அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் வலையுலகில் எனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்குகிறேன்.
உதயநிதியின் ஹீரோ அறிமுகம், சந்தானம்-இயக்குநர் ராஜேஸின் கலக்கல் காம்பினேசன், தங்கத்தலைவி ஹன்சிகாவின் நான்காவது படம்(!!!) என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகியிருக்கும் படம் ஓகேஓகே!
இந்தப் படத்தின் கதை தமிழ் சினிமாவில் இதுவரை வராத கதை ஒன்றும் அல்ல. இயக்குநர் ராஜேஸ் எப்போதும் போல ரொம்ப சிம்பிளான கதையைவே எடுத்துக்கொண்டிருக்கிறார். உதயநிதி ஹன்சிகாவைக் கண்டதும் காதல் கொள்கிறார். நண்பன் சந்தானம் துணையுடன் காதலில் வென்றாரா இல்லையா என்பதே கதை. இந்த சிம்பிளான கதையை சொல்லியிருக்கும் விதம் தான் சினிமாவுக்கு திரைக்கதையே முக்கியம் என்பதற்கு இன்னொரு சாட்சி. சீனுக்கு சீன் சிரிப்பு வெடிகளுடன் ரகளையாக படத்தைக் கொண்டு சென்றுள்ளார் ராஜேஷ்.
உதயநிதி தமிழ்சினிமாவுக்கு புதிய நல்வரவு. அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லாத கேரக்டரைத் தேர்ந்தெடுத்ததிலேயே பாதி ஜெயித்து விடுகிறார். பிரபலத்தின் வாரிசாகக் களமிறங்குவதில் உள்ள சிக்கல், ஆடியன்ஸ் அனைவரும் வாத்தியாராக மாறி எப்படி நடக்கிறார்/சிரிக்கிறார்/நடிக்கிறார்/ஆடுகிறார்/ஃபைட் செய்கிறார் என உன்னிப்பாகக் கவனிப்பார்கள். எனவே அதிகம் நடிப்புத் திறமை தேவைப்படாத, அடுத்த வீட்டுப் பையன் போன்ற கேரக்டரில் இயல்பாகப் பொருந்திப் போகிறார். டான்ஸ் ஆடவும் முயற்சி செய்கிறார். நடிப்பில் ஹன்சிகாவை விட பெட்டர் (கடமைன்னு வந்தப்புறம் உண்மையைச் சொல்லணும்ல!).இதே போன்று பில்டப் இல்லாத கேரக்டர்களைத் தேர்வு செய்தால், நல்ல எதிர்காலம் உண்டு. ஓகே ஓகே-ல் உதயநிதி ஓகே!
உதயநிதிக்கு படத்தில் பில்டப் ஏதுமற்ற அறிமுகக் காட்சி தான். ஆனால் சந்தானம் தான் ஹீரோ மாதிரி அறிமுகம் ஆகிறார். ஏனென்றால் படத்தின் ரியல் ஹீரோவே அவர் தானே! ஒவ்வொரு நகைச்சுவை நடிகருக்கும் ஒரு பீக் பீரியட் வரும். அந்த நேரத்தில் அவர்களின் ஒவ்வொரு அசைவிலும், டைமிங்-லும் நகைச்சுவை பொங்கும். சந்தானத்திற்கு இது அப்படியான நேரம். உள்ளத்தை அள்ளித்தா - கவுண்டர், வின்னர்-வடிவேலு போன்று இந்தப் படத்தில் சந்தானம் கலக்கி எடுத்துவிட்டார்.
பல காட்சிகளிலும் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. தற்போதைய சூழ்நிலையில் தானே நகைச்சுவையில் நம்பர்-1 என்று அழுத்தமாக நிரூபிக்கிறார். படத்தின் ட்ரெய்லரிலேயே பல காட்சிகள் வெளியாகிவிட்டதே, இனி படத்தில் என்ன இருக்கப் போகிறது என்று நினைத்துப் போனால், மனிதர் பட்டாசாக வெடித்துள்ளார். விடிய விடிய மிமிக்ரி செய்யும் காட்சி அதகளம். ஓகேஓகே-ல் சந்தானம் ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே!
பச்சை கோதுமை மாவு என்று படத்தில் சந்தானத்தாலும் வெளியில் நம்மாலும் வர்ணிக்கப்படும் ஹ..ஹ..ஹன்சிகா, இதிலும் அழகாக வருகிறார், போகிறார், சிரிக்கிறார். பெரிதாக நடிக்கத் தேவையில்லாத கேரக்டர் என்பதால் நாமும் தப்பித்தோம். இந்தப் படத்திற்காக ஹன்சிகா மெலிந்ததாக செய்தி வெளியானது. நமக்கென்னவோ இன்னும் உலக உருண்டை போல்தான் தெரிகிறார். ஆண்ட்டி மாதிரி இருக்கிறார் என்று படத்தில் வரும் மோசமான வில்லன் கேரக்டர் பேசுவதற்கு மன்றம் சார்பில் கடும் கண்டனங்கள்!
