Monday, September 12, 2011

காந்தி, நேரு, பாரதியார் எல்லாம் அயோக்கியர்கள் தானா?


இணையத்தில் அவ்வப்போது சமபந்தம் இல்லாமல் எதையாவது தேடிப் படிப்பது என் வழக்கம். இந்த முறை பாரதியார் என்று போட்டு, தேடிக்கொண்டிருந்தேன். ஏராளமான வசைகள் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்து நொந்து போய், வேறு யாரைப் பற்றியாவது படிப்போம் என்று காந்தியைத் தேடினால், நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. ’ஏன் இப்படி..’ என்று யோசித்துக்கொண்டே, வேண்டாத ஆர்வத்துடன் வரிசையாக நமது தேசத்தலைவர்கள் நேருவில் ஆரம்பித்து பெரியார் வரை தேடினால், புகழ்ச்சிக்கு இணையாக வசை மழை!

பொதுவாக இந்த மாதிரியான கட்டுரைகள் எழுத கொள்கை சார்ந்த நியாயங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் என்னுடைய கவனம் எல்லாம் பின்னூட்டங்களின் மீதே சென்றது. இதில் இன்னும் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், சிலர் ஏறக்குறைய எல்லா வசைப் பதிவுகளுக்கும் என்று ஆமாம்..சாமி போட்டிருந்தது தான். பொதுவாக பாரதியை திட்டுவோர், பெரியாரை திட்டுவதில்லை. பெரியாரைத் திட்டுவோர் காந்தியைத் திட்டுவதில்லை என திட்டுவதிலும் ஒரு கொள்கை இருக்கும். ஆனால் வெறும் வம்பளப்பாக, திண்ணைப் பேச்சாக இந்த வசைகள், தமிழ் இணைய உலகில் கொட்டிக்கிடக்கின்றன.

வருங்காலத்தில் இணையமே முக்கிய ஊடகமாக, தகவல் களஞ்சியமாக ஆகும்போது, நாம் நம் சந்ததிகளுக்கு இந்த வசைகளைத் தான் தரப்போகின்றோமா என்று யோசிக்க ஆரம்பித்தேன். பொதுவாகவே அதிக ஹிட்ஸ் வாங்க, ஏதேனும் ஒரு தலைவரை திட்டினால் போதும் என்பதே இங்குள்ள நிலைமை. 

ஹிட்ஸ் விஷயத்தில் தவறு பதிவர் பக்கம் என்று குறுகிய நோக்கில் நான் எப்போதும் நினைப்பதில்லை. ஹிட்ஸ் என்பது மக்கள் எந்த விஷயத்தின் மேல் ஆர்வமாக உள்ளார்கள் என்று அறிய உதவும் அற்புதமான விஷயம். எனவே தேசத்தலைவர்களை திட்டும் பதிவுகள், அதிக ஹிட்ஸ் வாங்குகிறதென்றால், நம் மக்கள் அதன்மீது விருப்பமாக இருக்கிறார்கள் என்றே அர்த்தம் ஆகின்றது. அப்படி அந்த மக்களுக்கு, இணைய வாசகர்களுக்கு நம் தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் மேல் என்ன கடுப்பு என்று ஆச்சரியமாக உள்ளது.

இதைப் பற்றி யோசிக்கையில் என்னுடன் கோவையில் வேலை பார்த்த பெண்ணின் ஞாபகம் வந்தது. வள்ளி என்று பெயர் வைத்துக்கொள்வோம். (அய்யா, இது புனை பெயருங்!). ஒருமுறை எதற்கோ காந்தி பற்றி பேச்சு வந்தபோது, அவர் திடீரென ‘ஐ ஹேட் காந்தி’ என்றார். எனக்கு இது மாதிரியான காந்தி பற்றிய எதிர்ப்பு சொற்கள் பழக்கமானவை என்பதால், நிதானமாக ‘ஏன்மா அப்படி?’ என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் தான் அட்டகாசமாய் இருந்தது. ‘ஐ டோண்ட் நோ..பட் சம்திங் இஸ் ராங் வித் தட் பெர்சன்..ஐ டோண்ட் லைக் ஹிம்’ என்று ஆவேசமாக மீண்டும் சொன்னார். 

ஒருவரை வெறுக்க ஏதேனும் காரணம் இருக்க வேண்டும் என்பதே பொதுவான விதி. ஆனால் எவ்விதக் காரணமும் இல்லாமல் நம் தேசத் தலைவர்கள் மீது ஏன் இப்படி வெறுப்பு என்று யோசித்தவாறே, ‘எப்போதெல்லாம் உனக்கு காந்தி பற்றி வெறுப்பு/கோபம் வருகிறது?’ என்றேன். அந்தப் பெண்ணும் அசராமல் ‘ எப்போதெல்லாம் காந்தி பற்றி கேள்விப்படுகிறேனோ, அப்போதெல்லாம் ’ என்று சொன்னார்.

‘அப்படி என்னம்மா கேள்விப்படுகிறாய்?” என்று கேட்டால் ‘அவரு நல்லவரு..வல்லவரு..போராடுனாரு-ன்னு அதே பாட்டு. சின்ன வயசுல இருந்து கேட்டுச் சலிச்ச அதே பல்லவி. காந்தி என்னெல்லாம் அயோக்கியத் தனம் பண்ணியிருக்காரு தெரியுமா?’ என்றார்.

‘தெரியாதே..சொல்லும்மா’ என்றேன்.

‘பகத்சிங் தூக்கில் தொங்க நாள் குறிச்சதே காந்தி தான். அவரை விடுதலை செய்ய சின்ன துறும்பைக்கூட அவர் தூக்கிப்போடலை’ என்றார்.

இதுவும் நமக்கு பழக்கம் என்பதால் ‘இல்லையம்மா..அவர் கடிதம் எல்லாம் எழுதி மன்றாடிக் கேட்டுக்கொண்டார்..ஆனாலும் பிரிட்டிஷார் அதைக் கேட்கவில்லை’ என்றேன். அதை அந்தப் பெண் நம்பவேயில்லை. ‘இல்லை சார், காந்தி பற்றி உங்களுக்கு சரியாத் தெரியலை’ என்று தீர்ப்பு சொல்லி விவாதத்தை முடித்துக் கொண்டார். (அந்தக் கடிதம் இப்போது இங்கே கிடைக்கிறது)

இப்போது இந்த பெரும்பாலான படித்த சமூகத்தினர் நம் தேசத்தலைவர்கள் மீது, இத்தகைய அருவறுப்பையே கொண்டிருக்கிறார்கள். அதன் வெளிப்படையான ஆதாரமே, இணையத்தில் கட்டுரைகளிலும், பின்னூட்டத்திலும் குவியும் வசைகள். அந்தப் பெண்ணும் இப்போது எங்காவது ஆவேசமாக பின்னூட்டம் போட்டுக்கொண்டிருக்கலாம். இந்த மனநிலைக்கான காரணம் என்ன என்று பல நாட்கள் யோசித்திருக்கிறேன். அப்படி என்ன தவறு, நம் தலைவர்கள் செய்து விட்டார்கள் என்று குழம்பி இருக்கின்றேன்.

காந்தி போன்றோர் தீவிரமாக தேசவிடுதலைக்குப் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் நாம் (அதாவது நம் தாத்தா/பாட்டனார்) என்ன செய்துகொண்டிருந்தோம் என்ற கேள்வியை முதலில் கேட்டுக்கொள்வது நம்மை சாந்தப்படுத்தும். எதுவுமெ செய்யாமல் இப்போது போலவே அப்போதும் ‘தானுண்டு..தன் வேலையுண்டு’ என்று தான் இருந்தோமா என்று விசாரித்து அறிந்து கொள்வது இன்னும் அமைதியைக் கொடுக்கும். அந்த அமைதியோடு, கீழ்க்கண்ட இரு விஷயங்கள் பற்றி, யோசிக்கலாம்...

முதலாவது காரணம்...பதின்ம வயது மனநிலை (டீன் ஏஜ் மெண்டாலிட்டி!)....

நமக்கு சிறுவயது முதலே பல விஷயங்கள் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. சக்தி மிகுந்த கடவுள், அக்கறை மிகுந்த தன்னலமற்ற தலைவர்கள் என்று பல விஷயங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நமக்கு போதிக்கப்படுகின்றன. நாம் பதின்ம வயதில் நுழைந்த உடன், நாம் நமது முந்தைய தலைமுறையை விட புத்திசாலிகள் என்ற முடிவுக்கு வருகின்றோம். 

அந்த முன்முடிவுடன் அதுவரை போதிக்கப்பட்டவைகளை மூர்க்கமாக வெறுக்கத் தொடங்குகிறோம். ‘அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை..நாம் படித்தவர்கள்..நமக்கு எல்லாம் தெரிகிறது’ என்ற முடிவுக்கு வருகின்றோம். பதின்ம வயதில் கடவுள்-மறுப்புக் கொள்கைக்குள் போகாமல், அதைத் தாண்டுபவர்கள் வெகு குறைவே.

நம் ஈகோவின் காரணமாக பதில் அளிக்க முடியாக் கேள்விகளை பெரியோரிடம் கேட்கின்றோம். ஏன் பதில் அளிக்க முடியாக் கேள்விகள் என்றால், அவற்றை வார்த்தையால் விளங்க வைக்க முடியாது என்பதால் தான். அந்தப் பருவத்தில் எதெல்லாம் போற்றப்ப்டுகின்றனவோ, அதையெல்லாம் எதிர்ப்பதே அறிவுஜீவித்தனம் என்ற ‘தெளிவுக்கு’ வருகின்றோம். பலரும் பதின்ம வயது தாண்டியதும், மெதுவாக உண்மையை உணர்கின்றனர். தங்கள் அபத்தமான ஆட்டத்தை நினைத்து வெட்க்கப்படுகிறார்கள். எனவே தன் பிள்ளைகளிடம் அதே நல்ல விஷயங்களை போதிக்கிறார்கள். அந்தப் பிள்ளைகளும் ஒருநாள் ‘போப்பா..உனக்கு ஒன்னுமே தெரியலை’ என்று சொல்லும் என்றும் நினைவில் கொள்கிறார்கள்.

