சக பதிவர் செல்வனூரான் பாஸ்போர்ட் - போலீஸ் வெரிஃபிகேசன் பற்றி தன் வலைப்பதிவில் புலம்பியிருந்தார். அதற்கு புரிந்தும் புரியாமலும் நான் அறிவுரை சொல்லியிருந்தேன். அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றதுன்னா நமக்கு அல்வா சாப்பிடற மாதிரி ஆச்சே..
போனமாதம் நானும் போலீஸ் க்ளியரன்ஸ் சர்டிஃபிகேட்(PCC) விண்ணப்பிக்க வேண்டி வந்தது. மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் போய் விண்ணப்பித்தேன். என்னுடன் விண்ணப்பித்த பலருக்கும் அன்று மாலையே PCC கொடுத்துவிட்டார்கள். எனக்கு போலீஸ் ஸ்டேசன் போய் சரிபார்த்த பின்பே தர முடியும் என்று கூறி பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக்கொண்டார்கள். நண்பர்களிடம் விசாரித்ததில் ‘எப்படியும் 3 வாரம் ஆகும்’ என்று சொன்னார்கள். நானும் மன்மதன் அம்பு பார்த்து விமர்சனம் எழுதி சமூக சேவை செய்வதில் மூழ்கிவிட்டேன்.
திடீரென மூன்றாவது நாளே PCC பாஸ்போர்ட்டுடன் வீட்டிற்கு வந்துவிட்டது. எனக்கோ ஆச்சரியம். ’வழக்கமாக போலீஸ்க்கு மாமூல் கொடுத்தபின்பே வேலை நடக்கும். இப்போது நம்மிடம் கேட்காமலே PCC அனுப்பிவிட்டார்களே, இந்தியா ஒளிர்கிறதே’ எனச் சந்தோசம் தாங்கவில்லை. வந்த PCC ஐ அலுவலகத்தில் சமர்பித்துவிட்டு, தொடர்ந்து பதிவுலக சேவையில் மூழ்கினேன்.
நேற்று போலீஸ் ஸ்டேசனிலிருந்து அழைப்பு வந்தது. போய்ப் பார்த்தால் PCC விண்ணப்பித்த படிவத்துடன் எழுத்தர் அமர்ந்திருந்தார். ரேசன் கார்டையும் வாங்கி சரிபார்த்துவிட்டு உரிமையோடு ‘சார், ஒரு 300 ரூபாய் கொடுங்க’ எனக் கேட்டார். எனக்கோ கோபம் பொங்கியது. ஆனாலும் ’இது பதிவுலகம் அல்ல, நிஜவுலகம்..ஆப்பு அடித்துவிடுவார்கள்’ என என் அதிரடிக்கார மச்சான் எச்சரித்ததால், பணத்தைக் கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.
முன்பெல்லாம் PCC விண்ணப்பித்தால், எல்லா விசாரணையும் முடிந்து போலீஸ் ஸ்டேசனிலிருந்து பாஸ்போர்ட் ஆஃபீஸுக்கு PCC போகும். பிறகு அவர்கள் நமக்கு அனுப்புவார்கள். ஆனால் இப்போது பாஸ்போர்ட் ஆஃபீஸில் இருக்கும் டேட்டா பேஸின் அடிப்படையில் PCC கொடுத்துவிட்டு, பிறகு போலீஸ் விசாரணைக்கு அனுப்புகிறார்கள்.
இதை நமக்குச் சொன்னாலாவது பரவாயில்லை..நான் ஒருவேளை PCC வந்த அடுத்தநாளே கிளம்பியிருந்தால், போலீஸ் விசாரித்துவிட்டு ‘நான் இந்த முகவரியில் இல்லை’ என ரிப்போர்ட் அனுப்பியிருப்பார்கள். மற்றொரு முக்கிய விஷயம், இப்போது போலீஸ் ஸ்டேசன் லெட்ஜரில் நம் புகைப்படத்தை ஒட்டி, ஒரு கையெழுத்தும் வாங்கி வைக்கும்படி போலீஸார் அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள். எனவே மாமூலே கொடுத்தாலும் போலீஸால் ஒரு அளவுக்கு மேல் நமக்கு உதவ முடியாது. யாராவது உங்களுக்குப் பதிலாக ஃபோர்ஜரி கையெழுத்து போட்டால் மட்டுமே முடியும். அதற்கு போலீஸ் துணிந்து ஒத்துக்கொள்ள வேண்டும்.(அதற்கு கூடக் கொஞ்சம் செலவாகும்,)
எனவே போலீஸ் விசாரணை முடிக்காமலே, PCC வந்தால் எதற்கும் ஒரு நடை போலீஸ் ஸ்டேசன் போய் சொல்லிவிட்டு வந்துவிடுங்கள். பதிவர் செல்வனூரான் இப்பொது என்ன செய்திருக்கிறார் எனத் தெரியவில்லை..சீக்கிரம் அடுத்த பதிவில் சொல்வார் என நம்புகிறேன்.
மதுரை பாஸ்போர்ட் அலுவலத்தின் உள்ளே அமர்ந்திருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களிடம் படிவத்தை வாங்கி நிரப்பினீர்கள் என்றால், உங்களை அலைக்கழிக்கும் வாய்ப்புக் குறைவு. வெளியே நிரப்பிப் போனால், எதோவொரு காரணம் சொல்லித் திருப்பி அனுப்பப்படுவீர்கள்.உள்ளே பணமும் குறைவாகத்தான் வாங்குகிறார்கள்.
