முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
அழகன் எங்கள் குமரன் என்று மறைமொழி கூறும்
உயிரினங்கள் ஒன்றையொன்று வாழ்த்திடும்போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ....
தூக்கத்தில் ஆழ்ந்திருந்த கவிதா ‘யாரு..இந்த நேரத்துல?’ என்று யோசித்தபடியே கண்ணைத் திறக்காமலேயே மொபைல் ஃபோனை எடுத்தாள். சுசீலாவின் தேவகுரலை கட் செய்தபடியே “ஹல்ல்லொ” என்றாள்.
”ஹாய் கவி, சாரி டூ டிஸ்டர்ப் யு..குட் மார்னிங்”
குரலைக் கேட்டதும் அகிலாக்கா என்று தெரிந்தது.
“அக்காவா..குட் மார்னிங்கா?..மணி என்ன?” கண்ணைத் திறக்காமலே கேட்டாள் கவிதா.
“ஏர்லி மார்னிங்..4.10..சரி சரி..நல்ல தூக்கத்துல இருக்கேன்னு தெரியுது..சரவணனை எங்கே? அவன்கிட்ட ஃபோனைக் கொடு”
”ம்..” என்றபடியே கண்ணைத் திறக்காமலேயே அருகில் படுத்திருந்த சரவணனை தட்டி எழுப்பினாள்.
“என்னங்க..என்ன்னங்க”
சரவணன் திடுக்கிட்டு விழித்தான்.
”என்னம்மா?”
“ஃபோன்..அகிலாக்கா”
அகிலா சிபிசிஐடியில் டிஎஸ்பி. சரவணனின் உயரதிகாரியாக இருந்தும், கவிதாவிடம் உரிமையோடு பழகுபவள்.
அகிலா சிபிசிஐடியில் டிஎஸ்பி. சரவணனின் உயரதிகாரியாக இருந்தும், கவிதாவிடம் உரிமையோடு பழகுபவள்.
ஃபோனை வாங்கியவுடன் “குட் மார்னிங் மேம்” என்றான்.
”மார்னிங் சரவணன்..உங்க மொபைல் என்னாச்சு?”
“என்னாச்சு? ஒன்னும் ஆகலையே..இங்க தான் இருக்கு”
“நல்லாப் பாருங்க..ஸ்விட்ச்டு ஆஃப்-னு வருது.”
‘ஃபோனை எங்கே வச்சோம்?’ என்று இருட்டில் உட்கார்ந்தபடியே யோசித்தான். சார்ஜ் போட்டது ஞாபகம் வந்தது. ஸ்விட்ச் போர்டைப் பார்த்தான். சார்ஜர் மாட்டியிருப்பது தெரிந்தது. கூடவே ப்ளக் பாயிண்டின் ஸ்விட்ச்சை ஆன் செய்யாததும் தெரிந்தது. க்ரைம் ப்ராஞ்ச் இன்ஸ்பெக்டராக இருந்தும், இப்படிச் சொதப்புகிறோமே என்று நினைத்துக்கொண்டான்.
“அடடா..சார்ஜ் இல்லாம ஃபோன் ஆஃப் ஆயிடுச்சு போல”
“சரி, இப்போ உடனே கிளம்புங்க..நான் சொல்ற இடத்துக்குப் போங்க”
எப்போது போலீஸ் வேலையில் சேர்ந்தானோ, அப்போதிருந்து இரவில் எழுந்து ஓடி ஓடி பழகிவிட்டதால், கேசுவலாக “’ஓகே..எங்கே போகணும்னு சொல்லுங்க.” என்று கேட்டுக்கொண்டே வாஷ் பேசினில் முகம் கழுவினான்.
“முத்துராமன் சார் வீட்டுக்குப் போ”
முத்துராமன் சிபிசிஐடிப் பிரிவின் ஏ.டி.ஜி.பி.யாக இருந்து ரிட்டயர்ட் ஆனவர்..ஆனாலும் இப்போதும் ஏதாவது சிக்கலான கேஸ் என்றால் அவரிடம் சென்னை டீம் அறிவுரை கேட்பது வழக்கம்.