அப்படி பதின்ம வயது மனநிலையை தாண்டும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. அறிந்தும், அறியாமலும் நமக்குள் அந்த மனநிலை இருந்துகொண்டே இருக்கின்றது. அதன் வெளிப்பாடே இத்தகைய ஏளன வசைச் சொற்களாக இங்கே கொட்டப்படுகின்றது.

இரண்டாவது முக்கியக் காரணம்...

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவனை வானுறையும் தெய்வத்துல் வைக்கும் நம் பண்பாட்டை விட்டு, நாம் விலகிச் செல்லும் துர்ப்பாக்கிய நிலை.

பொதுவாகவே சிறு உதவி செய்தோரைக் கூட ‘தெய்வம் மாதிரி வந்து உதவி செஞ்சாருய்யா’ என்று சொல்வது நம் மரபு. ’ஒவ்வொரு உயிரிலும் உறைகிறான் இறைவன் ‘ எனும் இந்து மத தத்துவத்தின் எளிமையான வெளிப்பாடு அது. இந்த நாகரீக உலகில், மீடியாக்களின் வெளிச்சத்தில் பல சுவாமிகளின் முகத்திரை கிழிக்கப்படுகின்றது. மீடியாக்களுக்கு ஒருவர் நல்ல துறவியாக இருப்பது செய்தியே அல்ல, ஒருவன் போலிச்சாமியாராக இருப்பதே சர்க்குலேசன் கூட்டும் செய்தி. மீடியா எப்போதும் நல்ல விஷயங்களை முன் நிறுத்துவதில்லை. (அவ்வாறு போலிச்சாமியார்கள் முகத்திரை கிழிக்கப்படுவதும் வரவேற்கத் தக்கதே..இங்கே அதன் மறைமுக விளைவுகள் மட்டுமே பேசப்படுகின்றன)

இந்து மதத்தின் ஆணிவேரை அழிக்கும் சக்திகளாக இந்த போலிச்சாமியார்கள் உருவெடுத்து வருகிறார்கள். தன்னிலும், பிற உயிரிலும் இறையைக் காணும் இந்து மதக் கோட்பாடு, மிக மோசமாக அடிவாங்கும் நேரம் இது. தவிர்க்க இயலா பேரவலமாக இது நடந்துகொண்டே உள்ளது. இந்துக்களே இதை நடத்தியும் வருகிறார்கள்.

மேலும் நமது தற்போதைய அரசியல்வாதிகளும் போலிச்சாமியார்களுக்கு இணையாக நம் நம்பிக்கையை சிதைத்து வருகிறார்கள்.

எனவே யாரெல்லாம் ஓர் அளவிற்கு மேல் போற்றப்படுகிறார்களோ, அவர்களை எல்லாம் சந்தேகப்பட வேண்டும் என்ற துரதிர்ஷ்டமான மனநிலைக்கு பெருவாரியான மக்கள், குறிப்பாக படித்த தலைமுறையினர் வந்திருக்கும் நேரம் இது. 

எனவே இந்தத் தாக்கம், நம் தலைவர்கள் மீதும் விழுகின்றது. எப்போதெல்லாம் ஒரு தலைவரைப் பற்றிய புகழுரையைக் கேட்கிறோமோ, அப்போதெல்லாம் நாம் எரிச்சலுக்கு ஆளாகின்றோம். இப்படி ஒரு மனநிலை ஒரு சமுகத்திற்கு நல்லதல்ல. ஆனாலும் நாம் அந்த நிலையிலேயே இருக்கின்றோம். 


அப்படியென்றால், நம் தலைவர்கள் எல்லோரும் நல்லவர்கள் மட்டும் தானா, அவர்களிடம் குறைகள் ஏதும் இல்லையா என்று கேட்டால், அது இருக்கவே செய்கிறது. நம்மிடம் இருப்பது போல். அவர்கள் காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களிடம் இருந்தது போல், அவர்களிடமும் இருக்கவே செய்கிறது. ஆனால் அது நாம் அவர்களை இந்த அளவிற்கு வெறுத்து ஒதுக்கும் அளவிற்கா இருக்கிறது என்றால் நிச்சயமாக இல்லை எனலாம். 

எப்படி கடுமையான ஜாதீயக் காழ்ப்புணர்ச்சியுடன் வாழ்ந்த நம் முன்னோர்களை முற்றிலும் ஒதுக்கி விடாமல், ‘அன்போடு’ அவர்களின் நல்ல பக்கங்களை மட்டும் பார்த்து பெருமிதம் கொள்கிறோமே, அதையே நம் தலைவர்கள் விஷயத்திலும் நாம் ஏன் செய்வதில்லை. ஒருவரை வெறுப்பதா, விரும்புவதா என்று எதை வைத்து முடிவு செய்வது என்றால், அய்யன் வள்ளுவன் தான் உங்களுக்கு வழி காட்ட வேண்டும் :

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் - (504)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

101 comments:

  1. படிச்சுட்டு வரேன்!

    ReplyDelete
  2. NO rain today...network probs while i comment...well done

    ReplyDelete
  3. //ஜீ... said...
    ME THE FIRST?//

    என்ன அதிசயம்..ஜீ இந்த நேரத்துல உலவுறாரு?

    ReplyDelete
  4. //• » мσнαη « • said...
    NO rain today...network probs while i comment...well done//

    அடடா..நெட் கவுத்துடுச்சா...மழை போச்சே!

    ReplyDelete
  5. @செங்கோவி
    //என்ன அதிசயம்..ஜீ இந்த நேரத்துல உலவுறாரு//
    ஆமாண்ணே! சும்மா..

    ReplyDelete
  6. //எப்படி கடுமையான ஜாதீயக் காழ்ப்புணர்ச்சியுடன் வாழ்ந்த நம் முன்னோர்களை முற்றிலும் ஒதுக்கி விடாமல், ‘அன்போடு’ அவர்களின் நல்ல பக்கங்களை மட்டும் பார்த்து பெருமிதம் கொள்கிறோமே, அதையே நம் தலைவர்கள் விஷயத்திலும் நாம் ஏன் செய்வதில்லை.//

    முற்றிலும் நல்லது, முழுதும் கெட்டது என்று புராணங்களிலும் இதிகாசங்களிலும் வேண்டுமென்றால் இருக்கலாம், நிஜ வாழ்கையில் இருக்காது. எந்த ஒரு விடயத்திலும் இருக்கும் நல்லதை பார்க்க கற்றுக்கொண்டால் வாழ்க்கை இனிமையாகும், சிந்தனையை தூண்டும் பஞ்ச்...

    ReplyDelete
  7. // Real Santhanam Fanz said...

    முற்றிலும் நல்லது, முழுதும் கெட்டது என்று புராணங்களிலும் இதிகாசங்களிலும் வேண்டுமென்றால் இருக்கலாம், நிஜ வாழ்கையில் இருக்காது. எந்த ஒரு விடயத்திலும் இருக்கும் நல்லதை பார்க்க கற்றுக்கொண்டால் வாழ்க்கை இனிமையாகும், சிந்தனையை தூண்டும் பஞ்ச்...//

    இதை நாம் தொடர்ந்து, பல வழியிலும் சொல்வோம் ஃபேன்ஸ்!

    ReplyDelete
  8. வருங்கால மாணவர்கள் தெரிந்து கொள்ள பள்ளி பாடத்திட்டத்தில் நம்ம கலைஞர் கொண்டு வந்த மாதிரி தன்னை பற்றிய குறிப்புகள் கொண்டு வர தெரியவில்லை நம் தன்னலம் கருதாத தியாக செம்மல்களுக்கு...

    ReplyDelete
  9. //மேலும் நமது தற்போதைய அரசியல்வாதிகளும் போலிச்சாமியார்களுக்கு இணையாக நம் நம்பிக்கையை சிதைத்து வருகிறார்கள்//

    பாவம், விட்டுருங்க, அப்புறம் யாராச்சி முதல்வன் ஸ்டைல ஒருநாள் என்னோட சீட்ல இருந்து பாருன்னு உங்ககிட்ட கேட்டுட போறாங்க..

    ReplyDelete
  10. //• » мσнαη « • said...
    வருங்கால மாணவர்கள் தெரிந்து கொள்ள பள்ளி பாடத்திட்டத்தில் நம்ம கலைஞர் கொண்டு வந்த மாதிரி தன்னை பற்றிய குறிப்புகள் கொண்டு வர தெரியவில்லை நம் தன்னலம் கருதாத தியாக செம்மல்களுக்கு...//

    அவங்க பொழைக்கத் தெரியாத ஜென்மங்கள் மோகன்..

    ReplyDelete
  11. //பதின்ம வயதில் கடவுள்-மறுப்புக் கொள்கைக்குள் போகாமல், அதைத் தாண்டுபவர்கள் வெகு குறைவே//
    ம்ம்ம்...நான் கடவுள் இல்லைன்னு பத்து வருஷம் நம்பிட்டு இப்போ இருக்கா இல்லையான்னு, கும்பிடுவதா வேணாமான்னு குழம்பிட்டு இருக்கேன்!

    ReplyDelete
  12. ///செங்கோவி said...
    // Real Santhanam Fanz said...

