Tuesday, September 27, 2011

உண்ணாவிரதம் : காந்தி -அன்னா ஹசாரே - மற்றும்............

மீபகாலமாக உண்ணாவிரதம் பற்றி தீவிரமான விவாதங்கள் இணையத்தில் நடந்து வருகின்றன. இதற்கான பிள்ளையார் சுழி அன்னா ஹசாரேவால் போடப்பட்டது. தொடர்ந்து கூடங்குளம் உண்ணாவிரதமும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்றிவிட, உண்ணாவிரதம் பற்றி சில அடிப்படையான கேள்விகள் மேலெழுந்து வருகின்றன. 

எனவே உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய சில அடிப்படைப் புரிதல்கள் நமக்கு அவசியம் ஆகின்றன. உண்ணாவிரதத்தை ஒரு போராட்ட வடிவாக மாற்றியவர், நமக்குக் கற்றுக்கொடுத்தவர் காந்தியடிகள் தான். 
சத்யாக்கிரகப் போராட்டத்தில் முக்கிய ஆயுதமாக உண்ணாவிரதத்தை அவர் பயன்படுத்தினார். அவரது வாழ்வில் மொத்தம் 17 முறை அவர் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். அவர் முதன்முறையாக தென்னாப்பிரிக்க சத்யாக்கிரகத்தின்போதே, உண்ணாவிரதத்தை சோதித்துப் பார்த்தார். அவரது எல்லா வழிமுறைகளும் பலமுறை அவரால் சிறு அளவில் நடத்தப்ப்ட்டு, சோதிக்கப்பட்டு பின்னரே பெரிய அளவில் நடைமுறைப்படுத்தப்படும். அந்த வகையில் அவர் அவர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சில கட்டுப்பாடுகளை உருவாக்கினார். 

அவையாவன:

- யார் நமது அன்பிற்குரியவர்களோ, அவர்களுக்கு எதிராகவே / அவர்களை நோக்கியே உண்ணாவிரதம் நடத்தப்பட வேண்டும்.

- அந்த உண்ணாவிரதத்திற்கு வலுவான, குறிப்பிட்ட குறிக்கோள் இருக்க வேண்டும்.

- ஒருவரது சொந்த நோக்கங்களுக்காக / சுய நலத்திற்காக உண்ணாவிரதம் இருக்கக்கூடாது.

- மக்களால் முடியாத ஒன்றை செய்யும்படி, அந்த உண்ணாவிரதம் கோரக்கூடாது.

அவர் இவற்றின் அடிப்படையிலேயே உண்ணாவிரதம் இருந்தார். காந்தி தன் வாழ்நாளில் ஒருமுறைகூட ஆங்கிலேய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்ததில்லை. எப்போதெல்லாம் மக்கள் அஹிம்சாக் கொள்கையில் இருந்து திசை மாறுகிறார்களோ அப்போது இருந்தார். இந்து - முஸ்லிம்கள் மதக்கலவரத்தில் இறங்கியபோது, அதனை நிறுத்தக்கோரி உண்ணாவிரதம் இருந்தார். ஆம், அவர் மக்களை நோக்கியே உண்ணாவிரதம் இருந்தார். மக்களை ஒன்றுபடுத்தவே உண்ணாவிரதம் இருந்தார். ஏன் அவர் அரசுக்கு எதிரான ஆயுதமாக உண்ணாவிரத்தை பயன்படுத்தவில்லை?
கிறிஸ்துவத்தின் அடிப்படையிலேயே காந்தி உண்ணாவிரதத்தைக் கண்டடைந்தார். கிறிஸ்துவத்தின் தலைசிறந்த விஷயம் இயேசு கிறிஸ்துவின் தியாகம் தான். மக்களுக்காக அவர் சொன்ன நற்செய்திகள், அவர் சிலுவையில் அறையப்பட்ட பின்னரே மக்களிடம் சரியான முறையில் போய்ச்சேர்ந்தது. தன்னைப் பலியிட்டே கிறிஸ்துவத்தை நிலைநாட்டினார் இயேசு நாதர்.  ’தமக்காக பாரம் சுமந்த மனிதன் ‘ எனும் சித்திரமே பல லட்சக்கணக்கான மக்களின் மனசாட்சியுடன் பேசியது. காந்தி லண்டனில் படித்தபோது கிறிஸ்துவத்தின் மேல் ஆர்வம் கொண்டிருந்தார். 

அடிப்படையில் வைணவரான காந்திக்கு விரதம் என்பது பழக்கமான விஷயம். அது கொடுக்கும் மனவலிமையும் அவருக்கு நன்றாகவே தெரியும். இந்த இரண்டையும் இணைத்தே அவர் உண்ணாவிரதப்போராட்டத்தை வடிவமைத்தார். உண்ணாவிரதம் என்பது தனக்கு மனவலிமையூட்டும் அதே நேரத்தில் தன்னைச் சார்ந்தோரின் மனச்சாட்சியுடன் பேசும் என்பதை அவர் தீர்க்கமாக நம்பினார். 

அரசுக்கு மனசாட்சி கிடையாது. அரசு என்பது எப்போதும் இறுக்கமானது. அரசின் நடவடிக்கைகள் பொருளாதாரம், அந்நிய நாடுகளுடனான உறவு போன்ற சிக்கலான காரணிகளால் தீர்மானிக்கப்படுவது. சில நேரங்களில் மக்கள் விரோத நடவடிக்கையாகவும் அரசின் செயல்பாடுகள் அமைவதுண்டு. மொத்தத்தில் அரசு ஒரு இயந்திரத்தனமான அமைப்பு. 

அதனுடன் போராடுவதற்காக உண்ணாவிரதத்தை கையில் எடுத்தால் அது ஆபத்தாகவே முடியும். காந்தி அத்தகைய ஆபத்தை தன் தொண்டர்களுக்கு வழங்க விரும்பவில்லை. அப்படியென்றால் உண்ணாவிரதத்தால் அரசை ஒன்றுமே செய்ய முடியாதா என்றால், நேரடியாக ஒன்றுமே செய்யமுடியாது என்பதே உண்மை. அதனால் மாபெரும் பயன் ஒன்று உண்டு.

ஆம், மேலே சொன்னபடி அது மக்களின் மனசாட்சியுடன் பேசும். கோரிக்கையில் நியாயம் இருந்தால், அந்தக் கோரிக்கை சமூகத்திற்கு நன்மை பயக்கும் என்று இந்தச் சமூகம் நம்பினால் மக்களை ஓரணியில் திரட்டும் வல்லமை உண்ணாவிரதத்திற்கு உண்டு. உண்ணாவிரதத்தால் முடியும் ஆகச்சிறந்த காரியம் அது மட்டுமே.
ஐரோம் ஷர்மிளா
மக்களைத் திரட்டவும், மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்பவும் அது உதவும். ஜனநாயக அரசு எப்போதும் எண்ணிக்கைக்கு பயப்படும். மக்கள் எந்தவொரு விஷயத்திற்காய் கூடினாலும், அரசு இறங்கி வரும். சமூக ஒழுங்கு கெட்டுவிடக்கூடாதென்பதாலும், ஓட்டுக்காகவுமே ஜனநாயக அரசு இறங்கிவரும்.

இந்த அடிப்படையிலேயே நாம் நமக்குத் தெரிந்து நடந்த உண்ணாவிரதங்களை பார்க்க வேண்டும். 

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் ஊழலுக்கு எதிரானது. இந்திய மக்கள் ஊழலைக் கண்டு மனம் வெறுத்த நிலையில் இருக்கிறார்கள். ஊழலே இந்தியாவின் மிகப்பெரிய எதிரி என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. குவிக்க முடியா எதிர்ப்பு சக்தியாக ஊழலின் மீதான கோபம் இந்தியாவெங்கும் விரவிக்கிடக்கிறது. அன்னா ஹசாரே செய்தது, அந்த கோபத்தை ஒருங்கிணைத்தது தான். இந்தியத் தலைநகரில் பல்லாயிரக்கணக்கானோர் கூடுவது என்பது அரசிற்கு நிச்சயம் தலைவலியான விஷயம். 

