Syd Field எனும் புயல்
தற்போது தமிழில் இருக்கும் சூழல் போன்றே, 1970களில் ஹாலிவுட்டிலும் திரைக்கதை என்றால் என்ன என்பது குருகுல மர்மமாக இருந்து வந்தது. '(திரைக்கதை) எழுத்து என்பது சும்மாவா? அதெல்லாம் தவம் மாதிரி' எனும் பில்டப்புகள் வேறு பீதியைக் கிளப்பும். திரைக்கதையைக் கற்க வேண்டும் என்று விரும்புவோருக்குப் பயன்பட்ட நூல்கள் எவையும் திரைக்கதையை மனதில் வைத்து எழுதப்பட்டவை அல்ல. உதாரணம், அரிஸ்டாட்டிலின் Poetics, கேம்பலின் 'A Hero with thousand faces'.
அந்த நூல்களைப் படிப்பவர்களே, அந்தப் புத்தகங்களில் உள்ள கருத்துக்களை சினிமாவுடன் ஒப்பிட்டு, அவர்களே அரைகுறையாகப் புரிந்துகொண்டு, பின் தங்கள் சொந்தத் திறமையால் கற்று வெளியே வந்தார்கள். இத்தகைய சூழலில் தான் Syd Field எனும் புயல், ஹாலிவுட்டைத் தாக்கியது. சிட் ஃபீல்ட் எழுதிய Screenplay - Fundamentals of Screenwriting புத்தகம் பெரும் அதிர்வை சினிமா ஆர்வலர்களிடையே உண்டாக்கியது. அதுவரை ரகசியமாய் இருந்த பல விஷயங்களையும் புட்டுப்புட்டு வைத்தார் சிட் ஃபீல்ட்.

அவர் சொன்ன 3 ஆக்ட் வடிவம், இன்றளவும் செல்வாக்குப் பெற்ற ஒன்றாக நீடிக்கிறது. அவர் வழியில் வந்த பலர், அதை இன்னும் மேம்படுத்தி அடுத்த நிலைகுக் கொண்டுசென்றுவிட்டார்கள் இப்போது. அவரது 3 ஆக்ட் வடிவத்துடன் மாறுபட்டவர்கள்கூட, அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட அடிப்படை விஷயங்களை ஏற்றுக்கொண்டே தான் ஆக வேண்டும். அந்தப் புத்தகத்தின் பெயருக்கேற்ப, திரைக்கதைக்கே அடிப்படையாக, பைபிளாக ஆனது Screenplay புத்தகம்.
Syd Field-ன் 3 ஆக்ட் வடிவத்தைப் பற்றி இன்று பார்த்துவிட்டு, Blake Snyder நோக்கி அடுத்து நகர்வோம்.

கிரேக்க மேதையான அரிஸ்டாட்டில் தன் Poetics நூலில் நாடகம் பற்றி
எழுதுகையில் ‘ஆரம்பம், மத்திமம், முடிவு ஆகிய மூன்றைக் கொண்ட நாடகமே
முழுமையானது’ என்று சொல்லியிருப்பது பற்றி, ஏற்கனவே பார்த்தோம். அது தான்
சிட் ஃபீல்டின் மூன்று அங்க வடிவத்திற்கு அடிப்படை. அதை வைத்து, அவர்
திரைக்கதையை மூன்றாகப் பிரித்தார். ஆக்ட்-1, ஆக்ட்-2 மற்றும் ஆக்ட்-2 என்று
பிரித்துக்கொண்டார். கூடவே அவரது கண்டுபிடிப்பாக, Plot Points-களைச்
சேர்த்தார். அவர் பரிந்துரைத்த வடிவம் இப்படி வந்தது:
ஆக்ட்-1 (Set-up):
இதில் கதையின் முக்கிய மாந்தர்களின் இயல்பு, சூழ்நிலை போன்றவை விளக்கப்படும். ஹீரோவின் வழக்கமான வேலைகளும், அவனது உலகத்தின் இயல்பு நிலையும் ஆடியன்ஸுக்கு செட்டப்பில் தெரியப்படுத்தப்படும். படத்தின் தீம் எதைப்பற்றியது என்பதும் ஆக்ட்-1ல் விளக்கப்படும். ஆக்ட்-1 என்பது ஒரு திரைக்கதையில் 25% நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த ஆக்ட்-1ல் இரு முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தேறும். அவை Inciting Incident மற்றும் Plot Point 1(Key Incident).