    முற்றிலும் நல்லது, முழுதும் கெட்டது என்று புராணங்களிலும் இதிகாசங்களிலும் வேண்டுமென்றால் இருக்கலாம், நிஜ வாழ்கையில் இருக்காது. எந்த ஒரு விடயத்திலும் இருக்கும் நல்லதை பார்க்க கற்றுக்கொண்டால் வாழ்க்கை இனிமையாகும், சிந்தனையை தூண்டும் பஞ்ச்...//

    இதை நாம் தொடர்ந்து, பல வழியிலும் சொல்வோம் ஃபேன்ஸ்!//

    கண்டிப்பா, காத்திருக்கிறோம் தலைவரே...

    ReplyDelete
  13. //
    ஜீ... said...
    //பதின்ம வயதில் கடவுள்-மறுப்புக் கொள்கைக்குள் போகாமல், அதைத் தாண்டுபவர்கள் வெகு குறைவே//
    ம்ம்ம்...நான் கடவுள் இல்லைன்னு பத்து வருஷம் நம்பிட்டு இப்போ இருக்கா இல்லையான்னு, கும்பிடுவதா வேணாமான்னு குழம்பிட்டு இருக்கேன்!//

    நாம் இப்போது கடுமையான மன வெறுப்பில் இருக்கின்றோம், நம்மைக் கைவிட்ட கடவுள் மீது..ஆனாலும் அவன் தாள் சரணம்.

    ReplyDelete
  14. //எதெல்லாம் போற்றப்ப்டுகின்றனவோ, அதையெல்லாம் எதிர்ப்பதே அறிவுஜீவித்தனம் என்ற ‘தெளிவுக்கு’ வருகின்றோம்// உண்மை!

    //எனவே யாரெல்லாம் ஓர் அளவிற்கு மேல் போற்றப்படுகிறார்களோ, அவர்களை எல்லாம் சந்தேகப்பட வேண்டும் என்ற துரதிர்ஷ்டமான மனநிலைக்கு பெருவாரியான மக்கள், குறிப்பாக படித்த தலைமுறையினர் வந்திருக்கும் நேரம் இது//

    மற்றவர்களிடம் இருந்து வித்தியாசத்தைக் காட்டவே நாம் விரும்புகிறோம்! எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டுமென்ற முனைப்புடன் இருக்கும்போது...பலபேர் சொல்லும் விஷயத்தை கட்டுடைக்கும்போது கவனத்தைப் பெரிதும் கவர முடிகிறது!

    ReplyDelete
  15. //ஜீ... said...

    மற்றவர்களிடம் இருந்து வித்தியாசத்தைக் காட்டவே நாம் விரும்புகிறோம்! எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டுமென்ற முனைப்புடன் இருக்கும்போது...பலபேர் சொல்லும் விஷயத்தை கட்டுடைக்கும்போது கவனத்தைப் பெரிதும் கவர முடிகிறது! //

    உண்மை ஜீ..’உங்களுக்கும்’ நல்ல அனுபவம் இருக்கும் போலிருக்கே!

    என்னிடம் என் அப்பா அப்போது விவாதத்தில் இறங்காமல் சொன்னார் : இப்போ, இந்த வயசுல இப்படித் தான் பேசுவே!

    ReplyDelete
  16. ஆழமான கருத்துக்கள் அடங்கிய பதிவு... அனைத்துக் கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன்.

    ReplyDelete
  17. ஆனால் அன்று சாராயம் விற்றவன் இன்று பல கல்லூரிகளுக்கு முதலாளி.... கல்வி கொடுத்த அரசு இன்று நல்லாவே ஊற்றி கொடுக்குது ?????இப்படிப்பட்ட நிலையில் வளரும் சந்ததிக்கு மனித நேயம்,தியாகத்தின் வரலாறு கிலோ என்ன விலை தான்???

    ReplyDelete
  18. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஆழமான கருத்துக்கள் அடங்கிய பதிவு...//

    அடடா..சீரியஸ் பதிவு போட்டா, அண்ணன் அடங்கிடுதாரே?

    ReplyDelete
  19. //• » мσнαη « • said...
    ஆனால் அன்று சாராயம் விற்றவன் இன்று பல கல்லூரிகளுக்கு முதலாளி.... கல்வி கொடுத்த அரசு இன்று நல்லாவே ஊற்றி கொடுக்குது ?????இப்படிப்பட்ட நிலையில் வளரும் சந்ததிக்கு மனித நேயம்,தியாகத்தின் வரலாறு கிலோ என்ன விலை தான்?//

    ஆனாலும் எளிய மக்கள் மத்தியில் மனித நேயம் வாழும் என்றே நம்புகின்றேன்.

    ReplyDelete
  20. தற்போது காங்கிரஸ் மற்றும் சோனியாவின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியக் காட்ட வழி தெரியாமல் மன்மோகன்சிங் மீது பலரும் வசை மாறி பொழிகின்றனர். ஆனால் உலகமோ அவரை இந்தியாவின் சிறந்த பிரதமர் என்கிறது.

    ReplyDelete
  21. தியாகதலைவர்களின் சிலைகளை காகங்களின் கழிப்பிடமாக மாற்றி விட்டு,காசுக்காக படத்தில் யோக்கியனாக நடிக்கும் பரதேகளின் போஸ்டருக்கு (?) பால் ஊற்றும் எம் குல சகோதரனை என்ன செய்வது???இதில் நடிகைக்கு கோயில் வேற கட்டுரானுங்கலாம் சில பக்கவாட்டு கைகள்....

    ReplyDelete
  22. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    தற்போது காங்கிரஸ் மற்றும் சோனியாவின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியக் காட்ட வழி தெரியாமல் மன்மோகன்சிங் மீது பலரும் வசை மாறி பொழிகின்றனர். ஆனால் உலகமோ அவரை இந்தியாவின் சிறந்த பிரதமர் என்கிறது.//

    மன்மோகன் ஒரு மண்ணுங்க..அதைப் பிடிச்சு பொம்மை ஆக்கி வச்சிருக்காங்க!

    ReplyDelete
  23. // » мσнαη « • said...
    தியாகதலைவர்களின் சிலைகளை காகங்களின் கழிப்பிடமாக மாற்றி விட்டு,காசுக்காக படத்தில் யோக்கியனாக நடிக்கும் பரதேகளின் போஸ்டருக்கு (?) பால் ஊற்றும் எம் குல சகோதரனை என்ன செய்வது???இதில் நடிகைக்கு கோயில் வேற கட்டுரானுங்கலாம் சில பக்கவாட்டு கைகள்...//

    அந்த மாதிரி ஆட்கள் எப்போதும் உண்டு..அவர்களுக்குத் தான் விளம்பரமே.

    ReplyDelete
  24. // » мσнαη « • said...
    தியாகதலைவர்களின் சிலைகளை காகங்களின் கழிப்பிடமாக மாற்றி விட்டு,காசுக்காக படத்தில் யோக்கியனாக நடிக்கும் பரதேகளின் போஸ்டருக்கு (?) பால் ஊற்றும் எம் குல சகோதரனை என்ன செய்வது???இதில் நடிகைக்கு கோயில் வேற கட்டுரானுங்கலாம் சில பக்கவாட்டு கைகள்...//

    அந்த மாதிரி ஆட்கள் எப்போதும் உண்டு..அவர்களுக்குத் தான் விளம்பரமே.

    ReplyDelete
  25. //ஆனாலும் எளிய மக்கள் மத்தியில் மனித நேயம் வாழும் என்றே நம்புகின்றேன்//
    எனது கடைசிப்பதிவுக்கு நீங்க போட்ட கமென்ட்டும் இப்படித்தான்...அது உண்மையே..! உணர்ந்திருக்கிறேன்!

    ReplyDelete
  26. //‘ஐ டோண்ட் நோ..பட் சம்திங் இஸ் ராங் வித் தட் பெர்சன்..ஐ டோண்ட் லைக் ஹிம்’ //
    இந்த வரிகளை வாசிக்கும்போதே ஒரு பெண்குரல் பேசுவதுபோலவே இருக்கு! அவ்வளவுக்கு 'பீட்டர்' என்கிற விஷயம் பாதிச்சிருக்கு! :-)

    ஐ டோண்ட் நோ..பட் சம்திங் இஸ் ராங் - எவ்வளவு ஈசியா யார் மேலேயும் எந்தப்பழிபோடவும் அட அட அட! எவன் கண்டுபிடிச்சானோ? :-)

    ReplyDelete
  27. வணக்கம் மாப்பிள உங்கள் கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன்.. அதே நேரத்தில் கடவுள் மறுப்புக்கொள்கை கொண்டவர்களின் பிரச்சாரத்தை பாருங்கள்.. குட்டக்குட்ட குனிபவனுக்குத்தான் குட்டுகிறார்கள் இதில நாவலர் நெடுஞ்செலியன் அவர்கள்தான் கடவுள் இல்லைன்னா அது எல்லா மத கடவுளும் இல்லைன்னு மேடைகளில் கூறி வந்தவர்.. மற்றவர்கள் ஓட்டு அரசியலுக்காக ஒரு மதத்தையே குறிவைக்கிறார்கள்.. சங்கடமான பின்னூட்டமாய் இருந்தால் நீக்கி விடுங்கள்.. ஹி ஹி 

    ReplyDelete
  28. //ஆனாலும் எளிய மக்கள் மத்தியில் மனித நேயம் வாழும் என்றே நம்புகின்றேன்//உண்மைதான்.....சாலை விபத்தின்போது தன் பணி விடுத்து உதவி செய்பவர்களில் அதிகம் எளிய மக்கள் தான்......மண்டையில் மணி அடித்து பறக்கும் நன்கு படித்த மேதாவிகள் அல்ல...ஒரு சிலரை தவிர்த்து....

