லோக்கல் போலீஸிடம் இருந்து முத்துராமன் கொலைக்கேஸை சிபிசிஐடிக்கு மாற்றுவது அவ்வளவு எளிதாக இல்லை. இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனுக்கு மேலதிகாரிகள் மட்டத்தில் நல்ல செல்வாக்கு இருந்ததால், அகிலாவின் கையில் கேஸ் வருவதற்குள் பெரும்பாடு படவேண்டியதாயிற்று. ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் குற்றவாளி பற்றி எவ்விதத் தடயமும் கிடைக்கவில்லை என்று ஆனபிறகே, மேலிடம் மனமிரங்கி அகிலாவிடம் இந்தக் கேஸைக் கொடுத்தது.
சரவணன் அஃபிசியலாக விசாரணையைத் துவக்கினான். செந்தில் பாண்டியனை உடன் வைத்திருப்பது இம்சையாகவே இருக்கும் என்று தோன்றியது. எனவே அகிலாவிடம் வேறு ஆள் தரும்படி கேட்டான்.
“நோ..நோ..நீங்க ரெண்டு பேரும் இதுக்கு முன்னே ஒன்னா டீல் பண்ண கேஸ் எல்லாமே சீக்கிரமா முடிஞ்சிருக்கு. இந்தக் கேஸும் அப்படி முடியணும்னு நினைக்கிறேன். இன்னைக்குக் காலையில்கூட பாண்டியன் வந்து பேசிக்கிட்டிருந்தார்.உங்ககூட திரும்ப ஒர்க் பண்றது ரொம்ப சந்தோசமா இருக்குன்னார். நீங்க தேவையில்லாம பயப்படுறீங்கன்னு நினைக்கிறேன். நான் இருக்கேன்ல?”
பாண்டியன் தன்னிடம் பேசும்விதம் வேறு, அகிலாவிடம் பேசும் விதம் வேறு என்று புரிந்தது. வேறுவழியேயின்றி செந்தில் பாண்டியனையும்கூடவே வைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
சரவணன் முதல் விசாரணையை ஸ்ரீனிவாசனிடம் ஆரம்பிப்பதே நல்லது என்று முடிவு செய்து, முத்துராமனின் வீட்டுக்கு பாண்டியனுடன் போனான். முத்துராமன் குடும்பம் கே.கே.நகரில் இருக்கும் மற்றொரு வீட்டிற்கு மாறியிருந்தார்கள்.
ஸ்ரீனிவாசன் சுரத்தேயில்லாமல் வரவேற்றார்.
“வாங்க சரவணன். செந்தில் பாண்டியன் நீங்களும் இந்தக் கேஸை டீல் பண்றீங்களா?”
“ஆமாம் சார்..எப்படி இருக்கிறீங்க?”
“அதான் பார்க்கிறீங்களே..போலீஸ் விசாரணைன்னு பொழுது ஓடுது”
ஹாலில் மூவரும் அமர்ந்தார்கள். ஸ்ரீனிவாசனின் மனைவி, குழந்தைகள் எட்டிப்பார்த்துவிட்டு உள்ளே போய்விட்டார்கள். முத்துராமனின் மனைவியைக் காணவில்லை.
சரவணன் விசாரணையை மென்மையாகத் துவங்கினான். ”அம்மா எங்கே?”
“மருதமலை போயிருக்காங்க.”
“மறுபடியுமா?”
“ஆமாம். அப்பா போனப்புறம் அவங்க ரொம்ப இடிஞ்சு போய்ட்டாங்க. அதனால தான்..”
செந்தில் பாண்டியன் குறுக்கிட்டு “சார், சென்னைக்கு திருத்தணி தானே பக்கம்? ஏன் எல்லாரும் எப்பவும் மருதமலை போறீங்க?” என்றான்.
“எங்க பூர்வீகம் கோயம்புத்தூர். மூணு ஜெனரேசன் முன்னாடியே இங்க வந்துட்டோம். அதனால தான்”
”சார், நான் சில பேசிக் கொஸ்டீன்ஸை மறுபடி கேட்கவேண்டியிருக்கு. நீங்க கொஞ்சம் ஒத்துழைச்சீங்கன்னா..” சரவணன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஸ்ரீனிவாசன் இடைமறித்து பேச ஆரம்பித்தான்.