மீடியாக்களின் ஆதரவுடன் நடந்த அந்தப் போராட்டத்தை உடனே மேலும் பரவிடாமல் தடுக்க வேண்டிய கட்டாயம் அரசிற்கு வந்தது. எனவே அரசும் இறங்கி வந்தது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய நிகழ்வாக அது அமைந்தது. அன்னா ஹசாரே போன்ற வயதான பெரியவர் நினைத்தால்கூட, இந்திய அளவில் மக்களை அரசுக்கு எதிராக திருப்பிவிட முடியும் என்று அரசுக்கு உணர்த்தியதே அந்தப் போராட்டத்தின் வெற்றி. உண்ணாவிரதப் போராட்டத்தால் அவ்வளவு தான் முடியும். 

வெற்றியடையாத போராட்டங்களாக ஐரோம் ஷர்மிளாவின் போராட்டமும், திலீபனின் போராட்டமும் பலரால்குறிப்பிடப்படுகின்றன. 

ஐரோம் ஷர்மிளா என்ற மாபெரும் போராளி 25 வருடங்களாக, மணிப்பூரில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அரசு அவருக்கு வலுக்கட்டாயமாக குளுக்கோஸ் ஏற்றிவருகிறது. மணிப்பூரில் இந்திய ராணுவக் கொடுமைகளை எதிர்த்தும், இந்திய ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் போராடுகின்றார். ஆனால் மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளவே இல்லை. அதற்கான முக்கியக் காரணம் மணிப்பூர் தாண்டி, வெளியே அந்தப் போராட்டம் மக்களுக்குத் தெரியவில்லை. அதன் நியாயங்கள் இங்கே சொல்லப்படவில்லை. அந்த நியாயங்களால் பிற மாநில மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை - என்ற சுயநலச் சிந்தனையும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம் வெற்றி பெறாமைக்கு முக்கியக் காரணம். தனக்கு பலன் இல்லாத விஷயங்களுக்கு போராட மக்கள் முன்வர மாட்டார்கள் என்பதே யதார்த்தம்.

ஈழத் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஈழ வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. உண்ணாவிரதப் போராட்டத்தினால் ஆகக்கூடிய காரியம், மக்களை அந்த நோக்கத்திற்காக ஒன்றுதிரட்டுவதே. திலீபனின் தியாகம் அந்த வகையில் வெற்றி பெற்றது என்றே சொல்ல வேண்டும்.

அந்த 12 நாட்களும் நல்லூர்க் கந்தசாமிக் கோயிலில் பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்றுகூட வைத்தது அந்தப் போராட்டம். புலிகளின் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக அமைந்தது திலீபனின் தியாகம். ஈழப்போராட்டம் பயங்கரவாதப் போராட்டம் அல்ல என்பதற்கு சாட்சியாக திலீபன் ஆனார்.ஆனாலும் ஏன் அந்த உயிர்த் தியாகம் காந்தி தேசத்தால் கண்டுகொள்ளப்படவில்லை என்ற கேள்வியும் நம்மிடையே எழுகிறது. 
தேசம் என்பது மக்கள் தானேயொழிய அரசு அல்ல. எப்போதும் இந்திய அரசு காந்திய அரசாக இருந்ததில்லை. சுதந்திரம் வாங்கிய நாள்முதலே ஆட்சியாளர்களுக்கு காந்தி வேண்டாத பொருளாகிப் போனார். அவர் அரசுக்குச் சொன்ன யோசனைகள் யாவும் பெரும் இம்சைகளாகவே இந்திய ஆட்சியாளர்களுக்குத் தோன்றியது. காந்தியம் வாழ்வது மக்களிடையே தானேயொழிய அரசிடம் அல்ல. 

ஒரு அரசு தன் மக்கள் ஒன்றுகூடிப் போராடினால் மட்டுமே பயப்படும். ஈழத்தில் நடந்த போராட்டம் ஈழ மக்களை ஒன்று திரட்டியும் இந்திய அரசால் கவனிக்கப்படாமல் போனதற்குக் காரணம், ஈழ மக்கள் ஒன்றுதிரளுதல் அன்னிய அரசான இந்திய அரசிற்கு ஒரு பொருட்டல்ல என்பதால் தான்.

அன்னியரான ஆங்கிலேயருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்திருந்தால், காந்தியும் அதே நிலையையே அடைந்திருப்பார். அதனாலேயே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முதல் கட்டுப்பாடாக ‘ யார் நமது அன்பிற்குரியவர்களோ, அவர்களுக்கு எதிராகவே உண்ணாவிரதம் நடத்தப்பட வேண்டும்’ என்பதை வைத்தார்.

திலீபனின் போராட்டம், தமிழர்களின் மனசாட்சியுடன் பேசியது, இன்றும் எதிர்கொள்ள முடியாத துக்கமாக அது உள்ளது. தியாகங்களின் சிறப்பே காலம் கடந்த பின்னும், வீரியம் குறையாமல் மக்களின் நினைவில் அது எழுப்பும் உரையாடல் தான். அந்த வகையில் என்றும் திலீபன் நம் மக்களுடன் பேசிக்கொண்டே தான் இருப்பார்.

இந்திய அளவிலும் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றின் நோக்கம் சக மக்களின் ஆதரவைப் பெறுவதும், அவர்களையும் தன் போராட்டத்தில் பங்கெடுக்க வைப்பதாகவுமே இருக்க வேண்டும். 

கூடங்குளத்தில் நம் மக்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது, நம் பிரதமர் அதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் ஐ.நா.சபை மீட்டிங்கிற்கு கிளம்பியதை நாம் கவனத்தில் கொள்வது அவசியம். மாநில அரசு இதில் தலையிட்டதற்குக் காரணம் போராட்டத்திற்குப் பெருகும் ஆதரவு தென்மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கலாம் என்ற அச்சமே. 

நம் அன்பிற்குரியவராக மன்மோகன்சிங் இல்லாத நிலையில், மன்மோகன்சிங்கின் அன்பிற்குரியவர்களாக நாமும் இல்லாத நிலையில் அவரை நோக்கி உண்ணாவிரதம் இருப்பது நேரடியாக எவ்விதப் பலனையும் தராது என்பதே யதார்த்தம். 

முத்தாய்ப்பாக எப்போதெல்லாம் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று காந்தி சொன்னார் என்றால்.....

- நம் அன்பிற்குரியவர்கள் ஏதேனும் ஒரு காரியத்தில் நம்மை ஏமாற்றிவிட்ட நிலையில், நம் ஆழ்ந்த வருத்தத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்த. 

- தன்னைச் சார்ந்த மக்கள் / தொண்டர்கள், தவறான காரியத்தில் ஏதோவொரு வேகத்தில் இறங்கிவிடும்போது, பரிகாரம் தேட / அவர்களை நல்வழிக்குத் திருப்ப.

- மக்களின் மனசாட்சியுடன் பேசுவதற்கான கடைசி ஆயுதமாக பயன்படுத்த.

- சண்டையிட்டுக் கொள்ளும் தனது இருதரப்பு மக்களை ஒன்றுபடுத்த. 

ஆம், மக்களை நோக்கி நடத்தப்படுவதே காந்திய உண்ணாவிரதம்.

தியாக தீபம் திலீபனுக்கு எம் வீர வணக்கங்கள்!





மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

98 comments:

  1. //TUESDAY, SEPTEMBER 27, 2011//

    அப்புடின்னா இன்னிக்கு லீலைகல்தானே வரணும்?

    ReplyDelete
  2. //உண்ணாவிரதம் : காந்தி -அன்னா ஹசாரே - மற்றும்............//

    இந்த ........ ஏதும் உள் அர்த்தம் இருக்கா?

    ReplyDelete
  3. //
    Dr. Butti Paul said...
    //TUESDAY, SEPTEMBER 27, 2011//

    அப்புடின்னா இன்னிக்கு லீலைகல்தானே வரணும்?//

    வருக..

    செவ்வாய் இரவு தானே லீலை?..