உதயநிதியின் அப்பாவாக வரும் அழகம்பெருமாளை விட அம்மா சரண்யா வழக்கம்போல அசத்துகிறார். இம்முறை அழுகாச்சி அம்மாவாக இல்லாமல் காமெடி கேரக்டரில் வந்துள்ளார். ஹன்சிக்காவின் அப்பாவாக வரும் சாயாஜி சிண்டே கேரக்டரை வேஸ்ட் செய்துள்ளார்கள். சந்தானத்தின் காதலியாக வருபவருக்கும் நன்றாகவே காமெடி வருகிறது. காமெடியில் ஒரு ரவுண்டு வருவார்.
லாஜிக் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாதது ஒரு குறை தான். டிஎஸ்பியாக இருந்தும் மகள் காதலனுடன் சுற்றுவதை சாயாஜி தெரிந்துகொள்ளாதது, திரும்பத் திரும்ப வரும் நண்பனா-காதலியா காட்சிகள், கிளைமாக்ஸில் வழக்கம்போல் நாடகத்தனமாக ஆர்யா வருவது என படத்தில் குறைகள் இருந்தாலும் குடும்பத்துடன் உட்கார்ந்து வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பதால் ராஜேஸிற்கு ஹாட்ரிக் வெற்றி இந்தப் படம்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். வேணாம் மச்சான் பாடலை காட்சிப் படுத்தியிருக்கும் விதமும், நடனமும் சூப்பர்.
ஓகேஓகே - ஓகே!
உங்களது இரண்டாவது இன்னிங்க்ஸ் பட்டையை கிளப்ப வாழ்த்துக்கள்.
ReplyDeleteபச்சை கோதுமை மாவு, உலக உருண்டை, காய்ச்ச மரம்...ஆஹா அருமை....
அதர்குள் படம் பார்த்தாச்சா
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்
மாம்ஸ் வணக்கம்...
ReplyDeleteமீண்டும் புதிய பொலிவுடன் வருகை தந்தமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கத்தலைவி ஹன்சிகாவின் நான்காவது படம்(!!!) என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகியிருக்கும் படம் ஓகேஓகே!///
ReplyDeleteதலைவி படத்துக்காகவே செங்கோவி இத்தனை நாள் வெயிட்டிங் போல....
நம்மாலும் வர்ணிக்கப்படும் ஹ..ஹ..ஹன்சிகா, இதிலும் அழகாக வருகிறார், போகிறார், சிரிக்கிறார். பெரிதாக நடிக்கத் தேவையில்லாத கேரக்டர் என்பதால் நாமும் தப்பித்தோம்.///
ReplyDeleteஅட.... ஜொள்ள்ளு ரொம்ப ரொம்ப மாம்ஸ்..
நெஞ்சில பால வார்த்தீங்கண்ணே, விமர்சனத்த சொல்லல, உங்க மீள்வரவ சொல்றோம். ரொம்ப நாள் எடுத்துக்கிட்டாலும் ஓகே ஓகே மாதிரி உங்க ரெண்டாவது இன்னிங்ஸும் பட்டய கெளப்பும். சீக்கிரம் சந்திப்போம்.
ReplyDelete//மொய்க்கு மொய் செய்ய முடியாத ஏழை நான். ஆகவே...ஹி..ஹி..நன்றி!//
ReplyDeleteபதிவு போடவே நேரமில்லையாம், இதுல மொய்க்கு மொய் வேறயா, நீங்க பதிவு போட்டதே போதும்ண்ணே!
//ஓகேஓகே-ல் சந்தானம் ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே!//
ReplyDeleteஇதுக்காகவே பிளைட் புடிச்சு வேணும்னாலும் போகலாம் போலிருக்கே.
@Dr. Butti Paul
ReplyDeleteவாயா புட்டி பாலு...
ஓகேஓகே-ல் சந்தானம் ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே!///
ReplyDeleteஓகே அதிகமா இருக்கே, ஏதும் என்டர் கீ பிராப்ளமா?
அப்புறம், இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், உங்களுக்கும் இதுவரை வந்து வாழ்த்து சொன்னவர்களுக்கும், இனிமேல் வர விருப்பவர்களுக்கும்.
ReplyDeleteதமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDelete//@Dr. Butti Paul
வாயா புட்டி பாலு...//
வந்துட்டோம்ண்ணே, உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் மாம்ஸ், மாப்ஸ்க்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete//காய்ச்ச மரம் தான்................!)//ஆமாமா, கல்லடி பட்டு தான் ஆகனும்.(என்னா ஒரு வில்லத்தனம்.)
ReplyDeleteதமிழ்புத்தாண்டு வாழ்த்துகளுடன் வரவேற்கிறேன்.உங்கள் பாணி விமர்சனம் அருமை.
ReplyDeleteஅண்ணே, உங்க வனவாசத்தை ஹன்ஷிகாவுக்காக விட்டதற்கு கண்டனங்கள்
ReplyDeleteVaaaaayaaaaaaaaaa......
ReplyDeleteHappy......
Returens........
SEN-SEL...KO-GO....VI-VAAAAAA
1. இரண்டாவது இன்னிங்க்ஸ் வாழ்த்துகள்
ReplyDelete2. ஃபாலோயர்ஸ் 400 வாழ்த்துகள்
3. இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
4. போன வருடம் போலவே இந்த வருடமும் உங்களூக்கு பல ஃபிகர்கள் செட் ஆக வாழ்த்துகள்
நல்வாழ்த்துக்களுடன் வலையுலகில் எனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்குகிறேன்.///
ReplyDeleteஹன்சிகா பிரபு தேவாகூட பிசி ஆனதுக்குபிறகுதான் இந்தப்பக்கம் வர்றீங்க... அப்படீன்னா? இதுவரைக்கும் நீங்கதான்...... :-)
ஹ..ஹ..ஹன்சிகா, இதிலும் அழகாக வருகிறார், போகிறார், சிரிக்கிறார். பெரிதாக நடிக்கத் தேவையில்லாத கேரக்டர் என்பதால் நாமும் தப்பித்தோம்.//
ReplyDeleteஇவங்க வரும்போது எப்பிடிண்ணே? பக்கத்துல எக்ஸ்ட்ரா ஸ்க்ரீன் கட்டுனாங்களா? :-)
ஆண்ட்டி மாதிரி இருக்கிறார் என்று படத்தில் வரும் மோசமான வில்லன் கேரக்டர் பேசுவதற்கு மன்றம் சார்பில் கடும் கண்டனங்கள்//
ReplyDeleteஅட விடுங்க பாஸ்..கிடைக்கலைன்னு பொறாமைல சொல்லிருப்பாரு :-)
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.//
ReplyDeleteபுதிய மொந்தை...பழைய கள்ளு :-)
வாங்க பாஸ். புது வருஷத்தில், புது இன்னிங்ஸில், புது படத்தின் முதல் விமர்சனத்துடன் ஆரம்பித்திருக்கீங்க. விமர்சனம் சூப்பர். நன்றி.
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Welcome back!!!!
ReplyDeleteHappy new year!!!
வந்துட்டீங்களாண்ணே! :-) பதிவுலகத்துக்கு புதுவருஷம் அமோகமாத் தொடங்கியிருக்கு! செமையான ஓப்பினிங்!!!!! கலக்குங்க! :-)))
ReplyDeleteநீங்க விலகியிருந்த காலத்தில இடையில என்னென்ன கொடுமையெல்லாம் அனுபவிக்க வேண்டி இருந்திச்சு! :-(
ReplyDeleteபுதுவருட வாழ்த்துக்கள்!
ReplyDelete//ஆண்ட்டி மாதிரி இருக்கிறார் என்று படத்தில் வரும் மோசமான வில்லன் கேரக்டர் பேசுவதற்கு மன்றம் சார்பில் கடும் கண்டனங்கள்//
ReplyDeleteவிடுங்கண்ணே சமயத்தில முகத்தைப் பாத்தா ஆம்பிளை மாதிரி கூடத் தெரியுது..இதெல்லாம் பாத்தா...! :-)
வாங்க வாங்க நான் பதிவுலகத்திற்கு வந்து ஆறு மாதம் ஆகிறது . நீடிக்க நினைக்கையில் உங்களை போன்ற சில பதிவர்கள் விலகும் போது வெறுமையே தோன்றியது.மீண்டும் வருவீர்கள் என்கிற நம்பிக்கையில் தொடர்ந்தேன். நன்றி ,மற்றப்படி ஒ கே ,ஒ கே
ReplyDeleteகாலை வணக்கம் செங்கோவி!இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்!ஆச்சரியம்,இனிய ஓர் அதிர்ச்சியுடன் புத்தாண்டு பிறந்திருப்பதில் மகிழ்ச்சி!தலை,கால் புரியா சந்தோசம்!நல்லாயிருக்கீங்க்களா?பையன் எப்புடி இருக்கான்?வூட்டுல எல்லாரும் நலம் தானே?////அதென்னது இரண்டாவது இன்னிங்க்ஸ்?ஐ.பி.எல் லிலேயே அப்புடி ஒன்னு இல்லியே,வெறும் இருபது ஓவர் தானே?ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteஅப்புறம்,உங்க தங்க?!த் தலைவி பத்தி,ஏதாச்சும் எழுதணும்னு கை நாம,நமங்க்குது!ஆனா,கண்டிஷன் தடுக்குது,ஹி!ஹி!ஹி!!!!!////"வரோ" கமென்ட் பார்க்கவும்,ஹோ!ஹோ!ஹோ!!!
