Saturday, May 5, 2012

முருக வேட்டை_6

செந்தில் பாண்டியன் சரவணனின் நண்பன். முன்னாள் நண்பன் என்றும் சொல்லலாம். இருவருமே ஒரே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றவர்கள். அப்போதிருந்தே பல கேஸ்களில் ஒன்றாகவே வேலை பார்த்தவர்கள். கவிதாவுக்கு உடன்பிறந்தோர் கிடையாது. எனவே செந்தில் பாண்டியனையே அண்ணனாக ஏற்றுக்கொண்டவள். ஆனாலும் பிரச்சினை சரவணன் இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு பெற்றபோது, வெடித்தது. செந்தில் பாண்டியன் தனக்கு ஏன் புரமோசன் வரவில்லை என்ரு அகிலாவிடமும் சரவணனிடமும் நேரடியாகவே சண்டை போட்டான். ஆஃபீசே ரணகளமாய் ஆன நாட்கள் அவை.

அதன்பின் செந்தில் பாண்டியன் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. சரவணனின் வீட்டுக்கு வருவதையும் நிறுத்திவிட்டான். கவிதாவின் சமாதானமும் எடுபடவில்லை. அவனை தனக்கு அசிஸ்டெண்டாய்ப் போடுவதாகச் சொன்னால், அதிர்ச்சி ஆகாமல் என்ன செய்வது’என்று சரவணன் நினைத்துக்கொண்டே “எதுக்கு மேம் வம்பு?” என்றான்.

”நானாச் சொல்லலை சரவணன்..பாண்டியனே வந்து கேட்டார்.’அப்போ ஏதோ கோபத்துல நடந்துக்கிட்டேன், சாரி’ன்னார். உங்ககூட திரும்ப ஒர்க் பண்ண ஆவலா இருக்காராம். உங்க ஃப்ரெண்ட்ஷிப்பை கெடுத்துட்டமோன்னு ஃபீல் பண்ணிக்கிட்டே இருந்தேன்.இப்போத்தான் எனக்கு நிம்மதியா இருக்குப்பா.”

“எதுக்கும் நல்லா யோசிச்சுப்போம் மேம்..எனக்கென்னவோ இது நல்லதாப் படலை”

“ஒன்னும் ஆகாது.பாண்டியன் பேசிக்கலா நல்ல பையன்னு தெரியாதா உங்களுக்கு?”

“பேசிக்கலா அவன் கோபக்காரன்னும் தெரியும் மேம்..ஏதாவது மனசுல வன்மம் வச்சுக்கிட்டு..”

“ச்சே..ச்சே..பாசிடிவ்வா யோசிங்க சரவணன்..நான் இருக்கேன்ல..உங்க சீட்டுக்குப் போங்க..பாண்டியனை வந்து பார்க்கச் சொல்றேன்”

“இல்லே, நானே போய்ப் பார்க்கிறேன் மேம்”

“ரொம்பப் பயப்படுறீங்க போல?”

“ஆமாம் மேம்” என்றபடியே எழுந்தவன் ஞாபகம் வந்தவனாய் ”ஒரு குட் நியூஸ் மேம்” என்றான்.

“என்ன?”

“கவிதா கன்சீவ் ஆகியிருக்காளாம்.இப்போத் தான் ஃபோன் பண்ணா”

“கங்கிராட்ஸ்..ஆகியிருக்காளாம்னு கதை மாதிரி சொல்றீங்க? நீங்க கூடப் போகலையா?”

“காலைலேயே தலை வலிக்குது, அடிக்கடி யூரின் வருதுன்னா..நான் கிண்டல் பண்ணிட்டு வந்துட்டேன்..கன்சீவ் ஆனால் வாமிட் தானே வரும்னு நினைச்சேன்”

“நோ..நோ..கன்சீவ் ஆனதுக்கு முதல் அறிகுறியே தலைவலியும் யூரினும் தான். வாமிட் அதுக்கு அப்புறம் தான்”

“ஓ..”

"கருப்பை வளரும்போது சிறுநீர்ப்பையை அழுத்தும். அதோட ஸ்பேஸ் குறையறதால அடிக்கடி யூரினை வெளியேத்த வேண்டி வரும்”

“ஐ சீ..எனக்கு இதெல்லாம் தெரியாது மேம்”

“ம்..போகப் போக நிறையத் தெரிஞ்சுப்பீங்க. அப்போத் தான் தாய்மைன்னா என்னன்னும் உங்களுக்கு முழுசாப் புரியும்”

“ஓ...ஓகே, நான் வீட்டுக்குப் போகணும். பாண்டியனைப் பார்த்துட்டுக் கிளம்பிக்கட்டுமா மேம்?”

“ஷ்யூர்..நானும் கவிதாகிட்டப் பேசுறேன்” சொல்லியபடியே ஃபோனை எடுத்தாள் அகிலா.

“ஓ.கே மேம்” விடைபெற்ற சரவணன் பாண்டியனின் கேபினை நோக்கி தயக்கத்துடன் நடந்தான். 

அகிலா கவிதாவின் மொபைலுக்கு கால் செய்தாள்.

“கங்கிராட்ஸ் கவி”

“அக்கா...தேங்க்ஸ்..நானே சொல்வோம்னு நினைச்சேன். அதுக்குள்ளே சொல்லிட்டாங்களா?”

“டாக்டர் என்ன சொன்னாங்க?”