    ReplyDelete
  4. லீலைகள படிச்சிட்டு ஓடலாம்னு வந்தா நீங்க ரொம்ப சீரியஸா பதிவு போட்டிருக்கீங்க, ஆறுதலா படிச்சிட்டு அமைதியா கமென்ட் போடுறேன். இப்போதைக்கு எஸ்கேப்

    ReplyDelete
  5. //Dr. Butti Paul said...
    //உண்ணாவிரதம் : காந்தி -அன்னா ஹசாரே - மற்றும்............//

    இந்த ........ ஏதும் உள் அர்த்தம் இருக்கா?//

    தவறான அர்த்தம் ஏதும் இல்லை பாஸ்..

    ஐரோம் சர்மிளா, திலீபன், கூடங்குளம் மக்கள் மற்றும் பல தியாகிகள் - என்பதன் சுருக்கமே அது. பதிவைப் படித்தால் புரிந்து கொள்வீர்கள்.

    ReplyDelete
  6. //
    Dr. Butti Paul said...
    லீலைகள படிச்சிட்டு ஓடலாம்னு வந்தா நீங்க ரொம்ப சீரியஸா பதிவு போட்டிருக்கீங்க, ஆறுதலா படிச்சிட்டு அமைதியா கமென்ட் போடுறேன். இப்போதைக்கு எஸ்கேப்//

    ஓகே, நல்லது.

    ReplyDelete
  7. செங்கோவி said...
    ////
    Dr. Butti Paul said...
    //TUESDAY, SEPTEMBER 27, 2011//

    அப்புடின்னா இன்னிக்கு லீலைகல்தானே வரணும்?//

    வருக..

    செவ்வாய் இரவு தானே லீலை?..///


    TUESDAY அப்புடீன்னா செவ்வாய் தானே? தப்பா சொல்லிகுடுத்திட்டாங்களா ?

    ReplyDelete
  8. //Dr. Butti Paul said...

    TUESDAY அப்புடீன்னா செவ்வாய் தானே? தப்பா சொல்லிகுடுத்திட்டாங்களா ?//

    ஐயா, இது திங்கள் இரவா, செவ்வாய் இரவா?

    ReplyDelete
  9. செங்கோவி said...
    //Dr. Butti Paul said...

    TUESDAY அப்புடீன்னா செவ்வாய் தானே? தப்பா சொல்லிகுடுத்திட்டாங்களா ?//

    ஐயா, இது திங்கள் இரவா, செவ்வாய் இரவா?//

    ஆகா உலக மாகா குழப்பத்துல கைய வச்சுட்டீங்களே, எனக்கு இது திங்கள் பகல் சார்...

    ReplyDelete
  10. // Dr. Butti Paul said...

    ஆகா உலக மாகா குழப்பத்துல கைய வச்சுட்டீங்களே, எனக்கு இது திங்கள் பகல் சார்...//

    அப்போ, உங்களுக்கு செவ்வாய் இரவு வந்தபின் பார்த்தால், லீலை இருக்கும்.

    இன்று பதிவு சீரியஸ் என்பதால், கும்மியைத் தவிர்ப்போம் புட்டி!

    ReplyDelete
  11. காந்தி கண்ட உண்ணாவிரதத்தைப் பற்றி எல்லாருக்கும் நினைவுபடுத்தி இருக்கீங்க...!

    ReplyDelete
  12. //காந்தி தன் வாழ்நாளில் ஒருமுறைகூட ஆங்கிலேய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்ததில்லை.//

    பலர் காணத்தவறும் விடயம் இது, உண்ணாவிரதத்தின் அடிப்படைகளை தெளிவுபடுத்தும் ஒரு பதிவு..

    ReplyDelete
  13. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    காந்தி கண்ட உண்ணாவிரதத்தைப் பற்றி எல்லாருக்கும் நினைவுபடுத்தி இருக்கீங்க...!//

    ஆமாண்ணே, இப்போ நினைவுபடுத்த வேண்டியிருக்கு, இல்லையா?

    ReplyDelete
  14. இப்போதைய சூழலில் எந்தக் காரணத்திற்காக யார் எப்படி போராடினாலும் மெயின்ஸ்ட்ரீம் மீடியா எனப்படும் தேசியத் தொலைக்காட்சிகளின் கடைக்கண்பார்வை இருந்தால் போதுமானது. வட இந்தியாவில் சில வழக்குகளே மீடியாக்களால் ”நடத்தப்பட்டன” (ஆருஷி வழக்கு நினைவிருக்கலாம்..)

    ReplyDelete
  15. // Dr. Butti Paul said...
    //காந்தி தன் வாழ்நாளில் ஒருமுறைகூட ஆங்கிலேய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்ததில்லை.//

    பலர் காணத்தவறும் விடயம் இது, உண்ணாவிரதத்தின் அடிப்படைகளை தெளிவுபடுத்தும் ஒரு பதிவு..//

    ஆம், நம் மக்கள் அரசு இளகிய மனதுடையது என்று நினைக்கின்றார்கள்.

    ReplyDelete
  16. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    இப்போதைய சூழலில் எந்தக் காரணத்திற்காக யார் எப்படி போராடினாலும் மெயின்ஸ்ட்ரீம் மீடியா எனப்படும் தேசியத் தொலைக்காட்சிகளின் கடைக்கண்பார்வை இருந்தால் போதுமானது. வட இந்தியாவில் சில வழக்குகளே மீடியாக்களால் ”நடத்தப்பட்டன” (ஆருஷி வழக்கு நினைவிருக்கலாம்..)//

    ஆமாம், ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீடியா. அது சரியாக இருந்தால், எவ்வளோ நல்ல காரியங்கள் செய்ய முடியும். ஆனால் வியாபாரமே நோக்கமாகிப் போனால்....

    ReplyDelete
  17. இன்னிக்கு ஏதும் கில்மா இல்லையா ???

    ReplyDelete
  18. ஏமாத்திடிங்களே !!!!!

    ReplyDelete
  19. பலருக்கு இன்றைய நாளின் முக்கியத்துவம் புரியவில்லை என நினைக்கிறேன்!அதனால் தான் இன்று ஏன் இந்த உண்ணாவிரதம் பற்றிய பதிவு என்று தடுமாறுகிறார்கள் போலும்!தியாக தீபம் திலீபனின் உண்ணா விரதம் காந்தி தேசத்தால் கண்டு கொள்ளப்படாது போனது ஏன் என்று சொல்லியிருக்கிறீர்கள்,உண்மை தான்!யாருக்காகவோ,யாரோ தன்னை வருத்திக் கொண்டால் நமக்கென்ன என்ற பாரா முகம்,இன்று வரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது!முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது உண்மையாயின் "எல்லோருமே" அனுபவிப்பார்கள்!

    ReplyDelete
  20. //
    NAAI-NAKKS said...
    இன்னிக்கு ஏதும் கில்மா இல்லையா ???//

    இல்லை நண்பரே..நன்றி.

    ReplyDelete
  21. எப்போதெல்லாம் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று காந்தி சொன்னார் என்றால்.....- நம் அன்பிற்குரியவர்கள் ஏதேனும் ஒரு காரியத்தில் நம்மை ஏமாற்றிவிட்ட நிலையில், நம் ஆழ்ந்த வருத்தத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்த.////இன்று வரைக்கும் அப்படியே தான் இருக்கிறோம்!ஆனால்,தவறான புரிதல்,கூடவே சுய நல விரும்பிகளின் வழி நடத்தல்!கேட்டால்,இது அரசியல் என்பார்கள்!

    ReplyDelete
  22. Yoga.s.FR said...

    //யாருக்காகவோ,யாரோ தன்னை வருத்திக் கொண்டால் நமக்கென்ன என்ற பாரா முகம்,இன்று வரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது!//

    அது நம் இனத்தின் சாபக்கேடு ஐயா.


    //முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது உண்மையாயின் "எல்லோருமே" அனுபவிப்பார்கள்!//

    அந்த நம்பிக்கை தான் நம் வாழ்வை நகர்த்துகிறது..பார்ப்போம்.

    ReplyDelete
  23. புல் மீல்ஸ் கட்டிட்டு எழுதினாலும் உண்ணாவிரத கட்டுரை நல்லா வந்திருக்கு செங்கோவி...

