாக, சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது படம்.
Liam Neeson ஹாலிவுட்டில்
எனக்குப் பிடித்த ஒருவர். 60 வயது தாண்டிய நிலையில் நீசனுக்கு எப்படித்தான் இப்படி
கதைகளும் ஆக்சனும் அமைகிறதோ? மனிதர் பின்னி எடுக்கிறார். வயதுக்கு ஏற்ற வேடம் மற்றும்
விறுவிறுப்பான திரைக்கதை என்பது தான் அவரது வெற்றிக்கு அடிப்படை. இதிலும் அப்படியே!
படத்தின் இயக்குநர் Jaume Collet-Serra. இவர் நீசனுடன் இணைந்து ஏற்கனவே Unknown படத்தைக் கொடுத்தவர். அதே ஜோடி மீண்டும் இணைந்து, ஜெயித்திருக்கிறார்கள். ஆக்சன் பட ரசிகர்கள்,
குறிப்பாக டேக்கன் 1 &2 வை ரசித்தவர்கள், தவறவிடக்கூடாத படம், Non-Stop.
சூப்பர்ன்னே, இந்தப் படம் தேட்டேர்ல பார்கறதா இல்ல dvd வரும் வரை இருக்கரதாணு குழப்பத்துல இருந்தேன், தீர்த்து வைச்சிட்டீங்க, இன்னிக்கே போயிடுவோம்.
ReplyDeleteஇங்கே தமிழ் படம் பாக்குறதுக்கே நேரம் பத்தலை உங்களுக்கு இங்க்லீஸ் படம் பார்க்க எப்பிடிய்யா டைம் கிடைக்குது ?
ReplyDeleteபடம் பார்க்க தூண்டும் விமர்சனம் !
இங்கே தமிழ் படம் பாக்குறதுக்கே நேரம் பத்தலை உங்களுக்கு இங்க்லீஸ் படம் பார்க்க எப்பிடிய்யா டைம் கிடைக்குது ?
ReplyDeleteபடம் பார்க்க தூண்டும் விமர்சனம் !
ட்ரெயிலர்ல இருந்தது தவிர கதையை லீக் செய்யாததுக்கு நன்றிகள். ஒருவேள கதையே அவ்வளுதானா? மிகுதி எல்லாம் திரைக் கதையா?
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஇங்கே தமிழ் படம் பாக்குறதுக்கே நேரம் பத்தலை உங்களுக்கு இங்க்லீஸ் படம் பார்க்க எப்பிடிய்யா டைம் கிடைக்குது ?//
மனோன்னே, இங்கிலீஷ் படம்ன்னு மொட்டையா சொல்லாதீங்க, அண்ணன் வம்புல மாட்டிக்கப் போறாரு.
//Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
ReplyDeleteட்ரெயிலர்ல இருந்தது தவிர கதையை லீக் செய்யாததுக்கு நன்றிகள். ஒருவேள கதையே அவ்வளுதானா? மிகுதி எல்லாம் திரைக் கதையா?//
யார் வில்லன் என தெரியாமல், ஒவ்வொருவரையும் நாம் சந்தேகப்படும்படி தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். எனவே தான் வேறு எதையும் சொல்லவில்லை. மீதியை தியேட்டரில் பாருங்கள்.
ஸ்வாமிகளா, ஃபேஸ்புக்கிலும் ப்ளாக்கிலும் ஒரே கமெண்ட்டை போடணுமா? ஒரு இடத்தில் போட்டா போதாதா? உங்க அன்புக்கு அளவே இல்லையா!
ReplyDelete//Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
ReplyDeleteமனோன்னே, இங்கிலீஷ் படம்ன்னு மொட்டையா சொல்லாதீங்க, அண்ணன் வம்புல மாட்டிக்கப் போறாரு.//
அது மேட்டர்!
1.அதாகப்பட்டது , ஒரு ஊர்ல , உரிச்சா , பாசிடிவ் பாய்ண்ட்ஸ் , நெகடிவ் பாய்ண்ட்ஸ், இதெல்லாம் இல்லாம எப்படியா நீ சினிமா விமர்சனம் எழுதலாம் .
ReplyDelete2. தமிழ் படத்துக்கு கலர் கலரா ஸ்டில்லு போடுறிங்க . இந்த படத்து ஹீரோ யின் ஸ்கூட்டி மிக்னாரி ( சரியா சொல்றனா )நல்ல ஸ்டில்லே கிடைக்கலையா ?
