Wednesday, January 26, 2011

தாய் மண்ணே வணக்கம்

என்னைப் பொறுத்தவரை சுதந்திர தினத்தை விடவும் முக்கியமானது குடியரசு தினம். பல்லாயிரக்கணக்கான வருடங்களாக முடியாட்சியின் கீழ் வாழ்ந்துவந்த நாம், இப்போது வெற்றிகரமாக அறுபத்தியிரண்டாம் குடியரசு தினத்தில் அடியெடுத்து வைக்கின்றோம்.

பொருளாதார ரீதியாக நாம் முன்னேறிக் கொண்டிருந்தாலும், காந்தி தேசம் காந்திய வழிகளில் இருந்து விலகிச் செல்வது நமக்குப் பெரும் வருத்தத்தையே தருகிறது. 

’நம் தாய்நாடு இந்தியா’ என்று நாம் பெருமிதம் கொள்ள இப்போதும் எஞ்சியிருப்பது நமது ஜனநாயகம் தான். அரசியல்வாதிகள் எவ்வளவுதான் கொள்ளை அடித்தாலும் பல அக்கிரமங்களைச் செய்தாலும் அதற்கான எதிர்ப்பை வெளிக்காட்டும் உரிமையையாவது இன்னும் விட்டு வைத்திருக்கிறார்களே என்று சந்தோஷப்படவேண்டிய நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

ஜனநாயகம் என்பது எண்ணிக்கை சார்ந்தது. எவ்வளவு தூரம் நாம் பொதுப்பிரச்சினைகளில் ஒன்றுபடுகிறோமோ அவ்வளவுக்கு ஜனநாயகம் நமக்குப் பயப்படும்.

பல வேதனையான நிகழ்வுகளைத் தடுப்பதற்குக்கூட ஒன்றுபட்டு போராட முடியாதவர்களாக நாம் இருக்கின்றோம். நமது எதிர்ப்பைப் பதிவதற்கான எல்ல வாய்ப்புகளை நம் நாடு கொடுத்தும் ஒற்றுமையின்மையால் எல்லவற்றையும் இழந்துகொண்டுள்ளோம். 

மத்திய அரசில் அதிக மந்திரிகளைப் பெற்றுள்ள மாநிலங்கள் மகாராஷ்ட்டிராவும் தமிழ்நாடும் தான். அதில் காட்டும் அக்கறையை மக்கள் மீதும் காட்டும் தலைவர்களை நாம் எப்போது பெறப்போகிறோம் எனத் தெரியவில்லை. அதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் குடியரசு தினச் சிறப்பு நிகழ்ச்சிகளில் மூழ்கியிருப்போம்.

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்.

ஜெய் ஹிந்த்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

  1. ஜெய் ஹிந்த்!

    ReplyDelete
  2. உங்களுக்கும் குடியரசுதின நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. குடியரசுதின நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. //அரசியல்வாதிகள் எவ்வளவுதான் கொள்ளை அடித்தாலும் பல அக்கிரமங்களைச் செய்தாலும் அதற்கான எதிர்ப்பை வெளிக்காட்டும் உரிமையையாவது இன்னும் விட்டு வைத்திருக்கிறார்களே என்று சந்தோஷப்படவேண்டிய நிலையில்தான் நாம் இருக்கிறோம்//

    எதிர்ப்பைக் காட்டுறாங்க? காட்ட மாட்டாங்க என்றுதானே விட்டுவைத்திருக்கிறார்கள்? - சும்மா டவுட்!

    சரி சரி விடுங்க பாஸ்!
    குடியரசுதின நல் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  5. கஸாலி & குமார் : வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  6. @செங்கோவி: உங்க டவுட் நியாயமானதுதான் ஜீ!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.