    ReplyDelete
  24. //Yoga.s.FR said...
    இன்று வரைக்கும் அப்படியே தான் இருக்கிறோம்!ஆனால்,தவறான புரிதல்,கூடவே சுய நல விரும்பிகளின் வழி நடத்தல்!கேட்டால்,இது அரசியல் என்பார்கள்!//

    தவறு நடக்கும்போது வாய்மூடி இருப்பவர்கள், அதை எதிர்க்க யாராவது முற்பட்டால் ‘ஏன் இந்தப் போராட்டம்..இதன் பின்புலம் யார்’ போன்ற ஆராய்ச்சிகளால் போராட்டத்தை மழுங்கடிக்கும் வேலையும் இன்றுவரை நடந்துகொண்டே தானே இருக்கிறது.

    ReplyDelete
  25. நம் அன்பிற்குரியவராக மன்மோகன்சிங் இல்லாத நிலையில், மன்மோகன்சிங்கின் அன்பிற்குரியவர்களாக நாமும் இல்லாத நிலையில் அவரை நோக்கி உண்ணாவிரதம் இருப்பது நேரடியாக எவ்விதப் பலனையும் தராது என்பதே யதார்த்தம்.////நம் அன்பிற்குரியவராக ராஜீவ் இல்லாத நிலையில்,ராஜீவ் அன்பிற்குரியவர்களாக நாமும் இல்லாத நிலையில் அவரை நோக்கி உண்ணாவிரதம் இருப்பது நேரடியாக எவ்விதப் பலனையும் தராது என்பதே யதார்த்தம். இப்படி வந்ததோ?

    ReplyDelete
  26. // ரெவெரி said...
    புல் மீல்ஸ் கட்டிட்டு எழுதினாலும் உண்ணாவிரத கட்டுரை நல்லா வந்திருக்கு செங்கோவி...//

    நன்றி..ரொம்ப நாளாக எழுத நினைத்தது..இன்று தான் அந்த நாள் தற்செயலாய் வந்து சேர்ந்தது.

    ReplyDelete
  27. ஆனாலும் timely...

    ReplyDelete
  28. //Yoga.s.FR said...
    நம் அன்பிற்குரியவராக மன்மோகன்சிங் இல்லாத நிலையில், மன்மோகன்சிங்கின் அன்பிற்குரியவர்களாக நாமும் இல்லாத நிலையில் அவரை நோக்கி உண்ணாவிரதம் இருப்பது நேரடியாக எவ்விதப் பலனையும் தராது என்பதே யதார்த்தம்.////நம் அன்பிற்குரியவராக ராஜீவ் இல்லாத நிலையில்,ராஜீவ் அன்பிற்குரியவர்களாக நாமும் இல்லாத நிலையில் அவரை நோக்கி உண்ணாவிரதம் இருப்பது நேரடியாக எவ்விதப் பலனையும் தராது என்பதே யதார்த்தம். இப்படி வந்ததோ?//

    ராஜீவ் மட்டுமில்லை ஐயா, எல்லா ஆட்சியாளர்களுக்கும் இது பொருந்தும் இல்லையா.

    இன்று திலீபன் நினைவு தினம் என்று எனக்கு கந்தசாமி பதிவைப் பார்க்கும்வரை தெரியாது. என்னால் முக்கியத் தேதிகளை ஞாபகம் வைத்துக்கொள்ள முடிவதில்லை. சென்ற ஞாயிறே எழுதி வைத்திருந்தேன் இன்று போட.

    தற்செயலாய் அந்தப் பொருத்தம் அமைந்தது. விஷயம் அறிந்து கடைசிவரியைச் சேர்த்தேன்.

    ReplyDelete
  29. Blogger செங்கோவி said...தவறு நடக்கும்போது வாய்மூடி இருப்பவர்கள்,அதை எதிர்க்க யாராவது முற்பட்டால்‘ஏன் இந்தப் போராட்டம்..இதன் பின்புலம் யார்’ போன்ற ஆராய்ச்சிகளால் போராட்டத்தை மழுங்கடிக்கும் வேலையும் இன்றுவரை நடந்துகொண்டே தானே இருக்கிறது?////உண்மை தான்!அன்றிருந்த உலகு இன்றில்லையே?எதற்கெடுத்தாலும் போட்டி!நான் பெரியவனா,நீ பெரியவனா?என்னிடமிருப்பது அதிகமா,உன்னிடமிருப்பது அதிகமா?என்று ஏதோ "போகும்போது" கொண்டு செல்வது போல்!என்ன மனித வாழ்க்கை???????

    ReplyDelete
  30. செங்கோவி said...தற்செயலாய் அந்தப் பொருத்தம் அமைந்தது.விஷயம் அறிந்து கடைசிவரியைச் சேர்த்தேன்.////"அவன்" நடத்துகிறான்,நாம் நடத்தப்படுகிறோம்,அவ்வளவு தான்!

    ReplyDelete
  31. //Yoga.s.FR said...
    செங்கோவி said...தற்செயலாய் அந்தப் பொருத்தம் அமைந்தது.விஷயம் அறிந்து கடைசிவரியைச் சேர்த்தேன்.////"அவன்" நடத்துகிறான்,நாம் நடத்தப்படுகிறோம்,அவ்வளவு தான்!//

    உண்மை தான்...எனக்கும் புரியாத ஒரு உணர்வு தான்.

    ReplyDelete
  32. செங்கோவி said...ராஜீவ் மட்டுமில்லை ஐயா,எல்லா ஆட்சியாளர்களுக்கும் இது பொருந்தும் இல்லையா./////உண்மை தான்!ஆனாலும் அந்த அழகான "பைலட்டுக்கு" வழி காட்டிய அல்லக்கைகள்???????

    ReplyDelete
  33. // Yoga.s.FR said...
    செங்கோவி said...ராஜீவ் மட்டுமில்லை ஐயா,எல்லா ஆட்சியாளர்களுக்கும் இது பொருந்தும் இல்லையா./////உண்மை தான்!ஆனாலும் அந்த அழகான "பைலட்டுக்கு" வழி காட்டிய அல்லக்கைகள்??//


    இன்னும் அவர்களுக்கான அழிவுக்காலம் வரவில்லையே.....

    அரசுக்கு எதிரான உண்ணாவிரதத்தில் உள்ள ஆபத்தே இந்த அல்லக்கைகள் தான். அரசு இத்தகைய பலநூறு அல்லக்கைகளால் நிர்வகிக்கப்படுவது. சுயசிந்தனையற்ற தலைவர் என்றால், இவர்கள் ஆட்டம் ஓவராகிவிடுகிறது.

    ReplyDelete
  34. சுதந்திரம் வாங்கிய நாள்முதலே ஆட்சியாளர்களுக்கு காந்தி வேண்டாத பொருளாகிப் போனார். /////காங்கிரஸ் என்ற இயக்கத்தையே கலைத்து விட வேண்டுமென்று காந்தி சொன்னதாகச் சொல்வார்கள்!காந்தி வேண்டப்படவில்லை,அவர் கட்டி வளர்த்த இயக்கம் தேவைப்பட்டிருக்கிறது,குளிர் காய!என்னே ஒரு முரண்நகை?

    ReplyDelete
  35. //
    Yoga.s.FR said...
    காங்கிரஸ் என்ற இயக்கத்தையே கலைத்து விட வேண்டுமென்று காந்தி சொன்னதாகச் சொல்வார்கள்! //

    உண்மை தான்..காங்கிரஸ் என்பது ஆங்கிலேயரை விரட்ட அனைத்துத் தரப்பு மக்களும் இணைந்த ஒரு இயக்கம். எனவே சுதந்திரம் அடைந்தபின், அதே பெயரில் ஓட்டு வாங்குவது மக்களை ஏமாற்றும் வேலை. நேரு போன்றோர் சுதந்திர இந்தியாவை முன்னேற்ற கைவசம் வைத்துள்ள திட்டங்களைச் சொல்லி வேறு இயக்கம் ஆரம்பித்து, அதன்பேரிலேயே தேர்தலில் நிற்க வேண்டும்.

    இல்லையென்றால் கல்வியறிவற்ற மக்களுக்கு ‘உண்மையான’ காங்கிரசுக்கும் இதற்கும் வித்தியாசம் தெரியாது. அவர்களை ஏமாற்றுவதுபோல் ஆகும் என்று காந்தி கருதினார்.

