பொல்லாதவன் என்ற ‘டைரக்டர் மூவி’யைக் கொடுத்த வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியின் அடுத்த படைப்பு என்பதாலும் தனுஷின் சமீபத்திய படங்கள் சரியாகப் போகாததாலும், சன் பிக்சர்ஸ் படம் என்பதாலும் ஓரளவு நல்ல எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருந்த படம்.
தமிழ்சினிமாவுக்கு புதிய ‘ஆடுகளமான’ சேவல் சண்டையை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்டுள்ள படம். பேட்டைக்காரன் (ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்?) என்ற பெரியவரின் குரூப்பிடம் தொடர்ந்து தோற்றுக்கொண்டு வருகிறது ரத்தினம் குரூப். ரத்தினத்தின் அப்பா சேவல் சண்டையில் பெரிய ஆளாய் இருந்தவர். மேலும் ரத்தினம் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். தனுஷ் பேட்டைக்காரன் குரூப்பில் உள்ள விசுவாசமான சிஷ்யன். குரு பேட்டைக்காரனிடம் கற்றுக்கொண்டதை வைத்து,ஒரு சேவலைத் தனியாக வளர்த்து வருகிறார். ஆனாலும் பேட்டைக்காரன் அது பந்தயத்தில் ஜெயிக்காது என்று கணிக்கிறார். ரத்தினத்திற்கும் பேட்டைக்காரனுக்கும் நடக்கும் ஃபைனல் சேவல் சண்டையில் தனுஷ் குருவை மீறி தன் சேவலைக் களமிறக்கி ரத்தினத்தை தோற்கடிக்கிறார். அதனால் குரு அடையும் மனமாற்றமும், செய்யும் செயல்களும் தனுஷின் வாழ்வைப் புரட்டிப்போடுகின்றன. அதை அறியாமல் தொடர்ந்து விசுவாசமாக இருக்கும் தனுசும், அவரது குருவும் என்ன ஆகிறார்கள் என்பதே படம். இதுவொரு உண்மைக்கதை என்பது கூடுதல் தகவல்.
பிட்ச்சை ரெடி பண்ணுவதிலேயே முதல் பாதி போய்விடுகிறது. ஆனாலும் இடைவேளைக்கு முந்திய அரைமணி நேரத்தில் ஆரம்பிக்கும் விறுவிறுப்பு, இறுதி வரை தொடர்கிறது.
தனுஷ் மதுரைக்காரராகவே வாழ்ந்திருக்கிறார். பொல்லாதவன் போலவே, பஞ்ச் டயலாக் பேசாமல் டைரக்டர் சொல்படி கேட்டு நடித்திருக்கிறார். நாயகி டாப்ஸி அழகான பொம்மை போல் இருக்கிறார். வருங்காலத்தில் நடிக்கலாம். ஆங்கிலோ-இந்தியப் பெண்ணாகப் பொருந்திப்போகிறார்.
பேட்டைக்காரனாக நடித்திருக்கும் ஜெயபாலனை படத்தின் தூண் எனலாம். அடர்ந்த தாடி மீசைக்குள்ளும் உணர்ச்சிகளை அனயாசமாகக் காட்டுகிறார். கிஷோர், தனுஷின் தாயாக வருபவர், நண்பர் என எல்லோரும் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘யாத்தே’ பாடல் கலக்கல். தனுஷ் ஆடும் ஆட்டத்திற்கு தியேட்டரும் சேர்ந்து ஆடுகிறது. மற்ற பாடல்கள் கேட்கக் கேட்கப் பிடிக்கலாம். வேல் ராஜின் ஒளிப்பதிவு வித்தியாசமான ஏறக்குறைய பிளாக்&ஒயிட் டோனைப் பல காட்சிகளில் பயன்படுத்தி உள்ளார். நன்றாக உள்ளது. சேவல் சண்டைக் காட்சிகள் கிராஃபிக்ஸ் என்று கூறினாலும், பார்க்க அப்படித் தெரியவில்லை.