    ReplyDelete
  29. ///ஜீ... said...
    //‘ஐ டோண்ட் நோ..பட் சம்திங் இஸ் ராங் வித் தட் பெர்சன்..ஐ டோண்ட் லைக் ஹிம்’ //
    இந்த வரிகளை வாசிக்கும்போதே ஒரு பெண்குரல் பேசுவதுபோலவே இருக்கு! அவ்வளவுக்கு 'பீட்டர்' என்கிற விஷயம் பாதிச்சிருக்கு! :-)

    ஐ டோண்ட் நோ..பட் சம்திங் இஸ் ராங் - எவ்வளவு ஈசியா யார் மேலேயும் எந்தப்பழிபோடவும் அட அட அட! எவன் கண்டுபிடிச்சானோ? :-)///

    இதவிடுங்க சார், ஒருநாள் இலங்கை ஜனாதிபத்தித் தேர்தல் பத்தி உங்கநாட்டு அம்மா ஒருத்தங்ககிட்ட சாட்ல பேசிக்கிட்டிருந்தேன், அந்தம்மா சரியான ராஜபக்சே வாலு மாதிரியே பேசிச்சு, அது ஏன்னு கேட்டதுக்கு, "மை ஹஸ்பண்டு லைக் பொன்சேகா, சோ ஐ டோன்ட் லைக் ஹிம்" அப்பிடின்னிச்சு.... இதெல்லாம் எங்க போய் சொல்றது...

    ReplyDelete
  30. @Real Santhanam Fanz
    //"மை ஹஸ்பண்டு லைக் பொன்சேகா, சோ ஐ டோன்ட் லைக் ஹிம்" அப்பிடின்னிச்சு.... இதெல்லாம் எங்க போய் சொல்றது//
    ஆகா! இப்பிடி வேற இருக்குதுங்களா?
    :-)

    ReplyDelete
  31. //அந்தப் பருவத்தில் எதெல்லாம் போற்றப்ப்டுகின்றனவோ, அதையெல்லாம் எதிர்ப்பதே அறிவுஜீவித்தனம் என்ற ‘தெளிவுக்கு’ வருகின்றோம்.//


    சாட்டையடி....... என் முதுகிலும் சில அடிகள் விழுந்ததை போல் உணர்கிறேன்....
    இப்படியான பதிவுகள் தான் நம்மை நாமே சுய விமர்சனம் பண்ண உதவுகிறது.

    ReplyDelete
  32. //காட்டான் said... [Reply]
    வணக்கம் மாப்பிள உங்கள் கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன்.. அதே நேரத்தில் கடவுள் மறுப்புக்கொள்கை கொண்டவர்களின் பிரச்சாரத்தை பாருங்கள்.. குட்டக்குட்ட குனிபவனுக்குத்தான் குட்டுகிறார்கள் இதில நாவலர் நெடுஞ்செலியன் அவர்கள்தான் கடவுள் இல்லைன்னா அது எல்லா மத கடவுளும் இல்லைன்னு மேடைகளில் கூறி வந்தவர்.. மற்றவர்கள் ஓட்டு அரசியலுக்காக ஒரு மதத்தையே குறிவைக்கிறார்கள்.. சங்கடமான பின்னூட்டமாய் இருந்தால் நீக்கி விடுங்கள்.. ஹி ஹி //


    காட்டான் மாமாவின் பதிவு உண்மை வரிகள்....அவரின் ஆதங்கம் எனக்கும் பல நேரங்களில் வந்ததுண்டு.....
    உடைத்து சொல்ல ஆசைதான்
    இன்னொருவர் வீட்டில் நின்று கொண்டு சண்டை போடுவது அழகு இல்லை என்று நினைக்குறேன்..... கடவுள் எதிர்ப்பு என்றாலே ஒரு குறிப்பிட்ட மத்தத்தை "மட்டும்" தான் எதிர்க்கிறது என்று நினைக்கிறார்கள்.
    எங்க அம்மம்மா ஒரு பழமொழி அடிகடி சொல்லுவா
    " இளகின இரும்பை கண்டா கொல்லன் ............... ............. போட்டு ஆட்டுவானாம்"

    ReplyDelete
  33. வணக்கம் பாஸ்! கும்புடுறேனுங்க! மிக அருமையான பதிவு சார்! இந்திய நாட்டுத் தேசத்தலைவர்கள், இந்தியாவுக்கு மட்டுமே உரியவர்கள் அல்லர்! காந்தியாகட்டும், பாரதியாகட்டும், உலகெங்கும் வாழும் தமிழர்களால் மதிக்கப்படுகிறார்கள்!

    உதாரணமாக, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கல்வி பயிலும் எல்லாக் குழந்தைகளுக்கும் இந்தியாவின் தேசத்தலைவர்களைத் தெரியும்!

    பாரதியாரின் பாடல்கள் அமெரிக்கா, லண்டன், ஃபிரான்ஸ் என எல்லா நாடுகளிலும் படிக்கப்படுகின்றன!

    எனவே உலகம் போற்றும் உத்தமர்களை அற்ப காரணங்களுக்காக விமர்சிக்கக்கூடாது என்பதே எனது கருத்து!

    ReplyDelete
  34. எனவே யாரெல்லாம் ஓர் அளவிற்கு மேல் போற்றப்படுகிறார்களோ, அவர்களை எல்லாம் சந்தேகப்பட வேண்டும் என்ற துரதிர்ஷ்டமான மனநிலைக்கு பெருவாரியான மக்கள், குறிப்பாக படித்த தலைமுறையினர் வந்திருக்கும் நேரம் இது. ///

    மிக அருமையான சிந்தனை! நல்ல கருத்து!

    ReplyDelete
  35. எப்படி கடுமையான ஜாதீயக் காழ்ப்புணர்ச்சியுடன் வாழ்ந்த நம் முன்னோர்களை முற்றிலும் ஒதுக்கி விடாமல், ‘அன்போடு’ அவர்களின் நல்ல பக்கங்களை மட்டும் பார்த்து பெருமிதம் கொள்கிறோமே, அதையே நம் தலைவர்கள் விஷயத்திலும் நாம் ஏன் செய்வதில்லை. ////

    அருமையான கேள்வி சார்!

    ReplyDelete
  36. //ஜீ... said... [Reply]
    //‘ஐ டோண்ட் நோ..பட் சம்திங் இஸ் ராங் வித் தட் பெர்சன்..ஐ டோண்ட் லைக் ஹிம்’ //
    இந்த வரிகளை வாசிக்கும்போதே ஒரு பெண்குரல் பேசுவதுபோலவே இருக்கு! அவ்வளவுக்கு 'பீட்டர்' என்கிற விஷயம் பாதிச்சிருக்கு! :-)
    //

    நம்ம ஆட்கள் நல்லா இங்கிலீஸ் தெரிஞ்சவங்கிட்ட பம்முவாங்க..ஏதாவது அரைகுறை மாட்டுச்சுன்னா அவ்ளோ தான்.

    ReplyDelete
  37. // காட்டான் said...
    வணக்கம் மாப்பிள உங்கள் கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன்.. அதே நேரத்தில் கடவுள் மறுப்புக்கொள்கை கொண்டவர்களின் பிரச்சாரத்தை பாருங்கள்.. குட்டக்குட்ட குனிபவனுக்குத்தான் குட்டுகிறார்கள் இதில நாவலர் நெடுஞ்செலியன் அவர்கள்தான் கடவுள் இல்லைன்னா அது எல்லா மத கடவுளும் இல்லைன்னு மேடைகளில் கூறி வந்தவர்.. மற்றவர்கள் ஓட்டு அரசியலுக்காக ஒரு மதத்தையே குறிவைக்கிறார்கள்.. சங்கடமான பின்னூட்டமாய் இருந்தால் நீக்கி விடுங்கள்.. ஹி ஹி //

    பண்றதெல்லாம் பண்ணிட்டு, கடைசீல ஹி..ஹி.யா?

    ReplyDelete
  38. // Real Santhanam Fanz said...
    இதவிடுங்க சார், ஒருநாள் இலங்கை ஜனாதிபத்தித் தேர்தல் பத்தி உங்கநாட்டு அம்மா ஒருத்தங்ககிட்ட சாட்ல பேசிக்கிட்டிருந்தேன், அந்தம்மா சரியான ராஜபக்சே வாலு மாதிரியே பேசிச்சு, அது ஏன்னு கேட்டதுக்கு, "மை ஹஸ்பண்டு லைக் பொன்சேகா, சோ ஐ டோன்ட் லைக் ஹிம்" அப்பிடின்னிச்சு.... இதெல்லாம் எங்க போய் சொல்றது...//

    அந்தம்மா ஒரு அரிய வாழ்க்கைத் தத்துவத்தை சொல்லியிருக்குய்யா..

    ReplyDelete
  39. துஷ்யந்தன் said...
    //அந்தப் பருவத்தில் எதெல்லாம் போற்றப்ப்டுகின்றனவோ, அதையெல்லாம் எதிர்ப்பதே அறிவுஜீவித்தனம் என்ற ‘தெளிவுக்கு’ வருகின்றோம்.//

    சாட்டையடி....... என் முதுகிலும் சில அடிகள் விழுந்ததை போல் உணர்கிறேன்....இப்படியான பதிவுகள் தான் நம்மை நாமே சுய விமர்சனம் பண்ண உதவுகிறது.//

    எல்லாம் சரி..........சைடு கேப்புல டீன் ஏஜ் கோஷ்டில ஜாயிண்ட் பண்றீங்களா?