    எனவே காங்கிரசைக் கலைத்துவிட்டு, சொந்த செயல்திட்டத்தின் அடிப்படையில் மக்களை சந்தியுங்கள் என்றார். யாரும் கேட்கவில்லை.

    இப்போது அவர் சொன்னபடியே ஆகிவிட்டது.

    ReplyDelete
  36. டெம்பிளேட் கமென்ட் என்று நினைக்காதீர்கள் உண்மையிலே மிகச்சிறந்த பதிவு...

    உங்களின் இவ்வாறான மற்றும் அரசியல் சம்மந்தமான பதிவுகள் நான் தவறவிடுவதில்லை..தொடருங்கள்

    ReplyDelete
  37. ////அரசுக்கு மனசாட்சி கிடையாது. அரசு என்பது எப்போதும் இறுக்கமானது. அரசின் நடவடிக்கைகள் பொருளாதாரம், அந்நிய நாடுகளுடனான உறவு போன்ற சிக்கலான காரணிகளால் தீர்மானிக்கப்படுவது. சில நேரங்களில் மக்கள் விரோத நடவடிக்கையாகவும் அரசின் செயல்பாடுகள் அமைவதுண்டு. மொத்தத்தில் அரசு ஒரு இயந்திரத்தனமான அமைப்பு. /// சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்

    ReplyDelete
  38. ////தேசம் என்பது மக்கள் தானேயொழிய அரசு அல்ல./// இது உண்மை தான்.. ஆனாலும் சொல்லப்படும் நோக்கத்திற்கு ஏற்ப அதற்க்கான பார்வையை நாமாக புரிந்து கொள்ள வேண்டும்.. உதாரணத்துக்கு அமெரிக்காவுக்கும் அல்கொய்தாவுக்கும் இடையே சண்டை என்றால், இங்கே "அமெரிக்கா என்பது அரசு தானே ஒழிய மக்களை குறிக்காது.." அது போலவே, காந்தி தேசம் திலீபனை கண்டு கொள்ளவில்லை என்று கூறுவது கூட அச்சமகாலத்தில் ஆட்சியில் இருந்த அரசையே குறிக்கும்.... என்பது என் கருத்து...

    ReplyDelete
  39. திலீபன் இந்திய இலங்கை அரசை நோக்கி ஐந்தம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தாலும்,இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட மாட்டாது என்பது முன் கூட்டியே தெரிந்திருந்தது,அதை அவர் உண்ணாவிரத மேடையில் இருந்து ஆற்றிய உரையே சாட்சி ..

    ReplyDelete
  40. சுஷ்மாவும், அருண் ஜெட்லியும் நாடாளுமன்றத்தில் நாக்கை பிடுங்கிக்கொள்ளும்படி அத்தனை கேள்வி கேட்டும் கூட அசராமல் அமைதி காத்தாரே நம்ம மன்மோகனு. அவர்கிட்ட உண்ணாவிரத மிரட்டல் எல்லாம் வேலைக்கு ஆகுமா..தாங்கள் சொன்னதை ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
  41. அருமையான கருத்துக்கள் கொண்ட பதிவு அண்ணே! அழகிய கருத்துக்கள்!

    ReplyDelete
  42. உண்ணா விரதத்தின் உண்மையை உணர்த்தியுள்ளீர்கள் .கடந்த கால நினைவுகள் வருவது தவிர்க்க முடியாமல் இருக்கு

    ReplyDelete
  43. 50வது பதிவு வாழ்த்துக்கள் .தொடர்ந்து சாதனை செய்ய வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  44. மாப்ள பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  45. காந்தி பற்றிய பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது நன்றி பாஸ்..

    ReplyDelete
  46. எனக்கு இது அறியா விஷயம் ,அறிந்து கொண்டேன்

    ReplyDelete
  47. தெளிந்த சிந்தனையுடன் திகழும் பதிவு. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  48. செங்கோவி...!

    அண்ணன் திலீபனுக்கு என்றைக்குமே மரியாதை கலந்த வீர வணக்கங்கள் மனதில் இருக்கிறது. அவரின் தியாகம் மிகப்பெரியது.


    உங்களின் பதிவுக்கும் சல்யுட். மிகத்தெளிவான புரிதல்கள்தான் மிகச்சிறந்த பதிவுகளையும்- கருத்துப்பகிர்தல்களையும் தோற்றுவிக்கின்றன. அது உங்களிடம் நிறையவே இருக்கிறது.

    ReplyDelete
  49. #கூடங்குளத்தில் நம் மக்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது, நம் பிரதமர் அதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் ஐ.நா.சபை மீட்டிங்கிற்கு கிளம்பியதை நாம் கவனத்தில் கொள்வது அவசியம். மாநில அரசு இதில் தலையிட்டதற்குக் காரணம் போராட்டத்திற்குப் பெருகும் ஆதரவு தென்மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கலாம் என்ற அச்சமே. #
    முற்றிலும் உண்மை...உணர்வுகளுக்கு மதிப்பு என்பதே இல்லை. அச்சமோ தேவையோ மட்டுமே அரசியல் தலையீட்டைத் தீர்மானிக்கிறது.

    ReplyDelete
  50. கந்தசாமி. said...

    // உங்களின் இவ்வாறான மற்றும் அரசியல் சம்மந்தமான பதிவுகள் நான் தவறவிடுவதில்லை..தொடருங்கள் //

    என் அரசியல் பதிவுகள் மேல் கொண்ட நம்பிக்கைக்கு நன்றி கந்தசாமி.

    ////தேசம் என்பது மக்கள் தானேயொழிய அரசு அல்ல./// இது உண்மை தான்.. ஆனாலும் சொல்லப்படும் நோக்கத்திற்கு ஏற்ப அதற்க்கான பார்வையை நாமாக புரிந்து கொள்ள வேண்டும்.. உதாரணத்துக்கு அமெரிக்காவுக்கும் அல்கொய்தாவுக்கும் இடையே சண்டை என்றால், இங்கே "அமெரிக்கா என்பது அரசு தானே ஒழிய மக்களை குறிக்காது.." அது போலவே, காந்தி தேசம் திலீபனை கண்டு கொள்ளவில்லை என்று கூறுவது கூட அச்சமகாலத்தில் ஆட்சியில் இருந்த அரசையே குறிக்கும்.... என்பது என் கருத்து...//

    உண்மை தான் கந்தசாமி........ஆனால் காந்தி தேசம் என்று அரசைச் சொல்வது எப்போதும் பொருத்தமில்லாதது, இந்திய அரசு எப்போதும் ’காந்திய அரசு’ அல்ல - என்பதை விளக்கவே அந்த வரி.

    ReplyDelete
  51. கந்தசாமி. said...

    //திலீபன் இந்திய இலங்கை அரசை நோக்கி ஐந்தம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தாலும்,இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட மாட்டாது என்பது முன் கூட்டியே தெரிந்திருந்தது,அதை அவர் உண்ணாவிரத மேடையில் இருந்து ஆற்றிய உரையே சாட்சி ..//

    தாமாக முன்வந்து, தன்னைப்பலியிட்டு திலீபன் செய்த தியாகம், புலிகள்மீதான பலரின் அபிப்ராயத்தை மறுபரிசீலனை செய்ய வைத்த்து. ஈழ வரலாற்றில் பாலாவும் திலீபனும் இரு முக்கிய ஆத்மாக்கள்.

    ReplyDelete
  52. // ! சிவகுமார் ! said...
    சுஷ்மாவும், அருண் ஜெட்லியும் நாடாளுமன்றத்தில் நாக்கை பிடுங்கிக்கொள்ளும்படி அத்தனை கேள்வி கேட்டும் கூட அசராமல் அமைதி காத்தாரே நம்ம மன்மோகனு. அவர்கிட்ட உண்ணாவிரத மிரட்டல் எல்லாம் வேலைக்கு ஆகுமா..தாங்கள் சொன்னதை ஆமோதிக்கிறேன். //

    மண்ணுமோகனுக்கு அமெரிக்கா சொன்னாத்தான் காது கேட்கும்.

