Saturday, April 12, 2014

அதிமுக: பறந்து அடிக்கும் பெண் சிங்கம்

 இந்தத் தேர்தலில் முன்னிலையில் இருப்பது யார் என்றால் அதிமுக தான். எல்லாருக்கும் முன்பே வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, பிரச்சார வண்டியை முதல் ஆளாகக் கிளப்பியவர் ஜெயலலிதா. வண்டி புறப்பட்ட வேகத்தில் கம்யூனிஸ்கள் முகத்தில் வண்டிப்புகை கரி பூசியது தனிக்காமெடி. 

மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் மக்களைக் குழப்பிக்கொண்டிருந்தபோது, தெளிவான முடிவுடன் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அதற்கு முன் அவர் உறுதிப்படுத்திக்கொண்டது ஒன்றே ஒன்று தான், அது திமுக-காங்கிரஸ் கூட்டு வந்துவிடக்கூடாது என்பது. அதற்கு தூக்குதண்டனை விவகாரம் உதவியது. காங்கிரஸுடன் கூட்டணி என்பதை கனவிலும் யாரும் நினைக்காதபடி, அந்த விவாகரத்தில் சிக்ஸர் அடித்தார்.(மூன்று பேர் வாழ்க்கையில் இப்படி விளையாடலாமா என்றால்...........அவர் அப்படித்தான்!).
தேர்தல் வேலையை ஆரம்பிக்கலாமா, வேண்டாமா? ஆரம்பிச்சா கூட்டணின்னு யார் பேரைப் போடறதுன்னு மற்ற கட்சித் தொண்டர்கள் யோசிக்கும்போதே, ‘அம்மா தான் பிரதமர். போடுங்க ஓட்டை!’ என்று ரத்தத்தின் ரத்தங்கள் சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். மற்ற கட்சிகளின் பிரச்சார ஸ்டைலுக்கும் ஜெயலலிதாவின் பிரச்சார ஸ்டைலுக்கும் பெரிய வித்தியாசம். முதலில் மக்களுடன் மக்களாக என்பதே கிடையாது, மகாராணியார் தரிசனம் ஸ்டைல் தான். அடுத்து ;எனக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்ற வேண்டுகோள் கிடையாது, கட்டளை தான். போடுவீர்களா?....செய்வீர்களா? தான்!

கட்சிக்கென இருக்கும் பெரும் வாக்குவங்கி என்பது தான் பலம். ஆனால் வாக்குவங்கி கணக்கிடும் முறையைக் கவனித்தால், அதில் கூட்டணிக்கட்சிகளின் வாக்கும் அடக்கம். இதுவரை அதிமுக, அதிக தொகுதிகளில் நின்று வந்திருக்கிறது. அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்றாலும், அது தனித்து நின்று ஜெயிக்கும் அளவுக்கு வாக்குவங்கி கொண்டதா என்றால் சந்தேகம் தான். ஆனால் திமுகவும் ஏறக்குறைய தனித்து நிற்பதாலும் உள்கட்சிப்பூசலில் சிக்கி இருப்பதாலும், அதிமுக முன்னிலை பெறுகிறது. 

இப்படியே பதிவைத் தொடர்ந்து இந்த தேர்தலில் யார் ஜெயிப்பார்கள், எத்தனை சீட் ஜெயிப்பார்கள் என்று கணிப்பதை விட, கட்சிகளின் பாசிடிவ் & நெகடிவ் பாயின்ட்ஸை மட்டும் சொல்லிவிட்டு, க்ளோஸ் செய்வது நமக்கு மரியாதை!
நெகடிவ் பாயிண்ட்ஸ்:
1. மின் வெட்டு : கோடையில் தேர்தலை வைப்பது யாருக்கு கெடுதலோ இல்லியோ, ஆளும்கட்சிக்கு ரொம்பக் கெடுதல்.

2. அதிமுக எம்.எல்.ஏ/மந்திரிகள் மேல் இருக்கும் அதிருப்தி. பல இடங்களில் அவர்களை விரட்டி அடிக்கும் அவலம்

3. காசுக்கு வரும் கூட்டம் : மற்ற கட்சிகளை விட அதிமுக இந்த விஷயத்தில் வெளிப்படையாகவே கெட்ட பெயர் வாங்கியுள்ளது. கிராமப்புறங்களில் இருந்து 100 ரூபாய் முதல் 250 ரூபாய்வரை கொடுத்து (கூடவே பிரியாணி+குவாட்டர்), ஆட்களைக் கூட்டி வருகிறார்கள் (அந்த நற்காரியத்தை என் மாமனாரும் செய்ததாக வதந்தி!). அப்படி அழைத்து வரப்படும் அனைத்து மக்களும், ஓட்டுப்போடுவார்களா என்பது சந்தேகமே!

4. நேரங்கெட்ட நேரத்தில் உயிரையெடுக்கும் பெங்களூர் வழக்கு.

