டிஸ்கி:மன்மதன் அம்பு தோல்விப்படம் அல்ல, வெற்றிதான் என அடம்பிடிக்கும் அப்பாவிகள் இந்தப் பதிவைத் தவிர்க்கவும்.
தமிழ் சினிமாவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஒரு நடிகரின் படத்திற்கு இவ்வளவு மோசமாக மார்க்கெட்டிங் செய்த்து ஏன் என எனக்குப் புரியவேயில்லை. கமலின் தசாவதாரத்திற்கும் ரஜினியின் எந்திரனுக்கும் செய்த விளம்பரங்களை ஒப்பிடும்போது, மன்மதன் அம்புக்கு செய்யப்பட்ட விளம்பரம் தூசு எனலாம். கடைசி நேரத்தில் உதயநிதி படத்தை ஜெமினி சர்க்யூட்டிற்கு விற்றதாக வந்த தகவல் வேறு எதிர்ப்பார்ப்பை டேமேஜ் பண்ணியது. ஆர்யா படத்திற்கு உருவாகும் எதிர்பார்ப்புகூட மன்மதன் அம்புக்கு இல்லை என்பதே உண்மை. கமல் ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்தது இப்படம் ரிலீஸ் ஆகும் விபரம்.
கமல் ரசிகர்களுக்கு (மட்டும்) வயதாகிவிட்டதா? அல்லது தற்போது இருக்கும் இளைஞர்களை கமல் கவரவில்லையா என்று தியேட்டரில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு குடும்ப நிகழ்வுக்காக படம் வெளியான வாரம் ராஜபாளையத்தில் இருந்தேன். நான் சென்னைபோல் 11.30தான் காலைக் காட்சி என நினைத்து ரிலாக்ஸாக்க் கிளம்பிக்கொண்டிருந்தேன். திடீரென நண்பர் ஒருவர் அங்கு காலை 10.30 மணிக்கே முதல் ஷோ எனச் சொன்னார். பிறகு அடித்துப் பிடித்து ஓடினேன். டிக்கெட் கிடைக்குமா, கிடைத்தாலும் உட்கார சீட் கிடைக்குமா என பதைபதைத்துப் போனால், தியேட்டரில் மொத்தம் 18 பேர்தான். (உட்கார்ந்து எண்ணினேன்; பதிவர்னா சும்மாவா!). படம் போட்டபின் மேலும் 10 பேர் வந்து சேர்ந்தனர். ரசிகர்கள் இப்படத்தைக் கைவிட்டதாகவே எனக்குத் தோன்றியது. (மன்மதன் அம்பு –விமர்சனம் எழுதியபோது இதை வேண்டுமென்றே குறிப்பிடவில்லை!)
மேலும், தற்பொழுது விஜய் படம்கூட 2 /3 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஆனால் கமல் படம் ரிலீஸ் ஆனது ஒரு தியேட்டரில் தான். அதற்கே ஆளில்லை என்பது உண்மையில் வருத்தமான விஷயம்தான். ரஜினி, கமலுக்கு அடுத்து நல்ல ஓப்பெனிங் உள்ள நடிகர் என விஜய்யைச் சொல்வார்கள். (டாக்டருடன் என்னதான் நமக்கு வாய்க்கால் தகராறு இருந்தாலும் உண்மையைச் சொல்லணும்ல). ஆனால் இப்போது கமல் தானாகவே இந்த ஆட்டத்திலிருந்து விலகுகிறாரா எனத் தோன்றுகிறது.
பொதுவாக கமல் பேசுவது மட்டும்தான் புரியாது. இதில் இன்னும் ஒரு ஸ்டெப் முன்னேறி பெரும்பாலான காட்சிகளில் என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. லைவ்-சவுண்ட் ரெகார்டிங் அவசியம்தானா என சினிமாக்காரர்கள் கண்டிப்பாக யோசிக்கவேண்டும். மேலும் ஆங்கிலம், மலையாளம், தெலுகு என எல்லாவித பாஷைகளும் வந்து விழுந்து, பாமர மக்களை படத்தில் ஒன்ற விடாமல் செய்தது. ஓவர் அறிவுஜீவித்தனம் நம் மக்களுக்கு ஆவதில்லை.
