Wednesday, December 17, 2014

The Double Life of Véronique (1991) - சினிமா அறிமுகம்

சினிமா ஒரு விஷுவல் மீடியம்.

இது ஒரு புளித்துப்போன வசனம் தான் என்றாலும், இதை உணர்ந்து படம் எடுப்பவர்கள் மிகவும் குறைவு. வசனங்களிடமும் ஓவர் ஆக்டிங்கிடமும் சரணடைபவர்களே அதிகம். ஆனால் தான் வைக்கும் ஷாட்களின் மூலமே, கதையை நமக்குப் புரிய வைப்பதும், வசனங்களை முடிந்தவரை குறைப்பதுமே சினிமா ஒரு விஷுவல் மீடியா என்பதற்கு அர்த்தம். அத்தகைய படைப்பாளிகளில் ஒருவர் போலந்து இயக்குநர் Krzysztof Kieslowksi.

அப்போது சாதாரண நடிகையாக இருந்த Irène Jacob-ஐ ஹீரோயினாக வைத்து, Kieslowksi எடுத்த காவியம் தான் ' The Double Life of Véronique'. 1991ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோதே, பெரும் வரவேற்பைப் பெற்றது.

படத்தின் கதை சிம்பிளானது தான். ஒரே நாளில் வெவ்வேறு நாட்டில் (போலந்து & ஃப்ரான்ஸ்) பிறந்த இரு கதாநாயகிகள் வெரோனிக்கா & வெரோனிக். இருவரும் ஒரே போன்ற தோற்றம் உடையவர்கள். ஒரே போன்ற மேனரிசம் உடையவர்கள். ஒருவருக்கு ஒரு நாட்டில் நடப்பதை, இன்னொருவர் கனவு போன்றோ உள்ளுணர்வாகவோ உணர்கிறார்கள். ஆனாலும் தன்னைப் போன்ற இன்னொருவர் இருப்பது மற்றவருக்குத் தெரியாது.அதில் வெரோனிக்கா இறந்தபின்,  தன்னைப் போலவே தன்னில் இன்னொரு பாதியாக, தனக்கு ஒரு முன்னெச்சரிக்கையாக ஒருத்தி போலந்தில் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறாள் என்று ஃப்ரான்ஸ் வெரோனிக் உணர்ந்துகொள்கிறாள்.

படம் பார்க்கும்போது நாமும் ஒரு கனவு காண்கிறோமோ எனும் தோற்றத்தை ஏற்படுத்தியது தான் இயக்குநர் கீய்ஸ்லோவ்ஸ்கியின் வெற்றி. திரைக்கதையும், ஒளிப்பதிவும், ஜாகோப்பின் நடிப்பும் சேர்ந்து, விஷுவலாகக் கதை சொல்ல பேருதவி செய்திருக்கின்றன.

படம், போலந்தில் வாழும் வெரோனிக்காவுடன் ஆரம்பிக்கிறது. எனர்ஜெடிக்கான, நன்றாகப் பாடும் திறமையுள்ள, ஆனால் ஹார்ட் பிரச்சினையுள்ள பெண்ணாக அவரது கேரக்டர் விவரிக்கப்படுகிறது.

சிறுவயதிலேயே அம்மாவை இழந்தவர்..

அன்பான அப்பா..

ஃபைல் லேஸை விரலில் சுற்றிக்கொண்டேயிருக்கும் மேனரிசம் கொன்டவ்ர்..

தங்கமோதிரத்தால் இமையை வருடும் மேனரிசம் கொண்டவர்.

ஒளிஊடுருவும் ரப்பர் பால் ஒன்றின்வழியே உலகத்தை தலைமீழாகப் பார்ப்பதில் ஆர்வம்..