    // காட்டான் மாமாவின் பதிவு உண்மை வரிகள்....//

    இவரு ஏன் எப்பவும் மாமா சொல்லே மந்திரம்னு சொல்றாரு?

    //எங்க அம்மம்மா ஒரு பழமொழி அடிகடி சொல்லுவா //

    ‘அவங்களோட’ அம்மாவா?....வாழ்க!

    ReplyDelete
  40. // ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
    வணக்கம் பாஸ்! கும்புடுறேனுங்க! மிக அருமையான பதிவு சார்! இந்திய நாட்டுத் தேசத்தலைவர்கள், இந்தியாவுக்கு மட்டுமே உரியவர்கள் அல்லர்! காந்தியாகட்டும், பாரதியாகட்டும், உலகெங்கும் வாழும் தமிழர்களால் மதிக்கப்படுகிறார்கள்!

    உதாரணமாக, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கல்வி பயிலும் எல்லாக் குழந்தைகளுக்கும் இந்தியாவின் தேசத்தலைவர்களைத் தெரியும்!

    பாரதியாரின் பாடல்கள் அமெரிக்கா, லண்டன், ஃபிரான்ஸ் என எல்லா நாடுகளிலும் படிக்கப்படுகின்றன!

    எனவே உலகம் போற்றும் உத்தமர்களை அற்ப காரணங்களுக்காக விமர்சிக்கக்கூடாது என்பதே எனது கருத்து! //

    ஐன்ஸ்டீன், நெல்சன் மண்டேலே கூட பாராட்டிவிட்டார்கள் காந்தியை..நம்ம ஆட்களுக்குத் தான் இன்னும் மனசு வரவில்லை!

    ReplyDelete
  41. // ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
    எப்படி கடுமையான ஜாதீயக் காழ்ப்புணர்ச்சியுடன் வாழ்ந்த நம் முன்னோர்களை முற்றிலும் ஒதுக்கி விடாமல், ‘அன்போடு’ அவர்களின் நல்ல பக்கங்களை மட்டும் பார்த்து பெருமிதம் கொள்கிறோமே, அதையே நம் தலைவர்கள் விஷயத்திலும் நாம் ஏன் செய்வதில்லை. ////

    அருமையான கேள்வி சார்! //

    நன்றி மணி.

    ReplyDelete
  42. வந்தனம் மாம்ஸ்

    ReplyDelete
  43. உங்கள் பதிவை முழுமையாக வாசித்தேன். நன்றி

    ReplyDelete
  44. தமிழ்வாசி - Prakash said... [Reply]
    உங்கள் பதிவை முழுமையாக வாசித்தேன். நன்றி//

    நாங்களெல்லாம் அரைகுறையா வாசிககிறமாம். மாப்பிளை பத்தி வைச்சிட்டு போறார்.

    ReplyDelete
  45. ///ஹிட்ஸ் விஷயத்தில் தவறு பதிவர் பக்கம் என்று குறுகிய நோக்கில் நான் எப்போதும் நினைப்பதில்லை. ஹிட்ஸ் என்பது மக்கள் எந்த விஷயத்தின் மேல் ஆர்வமாக உள்ளார்கள் என்று அறிய உதவும் அற்புதமான விஷயம். எனவே தேசத்தலைவர்களை திட்டும் பதிவுகள், அதிக ஹிட்ஸ் வாங்குகிறதென்றால், நம் மக்கள் அதன்மீது விருப்பமாக இருக்கிறார்கள் என்றே அர்த்தம் ஆகின்றது. அப்படி அந்த மக்களுக்கு, இணைய வாசகர்களுக்கு நம் தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் மேல் என்ன கடுப்பு என்று ஆச்சரியமாக உள்ளது.///

    இது உண்மையான யாதார்த்தம் பாஸ்

    ReplyDelete
  46. ’ஏன் இப்படி..’ என்று யோசித்துக்கொண்டே, வேண்டாத ஆர்வத்துடன் வரிசையாக நமது தேசத்தலைவர்கள் நேருவில் ஆரம்பித்து பெரியார் வரை தேடினால், புகழ்ச்சிக்கு இணையாக வசை மழை//

    தமிழர்களின் பூர்விக குணம் என்ன தெரியுமா?
    நையாண்டி செய்தல்,
    வசைபாடுதல் தான் பாஸ்.,

    ஆகவே ஓசியில இணையம் கிடைச்சால் என்ன பண்ணுவானுங்க நம்ம ஆளுங்க,

    தாம் ஏதோ யோக்கியர்கள் போலக் காட்டுவதற்காக இப்படியான புரட்சிகரமான சிந்தனைகளை விமர்சனம் என்ற பெயரில் வசை பாடி வெளியிடுவார்கள் பாஸ்..

    அது தான் வரலாற்றுச் சிறப்பு மிக்க பெரியோர்கள் விடயத்திலும் இடம் பெறுகின்றது.

    ReplyDelete
  47. சிலர் ஏறக்குறைய எல்லா வசைப் பதிவுகளுக்கும் என்று ஆமாம்..சாமி போட்டிருந்தது//

    இப்படியும் கமெண்டு போடலாம் என்று பதிவுலகில் ஒரு ரூல்ஸ் இருக்கில்லே...
    அதனோட விளைவு தான் இது.

    ReplyDelete
  48. வருங்காலத்தில் இணையமே முக்கிய ஊடகமாக, தகவல் களஞ்சியமாக ஆகும்போது, நாம் நம் சந்ததிகளுக்கு இந்த வசைகளைத் தான் தரப்போகின்றோமா என்று யோசிக்க ஆரம்பித்தேன். பொதுவாகவே அதிக ஹிட்ஸ் வாங்க, ஏதேனும் ஒரு தலைவரை திட்டினால் போதும் என்பதே இங்குள்ள நிலைமை. //

    ஹே...ஆமா பாஸ்...ஏன் திட்டுகிறோம் என்று வெளக்கமே தெரியாமல் திட்டிக் கொண்டிருப்பார்கள்.
    பதிவுலகில் கூட இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் தான் அதிமாக திட்டு வாங்குகிறார்..

    வேதனையான விடயம்,

    ReplyDelete
  49. அதிக ஹிட்ஸ் வாங்குகிறதென்றால், நம் மக்கள் அதன்மீது விருப்பமாக இருக்கிறார்கள் என்றே அர்த்தம் ஆகின்றது. அப்படி அந்த மக்களுக்கு, இணைய வாசகர்களுக்கு நம் தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் மேல் என்ன கடுப்பு என்று ஆச்சரியமாக உள்ளது.//

    இல்லை நண்பா,
    இவ் இடத்தில் திட்டும் பதிவுகளில் அவ்வாறு என்ன தான் எழுதியிருக்கிறார்கள் எனும் நோக்கத்தில் கூட்டம் அலை மோதும் அல்லவா...

    அதனால் தான் அவர்களுக்கு ஹிட்ஸ் அதிகரிக்கிறது நண்பா.

    ReplyDelete
  50. என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் தான் அட்டகாசமாய் இருந்தது. ‘ஐ டோண்ட் நோ..பட் சம்திங் இஸ் ராங் வித் தட் பெர்சன்..ஐ டோண்ட் லைக் ஹிம்’ என்று ஆவேசமாக மீண்டும் சொன்னார்.//

    இது செம காமெடி ஐய்யா..
    இதனைத் தான் மூளைச் சலவை என்று சொல்லுவார்களோ?
    காரணம் ஒருவரைப் பிடிக்கக் கூடாது எனும் அடிப்படையில் சொல்லி வளர்க்கப்பட்டிருக்கலாம்.

    அல்லது அவரது அறியாமையின் காரணமாக காந்தி எதிர்ப்பு வாதம் என்ற ஒன்று அவரிடம் ஊட்டப்பட்டிருக்கலாம்.
    இதனால் தான் ஏன் வெறுக்கிறோம் என்று தெரியாமல் வெறுக்கின்றார் போல இருக்கிறதே..

    ReplyDelete
  51. முதலாவது காரணம்...பதின்ம வயது மனநிலை (டீன் ஏஜ் மெண்டாலிட்டி!)....//

    ஆமாம் பாஸ்,
    இது உண்மை தான், பதின்ம வயதில் இப்படியான விடயங்களை மனதில் பதியச் செய்யும் படி, பசுமரத்தாணி போலப் பெரியோர்கள் சொல்லிக் கொடுப்பதும் இதற்கான காரணம் ஆகின்றது.

    ReplyDelete
  52. எனவே யாரெல்லாம் ஓர் அளவிற்கு மேல் போற்றப்படுகிறார்களோ, அவர்களை எல்லாம் சந்தேகப்பட வேண்டும் என்ற துரதிர்ஷ்டமான மனநிலைக்கு பெருவாரியான மக்கள், குறிப்பாக படித்த தலைமுறையினர் வந்திருக்கும் நேரம் //

    அவ்...இது செம பாயிண்ட்..

    ReplyDelete
  53. ஆனால் ஒருவரைப் பற்றிய தவறான விடயங்கள் இருந்தால் அவரைப் பற்றி விமர்சிக்கலாம். அத் தவறுகளைச் சுட்டி விளக்கலாம்.
    ஆனால் அவரைப் பற்றி வசைபாடுதல் என்பது தவறு தான் நண்பா.,

    இக் கருத்துக்களோடு நானும் முழுமையாக உடன்படுகிறேன்.

    ReplyDelete
  54. அருமையான கருத்துகளை அலசியிருக்கீங்க பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  55. ரொம்ப நல்ல நல்ல விசயம்...
    யோசிக்க வேண்டிய
    கருத்துக்கள் .....