“வீட்ல அடிக்கடி மருதமலை போவோம். அப்பா இறந்தப்பவும் அப்படித்தான் எல்லாருமே முடிவு செஞ்சுதான் கிளம்பினோம். அப்பா தான் கடைசி நேரத்தில் நான் வரலைன்னு சொல்லிட்டார். ஏன் அப்படிச் சொன்னார்னு இப்போ வரைக்கும் எங்களுக்குத் தெரியலை. எனக்கு அதே நாள் ஆஃபீஸ்ல யூரொப் க்ளையண்ட் கூட மீட்டிங் இருந்துச்சு. அதனால நான் மட்டும் சாமி கும்பிட்டுட்டு திரும்பி வந்துட்டேன். என்னோட கார்ல தான் திரும்பி வந்தேன். வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடிச்சா, அபப வந்து கதவைத் திறக்கலை. அதனால கதவைத் திறந்து பார்த்தேன். திறந்திடுச்சு. உள்ளே போய்ப் பார்த்தா அப்பா அந்த நிலைமைல கிடந்தார். உடனே அகிலா மேடத்துக்கு கால் பண்ணேன். அவங்க தான் லோக்கல் ஸ்டேசனுக்கும் சொல்லச் சொன்னாங்க”..
ஸ்ரீனிவாசனுக்கு மூச்சு வாங்கியது. பெருமூச்சுடன் தொடர்ந்தான் “ இதையே பல தடவை போலீஸ்கிட்டச் சொல்லியாச்சு. இப்போ நீங்க..வீட்ல, ஆஃபீஸ்ல தேவைப்பட்டா யூரோப் க்ளையண்ட்கிட்டக் கூட விசாரிச்சுக்கோங்க. உங்களால முடிஞ்சா குற்றவாளியைக் கண்டுபிடிங்க. இல்லேன்னா, சும்மா விடுங்க. அந்த முருகன் பார்த்துப்பான். தயவு செஞ்சு விசாரணைங்கிற பேர்ல எங்களை மட்டுமே குறிவச்சு இம்சை பண்ணாதீங்க”
சரவணன் அவசரமாக தலையை ஆட்டியபடி ஆரம்பித்தான். “இல்லை சார், உங்களையோ உங்க குடும்பத்து ஆட்களையோ நாங்க சந்தேகப்படலை. காணாமப் போனது பூர்வீக நகைங்கிறதால, உங்க குடும்பத்தார்கிட்டயிருந்து விசாரணையை ஆரம்பிக்க வேண்டியதாயிடுச்சு. இப்போ நாங்க இங்கே வந்தது உங்களைப் பத்திக் கேள்வி கேட்க இல்லை. உங்களுக்கு வேற யார் மேலயாவது சந்தேகம் இருக்கா? மார்ஸ்-1030-ங்கிறது என்னன்னு ஏதாவது ஐடியா உங்க யாருக்காவது இருக்கான்னு தெரிஞ்சுக்கத் தான்”
“எங்க அப்பா நல்லவர். பதவியை யூஸ் பண்ணி, அஞ்சு பைசாகூட அவர் சம்பாதிச்சதில்லை. ஏன், எனக்கு வேலை கூட நானே படிச்சு வாங்கிக்கிட்டது தான். அவர் எத்தனையோ குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்திருக்கார். எத்தனையோ அரசியல்வாதிங்க பேச்சைக் கேட்காம, மனசாட்சிப்படி நடந்திருக்கார். அதனால எதிரிங்கன்னா அவங்கள்ல யாராவது இருக்கலாம்”
“நீங்க இதுவரை சொன்னதை வச்சுப் பார்க்கிறப்போ, உங்க அப்பா யாரையோ எதிர்பார்த்துத்தான் உங்ககூட மருதமலைக்கு வரலையோன்னு தோணுது. அப்படியும் இருக்கலாமோ?”
“தெரியலை சரவணன்”
சரவணன் தயங்கியபடியே அந்தக் கேள்வியைக் கேட்டான்.”சாரீ ஃபார் ஆஸ்க்கிங் திஸ் கொஸ்டீன்....பூர்வீக நகைக்காகத் தான் கொலைன்னா, உங்க சொந்தக்காரங்க யாராவது பண்ணியிருக்கலாம் இல்லியா? இல்லேன்னா சாருக்கு உங்களைத் தவிர வேற ஏதாவது...”
(தொடரும்)
ட்விஸ்ட் ஒவ்வொரு பதிவிலும் கூட்டிட்டே போறிங்களே?
ReplyDeleteஇரவு வணக்கம்,செங்கோவி!த்ரில்லா தான் போயிட்டிருக்கு,தமிழ்வாணன் அந்தக் காலத்துல எழுதின க்ரைம் ஸ்டோரி போலவே!கங்கிராட்ஸ்!!!!
