விஜய், அஜித், சிம்பு என பலரும் கண் வைத்திருக்கும் விஷயம் ’சூப்பர் ஸ்டார்’ நாற்காலி. ரஜினிகாந்த் 60 வயதை தாண்டுவதால், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி சில வருடங்களாக பத்திரிக்கைகளாலும் சினிமா ரசிகர்களாலும் எழுப்பப்படுகிறது. எனவே நாமும் அதைப் பற்றி கொஞ்சம் யோசிப்போம்.
ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்தபோது இங்கு ராஜாவாக கோலோச்சிக் கொண்டிருந்தவர் மக்கள் திலகம் என்றும் புரட்சித்தலைவர் என்றும் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள். எம்.ஜி.ஆரின் விஷேசத்தன்மை அவரது படங்களின் மூலம் அவரைப் பற்றி உருவாக்கப்பட்டிருந்த இமேஜ். குடிக்க மாட்டார். புகைக்க மாட்டார். பொய் சொல்ல மாட்டார். யாராவது வயதான தாத்தா/பாட்டி தள்ளாடி வந்தால், தலைவர் ஓடிவந்து கை கொடுப்பார். கதாநாயகியை / தங்கச்சியை யாராவது கோட்-சூட் போட்ட ஆசாமி கற்பழிக்க முயற்சித்தால், நாம் டென்சனே ஆகவேண்டியதில்லை. எப்படியும் தலைவர் பாய்ந்து வந்து காப்பாற்றி விடுவார். ’மிஸ்டர்.பெர்ஃபெக்ட்’ என்பதே எப்போதும் அவரது கேரக்டர்.
ஆனால் அவரது இடத்தைப் பிடித்த ரஜினி, படங்களில் என்ன செய்தார்? குடித்தார். புகைத்தார். அவரே கற்பழித்தார்.எம்.ஜி.ஆரின் கேரக்டருக்கு நேரெதிரான கேரக்டர்களையே செய்தார். ஆனாலும் மக்கள் அவரையே எம்.ஜி.ஆரின் இடத்தில் வைத்தார். எந்தவொரு இடத்திலும்/படத்திலும் ரஜினி எம்.ஜி.ஆரின் ஸ்டைலையோ புகைப்படத்தையோ காட்டி வளரவேயில்லை. (எம்.ஜி.ஆர் வேறொரு நடிகருக்கே தன் முழுஆதரவைத் தந்தார்.ஆனாலும்...)சினிமாவுல அதிசயங்களில் இதுவும் ஒன்று.
ஆனால் இன்று ரஜினியின் இடத்தைப் பிடிக்க நினைக்கும் ஹீரோக்கள் அப்பட்டமாக ரஜினியைக் காப்பி அடிக்கின்றனர். எம்.ஜி.ஆரைக் காப்பி அடித்த ராமராஜன், சத்தியராஜ் போன்றோரை ஏன் மக்கள் ஒதுக்கினர்? ஒரிஜினல் எம்.ஜி.ஆர் படங்களே இருக்கும்போது டூப்ளிகேட் எம்.ஜி.ஆர் படங்கள் தேவையில்லை என்பதாலேயே. அப்படி இருக்கும்போது இந்த டூப்ளிகேட் ரஜினிகளை ஒரிஜினலின் இடத்தில் மக்கள் வைப்பார்களா என்பதே சந்தேகம்தான். எம்.ஜி.ஆரின் காலத்திற்கும் ரஜினியின் காலத்திற்கும் இடையில் ஜெய்கணேஷ், சிவகுமார், விஜயகுமார் என ‘சில்லுண்டி’ நடிகர்களின் காலமும் இருந்த்து. இன்றைய விஜய், அஜித் போன்றோரும் அந்த வரிசையிலோ அல்லது டூப்ளிகேட் எம்.ஜி.ஆர்கள் வரிசையிலோ வைக்கப்படுவார்களா என்பது அவர்கள் எவ்வளவு நாள் சினிமாவில் நீடித்து வெற்றிகரமான ஹீரோவாக இருக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தது.