எளிய சினிமா ரசிகர்களுக்குத் தேவை கொஞ்சம் விறுவிறுப்பான திரைக்கதையும் சரிவிகிதத்தில் கலக்கப்பட்ட மசாலா ஐட்டங்களும் தான். தொடர்ந்து அறிவுஜீவிகளுடன் பழகுவதாலும், உலத் திரைப்படங்களைப் பார்ப்பதாலும் கமல் நம் மக்களின் ரசனையைக் கணிக்கத் தவறுகிறாரோ எனத் தோன்றுகிறது.
அடுத்து வரும் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்திலாவது கமல் கொஞ்சம் ‘இறங்கி’ யோசிப்பார் என நம்புவோம்.
சரியான அலசல்,
ReplyDeleteஎனக்கு என்னமோ படம் தோல்வி அடைந்ததற்கு படத்தின் பெயரும் ஒரு காரணம் என்றுத்தான் தோன்றுகிறது. பிட்டு படம் பெயர் போல் இருந்தது, அதனால் தானோ என்னமோ.
தியேட்டரில் மொத்தம் 18 பேர்தான். (உட்கார்ந்து எண்ணினேன்; பதிவர்னா சும்மாவா!).
ஹஹாஹா..................
நண்பரே தமிழ்மணம் ஒட்டுப்பட்டையில் நீங்களும் உங்களுக்கே வாக்களிக்கலாம்.
படம் சுறுசுறுப்பில்லாமல் மந்தமாக செல்வது, ஒரு முழுமை அடையாத தன்மை போல காட்சி அழிப்பது, புரியாத நகைச்சுவைகள் இவை எல்லாம் கமல் படங்களின் நிரந்தர சொத்து ஆகி விடும் போலிருக்கிறது. படத்தில் கமல் மட்டும்தான் சத்தமாக பேசுகிறார். ஆனால் புரியாமல்.
ReplyDelete@THOPPITHOPPI://பிட்டு படம் பெயர் போல் இருந்தது// ஏங்க வெந்த புண்ணுல வெந்நியை ஊத்துறீங்க..நமக்கு நாமே ஓட்டுப்போடலாமா..தகவலுக்கு நன்றி நண்பரே.
ReplyDelete@பாலா: சரியாகச் சொன்னீர்கள் நண்பரே. வருகைக்கு நன்றி.
ReplyDeleteபடத்தின் மிகப்பெரிய குறையாக நான் கருதுவது... லைவ் ஆடியோதான்
ReplyDeleteகே எஸ்.ரவிகுமாரும் ஏமாத்திட்டாரே
ReplyDelete@ஜாக்கி சேகர்: அடடா, பெருந்தலை வந்திருக்கீங்களே..முதலில் வருகைக்கு நன்றி சார்...நான் முதலில் தியேட்டர் கோளாறு என்றுதான் நினைத்தேன். பிறகு நீங்களும் அதையே எழுதியிருந்தீர்கள்..பிறகுதான் புரிந்தது லைவ்-ஆடியோதான் ப்ராப்ளம் என..
ReplyDelete@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): மின்சாரக்கண்ணா, ஆதவன் வரிசையில் அவருக்கு இதுவும் ஒன்று.
ReplyDeleteநல்லாத்தான் அலசி காயப்போட்டிருக்கீங்க....பார்க்கலாம் அடுத்த படத்தில் கமல் எப்படின்னு?