    ReplyDelete
  53. // Powder Star - Dr. ஐடியாமணி said...
    அருமையான கருத்துக்கள் கொண்ட பதிவு அண்ணே! அழகிய கருத்துக்கள்! //

    நன்றி மணி.

    ReplyDelete
  54. // kobiraj said...
    உண்ணா விரதத்தின் உண்மையை உணர்த்தியுள்ளீர்கள் .கடந்த கால நினைவுகள் வருவது தவிர்க்க முடியாமல் இருக்கு //

    இது நினைத்துப்பார்க்க வேண்டிய நேரம் தானே..

    ReplyDelete
  55. // விக்கியுலகம் said...
    மாப்ள பகிர்வுக்கு நன்றி! //

    நன்றி.

    ReplyDelete
  56. // M.R said...
    எனக்கு இது அறியா விஷயம் ,அறிந்து கொண்டேன் //

    மகிழ்ச்சி ரமேஷ்.

    ReplyDelete
  57. // FOOD said...
    தெளிந்த சிந்தனையுடன் திகழும் பதிவு. பகிர்விற்கு நன்றி.//

    நேத்துப் பதிவை விடவா ஆஃபீசர் சார்?............நன்றி.

    ReplyDelete
  58. / மருதமூரான். said...
    செங்கோவி...!

    அண்ணன் திலீபனுக்கு என்றைக்குமே மரியாதை கலந்த வீர வணக்கங்கள் மனதில் இருக்கிறது. அவரின் தியாகம் மிகப்பெரியது.

    உங்களின் பதிவுக்கும் சல்யுட். மிகத்தெளிவான புரிதல்கள்தான் மிகச்சிறந்த பதிவுகளையும்- கருத்துப்பகிர்தல்களையும் தோற்றுவிக்கின்றன. அது உங்களிடம் நிறையவே இருக்கிறது.//

    சில கொள்கைசார்ந்த விஷயங்களில் நமக்கிருக்கும் தெளிவே இதற்கெல்லாம் அடிப்படை மருதமூரான். சிலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது அதை அரசுக்கு எதிரான மிரட்டல் என்று எள்ளிநகையாடியோர், கூடங்குளம் உண்ணாவிரதத்தை தீவிரமாக ஆதரித்தனர்.(நாம் இரண்டையுமே ஆதரித்தோம்)..அந்த குழப்பங்களும் இந்தப் பதிவு எழுத ஒரு காரணம்.

    ReplyDelete
  59. // sontha sarakku said...
    முற்றிலும் உண்மை...உணர்வுகளுக்கு மதிப்பு என்பதே இல்லை. அச்சமோ தேவையோ மட்டுமே அரசியல் தலையீட்டைத் தீர்மானிக்கிறது.//

    அது தான் நிதர்சனம் சொந்தச் சரக்கு.

    ReplyDelete
  60. உண்ணாவிரதம் அன்பிற்குரியவர்களுக்கு எதிரான ஒரு ஒத்துழையாமை இயக்கம் தான்.

    அரசுக்கு எதிராக காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினார். அன்பிற்குரியவர்களின் கருத்து வேறுபாடுகளுக்கு எதிராக உண்ணா விரதப் போராட்டத்தைக் கைக்கொண்டார்.


    அன்னா அசாரே விடயத்தில் அவர் மக்களின் அரசுக்கு எதிரான ஒட்டுமொத்தக் கோபத்தை பிரதிபலித்தார். அதனால்தான் அவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது. ஒரு வகையில் இது அரசியல் கட்சிகளுக்கு அவர் கொடுத்த ஒரு வலுவான எச்சரிக்கை என்றும் கொள்ளலாம். அவருடன் இருந்தவர்கள் இந்த விடயத்தை அறிவு பூர்வமாக அனுகியதும் ஒரு காரணம். ஆக அன்னா அசாரேயின் உண்ணாவிரதம் மேலுக்கு உணர்வு பூர்வமானதாகத் தோன்றினாலும் அது ஒரு அறிவுபூர்வமான அனுகுமுறையாகத்தான் எனக்கு தென்படுகிறது.

    உண்ணாவிரதம் மட்டுமல்ல வேறெந்த போராட்டமானாலும் அறிவு பூர்வமாக அனுகப் படவில்லையென்றால் எதிர்மறையான விளைவுகளையே தரும் என்பது எனது கருத்து.

    நல்ல பகிர்வு.

    நன்றி.

    ReplyDelete
  61. உண்ணாவிரதப் போராட்டம் விளக்கமான பதிவு. நன்று.

    ReplyDelete
  62. //கூடங்குளத்தில் நம் மக்கள் //உண்ணாவிரதம் இருக்கும்போது, நம் பிரதமர் அதைக் //கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் ஐ.நா.சபை //மீட்டிங்கிற்கு கிளம்பியதை நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.



    இவிங்க எப்பயுமே இப்படித்தான், சவுத் நா இளக்காரம்!


    கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்

    ReplyDelete
  63. தமிழர்களின் விடுதலைக்கு திலீபனின் தியாகம் ஓர் அணையாச் சுடர்.
    ------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் - செப் '2011)

    ReplyDelete
  64. உண்ணாவிரதம் - விளக்கமான பதிவு.

    ReplyDelete
  65. // வெட்டிப்பேச்சு said...

    அன்னா அசாரே விடயத்தில் அவர் மக்களின் அரசுக்கு எதிரான ஒட்டுமொத்தக் கோபத்தை பிரதிபலித்தார். அதனால்தான் அவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது. ஒரு வகையில் இது அரசியல் கட்சிகளுக்கு அவர் கொடுத்த ஒரு வலுவான எச்சரிக்கை என்றும் கொள்ளலாம். அவருடன் இருந்தவர்கள் இந்த விடயத்தை அறிவு பூர்வமாக அனுகியதும் ஒரு காரணம். ஆக அன்னா அசாரேயின் உண்ணாவிரதம் மேலுக்கு உணர்வு பூர்வமானதாகத் தோன்றினாலும் அது ஒரு அறிவுபூர்வமான அனுகுமுறையாகத்தான் எனக்கு தென்படுகிறது.//

    கரெக்ட் சார்..அதனாலேயே அது காந்தியத்தில் இருந்து விலகியும் நாம் ஆதரவு கொடுத்தோம். மேலும், காந்திய வழிமுறைகளை புதிய முறையில் சோதித்துப்பார்ப்பதும் வழக்கமாக நடைபெறும் விஷயம் தான்.

    ReplyDelete
  66. // சென்னை பித்தன் said...
    உண்ணாவிரதப் போராட்டம் விளக்கமான பதிவு. நன்று.//

    நன்றி ஐயா.

    ReplyDelete
  67. // IlayaDhasan said...

    இவிங்க எப்பயுமே இப்படித்தான், சவுத் நா இளக்காரம்! //

    ரைட்டு.

    ReplyDelete
  68. // தறுதலை said...
    தமிழர்களின் விடுதலைக்கு திலீபனின் தியாகம் ஓர் அணையாச் சுடர். //

    நிச்சயம் அவர் தியாகம் காலம் கடந்தும் போற்றப்படும்.

    ReplyDelete
  69. // சே.குமார் said...
    உண்ணாவிரதம் - விளக்கமான பதிவு.//

    நன்றி குமார்.

    ReplyDelete
  70. வணக்கம் செங்கோவி இந்த பதிவுக்கு அண்னையும்,கந்தசாமியும் அழகான பின்னூட்டமிட்டுள்ளார்கள்.. திலீபனின் நினைவு தினத்தில் இக்கட்டுறை வந்தது இன்னும் சிறப்பானது.. ஒரு பதிவில் தனிமரம் நேசன் சொல்லியிருப்பார் காந்தியை படித்தோம் திலீபனை பார்த்தோம்ன்னு.... ஆமா அந்த உண்ணாவிரதத்தில் நாங்கள் மாணவராய் இருந்து ஒவ்வொருநாளும் திலீபனின் உணாவிரதத்தில் கலந்துகொண்டதும் திலீபனின் இறப்புக்குபின் உண்ணாவிரதத்தில் இருந்த வெறுப்பு காந்தியை படித்தபிந்தான் தீர்தது.. 