இப்போது அடிப்படை விஷயமான சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தைக்கு வருவோம். சூப்பர் ஸ்டார் என்பதை சினிமாவின் நம்பர்-1 ஸ்டார் என்றே அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். உண்மையில் அது அப்படித்தானா?
எம்.ஜி.ஆரின் காலத்தில் சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டதா? அந்த வார்த்தைக்கு இன்று உள்ள மரியாதை அன்று இருந்ததா? இல்லை என்பதே பதில். சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கலைப்புலி தாணுவால் ரஜினிக்கு கொடுக்கப்பட்டபோதுகூட அதுவொரு புகழ்ச்சி வார்த்தை மட்டும்தான். இன்று இருக்கும் அர்த்தம் அன்று அதற்கு இல்லை. பின் எப்படி இன்று கவர்ச்சிகரமான வார்த்தையாக அது மாறியது?
அது ரஜினிகாந்த் என்ற தனி மனிதனின் கடும் உழைப்பாலேயே நிகழ்ந்தது. தன் உடல்நலத்தை முழுதாகக் கெடுத்துக்கொண்டு இரவும் பகலும் அயராது வெறித்தனத்துடன் நடித்தார் ரஜினி. தொடர்ந்து தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைக் கொடுத்து அவர்களின் செல்லப்பிள்ளையாக மாறினார். எப்போதும் படிக்காதவனாக, சாமானிய மனிதனாக படங்களில் தன் கேரக்டரை வடிவமைத்துக் கொண்டார். எந்தவொரு சூழ்நிலையிலும் எம்.ஜி.ஆர் எனும் பிரமாண்டத்தின் நிழலில் ஒதுங்காமல் தனக்கான சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பினார்.
இவ்வளவும் செய்து, எம்.ஜி.ஆரின் இடத்தில் அமர்ந்தபொழுது எம்.ஜி.ஆரின் பட்டங்களான ‘மக்கள் திலகம்’ மற்றும் ‘புரட்சித் தலைவர்’ போன்ற பட்டங்களை தனக்கு சூடிக்கொள்ளாமல் தாணு கொடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையே வைத்துக்கொண்டார்.
ரஜினி ஏன் எம்.ஜி.ஆரின் பட்டத்திற்கு ஆசைப்படவில்லை? ஏனென்றால் தன்னைப் போன்றே பல வருடங்களாகத் தன் சொந்த உழைப்பின் மூலம்தான் எம்.ஜி.ஆர் அந்தப் பட்டங்களை அடைந்தார் என ரஜினிக்குத் தெரியும். ஒரு உழைப்பாளி மற்றொரு உழைப்பாளிக்குத் தந்த மரியாதை அது.
The making of Endhiran |
அது ஏன் இன்றைய நடிகர்களுக்குப் புரிவதில்லை? இவர்களும் தனக்கென உள்ள பட்டங்களுக்கான மரியாதையை தன் சொந்த உழைப்பால் ஏன் உண்டாக்கக் கூடாது? 60 வயதைக் கடந்தும் இன்னும் தனக்கான மரியாதையைத் தக்க வைத்திருக்கும் ரஜினிகாந்த் என்ற பெரியவருக்கு இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் தருகின்ற மரியாதை சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அவரிடமே விட்டு விடுவதுதான்.
எனவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்விக்கு அன்றும் இன்றும் என்றும் ரஜினிகாந்த் என்பதே சரியான பதிலாக இருக்கும்.
எனவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்விக்கு அன்றும் இன்றும் என்றும் ரஜினிகாந்த் என்பதே சரியான பதிலாக இருக்கும்.
ReplyDelete.....அப்படி போடு அருவாளை! சூப்பர்! சூப்பர்! சூப்பர்!!!
@Chitra: திர்நெவேலிக்காரவுக எப்பவும் அருவா நினப்போடதான் இருப்பீகளா..நன்றிக்கா.