”அவர் வீட்டுக்கா? இப்படி விடியற்காலையில் அவரைத் தொந்தரவு செய்யுமளவிற்கு, கேஸ் ஒன்றும் இல்லையே மேம்?”
“இனிமே நாமளே நினைச்சாலும் அவரைத் தொந்தரவு செய்ய முடியாது”
“அப்படீன்னா?”
“அப்படீன்னா அதே தான்”
“ச்சு..ச்சு..இறந்துட்டாரா? ரொம்ப நல்ல மனுசராச்சே”
“சும்மா சாகலை...ஹி’ஸ் மர்டர்ட்”
“என்ன?”
“ஆமாப்பா..சாரை யாரோ மர்டர் பண்ணிட்டாங்களாம்..அவர் பையன் ஸ்ரீனிவாசன் ஃபோன் பண்ணியிருந்தார். ஃபேமிலில எல்லாரும் வெளில எங்கேயே போயிருந்தாங்களாம்..சார் மட்டும் போகலை..தனியா இருந்திருக்கார்..அப்போத் தான் யாரோ இப்படிப் பண்ணிட்டாங்க..ஸ்ரீனிவாசன் அங்கே தான் இருக்கார்”
அகிலா பேசிக்கொண்டிருக்கும்போதே ட்ரெஸ் மாற்றி முடித்திருந்தான் சரவணன்.
“லோக்கல் போலீஸும் ஸ்பாட்ல இருக்கு. எப்படியும் இந்த கேஸ் நமக்குத்தான் வரும்.நீங்க உடனே அங்கே போங்க”
சரவணன் கவிதாவைப் போய்ப் பார்த்தான். தூங்கிப்போயிருந்தாள். இது வழக்கமான விஷயம் தான் என்பதால் வீட்டுச் சாவியையும் பைக் சாவியையும் எடுத்துக்கொண்டு, வெளியேறினான்.
(தொடரும்)
அடடா, துப்பறியும் தொடரா? பின்னுது, மறுபடியும் ஒரு விறு விறு தொடர், கலக்குங்கண்ணே.
ReplyDeleteinteresting..waiting for next post..
ReplyDeleteவணக்கம் செங்கோவி அண்ணா
ReplyDeleteநீண்ட நாளைக்கு அப்புறம் ஒரு க்றைம் தொடரோட வந்திருக்கிறீங்க.. கலக்குங்க
தொடராகையால் முடிவில்தான் கருத்து சொல்லமுடியும். ஆரம்பம் விறுவிறுப்பா இருக்கு
அதிரடிதொடர்னு போடாமலே இருந்திருக்கலாம்,உணர முடியுது.
ReplyDeleteதொடர்கிறோம்...........
ReplyDeleteஆரம்பமே அமர்க்களமா தொடங்கியிருக்கு...வெயிட்டிங்...!
ReplyDeleteஆஹா.... கெளம்பிட்டாருய்யா கெளம்பிட்டாரு............
ReplyDeleteவணக்கம் க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் செங்கோவி சார்!திடுக்கிட வச்சுட்டீங்க,போங்க சார்!
ReplyDeleteதுப்பறியும் கதைன்னா எனக்கு ரொம்பவே இஷ்டம், கலக்குங்க
ReplyDeleteவணக்கம் செங்கோவி ஐயா.
ReplyDeleteகந்தனுக்கு காவடி என்று நினைத்தால் கிரைம் பிரஞ்சு சரவணன் என்று திடுக்கிட வைத்து தொடர் தொடங்கி விட்டீர்கள் தொடருங்கள் பின் வருகின்றேன் முருகனிடம்.
மாம்ஸ், கலக்கல் அதிரடி தொடர் ஆரம்பமா?
ReplyDeleteமாம்ஸ் இன்று முதல் சின்ன ராஜேஷ் குமார் என அழைக்கப்படுவார்..
ReplyDelete