பாடும்திறமை உள்ளவர்.
இதயநோய் உள்ளவர்

- இப்படி படத்தின் முதல் அரைமணி நேரம் வெர்னிகாவுடன் மட்டுமே க(ளி)ழிக்கிறோம். வெர்னிகாவிற்கு திடீரென பாடும் வாய்ப்பு வர, முதல் மேடை நிகழ்ச்சியிலெயே இதயநோய் காரணமாக சுருண்டு விழுந்து இறந்து போகிறார். அதன்பின் படம் ஃப்ரான்ஸில் வெரோனிக் உடன் ஆரம்பிக்கிறது. (வெரோனிக்காவின் கதையை எந்த ஷாட்டில், எங்கே கட் செய்து, வெரோனிக்கின் கதையை எங்கேயிருந்து ஆரம்பிக்கிறார் என்று கவனித்துப்பாருங்கள். இறப்பில் இருந்து பிறப்புக்குத் தாவும் மேஜிக்கை அனுபவியுங்கள்.)

தான் தனி ஆள் அல்ல எனும் அதே உணர்ச்சியுடன் வாழும் வெரோனிக், நம்மூர் பொம்மலாட்டம் போன்ற பப்பெட் ஷோ நடத்தும் ஹீரோவுடன் காதலில் விழுகிறார். ஹீரோ யார் என்றே தெரியாத நிலையில், ஹிரோ அனுப்பும் க்ளூ எல்லாம் தற்செயலாக வெரோனிக்காவின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. அவன் தான் தன்னுடைய இன்னொரு பாதி என்று நினைத்து அவனைத் தேடிச் செல்லும் ஹீரோயின், அவன் ஒரு சுயநலவாதி என்பதையும் தன்னுடைய உண்மையான பாதி யார் என்பதயும் அங்கே தெரிந்துகொள்கிறாள்.

படத்தின் விஷேசமே, மேலே சொல்லப்பட்ட எதுவும் விலாவரியாக விளக்கப்படுவதில்லை. இருவருக்கும் ஹார்ட் பிராப்ளம் என்பதை இரு காட்சிகளில் சொல்கிறார் இயக்குநர்.
வெரோனிக்கா தெருவில்  போகும்போது நெஞ்சைப் பிடித்தபடி வலியை உணர்கிறாள்.

வெரோனிக் ஹீரோ அனுப்பிய லேஸை ஒரு ECG ரிப்போர்ட் மேல் வைத்துப் இருக்கிறாள்.

---------- அவ்வளவு தான். வசன விளக்கம் எதுவும் இல்லை. நுணுக்கமான நடிப்பு, கதை சொல்லும் ஷாட்ஸ் என இரண்டை வைத்தே முழுப்படமும் நகர்கிறது. ஒவ்வொரு ஷாட்டும் காரணத்தோடு, நுணுக்கமான டிடெய்ல்ஸுடன் வைக்கப்பட்டுள்ளது. ஒரு செகன்ட் அசந்தாலும், அதைத் தவறவிட்டுவிடுவோம்.


படம் முழுக்க குறியீடுகளால் நிரம்பி வழிகிறது. படத்தின் முதல் ஷாட், குழந்தையாக இருக்கும் வெரோனிக்காவை அவளது அம்மா தலைகீழாகப் பிடித்தபடி, வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைக் காட்டுகிறார்.

அடுத்த ஷாட், வெரோனிக்கின் அம்மா ஃப்ரான்ஸில் ஒரு மரத்தின் இலையைக் காட்டி, இது முதல் இலை. வ்சந்தகாலத்தில் இன்னும் பெருகும் என்று சொல்கிறாள்.

மறையும் நட்சத்திரம் வெரோனிக்காவிற்கு...வளர்ந்து செழிக்கும் இலை வெரோனிக்கிற்கு...ஏன் அப்படிக் காட்டப்படுகிறது என்று யோசியுங்கள்.
வெரோனிக்கா இறந்தபின்னர், வெரோனிக் உடன் ஆவியாக இருக்கிறாள் என்பதும் பல காட்சிகளில் குறிப்பாக உணர்த்தப்படுகிறது. அதில் ஒரு காட்சி தான் வெளிப்படையாக இருக்கும். மற்றவை கவனித்தால் தான் தெரியும்.