ஸ்கூட்டி ஹன்சிகா வ விட அழகா.. இப்பவே தெரிஞ்சாகனும்!! ஹிஹிஹி..
ReplyDeleteGood review.. i am going to watch it..
ReplyDelete//வானரம் .said...
ReplyDelete1.அதாகப்பட்டது , ஒரு ஊர்ல , உரிச்சா , பாசிடிவ் பாய்ண்ட்ஸ் , நெகடிவ் பாய்ண்ட்ஸ், இதெல்லாம் இல்லாம எப்படியா நீ சினிமா விமர்சனம் எழுதலாம் .
2. தமிழ் படத்துக்கு கலர் கலரா ஸ்டில்லு போடுறிங்க . இந்த படத்து ஹீரோ யின் ஸ்கூட்டி மிக்னாரி ( சரியா சொல்றனா )நல்ல ஸ்டில்லே கிடைக்கலையா ?//
1. தமிழ் படத்துக்கும் இங்கிலீஷ் படத்துக்கும் வித்தியாசம் தெரியவேண்டாமா? அது தான்.
2. படத்திலேயே அது தான் மேக்ஸிமம் சீன்..அதுக்கு மேல ஒன்னும் கிடையாது. நல்ல படம்.
//கோவை ஆவிsaid...
ReplyDeleteஸ்கூட்டி ஹன்சிகா வ விட அழகா.. இப்பவே தெரிஞ்சாகனும்!! ஹிஹிஹி..//
கிடையவே கிடையாது ஆவி!
//பதிவுலகில் பாபுsaid...
ReplyDeleteGood review.. i am going to watch it..//
நன்றி பாபு.
Taken 1&2 பார்த்து இருக்கேன். இதையும் பார்க்க வேண்டும்.
ReplyDelete"நிமிர்ந்து நில்".ஜெயம் ரவி யை நிமிர்ந்தெழச் செய்யுமா?///வழமையான கதை.வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்,சமுத்திரக்கனி.தமிழ் சினிமாவின் ஃபார்முலாப்படி இரட்டை வேடக் கதையில்....ஒருவர் ..................ஹூம்...அவ்வளவு தான்.
ReplyDelete//நிமிர்ந்து நில்".ஜெயம் ரவி யை நிமிர்ந்தெழச் செய்யுமா?///வழமையான கதை//
ReplyDeleteபாஸு, வேற பூதள வந்து ஓட்டு போட்டுட்டீங்க போலிருக்கு..! ;-)
படத்தை நானும் பர்ர்தேன் சூப்பர்
ReplyDelete//அமுதா கிருஷ்ணா said...
ReplyDeleteTaken 1&2 பார்த்து இருக்கேன். இதையும் பார்க்க வேண்டும்.//
குடும்பத்துடன் பார்க்கும்படியாக, டீசண்டாத் தான் எடுத்திருக்காங்க. பாருங்க அக்கா!
//Subramaniam Yogarasa said...
ReplyDelete"நிமிர்ந்து நில்".ஜெயம் ரவி யை நிமிர்ந்தெழச் செய்யுமா?///வழமையான கதை.வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்,சமுத்திரக்கனி.தமிழ் சினிமாவின் ஃபார்முலாப்படி இரட்டை வேடக் கதையில்....ஒருவர் ..................ஹூம்...அவ்வளவு தான்.//
இங்கிலீஷ் படப் பதிவில் தமிழ்ப்பட விமர்சனமா? ரைட்டு!
//A.M.M.Musammil said...
ReplyDeleteபடத்தை நானும் பர்ர்தேன் சூப்பர்//
நன்றி.
செங்கோவி said...இங்கிலீஷ் படப் பதிவில் தமிழ்ப்பட விமர்சனமா? ரைட்டு!/////புரியிற படத்துக்குத் தானே விமர்சனம் போட முடியும்,ஹ!ஹ!!ஹா!!!
ReplyDeleteவலைச்சரம் மூலமாக தங்களது பதிவைப் பார்த்தேன். விமர்சனம் அருமை. இப்படத்தை நான் பார்த்துள்ளேன். உங்களது பதிவைப் படித்ததும் மறுபடியும் படம் பார்ப்பதுபோல இருந்தது.
ReplyDelete@Dr B Jambulingam நன்றி சார்.
ReplyDelete