5. பிரச்சார ஸ்டைல் : இருப்பதிலேயே மோசமான பிரச்சாரம் அம்மையாருடையது தான். நியூஸில்கூட அதைப் பார்க்க பெரும்பாலானோர் தயாராக இல்லை என்பதே உண்மை. செய்வீர்களா என்ற வார்த்தையைச் சொல்லவே பயமாக இருக்கிறது!

6. அடிமை மந்திரிகள் நடந்துகொள்ளும்/நடத்தப்படும் விதம். பார்ப்பவர் அருவெறுக்கும் வண்ணம், மிகக்கேவலமாக இருப்பது.
பாசிடிவ் பாயிண்ட்ஸ்:

1. இரட்டை இலை 

2. மேலே சொன்னபடி, தெளிவான முடிவு (சரியான முடிவா என்பதை மக்கள் தான் சொல்லணும்)

3. எதிரியாக வலுவான கூட்டணி இல்லை. திமுகவும் அழகிரியுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருப்பது..பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தையிலேயே எனர்ஜியை வேஸ்ட் செய்தது.

4. இன்னும் திமுக ஆட்சி மேல் மறையாத வெறுப்பு. அதிமுகவைப் பாதிக்கும் ‘மின் வெட்டு பிரச்சினையினை அறுவடை செய்யும் யோக்கியதௌ திமுகவுக்கு இல்லாமல் இருப்பது.

5. மக்கள் தங்கள் ஓட்டு வீணாகிவிடக்கூடாதே எனும் கவனம் உள்ளவர்கள். எனவே பாஜக கூட்டணி வீக்காக இருக்கும் தொகுதிகளில், மோடி ஆதரவு ஓட்டுகள் அம்மையாருக்கே!

6. ஆளும் கட்சியாக இருப்பது. சிலர் அப்பாவியாக ‘எப்படியும் ஆளும்கட்சி தானுங்களே வரும்?’ என்று இதை இடைத்தேர்தல் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு அப்பாவித்தனமாக என்னிடமே கேட்டனர்.

7. பெண்களுக்கு அம்மையார் மேல் இருக்கும் சாஃப்ட் கார்னர்

8. நடிகர் ராமராஜன், சீமான், விந்தியா போன்ற சினிமாக்காரர்களின் பிரச்சாரம்

8. கூட்டத்திற்கு வர 200 ரூபாய் கொடுத்தால் வேகாத வெயிலில் 5 மணி நேரம் அசையாமல் உட்கார்ந்திருக்கும் முட்டாள் ஜனங்கள், கூட 300 ரூபாய் கொடுத்தால் ஒரு மணி நேரம் க்யூவில் நின்று ஓட்டும் போட மாட்டார்களா எனும் நம்பிக்கை!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

 1. நல்ல காமெடிப் பதிவு!///மாமனார கேப்புல கெடா வெட்டினது அவ்ளோ நல்லா இல்ல!///ஓட்டுப் போடணும்,ஆனா யாருக்கு ன்னு தான் நீங்க முடிவு பண்ணனும் னு கடேசியா சொல்லியிருக்கணும்,க்கும்!!!

  ReplyDelete
 2. அம்மா எல்லா தொகுதியிலேயும் ஜெயிச்சு, பிரதமர் ஆனால் என்னாகும்ன்னு நினைக்கவே உடம்பு நடுங்குது ஏன்னா, டில்லியில் இருந்து பெங்களூர் கோர்ட்டுக்கு வந்து போகுமுன் வட இந்தய மீடியாக்கள் அம்மாவை நடுத்தெருவில் வைத்து நாரடித்துவிடும் என்பதே உண்மை !

  தமிழக மீடியாக்களை அம்மா மிரட்டி தடுக்கலாம் கஞ்சா கேஸ் போடலாம், அங்கே அப்படி இல்லை எப்போ எவன் செருப்பு வீசுவான்னே தெரியாது !

  ReplyDelete
 3. //Subramaniam Yogarasa said...
  ஓட்டுப் போடணும்,ஆனா யாருக்கு ன்னு தான் நீங்க முடிவு பண்ணனும் னு கடேசியா ல்லியிருக்கணும்,க்கும்!!!//

  அதைத் தான் நானும் என் பாஷைல சொல்லி இருக்கேன்!

  ReplyDelete
 4. // MANO நாஞ்சில் மனோ said...
  அம்மா எல்லா தொகுதியிலேயும் ஜெயிச்சு, பிரதமர் ஆனால் என்னாகும்ன்னு நினைக்கவே உடம்பு நடுங்குது//

  கவலைப்படாதீங்கண்ணே..ஆண்டவன் இருக்கான்..அப்படில்லாம் ஆகாது.

  ReplyDelete
 5. உண்மையை எழுதியிருக்கீங்க செங்கோவி...

  முட்டாப்பயலுக கால்லதான் விழுந்தானுங்கன்னா ஹெலிகாப்டரைப் பார்த்துக் கும்பிடுறானுங்க....

  தமிழகத்தை இன்னும் 100 வருசத்துக்கு எந்த மாநிலமும் அடிச்சிக்க முடியாது போங்க...

  ReplyDelete
 6. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.