Sunday, December 12, 2010

நானும் ஹாலிவுட் பாலாவும்...

நான் ஒரு 32 வயதே நிரம்பிய இளம்(?)பொறியாளன். கடந்த 3 வருடங்களாக தமிழ்ப் பதிவுலகின் வாசகன். அனேகமாக எல்லா பதிவர்களின் பதிவைப் படிப்பதும் பதிவுலகில் நடப்பவற்றை வேடிக்கை பார்ப்பதுமே எனக்குப் பொழுதுபோக்கு..’அப்படியே இருந்துருக்க வேண்டியதுதானே..ஏம்ப்பா எழுத வந்தே ன்னு நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்குக் காரணம்  ஹாலிவுட் பாலா தான்..எப்படீன்னா..சொய்ங்..சொய்ங்..

தோராயமா ஒரு வருடம் முன்பு ஹாலிவுட் பாலா ‘Eyes Wide Shut’ங்கிற ஒரு காவியத்திற்கு(!) விமர்சனம் போட்டார். ஒரு வலைப்பதிவு வாசகனாக என்ன செய்திருக்கவேண்டும் நான்?..பதிவைப் படித்தோமா..குளோஸ் பண்ணோமான்னு போயிருக்கணும்!!!..அப்படி இல்லாம ஒரு பின்னூட்டம் போட்டேன்..

அப்போதான் (உங்க)விதி பாலாண்ணன் ரூபத்தில் இப்படி பதில் போட்டது: இவ்வளவு தெளிவா..அழகா..அருமையா..ஒரு பின்னூட்ட்த்திலேயே இம்ப்ரஸ் பண்ணினது நீங்களாத்தான் இருக்கும்..நீங்க இன்னும் பிளாக் எழுத ஆரம்பிக்காதது..கூடிய விரைவில் எழுத ஆரம்பிக்க இப்பொழுதே என்னுடைய வாழ்த்துக்கள் (அவர் இப்படித்தான் நிறையப் பேர உசுப்பேத்தியிருக்கார்னு அப்போ எனக்குத் தெரியாது!)

இதுக்கு நானும் அசராம இப்படி பதில் சொன்னேன்: என்னது பிளாக் எழுதவா?..நான் நல்லா இருக்குறது பிடிக்கலையா.. நல்லா கிளப்புறாங்கப்பா பீதியை..கமெண்ட் போட்டது ஒரு குத்தமாயா?..ரொம்ப நாளா உங்க பிளாக்கைப் படிச்சும் இப்போதான் கமெண்ட் போடுரேன்னா, அதுலேயே தெரியலையா என் சுறுசுறுப்பு..எனினும் ஒரு மூத்த பதிவரிடமிருந்து வந்த அழைப்பை மிகப் பெரும் கௌரவமாகவே எடுத்துக் கொள்கிறேன்


ஸ்கூல்ல படிக்கும்போதே நமக்கு கதை, நாவல்னா ரொம்ப ஆர்வம்..அப்போ நானே யோசிச்சு’ 2 கதைகளை எழுதி குமுதத்திற்கும் விகடனுக்கும் அனுப்பினேன்..அன்னைக்கி காந்தி ஜெயந்திங்கிறதால 2 கதையும் வாங்க ஆளில்லாமல் திரும்பி வந்துடுச்சு(உஷ்..எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு). அப்புறம் முதல்ல பூவாவுக்கு வழி பண்ணுவோம்னு பொறியியல் பக்கம் போய்ட்டேன்.. 


இது தெரியாமல் பாலாண்ணன் எனக்குள்ள சுருண்டு தூங்கிட்டிருந்த படைப்பாளியை எழுப்பி விட்டுட்டாரு..அதனாலதான் இப்போ எழுதவே வந்துட்டேன்..ஆனா நான் எழுதி அறுக்க வந்துருவேன்னு பயந்தோ என்னவோ ஹாலிவுட் பாலாண்ணன் கடையைப் பூட்டிட்டு தற்காலிகஓய்வுல போய்ட்டாரு..அண்ணே எங்கிருந்தாலும் வாழ்த்துங்க..