    ReplyDelete
  71. அண்மையில் வந்த உங்கள் பதிவுகளில் இது மிகச்சிறந்த  பதிவு வாழ்த்துக்கள் நேற்று வரமுடியாமல் விட்டதற்று மிகவும் வருந்துகிறேன்.. லீலைகள் போட்டிருப்பீர்கள்ன்னு விட்டு விட்டேன்..!!!!??

    ReplyDelete
  72. திலீபனுக்கு அன்னா ஹசாரே போல் மீடியா ஆதரவும் மக்கள் கவன ஈர்ப்பும் கை கூடி வர வில்லை.. டைமிங்க் போஸ்ட்..

    ReplyDelete
  73. நம் அன்பிற்குரியவராக மன்மோகன்சிங் இல்லாத நிலையில், மன்மோகன்சிங்கின் அன்பிற்குரியவர்களாக நாமும் இல்லாத நிலையில் அவரை நோக்கி உண்ணாவிரதம் இருப்பது நேரடியாக எவ்விதப் பலனையும் தராது என்பதே யதார்த்தம்.//


    இந்த பாராவில் மொத்தமும் அடங்கும், சரியான டைமிங் அலசல் செங்கோவி...!!!

    ReplyDelete
  74. உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமோ என்னமோ,சமீப காலத்தில இலங்கையிலும் ஒரு உண்ணா(உண்ணும்)விரதப் போராட்ட மொண்ணு நடந்திச்சு!அது எதுக்காகன்னா,இலங்கையில நடந்த இன அழிப்புப் போர் சம்பந்தமா "தான்" என்ன நடவடிக்கை எடுக்கலாம் அப்புடீன்னு ஆலோசனை சொல்ல ஐ.நா செயலர் நியமிச்ச குழுவ வாபஸ் வாங்கணும்னு ஒருத்தரு ஐ.நா ஆபீசு வாசல மறச்சு உண்ணா(உண்ணும்)விரதம் இருந்தாரு,உண்ணா விரதப் போராட்டத்தையே கொச்சப்படுத்துறாப்புல இருந்திச்சு. அதுக்கு கவர்மெண்டு சப்போட்டு வேற!

    ReplyDelete
  75. காட்டான் said...

    //வணக்கம் செங்கோவி இந்த பதிவுக்கு அண்னையும்,கந்தசாமியும் அழகான பின்னூட்டமிட்டுள்ளார்கள்.. திலீபனின் நினைவு தினத்தில் இக்கட்டுறை வந்தது இன்னும் சிறப்பானது.. //

    ஆமாம் மாம்ஸ், தானே வந்த சிறப்பு அது.

    //ஒரு பதிவில் தனிமரம் நேசன் சொல்லியிருப்பார் காந்தியை படித்தோம் திலீபனை பார்த்தோம்ன்னு.... //

    அருமை..அருமை.

    //ஆமா அந்த உண்ணாவிரதத்தில் நாங்கள் மாணவராய் இருந்து ஒவ்வொருநாளும் திலீபனின் உணாவிரதத்தில் கலந்துகொண்டதும் திலீபனின் இறப்புக்குபின் உண்ணாவிரதத்தில் இருந்த வெறுப்பு காந்தியை படித்தபிந்தான் தீர்தது.. //

    உங்கள் உணர்ச்சிகளை புரிந்துகொள்ள முடிகிறது.

    ReplyDelete
  76. // காட்டான் said...
    நேற்று வரமுடியாமல் விட்டதற்று மிகவும் வருந்துகிறேன்.. லீலைகள் போட்டிருப்பீர்கள்ன்னு விட்டு விட்டேன்..!!!!??//

    அடப்பாவிகளா..அப்போ இன்னிக்கு நைட் வராதீங்க.

    ReplyDelete
  77. // சி.பி.செந்தில்குமார் said...
    திலீபனுக்கு அன்னா ஹசாரே போல் மீடியா ஆதரவும் மக்கள் கவன ஈர்ப்பும் கை கூடி வர வில்லை.. //

    ரைட்டு.

    ReplyDelete
  78. // MANO நாஞ்சில் மனோ said...

    இந்த பாராவில் மொத்தமும் அடங்கும், சரியான டைமிங் அலசல் செங்கோவி...!!! //

    நன்றிண்ணே.

    ReplyDelete
  79.  சி.பி.செந்தில்குமார் said...
    திலீபனுக்கு அன்னா ஹசாரே போல் மீடியா ஆதரவும் மக்கள் கவன ஈர்ப்பும் கை கூடி வர வில்லை.. டைமிங்க் போஸ்ட்..

    உண்மைதான் அப்போது இப்ப இருக்கிறதுபோல மீடியாக்களும் குறைவு இந்தியாவில் தூர்தர்சனும் இலங்கையில் ரூபவாகினியும்தானே..!!? அரச மீடியாக்கள் என்ன செய்வார்கள்ன்னு தெரியும்தானே.. ஏன் அன்னை பூபதியம்மாவின் உண்ணாவிரதம் எத்தனை தமிழர்களுக்கு தெரியும்..!!?

    ReplyDelete
  80. // காட்டான் said... 
    நேற்று வரமுடியாமல் விட்டதற்று மிகவும் வருந்துகிறேன்.. லீலைகள் போட்டிருப்பீர்கள்ன்னு விட்டு விட்டேன்..!!!!??//

    அடப்பாவிகளா..அப்போ இன்னிக்கு நைட் வராதீங்க.
    September 27, 2011 4:04 PM
    தகவலுக்கு நன்றி..ஹி ஹி(அப்பிடியெல்லாம் இல்ல மாப்பிள ஆரம்பத்தில் இருந்து தொடரை வாசிக்கவில்லை நீங்க வாத்தியார் மாதிரி இரண்டாம் பாகத்தில மதனுக்கு நடந்தது என்னன்னு கேட்டீங்கன்னா கிழிஞ்சுது கிஸ்ணகிரி...ஹி ஹி)முழுவதும் வாசிக்க நேரமில்ல மாப்பிள..

    ReplyDelete
  81. This comment has been removed by the author.

    ReplyDelete
  82. என்னது? எல்லோரும் லீலை போட்டிருப்பாங்கனு ஓடி வந்திருக்காங்க... நல்ல பகிர்வு இன்று செங்கோவி..

    ReplyDelete
  83. மீண்டும் வணக்கம் சார், சில பல வேலைப்பளு காரணமாக அரு ஆரோக்கியமான கலந்துரையாடலை தவற விட்டுவிட்டேன். அண்மைக்காலமாகவே உண்ணாவிரதம், ஆர்பாட்டம் முதலியவற்றின் மீது ஒரு வெறுப்பு இருந்தது, எதுக்கு போராட்டம்னு ஒரு விவஸ்தையே இல்லாமல் போய்க்கொண்டிருந்தது அந்த போராட்ட கலாசாரம். திலீபனின் நினைவு நாளையே மறக்கடிக்கச்செய்யும் அளவுக்கு உண்ணாவிரதங்களும் எழுச்சிப் போராட்டங்களும் மலிந்து விட்டன. அதையே எமது பதிவில் ஆப்பிளுக்கு எதிராக உன்னாவிரதமிருக்கப்போவதாக கூறி சாடியிருந்தோம். ஒரு வேளை அதுவே உங்களை இந்தப்பதிவு எழுத தூண்டியிருக்கலாம் என தவறாக நினைத்துக்கொண்டதால் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். தக்க சமயத்தில் காந்திய உண்ணாவிரதம் பற்றி ஒரு விரிவான பதிவிட்டிருக்கிறீர்கள். அரச இயந்திரத்தின் இயக்கம்பற்றியும் உங்கள் பதிவு சிந்தனையை தூண்டுகிறது. அடிப்படைகளை தெளிவாகவே அலசியிருக்கிறீர்கள். எஹ்டுக்கேடுத்தாலும் போராட்டம், உண்ணாவிரதம் என குதிப்பவர்கள் இனிமேலாவது காந்திய உண்ணாவிரதத்தினை புரிந்து கொண்டு செயல்படுவார்களாயின் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  84. செங்கோவி said...
    //தவறு நடக்கும்போது வாய்மூடி இருப்பவர்கள், அதை எதிர்க்க யாராவது முற்பட்டால் ‘ஏன் இந்தப் போராட்டம்..இதன் பின்புலம் யார்’ போன்ற ஆராய்ச்சிகளால் போராட்டத்தை மழுங்கடிக்கும் வேலையும் இன்றுவரை நடந்துகொண்டே தானே இருக்கிறது.//

    மலிந்து போன போராட்டங்களினால் உள்ள ஆபத்தே இது என தோன்றுகிறது. நடப்பவற்றுள் பல சுய இலாபம், சுய விளம்பரம் தேடுபவை, இன்னும் பல பிரச்சினையின் அடிப்படையை மறந்துவிட்டு நடப்பவை. மக்கள் என்ன செய்வார்கள்? ஒரு விடயம் எல்லை மீறிப்போகும்போது ஒரு எதிர்பூக்கம் தோன்றத்தானே செய்கிறது..