“அவங்க ’இருக்கலாம்’னு தான் சொன்னாங்க..நானே டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டேன்..அக்கா, ஒரு மாதிரி, பரபரப்பா இருக்கு..ஏஜ் அட்டெண்ட் பண்ணப்போ இருந்த மாதிரி..”என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் கவிதா.

“யா..ரியல்லி, இட்ஸ் எ கிரேட் ஃபீலிங்..ரொம்ப நேரம் எங்கேயும் நிக்காதே. கிறுகிறுன்னு வரும். கன்சீவ் ஆனா ரத்தக்குழாய் எல்லாம் விரிஞ்சிடுமாம். சோ, நின்னா ரத்தம் எல்லாம் கால்ல இறங்கிடும், தலை சுத்திடும்”

“ஓ..தேங்க்ஸ்க்கா”

“அப்புறம், மூணு மாசம் முடியறவரைக்கும் ஜாக்ரதையா இருக்கணும்..கரு கொஞ்சம் வீக்கா இருக்கும். புரியுதா?”

“சரிக்கா, நான் ஹாஸ்பிடலுக்கு போகும்போது ஸ்டெப்ஸ்ல தங்தங்குன்னு இறங்கிப் போயிட்டேன். ஆனா இப்போ தரையில் கூடப் பூனை மாதிரி தான் நடக்கிறேன்க்கா”

“ஹா..ஹா.அந்தளவுக்கு பயப்பட வேண்டாம்..நான் சொன்ன ‘ஜாக்ரதை’ அது இல்லை”

“அப்புறம்?”

“மூணு மாசம் முடியறவரைக்கும் கொஞ்சம் கட்டுப்பாடோட இருந்துக்கோங்க..எதுவும் வேண்டாம்”

கவிதா “ம்..”என்றபடியே வெட்கத்துடன் சிரித்தாள்.

---------------------
சரவணனுக்கு பாண்டியனுடன் பழகிய பழைய ஞாபகங்கள் வந்தன. ’எவ்வளவு திக் ஃப்ரெண்ட்ஸாக இருந்தோம்..ஒரே நாளில் கொஞ்சமும் தயங்காமல் உறவை அறுத்துவிட்டானே..கொஞ்சம் கெட்டிப்போன மனசு தான் பாண்டியனுக்கு’. பாண்டியன் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. மனது கொஞ்சம் திக் திக் என்று அடித்தது. சரவணன் படபடப்பாக உணர்ந்தான்.

பாண்டியன் எதிரில் போய் நின்றுகொண்டு ‘பாண்டியா” என்றான்.

பாண்டியன் முகத்தில் எவ்விதச் சலனமும் இன்றி நிமிர்ந்து பார்த்தான்.

“மேம் சொன்னாங்க..நாம திரும்ப ஒன்னா ஒர்க் பண்ணப் போறோம்னு..கேட்கவே சந்தோசமா இருந்துச்சு. அதான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்”

“பார்த்துட்டல்ல? போ” என்றான் பாண்டியன்.

“என்ன பாண்டியா, இப்படிப் பேசுறே?”

“பின்னே..நண்பான்னு கொஞ்சவா சொல்றே? ஒன்னா அஃபிசியலா ஒர்க் பண்ணப்போறோம், அவ்ளோ தான். திரும்பவும் நண்பா..நண்பான்னு பேசி கழுத்தறுக்கலாம்னு நினைச்சே...............”

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

 1. //
  Romba naal kalichu um maganukku vadai
  By தமிழ்வாசி பிரகாஷ் on முருக வேட்டை_6 at 9:11 PM//

  //Congrats saravanan. Hi...hi...
  By தமிழ்வாசி பிரகாஷ் on முருக வேட்டை_6 at 9:16 PM //

  Thanks Tamilvasi....I corrected the problem!

  ReplyDelete
 2. இரவு வணக்கம்,செங்கோவி!படித்துப் பார்த்து விட்டு கலாய்ப்பேன்,ஹ!ஹ!ஹா!!!!(இந்தியாவில் இருந்தா?)

  ReplyDelete
 3. ரெண்டு தடவ வருதே,என்னாச்சு?அப்புறம்,நீங்க மகநலப் பேற்று மருத்துவரா இருக்க வேண்டியவரு.புரோபோஷனலேயே மாத்திப்புட்டீங்களே,ஹி!ஹி!ஹி!!!

  ReplyDelete
 4. ரொம்ப நல்லா போகுது...

  தொடரும் போட்டுட்டு மறுபடியும் பதிவ போட்டிருக்கீங்க...

  ரெண்டு தடவை வருது. சரி பண்ணுங்க...

  ReplyDelete
 5. வணக்கம் செங்கோவியாரே என்ன தொடர்  இருமுறை வந்திருக்கின்றது .!

  ReplyDelete
 6. உங்களுக்கு மகப்பேறு வைத்தியமும் தெரிந்திருக்கு உபயோகாமான தகவல்கள் தான்.

  ReplyDelete
 7. விறுவிறுப்பாக இருக்கு செந்தில் பாண்டியன் செயல்கள் எப்படி இருக்கும். தொடருங்கள்.

  ReplyDelete
 8. என்ன பாண்டியா இப்படி பேசுறே?

  ReplyDelete
 9. @பன்னிக்குட்டி ராம்சாமி

  //பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]
  என்ன பாண்டியா இப்படி பேசுறே?//

  என்ன அண்ணே, இப்படிக் கமெண்டுறீங்க?

  ReplyDelete
 10. பின்ன மூணு நாளு கழிச்சு பதிவ படிச்சா வேற என்ன போடுறது?

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.