ReplyDeleteஅத்தனையும் உண்மை அருமையான பதிவு.
ReplyDeleteநல்ல பதிவு தலைவர் ஒருவர் தான் ஒரே ஒரு சந்திரமுகி ஒரே ஒரு அந்நியன் ஒரே ஒரு எந்திரன் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அஜித்,சிம்பு ரசிகன்
ReplyDeleteநல்லா சொல்லிருக்கீங்க. ரொம்ப நாளா ஆளை காணோம்?
ReplyDelete//எந்தவொரு இடத்திலும்/படத்திலும் ரஜினி எம்.ஜி.ஆரின் ஸ்டைலையோ புகைப்படத்தையோ காட்டி வளரவேயில்லை//
ReplyDeleteநாற்காலி ஆசையில ரஜினி புகழ்பாடி....அது வேலைக்காகாதுன்னு அப்புறம் எம்.ஜி.ஆர். புகழ்..(ரஜினி என்ன சி.எம்.ஆவா இருக்காரு?) எப்புடியெல்லாம் குறுக்கு வழிய யோசிக்கிறாங்க!
அருமையான பதிவு பாஸ்!
This comment has been removed by the author.
ReplyDelete@SShathiesh-சதீஷ்.: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதீஷ்.
ReplyDelete@சினிமா ரசிகன்:ஒரே ஒரு சூரியன் தான் ஊருக்கெல்லாம்னு சொல்லுங்க.
ReplyDelete@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): போலீஸ்கார், வெளிநாடு போறேன்னு அறிவிப்பு போட்டுட்டுத்தாங்க போனேன்..என்ன போலீஸ் நீங்க.
ReplyDelete@ஜீ...:குறுக்கு வழி ரொம்ப நாட்களுக்கு பயன் தராது இல்லையா..நன்றி ஜீ.
ReplyDelete@S: !!!!!!!!!!!!!!!!...நன்றி S.
ReplyDeletewhoever be the superstar, must be tamilan better this time..
ReplyDelete//அன்றும் இன்றும் என்றும் ரஜினிகாந்த்//
ReplyDelete100% righttu
//அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்விக்கு அன்றும் இன்றும் என்றும் ரஜினிகாந்த் என்பதே சரியான பதிலாக இருக்கும்//
ReplyDelete********
தலைவா....
பதிவை படித்துக்கொண்டே வந்தேன்.. ஆனா, கடைசியில் வந்த இந்த வரிகள் தான் பதிவை தூக்கி நிறுத்தியது...
அருமையான பதிவு.
ReplyDeleteநல்லதோ கெட்டதோ
கடின் உழைப்பு வெற்றி பெரும்
சூரியனும் ஒன்று தான், சந்திரனும் ஒன்று தான், சூப்பர் ஸ்டாரும் ஒன்று தான், அது நம்ம தலைவர் மட்டும் தான்.
ReplyDeleteஎம்.ஜி.ஆர்.-நடிப்பின் கடைசி காலத்தில் இருந்தபோது ரஜினி சினிமாவில் நுழைந்தாலும் இப்போது இருக்கும் இடத்தை தக்கவைக்க பெரும் போராட்டம் நிகழ்த்தினார். இப்போது உள்ளது போல மூன்று படங்களில் பஞ்ச் டயலாக், பத்து படத்தில் அடுத்த முதல்வர் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவில்லை.
ReplyDeleteஅப்படி போடு ! சூப்பர்! சூப்பர்! சூப்பர்!!!
ReplyDeleteநிதர்சனம், யாரும் யாரோட இடத்தையும் பிடிக்க முடியாது, அதுவும் தலைவரோட இடத்தை எந்த நொள்ளையனாலயும் பிடிக்க முடியாது, அருமை..
ReplyDeleteநல்லா சொல்லிருக்கீங்க.