    ReplyDelete
  56. நண்பா இங்கே ஒருவன் கருத்து சொன்னா அவன் சொன்னது என்னன்னு யாரும் பார்ப்பதில்லை. சொன்னவர் யாரு, அவர் மேல் ஜாதியா, கீழ் ஜாதியா, கருப்பா சிவப்பான்னுதான் பார்க்கிறார்கள் அதான் பிரச்சனையே. என் நண்பரேகள் பலருக்கும் காந்தி உள்ளிட்டோரை பிடிப்பதில்லை. இதற்கு சில விஷமிகளின் அவதூறு பிரச்சாரமே காரணம்.

    ReplyDelete
  57. //எப்படி கடுமையான ஜாதீயக் காழ்ப்புணர்ச்சியுடன் வாழ்ந்த நம் முன்னோர்களை முற்றிலும் ஒதுக்கி விடாமல், ‘அன்போடு’ அவர்களின் நல்ல பக்கங்களை மட்டும் பார்த்து பெருமிதம் கொள்கிறோமே, அதையே நம் தலைவர்கள் விஷயத்திலும் நாம் ஏன் செய்வதில்லை.//


    இன்னும் நிறைய துரைகள் குறையை சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர் சகோ.... நல்லதை ஒரு காலும் அவர்கள் சொல்லுவதுமில்லை..... செய்யப்போவதுமில்லை... அவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் நல்லது செய்ததை எடுத்து சொன்னால் தான் பின்னால் வரும் ஜெனரேசன்...அது போல சேவை செய்யும் மனப்பான்மை மனதுக்குள் வளர்த்துகொள்வார்கள்... பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  58. // தமிழ்வாசி - Prakash said... [Reply]
    உங்கள் பதிவை முழுமையாக வாசித்தேன். நன்றி//
    இன்னிக்குத் தான் முழுசா வாசிச்சார் போல...!

    ReplyDelete
  59. KANA VARO said... [Reply]
    // வந்தனம் மாம்ஸ் //

    வணக்கம்.

    //தமிழ்வாசி - Prakash said... [Reply]
    உங்கள் பதிவை முழுமையாக வாசித்தேன். நன்றி//
    நாங்களெல்லாம் அரைகுறையா வாசிககிறமாம். மாப்பிளை பத்தி வைச்சிட்டு போறார். //

    ஹா..ஹா..அவர் சீரியஸ் கட்டுரை படிச்சா ஷாக் ஆகிடுவாரு..அதான் அப்படி!

    ReplyDelete
  60. // K.s.s.Rajh said... [Reply]
    ///ஹிட்ஸ் விஷயத்தில் தவறு பதிவர் பக்கம் என்று குறுகிய நோக்கில் நான் எப்போதும் நினைப்பதில்லை. ஹிட்ஸ் என்பது மக்கள் எந்த விஷயத்தின் மேல் ஆர்வமாக உள்ளார்கள் என்று அறிய உதவும் அற்புதமான விஷயம். எனவே தேசத்தலைவர்களை திட்டும் பதிவுகள், அதிக ஹிட்ஸ் வாங்குகிறதென்றால், நம் மக்கள் அதன்மீது விருப்பமாக இருக்கிறார்கள் என்றே அர்த்தம் ஆகின்றது. அப்படி அந்த மக்களுக்கு, இணைய வாசகர்களுக்கு நம் தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் மேல் என்ன கடுப்பு என்று ஆச்சரியமாக உள்ளது.///

    இது உண்மையான யாதார்த்தம் பாஸ்//

    ஆமாம் கிஸ் ராஜா..ஹிட்ஸ் என்பது பதிவரை அளவிடும் அளவுகோலாக பலரும் நினைக்கின்றார்கள். உண்மையில் அது நம் மக்களின் மனநிலையை அல்லவா காட்டுகிறது?

    ReplyDelete
  61. நிரூபன் said... [Reply]

    // தமிழர்களின் பூர்விக குணம் என்ன தெரியுமா?
    நையாண்டி செய்தல்,
    வசைபாடுதல் தான் பாஸ்., //

    அது சரி.

    // இல்லை நண்பா,
    இவ் இடத்தில் திட்டும் பதிவுகளில் அவ்வாறு என்ன தான் எழுதியிருக்கிறார்கள் எனும் நோக்கத்தில் கூட்டம் அலை மோதும் அல்லவா...

    அதனால் தான் அவர்களுக்கு ஹிட்ஸ் அதிகரிக்கிறது நண்பா. //

    முதல்முறை ஒருவர் அப்படி எழுதும்போது கூட்டம் அலைமோதினால் நீங்கள் சொல்வது சரி..ஆனால் ஒருவர் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட தலைவரை வசைபாடுவதைப் பார்த்தபின்னும், அங்கு கூட்டம் கூடுகிறதென்றால் அதற்கு என்ன அர்த்தம்? ஒருகட்டத்தில் மக்கள் அவர் அப்படித்தான் என்று தலைப்பைப் பார்த்தே ஓட வேண்டாமா?

    //இது உண்மை தான், பதின்ம வயதில் இப்படியான விடயங்களை மனதில் பதியச் செய்யும் படி, பசுமரத்தாணி போலப் பெரியோர்கள் சொல்லிக் கொடுப்பதும் இதற்கான காரணம் ஆகின்றது.//

    சிறு வயதில் சொல்லிக்கொடுக்கப்படும் விஷ்யங்களுக்கு எதிராக திரும்பும்படி, பதின்ம வயதில் நினைக்கின்றார்கள் தானே..

    // ஆனால் ஒருவரைப் பற்றிய தவறான விடயங்கள் இருந்தால் அவரைப் பற்றி விமர்சிக்கலாம். அத் தவறுகளைச் சுட்டி விளக்கலாம்.
    ஆனால் அவரைப் பற்றி வசைபாடுதல் என்பது தவறு தான் நண்பா.,இக் கருத்துக்களோடு நானும் முழுமையாக உடன்படுகிறேன். //

    நிச்சயம் விமர்சனம் வரவேற்கப்பட வேண்டியதே..நான் சொல்வது வெறுப்பைத் தவிர வேறு காரணமே இல்லாமல் ஒருவரை வசை பாடுவதை! உதாரணம் பகத்சிங்-காந்தி மேட்டர்..அவர்கள் உண்மையை காதில் வாங்க தயாராகவே இல்லையே..

    ReplyDelete
  62. // M.R said... [Reply]
    அருமையான கருத்துகளை அலசியிருக்கீங்க பகிர்வுக்கு நன்றி நண்பரே //

    நன்றி ரமேஷ்.

    ReplyDelete
  63. // யானைகுட்டி @ ஞானேந்திரன் said... [Reply]
    ரொம்ப நல்ல நல்ல விசயம்...யோசிக்க வேண்டிய கருத்துக்கள் .....//

    உண்மை தான்..

    ReplyDelete
  64. BORED !!!WHAT HAPPENS SENGOVI??HE.........HE.....NAMAKKU INTHE SERIOUS ELLAMAAVATHU.....ONLY HANSHIKA....KAMALA KAMESH.....3SHA......IPADITHAN.....AGAIN HE HE HE

    ReplyDelete
  65. காந்தி...பாரதி...என்று கூகிளில் இந்த வருடம் தேடிய ஒரே ஆள் நீங்கள் தான்...முதலில் வாழ்த்துக்களை பிடியுங்கள்....

    ReplyDelete
  66. உங்கள் பதிவு என் மன நிலையினை அப்படியே பிரதிபலிக்கிறது...

    ReplyDelete
  67. நிறைய பேருக்கு நெகடிவ்வா எதையாவது உளறுவதே வேலை

    ReplyDelete
  68. தமிழ் மணம் ஓட்டுப்பட்டை காணோம்?

    ReplyDelete
  69. //வருங்காலத்தில் இணையமே முக்கிய ஊடகமாக, தகவல் களஞ்சியமாக ஆகும்போது, நாம் நம் சந்ததிகளுக்கு இந்த வசைகளைத் தான் தரப்போகின்றோமா என்று யோசிக்க ஆரம்பித்தேன். பொதுவாகவே அதிக ஹிட்ஸ் வாங்க, ஏதேனும் ஒரு தலைவரை திட்டினால் போதும் என்பதே இங்குள்ள நிலைமை.
    //
    பலரும் பதின்ம வயது தாண்டியதும், மெதுவாக உண்மையை உணர்கின்றனர். தங்கள் அபத்தமான ஆட்டத்தை நினைத்து வெட்க்கப்படுகிறார்கள். எனவே தன் பிள்ளைகளிடம் அதே நல்ல விஷயங்களை போதிக்கிறார்கள். அந்தப் பிள்ளைகளும் ஒருநாள் ‘போப்பா..உனக்கு ஒன்னுமே தெரியலை’ என்று சொல்லும் என்றும் நினைவில் கொள்கிறார்கள்.//


    //அப்படி பதின்ம வயது மனநிலையை தாண்டும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. அறிந்தும், அறியாமலும் நமக்குள் அந்த மனநிலை இருந்துகொண்டே இருக்கின்றது. அதன் வெளிப்பாடே இத்தகைய ஏளன வசைச் சொற்களாக இங்கே கொட்டப்படுகின்றது//

    //எப்படி கடுமையான ஜாதீயக் காழ்ப்புணர்ச்சியுடன் வாழ்ந்த நம் முன்னோர்களை முற்றிலும் ஒதுக்கி விடாமல், ‘அன்போடு’ அவர்களின் நல்ல பக்கங்களை மட்டும் பார்த்து பெருமிதம் கொள்கிறோமே, அதையே நம் தலைவர்கள் விஷயத்திலும் நாம் ஏன் செய்வதில்லை. ஒருவரை வெறுப்பதா, விரும்புவதா என்று எதை வைத்து முடிவு செய்வது என்றால், அய்யன் வள்ளுவன் தான் உங்களுக்கு வழி காட்ட வேண்டும் ://


    அற்புதமான பதிவு..மிகச் சரியானதொரு பார்வை..ஆச்சரியமூட்டும் தெளிவு..