    ReplyDelete
  85. நாம் குழந்தை பருவத்திலேயே ஆரம்பித்த ஒன்றுதான் உணவுமறுப்பு.நம் அன்பிற்குரியவர்கள் (பெற்றோர் மற்றும் நண்பர்களிடம்) நாம் நினைத்ததை சாதிக்க அப்போதிருந்தே உண்ணாவிரத ஆயுதமேடுதவ்ர்கள் .குடும்ப உறவுகளிடம் அடிக்கடி பிரயோகிக்கப்படும் ஆயுதம் இதுதான் .வலிமையானது ஆனால் எதிரிகளிடம் பலவீனமானது .மக்களுக்காக மக்களை நோக்கி நடத்தப்படுவதே காந்திய உண்ணாவிரதம். தியாக தீபம் திலீபனுக்கு எம் வீர வணக்கங்கள்!

    ReplyDelete
  86. தாமதமான வணக்கங்கள் பாஸ்,

    உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய புரிதலற்ற மனங்களுக்குப் புரிதலினை ஏற்படுத்தும் வகையில் உங்களின் இப் பதிவு அமைந்துள்ளது சிறப்பாக இருக்கிறது.

    திலீபன் அண்ணாவின் தியாக்கத்தினையும் மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறீங்க.

    திலீபன் அண்ணாவின் போராட்டக் கனவு,
    "மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
    சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்பதாகும்.

    இக் கனவானது மக்களின் ஒருங்கமைந்த எழுச்சி மூலம் 1999ம் ஆண்டின் பின்னர் ஈழத்தில் நடந்தேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  87. // காட்டான் said...
    ஆரம்பத்தில் இருந்து தொடரை வாசிக்கவில்லை....முழுவதும் வாசிக்க நேரமில்ல மாப்பிள..//

    அதனால என்ன மாம்ஸ்...கண்டிப்பா வாசிக்கப்பட அது என்ன திருக்குறளா? ஒன்னும் பிரச்சினை இல்லை.

    ReplyDelete
  88. // தமிழ்வாசி - Prakash said...
    என்னது? எல்லோரும் லீலை போட்டிருப்பாங்கனு ஓடி வந்திருக்காங்க... நல்ல பகிர்வு இன்று செங்கோவி..//

    எல்லாம் அவன் லீலை!

    ReplyDelete
  89. // Dr. Butti Paul said...
    அதையே எமது பதிவில் ஆப்பிளுக்கு எதிராக உன்னாவிரதமிருக்கப்போவதாக கூறி சாடியிருந்தோம். ஒரு வேளை அதுவே உங்களை இந்தப்பதிவு எழுத தூண்டியிருக்கலாம் என தவறாக நினைத்துக்கொண்டதால் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்.//

    காமெடி பண்றதுல உங்க தலைவரையே மிஞ்சிட்டீங்களே...

    பதிவுலகிற்கு வரும்போதே நான் எடுத்துக்கொண்ட விரதம், யாருக்கும் குறிப்பாக எதிர்பதிவு போடுவதில்லை என்பது. உங்கள் பின்னூட்டப்பெட்டி திறந்திருக்கும்வரை அதற்கு அவசியமும் இல்லை.

    //மக்கள் என்ன செய்வார்கள்? ஒரு விடயம் எல்லை மீறிப்போகும்போது ஒரு எதிர்பூக்கம் தோன்றத்தானே செய்கிறது..//

    உண்மை தான்..காந்திய உண்ணாவிரதம் பற்றித் தெளிவிருந்தால், புகழ்ச்சிக்காக நடப்பவற்றை புறக்கணிக்கலாம்.

    ReplyDelete
  90. // manoharan said...
    குடும்ப உறவுகளிடம் அடிக்கடி பிரயோகிக்கப்படும் ஆயுதம் இதுதான் .வலிமையானது ஆனால் எதிரிகளிடம் பலவீனமானது .மக்களுக்காக மக்களை நோக்கி நடத்தப்படுவதே காந்திய உண்ணாவிரதம். தியாக தீபம் திலீபனுக்கு எம் வீர வணக்கங்கள்! //

    ஆழ்ந்த கருத்துக்களுக்கு நன்றி பாஸ்.

    ReplyDelete
  91. நிரூபன் said...

    //தாமதமான வணக்கங்கள் பாஸ், //

    அதனால் என்ன? வணக்கம்.

    //திலீபன் அண்ணாவின் போராட்டக் கனவு,
    "மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
    சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்பதாகும். இக் கனவானது மக்களின் ஒருங்கமைந்த எழுச்சி மூலம் 1999ம் ஆண்டின் பின்னர் ஈழத்தில் நடந்தேறியது என்பது குறிப்பிடத்தக்கது. //

    ஆம், எனவே தான் சொன்னேன் அது வெற்றி பெற்ற உண்ணாவிரதம் என்று. வெற்றிக்குக் கொடுத்த அதிகபட்ச, நியாயமற்ற விலை தான் திலீபன் அண்ணாவின் உயிர்.

    ReplyDelete
  92. அனானி தொல்ல மறுபடியும் ஆரம்பிசுடுச்சு டோய்

    http://spoofking.blogspot.com

    ReplyDelete
  93. மிக அருமையான அலசல். உண்ணா விரதம் மக்களை ஒருங்கிணைக்கும் மற்றும் போராட்ட உணர்வைக் கூர்மைப் படுத்தும் பணியைச் செய்கிறது என்பதை மிக செவ்வனே தெளிவு படுத்தியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  94. தாமதம் வருகைக்கு கோப்பை அதிக ஐயா!
    வரலாறுகளில் பலர் வந்து போனார்கள் காந்தியை நான் ஒரு வரலாற்று ஏடுகளில் வாசித்தேன் தியாக தீபத்தை உணர்வுகளுடன் கலந்து நேரில் சஞ்சலித்தேன் அன்று தொடக்கும் இன்று வஞ்சிக்கின்றேன் மத்திய அரசின் செயலில் ஒரு வைத்திய பீடம் போனாலும் கொள்கைக்காக தன்னை ஒரு தீபம் ஆகினவன் அருகில் நாமும் இருந்தோம் அதனால்தான் நொஞ்சில் நிறுத்துகின்றோம்  என்றும்வாழ்த்துவோம் எங்கள் தீபத்தை!
    நல்ல அலசலுடன் நெஞ்சை நெகிழவைத்த் பதிவு ஐயா முடிந்தால் இரவு பார்ப்போம்!

    ReplyDelete
  95. எதிர்ப்பை வேற எப்படித்தான் அமைதியான வழியில் தெரிவிப்பது?

    ReplyDelete
  96. இன்ட்லியில் ஓட்டுப் போட முடியலை என்னாச்சு?

    ReplyDelete
  97. //Jayadev Das said...
    எதிர்ப்பை வேற எப்படித்தான் அமைதியான வழியில் தெரிவிப்பது? //

    நீங்களே சொல்லிட்டீங்களே..உண்ணாவிரதம் மூலம் எதிர்ப்பைத் தெரிவிக்க முடியும். அடையாளப் போராட்டமாக ஒரிரு நாள் இருக்கலாம். காலவரையற்ற என்பது ஆபத்தானது.


    இன்ட்லி மேட்டர் தெரியலை பாஸ்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.