ReplyDelete////டான்ஸ் ஆடவும் முயற்சி செய்கிறார்.நடிப்பில் ஹன்சிகாவை விட பெட்டர்!(கடமைன்னு வந்தப்புறம் உண்மையச் சொல்லணுமில்ல!)////என்னய்யா பெரீஈஈஈஈஈஈய கடமை?ஹன்சிகாவ தாங்கு,தாங்குன்னு தாங்குவீங்கன்னு பாத்தா?
ReplyDeleteWelcome Back Sengovi Sir....
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
OK OK.. OK.... OK....
என்ன தலைவா இவ்ளோ நாள் லீவு எடுத்துக்கிட்டீங்க அவ்வபோது எழுதுங்க
ReplyDeleteபடம் ஓகே என அறிந்து மகிழ்ச்சி
முதல் ஆளா விமர்சனம் போட்டு அசத்திடீங்க
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் முதலில் !
ReplyDeleteமீள்வருகை புத்துணர்ச்சி தருகின்றது வாங்க வாங்க .... .
உங்கள் தளமூலம் வந்தவர்களுக்கும் வர இருப்பவர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மீண்டும் நண்பர்கள் பலரை மப்பிள,மாமா என்று சந்திப்பதில் சந்தோஸம் செங்கோவி ஐயா!
ReplyDeleteஉங்கள் தளமூலம் வந்தவர்களுக்கும் வர இருப்பவர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மீண்டும் நண்பர்கள் பலரை மப்பிள,மாமா என்று சந்திப்பதில் சந்தோஸம் செங்கோவி ஐயா!
ReplyDeleteஉங்கள் தளமூலம் வந்தவர்களுக்கும் வர இருப்பவர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மீண்டும் நண்பர்கள் பலரை மப்பிள,மாமா என்று சந்திப்பதில் சந்தோஸம் செங்கோவி ஐயா!
ReplyDeleteஉங்கள் தளமூலம் வந்தவர்களுக்கும் வர இருப்பவர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மீண்டும் நண்பர்கள் பலரை மப்பிள,மாமா என்று சந்திப்பதில் சந்தோஸம் செங்கோவி ஐயா!
ReplyDeleteசினிமா???மொய்க்கு மொய் எழுதவே நேரம் இல்லாத நேரத்தில் ஹீ ஹீ சினிமா அதுவும் குண்டம்மா படத்தைப்போய் வேனாம் கொலவெறி முதல் நாளில் என்று நீங்க தலைவராக இருந்து சொல்வது கேட்குது .ஹீ ஹீ படம் பார்த்து பல நாள் பாஸ்!
ReplyDeleteஓகே ஓகே ஆஹா புது ஸ்டைலா ??ஹீ
ReplyDeleteமொய்க்கு மொய் செய்ய முடியாத ஏழை நான். ஆகவே...ஹி..ஹி..நன்றி!
ReplyDelete//நான் அதைவிட கீழ புலம்பெயர் பொருளாதார தேடலில்.ஆவ்வ்வ்வ்ப்வ்வ்
வெல்கம் பேக் செங்கோவி. நானும் படம் பார்த்தேன். பாஸ்மார்க் வாங்கி தப்பித்து உள்ளது.
ReplyDeleteWelcome!!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவருக, வருக செங்கோவி!! தயவு செய்து இரண்டாம் இன்னிங்க்சை அவுட் ஆகாமல் ஆடிக் கொண்டே இருக்கவும். [ரன்கள் குறைவாக இருந்தாலும் நோ பிராப்ளம், பட தொடர்ந்து ஆடவும்..!!] The impression you made in my mind made me feel a big vacuum in your absence.