    வாழ்த்துக்கள்.

    God Bless You.

    ReplyDelete
  70. >>செங்கோவி said... [Reply]

    // தமிழ்வாசி - Prakash said... [Reply]
    உங்கள் பதிவை முழுமையாக வாசித்தேன். நன்றி//
    இன்னிக்குத் தான் முழுசா வாசிச்சார் போல...!


    கருணை நக்கல் அடித்த பிரகாஷ் வாழ்க

    ReplyDelete
  71. நாட்டின் பிரதமரில் இருந்து, பியூன் வரைக்கும் இன்னைக்கு எல்லாம் எப்படி இருக்கானுங்கன்னு பாருங்க. எல்லாம் அயோக்கியப் பயல்கள். இந்த மாதிரிப் பயல்களுக்கு போய் பாடுபட்டாங்கலேன்னு அந்தத் தலைவர்கள் மேல கோபம் வருதோ என்னவோ!

    ReplyDelete
  72. // NAAI-NAKKS said...
    BORED !!!WHAT HAPPENS SENGOVI??HE.........HE.....NAMAKKU INTHE SERIOUS ELLAMAAVATHU.....ONLY HANSHIKA....KAMALA KAMESH.....3SHA......IPADITHAN.....AGAIN HE HE HE //

    ஆழ்ந்த கருத்துகள்..அற்புதமான நடை. நன்றி நண்பரே.

    ReplyDelete
  73. // ரெவெரி said...
    காந்தி...பாரதி...என்று கூகிளில் இந்த வருடம் தேடிய ஒரே ஆள் நீங்கள் தான்...முதலில் வாழ்த்துக்களை பிடியுங்கள்....//

    ஹன்சி, நமீயை தேடி முடிச்சுட்டேன்..போரடிச்சுச்சு...அதான்!!

    ReplyDelete
  74. பாரதியார் ஒரு கஞ்சா கேசாம், மேலும் கொஞ்சம் புத்தி சுவாதீனமில்லாமல் உலரும் பார்ட்டியாம். மதம் புடிச்ச யானைகிட்டா போகாதேன்னு சுத்தி அத்தனை பேர் கத்தியும் இவரு கேட்காம போயிருக்கார்னா பாத்துக்கோங்க.

    ReplyDelete
  75. சி.பி.செந்தில்குமார் said...

    // நிறைய பேருக்கு நெகடிவ்வா எதையாவது உளறுவதே வேலை //

    ஹா..ஹா..

    ReplyDelete
  76. // வெட்டிப்பேச்சு said...

    அற்புதமான பதிவு..மிகச் சரியானதொரு பார்வை..ஆச்சரியமூட்டும் தெளிவு..வாழ்த்துக்கள்...God Bless You.//


    வாழ்த்துக்கும் ஆசிக்கும் நன்றி பாஸ்.

    ReplyDelete
  77. /./ சி.பி.செந்தில்குமார் said...
    >>செங்கோவி said... [Reply]

    // தமிழ்வாசி - Prakash said... [Reply]
    உங்கள் பதிவை முழுமையாக வாசித்தேன். நன்றி//
    இன்னிக்குத் தான் முழுசா வாசிச்சார் போல...!


    கருணை நக்கல் அடித்த பிரகாஷ் வாழ்க //

    அதிசயமா இருக்கு...சிபி மூணு கமெண்ட் போட்டிருக்காரே!

    ReplyDelete
  78. நேருவும், மவுன்ட் பேட்டன் பிரபு வீட்டுக்காரம்மாவும் நெருக்காமா உட்கார்ந்துகிட்டு ஒருத்தருக்கொருத்தர் சிகரெட் பத்த வக்கிர கண்கொள்ளா காட்சியை இணையத்தில் கிடைச்சா பாருங்க, சரியாயிடுவீங்க. இந்த ஆள் பெத்து போட்ட இந்திரா காந்தி ஆடின ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா? அதை நினைச்சாலே போதும் இவரை வெறுப்பதற்கு.

    ReplyDelete
  79. தேசத்திற்கு காந்தி ஒன்னும் சுதந்திரம் வாங்கித் தரவில்லையாம், சுபாஷ் சந்திர போஸ் தான் வீரத்தோடு போராடினாராம், அவர் ஜெர்மனி ஜப்பான் போன்ற நாடுகளோடு சேர்ந்து தாக்குவதற்கு தயாரான போது, வெள்ளைக்காரனே பயந்து சுந்தந்திரம் கொடுத்திட்டு ஓடிட்டானாம். சொல்லிக்கிறாங்க, நாம என்ன நேரிலா பார்த்தோம்..!!

    ReplyDelete
  80. மூணுல ஒன்னை எங்கய்யா காணும் ????? :(

    ReplyDelete
  81. Jayadev Das said...
    // இந்த மாதிரிப் பயல்களுக்கு போய் பாடுபட்டாங்கலேன்னு அந்தத் தலைவர்கள் மேல கோபம் வருதோ என்னவோ! //

    ஹா..ஹா..இருக்கலாம்.

    ReplyDelete
  82. // Jayadev Das said...
    பாரதியார் ஒரு கஞ்சா கேசாம், மேலும் கொஞ்சம் புத்தி சுவாதீனமில்லாமல் உலரும் பார்ட்டியாம். மதம் புடிச்ச யானைகிட்டா போகாதேன்னு சுத்தி அத்தனை பேர் கத்தியும் இவரு கேட்காம போயிருக்கார்னா பாத்துக்கோங்க. //

    கவிஞர்களை எப்பவுமே ஒரு மாதிரியாத் தான் பார்க்காங்க நம்ம மக்கள்.

    ReplyDelete
  83. // Jayadev Das said...
    நேருவும், மவுன்ட் பேட்டன் பிரபு வீட்டுக்காரம்மாவும் நெருக்காமா உட்கார்ந்துகிட்டு ஒருத்தருக்கொருத்தர் சிகரெட் பத்த வக்கிர கண்கொள்ளா காட்சியை இணையத்தில் கிடைச்சா பாருங்க, சரியாயிடுவீங்க. இந்த ஆள் பெத்து போட்ட இந்திரா காந்தி ஆடின ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா? அதை நினைச்சாலே போதும் இவரை வெறுப்பதற்கு.//

    அவங்க சிகெரட் பத்தவச்சது பார்த்து, மத்தவங்களுக்கு ஏன் வயிறு எரியுது...இந்திராவை பிரதமர் நாற்காலிக்கு கொண்டு வந்தது நேருவா? பிள்ளை சரியில்லேன்னா, அப்பனையும் வெறுத்துடலாமா...

    ஏற்கனவே சொன்னது தான்..ஒருத்தரை வெறுக்கும் முன் அவரைப் பற்றிய எல்லா விஷயங்களையும் பார்த்து குணம்-குற்றம் நாடி, பிறகு முடிவுக்கு வரலாமே...

    செல்வந்தராக இருந்தும் சுதந்திரப் போராட்டத்தில் இறங்கியது, தொழில்சார்ந்த தொலைநோக்குத் திட்டங்களை முன்னெடுத்த வேகம், இந்தியா சுதந்திரம் வாங்கியதும் உடைந்து சிதறி விடும் என்று பலரும் நினைத்ததை உறுதியுடன் போராடி பொய்யாக்கியது என நேரு பற்றிச் சொல்ல நல்ல விஷயங்களும் உண்டெ!

    ReplyDelete
  84. //Jayadev Das said...
    தேசத்திற்கு காந்தி ஒன்னும் சுதந்திரம் வாங்கித் தரவில்லையாம், சுபாஷ் சந்திர போஸ் தான் வீரத்தோடு போராடினாராம், அவர் ஜெர்மனி ஜப்பான் போன்ற நாடுகளோடு சேர்ந்து தாக்குவதற்கு தயாரான போது, வெள்ளைக்காரனே பயந்து சுந்தந்திரம் கொடுத்திட்டு ஓடிட்டானாம். சொல்லிக்கிறாங்க, நாம என்ன நேரிலா பார்த்தோம்..!! //

    இருக்கும்..இருக்கும்..அது கூடப் பரவாயில்லை, யாருமே போராடலேன்னாலும் அவனே 1945ல ஓடி இருப்பானாம்..ஒலக போர்ல நஷ்டமாம்..இது புரியாம சொத்துல இருந்து உயிர்வரை கொடுத்த ஆளுகளை என்ன சொல்றது சொல்லுங்க்..

    ReplyDelete
  85. //Jayadev Das said...
    மூணுல ஒன்னை எங்கய்யா காணும் ????? :( //

    நல்லாப் பாருங்க..இருக்கு பாஸ்.

    ReplyDelete
  86. நல்ல அலசல்..இவர்களை பிடிக்குமா பிடிக்காதா உடனே சொல்ல தெரியலை..இன்னும் கொஞ்சம் அவர்களை பற்றி படித்து விட்டு அப்புறம் முடிவு செய்யணும்..

    ReplyDelete
  87. நல்ல கருத்துக்கள் யோசிக்க வேண்டியவை.