ReplyDeleteகடை வரிதான் இத ஒரே பதில்
ReplyDeleteஅருமையான அலசல் ..!ஊர் குருவி உயர பறந்தாலும் பருந்தாகாது நண்பா! ஒரே சூரியன்,ஒரே உலகம்,ஒரே சூப்பர் ஸ்டார் ....ரஜினி!
ReplyDeleteசூப்பர் ஸ்டார் என்று மக்கள் சொல்ல வேண்டும்!!
ஒருவர் என்னானா,சின்னவயதில் லிட்டில் சூப்பர் ஸ்டார் நு தனக்கு தானே வட்சுகிட்டார்!,கொஞ்சம் இளமையான பின்னால எங் சூப்பர் ஸ்டார் என மாற்றி கொண்டார்! ,கொஞ்ச நாள்ல அவரே சூப்பர் ஸ்டார் என்று மாற்றி கொள்வார்! அப்றமா கொஞ்சம் வயசான பின்னால ஓல்ட் சூப்பர் ஸ்டார் என்று மாற்றி கொள்வாரா தெரியல! இதுல அவரோட பெயர் மாற்றம் வேற! mgr,ரஜினி என்ற மூன்றெழுத்து வரிசைல எஸ் டி ஆர்! கிடைக்காத பழத்துக்கு என்ன ஒரு ஆசை!
என்ன கொடுமை சரவணன் இது?!
எம்ஜியார், ரஜினி....அடுத்து இனி வருபவர்கள் யாராக இருந்தாலும் அது குறுகிய காலத்திற்கே. இனி நீண்ட கால நம்பர்.1 கிடையாது.
ReplyDeleteஎம்.ஜி.ஆரும் ரஜினியும் ஒன்றா?
ReplyDelete@S: அதான் உங்க பிரச்சினையா...சரி..சரி.
ReplyDelete@எல் கே:உண்மை எப்பவும் 100% ரைட்டுதானே பாஸ்.
ReplyDelete@R.Gopi: எல்லாருமா சேர்ந்து இந்தப் பதிவை தூக்கி நிப்பாட்டிட்டீங்க தல.
ReplyDelete@Speed Master: உண்மை தான்..உழைப்பே உயர்வு தரும்.
ReplyDelete@N.H.பிரசாத்:ரிப்பீட்டேய்..
ReplyDelete@ரஹீம் கஸாலி: விடுங்க பாஸ்..ஏதோ நினைப்புல அலையறாங்க..
ReplyDelete@Reddiyur: நன்றி...நன்றி.
ReplyDelete@இரவு வானம்: //தலைவரோட இடத்தை//..இப்போ மாட்டிக்கிட்டீங்களா..மே..மே!
ReplyDelete@சே.குமார்: பாராட்டிற்கு நன்றி குமார்.
ReplyDelete@A.சிவசங்கர்: ஒரே ஒரு பதில்தான் ஊருக்கெல்லாம்!!!!
ReplyDelete@deen_uk: அப்பா மாதிரியே புள்ளையை காமெடியா எடுத்துக்கோங்க பாஸ்.
ReplyDelete@nanban: நீண்ட காலத்திற்கு ஹிட் கொடுக்கும்வரை நம்பர்.1 ஆக இருக்கலாம். அது சாத்தியமா என்பதே கேள்வி!
ReplyDelete@ஐத்ருஸ்: //எம்.ஜி.ஆரும் ரஜினியும் ஒன்றா?// ச்சே..ச்சே..அவங்க ரெண்டு பேருங்க..ஒருத்தர் தொப்பி போட்டு கண்ணாடில்லாம் போட்டிருப்பாரு..இன்னொருத்தர் பளபளன்னு பளிங்கு தலையோட இருப்பாரு..
ReplyDeleteபதிவு கலக்கல், அதையும் தாண்டி //ச்சே..ச்சே..அவங்க ரெண்டு பேருங்க..ஒருத்தர் தொப்பி போட்டு கண்ணாடில்லாம் போட்டிருப்பாரு..இன்னொருத்தர் பளபளன்னு பளிங்கு தலையோட இருப்பாரு..//
ReplyDeleteஇது செம.....