முதல் பாதியில் பேஸ்மெண்டைப் பலமாகப் போடுவதாக நினைத்து கொஞ்சம் இழுப்பது, புதுக்கோட்டையைப் போல் படத்தை ட்ரை ஆக்குகிறது. வித்தியாசமான கதைகளத்தைத் தேர்ந்தெடுத்து, ஒரு நல்ல கதையையும் கொடுத்த மொத்த டீமையும் பாராட்டலாம்.மற்றபடி, படம் கமர்சியலாக வெற்றியடைவது சன் டி.வி.யின் கையில் உள்ளது.
//வித்தியாசமான கதைகளத்தைத் தேர்ந்தெடுத்து, ஒரு நல்ல கதையையும் கொடுத்த மொத்த டீமையும் பாராட்டலாம்//
ReplyDeleteஓ! அப்போ பார்க்கலாம்! வெற்றியடைவதை விடுங்கள்! நல்ல படம் என்றால் ஓக்கே! (எங்களுக்கு)
@ஜீ...: பார்க்கலாம் ஜீ.
ReplyDeleteநல்ல பதிவுசெந்தில்தோஹா
ReplyDelete@Senthil: வருகைக்கு நன்றி செந்தில்...
ReplyDelete"தனுஷின் சமீபத்திய படங்கள் சரியாகப் போகாததாலும்," இந்த ஸ்டேட் மென்ட் எப்படி சொல்றீங்க, நீங்க சினமா வியாபாரத்தில் உள்ளவரா , collection ரிப்போர்ட் பாத்திங்களா, பத்திரிக்கையில் படித்தீர்களா, பகிர்ந்து கொள்ளலாமே.
ReplyDeleteஇனம் மறந்து இயல் மறந்துஇருப்பின் நிலைமறந்துபொருள் ஈட்டும் போதையிலேதமிழின் தரம் மறந்த தமிழனுக்குநினைவூட்டும் தாயகத் திருநாள்உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவிமர்சன பகிர்வுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
nanraga ullathu
ReplyDeletehappy pongal
பொங்கல் வாழ்த்துக்கள்......
ReplyDelete@andygarcia://"தனுஷின் சமீபத்திய படங்கள் சரியாகப் போகாததாலும்," இந்த ஸ்டேட் மென்ட் எப்படி சொல்றீங்க, நீங்க சினமா வியாபாரத்தில் உள்ளவரா , collection ரிப்போர்ட் பாத்திங்களா, பத்திரிக்கையில் படித்தீர்களா, பகிர்ந்து கொள்ளலாமே.//
ReplyDeleteநான் சினிமா வியாபாரத்தில் இல்லை, கலெக்சன் ரிப்போர்ட் பார்க்கவில்லை, பத்திரிக்கையிலும் படிக்கவில்லை..தமிழ்நாட்டில் இருப்பதால் என் சொந்த அனுபவத்தில் எழுதுகிறேன். குட்டியும் உத்தமபுத்திரனும் ஹிட் படம்தான் என்று சொல்கிறீர்களா..நீங்கள் அப்படி வைத்துக்கொண்டால் எனக்கு ஆட்சேபணை இல்லை நண்பரே.
@உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com): வாழ்த்துக்கு நன்றி உலவு..உங்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
ReplyDelete@மாணவன்: நன்றி மாணவன்...தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
ReplyDeleteதமிழ்ப்பையன், உமாபதி, அண்ணா நகர் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.\
ReplyDeleteஎனக்கும் படம் பிடித்திருந்தது..பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDelete//மற்ற பாடல்கள் கேட்கக் கேட்கப் பிடிக்கலாம்// தனுஷின் வரிகளை வைத்தேவா?... படத்தைப் பார்க்கலாம் என முடிவு செய்துட்டேன். நன்றி
ReplyDeleteபடம் நல்லாதாங்க இருக்கு
ReplyDeleteஅப்ப படம் பார்க்கலாம்ன்னு சொல்றீங்களா?? பாத்துடுவோம் :-)
ReplyDelete<<>>
பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!