    ReplyDelete
  88. //அதிக ஹிட்ஸ் வாங்க, ஏதேனும் ஒரு தலைவரை திட்டினால் போதும் என்பதே இங்குள்ள நிலைமை//

    உண்மை.. ஆனால் அதிகம் ஹிட்ஸ் வாங்க இன்னும் வழி இருக்கு ஏதாவதொரு மதத்தை பற்றி கீழ்த்தரமாக எழுத வேண்டும்.. இது பகுத்தறிவாளர்களின் வழி,,

    ReplyDelete
  89. / அமுதா கிருஷ்ணா said...
    நல்ல அலசல்..இவர்களை பிடிக்குமா பிடிக்காதா உடனே சொல்ல தெரியலை..இன்னும் கொஞ்சம் அவர்களை பற்றி படித்து விட்டு அப்புறம் முடிவு செய்யணும்..//

    நல்லது...படித்துப் பார்த்துவிட்டே முடிவுக்கு வாருங்கள். எதிர்தரப்பு வாதங்களை மட்டுமல்லாது, தலைவர்களது தரப்பின் வாதங்களையும் படியுங்கள்.

    ReplyDelete
  90. // கும்மாச்சி said...
    நல்ல கருத்துக்கள் யோசிக்க வேண்டியவை.//

    MANO நாஞ்சில் மனோ said...
    அசத்தல் பாஸ்....!!!


    நன்றி..நன்றி.

    ReplyDelete
  91. // Raazi said...
    //அதிக ஹிட்ஸ் வாங்க, ஏதேனும் ஒரு தலைவரை திட்டினால் போதும் என்பதே இங்குள்ள நிலைமை//

    உண்மை.. ஆனால் அதிகம் ஹிட்ஸ் வாங்க இன்னும் வழி இருக்கு ஏதாவதொரு மதத்தை பற்றி கீழ்த்தரமாக எழுத வேண்டும்.. இது பகுத்தறிவாளர்களின் வழி,, //

    அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது நாம் அறிந்தது தானே!

    ReplyDelete
  92. எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு.
    கண்ணால் காண்பதையும் காதால் கேட்பதையும் நம்பாதே ...எதையும் தீர விசாரித்து முடிவு செய் - இதைதான் "பகுத்தறிவு " என்று திருவள்ளுவர் கூறுகின்றார் ...

    ReplyDelete
  93. அதனால ரொம்ப வருத்தபடாம மன்மத லீலைகள் பதிவை போடவும்

    ReplyDelete
  94. // Enfielder said...
    ...எதையும் தீர விசாரித்து முடிவு செய் - இதைதான் "பகுத்தறிவு " என்று திருவள்ளுவர் கூறுகின்றார் ...

    அதனால ரொம்ப வருத்தபடாம மன்மத லீலைகள் பதிவை போடவும் //

    ஹா..ஹா..ஆறுதலுக்கு நன்றி நண்பரே...நாளை போடுவோம்!

    ReplyDelete
  95. Sengovi u r good searcher in net.Leaders on freedom time start to told others personal life ugly activities after freedom to show him as a good and right person to peoples.So that next generation (our father's teen age )peoples not tell to us good news about freedom fighters.Our fathers all saw after freedom this fighters kutti karanam to caught post to rule state and center .So that our last generation did not tell about any leaders story .This is my thought

    ReplyDelete
  96. @Tirupurvalu

    காந்தி போன்றோர் பதவிக்காக போட்டி போடவில்லையே...

    மேலும் நம் பெற்றோர் ரொம்பவும் நம் தலைவர்கள் பற்றி பிள்ளைகளிடம் நேரடியாக திட்டுவதில்லை என்றே நினைக்கின்றேன்..

    ReplyDelete
  97. அருமையான விளக்கம் நல்ல பதிவு! நானும் தேடிப் பார்க்கிறேன்

    ReplyDelete
  98. நீண்ட காலத்துக்குப் பின் ஒரு நல்ல பதிவு படித்த உணர்வு. நானும் கொஞ்ச காலமாகவே இது பற்றி மண்டை கொதித்துக் கொண்டிருக்கிறேன். இப்படியே போனால் வரலாறு ஒரு வெறுப்புக்குரிய பாடமாக வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் (தலைவர்களைப் பற்றி வெறுப்பைக் கக்கும் கருத்துக்கள் பற்றிச் சொல்கிறேன்!) படித்தால் எரிச்சல் அடைகிற என் போன்றோருக்கே ஏகப்பட்ட குழப்பங்களைக் கொடுக்கும் இத்தகைய தகவல்கள், எளிதில் எதிர்மறைக் கருத்துக்களால் ஈர்க்கப் படும் ஆட்களுக்கு எப்படி இருக்கும் என்று என்னால் கற்பனையே செய்ய முடியவில்லை. பிறருக்காக வாழ்ந்தவர்களிடம் என்னதான் குறைகள் இருந்தாலும் - அவை உண்மையே என்றாலும் வரலாற்றில் அவற்றைப் பற்றிப் பெரிது படுத்தக் கூடாது. அது நம் எதிர் காலச் சந்ததிகளுக்கு வேண்டாத குழப்பத்தையும் அவநம்பிக்கையையுமே கொடுக்கும். அதனால்தான் வரலாற்றாளர்கள் பெருமைகளை மட்டும் பேசுகிறார்கள். அவர்கள் ஒன்றும் இறந்து போனவர்களின் ஆவிகளிடம் போய், காசு வாங்கிக் கொண்டு வந்து, அப்படி எழுதுவதில்லை. ஒரு மனிதனின் வரலாறு என்பது அவனுடைய நிறை-குறைகள் பற்றியது மட்டுமாக இல்லாமல், எதிர் காலச் சந்ததிகளுக்கு சமூகக் கடமைகள் மீது ஆர்வம் ஊட்டுபவையாகவும் இருக்க வேண்டும். அவர்களின் முந்தைய சந்ததியர் மீது மரியாதையும் மதிப்பும் கொடுப்பதாக இருக்க வேண்டும். அதனால்தான் அப்படிக் குறைகள் சிறிதாக்கப் படுகின்றன. இது ஓர் உளவியல் அணுகுமுறை.

    சரியான மருந்து இல்லாதபோது, ஏதோவொரு மருந்தைக் கொடுத்து, "இதுதான் உங்கள் பிரச்சினைக்கான மருந்து. சாப்பிடுங்கள். சரியாகி விடும்!" என்று நம்பிக்கை கொடுத்து அனுப்புவது கூடப் பல நேரங்களில் பிரச்சினையைச் சரி செய்ய முடியும் அல்லவா? அது மாதிரி. மற்றபடி, கற்றார் மட்டுமே கலந்து கொண்டு செய்யும் ஆய்வுகளில் கெட்ட வார்த்தையில் திட்டாமல் ஒரு தலைவரின் குறைபாடுகளைப் பற்றிப் பேசுவது தவறில்லை. ஆனால் அதைக் கற்றாரிடம் மட்டுமே செய்ய வேண்டும். இதைப் புரிந்து கொண்டுதானோ என்னவோ நிறையப் பேர் தன்னைக் கற்றார் என்று காட்டிக் கொள்வதற்காகவே இப்படியெல்லாம் சேற்றையும் சாணியையும் வாரி இறைக்கும் வேலைகளைத் தம் முழு நேரத் தொழிலாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  99. எல்லாவற்றிலுமே இரண்டு விதமான ஆட்கள் இருக்கிறார்கள். ராகிங் அனுபவித்த சிலர் அதே துன்பத்தை இன்னொருவனுக்குக் கொடுக்கக் கூடாது என நினைக்கிறார்கள். வேறு சிலர், "நான் அனுபவித்தேனே!" என்கிறார்கள். அது போலவே, வரலாற்றை அணுகும் விதத்திலும் இரு பெரும் பிரிவுகள் உள்ளன. "உண்மையோ பொய்யோ நல்ல விஷயங்களுக்காக உழைத்தவர் என்பதால் இந்த விஷயத்திலும் நல்லவர் என்றே வைத்துக் கொள்வோமே! அதுதான் நல்லது!" என்று எண்ணும் நம் போன்றோர். அப்படி நம்மால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஆட்களைப் பற்றி ஆழ்ந்த ஆய்வுகள் செய்து, அவர்களைத் தோலுரித்துக் காட்டும் வேலையில் ஈடுபாடு கொண்ட கசாப்புக் கடைக்காரர்கள் இன்னொரு சாரார். "இவ்வளவு தவறுகள் செய்த ஒருத்தரை எப்படி நீங்கள் நல்லவர் எனலாம்?" என்கிற தார்மீகக் கோபம் புரிகிறது. ஆனால், அதைப் புரிந்து கொள்ளும் ஆட்களிடம் புரிந்து கொள்ளும் விதமாகப் பேச வேண்டும். ஒட்டு மொத்தமாக ஒருத்தரின் அர்ப்பணிப்பைக் கொச்சைப் படுத்தும் விதமாக அல்லது மறக்கடிக்கும் விதமாக அம்மாதிரிப் பரப்புரைகள் நடத்துவது பெயர் வாங்க உதவும்; ஆனால் உறுதியாகச் சமூகத்துக்குப் பெரிதாக உதவாது.

    இன்னொரு விஷயம் - முடிவு சூப்பர். சரியான இடத்தில் திருக்குறளைப் பயன்படுத்தும் போதுதான் அதன் அருமையே புரிபடுகிறது. அதன் அருமை மட்டுமல்ல; வள்ளுவரின் அருமையுமே இது போன்ற இடங்களில்தான் மேலும் நன்றாகப் புரிபடுகிறது. கற்றோர் சொல்வதற்காகவே சும்மா திருவள்ளுவரைப் பெரிய ஆளாக ஏற்றுக் கொண்டிருந்த என் போன்றோருக்கு, "அவர் உண்மையிலேயே பெரிய ஆள்!" என்று உணர்த்தக் கூடிய விதமான முடிவு இது.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.