ரொம்ப நாளா பிறரின் பதிவுகளைப் படிக்கிறதால, பதிவர்களை ரொம்ப உரிமையா நண்பர்கள் வட்டத்துல ஓட்டிப்போம்..உதாரணமா:

மாப்லே, ஒரு ஆச்சரியமான விசயம் கேளு..திருப்பூர் பக்கத்துல ஒரு மலைப் பாம்பு பிடிபட்டுருக்காம்

இதுல என்னப்பா ஆச்சரியம்?”

அட, அது நம்ம உண்மைத் தமிழன் பதிவை விடவும் நீளமா இருக்காம்!

இப்போ நம்மை எத்தனைபேர் ஓட்டப்போறாங்களோன்னு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.

எழுதுறதுன்னு முடிவு செய்தபின், என்ன எழுதுறதுன்னு குழம்பி என் அதிரடிக்கார மச்சானிடம் கேட்டேன். மாப்ளே, பதிவர்கள்ல நிறையப்பேர் எதையோ எழுதணும்னு வந்து, எப்படியோ எழுதி, இப்போ எங்கயோ நிக்கிறவங்கதான்..அதுனால எழுத ஆரம்பி..உன் எழுத்து உன்னை எங்கு கொண்டு சேர்க்கனுமோ, அங்கு கொண்டு போய்ச் சேர்க்கும் என பீதியைக் கிளப்பினார். அதையும்தான் பார்ப்போமேன்னு களத்தில் இறங்கிவிட்டேன். அந்த முருகன் தான் நம்மைக் கரை சேர்க்கணும்! 


அடுத்த பதிவில் சந்திப்போமா....
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

29 comments:

  1. ஒரே நாளில் இரண்டு பதிவுகள்...
    ம்ம்ம் நடக்கட்டும். வலையுலகில் ஜொலிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கவலைப்படாதீர்கள், கரை சேர்ந்தாச்சு...

    ReplyDelete
  3. முதன் முறை தங்கள் பதிவுகளை பார்க்கிறேன். வாங்க நண்பா..களத்துல எறங்குங்க..வாழ்த்துகள்! இன்று முதல் தங்களை Follow செய்பவர்கள் பட்டியலில் நான் இணைவதில் மகிழ்ச்சி! நாம் எழுதிக்கிழிக்கும் இடங்கள் madrasbhavan.blogspot.com

    ReplyDelete
  4. @பாரத்... பாரதி...: கரை சேர்த்ததுக்கு நன்றி..நன்றி..

    ReplyDelete
  5. @சிவகுமார்: வருகைக்கும் பின் தொடர்வதற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ஹாலிவுட் பாலாவை எழுதச் சொல்லி இதில் இழுத்துவிட்டதே நான் தான்.. :))
    கேபிள் சங்கர்

    ReplyDelete
  8. @shortfilmindia.com : அப்போ என் குருவுக்கும் குருவா நீங்கள்?..நீங்கள் இருவரும் நண்பர்கள் எனக் கேள்விப்பட்டிருக்கின்றேன்..இது தெரிந்திருந்தால், உங்களுக்கும் ஒரு நன்றியைப் போட்டிருப்பேனே!..பரவாயில்லை, 100வது பதிவில்(!) சமாய்ச்சிடுவோம்!

    ReplyDelete
  9. செங்கோவி, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ஹாலிவுட் பாலா எங்க போயிட்டார்?

    ReplyDelete
  11. @கார்மேகராஜா: அவரைத்தாங்க நானும் தேடுறேன்..தலைப்புல போட்டாலாவது வரமாட்டாரான்னு பார்க்குறேன்..காணோமே..

    ReplyDelete
  12. @Uma:வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரி.

    ReplyDelete
  13. கவலைப்படாதீர்கள், கரை சேர்ந்தாச்சு.

    ReplyDelete
  14. @சே.குமார்: நீங்கள்லாம் இருக்கும்போது, கவலை எதற்கு!!!

    ReplyDelete
  15. ///"அதுனால எழுத ஆரம்பி..உன் எழுத்து உன்னை எங்கு கொண்டு சேர்க்கணுமோ, அங்கு கொண்டு போய்ச் சேர்க்கும்” ///


    ஆம்! சிறிது கவனம் மட்டும் எடுத்துக் கொண்டு, ஆபாசம் தவிர்த்து,பண்பாட்டுக்கு இழுக்கு வராமல் பார்த்துக் கொண்டு, கருத்துப் பிழையும், சொற் பிழையும் தவிர்த்து, சுதந்திரமாகத் தோன்றுவ‌தையெல்லாம் எழுதுங்கள்.