சத்யராஜ், எம்.ஜி.ஆரை காப்பி அடித்தார் என்று சொல்வதை ஏற்க முடியவில்லை... அவருக்கென்று ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது...
ReplyDeleteஎப்பவும் சூப்பர்ஸ்டார் ரஜினி மட்டும்தான்னு நீங்களே முடிவு பண்ணிட்டீங்க... அதுக்கப்புறம் நாங்க என்ன சொல்றது...
யங் சூப்பர் ஸ்டார் சிம்பு???????????????????????????
ReplyDelete@எப்பூடி..: பாராட்டுக்கு நன்றி எப்பூடி.
ReplyDelete@Philosophy Prabhakaran: சூப்பர் ஸ்டாருக்கு என்ன அர்த்தம்னு சொல்லியிருக்கேனே பிரபா...
ReplyDelete@! சிவகுமார் !: உங்களோட ப்ரொஃபைல் ஃபோட்டோ இந்த கமெண்ட்டுக்கு ரொம்ப பொருத்தம்.
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDelete@! சிவகுமார் !: உங்களோட ப்ரொஃபைல் ஃபோட்டோ இந்த கமெண்ட்டுக்கு ரொம்ப பொருத்தம்
>>> Ha ha..no doubt.
பொட்டில் அறைந்தாற்போல ஒரு பதிவு...
ReplyDelete@டக்கால்டி: //பொட்டில் அறைந்தாற்போல ஒரு பதிவு// பாராட்டுக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteஎம்ஜியார் படங்களில் அழும் காட்சி வரும் போது முதலில் முகத்தை இரண்டு கைகளாலும் மூடிக் கொள்வார், அழும் சத்தம் மட்டும்தான் கேட்கும், இன்னமும் அழ வேண்டுமென்றால் கேமரா பக்கம் முகத்தைக் கட்டாமல் ஏதாவது தூணில் போய் தலையை முட்டிக் கொண்டு உடம்பை மட்டும் அழுவது போல குலுக்குவார்!! கதாநாயகிகள் இரண்டு பேர். ஒருத்தி இவராக விருப்பப் பட்டு காதலித்து கட்டிப் பிடித்து நடனமாட, இன்னொருத்தி, அதே நோக்கத்திற்க்காகவேதான் ஒரு சிறு வேறுபாடு, அந்தம்மாவை கனவு காண வச்சு, அந்த கனவில் எல்லா வேலையையும் கூச்சப் படாம பண்ணிடுவார், படம் முடியும் போது அந்தம்மாவே அண்ணா என்று கத்திக் கொண்டே ஓடி வந்து எம்ஜியாரைக் கட்டிப் பிடித்துக் கொள்வார், [அப்பவுமா, அட தேவுடா..] மக்கள் எம்ஜியாரை ராமன் என்றே நினைத்துக் கொள்வார்கள், ஏனெனில் கனவு கண்டது அவள் தப்புதானே, பாவம் அப்பாவி எம்ஜியார் என்ன பண்ணுவார், ஹா...ஹா...ஹா...
ReplyDelete@Jayadev Das:அவர் மாதிரி இமேஜ் மெயிண்டெய்ன் பண்ண ஆள் வேற யாரும் கிடையாது சார்...ஏன் சார் இன்னும் ப்ளாக் எழுதாம இருக்கீங்க..உங்க கமெண்ட் எல்லாம் கலக்கலா இருக்கு சார்..உங்களுக்கு ஒரு ஃபாலோயர் ரெடி..சீக்கிரம் களத்துல குதிங்க!
ReplyDeleteஅடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதற்கு, தெளிவான ஒரு விளக்கம் இதைப் போல வேறு எதுவும் இருக்க முடியாது.
ReplyDeleteஅடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்விக்கு அன்றும் இன்றும் என்றும் ரஜினிகாந்த் என்பதே சரி
ReplyDelete