Thursday, December 30, 2010

திருவள்ளுவரும் ஹனிமூனில் வாங்கிய தர்ம(பத்தினி) அடியும்

டிஸ்கி: கதையல்ல நிஜம்.

நம்ம அதிரடிக்கார மச்சான் தன் தர்மபத்தினியுடன் கொடைக்கானலுக்கு ஹனிமூன் போயிருந்தபோது, சனியன் மாதிரி அறுவைக்கார நண்பன் ஒருவன் அவருக்கு ஃபோன் செய்தான். இவரும் எடுத்துப் பேசினார். அவன் போன கதை வந்த கதை என பேசிக்கொண்டேயிருந்தான்.

நம்ம அக்காவும் இவரைப் பார்த்துக்கொண்டே இருந்தார். மச்சானும் ’அறுக்கானே ’என நினைத்துக்கொண்டு, வாயை லேசாகக் கோணிக்கொண்டே உஷ்..உஷ்.. என மெதுவாக சொல்லிக்கொண்டேயிருந்தார்..அரை மணி நேர அறுவைக்குப் பின் ஒருவழியாய் ஃபோனைக் கீழே வைத்தார்.

உடனே அக்கா கேட்டார்:” ஏன் ஃபோன்ல பேசும்போது, வாயை வாயைக் கோணிக்கிறீங்க?”

மச்சானும் பெருமையாக “அவன் சரியான பிளேடும்மா!..யாராவது ஃபோன்ல பேசி ரொம்ப அறுத்தா அந்த மாதிரி வாயைக் கோணிப்பேன்..ஆமா, ஏன் கேட்கிறே?” என்றார்.

அவரது மனைவி கடுப்புடன் சொன்னார்:” இல்லே, நேத்து எங்கப்பா பேசும்போதும் இப்படித்தான் பண்ணீங்க..அதான் என்ன விவரம்னு கேட்டேன்”

“ஹே..அது..அதுவந்து..சும்மா..ஹி..ஹி..”

டம்..டும்..டமார்..

நீதி:
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல். (644)

பொருள்:
கேட்பவரின் மனப்பான்மை அறிந்தே எந்தச் சொல்லையும் சொல்லவேண்டும். அதைவிட மேலான அறமும் பொருளும் இல்லை.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

  1. ஆஹா...ஆஹா... படிக்க படிக்க வாய் கோணுதே.....

    ReplyDelete
  2. உங்கள் (சொந்த)கதைக்கான திருக்குறள் நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  3. @பாரத்... பாரதி...: அவ்வளவு அறுவையாவா இருக்கு?....

    ReplyDelete
  4. @பாரத்... பாரதி...: சொந்தக் கதையா...கம்பெனி சீக்ரட்டை இப்படி ஓப்பனா சொல்லலாமா...

    ReplyDelete
  5. மறைக்காமல் சொல்லவும் இது உங்க கதைதானே....

    ReplyDelete
  6. @ரஹீம் கஸாலி: நான் இன்னைக்கு மவுன விரதம்ங்க..அதனால உங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலைமையில இருக்கேன் பாஸ்..விரதத்தை கலைக்காதீங்க..பாவம்.

    ReplyDelete
  7. இனிமேல், எந்தக் கேள்வியாக இருந்தாலும் 'எதுக்குக் கேக்கறே?' என்று எதிர் கேள்வி கேட்டுவிட்டு பதில் அளியுங்கள்!!

    ReplyDelete
  8. @middleclassmadhavi:ஒரு பெண்ணின் மனது பெண்ணிற்குத்தான் புரியும்..அதான் கரக்டா சொல்றீங்க..இது தெரியாம ஆம்பிளைங்க ’பட்டு’ தெளிகிறோம்.

    ReplyDelete
  9. ஆகா! சூப்பர்! சொந்தக் கதைகள்னாலே ஒரு தனி த்ரில்! :-)

    ReplyDelete
  10. @ஜீ...: த்ரில்லா..அடுத்தவன் அடிவாங்குறதுல உங்களுக்கு என்ன சாமி த்ரில்ல்ல்ல்ல்லு..

    ReplyDelete
  11. தலை நல்ல அடியா? இப்போ எந்த ஹாஸ்பிடல் ல இருக்கீங்க? ஹிஹி

    ReplyDelete
  12. அதே சொல்வன்மை அதிகாரத்தில் இரண்டாவது குறள்:
    நீதி:
    "ஆக்கமும் கேடும் அதனால் வருவதால்
    காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு."

    பொருள்:
    நல் விளைவுகளும்,தீய விளைவுகளும் சொல்லும் சொற்களால் வருவதால்
    ஒருவன் தன் சொற்களில் தவறு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    மேலும் பயனில சொல்லாமை என்று ஒரு அதிகாரமும் உள்ளது என்பதை நினைவு படுத்துகிறேன்

    ReplyDelete
  13. @kmr.krishnan:ஆழ்ந்த கருத்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  14. உங்க கருத்து சூப்பர் பாஸ் :-), ஹேப்பி நியூ இயர்

    ReplyDelete
  15. @இரவு வானம்: நன்றி நைட் ஸ்கை..உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. வெற்றிதரும் ஆண்டாக 2011 அமைய வாழ்த்துகள்!!

    ReplyDelete
  17. @சிவகுமார்: வாழ்த்துக்கு நன்றி பாஸ்...தங்களுக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. @Jayadev Das என்னா ஒரு சந்தோஷம்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.