அகிலாவின் ஃபோன் ஒலித்தது.
"குட் மார்னிங் மேம்”
“சொல்லுங்க சரவணன்..என்ன ஆச்சு?”
சரவணன் பார்த்ததைச் சொன்னான்.
“டார்ச்சர் பண்ணியா கொன்னிருக்காங்க? முத்துராமன் சார் ரொம்ப சாஃப்ட் கேரக்டர்ப்பா..நல்ல மனுசன்..அவரைப் போய் அப்படிப் பண்ண யாருக்கு மனசு வந்துச்சு?..பூஜை ரூம்ல என்ன எழுதியிருந்துச்சு?”
“மார்ஸ்-1024 மேம்”
“தமிழ்லயா எழுதியிருந்துச்சு?”
“இல்லை மேம்..இங்லீஷ்ல!”
“அப்போ அது M-A-R-S-1024-வாக் கூட இருக்கலாம் இல்லியா?”
“ஆமாம் மேம்”
“அந்த ஆங்கிள்லயும் யோசிங்க..நான் மேலிடத்துல பேசி இந்தக் கேஸை நமக்கு மாத்தச் சொல்றேன்..”
“ஓகே மேம்..போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தா, இன்னும் சில விஷயங்கள் க்ளியர் ஆகும் மேம்..அவர் எப்போக் கொலை செய்யப்பட்டார், ஸ்ரீனிவாசன் எப்போ இங்கே வந்தார்னு..”
“ஸ்ரீனிவாசனைச் சந்தேகப்படுறீங்களா?”
“எல்லாரையும் சந்தேக வளையத்துக்குள்ள வைக்கிறது நல்லது தானே மேம்..உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா, யார் பண்ணியிருப்பாங்கன்னு?”
“ரவுடிகளுக்கும் போலீஸ்காரனுக்கும் ஊரெல்லாம் எதிரிகள்தான்..யாரைன்னு சந்தேகப்பட? முத்துராமன் சார் பதவியில இருந்தவரைக்கும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்..எதற்கும் வளைஞ்சு கொடுக்க மாட்டார். சரி, நீங்க கிளம்பிக்கோங்க. நாம ஆஃபீசில் மீட் பண்ணுவோம்”.
சரவணன் பைக்கை ஸ்டார்ட் செய்தான். சரவணனைப் பொறுத்தவரை சிந்திப்பதற்கு ஏற்ற நேரம் பைக் ஓட்டும் நேரம் தான். பல சிக்கலான நேரஙக்ளிலும் பைக்கை எடுத்துக்கொண்டு சும்மா சுற்றி வருவது சரவணனின் வழக்க்ம். இப்போதும் பைக்கை தன் வீடு இருக்கும் எம் எம்.டி.ஏ.காலனி நோக்கி ஓட்டியாடியே ’இதுவரை நடந்தது என்ன? இனி செய்ய வேண்டியது என்ன?’ என்று யோசிக்க ஆரம்பித்தான்.
-- முத்துராமன் வீட்டில் தனியே இருக்கையில் கொலையாளியின் வருகை-ஏதோ வாக்குவாதம்+சித்திரவதை - கொலை-பூஜை ரூமில் நகைத் திருட்டு - மார்ஸ் 1024 என்று ஓர் அறிவிப்பு.
முத்துராமன் தனியே தான் இருக்கிறார் என்று தெரிந்து வந்திருப்பதால், நிச்சயம் கொலையாளிகள் அருகிலேயே தான் இருக்கிறார்கள்.
நகைக்காகத்தான் திருட்டு என்றால், மற்ற பீரோக்கள் எதுவும் திருடப்படவில்லை. பூஜை அறையில் மட்டுமே திருட்டு நடந்திருக்கிறது. பூர்வீக நகைகள் தான் திருடு போயிருக்கின்றன. அப்படியென்றால் இது குடும்பப் பிரச்சினையாகக்கூட இருக்கலாம். முத்துராமனின் பிள்ளைகளுக்கிடையே ஏதாவது பூசல் உண்டா என்று விசாரிக்க வேண்டும். அல்லது முத்துராமனுக்கு வேறு ஏதேனும் ஃபேமிலி உண்டா என்றும் பார்க்க வேண்டும்.
சரவணன் தலையை உதறிக்கொண்டான். ச்சே..விசாரணை என்று வந்துவிட்டால், நல்ல மனிதரைக்கூட சந்தேகப்பட வேண்டியிருக்கிறதே என்று நொந்துகொண்டான். ஆனாலும் வேறு வழியில்லை.