ReplyDelete//தமிழ் சினிமாவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஒரு நடிகரின் படத்திற்கு இவ்வளவு மோசமாக மார்க்கெட்டிங் செய்த்து ஏன் என எனக்குப் புரியவேயில்லை//
ReplyDeletePoint! பிரயோசனமில்லைன்னு...?
//கடைசி நேரத்தில் உதயநிதி படத்தை ஜெமினி சர்க்யூட்டிற்கு விற்றதாக வந்த தகவல் வேறு எதிர்ப்பார்ப்பை டேமேஜ் பண்ணியது//
உஷாராகிட்டாங்க! ஏற்கெனவே அந்த 'டீமை' 'கப்பல் பார்க்க'அனுப்பியதில் ஏகப்பட்ட செலவாகியிருக்கும்!
//லைவ்-சவுண்ட் ரெகார்டிங் அவசியம்தானா என சினிமாக்காரர்கள் கண்டிப்பாக யோசிக்கவேண்டும்//
முதல்ல யதார்த்தமா கதை சொல்லணும் அப்புறம் 'லைவ்' சவுண்டு! சரியா தல? :-)
//தொடர்ந்து அறிவுஜீவிகளுடன் பழகுவதாலும், உலத் திரைப்படங்களைப் பார்ப்பதாலும் கமல் நம் மக்களின் ரசனையைக் கணிக்கத் தவறுகிறாரோ எனத் தோன்றுகிறது.//
ReplyDeleteஅப்படித்தான் இருக்கும்.கொஞ்சம் கீழே இறங்கி வருவதுதான் அவருக்கும் நல்லது!
இந்த வார விடுமுறையில் பார்க்கலாம் என்றிருந்தேனே... பிள்ளைகளுடன் சுட்டிச் சாத்தானுக்கே போகலாம் போல!
ReplyDeleteகமல பத்தி எழுதி இருக்கீங்க, என்ன இன்னும் மைனஸ் ஓட்டு விழுகல :-) ஹி ஹி இன்னும் கூட நீங்க பிரிச்சு இருக்கலாம்.
ReplyDelete@ரஹீம் கஸாலி: நன்றி கஸாலி.
ReplyDelete@ஜீ...: நோ அப்ஜெக்சன் யுவர் ஆனர்!
ReplyDelete@சென்னை பித்தன்: இறங்கினாத்தான் நல்லது...பார்ப்போம்.
ReplyDelete@middleclassmadhavi:யோசிக்க வேண்டிய விஷயம்தான்.
ReplyDelete@இரவு வானம்://என்ன இன்னும் மைனஸ் ஓட்டு விழுகல// ஏங்க எடுத்துக்குடுக்குறீங்க..நான் எவ்வளவு கண்ட்ரோலா எழுதியிருக்கேன்..வேணும்னா உங்களோட ‘மன்மதன் அம்பு-விமர்சனம்’பதிவை லின்க் கொடுத்து அனுப்பிவைக்கவா?
ReplyDeleteநன்றாக இருக்கிறது :)
ReplyDeleteபுரியாமையே ச்டுத்துகிட்டிருந்தா எவன் பார்ப்பான்?
ReplyDeleteகமல் தன் சைக்கோ சிந்தனைகளை மக்களுக்கு திணிக்கிறார்
ReplyDeleteகமல் தன் சைக்கோ சிந்தனைகளை மக்களுக்கு திணிக்கிறார்
ReplyDeleteகமல் தன் சைக்கோ சிந்தனைகளை மக்களுக்கு திணிக்கிறார்
ReplyDeleteவில்லு,சுறா மாதிரி தலைப்பு வெச்சிருந்தா மட்டும் ஓடிவிடவா போகுது ஹிஹி
ReplyDeleteஎனக்கும் சில வசனங்கள் படத்துல சரியா புரியலை/கேட்கலை... நமக்கு தான் காதுல ஏதோ கோளாரோனு நினைச்சுட்டு இருந்தேன்... நல்ல வேளை என் காதுல பாலை வார்த்துடீங்க !!!