அதே போன்றே, போலந்தில் வாழும் வெரோனிக்காவின் வாழ்க்கையை சித்தரிக்கும் காட்சிகளில், பெரும்பாலும் வெரோனிக்காவின் ஒரு மிரர் இமேஜும் தெரிந்துகொண்டேயிருக்கும். இரட்டைத்தன்மையை விளக்க, ஹிட்ச்காக் கடைப்பிடித்த பாணி அது. அதை கீய்ஸ்லோவ்ஸ்கியும் வெற்றிகரமாக இங்கே உபயோகப்படுத்தியிருக்கிறார். (கீய்ஸ்லோவ்ஸ்கி வெள்ளைக்காரத்துரை என்பதால், இதை காப்பி லிஸ்ட்டில் அறிவுஜீவிகள் சேர்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.)

மர்மம், ஆவி, தற்செயல் என பல தளங்களில் படம் பயணிக்கிறது.  இயக்குநர் Keislowski இந்தக் கதையைச் சொல்லியிருக்கும் விதத்தில் தான், இந்தப் படம் உலக சினிமாவாக ஆகிறது.

தற்செயலாக நடக்கும் சம்பவங்கள் முடிவில் வேறு அர்த்தத்தை அல்லது ஒரு முழுமையை உண்டாக்குகின்றன. இந்த படத்தின் திரைக்கதையையும் அப்படியே அமைத்திருக்கிறார். முதலில் வேண்டாத சிறுவிஷயம் என்று நாம் நினைப்பது எல்லாம் பிற்பாதியில் முக்கியமானதாகவும் கதையை நமக்கு விளங்கவைப்பதாகவும் இருக்கின்றன. இந்த சிம்பிளான கதையை அர்த்தமுள்ளதாகவும், ரசிக்கவைப்பதாகவும் ஆக்குவது அந்த உத்தி தான்.

கூடவே, ஒளிப்பதிவு. “Every Frame is Painting’ என்று சொல்வது இந்தப் படத்திற்குத் தான் சாலப்பொருந்தும். லைட்டிங்கும், கேமிராக்கோணங்களும், ஹீரோயினும் நுணுக்கமான எக்ஸ்பிரச்ன்களும் சேர்ந்து, இந்தப் படத்தின் தரத்தை எங்கோ கொண்டுசென்றுவிடுகின்றன.

ஹீரோயினுக்கு நடப்பது என, அவள் யோசிப்பது என்ன. இருவருக்குமான பிணைப்பு என்ன என்று எதுவுமே வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. கிளமாக்ஸில் தான் நமக்கு மொத்தக்கதையுமே 'ஓரளவு' புரிகின்றன. மர்மமும் சுவாரஸ்யமும் கலந்த கலவையாக இந்தப் படம் இருக்கிறது.

Preisner-ன் இசையும் Irène Jacob-ன் நடிப்பும் அழகும் நம் மனதைவிட்டு ரொம்பநாளைக்கு நீங்காது.

‘ட்வின்ஸ், ஒருவருக்கு நடப்பதை இன்னொருவர் உணர்வார்கள்’ எனும் கான்செப்ட்டில் எம்.ஜி.ஆரின் நீரும் நெருப்பும் படமும், ஜாக்கிசானின் 'ட்வின் பிரதர்ஸ்' படமும் ஏற்கனவே வந்திருக்கின்றன. (கீய்ஸ்லோவ்ஸ்கி வெள்ளைக்காரத்துரை என்பதால்….ரிப்பீட்டேய்!) அந்தப் படங்கள் கமர்சியல் என்டெர்டெய்ன்மென்டுக்காக அந்த கான்செப்ட்டை யூஸ் செய்திருந்தன. இங்கே தன் கதை சொல்லும் முறையால் இயக்குநர் கீய்ஸ்லோவ்ஸ்கி    இந்த உலகத்தில் யாரும் தனியல்ல, ஏதேனுமொரு விதத்தில் இன்னொரு விதத்தில் இன்னொருவருடன் பிணைக்கப்பட்டவர்கள் தான் என்று நமக்கு உணர்த்த உபயோகித்திருக்கிறார்.