Inciting Incident: அவ்வாறு சுமூகமாக்ச் செல்லும் ஹீரோவின் வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கிறது. அது ஹீரோவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ சவாலுக்கு அழைப்பதாக, சாகசத்திற்குத் தூண்டும் ஒரு நிகழ்வாக, காதல் கதையென்றால் ஹீரோ ஹீரோயினைச் சந்திப்பதாக இருக்கும். இந்த Inciting Incident-ல் தான் ஹீரோவை படத்தின் மையப்பிரச்சினை சந்திக்கும்.
Plot Point 1: ஹீரோ தனக்கு விடப்பட்ட சவாலை ஏற்றுக்கொள்ளும் தருணம் அல்லது அவனது வாழ்க்கையை மாற்றிப்போடும் தருணம் இந்த ப்ளாட் பாயின்ட். இந்த நிகழ்விற்குப் பின் அவனது வாழ்க்கை, பழைய மாதிரி இருக்கப்போவது இல்லை. இனி சுமூகநிலைக்கு அவன் திரும்பவேண்டும் என்றால், அவன் படத்தின் மையப்பிரசிச்னையை சால்வ் பண்ணியே ஆக வேண்டும். இந்த சம்பவம் தான், ஹீரோவை ஆக்ட்-2க்குள் தள்ளுவது.
ஆக்ட்-2(Confrontation):
ஹீரோ பிரச்சினைகளைச் சந்திப்பது, தனது குறிக்கோளை நோக்கிய பயணத்தில் தற்காலிகத் தோல்விகளை அடைவது போன்ற சம்பவங்கள் எல்லாம் நடந்தேறும் இடம், இந்த ஆக்ட்-2 எனும் கன்ஃப்ரன்டேசன். இது திரைக்கதையில் 50% நிகழ்வுகள் நடந்தேறும் இடம். இதில் நான்கு முக்கியப் பகுதிகள் உள்ளன. Pinch-1, Mid Point, Pinch-2 மற்றும் Plot point-2. முதலில் Mid Point & Plot point-2-ஐ மட்டுமே தன் புத்தகத்தின் பரிந்துரைத்த சிட் ஃபீல்ட், பின்னர் அதன் போதாமையை உணர்ந்து, பின்ச்-1 & 2-ஐச் சேர்த்தார்.
Pinch 1: ஆக்ட்-2வில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறும்போது, கதையின் முக்கியப்பிரச்சினையை ஆடியன்ஸ் மறந்தே போகும் அபாயம் உண்டு. எனவே அவர்களுக்கு அதை ஞாபகப்படுத்தும்பொருட்டு, ஹீரோவுக்கு உள்ள முக்கியமான சிக்கலை ஞாபகப்படுத்தும் ஒரு சீன் வைக்க வேண்டும் என்று சொன்னார் சிட் ஃபீல்ட். அதுவே இந்த பின்ச்-1.
Midpoint: இது நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமான இண்டர்வெல் ப்ளாக். பொதுவாக, சமாதானத்திற்கான எல்லா வழிகளும் அடைபடும் இடம், இந்த மிட் பாயிண்ட். இனிமேல் சாகசத்தைத் தவிர வேறு வழியில்லை ஹீரோவுக்கு. கதையின் போக்கையே மாற்றும் ஏதோவொரு முக்கிய நிகழ்வு நடந்தேறும் இடமாகவும் இந்த சீன் இருப்பதுண்டு.
Pinch 2: இதுவும் பின்ச்-1 போன்றே, இன்னொரு ஞாபகப்படுத்தும் சீன் தான்.