ஸ்ரீனிவாசன் மட்டும் ஏன் திரும்பி வந்தார்? அவரும் கொலை நடந்தபோது உடன் இருந்திருப்பாரா? எப்போது சென்னை வந்து சேர்ந்தார்-எப்போது கொலை நடந்தது என இரண்டையும் சேர்த்து வைத்துப் பார்க்க வேண்டும்.
பூர்வீக நகைக்காகத்தான் கொலை என்றால், அவரை சித்திரவதை செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வந்தவர்களுக்கே அது இருக்குமிடம் தெரிந்திருக்கலாம்..’வேறு ஃபேமிலி’ என்றால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.
மார்ஸ்-1024...இது தான் குழப்பமாக உள்ளது. சரவணனுக்கு விழுப்புரத்தில் பார்த்த கேஸ் ஒன்று ஞாபகம் வந்தது, இதே போன்ற கொலை+கொள்ளை கேஸில் சுவரில் நம்பர்-1 என்று எழுதியிருந்தார்கள். அது என்னவென்று மொத்த டீமும் குழம்பியது. கடைசியில் கொலையாளிகளைப் பிடித்துக் கேட்டால் ‘ஹி..ஹி.சும்மா உங்களை சுத்தல்ல விடுறதுக்கோசரம் பண்ணோம் சார்’னு சொல்லி கடுப்பைக் கிளப்பினார்கள். இதுவும் அது மாதிரி தானா?
ஒன்றும் தெளிவாகாமல் குழப்பமாகவே இருந்தது. பைக்கை தன் வீட்டின் முன் நிறுத்திவிட்டு, வீட்டினுள் நுழைந்தான்.
பெட்ரூமில் கவிதா இல்லை.
"அச்சு.....” என்று கூப்பிட்டான். கவிதாவை செல்லமாக அச்சு என்றே அழைப்பான். அது அச்சுப்பிள்ளை-நல்ல பிள்ளை என்பதன் மரூஉ!
“இங்கே இருக்கேன்” என்று பாத் ரூலில் இருந்து சத்தம் வந்தது.
ஹாலில் வந்து உட்கார்ந்தான்.
கவிதா பாத்ரூமில் இருந்து வெளியே வந்தபடியே “இப்போத் தான் வந்தீங்களா?” என்றாள்.
“ஆமாம்”
“எனக்கு ஒரு பிரச்சினைங்க..ரெண்டு நாளா சொல்லணும்னு நினைக்கிறேன், மறந்துடறேன்”
’முத்துராமன் கொலைகேஸே பெரும் தலைவலியாக இருக்கையில் இவள் வேறு ஏதோ பிரச்சினை என்கிறாளே’ என்று யோசித்தபடி, ”என்னம்மா பிரச்சினை, சொல்லு” என்றான்.
“எனக்கு அடிக்கடி யூரின் வருதுங்க” என்றாள்.
(தொடரும்)
இரவு வணக்கம்,செங்கோவி!!!நன்றாகப் போகிறது.////'எனக்கு அடிக்கடி யூரின் வருதுங்க'என்றால்.////அதெப்படீங்க,எனக்கும் அந்த நோய் கொஞ்ச நாளா இருக்குங்கிறத கண்டு புடிச்சீங்க?ஹி!ஹி!ஹி!(உண்மை,மருந்து சாப்பிடுகிறேன்.எந்தச் சோதனையிலும் குறை இல்லை!)
ReplyDelete@Yoga.S.FR
ReplyDeleteஅடுத்த பகுதியில் ஒரு சோதனை வரும்..எதற்கும் அதைச் செய்து பாருங்கள் ஐயா!!
இதே போன்ற கொலை+கொள்ளை கேஸில் சுவரில் நம்பர்-1 என்று எழுதியிருந்தார்கள். அது என்னவென்று மொத்த டீமும் குழம்பியது. கடைசியில் கொலையாளிகளைப் பிடித்துக் கேட்டால் ‘ஹி..ஹி.சும்மா உங்களை சுத்தல்ல விடுறதுக்கோசரம் பண்ணோம் சார்’னு சொல்லி கடுப்பைக் கிளப்பினார்கள்.///
ReplyDeleteஇப்படி சொல்லி எங்கள ஏமாத்திட மாட்டிங்களே?
அண்ணன் கதைய எதிர்பாராத திருப்பத்தோட பார்க் பண்ணிட்டாரே...?
ReplyDelete