விளக்க ஆரம்பித்தால், ஒவ்வொரு காட்சியையும் விளக்க வேண்டும். அது நீங்கள் படம் பார்க்கும் அனுபவத்தைக் கெடுக்கும் என்று அஞ்சுவதால்....

ஏதாவது நல்ல புத்தகத்தைப் படிக்கும்போதோ அல்லது இணையத்தில் நல்ல படங்கள் பற்றிப் படிக்கும்போதோ ‘The Double Life of Véronique ' எனும் இந்தப்பெயர் திரும்பத் திரும்ப கண்ணில் பட்டுக்கொண்டே யிருக்கும். நீண்டநாட்கள் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்த படம்..இந்த வாரம் தான் பார்க்க முடிந்தது. அடுத்த நாளே மறுபடியும் பார்த்தேன்.... மெய் மறந்தேன்!

 இதுவரை நான் பார்த்த படங்களில் டாப் 5 லிஸ்ட்டில் இந்தப் படத்திற்கு மூன்றாம் இடத்தைத் தருகிறேன். உலக சினிமா ரசிகர்களுக்குப் பொக்கிசம் இந்தப் படம். ஒரு திரைப்படத்தின் கூறுகளான நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், கதை, திரைக்கதை என சகல அம்சங்களும் ஒன்றுபோல் பெர்ஃபெக்ட்டாக வருவது அபூர்வம். அது இந்தப் படத்தில் சாத்தியமாகியிருக்கிறது. அதனால் தான் இயக்குநர் Krzysztof Keislowski உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

எச்சரிக்கை/நல்ல செய்தி : படத்தில் கில்மா சீன்கள் உண்டு.
 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

  1. அண்ணா ! அப்படியே உங்களுக்கு பிடிச்ச டாப் - 5 படங்கள்ல மிச்சம் இருக்க 4-லயும் சொன்னிங்னா , சேர்த்து டவுன்லோட் போட்டுடுவேன் !!

    ReplyDelete
    Replies
    1. 1. Vertigo (Hitchcock)....... 2. Dreams (Akira)......3. The double life of.....

      4-ம் 5-ம் காலி தான். :)

      Delete
    2. Shining & Eyes wide shut - இந்த லிஸ்ட்டிற்கு நெருக்கமாக வரும்!

      Delete
  2. படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது உங்கள் விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல செய்தியைப் படிச்ச அப்புறமா???????

      Delete
  3. சுவாரஸ்யமான விமர்சனம்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்க ஏரியாப் பொண்ணு/கதை....பார்க்கலாம்!

      Delete
  4. //எச்சரிக்கை/நல்ல செய்தி : படத்தில் கில்மா சீன்கள் உண்டு.// படம் பார்க்க தூண்டுகிறது .

    ReplyDelete

  5. தல அப்படியே படத்திற்கான லிங்கையும் போட்டு விடுங்கள்.

    ReplyDelete
  6. செங்கோவிக்கு புடிச்சிருந்த ஹிட்ச்காக் பீவர் இப்ப தான் சரியானது . அதுக்குள்ள இப்ப Krzysztof Kieslowksi. பீவர் வந்திருச்சி . நல்ல டாக்டர பாருங்க இல்லேனா சின்ன டாகுடர் , பெரிய டாகுடர் படத்த தொடர்ந்து பாருங்க .
    எல்லாம் சரியாகிடும் .

    ReplyDelete
    Replies
    1. அடுத்து ஹிட்ச்காக் படம் தான்....!

      Delete
  7. எனக்கு இப்ப irene jacob பீவர் . ஹி...ஹி ...

    ReplyDelete
  8. Sir Download link pls..

    ReplyDelete
  9. http://kickass.so/usearch/Double%20life%20of%20Veroniq/

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.