    "தமிழ் எழுதி"யைப் பதிவிரக்கம் செய்து முகப்பில் போடவும்.நன்றி!

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்! follow பண்றேன். :-)

    ReplyDelete
  17. செங்கோவி கூறியது...
    இரண்டாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்! கொண்டாட காமராஜ் அரங்கத்தைப் புக் பண்ணிடுவோமா?
    --செங்கோவி
    நானும் ஹாலிவுட் பாலாவும்
    //
    நமது இரண்டுபேரின் விழாவையும் ஒன்றாக வைத்துவிடலாம். அதற்கு
    காமராஜர் அரங்கம் இடம் பத்தாதாம். நேரு உள்விளையாட்டு அரங்கை புக்செய்துவிடலாம்...சரியா...
    நாளை காலை ரெடியாக இருங்கள். வந்துவிடுகின்றேன்....

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  18. வாழ்த்துகள்! முதன் முறை தங்கள் பதிவுகளை பார்க்கிறேன். அப்படியே ஹாலிவுட் பாலாவும் பதிவை எழுதச் சொல்லுங்க.. :(

    ReplyDelete
  19. @kmr.krishnan: ஐயா, தங்கள் கருத்துக்களை முடிந்தவரை பின்பற்றுகிறேன்..நன்றி!

    ReplyDelete
  20. @Chitra: ஆஹா..’பின்னூட்டப் புயலே’ வந்துவிட்டதே...அக்கா, உங்கள் வருகைக்கும் பின் தொடர்வதற்கும் நன்றி..

    ReplyDelete
  21. @வேலன்.: வேலன் சொல்லி மறுத்தால் வேலால் குத்து விழும்..எனவே நான் ரெடி..அப்புறம் புக் பண்ண கேஷ் கொண்டுவர மறந்துடாதீங்க..ஏன்னா நான் இப்போ ‘எழுத்தாளர்’ நிலைமையில...!!!

    ReplyDelete
  22. @ILA(@)இளா: முதல் வருகைக்கு நன்றி இளா..பாலாண்ணனுக்கு கொஞ்சம் ஆணி ஜாஸ்தி இப்போ..சீக்கிரம் வருவாருன்னு ரகசியத் தகவல்!!

    ReplyDelete
  23. @ILA(@)இளா: முதல் வருகைக்கு நன்றி இளா..பாலாண்ணனுக்கு கொஞ்சம் ஆணி ஜாஸ்தி இப்போ..சீக்கிரம் வருவாருன்னு ரகசியத் தகவல்!!

    ReplyDelete
  24. வணக்கம்ணே..புதுசா வந்து இருக்கீங்களா, வாங்கண்ணே, உங்ககிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் நிசமாதான் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. @kumaresh: வாழ்துக்குக்கு நன்றி குமரேஷ்!தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  26. செங்கோவி...

    சும்மா இருந்தாலும்... விட மாட்டேங்கறீங்களே?! :) :)

    ’தற்காலிக’ ஓய்வெல்லாம் இல்லீங்க. ‘நிரந்தர’ ஓய்வுதான்.

    ஆனாலும்.. நேரம் கிடைக்கும் போது.. எல்லோரட பதிவையும் படிச்சிகிட்டுதான் இருக்கேன். கமெண்ட் மட்டும்.. கண்ட கண்ட பேரில் போட்டுகிட்டு இருக்கறனால... என்னை கண்டுபிடிக்கறது கஷ்டம்.

    ப்ரொஃபைல் நம்பரை வச்சி கண்டுபிடிச்சாதான் உண்டு!! :)

    நீங்க தொடர்ந்து எழுதுங்க... தல!! :) :)

    ReplyDelete
  27. @சுண்டெலி: //சும்மா இருந்தாலும்... விட மாட்டேங்கறீங்களே?!// எங்களையெல்லாம் உசுப்பேத்தி விட்டுட்டு, நீங்க மட்டும் எஸ்கேப்பா..எப்படியோ தல, நீங்களும் என் பதிவைப் படிக்கிறதுல ரொம்ப சந்தோசம்..கொஞ்சம் ஃப்ரீ பண்ணிக்கிட்டு களத்துல குதிக்க முடியுதான்னு பாருங்க..நீங்க வந்ததில் ரொம்ப சந்தோசம்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.