<<>>
//நான் சினிமா வியாபாரத்தில் இல்லை, கலெக்சன் ரிப்போர்ட் பார்க்கவில்லை, பத்திரிக்கையிலும் படிக்கவில்லை..தமிழ்நாட்டில் இருப்பதால் என் சொந்த அனுபவத்தில் எழுதுகிறேன். குட்டியும் உத்தமபுத்திரனும் ஹிட் படம்தான் என்று சொல்கிறீர்களா..நீங்கள் அப்படி வைத்துக்கொண்டால் எனக்கு ஆட்சேபணை இல்லை நண்பரே.//
நல்ல பதில்!!
இன்று காலைதான் படம் பார்த்தேன். ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம். இரண்டாம் பாதிதான் சற்று இழுவையாக உள்ளது!!
ReplyDelete@middleclassmadhavi: அதுவா வருதுக்கா...நல்ல படம்தான் பாருங்கள்.
ReplyDelete@சேக்காளி: வருகைக்கு நன்றி நண்பரே.
ReplyDelete@பழூர் கார்த்தி://நல்ல பதில்!!// உண்மையைச் சொன்னேன் பாஸ்.
ReplyDelete@சிவகுமார் நன்றி சிவகுமார்.
ReplyDeleteஇரண்டாம் முறையாக சாதித்த வெற்றி மாறனுக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteஉங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
//வித்தியாசமான கதைகளத்தைத் தேர்ந்தெடுத்து, ஒரு நல்ல கதையையும் கொடுத்த மொத்த டீமையும் பாராட்டலாம்//
ReplyDeleteவெற்றிமாறனுக்கு இன்னொரு வெற்றி போல இருக்கே...!
பாத்துடுவோம்...!!
அப்படியே இங்கேயம் வந்து போங்க...
http://vinmukil.blogspot.com/
http://microscopicalview.blogspot.com/
@பாரத்... பாரதி...: பாராட்டுக்கு நன்றி பாரதி..
ReplyDelete@Sathish Kumar: வந்தேன்..பார்த்தேன்...மகிழ்ந்தேன்..waxmusieum பதிவு அருமை..தொடர்ந்து எழுதுங்கள்..
ReplyDeleteபொதுவாக பதிவர்கள் போற போக்கில், இந்த படம் 23 நாள் ஓடும், 17 முக்கால் கோடி வசூல் என்று எழுதுகிறார்கள், தமிழ்நாட்டில் சென்னை தவிர வசூல் வெளியே தெரிவதில்லை. தனுஷ்க்கு ஆதரவாக இருப்பது போல் என் கமெண்ட் அமைந்து விட்டது எனக்கே கேவலமாக போய்விட்டது (அவரை பிடிக்காது). சினிமா மட்டுமல்ல ஒரு எழுத்தாளர் பாலஸ்தீன இஸ்ரேல் பற்றி புத்தகம் போட்டு இருக்கிறார் , அவர் எந்த வெளிநாட்டிற்க்கும் சென்றதே இல்லையாம், அவராக மொட்டை மாடியில் உக்காந்து உத்தேசமாக எழுதி இருப்பார், வாங்காதே என்றார்கள் நண்பர்கள். ஒரு உத்தேசமாக பதிவர்கள்,எழுத்தாளர்கள் பதிவிடுவதுதான் நெருடல்.
ReplyDeleteமற்றபடி உங்கள் விமர்சனம் நன்றாகவே உள்ளது!
பரவாயில்லை விடுங்க சார்..//அவர் எந்த வெளிநாட்டிற்க்கும் சென்றதே இல்லையாம், அவராக மொட்டை மாடியில் உக்காந்து உத்தேசமாக எழுதி இருப்பார்// சத்தியமா நான் படம் பார்த்துட்டுத் தாங்க விமர்சனம் எழுதுறேன்..தொடர்ந்து வந்து கருத்துகளைப் பதியுங்கள். விளக்கத்திற்கு நன்றி.
ReplyDeleteவிமர்சன பகிர்வுக்கு நன்றி
ReplyDelete@சே.குமார்: நன்றி குமார்..
ReplyDelete