ReplyDelete--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
@Jhonaநன்றி ஜோனா...
ReplyDelete@ஆர்.கே.சதீஷ்குமார்: வருகைக்கு நன்றி பாஸ்..நான் கமலை அவ்வளவு மோசமாக நினைக்கவில்லை.அவர் வேறெதோ உலகில் இருக்கிறார்..அவ்வளவு தான்.
ReplyDelete@மதுரை பாண்டி: நானே முதலில் அப்படித்தான் நினைத்தேன் மதுரைக்காரரே.
ReplyDeleteசரியான அலசல்,
ReplyDeleteஎன்னவோ போங்கப்பா!?
@விக்கி உலகம்: வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே.
ReplyDeleteஎளிய சினிமா ரசிகர்களுக்குத் தேவை கொஞ்சம் விறுவிறுப்பான திரைக்கதையும் சரிவிகிதத்தில் கலக்கப்பட்ட மசாலா ஐட்டங்களும் தான். தொடர்ந்து அறிவுஜீவிகளுடன் பழகுவதாலும், உலத் திரைப்படங்களைப் பார்ப்பதாலும் கமல் நம் மக்களின் ரசனையைக் கணிக்கத் தவறுகிறாரோ எனத் தோன்றுகிறது.
ReplyDelete.....புரிய வேண்டியவருக்கு புரிந்தால் சரிதான்....
சரியான அலசல்.
ReplyDelete//எளிய சினிமா ரசிகர்களுக்குத் தேவை கொஞ்சம் விறுவிறுப்பான திரைக்கதையும் சரிவிகிதத்தில் கலக்கப்பட்ட மசாலா ஐட்டங்களும் தான். தொடர்ந்து அறிவுஜீவிகளுடன் பழகுவதாலும், உலத் திரைப்படங்களைப் பார்ப்பதாலும் கமல் நம் மக்களின் ரசனையைக் கணிக்கத் தவறுகிறாரோ எனத் தோன்றுகிறது.//
ReplyDeleteம்ம்...இருக்கலாம் செங்கோவி...
தலைக்கனம் குறைந்து, இயக்குநர்களை மதிக்கும் வரை எத்தனை படம் (தலைவன் இருக்கிறான்) வந்தாலும் இவரை யாரும் காப்பாற்ற முடியாது..
ReplyDeleteஒரு முறை கலைப்புலி சேகரன் இவரின் படங்களால் எங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று சொன்னது நினைவுக்கு வருகிறது...
கமல் எப்போது தன் மிதமிஞ்சிய அறிவுஜீவித் தனத்தை 'அடக்கி' வாசிக்கிறாரோ அப்போதுதான் சராசரி ரசிகன் அவர் திரைப்படத்தை ரசிக்கமுடியும்.. இதில் பாவம் இவர் தானும் கெட்டு, ரவிக்குமாரையும் குழப்பிக் கெடுத்துவிட்டுள்ளார்..
ReplyDeleteநியாயமான அலசல் .......
ReplyDeleteஅவரிடம் எதிர்பார்ப்பு அதிகம் . nichayam seivaar ena nambalaam
வணக்கம் தோழரே. பாவம் கமல். அவர் மட்டுமா? நாமும்தான். கே.எஸ். ரவிக்குமார் கூட ஏமாற்றி விட்டாரே. நாகராஜன், திருவாரூர்.
ReplyDeleteநடிப்பது ஒரு தொழிலாக நினைக்கவேண்டும் .நம் சிந்தனைகளை அடுத்தவனிடம் திணிக்க கூடாது ".கடை விரித்தேன் கொள்வாரில்லை "
ReplyDeleteகமல் நிச்சியம் அடுத்து ஜெய்ப்பார்
ReplyDeleteநடிப்பது ஒரு தொழிலாக நினைக்கவேண்டும் .நம் சிந்தனைகளை அடுத்தவனிடம் திணிக்க கூடாது ".கடை விரித்தேன் கொள்வாரில்லை "
ReplyDeleteநடிப்பது ஒரு தொழிலாக நினைக்கவேண்டும் .நம் சிந்தனைகளை அடுத்தவனிடம் திணிக்க கூடாது ".கடை விரித்தேன் கொள்வாரில்லை "
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகுப்பை நடிச்ச படம் குப்பையா தான் இருக்கும் நண்பரே...