இதையெல்லாம் மனதில் வைத்து, சீக்கிரம் பாஸ்போர்ட் வாங்கி, இந்தியாவை விட்டு வெளியேறி, தாய்நாட்டைச் சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள். நன்றி,
நன்றி நண்பரே எனக்கும்
ReplyDeleteஇதில் பல சந்தேகங்கள் இருந்தது
பகிர்வுக்கு நன்றி செங்கோவி. லஞ்சம் கொடுக்காமல் இங்கு வேலைக்கு ஆகாது என்று எதார்த்தத்தை சொல்லியுள்ளீர்கள்
ReplyDelete@THOPPITHOPPI: இணையத்தில் தகவல் தேடும் மக்களுக்கு உதவும் என்றுதான் பதிந்தேன்..உங்கள் சந்தேகம் தீர்ந்ததில் மகிழ்ச்சி.
ReplyDelete@ரஹீம் கஸாலி: லஞ்சம் கொடுக்காமல் இந்தியாவில் வாழமுடியுமா..
ReplyDeleteஇதையெல்லாம் மனதில் வைத்து, சீக்கிரம் பாஸ்போர்ட் வாங்கி, இந்தியாவை விட்டு வெளியேறி, தாய்நாட்டைச் சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள். நன்றி,///
ReplyDelete100% agree
தகவல் தேடும் மக்களுக்கு உதவும் பகிர்வுக்கு நன்றி செங்கோவி.
ReplyDeleteலஞ்சம் வாங்காமல் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.பாஸ்போர்ட் வாங்குவது குறித்த தகவல்களுக்கு நன்றி
ReplyDeleteநீஙகள் எப்போது இந்தியா வை விட்டு கிளம்புகிறீர்கள்
ReplyDeleteஇதையெல்லாம் மனதில் வைத்து, சீக்கிரம் பாஸ்போர்ட் வாங்கி, இந்தியாவை விட்டு வெளியேறி, தாய்நாட்டைச் சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள். நன்றி,
ReplyDelete......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....
:-)
ReplyDelete@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): போலீஸ்கார், ஏன் உங்க ஆட்கள் இப்படி இருக்காங்க..
ReplyDelete@சே.குமார்: ஏதோ நம்மாலான சிறு உதவி..
ReplyDelete@middleclassmadhavi://லஞ்சம் வாங்காமல் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்// ஆமாம் சகோதரி, நான்கூட வாங்கியதேயில்லை!!!
ReplyDelete@Speed Master: கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க பாஸ்..ஆனா எங்க போனாலும் பதிவு போட்டு உங்களை கொடுமைப்படுத்துறது தொடரும்...
ReplyDelete@Chitra: வருகைக்கும் சிரிப்புக்கும் நன்றிக்கா!
ReplyDelete@ஜீ...: வருகைக்கு நன்றி ஜீ.
ReplyDeleteநல்ல பகிர்வு நண்பா வாழ்த்துக்கள்
ReplyDeleteஉபயோகமான பதிவு செங்கோவி..!!
ReplyDeleteநன்றி சகோதரா, கடவுச்சீட்டை தாயகம் திரும்பும்போது ஒப்படைக்கக்கோரி மதுரை கடவுச்சீட்டு அலுவலகத்தில் இருந்து ஒரு மின் அஞ்சல் வந்தது. நான் தற்போது சவுதியில் இருப்பதால் அப்படியே செய்கிறேன் என பதில் அஞ்சல் அனுப்பியுள்ளேன். பகிர்வுக்கும் உங்களது ஆதரவுக்கும் நன்றிகள் பல
ReplyDeleteலஞ்சம் கொடுத்தாலும் சில நேரம் வேலை நடக்காது
ReplyDeleteஉங்களின் சுத்த உணர்வுக்கு நன்றி..
ReplyDeletePolice station never do their job with out getting bribe.!!!its shame for india
ReplyDeleteஎல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!தேவையான பதிவு.
ReplyDelete@இரவு வானம்:, @சிவகுமார்: நன்றி நண்பர்களே..
ReplyDelete@தங்கராசு நாகேந்திரன்; தகவலுக்கு நன்றி நண்பரே..
ReplyDelete@எல் கே: என்ன சார் சொல்றீங்க...உங்க ஏரியா ரொம்ப மோசம் போல..
ReplyDelete@அமுதா கிருஷ்ணா: வருகைக்கும் நன்றிக்கும் நன்றி!
ReplyDelete@balakumar: காசேதான் கடவுளடா என்பதைச் சரியாகக் கடைப்பிடிக்கிறார்கள்..
ReplyDelete@சென்னை பித்தன்: வருகைக்கு நன்றி சார்.
ReplyDeleteநல்ல பயனுள்ள பதிவு. உங்கள் வலைப்பூவை சரியான திசையில் கொண்டுச்செல்கிறீர்கள். வாழ்த்துக்கள்..
ReplyDeleteகடைசி வரி பஞ்ச்...
சிறப்பான ஒரு ஆய்வுத்தொகுப்பு நடுநிலையோடு. இதற்கு முடிவுதான் என்ன நண்பரே ? ஈழ சுதந்திரம் பெற உங்கள் ஐடியா என்ன நண்பரே ?
ReplyDelete@Ganesh: பாஸ்போர்ட் சேவைக்கும் உங்க கமெண்ட்டுக்கும் சம்பந்தமேயில்லையே...தப்பா இங்க போட்டுட்டீங்களா..
ReplyDelete