Friday, December 26, 2014

மீகாமன் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
டி.வியில் ஒருநாள் சேனல் மாற்றிக்கொண்டே வரும்போது, ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. சும்மா ஐந்து நிமிடம் பார்ப்போமே என்று ஆரம்பித்தால், சட்டென்று என்னை உள்ளே இழுத்துக்கொண்டது அந்தப் படம். அது ‘தடையறத் தாக்க’. 
 
அந்தப் படம் ஏன் ஓடவில்லை என்றும் எனக்குப் புரியவில்லை, அதன் இயக்குநருக்கு ஏன் அடுத்த பட வாய்ப்பு உடனே வரவில்லை என்றும் புரியவில்லை. ஒவ்வொரு சீனிலும் இது ஒரு சினிமா தெரிந்த இயக்குநரின் படம் எனும் முத்திரை இருந்தது. அப்படி என் மனதில் பதிந்த இயக்குநர் மகிழ் திருமேனியின் அடுத்த படைப்பு என்பதே, இந்தப் படத்தை நான் பார்க்கப் போதுமானதாக இருந்தது.

ஒரு ஊர்ல..:


தாதாக்கள் கூட்டத்துக்குள் ‘காக்கிச்சட்டை-போக்கிரி’ ஊடுருவும் கதை தான். ஆனால் திரைக்கதை.....

உரிச்சா....:
தடையறத் தாக்க போன்றே நல்ல ஒரு ஆக்சன் த்ரில்லரைக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் படத்தினை எடுத்திருக்கிறார்கள். அச்சுப்பிச்சுக் காமெடியன் இல்லை, ஃபேமிலி செண்ட்டிமெண்ட் இல்லை. தொட்டுக்கொள்ள ஊறுகாயாக காதலை மட்டும் கொஞ்சூண்டு வைத்துக்கொண்டு, ஹாலிவுட் படங்கள் போன்றே முழுமையான ஆக்சன் படமாக எடுத்திருக்கிறார்கள்.

ஜோதி (அஷுடேஷ் ராணா) எனும் கடத்தல் கும்பல் தலைவனை போலீஸ் உட்பட யாருமே பார்த்ததில்லை. அவனைப் பிடிக்க ஆர்யா அவனது கூட்டத்துக்குள் ஊடுறுவி இருப்பதுடன் படம் ஆரம்பிக்கிறது. வேறு ஆள் என்றால், இந்த ரகசியத்தை இண்டர்வெல்லுக்கு அப்புறம் தான் சொல்வார்கள். மகிழ் திருமேனி அசால்ட்டாக படம் ஆரம்பித்த கால்மணி நேரத்திலேயே போட்டு உடைக்கிறார். ஆனால் அடுத்த சீனிலேயே வில்லனுக்கும் யாரோ ஒருவன் ஊடுறுயிருப்பது தெரிந்துவிடுகிறது. இப்படி பல சீன்களில் எதையும் ஒளித்து வைக்காமல் ஆடியன்ஸுக்கு விஷயத்தைச் சொல்லிக்கொண்டே, சஸ்பென்ஸையும் மெயிண்டெய்ன் செய்துகொண்டே செல்கிறார்கள்.

யாருமே பார்க்காத வில்லன் எனும் கான்செப்ட் தான் படத்தின் பலமே. தடையறத் தாக்க படத்தில் யாருமே பார்க்காத பெண் என்று ஒரு முக்கியக் கேரக்டர் வரும். அதே போன்றே இதில் இந்த வில்லன். இப்படி ஒரு அழுத்தமான வில்லன் கேரக்டரைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. தமிழ்சினிமா இந்த அஷுடேஷ் ராணாவை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். 
ஆர்யாவிற்குப் பக்கத்து வீட்டுப்பெண்ணாக ஹன்சிகா. வழக்கம்போல் அரை லூஸ் டைப் ஹீரோயின் கேரக்டர் தான். ஆனால் அவரும் ஆர்யாவும் பேசும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரே கலகலக்கிறது. அதிலும் அந்த கிளைமாக்ஸ் யதார்த்தமாகவும் டச்சிங்காகவும் இருந்தது.

படத்தில் நம்மை நெளிய வைக்கும் விஷயம், அதீத் வன்முறை தான். அதிலும் ரமணா டார்ச்சர் செய்யப்படும் சீன், கொடுமை. அவ்வளவு டீடெய்லாகக் காட்டியிருக்கத் தேவையில்லை. நிச்சயம் ஃபேமிலி ஆடியன்ஸ் அந்த சீனிலேயே தெறித்து ஓடிவிடுவார்கள். படத்திற்கு திருஷ்டி, அந்த சீன். இப்போது கூட, அங்கே கொஞ்சம் கட் செய்யலாம். மற்றபடி, அனல் அரசு அமைத்திருக்கும் சண்டைக்காட்சிகளில் பொறி பறக்கிறது.