ReplyDelete\\டிஎஸ்பியாக இருந்தும் மகள் காதலனுடன் சுற்றுவதை சாயாஜி தெரிந்துகொள்ளாதது\\ இது அவரோட குறை அல்ல, லவ்வர்கள் யார் கண்ணில் வேண்டுமானாலும் மண்ணைத் தூவி விட்டு காதலில் வெற்றி பெறுவார்கள் என்று அர்த்தம்.
ReplyDeleteஒரு கல் , இரண்டு மாங்காய் --- மீள் வருகை மற்றும் ஹன்சிகா ---
ReplyDeleteவாங்கோ வாங்கோ
விமர்சனம் அருமை பாஸ். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteகஞ்சிக்கா கண்ட கண்ணனே...
ReplyDeleteபத்மினி கண்ட பகலவனே...
சினேகா கண்ட செம்மலே...
அஞ்சலி கொண்ட அண்ணனே...
வருக வருக.....
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் (களிங்கர் ஜீ.... மன்னிச்சிக்குங்க ஜீ.....)
ReplyDelete//// தங்கத்தலைவி ஹன்சிகாவின் நான்காவது படம்(!!!) ///////
ReplyDeleteஇவ்ளோ நாளாகியும் இன்னும் நாலு படம்தானா? என்ன பேக்ரவுண்ட்ல ஏதாச்சும் பிரச்சனையா?
////நடிப்பில் ஹன்சிகாவை விட பெட்டர் (கடமைன்னு வந்தப்புறம் உண்மையைச் சொல்லணும்ல!).////////
ReplyDeleteகடமைன்னு வந்துட்டா அண்ணன் கலக்கிடுவார்ல.......
////////பச்சை கோதுமை மாவு என்று படத்தில் சந்தானத்தாலும் வெளியில் நம்மாலும் வர்ணிக்கப்படும் ஹ..ஹ..ஹன்சிகா, ///////////
ReplyDeleteஏண்ணே அந்த புள்ள தங்க கலர்ல ஜெகஜ்ஜோதியா ஜொலிக்குது, அத போயி பச்சைன்னு சொல்லிட்டீங்களே?
//////இந்தப் படத்திற்காக ஹன்சிகா மெலிந்ததாக செய்தி வெளியானது. நமக்கென்னவோ இன்னும் உலக உருண்டை போல்தான் தெரிகிறார்.//////////
ReplyDeleteயோவ் கண்ண எங்க வெச்சிருந்தீங்க, கொஞ்சம் நிமிர்ந்துதான் பாக்கறது?
/////நோ..நோ..இதுக்காகவெல்லாம் யாரும் தீக்குளிக்காதீங்கப்பா! காய்ச்ச மரம் தான்................!////////
ReplyDeleteநல்லா காய்ச்சிருக்கிய்யா.........
உங்கள் மீள் வருகையால் மிக மகிழ்வுடன்..
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனக்கு என்னமோ நீங்க "மயக்கம் என்ன " படம் பாத்த கடுப்புல ப்ளாக் எழுதறத ஸ்டாப் பண்ணிடீங்கநு தோணுது. நல்ல வேளை ஓகே ஓகே பாத்துடீங்க! இனிமே தொடர்ந்து எழுதுவீங்க. நன்றி
புது வருசத்துல புயலென புறப்பட்டு வந்த புயலே வருக, நீங்க இல்லாம பதிவுலகமே டல்லா இருந்தது, இனி ஓகே ஒக்கேதான், எல்லாமே பேக்டு, ஆமா எப்படி இருக்கீங்க, வீட்டுல எல்லோரும் நலமா? புரோமோசன் வாங்கியாச்சா? ரிப்ளையே காணோம்???
ReplyDeleteவருக வருக செங்கோவி அவர்களே. தமிழ் புத்தாண்டு பரிசாக உங்கள் பதிவு மீண்டும் ஆரம்பித்து விட்டது. ஓகே. ஓகே. மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteவிமர்சனம் அட்டகாசம்!இரண்டாவது இன்னிங்க்ஸ் வழக்கம் போல் பட்டையை கிளப்பட்டும்
ReplyDeleteஅடியேனுக்கு அமோக வரவேற்பளித்த நண்பர்களுக்கு நன்றி..முருகன் அருளால் குடும்பத்தில் அனைவரும் நலம்..இனி தொடர்ந்து பதிவில் சந்திப்போம்...தனித்தனியே பதில் அளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்..மதிப்பிற்குரிய நண்பர்கள்/பெரியோர் மன்னிக்க!
ReplyDeletevanga vanga sengovi,,, armbamea asathal... inimea saravedi than
ReplyDeleteநல்ல விமர்சனம்..படம் பார்க்கவில்லை நண்பரே..மிக்க நன்றி,.
ReplyDelete