Plot Point 2: இது திரைக்கதையின் இன்னொரு முக்கியமான இடம். ஆக்ட்-2 முடிந்து, ஹீரோவை மூன்றாவது ஆக்ட்டிற்குத் தள்ளும் சீன், இந்த ப்ளாட் பாயிண்ட்-2. இது பொதுவாக ஹீரோ எல்லாவற்றையும் இழந்து நிற்கும் இடமாகவோ அல்லது ‘பொறுத்தது போதும்’ என்று பொங்கி எழும் இடமாகவோ இருக்கும். அங்கேயிருந்து கிளைமாக்ஸ் நோக்கி, ஹீரோவை புல்லட் போல் தள்ளும் நிகழ்வாக, இந்த ப்ளாட் பாயிண்ட் இருக்கும்.
ஆக்ட்-3 (Resolution): ஹீரோ எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து அல்லது தானாகவே அவை தீர்ந்து, கிளைமாக்ஸில் சுபம் போடும் பகுதியே இந்த ஆக்ட்-3.

சிட் ஃபீல்ட் குறிப்பிடும் இந்த ப்ளாட் பாயிண்ட்கள், திரைக்கதை எழுதும்போது மைல் ஸ்டோன்ஸ் போன்று உதவக்கூடியவையாக அமைந்தன. ஆனால் இந்த பாயிண்ட்களுக்கு இடையே என்ன செய்வது என்பது பற்றிய பிராக்டிகல் விளக்கங்களை சிட் ஃபீல்டின் தியரி தரவில்லை. குறிப்பாக ஆக்ட்-2 என்பது ஒரு மணிநேரத்திற்கு ஓடக்கூடிய சம்பவங்களால் நிறைந்தது. அதை எப்படி நிரப்புவது? பின்ச்-1&2 மற்றும் மிட் பாயிண்ட் மட்டுமே போதுமா என்பது போன்ற கேள்விகள் எழுந்தன. சிட் ஃபீல்ட், திரைக்கதையின் அடிப்படைக்கு மட்டுமே உதவுவாரே ஒழிய, முழு திரைக்கதை எழுத அவரது 3 ஆக்ட் வடிவம் பயன்படாது எனும் எதிர்குரல்கள் எழுந்தன.
சிட் ஃபீல்டின் வழியைப் பின்பற்றி, பலரும் அவரது 3 ஆக்ட் வடிவத்தை மேலும் வளர்த்தெடுத்தார்கள். 5 ஆக்ட், 7ஆக்ட் என்று பல்வேறு வடிவங்கள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றை சிலர் வெற்றிகரமாக இன்றும் பயன்படுத்தி வருகிறார்கள். திரைக்கதை எழுதும்போது, ஆக்ட்-1ஐத் தாண்டியபின் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட நிலை தான் பலருக்கும் ஏற்படும். நல்ல ஓப்பனிங் சீன், ப்ளாட் பாயிண்ட்-1, மிட் பாயிண்ட், ப்ளாட் பாயிண்ட்-2 வைத்திருப்பார்கள். ஆனால் இடையில் உள்ள பக்கங்களை எதனால் நிரப்புவது?
இப்படி எல்லோரும் குழம்பிக்கொண்டிருந்தபோது தான், Blake Snyder எனும் அடுத்த குரு, தன் தியரியை வெளியிட்டார். நாம் ஏற்கனவே சொன்னபடி Joseph Campell & Syd Feild-ன் கலவையாக அவர் பரிந்துரைத்த வடிவம் இருந்தது. சிட் ஃபீல்டின் வழியில் இறங்கி, எல்லையை அடையமுடியாமல் தட்டுத்தடுமாறிகொண்டிருந்த பலருக்கும், ப்ளேக் ஸ்னிடர் ஆபத்பாந்தவனாக வந்து சேர்ந்தார்.

அவர் பற்றி அடுத்த வாரம்...
சார்.. பிரமாதமா போய்க்கிட்டுருக்கு... நான் முதல் பகுதியிலிருந்து முழு மூச்சா படிச்சுக்கிட்டிருக்கேன்.. குறிப்பாக இந்த பகுதி ரொம்ப சூப்பர்.. ரொம்ப ரொம்ப நன்றி சார்...!
ReplyDeleteசகோ,அருமை!
ReplyDeleteசகோ,அருமை!
ReplyDelete