ReplyDelete"முருக வேட்டை" வர வர போலிஸ் வேட்டையா எல்லா போகுது......
ReplyDeleteஇந்த பகுதி ராஜேஸ்குமார் நாவல் டச்சோட போகுது.... செம விறு விருப்பு.... ஆனால் டக்கெண்டு "தொடரும்.." வந்தது போல் ஒரு பீல் :((
வணக்கம் செங்கோவி!நேத்து இரவு போட்ட என்னோட கமண்டக்(comment)காணம்!நல்லா போவுது,அந்தக் காலத்து தமிழ்வாணன் சாரோட க்ரைம் நாவல் மாதிரியே இருக்கு,வாழ்த்துக்கள்!அப்புடீன்னு கமண்டியிருந்தேன்.புடிக்கலியோ???
ReplyDeleteதொடர்புக்கு அப்புடீன்னு நம்பர் குடுத்திருக்கீங்களே,"செல்" நம்பரா அது?இல்ல,லான்ட் லைனுன்னா ஓசில பேசலாம்,அதான்!!!ஹி!ஹி!ஹி!!!
ReplyDelete@Yoga.S.FR
ReplyDeleteஐயா, உங்க கமெண்ட் யாருக்காவது பிடிக்காமப் போகுமா? அது ஸ்பேம்ல போய் உட்கார்ந்துக்கிச்சு.ஒருவேளை தமிழ்வாணன் ஆவிக்குப் பிடிக்கலையோ? ...........
ஒரு மாசத்துல லேண்ட்லைன் வாங்குறது ரொம்பக் கஷ்டம் ஐயா.
கதை இப்பதான் முக்கியமான கட்டத்துக்கு வந்திருக்கு...........
ReplyDeleteசெங்கோவி said...ஐயா, உங்க கமெண்ட் யாருக்காவது பிடிக்காமப் போகுமா? அது ஸ்பேம்ல போய் உட்கார்ந்துக்கிச்சு.ஒருவேளை தமிழ்வாணன் ஆவிக்குப் பிடிக்கலையோ?///அந்த ஆவி நாசமாப் போக,ஹ!ஹ!ஹா!!!!!
ReplyDeleteசெங்கோவி said...ஒரு மாசத்துல லேண்ட்லைன் வாங்குறது ரொம்பக் கஷ்டம் ஐயா!.///சரிதான்,ஹும்!!!!!!
ReplyDeleteஇரவு வணக்கம் !!
ReplyDeleteஎன்ர மாமா வை தேடி வந்து இருக்கேன் .....என் மாமா இங்க வந்தாங்கள என்டு ஓரமா நின்னு எட்டி பார்த்தட்டு போயிருவான் ப்ளீஸ் ...இங்கு தான் இருக்கினம் போல் மாமா ...
மாமா அந்தப் பக்கம் வாங்கள் கொஞ்சம் க....... கு ம ......டை வேலை இருக்கு
May 7, 2012 3:26 PM மணி எண்டால் இந்திய மணி பன்னிரண்டு மணி பதினெட்டு நிமிடமா ...
அது என்னுடைய மருமகள்.கொஞ்சம் கும்மி அடிப்போம்,நேசன் தளத்தில்!அதுதான் காணவில்லையே என்று....................
ReplyDeleteதொடர் இப்படி யார் கொலையாளி என்பதில் பகீர் என்று நகருகின்றது நல்லா இருக்கு மொழி நடை மருதமலை ம்ம்ம் பிடித்த இடம் போங்கோ இன்னொரு தரம்!ம்ம்ம்
ReplyDeleteஎன் தங்கை கலை குறும்பாக யோகா ஐயாவைக்கானவில்லை என்று இங்கு வந்து தேடி இருக்கின்றாள் செங்கோவி ஐயா.அவள் கொஞ்சம் குறும்புக்காரி!
ReplyDelete@கலை
ReplyDeleteகாணாமல் போன அந்தக் குழந்தை திரும்பக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ...பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்..நடுஇரவில் தனியே விடவேண்டாம்.
//Yoga.S.FR said... [Reply]
ReplyDeleteஅது என்னுடைய மருமகள்.கொஞ்சம் கும்மி அடிப்போம்,நேசன் தளத்தில்!அதுதான் காணவில்லையே என்று...............//
தெரியும் ஐயா..அந்தக் கும்மிகளை நான் ரசித்துப் படிப்பதுண்டு.