ReplyDeleteவிஜயின் படங்கள் நன்றாக வசூலை அள்ளியது அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி (போக்கிரி தவிர்த்து)
சூர்யாவின் கடைசி அஞ்சு வருடத்தில் வந்த, பத்து படங்களும் நல்ல வசூலை கொடுத்தது (ரத்த சரித்திரம் தவிர்த்து),
ஆதவன் தோல்வி படம் அல்ல, கடைசி பத்து வருடங்களில் வெளியான தீபாவளி படங்களின் வசூலில் ஆதவன் தான் முதல் இடம்...
அஜித், விஜய் இடத்தை சூர்யா எப்போவோ சத்தம் இல்லாமல் பிடிச்சு விட்டார் ..
உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு இப்போது அமைந்துள்ள படம் முருக தாஸ் கூட்டணியில் உருவாகும் ஏழாம் அறிவு படத்தின் பட்ஜெட் நூறு கோடிக்கு மேலே...
என்றும் உங்கள் அருண் பிரசங்கி
@அருண் பிரசங்கி: தல, பட வசூல் விஷயத்தில் நீங்கள் சொல்வது உண்மைதான்..நான் சொல்லியிருப்பது முதல் நாள் ஓப்பனிங் பற்றி..ஓப்பனிங் என்பது ரசிகர் கூட்டத்தின் எண்ணிக்கை சார்ந்தது இல்லையா..சூர்யாவைவிட விஜய்க்கு அதிக ஓப்பெனிங் என்பது என் அனுபவம்..சுறா, வில்லுவால் பாதிக்கப்பட்ட தமிழர்களில் ஒருவந்தான் நான்..இருப்பினும் உண்மையைச் சொன்னேன். தங்கள் கருத்துக்கு நன்றி தல.
ReplyDelete@Chitraஉங்க ப்ரொஃபைல் ஃபோட்டோ நல்லாயிருக்குக்கா..
ReplyDelete@சே.குமார்; நன்றி குமார்..
ReplyDelete@ஆனந்தி..:வருகைக்கு நன்றி சகோதரி.
ReplyDelete@R.Gopi: நல்ல இயக்குனர் கையில் தன்னை ஒப்படைத்தால், கமல் ஜொலிப்பார்..அது நடக்கவேண்டும் என்பதே நம் ஆவல்.
ReplyDelete@அரவிந்த் குமார்.பா:அடக்க முடியாமல் பீறிட்டுப் பொங்குவதுதான் பிரச்சினையே.
ReplyDelete@அஞ்சா சிங்கம்:அவர் திறமைசாலி என்பதால்தான் நாம் எதிர்பார்க்கிறோம்..அதை அவர் புரிந்துகொண்டால் சரி.
ReplyDelete@Nagarajan: தோழரா..சரிதான்..கமலே ஏமாற்றும்போது கே.எஸ்.ஆர் ஏமாரற்றக்கூடாதா நண்பரே.
ReplyDelete@ponnusamyஅவர் நடிகர் மட்டும் இல்லையே.
ReplyDelete@R.Bhagyarajகமல் அடுத்து ஜெயிப்பார் என்றே நானும் நம்புறேன்..பார்ப்போம்.
ReplyDelete//ஒரு குடும்ப நிகழ்வுக்காக படம் வெளியான வாரம் ராஜபாளையத்தில் இருந்தேன்//....ராஜபாளையம் தங்கள் சொந்த ஊரா நண்பா????
ReplyDeleteஎனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் ராஜபாளையத்தில் பகல் காட்சி பத்து முப்பதுக்கே தொடங்கிவிடும்.
ReplyDelete@சிவகுமார்(சென்னை): இல்லை பாஸ்..என் நெருங்கிய உறவினர்கள் ராஜபாளையம் அருகில் வசிக்கிறார்கள்...சும்மா போயிருந்தேன்..
ReplyDelete@ஆர்.கே.சதீஷ்குமார்
ReplyDeleteசெம கோபமோ@..
"மன்மதன் அம்பு – தோல்வி ஏன்?"
ReplyDeleteசந்தேகமில்லை கமல்தான்.
@ஜெகதீஸ்வரன்.; நான் ஒரு பக்கம் டைப் பண்ணி சொன்னதை ஒரு வார்த்தையில் சொல்லிட்டீங்களே...
ReplyDeleteவிமர்சனமெல்லாம் சரிதான் , ஆனால் ரஜினி, கமலுக்கு பிறகு அதிக வசூல் நடிகர்(?!) விஜய் என்று சொல்வது ரொம்ப ஓவர் . விஜய் அந்த தகுதியை இழந்து ரொம்ப வருஷம் ஆச்சு ங்கனா ..
ReplyDelete@Vijay: விஜய், மேலே அருண்பிரசங்கிக்கு சொன்ன பதிலைப் பார்க்கவும்..எழுதும்போது ஒரு நிமிடம் யோசித்துவிட்டே எழுதினேன்..பதிவு பேசுவது விஜய்க்கு உள்ள முதல் நாள் ஓப்பனிங் பற்றித்தான்...கருத்துக்கு நன்றி.
ReplyDeleteஒரு திரைப்படத்தின் பாத்திரங்கள் பல்வேறு கோணமுடையது. பலவேறு பாத்திரங்கள் உள்ளது. பாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் அல்லது கதைக்கு ஏற்றாற்போல் புதிய நடிகர்களையோ அல்லது பழைய நடிகர்களையோ கூட நடிக்கவைக்கப்படும். நகைச்சுவையாக விடயங்களைச் சொல்லலாம். சிலவேளை பாத்திரத்தின் பொருத்தம் கருதி, பாத்திரத்துடன் பொருந்திப்போகும் ஒருவரை நடிக்கவைக்கலாம். ஒரு திரைப்படத்தின் கதையுடன் தொடர்பில்லாமல், ஒரு சில காட்சிகளிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ கூட, ஒரு புகழ்பெற்ற நடிகரை கௌரவ வேடத்தில் நடிக்க வைத்து, ரசிகர்களைக் கவருவதற்காக எடுக்கப்பட்ட திரைப்படங்களும் உள்ளன. நகைச்சுவை நடிகர்களை அல்லது நகைச்சுவையை விரும்புவோரை கவரும் விதமாக கதையுடன் தொடர்பில்லாத காட்சிகள் கூட சில திரைப்படங்களில் வந்துள்ளன.
ReplyDeleteஆனால், ஒரு திரைப்படத்தின் கதையுடனோ, கதாப்பாத்திரத்துடனோ எந்த வகையிலும் தொடர்பில்லாமல், "மன்மதன் அன்பு" எனும் திரைப்படத்தில் காட்டப்படும் "ஈழத்தமிழர்" பாத்திரமானது வேண்டுமென்றே ஒரு இனத்தை வழிய இழுத்து, இழிவு படுத்தும் வகையிலானது என்பது திரைப்படத்தை பார்த்த எந்த ஒரு சாதாரணனுக்கும் புரியும்.
இச்செயலானது ஈழத்தமிழர்களை கேவலப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு கமல் செய்த செயலானது, கமலஹாசன் எனும் நடிகன் எத்தனை கேவலமானவன் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய செயலாகும்.