படத்தில் ஒவ்வொரு சீனையும் யோசித்து எழுதியிருக்கிறார்கள். படத்தில் சாதாரணமாக வரும் காட்சிகள்கூட, பின்னர் முக்கியத்துவம் பெறுவது ரசிக்க வைக்கிறது. படத்தில் ஏகப்பட்ட போலீஸ் அதிகாரிகளைக் காட்டி, ஒவ்வொருவரும் யார் என டீடெய்ல்ஸ் போடுவது வேண்டாத வேலை. அத்தனைபேரையும் ஞாபகம் வைக்க, அசாத்தியத் திறமை வேண்டும். ஒவ்வொரு ஷாட்டையும் முடிந்தவரை அர்த்தத்துடன் அமைத்திருக்கிறார்கள். ஆர்யா பற்றி உண்மை தெரியாதபோது, அரைமுகத்தை இருட்டில் காட்டுவது, அனுபமா ஆண்ட்டியும் அந்த இன்னொரு போலீஸும் கொல்லப்படும் சீன் என விஷுவலாக மிகவும் அக்கறை எடுத்துச் செய்திருக்கிறார்கள். வெல்டன்!

ஆர்யா:

நவரசங்களில் ஆர்யாவுக்கு வரும் ஒரே ரசம், ஆக்சன் தான் என்று நிரூபித்திருக்கிறார். இறுகிப்போன உடம்பும், முகமும் அந்த கேரக்டருக்கு சரியாகப் பொருந்துகின்றன. கண்டுபிடித்து விட்டார்கள் என்பதை அவர் உணரும் காட்சியில் நுணுக்கமான நடிப்பு. ஆக்சன் காட்சிகளில் துப்பாக்கியுடன் அனாயசமாக விளையாடுகிறார்.
ஹ..ஹ...ஹன்சிகா:
’பச்சை மைதா மாவு’ ஹன்சிகா வழக்கம்போல் நம் மனதில் மாவு பிசைகிறார். முன்பு நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டவர், இப்போது எக்ஸ்பிரசன்களில் பின்னி எடுக்கிறார். ஆனால் கதையில் அவருக்கு இடமில்லை என்பதால். அவ்வப்போது வந்து போகிறார். ஆர்யா என்று நினைத்து, தோழியிடம் ரொமான்ஸ் பண்ணுமிடத்தில் தியேட்டரே கலகலக்கிறது. பைக் ஓட்டத்தெரியாமல் டபுள்ஸ் போவது, ஆர்யாவை ஐ.டி.ஆள் என்று நினைத்து ரூட் விடுவது என படத்தில் நம்மை ரிலாக்ஸ் பண்ணும் ஒரே புண்ணிய ஆத்மா, நம் ஹன்ஸி தான்.

அஷுடேஷ் ராணா:
வில்லனாக நல்ல அறிமுகம். அமைதியான ஆளாக வந்து, அதகளம் பண்ணுகிறார். இவர் யாரென்று எல்லாரும் தேட, கேஷுவலாக ரோட்டோரக்கடையில் உட்கார்ந்திருப்பது செம சீன். கிளைமாக்ஸில் ஆர்யாவிடம் அவர் மாட்டிக்கொள்ளும்போது, நமக்கே அடடா என்று இருக்கிறது!.

சொந்தபந்தங்கள்:

ஆர்யாவை ஆபரேசனுக்கு அனுப்பும் போலீஸ் அதிகாரியாக, நம் மனம் கவர்ந்த ‘அனுபமா குமார்’. ஆபரேசன் சக்ஸஸ் ஆகப் பதறுவதும், ஆர்யாவைக் காப்பாற்றத் துடிப்பதுமாக நல்ல நடிப்பு.
ஆஷிஷ் வித்யார்த்தி, ‘மேட்டரில் துப்பாக்கி வெடித்த அடியாள், மகாதேவன், குருவாக வருபவர் என எல்லாருமே கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
 
நெகடிவ் பாயிண்ட்ஸ்:

- வன்முறை. ரமணா டார்ச்சர் செய்யப்படும் சீன்.

- ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டே பழகிய தமிழனுக்கு, ஆக்சன் மட்டும் போதுமா என்பது கேள்விக்குறியே. ஹாலிவுட்டில் காமெடிக்கு, ஆக்சனுக்கு என தனித்தனிப் படங்கள் வந்து ஜெயிக்கின்றன. ஆனால் நம் மக்கள் இன்னும் இதற்குப் பழகிக்கொள்ளவில்லை என்பதே உண்மை. எனவே ஆக்சன்/சஸ்பென்ஸ் தாண்டி வேறு எதுவும் எதிர்பார்த்து வருவோர்க்கு, இந்தப் படம் ஏமாற்றத்தையே கொடுக்கும். ஆக்சன் விரும்பிகளுக்கு, இது ஹாலிவுட் பிரியாணி!
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- நீட்டான திரைக்கதை. அழகாக அவிழும் முடிச்சுகள்.
- நறுக்குத் தெறித்தாற்போன்று வசனங்கள்.
- விஷுவலாகக் கதை சொல்ல முயலும் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும். படத்தின் தரத்தை உயர்த்துபவையே இவை தான்.
- பரபர ஆக்சன் படத்தில் சிரிக்க வைக்கும் ஹன்ஸிகா போர்சன்
- அனல் அரசுவின் அதிரடி ஃபைட்
- ஆர்யா இந்த கேரக்டருக்கு சரியாக செட் ஆகியிருப்பது
- எல்லாரையும் சரியாக வேலை வாங்கியிருக்கும் இயக்கம்

பார்க்கலாமா?


ஆக்சன் பட விரும்பிகள் கண்டிப்பாகப் பார்க்கலாம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

 1. சூப்பர் பாஸ்... தடையற தாக்க’ ப்ளாப் இல்ல பாஸ் ஊரில்... ஆவரேஜ் ஹிட் தான்...

  நானும் அப்படத்தை பார்த்து மிரண்டுவிட்டேன்...

  ReplyDelete
 2. நம் 'ஹன்ஸி' .ஹி!ஹி!!ஹீ!!!

  ReplyDelete
  Replies
  1. நம் என்பதில் நீங்க கிடையாது!!

   Delete
  2. ஆர்யா படம்!///இதில் ஹன்சிக்கு என்ன அவசியம்?தமிழ் சினிமா ஃபோர்முலாப்படி ஹீரோயின் என்று ஒருத்தர் வேண்டும் என்பதாலோ?/உங்கள் 'ஹன்சி' என்பதாலாயிருக்கும்!

   Delete
 3. "இயக்குநர் மகிழ் திருமேனியின் அடுத்த படைப்பு என்பதே, இந்தப் படத்தை நான் பார்க்கப் போதுமானதாக இருந்தது"

  பொய் சொல்லாதையா . ஹன்சி இருக்கு, படத்துக்கு போனேன்னு சொல்றதுல உனக்கு என்னய்யா கஷ்டம் .
  விட்டா வேலாயுதம் படத்த டாகுடர் , டைரக்டர்க்காக தான் பார்த்தேன்னு சொன்னாலும் சொல்லுவ.

  ReplyDelete
  Replies
  1. ஹிஹி...விடும்யா, விடும்யா.

   Delete
 4. முதலில் எல்லாப்படங்களையும் பார்க்கும் பொறுமைக்கும், அதை விமர்சிப்பதற்கும் ஒரு வாழ்த்து.

  முடிந்தவரை கதையைச் சொல்லாமல் அல்லது ஒரு வரி விமர்சனமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டால் படம் பார்க்கச் செல்பவர்களுக்கு சஸ்பென்ஸ் இருக்கும்.

  நல்ல விமர்சனம்

  ReplyDelete
  Replies
  1. தாதா கூட்டத்தில் ஊடுருவும் போலீஸ் என்பதை 10 நிமிடத்திலேயே சொல்லிவிடுகிறார்கள். அதில் மறைக்க எதுவும் இல்லை. படத்தினைப் பார்க்க, இது தடையாக இருக்காது என்று நம்புகிறேன்.

   Delete
 5. ஆஷுதோஷ் சொல்லுங்க,

  ஷு
  தோ
  ஷ்.

  எங்க மறுபடியும் சொல்லுங்க பார்ப்போம்.

  ஆ. . .

  ReplyDelete
  Replies
  1. தோஷ்-ன்னு சொன்னால் தோஷம் வந்திடாதே???

   Delete
  2. எனக்குத்தான் வரும்.

   Delete
 6. நம் மனம் கவர்ந்த ஆண்ட்டி ‘அனுபமா குமார்’ - ஹி!ஹி!!ஹீ

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.